Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

குறள் 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை] 

பொருள்
அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். 
அறம் - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்.

வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல்; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல்.

வரையான் - (அறத்தை) தனக்கு உரியதாக கொள்ளாமல் 

அல்ல  - மற்ற / அறம் அல்லாதவற்றை / பாவத்தை  தீயதை  ; அறத்திற்கு புறம்பான பாவங்களைச்

செயினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

பிறன் - அயலார்; மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

வரையாள் - உரிமையானவள் 

பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை.

நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை.

நயவாமை - விரும்பாது இருத்தல் ; பின் செல்லாது இருத்தல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
ஒருவன் அறம் செய்யாது பாவம் செய்பவனாகவும் இருக்கலாம், ஆனால் பிறர் மனைவியை மனதால் நோக்காமல் இருப்பது நல்லது. பிறர் மனைவியை நோக்காது இருப்பது ஒரு நல்ல தகுதியாகும். அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக திருவள்ளுவர் அறம் செய்யாது பாவம் செய்தாலும் பரவாயில்லை பிறர் மனைவியை நோக்காதே என்றார். அதனால் அறம் செய்யக்கூடாது பாவம் செய்யலாம் என்று இல்லை.

எவ்வளவு பெரிய தகுதி உடையவராக இருப்பினும் பிறர் மனைவியை நோக்கினால் அவரை கீழே இறக்கிவிடும். அதுவே எவ்வளவு தகுதி இல்லாதவர்காக இருப்பினும் பிறர் மனைவியை நோக்காது இருந்தால் அவனுக்கு அதனால் ஒரு தனி மதிப்பு உண்டாகும். 

இல்லறத்தில் கணவன் மனைவி உறவென்பது அடிவேர். ஆதலால் அவ்வேரினை தோண்டுவதோ அறுப்பதோ மாபெரும் குற்றமாகும். அதனால் தான் பிறனில் விழையாமை அதனை செய்யாதே. அதை செய்யாது இருந்தால் மதிப்பு உண்டாகும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று. (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று. இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்

குறள் 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]

பொருள்
நலக்கு - நலக்கு-தல் - nalakku-   5 v. intr. prob. நலம்.To do good; நன்மைபயத்தல். உயிர்க்குயிராய்நலக்கு மிறை (திருவானைக். புராணவா. 41).

உரியார் - உரி - உரி-மை கொண்டாடுபவர்

யார் - யாவர்

எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால்

நாமநீர் - அச்சத்தைத் தரும் கடல்; விந்தைகள் பல நிறைந்த/சூழ்ந்த பெருங்கடல் 

வைப்பில் - வைப்பு - வைக்கை; பாதுகாப்புநிதி; புதையல்; இடம்; நிலப்பகுதி; ஊர்; உலகம்; செயற்கையானது; செயற்கைச்சரக்கு; வைப்பாட்டி; கலிப்பாவகையின்இறுதியுறுப்பு.

பிறற்கு - பிறர் - அயலார்; மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

உரியாள் - உரியவள்; உரிமையானவள் 

தோள் - புயம்; கை; தொளை

தோய்தல் - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல்.

தோயாதார் - அணைக்காதர் ; முழுகாதார் 

முழுப்பொருள்
இல்லறத்தில் கணவன் மனைவி உறவென்பது அடிவேர். ஆதலால் அவ்வேரினை தோண்டுவதோ அறுப்பதோ மாபெரும் குற்றமாகும். அதனால் தான் பிறனில் விழையாமை அதிகாரத்தை திருவள்ளுவர் வைத்தார்.

“நாம்” என்ற சொல் அச்சத்தைக் குறிப்பதால் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் “நாமநீர்” என்பதற்கு அச்சத்தைத் தரும் கடல் என்று பொருள் செய்திருக்கிறார்கள். “நாமம்” என்றால் “வியப்பு”, ”இணக்கம்”, “ஐயம்”, “கோபம்”, “நிச்சயம்”, “நிந்தை”, “நினைப்பு” போன்ற பலவிதமாகப் பொருள் கொள்ளலாம். இவற்றுள் “வியப்பு” என்கிற சொல் பொருந்திவருகிறது. கடலானது பல வியத்தகு பரிமாணங்களையும், செல்வங்களையும் தன்னகத்தே கொண்டது. கடல் என்பது கடப்பதற்கு அரியது என்கிற அச்சத்தைத் தரக்கூடியதுதான்.

நாம் வாழ்கிற இந்த பூமி பெருங்கடலினால் சூழப்பட்டு உள்ளது. அக்கடல் அதனுடைய சமநிலையை தவறினால் இவ்வுலகத்தில் உள்ள எல்லோரும் அழிய நேரிடும். ஆனால் அவ்வச்சத்துக்காக மனிதன் ஒருநாளும் தன்னுடைய பயணத்தை நிறுத்தியதிலை, தேடலை மூடவுமில்லை. 

வாழ்க்கைக் கடலைப்போல கடினமான, அச்சம் தரும் அபாயங்களை உள்ளடக்கியது, கடப்பதற்கு பல சவால்களை, தவறான தூண்டுதல்களை கொண்டது, அதிலும் பிறன்மனையைக் கவர்ந்தடைதல் போன்ற பாவங்களில் மனிதனை செலுத்தக்கூடியது. அதனால் அச்சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டு, பிறர் மனைவியை நினைக்காமல், பிறர் மனைவியின் தோள் சேராமல், ஒழுக்கம் பிறழாமல் நடக்கும் மனிதனுக்கு, எல்லா நன்மைகளும் உண்டு.. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நாம நீர் வைப்பின் - அச்சம் தரும் கடலால் சூழப்பட்ட உலகத்து; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா நன்மைகளும் எய்துதற்கு உரியார் யார் எனின், பிறர்க்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்கு உரிமை ஆகியாளுடைய தோளைச் சேராதார். (அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின், 'நாமநீர்' என்றார். 'நலத்திற்கு' என்பது 'நலக்கு' எனக்குறைந்து நின்றது. உரிச்சொல் (நாம) ஈறு திரிந்து நின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நலத்துக்கு உரியார் யாரெனின் நினைத்ததைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் தீண்டாதார். நலக்குரியார்- விரும்புதற்குரியார்.

மு.வரதராசனார் உரை
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

குறள் 147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்
[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]

பொருள்
அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். 
அறம் - தருமம்; புண்ணியம்;  ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்.

இயலான்  - இயலுதல் - கூடியதாதல்; நேர்தல் பொருந்துதல் தங்குதல் செய்யப்படுதல்; அசைதல் நடத்தல் உலாவுதல் உடன்படுதல் அணுகுதல் ஒத்தல் போட்டிபோடுதல்; சித்திரமுதலியனஎழுதுதல்.

இல்வாழ்க்கை - il-vāḻkkai   n. இல்¹ +.Domestic life; the order of domestic life; இல்லறத்தில் வாழ்க்கை (குறள், 5, அதி )  ; மனையாளோடு கூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை.

இல்வாழ்வான் - இல்லறத்தோடு கூடி வாழ்பவன். il-vāḻvāṉ   n. id. +.Householder; இல்லறத்தான். இல்வாழ்வா னென்பான் (குறள், 41).  

என்பான் -  என்று சொல்பவன்; என்று சொல்லப்படுபவன்.

பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

இயலாள் - துணைவியை 

பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை.

நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை.

நயவாதவன் -  விரும்பாதவன் 

முழுப்பொருள்
அறத்தின் இயல்புடன் பொருந்திய இல்வாழ்க்கையை வாழ்பவன் யார்? பிறர் மனைவியை விரும்பாதவன். 

எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, ஆதலால் நான் இல்வாழ்வான் இல்லையா? இல்லை என்று என்கிறார் திருவள்ளுவர்.

எனக்கு குழந்தை பிறந்து விட்டது, ஆதலால் நான் இல்வாழ்வான் இல்லையா? இல்லை என்று என்கிறார் திருவள்ளுவர்.

நான் பிறருடன் அன்புடன் இருக்கிறேன், ஆதலால் நான் இல்வாழ்வான் இல்லையா? இல்லை என்று என்கிறார் திருவள்ளுவர்.

நான் விருந்தோம்பல் பேணுகிறேன், ஆதலால் நான் இல்வாழ்வான் இல்லையா? இல்லை என்று என்கிறார் திருவள்ளுவர்.

நான் இனியவை பேசுகிறேன், செய்ந்நன்றி அறிந்து கொள்கிறேன், அடக்கம் பேணுகிறேன், ஒழுக்கம் பேணுகிறேன், ஆதலால் நான் இல்வாழ்வான் இல்லையா? இல்லை என்று என்கிறார் திருவள்ளுவர்.

இல்வாழ்வான் என்பதற்கு முதல் தகுதி அடுத்தவருக்கு உரிமையான மனைவியை விரும்பாது இருப்பது. 

அறநெறிப்படி வாழ்கின்றவர்கள் பிறன்மனையை இச்சிக்கும் இழிமையைச் செய்யார் என்று கூறி, அறத்துப்பாலின் அடிக்கருத்தாக இருக்கும் அறன்வலியுறுத்தலைச் செய்கிறார் வள்ளுவர்.

ஒரு இல்வாழ்க்கையில் கணவன் மனைவியும் இரு உடலாக இருப்பினும் ஓர் உணர்வாக இருத்தல் வேண்டும். பொதுவாக மனைவி தன்னை தன்னுடைய கணவனுக்காக தான் விரும்பும் காதலனுக்காக தன்னை மாற்றிக்கொள்வாள். ஆனால் கணவன்களால் அது பெரும்பாலும் செய்யப்பட மாட்டாது. மனைவி பிரிந்து போருக்கும் வெளியூர்களில் வேலைக்கும் செல்லும் மனம் கணவர்களுக்கு உண்டு. ஆனால் பெண் அப்படி செய்வதில்லை. ஆதலால் பெண் ஒரு திருமணத்தில் அதிகம் ஈடுபாடுடன் இருக்கிறாள் மிக நுட்பமாக பொருந்தியும் இருக்கிறாள். 

மேலும், இல்லறத்தில் கணவன் மனைவி உறவென்பது அடிவேர். ஆதலால் அவ்வேரினை தோண்டுவதோ அறுப்பதோ மாபெரும் குற்றமாகும். அதனால் தான் பிறனில் விழையாமை அதிகாரத்தை திருவள்ளுவர் வைத்தார். ஆதலால் பிறரின் மனைவியை விரும்புவது, கவர நினைப்பது, அவர்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுவது, அவர்கள் வாழ்வை திசை திருப்புவது என்பது மாபெரும் குற்றமாகும். அதனை இழிச்செயலாக கருதினர். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறஞ் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.).

மணக்குடவர் உரை
அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான். பிறன்வழியானவளது பெண்மையை விரும்பாதவன். இது பிறனில் விழையாமை வேண்டும் என்றது.

மு.வரதராசனார் உரை
அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

குறள் 140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
உலகத்தோடு - உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

ஒட்ட - அடியோடு; கிட்ட; இறுக; அணுக; போல.

ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.

ஒழுக்கம்  - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

பல - ஒன்றுக்குமேற்பட்டவை

கற்றும் - கற்கை - படித்தல்.

கல்லார் - நெறிநூல்கள் கல்லாதவர்

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

இலாதார் - இல்லாதவர்

அறிவிலாதார் - அறிவு இல்லாதவர்கள் 

முழுப்பொருள்
உலகம் என்றால் உயர்ந்தோர் என்று பொருள் கொள்ள வேண்டும். "உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர்" என்று திருமுருகாற்றுப்படையிலும் வருகிறது. 

ஆதலால் உயர்ந்தோருடன் ஒட்டி அவர்கள்கடைப்பிடிக்கின்ற ஒழுக்கத்தை பின்பற்றி ஒருவர் வாழவேண்டும். அப்படி உயர்ந்தோருடன் ஒட்டி வாழாமல் ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் ஒருவர் இருப்பார் என்றால் நூல்கள் பல கற்றும் அவர் பல நூல்கள் கல்லாத அறிவில்லாதவர்க்கு சமம் (நூல்கள் கற்றும் பலனில்லை). 

ஒழுகுதல் / ஒழுகல் என்றால்?
வானத்தில் இருந்ததில் மழை கீழே ஒழுகிறது. வானம் உயர்ந்தோரை குறிப்பதால் உயர்ந்தோரில் இருந்து வரும் நற்குணங்கள் (ஒழுக்கம்) என்பதால் ஒழுகல் என்ற சொல் வந்திருக்கலாம் (நன்றி: இலங்கை ஜெயராஜ்).

ஏன் உயர்ந்தோருடன் ஒழுக வேண்டும்?
திருக்குறள் மூதுரை ஆத்திச்சூடி போன்று பல நெறி நூல்கள் கற்றால் போதாதா? அதில் இருந்து ஒழுக்கத்தை கற்க முடியாத? முடியும். ஆனால் ஒழுக்கமே ஆயினும் சில ஒழுக்க நெறிகள் காலத்திற்கு காலம் மாறக்கூடும். எவை மாற தக்கவை எவை சரியான மாற்றம் என்று நூல்கள் பல கற்று உணர்ந்து பின்பற்றி அதனை வாழ்வாக வாழும் உயர்ந்தோர் அறிவர். ஆதலால் முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் உயர்ந்தோர் வாழ்வர். ஆதலால்உயர்ந்தோரை பின்பற்றினால் நாம் அந்த மாற்றங்களை அறிந்துகொள்ளலாம். மேலும் பெரியாரைத் துணைக்கொள்ளுதல் என்று நன்மையே பயக்கும். 

மேலும்

ஊரோடு ஒத்து வாழ்
இக்குறளை படித்தப்பின்பு "உலகத்தோடு ஒத்து வாழ்" என்பது காலப்போக்கில்  மருவி "ஊரோடு ஒத்து வாழ்" என்று ஆயிற்று என நினைக்கிறன். அது அந்த ஊர்க்கு ஏற்றாற்போல் மாறி விடு என்று பலர் புரிந்துகொண்டு தான் வளர்ந்த இடத்தில் பெற்ற நல்லவற்றையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு புதிய இடத்துக்கு தன்னை மாற்றிக்கொள்கின்றனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் மக்களுக்கு பொருந்து. 

நான் நிர்வாக மேலாண்மை மேற்பட்டபடிப்பை அமெரிக்காவில் படிக்கும் பொழுது உலக நிர்வாகம் பற்றி படித்தேன். அதில் எங்களுக்கு கூறப்படும் முக்கியமான ஒன்றே என்ன தெரியுமா ? நீ வேறு ஒரு நாட்டிற்கு சென்றால் அந்த நாட்டின் கலாச்சாரம்/பண்பாடு ஆகியவற்றை கற்றுக்கொள். நல்லவற்றை எடுத்துக்கொள். தீயவற்றை அறிந்து எச்சரிக்கையாக இரு. மொழியை கற்றுக்கொள்வதை முதன்மையான காரியமாக கொள்ளாதே. மொழி வெறும் தொடர்புக்கான ஒரு கருவி தான்.  உன்னுடைய சுயத்தை இழக்காதே. ஆனால் பலர் மொழியை கற்றுக்கொள் என்று வம்புபண்ணுவர். குறிப்பாக இந்தியாவில் ஹிந்தி கத்துக்கோ கன்னடம் கத்துக்கோ என்று அடம்பிடிப்பர். மொழியை கற்றால் அதற்கான பயனும் உண்டு. ஆனால் அதனை தேவை எனில் செய்யலாம். மொழியை தாண்டி ஒரு நாட்டில் அந்நாட்டைப்பற்றி கற்க பல உண்டு. ஒரு மொழியை கற்காமல் அந்நாட்டில் உள்ள நல்ல புத்தகங்களை இலக்கியங்களை மொழிப்பெயர்ப்பு செய்து வந்த வடிவங்களில் படிக்கலாம். அதில் இருந்து நாம் பெறக்கூடியவை ஏராளம்.

நற்றிணைப்பாடல் இதை, “நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்” என்கிறது.  பின்னால் வரப்போகும் அறிவுடமை அதிகாரத்தில் “எவ்வ துறைவ துலகம் – உலகத்தோ டவ்வ துறைவ தறிவு” என்று அறிவுறுத்தலாக கூறுவார் வள்ளுவரே!

நாலடியார் இப்படி சொல்கிறது
குலந்தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையறு தொல்சீர்உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர் (நாலடி 333)

மேலும் கீழ்க்காணும் குறள்களுடனும் தொடர்புபடுத்தி புரிந்துக்கொள்ளலாம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)

மணக்குடவர் உரை
அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று

மு.வரதராசனார் உரை
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

Thirukkural - Management - Relationship
Relationship happens when there is a need fulfillment. “A relationship,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 985), “is a friendship and strong emotional connection between two people.”

Today organizations spend millions of dollars to improve work place relationships. There are many workshops,  seminars, conferences, and training programs to help employees develop Interpersonal skills in workplace. Interpersonal  skill is made a compulsory competence for employees in many manufacturing companies. There are needs to focus on developing interpersonal  skills. Two predominant needs are: 1) People are too self-centered and they prefer to be isolates and 2) They are addicted to their smart phones.

People either do not find time or create purposeful time for meaningful relationships. Winning at any cost has become the order of the day. I win and you lose approach has become an unwritten norm. Because of all these thoughts and practices, individuals, teams, and organizations suffer. Relationship in workplace is important as it helps people maintain good health in addition to achieving tasks together by supporting  one another. A person,  as an individual, may prefer not to have relationship  as an individual. However, in an organization, a person is not an individual. A person is a social being. Interdependence between and among people, departments,  and divisions is very high in an organization. His actions and interactions influence and complement  the  performance of people associated with him. That necessitates the need for building meaningful relationships. 

Kurals help us to get Valluvar's views on relationship and its importance to personal and professional success, and the methods to build and sustain long lasting relationships. 

Kural 140 compares a person, though educated, learned, and widely read,to an illiterate, if he cannot get along with people, society, and the world's expectations and practices. So, a literate may be an illiterate when it comes to building relationships. Relationship, according to Valluvar, is getting along with people and the world at large. There are people who are individually brilliant but socially misfits. Social misfits create more problems than people who are intellectually low. Still man is a social being. 

Those are fools however learned
Who have not learned to walk with the world.

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

குறள் 139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயாற் சொலல்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

உடையவர்க்கு - உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.

ஒல்லாவே - பொருந்தாத ; உடன்படாத; தகாத; 

தீய - தீமையான; போலியான.

வழுக்கியும் - வழுக்குதல் - சறுக்குதல்; தவறுசெய்தல்; தப்புதல்; மறத்தல்; அசைதல்; ஒழிதல்; அடித்தல்; மோதுதல்.

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

வாயால் - வாயினால் 

சொலல் - சொல்ல மாட்டார்கள் 

முழுப்பொருள்
ஒழுக்கத்தை பேணுபவர் பொருந்தாத (ஒழுக்கத்தின் தகுதிக்கு பொருந்தாத) தீய சொற்களை தவறியும் (சறுக்கியும், மறந்தும், வழுக்கியும்) தன் வாயால் கூற மாட்டார். தன் சிந்தனையில் இருப்பதே வாயில் வரும். ஆதலால் சிந்தையில் கூட தீயவற்றை பழக மாட்டார்கள்.

ஆதலால் நாம் நமது குடும்பங்களில் நல்லவற்றையும் நற்சொற்களை மட்டும் பேசுவதை ஒரு பண்பாடாக (வழக்கமாக) பேணவேண்டும். இனிய சொற்கள் இருக்கும் பொழுது ஏன் இனிமை இல்லாத சொற்களை பேசுகிறாய் என்று வள்ளுவர் முன்னமே நம்மை கேட்டுள்ளார். 

தீச்சொல் என்பது பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் பொய், ஒருவரைப்பற்றிய கோள்சொல், கடுஞ்சொல், வீண்சொல் போன்றவை. கேட்ட வார்த்தைகளும் பொருந்தும்.

இனியவை நாற்பது, “ஆக்கம் அழியினும் அல்லவை கூறா தேர்ச்சியின் தேர்வினிய தில்” என்று வளமே அழியினும் வன்சொல் சொல்லாதிருக்கும் தேர்ச்சியினைவிட உயர்ந்த தேர்வும் இனியதும் இல்லை என்கிறது.

"பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன்" என்று தசரதனை பற்றி கம்பர் இராமாயணத்தில் கூறுகிறார். அதாவது பொய்யான சொற்களைப் போற்றாத உண்மை மொழிகளைப் போற்றும் தயரதன் (/தசரதன்) என்று பொருள்.

கம்பராமாயணத்தில் இருந்து ஒரு உதாரணம் 
=============================================
கைகேயி பெற்ற வரத்தால், இராமன் காடு செல்ல வேண்டி இருந்தது. அதைக் கேட்ட  இலக்குவன் கோபம் கொண்டு மிகையையாகப் பேசுகிறான். நிதானம் தவறி பேசுகிறான்.

'சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின்
வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!
அதாவது சிங்கம் தன் குட்டிக்கு ஊட்டும் இரையை நாய் தன் குட்டிக்கு ஊட்டுவது போல பரதனுக்கு நாடு கொடுக்க விரும்பினாளே கைகேயி என்று இலக்குவன் கோபத்தில் பேசுகிறான். 

ராமன் இப்படி பதில் சொல்கிறான் 
"விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்"
ஊழ்வினை (விதி) செலுத்தத்தாயும் தந்தையும் அவ்வினையின் கருவியாக இருந்து செயல்பட்டனரேஅன்றி அவர்களாக நம்மேல் பகை கொண்டு செய்தாரில்லை. மழைநீர்  வரத்து இன்மையால் சிலகாலம் ஆற்றில் நீர் வற்றுவது போல்வினைவலியால் பெற்றோர் அன்பின்மை  உடையார் போலத் தோன்றுவர், அவ்வளவேஎன்றானாம். மூவரையும்  தாயர் என ஒப்பக் கருதல் பற்றிக் ‘கைகேயியைப் பயந்து நமைப்புரந்தாள்’ என்றான் இராமன்.                

அதுத்தபடியாக 
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க,
'கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்,
விதிக்கும் விதி ஆகும், என் வில் - தொழில் காண்டி' என்றான்.

அதாவது விதியால் விளைந்தது என இராமன் சொல்ல, அந்த விதியையும் மாற்ற வல்ல விதி  என்வில் என்றான் இலக்குவன். துடிக்கின்ற  மனத்தை ஆற்ற முடியாமல் திணறுகிறேன் என்ற அவதியைமுதலில் வெளிப்படுத்துகிறான்; பின்னர் இதற்கு  ஏதாவது  முடிவு கண்டால்தான் என்மனம் ஆறும் என்பதாகப் பேசுகிறான்.

அப்போது இராமன் சொல்கிறான்,

"வேதம் படித்த வாயால்" இப்படி பேசலாமா என்று.

வேதத்தைப் படித்தாலே போதும், வாழ்வில் நிதானம் வந்து விடும். வார்த்தையில்  கனிவு இருக்கும். பணிவு இருக்கும்.

அதாவது, படித்த பின் அதன் படி நடக்க நினைப்பவர்களுக்கு அப்படி நிகழும்.
ஆய்தந்து, அவன் அவ் உரை  கூறலும், ‘ஐய! நின்தன்
வாய் தந்தன கூறுதியோ  மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?’

அவன் - இலக்குவன்;  ஆய்தந்து - ஆராய்ந்து;  அவ் உரை கூறலும் -அந்தச் சொற்களைச் சொன்ன அளவில் (இராமன் அவனை நோக்கி);  ‘ஐய! - தம்பி;  மறை தந்த நாவால் - வேதங்களைச் சொன்ன நாக்கினால்;  நின்தன் வாய்தந்தனகூறுதியோ? -  உன் வாயில் வந்தவைகளைக் கூறுகின்றாயோ, நீ தந்தது - நீஇப்பொழுது (உன் வாயால்) தந்த சொல்; நெறியோர்கண் நிலாதது அன்றே? -நல்நெறியில் நடப்பவர்கள் இடத்தில் நிற்கத்தகாத சொல் அல்லவா; ஈன்ற தாய் தந்தை என்றால் - (உன் கருத்திற்கு  மாயாக நடப்பவர்) பெற்ற தாயும் தந்தையும் ஆனால்;  அவர் மேல் சலிக்கின்றது - அவரிடத்தில் கோபிப்பது; என்னோ?’ -  எப்படிப்பொருந்தும்.

வேதத்தைக் கற்றுணர்ந்த இலக்குமணன்  ‘அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்’ என்றுஅறிந்துள்ளவன்.  ஆகவே,  அன்னைக்கும்
தந்தைக்கும் மாறாக வாய்தந்த வார்த்தைகளைப் பேசுதல்நெறியற்றோர்
செயலாகும்  என்பது  இராமன் சொல்லியதாகும்.         

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.).

மணக்குடவர் உரை 
தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்க முடையார்க்கு இயலாது.

மு.வரதராசனார் உரை
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

சாலமன் பாப்பையா உரை
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

Thirukkural - Management - Personality Development - Self Discipline
A self-disciplined person never speaks ill of others. He never resorts to meaningless, hurtful, unsuitable, and uncivilized words even unconsciously, that is., by mistake or by chance, confirms Kural 139.

Man of good conduct cannot speak ill
Even forgetfully.

A self-disciplined person is extremely conscious of what he says that there is no chance for slip of the tongue or slip of the mind.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

குறள் 137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒழுக்கத்தின் - ஒழுக்கம் -  நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

எய்துவர் - எய்து-தல் - eytu-   5 v. [T. eyidu, M.eytu.] tr. 1. To approach; அணுகுதல் நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10). 2. Toobtain, acquire, attain; அடைதல் ஏமம் வைகலெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து) 3. Toreach, as a place; தூநிறக் கங்கையாள்சூழ லெய்தினான் (பாரத. குருகுல. 34). 4. To revere; பணிதல் இளங்கொடியேயெய்தும் (தஞ்சைவா. 386). 5. To leave, forsake; நீங்குதல் எய்தலில்லாத் திருவின் (தஞ்சைவா. 386). -- intr. 1. Tobe adapted, suitable; பொருந்துதல் காலத்தோடெய்த வுணர்ந்து செயல் (குறள், 516). 2. To happen, occur; சம்பவித்தல் எட்டி குமர னெய்தியதுரைப்போன் (மணி. 4, 64). 3. To appear, become, crop up; உண்டாதல் மாசெனக்கெய்தவும்(கம்பரா. சிறப். 6). 4. To be sufficient, adequate;போதியதாதல். சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென்றெண்ணி (ஐந். ஐம். 38).  

மேன்மை - சிறப்பு; பெருமை; கண்ணியம்.

இழுக்கத்தின் - இழுக்கு  - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

எய்துவர் எய்து-தல் - eytu-   5 v. [T. eyidu, M.eytu.] tr. 1. To approach; அணுகுதல் நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10). 2. Toobtain, acquire, attain; அடைதல் ஏமம் வைகலெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து) 3. Toreach, as a place; தூநிறக் கங்கையாள்சூழ லெய்தினான் (பாரத. குருகுல. 34). 4. To revere; பணிதல் இளங்கொடியேயெய்தும் (தஞ்சைவா. 386). 5. To leave, forsake; நீங்குதல் எய்தலில்லாத் திருவின் (தஞ்சைவா. 386). -- intr. 1. Tobe adapted, suitable; பொருந்துதல் காலத்தோடெய்த வுணர்ந்து செயல் (குறள், 516). 2. To happen, occur; சம்பவித்தல் எட்டி குமர னெய்தியதுரைப்போன் (மணி. 4, 64). 3. To appear, become, crop up; உண்டாதல் மாசெனக்கெய்தவும்(கம்பரா. சிறப். 6). 4. To be sufficient, adequate;போதியதாதல். சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென்றெண்ணி (ஐந். ஐம். 38).  

எய்தாப் - அணுகாத ; அடையாத ; பணியாத ; நீங்காத ; உண்டாகாத 

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

முழுப்பொருள்
ஒருவர் ஒழுக்கத்தை பேணிப் பின்பற்றினால் அவர் மேன்மையை அடைவார். பெருமை கைக்கூடும். அதுவே ஒழுக்கத்தை பின்பற்றாமல் தாழ்வானவற்றை செய்தால் அவர் இழிவுநிலையை அடைவார். கீழ்மக்கள் என்று கருதப்படுவார். ஒழுக்கத்தை பின்பற்றாத காரணத்திற்காக நீங்காத பழியையும் பெறுவார். 

ஒழுக்கத்தை பின்பற்றினால் +1 அதாவது உயர்வு, ஒழுக்கத்தை பின்பற்றவில்லை என்றால் 0 அல்ல -1 அதாவது வீழ்ச்சி. 

இதே கருத்தை பழமொழிச் செய்யுள், “இழுக்கத்தின் மிக்க இழிவில்லை – இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு” என்கிறது.

இக்குறள் ஒழுக்கம் என்னும் குணத்திற்கு மட்டுமல்ல. நமது அன்றாட வேலைகளில் நாம் செலுத்தும் ஒழுக்கத்திற்கும் (discipline/work-ethics) பொருந்தும். ஒருவர் தன்னுடைய வேலையை செவ்வென செய்தால் அவர் முன்னேறுவார். ஒருவர் தன்னுடைய உறவுகளை பேணினார் என்றால் மக்களை சம்பாதிப்பார். அதுவே தனது வேலையை தனது கடமையை செய்யவில்லை என்றால் அவர் வேலையிலும் சரி பொருளாதார ரீதியாகவும் சரி வீழ்ச்சியே அடைவார். அதேப்போல உறவுகளை பேணவில்லையென்றால் தனிமைப்படுத்தப்படுவார். சுற்றம் இல்லை எனில் செல்வம் இல்லை என்று பொருள்.

மேலும்: அஷோக் உரை

மைந்தனுடன் தனித்துலாவுகையில் “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படவேண்டும், மைந்தா” என்றார். “மானுடர் எவரும் ஒழுக்கத்தின்பொருட்டு கணந்தோறும் உள்ளத்துடன் போரிட்டாகவேண்டும். சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் நம் ஒழுக்கத்துடன் ஆட விடாய்கொண்டுள்ளன. இனியமலர்கள், நறுமணங்கள், தென்றல், வண்ணங்கள், ஒளிகள் அனைத்தும் பிறழ்க பிறழ்க என்றே நம் உள்ளத்திடம் ஆழமாக சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆண்கள் தங்கள் விழைவால் வழிதவறுகிறார்கள். கன்னியர் தங்கள் ஆணவத்தால், அன்னையர் தங்கள் அன்பால் வழிபிழைக்கிறார்கள். அழகர்கள் பிறர் விழைவால் பிறழ்வுகொள்கிறார்கள். மைந்தா, ஒழுக்கம் என்பது அறத்திற்குக் கொண்டுசெல்லும் பாதை. ஒழுக்கத்தில் மாறாதிரு. உன் மதிப்பால் உவகையே கொள்முதல் செய்யப்படும்.”

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் லியோ டால்ஸ்டாய் பற்றிய ஒரு உரையில் (லியோ டால்ஸ்டாய் இவ்வாறு கூறுவாதுவதாக) இவ்வாறு கூறுகிறார் (https://www.youtube.com/watch?v=21Q_4mQG5TI @42:55)

ஆன்ம விடுதலை என்பது மேலான ஒழுக்கம் வழியாக மேலான அறம் வழியாக தான் சாத்தியம். ஏன் ஒழுக்கமும் அறமும் முக்கியம் என்றால் தனி மனிதன் ஒருவனின் மீட்சியும்/மீட்புமும் நிறைவும் அதில் தான் இருக்கிறது.

ஒழுக்கம் இல்லாதவன் மேலான இன்பங்களை அடைய முடியாது. ஒரு குழந்தையை தூய அன்போடு மடி மேல் எடுத்து வைக்க முடியாது.

பரிமேலழகர் உரை
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

Thirukkural - Management - Thoughts
A person can achieve greater heights in his life; lead a noble life and satisfied life when he is disciplined. All achievements are possible with the psychology of self- discipline.  There is a lot of power in self- discipline, declares Kural 137.

Right  conduct exalts one, while a bad name
Exposes one to undeserved disgrace.

When a person fails to lead a disciplined life, he will attain all disgraceful and humiliating consequences in his life. Those things are sure to lead him to a blameful and meaningless life. Therefore, personal effectiveness is possible only with personal discipline.


சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

சாந்தி பாஸ்கரசந்திரன் அவர்கள் "குழந்ததைகளின் பேருலகம்" என்ற ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார். அதில் "குழந்தைகளின் ஞாபக மறதி நோயல்ல" என்ற ஒரு கட்டுரையில் ஞாபக சக்திக்கு ஒழுங்கு எவ்வளவு முக்கியம் என்று கூறியுள்ளார்

ஞாபகசக்தி எனப்படும் நினைவாற்றல் திறன் அனைவருக்கும் சமமாகவே உள்ளது. ஆனால், அதை முறையாகப் பயன்படுத்துவதில் தான் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறார்கள். மூளையில் உள்ள நினைவத்திலிருவ்து ஏதாவது ஒரு தகவல் தேவையான நேரத்திற்கு நினைவிற்கு வர வேண்டுமென்றால் முதலில் அந்தத் தகவலை சரியான முறையில் பதிவு செய்து வைக்க வேண்டும். ஞாபகமறதிக்கு முக்கிய காரணம், தகவல்களை சரியான முறையில் மூளையில் பதிந்து வைக்கும் திறன் குறைவாக இருப்பதுதான். எனவே, குழந்தைகளின் மதிப்பெண் குறைவிற்கு நினைவாற்றல் குறைபாடு காரணமல்ல. 

'பென்சிலை எங்கே வைத்தோம்' என்று பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் வீடு முழுக்கத் தேடுவது, பள்ளிக்கு வந்து பையை திறந்ததும் கணக்கு நோட்டு கொண்டு வராததை அறிந்து பதறுவது, வீட்டுப்பாடத்தை மறந்துவிட்டு ஆசிரியரிடம் திட்டு வாங்குவது, நன்றாக படித்த பாடம் தேர்வு எழுதும்போது உடனடியாக ஞாபகத்திற்கு வராதது, என பல சந்தர்ப்பங்களில் 'ச்சே! இவ்வளவு மறதியாக இருக்கிறோமே' என்று பொதுவாக வயது வித்தியாசமின்றி எல்லா பிள்ளைகளும் தங்கள் மீதே எரிச்சல் பட்டுக்கொள்வதுண்டு. 

ஒரு திரைப்படமும் அதில் வரும் காட்சிகள் மற்றும் பாடல்கள் மனதில் பதிகிற அளவிற்கு பள்ளிக்கூடப் பாடம்  மனதில் பதிவதில்லையே ஏன்? ஆர்வம் மற்றும் கவனம் இல்லாததோடு ஓர் ஒழுங்கு இல்லாததுமே இதற்குக் காரணம். 

ரொம்ப மறதி என்று கூறும் குழந்தைகளிடம் பேசிப் பாருங்கள். கிரிக்கெட் ஸ்கோரைப் பற்றி கேட்டால் விலாவாரியாக பேசுவார்கள். எந்த மேட்சில், எந்த பிளேயருடைய ஆட்டம் பற்றி கேட்டாலும் புள்ளிவிவரமாகச் சொல்வார்கள். பிரச்னை நினைவாற்றலில் இல்லை, ஆர்வத்தில்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. நினைவாற்றலுக்கு ஆர்வமே அடிப்படை. எதில் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமோ, அதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும். 

அதேபோல ஏதாவது ஒரு பாடப்புத்தகத்தில் அட்டைப்படத்தைக் குழந்தைகளிடம் வரையச் சொன்னால், பெரும்பாலோர் தவறாகத்தான் வரைவார்கள். தினமும் பார்க்கிற புத்தகம்தான் என்றாலும் சரியாக வரைய முடியாததற்குக் காரணம், அவர்கள் புத்தகத்தை தினமும் பார்க்கிறார்களே தவிர கவனித்துப் பார்ப்பதில்ல்லை. நினைவாற்றலின் அடிப்படையான கவனிக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் இது போன்ற பிரச்னைகள் குறைந்துவிடும்.

அதேபோல ஒழுங்கின்மையும் ஒரு காரணம். லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ள ஒரு நூலகத்தில் நமக்குத் தேவையான புத்தகத்தை உடனடியாகத் தேடி எடுக்க முடிகிறது. ஆனால், ஒரு சில அறைகள் மட்டுமே உள்ள நம் வீட்டில் நமக்குத் தேவையான பொருளை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையே, அது ஏன்?ஒழுங்கின்மைதான் அதற்குக் காரணம். குழந்தைகள்தான் என்றில்லை பெரியவர்களுக்கும் இதே நிலைதான். அதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

பள்ளியிலிருந்து வந்ததும் ஷுக்களை கழற்றி அதற்குரிய ஸ்டாண்டில் வைக்க வேண்டும். சாக்ஸை கழற்றி துவைப்பதற்கென்று உள்ள இடத்தில் போட வேண்டும். பெல்ட், டை ஆகியவற்றை அதற்கென்று உள்ள இடத்தில் கழற்றி வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு செயலையும் ஓர் ஒழுங்கோடு தொடர்ந்து செய்தால், மனதின் செயல்பாடுகளிலும் ஒழுங்கு ஏற்படத் துவங்கும். அதன் மூலம் ஆர்வமும் கவனமும் ஏற்படும்.

...
...
பிள்ளைகள் குறைந்தது 8 மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுது படிப்பதைப் பழக்கப்படுத்த வேண்டும். தூங்கப் போகும் முன்பாக அன்று படித்த அனைத்தையும் ஒருமுறை மேலோட்டமாக நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது மூளையின் சில பகுதிகள் விழிப்புடன் இருந்து தகவல்களை குறுகிய காலை நினைவறையில் (short term memory) இருந்து நீண்ட கால நினைவறைக்கு (long term memory) எடுத்துச் சென்று பதிவு செய்துகொள்ளும். படிக்கும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியமான பயிற்சியாக இருக்கும். 


English Meaning - As I taught a kid - Rajesh
When one follows discipline/work-ethics/duties, one progress and attains growth. When one consistently follows discipline for a long time, one attains greatness. However, if one is indiscipline, it leads to destruction and ruins life and health. Indiscipline leads to negative fame, difficulties in life.

Questions that I ask to the kid
What does one attain by following discipline?
What does one attain by not following discipline?

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

குறள் 130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]

பொருள்
கதம் - சினம்; பஞ்சம்; பாம்பு; அடைகை; சென்றது; ஓட்டம்.

காத்து - காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல்.

கற்று -  கற்கை - படித்தல்

அடங்கல் - எல்லாம்முழுதும்; தங்குமிடம்; பயிர்செய்கைக்கணக்கு; செய்யத்தக்கது.

அடங்கல் - அடக்கம் - மனமொழிமெய்கள்அடங்குகை; கீழ்ப்படிவு பணிவு அடங்கியபொருள்; மறைபொருள் கொள்முதல் பிணம்அடக்கம்செய்தல்.

ஆற்றுவான் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

செவ்வி - காலம்; ஏற்றசமயம்; காட்சி; அரும்பு; பக்குவம்; புதுமை; அழகு; சுவை; மணம்; தன்மை; தகுதி; சித்திரைநாள்.

அறம்  - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

பார்க்கும் - பார்த்தல்  - pār-   11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்

ஆற்றின்ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

நுழைந்து - நுழைதல் - புகுதல்; பதிதல்; சேர்ந்துகொள்ளுதல்; நுண்மையாதல்; இடைச்செருகப்படுதல்; கூரிதாதல்; சாடைசொல்லுதல்; கடத்தல்; மட்டுக்கட்டுதல்.

முழுப்பொருள் 
கல்வி பலகற்றுத் தேர்ந்தவர்க்கும், பண்பு நெறிகளுக்கு ஒவ்வாத ஆசை, கோபம் முதலியன இருக்கும். அவற்றுள் வெகுளாமை என்பதைப்பற்றிப் பேச ஒரு அதிகாரத்தையே செய்துள்ளார் வள்ளுவர்.  

கோபம் யாரிடத்திலும் கொள்ளாமலிருத்தல் நல்லது, ஏனெனில் அதுவே எல்லா தீமைகளுக்கும் ஊற்றுக்கண் என்னும் விதமாக, “மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்” என்று கூறுவார். அதுமட்டுமல்லாது, சினத்தை “சேர்ந்தாரைக்கொல்லி” என்று சொல்லி, அது, சினங்கொண்டவரையே இறுதியில் அழிக்கும் என்பார். “சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்”

கோபம் இருப்பது அடக்கமின்மையாகும். கல்வி கற்காமல் இருப்பது அடக்கமின்மைக்கு ஒருவித காரணம். தருமத்தை / அறத்தை நோக்கி கற்கப்படும் கல்வி அடக்கத்தை தரும். தருமத்தை நோக்கி கற்கப்படாத கல்வி அடக்கத்தை தராது ஆணவத்தை தரும். ஆணவம்  அடக்கத்தை தராது (அடக்கமின்மையை தரும்). 

ஆதலால் கோபத்தை அடக்கி உண்மையான கல்வியை கற்று  தன்னடக்கம் கொண்டவனாக ஒருவன் இருந்தால் அவன் நிறை மனிதன். தருமம் (அறக்கடவுள்) அவனை வந்து காக்க தக்க சந்தர்ப்பம் பார்க்கும். (அறக்கடவுளை சந்திக்க தனியாக முயல வேண்டாம் தருமமே தானாக வரும்). 

தருமம் தலை காக்கும் என்கிற வழக்கொன்று உண்டு. அதைப்போலத்தான் இது. அறக்கடவுள், இத்தகைய பண்பாளருக்கு உதவும் தருணங்களை ஆவலோடு எதிர் நோக்கும். பாரதியின் எழுத்திலே மலர்ந்த “தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்” என்ற கருத்தின் உண்மையை உணர்த்தவே இது. பண்பு நலன் மிக்கவருக்கு வரும் சோதனைகளிலிருந்து, இறுதியில் அவர்களை மீட்டு தருமத்தை நிலை நாட்டுவதே அறக்கடவுளின் செயலாம்.

ஒப்புமை
”அறிவ தறிந்தடங்கி” (நாலடி 74)
“கற்றறிந்தார் கண்ட தடக்கம்” (பழமொழி 243)
“கற்றடங்கி னான் அமிழ்து” (சிறுபஞ்ச 3)

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!
எல்லாம் கிடைத்தாலும், எதையாவது ஒன்றை நினைத்து ஏங்குவதே மனதின் சுபாவம். அதிலிருந்து, சுலபத்தில் விடுபட முடியாது. உலகம் முழுவதும் நம்மை பாராட்டினாலும், 'ச்சே என்னய்யா இது... எல்லாரும் என்னை பாராட்டுகின்றனர்; இந்த ஆள் மட்டும் ஒரு வார்த்தை கூறவில்லையே... முத்தா உதிர்ந்து விடும்...' என்று அங்கலாய்க்கும். மனம். இதிலிருந்து விடுபட என்ன வழி...

ஒருமுறை, கடுந்தவம் புரிந்தார் விசுவாமித்திரர். உலகினர், அவரது, தவத்தை வியந்து, 'இவரல்லவா பிரம்மரிஷி...' என்று பாராட்டினர்; அதைக் கேட்டு விசுவாமித்திரரும் மகிழ்ந்தார். இருப்பினும், அவர் உள்ளத்தில், 'எல்லாரும் பாராட்டுகின்றனர்; ஆனால், வசிஷ்டர் என்னை பாராட்டவில்லையே... அவர் வாயால், பிரம்மரிஷி பட்டம் பெற்றால் அல்லவா பெருமை...' என நினைத்தவர், 'நாம் சென்று வசிஷ்டரை வணங்கலாம்; பதிலுக்கு அவரும் வணங்கினால், நாம் பிரம்மரிஷி; மாறாக, அவர் நம்மை ஆசீர்வதித்தால், நாம் பிரம்மரிஷி அல்ல...' என தீர்மானித்தார்.

உயர்நிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கினால், இருவரும் சமம்; ஒருவர் வணங்கும்போது, அடுத்தவர் அவருக்கு ஆசி கூறினால், வணங்கியவர் இன்னும் பக்குவம் பெற வேண்டும் என்பது பொருள்.
விசுவாமித்திரர், வசிஷ்டரை வணங்கிய போது, அவர் தன் இரு கரங்களையும் தூக்கி அவரை ஆசீர்வதித்தார்.

இதனால், மனம் நொந்து, மறுபடியும் தவம் செய்ய துவங்கினார் விசுவாமித்திரர். சிறிது காலம் ஆனது; விசுவாமித்திரரின் இஷ்டதெய்வம் அவர் முன் தோன்றி, 'விசுவாமித்திரா... நீ இப்போது சென்று வசிஷ்டரை வணங்கு; பதிலுக்கு அவர் உன்னை வணங்கா விட்டால், அவர் தலை வெடிக்கட்டும் என்று, சாபம் கொடுத்து விடு...' என்றது!

உடனே சென்று வசிஷ்டரை வணங்கினார் விசுவாமித்திரர். அவரோ, முன் போலவே, இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார்; இதனால், சாபம் கொடுக்கத் தயாரானார் விசுவாமித்திரர்.

ஆனால், அவர் செய்த தவத்தின் காரணமாக மனதில் நல்ல எண்ணங்களே எழுந்தன. 'என்ன பைத்தியக்காரத்தனம் இது! இவர் என்னை பிரம்மரிஷி என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன... நான் கோபத்திற்கு இடம் கொடுத்து, அறிவிழந்து இவரைச் சபிக்க எண்ணி விட்டேனே...

'இவ்வளவு காலம் தவம் செய்தும், எனக்குள் இருக்கும் கெட்ட எண்ணம் நீங்கவில்லையே... இவருக்குச் சாபம் கொடுக்க நினைத்ததன் மூலம், என் தவசக்தி எல்லாம் வீணாகி விட்டது. எல்லா ஜீவராசிகளிலும் ஒரே ஆன்மா தானே குடிகொண்டுள்ளது. அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட தவறை இனி செய்யக் கூடாது...' என நினைத்து தலைகுனிந்து திரும்பினார் விசுவாமித்திரர்.

அப்போது, 'முனிவரே... நில்லுங்கள்; நான் உங்களை வணங்க வேண்டாமா...' என்றார் வசிஷ்டர்.

சட்டென்று திரும்பினார் விசுவாமித்திரர். வசிஷ்டர் கைகளை கூப்பி வணங்கி, 'பிரம்மஞானம் அடைந்த உங்களை வணங்கி, உங்கள் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்...' என்று கூறி, விசுவாமித்திரரை தழுவிக் கொண்டார்.

மனம் நெகிழ்ந்தார் விசுவாமித்திரர். 'முனிவரே... முன்பு உங்களிடம் இருந்த கோபம் முதலான எல்லா தீய குணங்களும் நீங்கி, அனைத்தையும் பிரம்ம மயமாக பார்க்கும் தன்மையும் அடக்கமும் வந்து விட்டது. அதனால், இப்போது நீங்கள் பிரம்ம ஞானி, பிரம்ம ரிஷியாகி விட்டீர்கள்...' என்று பாராட்டினார் வசிஷ்டர்.

நற்குணங்களே நிலையான உயர்வைத் தரும்; தீய குணங்கள் உயர்வைத் தருவது போலத் தோன்றினாலும், முடிவில் நம்மைக் கீழே வீழ்த்தி விடும்.

இதையே "வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!" என்று கூறப்பட்டது. ஆனால் நாளடைவில் அது தவறாகவும் பொருள்கொள்ளப்பட்டது. 

திருக்கோஷ்டியூர் (சௌமியநாராயணப் பெருமாள் கோயில்)
திருக்கோஷ்டியூர் நம்பியிடம் எட்டழுத்து திருமந்திர உபதேசம் பெற ராமானுஜர் வந்த போது, யார் எனக் கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி வீட்டிற்குள்ளிருந்தவாறே, "நான் செத்து வா!' என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். அவரை அழைத்த நம்பி, ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார். ஏனெனில் ராமானுஜருக்கு அடக்கம் வந்தது. 


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி - மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று. (அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும். இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

சாலமன் பாப்பையா உரை
கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

குறள் 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]

பொருள்
தீ ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

தீயினால் - நெருப்பினால் 

சுட்ட - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

புண் - உடல்ஊறு; தசை; வடு; மனநோவு.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

ஆறும் - ஆறுதல் - தணிதல்; சூடுதணிதல்; அமைதியாதல்; புண்காய்தல்; அடங்குதல் மனவமைதி.

ஆறாதே - ஆறாது - தணியாது ; சூடுதணியாது ; அமைதியாகாது; அடங்காது; மனம் அமைதியடையாது 

நாவினால் - நாக்கு - நாக்குஎன்னும்உறுப்பு; சொல்; நடு; துலைநா; மணியின்நாக்கு; தீயின்சுடர்; பூட்டின்தாள்; திறவுகோலின்நாக்கு; நாகசுரத்தின்ஊதுவாய்; அயல்; தானியக்கதிர்; படகுவலிக்கும்தண்டு.

சுட்டசுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல்.

வடு - தழும்பு; மாம்பிஞ்சு; இளங்காய்; உடல்மச்சம்; உளியாற்செதுக்கினஉரு; புண்வாய்; குற்றம்; பழி; கேடு; கருமணல்; செம்பு; வாள்; வண்டு; பிரமசாரி; இளைஞன்; வைரவன்; புத்திசாலிப்பையன்.

முழுப்பொருள் 
வடு என்றால் ஒரு தழும்பு. அது ஒருவித அடையாளம். அது ஒரு நினைவின் சின்னம். நல்ல நினைவுகள் நல்லவற்றை கொடுக்கும். உந்துசக்தியாக அமையும். ஆனால் கேட்ட நினைவுகள் ஒரு கோல் போல உள்ளே ஆறாத  வடுவில்(புண்ணில்) தொட்டு தொட்டு  (மனதை) ரணமாய் கொல்லும். 

இக்குறளில் திருவள்ளுவர் கூறுவது தீ நம்மை சுட்டு நமது உடம்பில் புண் ஏற்பட்டாலும் அது சிலநாட்களில் ஆறிவிடும். ஆனால் நாவினால் வந்த சொற்களால் ஒருவர் மனதை சுட்டால் அப்புண் புறத்தே ஆறி வடுவாக மாறினாலும் அகத்தே ஆறாது. அது நன்மை பயக்காது. ஆதலால் பிறரை சொற்களால் வருத்தாதே. நாவடக்கம் / சொல் அடக்கம் வேண்டும் ஒருவற்கு. 

திருவள்ளுவர் இங்கே கடுஞ்சொற்கள் தீச்சொற்கள் என்று கூறவில்லை. ஏனெனில் கடுஞ்சொற்களையும் தீயசொற்களையும் பழிச்சொற்களையும் கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தாமலும் மிக சாதாரணமான சொற்களாலும் சொற்களை கூறும் விதத்தாலும் உடல் மொழியாலும் விழிகளாலும் இதழ்களாலும் கூட பிறரை வருத்த முடியும். அதனால் தான் திருவள்ளுவர் பொதுவாக நாவினால் சுட்ட வடு என்று கூறியுள்ளார்.

கி.ராஜநாராயணனின் "கோபல்ல கிராமம்" நாவலில் ஒரு வரி வரும் "நாட்கள் மன புண்ணை ஆற்றினாலும் நினைப்பு என்னும் கோல் படும்போது அதில் மீண்டும் இரத்தம் கசிகிறது"

ஒருவர் சொன்னால் அதன் வலி உள்ளூர ஆறிவிடும். காலம் மறக்கச்செய்யும். ஆனால் நாவினால் உள்ளத்தை நோகடடித்தவரை காணும் பொழுதெல்லாம் கூறியது ஞாபகத்துக்கு வந்துக்கொண்டே இருக்கும். புண் நம்மிடம் இருக்கிறது. ஆனால் வடு இன்னொருவராய் அல்லது இன்னொரு சொல்லாய் இருக்கிறது. தீ ஆயுதமாகும் போது ”வடு” அந்த ஆயுதத்தின் மீது படிவதில்லை. ஆனால், நாக்கு ஆயுதமாகும் போது, புண்பட்டவரை விடுத்து ”வடு” ஆயுதத்தின் உரிமையாளர் மீதே படிந்துவிடுகிறது. அந்த வடுவைப் பார்க்கிற போதெல்லாம் அல்லது எண்ணுகிற போதெல்லாம் காயம்பட்டவருக்கு வலி ஏற்படுகிறது. ஆம் உடலில் ஏற்பட்ட வலியை உள்ளம் மறக்கலாம். உள்ளம், தான் கொண்ட வலியை எப்படி மறக்கும்?

வன்சொல் வன்மத்தையே வளர்க்கும்.  இது காரணம் பற்றியே, “யாகாவராயினும் நாகாக்க” என்று எச்சரிக்கையாக முன்னரே சொல்லப்பட்டது. நாலடியாரும், அறநெறிச்சாரமும் ஒத்தகருத்திலே பாடல்களைக் கொண்டுள்ளன. இப்பாடல்கள் எளிதில் பொருள்கொள்ளாத்தக்க வகையில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
கொள்ளி வைத்தாற்போல் கொடிதெனினும் – மெள்ள
அறிவென்னும் நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதெனினும் வேண்டா தவம் (அறநெறிச் சாரம் 100)

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் – ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து (நாலடியார் 63)

மஹாபாரதத்தில் பேரறத்தான் கர்ணனை இவ்வுலகம் தேரோட்டியின் மகன் என்றும் பின்பு தந்தை பெயர் தெரியாதவன் என்றும் அவனை எவ்வளவு இழிவு செய்தது. அது அவன் மனதில் எவ்வளவு பெரிய ரணத்தை கொடுத்து இருக்கும். ஒவ்வொரு முறையும் நினைக்கும் பொழுதும் அவமானங்களை சந்திக்கும் பொழுதும் அதில் இருந்து எவ்வளவு இரத்தம் கசிந்து இருக்கும். 

வெண்முரசு நாவல் தொடரில் (மஹாபாரதம் நவீன நாவல் வடிவில் தமிழில்) வெய்யோன் நாவலில் மயனீர் மாளிகை அத்தியாயத்தில் மயனீர் மாளிகையில் (மாயக்கூடத்தில்)  துரியோதனன் திரௌபதியிடம் (மற்றும் அர்ஜுனன், பீமன், மற்றும் அவையில் இருந்தோர் முன்பு) அவமானப்படும் ஒரு தருணம் வரும். அது எப்படிப்பட்ட பின்பு ஏற்படும் பேரிழப்புகளை உண்டாக்கும் குருஷேத்திரத்துக்கு ஒருவித துவக்கப்புள்ளி என்பதை பின்னாட்களில் தான் உணர முடியும்.  

================================================
துரியோதனன் அத்தருணத்தை பயன்படுத்திக் கொள்ளப்போகிறான் என கர்ணன் எதிர்பார்த்தான். ஆனால் அவன் அவர்களை நோக்கவில்லை. மகளிர்பகுதியை நோக்கி கைசுட்டி “அங்கரே, அவள் அணிந்திருப்பது தேவயானியின் மணிமுடி!” என்றான். அவன் குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்து “ஆம்” என்றான் கர்ணன். “நான் சொன்னேனல்லவா? அரசர்களின் குடியவையில் அவள் அம்மணிமுடியை அணிந்துதான் வருவாள் என்று” என்றான். கர்ணன் தலையசைத்தான். அவள் அந்த மணிமுடியை எப்போது அணிந்தாள் என்று அவன் எண்ணம் ஓடியது. ஜராசந்தன் துரியோதனனிடம் “கௌரவரே, நாங்கள் பசுங்குருதிச் சுவைகொண்ட உணவை அருந்தப்போகிறோம். வருகிறீர்களா?” என்றான். “மல்லர்களுக்குரிய உணவு… திமிலெழுந்த வேசரநாட்டுக் காளை.”

துரியோதனன் “வந்துவிடுகிறேன்” என்று புன்னகையுடன் சொன்னபின் கர்ணன் கைகளைப்பற்றி “முறைப்படி அவளிடம் ஒரு முகமன் சொல்லிவிட்டு வருகிறேன்” என்றான். கர்ணனின் உள்ளம் ஏனோ படபடக்கத் தொடங்கியது. “அவளிடம் அம்மணிமுடி தனக்குரியவளை கண்டுகொண்டது என்று சொல்லப்போகிறேன். நான் அவளுக்கு அதை அளித்தேன் எனச் சொல்வதுதான் அது. அதை நான் சொல்லியாகவேண்டும்… இல்லையேல்…” என்று தயங்கினான். கர்ணன் “அரசியரிடம் நேரில் முகமன் சொல்லும் வழக்கம் இங்கில்லை” என்றான். “நான் அவளுக்கு அயலோன் அல்ல. அவள் என் குலமகள்” என்றான் துரியோதனன்.

கர்ணன் மெல்லிய எரிச்சலுடன் “தாங்கள் அஸ்தினபுரியின் அரசர், இவர்களால் உபசரிக்கப்படவேண்டியவர்” என்றான். “இல்லை அங்கரே, அக்கணக்குகளுக்கு அப்பால் நான் சென்றுவிட்டேன். இன்று இது ஒரு குடிவிழாவாக ஆகிவிட்டது. மூத்தவனாக நான் நின்றிருக்க வேண்டிய இடம் பாண்டவர்களின் நடுவேதான்” என்றான் துரியோதனன். “இக்கணம், இதை நான் கடந்தாகவேண்டும்…”

கர்ணன் “அரசே…” என்று சொல்லவர அவனை கேளாதவன் போல “அவளிடம் என் அன்னையின் வாழ்த்தை தெரிவித்துவிட்டு வருகிறேன். யாதவப் பேரரசியையும் நான் வணங்கியாக வேண்டும்” என்றபடி அரசர்களின் நிரையிலிருந்து அரசியரின் நிரையை நோக்கி வெண்பளிங்குத் தரையில் காலெடுத்து வைத்து நடந்தான். இரண்டாவது காலடியில் அது நீர்ப்பரப்பென மாறி அவனை உள்ளிழுத்து சரித்தது. திகைப்பொலியுடன் அவன் நீரில் விழுந்து எழமுயல கால்சறுக்கி மீண்டும் விழுந்தான். மொத்த அவையும் அவ்வொலி கேட்டு திரும்பி நோக்கியது. தனித்தனியாக என்றில்லாமல் அக்கூடமே மெல்ல நகைத்தது. தன்னையறியாமல் “மூத்தவரே” என்றபடி பிடிக்கப்போன துச்சாதனன் கால்வைத்த நீர்ப்பரப்பு பளிங்கென இருக்க அவன் தடுமாறி துரியோதனன் மேலேயே விழுந்தான்.

அக்கணத்தில் உண்டாட்டுக்கூடமே பெருங்குரலில் சிரித்தது. துரியோதனனின் முகம் எதிர்பாராதபடி மூத்தவரால் அடிக்கப்பட்ட கைக்குழந்தையினுடையதுபோல கணக்காலத்தில் உறைந்து கர்ணனின் விழிகளில் நின்றது. அவன் நீரில் இறங்கி வெண்பளிங்கில் கால்வைத்து மீண்டும் நீரில் நடந்து துரியோதனனை தோள்பற்றி தூக்கினான். அவ்விசையில் திரும்பி அவன் திரௌபதியை விழிதொட்ட அதே கணத்தில் துரியோதனனும் அவளை பார்த்தான். விழிகள் நகைக்க இதழ்கள் ஏளனத்துடன் மெல்ல வளைய அவர்களை ஒருகணம் விழிதொட்டுவிட்டு அவள் திரும்பி விஜயையிடம் சொல்லிக்கொண்டிருந்த மொழியாடலை தொடர்ந்தாள்.

துச்சாதனனை பிறிதொரு கையால் தூக்கி இருவரையும் இரு கைகளில் ஏந்தியபடி நீரிலிருந்து மேலேற்றினான் கர்ணன். இருவரும் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்ட விலங்குகள்போல வெறும் எடைமட்டுமாக இருந்தனர். அந்த ஒற்றைக்கணம் அப்படியே நீடிப்பதை அவன் உணர்ந்தான். ஒரு விழியொளி அம்புமுனை போல. ஒரு சிரிப்பு அணையாத தீ போல. ஒரு காலத்துளி மலையுச்சிக்கூர் போல. சுருளவிழ்ந்து எழும் நாகம். கோட்டெயிற்று அம்பு கரந்த நச்சுத்துளி. இக்கணம். இக்கணம். இக்கணம்.

துரியோதனன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் கால்கள் தரையில் இழுபட்டவை போல தளர்ந்து அடிவைத்தன. சிசுபாலன் கைதட்டி உரத்த குரலில் “அரசே, எண்ணி கால்வையுங்கள். அது தரையல்ல வானம்” என்றான். அறியாது துரியோதனன் தயங்க மீண்டும் உண்டாட்டவை வெடித்து நகைத்தது. துச்சாதனன் இடறிய குரலில் “நாம் சென்று விடுவோம் மூத்தவரே. இனி இங்கிருக்க என்னால் இயலாது” என்றான். “ஆம், சென்று விடுவோம்” என்றான் கர்ணன். துரியோதனன் சிறுவனைப்போல முனகினான். கர்ணன் விழிதிருப்பி நோக்க கனகர் அவர்களை நோக்கி ஓடி வந்தார். “அரசர்கள் ஆடை மாற்ற வேண்டும்” என்றான். “ஆம், ஆவன செய்கிறேன்” என்றார் கனகர்.

துச்சாதனன் தளர்ந்த குரலில் “என்ன இது மூத்தவரே?” என்றான். கர்ணன் திரும்பி திரௌபதியை பார்த்தான். அவள் சுபத்திரையிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பெண்கள் எவரும் அவர்களை பார்க்கவில்லை என்றாலும் அவர்கள் உடல் பார்த்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. “என்ன இது மூத்தவரே?” என்றான் துச்சாதனன் மீண்டும். அவையிலிருந்து விலகிய கௌரவர்கள் நிழல்களைப்போல அவர்களை நோக்கி வந்தனர். கர்ணன் அவர்களை திரும்பி நோக்கி விழிகளால் விலக்கினான். அவர்கள் அனைவருமே திகைத்தவர்கள் போலிருந்தனர். மீண்டும் திரும்பி கர்ணன் விழிதுழாவி பீமனின் கண்களை கண்டடைந்தான். மறுகணம் அப்பால் அர்ஜுனனின் கண்களை சந்தித்தான். இரு நோக்குகளில் இருந்த பகைமையைக் கண்டு நெஞ்சதிர விழிவாங்கினான்.

துரியோதனன் “செல்வோம்” என முனகினான். கர்ணன் அவர்களை இரு தோள்களிலும் தாங்கியபடி கூடத்தைவிட்டு வெளியே செல்ல கனகர் முன்னால் ஓடினார். மூவர் ஆடைகளும் நீர் சொட்டி உடலில் ஒட்டி இழுபட்டு ஓசையிட்டன. துரியோதனன் தலைகுனிந்து முகத்தில் விழுந்து மறைத்த குழலுடன் நடந்தான். கூடத்தின் பக்கவாட்டு வாயிலை அவர்கள் கடந்ததும் குளிர்ந்த காற்று வந்து முகத்தை அறைந்ததுபோல் உணர்ந்தான். நீள்மூச்சுடன் உடலை எளிதாக்கினான். கனகர் ஓடிவந்து “தேர்கள் சித்தமாக உள்ளன அரசே” என்றார். “நாம் அரண்மனைக்குச் செல்கிறோம்” என்றான் கர்ணன்.

இடைநாழியை அடைந்ததும் துரியோதனன் விழப்போகிறவன் போல கால் தளர கதவை பற்றிக்கொண்டான். அவன் எதையும் நோக்கவில்லை என்று கர்ணன் எண்ணிய கணமே “அவர்களின் விழிகள்!” என்றான் துரியோதனன். நடுநடுங்கும் கைகளால் கர்ணனின் கைகளை பிடித்தபடி “என் அறை வரை என்னை தாங்கிச் செல்லுங்கள் அங்கரே. என்னால் நடக்க முடியாது, மீண்டும் விழுந்துவிடுவேன்” என்றான்.
================================================

உண்மையில் பிரிந்து செல்வதற்கான உளநிலை எப்போதும் அவர்களிடமுள்ளது. ஒரு பண்பாட்டியல்பு அல்லது பழக்கம் வேறுபட்டால்போதும் அதையே பிரிந்து செல்வதற்கான நெறியென உடனே எடுத்துக்கொள்வார்கள். ஒரே குலத்தை, ஒரே குடியைச் சேர்ந்த யாதவர்கள் உண்ணும்போது ஒருசாரார் முதலில் மதுவை உண்ணவேண்டும் பிறிதொரு சாரார் முதலில் இனிப்பு உண்ணவேண்டும் என வகுத்து ஐந்தாண்டுகாலம் அதை கடைப்பிடித்தால் சில ஆண்டுகளுக்குள் அவர்கள் இரு பிரிவினராக ஆவது உறுதி. அதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

பிரிந்து செல்லும்போது அவர்கள் செல்வங்களை ஈவிரக்கமில்லாது பகுத்துக் கொண்டாகவேண்டும். அதைவிட நினைவுகளை பகுத்துக்கொள்ளவேண்டும். அது எளிதல்ல, அதற்கு அவர்கள் கண்டறிந்த வழி என்பது பூசல். மிகச்சிறிய தருணங்களைக்கூட எளிதில் பூசலாக்கிக்கொள்ள முடியும். அதிலும் ஒரு பொதுவிழாவில் பூசல் எளிதில் வெடிக்கும். ஏனென்றால் அங்கு அத்தனைபேரும் தங்கள் இடம்குறித்த பதற்றத்துடன் இருப்பார்கள். தங்களை தங்கள் உண்மையுருவைவிட மேலாகக் காட்ட முயன்றுகொண்டிருப்பார்கள். ஒருவனை சற்றே புண்படுத்தினால்போதும், அவனுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள அத்தனைபேரும் கிளர்ந்தெழுவார்கள்.

ஒருமுறை ஒருவன் சிவப்புத் தலைப்பாகை வைப்பதைப்பற்றி ஒரு வசையை சொன்னான். சிவப்புத் தலைப்பாகை அணிந்த அத்தனைபேரும் அவனுக்கு எதிராகத் திரண்டனர். பிறவண்ணத் தலைப்பாகை அணிந்தோர் அவனை ஆதரித்தனர். இரு கூட்டமாக எதிரெதிர் நின்று வசைபாடினர், பூசல் தொடங்கியது.” என்றார் இளைய யாதவர். புன்னகையுடன் “ஒரு குமுகச் செயல்பாட்டை அல்லது பண்பாட்டு நுட்பத்தைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த வழி அதை முடிந்தவரை பொருளற்றதாக விளக்கிக்கொள்வதே என்று படுகிறது” என்றார்.

ஷத்ரியர்களின் பூசலை பார்த்திருக்கிறேன், அது கொலையிலேயே முடியுமென அனைவரும் அறிவார்கள். ஆகவே அனைவரும் அதை தொடக்கத்திலேயே நிறுத்திவிட உள்ளம்கொண்டிருப்பார்கள். மூத்தவர்கள் உரியதருணத்தில் தலையிடுவார்கள். ஆனால் யாதவர்களின் பூசல்களில் உச்சமே தடியால் அடித்துக்கொள்வதும் கல்வீசுவதும்தான், எவரும் இறப்பதில்லை. அதை ஒரு உளஎழுச்சிகொண்ட களியாட்டாக அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்றே தோன்றும். மூத்தவர்கள் வெறுமனே நோக்கி நிற்பார்கள்.

அரசே, யாதவ மூத்தவர்களைப்போல பூசல்களை ஒடுக்கத் தெரியாத குடித்தலைவர்களை நான் கண்டதே இல்லை. ஏனென்றால் அவர்கள் உள்காடுகளில் தனித்து வாழ்பவர்கள். ஆண்டுக்கொருமுறையோ இருமுறையோதான் அவர்கள் திரளை பார்க்கிறார்கள். அயலாரிடம் பேசவே அவர்கள் தயங்குவார்கள். கூட்டம் அவர்களை முற்றிலும் செயலற்றதாக்கிவிடும். அவர்கள் பூசல்களில் நத்தையென உட்சுருங்கிவிடுவதை கண்டிருக்கிறேன்” என்றார் இளைய யாதவர். “இறப்பு இல்லையென்பதனாலேயே யாதவர்களின் பூசல்கள் மேலும் வன்முறை கொண்டவை. ஷத்ரியர்களின் பூசல் இறப்புகளில் எப்படியோ முடிந்துவிடுகின்றது. இறப்பு அப்பூசல்களின் பொருளின்மையை உடனடியாக பேருருக்கொண்டு காட்டிவிடுகிறது. அது உருவாக்கும் துயர் அப்பூசல் உருவாக்கிய கசப்புகளை உருகச் செய்துவிடுகிறது.

யாதவர்களின் பூசல் முற்றிலும் சொல்சார்ந்தது. குருதியும் வலியும் இல்லை என்பதனாலேயே அது நிறைவுகொள்வதில்லை. மேலும்மேலுமென தாவுகிறது. உடல் செல்வதற்கு எல்லையுண்டு, அது பொருள். சொல் செல்வதற்கு எல்லையில்லை, அது வெளி. சிறுமைகளின் உச்சம், இழிவுபடுத்தலின் இயலும் எல்லை. அதன்பின் ஒருபோதும் அவை மறக்கப்படுவதில்லை. நாவினால் சுட்டவடு ஆறுவதில்லை. உண்மையில் ஆற அவர்கள் விடுவதுமில்லை. ஏனென்றால் அச்சொற்களினூடாகவே அவர்கள் தங்களை வேறுபடுத்திக்கொள்கிறார்கள். தங்கள் தன்னடையாளத்தை அவ்விலக்கம் வழியாகவே உருவாக்கிக்கொள்கிறார்கள். அக்கசப்பை இழந்துவிட்டால் அவர்களிடம் எஞ்சுவது ஏதுமில்லை.

தலைமுறைகளுக்கு அவற்றை கைமாற்றுகிறார்கள். சொல்லிப்பெருக்கி தொன்மங்களாக்கிக் கொள்கிறார்கள். பிறவெறுப்பும் தன்னிரக்கமும் ஒன்றின் இருபக்கங்கள். இரு உச்சநிலைகளிலாக மாறிமாறிச் செல்லும் ஒருவரிடம் பேச நம்மிடம் ஏதும் இருப்பதில்லை. அரசே, சென்ற சிலமாதங்களாக நான் யாதவர்குடிகள் தோறும் சென்றுகொண்டிருந்தேன். கொந்தளிப்பின்றி நான் கண்ட எவருமில்லை. முதலில் அவர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பெருங்குலங்களாகச் சேர்ந்து வாழாமையால் அவர்கள் அதற்கான உளநிலைகளை கற்றுக்கொள்ளவில்லையா? அல்லது, பெருநிலம் நிறைந்து வாழ்பவர்களால் எப்போதும் ஒதுக்கப்பட்டு காடுபுகுந்து வாழநேர்ந்தமையின் தன்கசப்பா?

பின்னர் எப்போதோ தோன்றியது, அவர்கள் வாழும் அக்காட்டுத்தனிமையில் அவ்வண்ணமல்லவா மானுடர் உடனிருக்கமுடியும் என்று. அவர்களுக்கு உலகம் தேவைப்படுகிறது, அதனுடன் வீச்செழுந்த உளத்தொடர்பு வேண்டியிருக்கிறது. அது அன்போ வெறுப்போ. அன்பு அனைவர்மேலும் இயல்வதல்ல. அதற்கு அணுக்கம் தேவையாகிறது. எளியோருக்குக் குருதியே இயல்பான அணுக்கம். யாதவர்கள் தங்கள் மைந்தர்மேல் கொண்டிருக்கும் பேரன்பு திகைப்பூட்டுவது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் என அவர்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பேரன்பு அக்குருதிவட்டத்திற்குள்தான். அதற்கு வெளியே விரிந்திருக்கும் மானுடவெளியுடன் அவர்கள் வெறுப்பால்தான் ஆழ்தொடர்புகொள்கிறார்கள்.

அத்தனை பேரன்புகொண்டவர்கள், விருந்தினர் மேல் குளிர்மழையாகப் பெய்பவர்கள், கள்ளமற்ற எளிய உள்ளமும் நேரடியான பேச்சும் கொண்டவர்கள் எப்படி அந்த அளவுக்கு வெறுப்புகொண்டிருக்கிறார்கள் என்பதற்கான விடை அதுவே. எளிய உள்ளம் கொண்டவர்கள் புரிந்துகொள்ளவும் எளிதானவர்கள் என்பதைப்போல பிழை பிறிதில்லை. அவர்களின் வெளிப்பாடுகளே எளிமையானவை. ஏனென்றால் அவற்றை சிக்கலாக ஆக்கிக்கொள்ளும் அறிவுத்திறன் அவர்களிடமில்லை. அவர்களின் ஆழுள்ளம் இப்புவியின் இயல்பான எதைப்போலவும் சிக்கலான பெருவலை. அதைத் தொட்டு நீவி புரிந்துகொள்வதற்குத் தேவையானது தெய்வங்களின் விழி.”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தீயினால் சுட்டபுண் உள் ஆறும் - ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண், அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது - அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது. (ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.

மு.வரதராசனார் உரை
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை செய்கிறபோது “ஆறுதல் வடுவின் தன்மையன்று. புண்ணின் தன்மையே. ஆகவே ஆறாது என்று கொள்ளாமல் மாறாது என்று கொள்ளவேண்டும். நாவினால் சுட்டு அதனால் உண்டாடிய புண் ஆறியும் வடுவானது மாறாது நிலைத்திருக்கும். இதை நோக்கியே மாறாது என்றார் திருவள்ளுவர். இவர் உள்ளாறும்+ மாறாதே என இக்குறளைப் பிரித்து நாவினால் சுட்ட வடு (தழும்பு) எப்பொழுதும் மாறாமல் நிலைத்திருக்கும் எனப் பொருள் கண்டுள்ளார். மற்றவர்கள் உள்ளாறும் + ஆறாதே எனப்பிரித்து உரை கண்டிருக்கிறார்கள். 

Thirukkural - Management - Communication - Pleasant speech
Harmful words are more harmful than fire. An injury that happens because of fire will heal internally, though a scar remains externally, says Kural 129. However, the injury caused by harmful words never heals. The injury is deep and it keeps lingering. Whenever there is a reference to that word, the word awakens the wound.

The sound caused by fire will heal within,
But not the scar left by the tongue.

Harmful words cause too much damage. A harmful word registered in the listener's mind will trigger a host of negative emotions when there is a reference to that particular word. Be empathetic and avoid using words that leave lasting negative mental impressions. 

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

குறள் 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
[அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை]

பொருள்
ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

ஒன்றானும் - பேசியவற்றுள் ஒரு சொல்லே (நல்லவை பேசினாலும், அல்லவை பேசினாலும்)

தீச்சொற் - தீச்சொல் - பழிச்சொல் 

பொருட் - பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

உண்டாயின் - உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல்

நன்று  - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

ஆகுதல் - ஆதல்

ஆகாது - அல்ல ; நிகழாது; முடியாது; அமையாது; 

ஆகிவிடும்ஆகுதல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

முழுப்பொருள் 
ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு (விஷம்) சொட்டினால்  என்ன ஆகும்.  அப்பால் முழுவதும் விஷமாகும்.  அதுவே இக்குறளின் மையக்கருத்து.

தீயசொல்லினால் சிறிதளவு பயன் ஒன்று உண்டானாலும் அத்தீச்சொலால் மற்ற அறச்செயல்களால் விளைந்த நன்மைகள் யாவும் நன்மையற்றதாக ஆகிவிடும். ஆதலால் தீயசொற்களை எக்காரணம் கொண்டும் பேசாதே என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

மேலும் தேவை இல்லாமல் பொய் பேசாதே (தேவை இருந்தால் பொய் பேசலாம் என்றில்லை.  உண்மையை பேசி கெடுவிளையுமாயின் அங்கு பொய் பேசி கெடுவிளையாது என்றால் அங்கு பொய் பேசலாம் (அல்லது உண்மையை  கூறாது இருக்கலாம்)), எக்காரணம் கொண்டும் புறம் பேசாதே, கடுஞ்சொல் பேசாதே, பேசாதே (ஏனெனில் தேவையற்ற பயனற்ற பேச்சு ஆத்ம சக்தியை குறைக்கும்) . 

பொதுவாக நம் வீடுகளிலில் சபிக்கும்படியாகவோ, தீங்கைக்குறிக்கும் சுடு சொற்களையோ பேசுதல் தவிர்க்கப்பட வேண்டுமென்பார்கள். ஏனெனில், அவற்றுள் ஏதேனும் ஒருசொல் உண்மையாகி விட்டால், பாதிக்கப்பட்டவர் மட்டுமன்றி பேசியவர்களும் கூட வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட நேரிடும். ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், அல்லது சகோதர சகோதரிகளுக்கிடையே, அல்லது சுற்றத்தார் மற்றும் நண்பர்களுக்கிடையே, சிறு கோபங்கள், வருத்தங்கள் காரணமாக, சொல்லத்தகாத சொற்களை சொல்லிவிடுவது உண்டு, பலசமயங்களில் அப்படியே நடந்துவிட்டால் அது உண்மையில் யாரை பாதிக்கும் என்று சிந்திக்காமல். (எடுத்துக்காட்டாக, ஒருவரை ஓட்டாண்டியகிவிட வேண்டுமென்று சபிப்பது, ஒருவருக்கு மிகவும் கொடிய நோய் தாக்கவேண்டுமென்று கோபத்தில் சொல்வது).

சொன்னவரேகூட மறந்து, மீண்டும் இயல்புநிலைக்கு வந்து யாரைப்பற்றி சொன்னாரோ, அவரோடு மீண்டும் இயல்பான உறவில் இருக்கும்போது, சபிக்கப்பட்டவருக்கு முன்னர் சபித்தது உண்மையாகிவிட்டால்,  முன்னர் எத்தனை நல்லவை செய்திருந்தாலும், சொல்லியிருந்தாலும் அவையெல்லாம் பயனற்றுபோய், வாழ்நாள் முழுவதும் வருந்துவதுவல்லவா உண்மையாகிவிடும்?

முந்தைய குறளில் சொல்லப்பட்ட கருத்துக்கு அணுக்கமான கருத்தைத்தான் இக்குறளும் சொல்கிறது. தீது ஆகிவிடும் என்று உறுதிப்பட சொல்லாது, நன்று ஆகாது ஆகிவிடும் என்றதனால், “ஒருவேளை ஆகிவிடலாம்” என்கிற பொருளைத் தருகிறது.  வீட்டிலே பெரியவர்கள், நல்ல சொற்களேயே பேசவேண்டும், தீமையைச்சொல்லும் சொற்களைத் தவிர்க்கவேண்டும் என்பார்கள். ஒருவேளை, “நடக்கட்டும்” என்று சொல்லக்கூடிய தேவதைகள் இருந்து அவை தீயவற்றைச் சொல்லும் போது அவ்வாறு சொல்லிவிட்டால்? அதற்காகத்தான்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும். இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.

மு.வரதராசனார் உரை
தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை
தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

Thirukkural - Management - Communication 
We must always use pleasant, useful, and encouraging words. Nevertheless, by chance, as it is often excused as slip of the tongue, if we use a bad, negative or harmful word, all the gains we have gained by using pleasant words so far will lose their gains, warns Kural 128.

A single bad word will destroy 
All other good.

One harmful word used can bring bad name or bad reputation to the user. So watch out your tongue when you speak. Your words can either develop or destroy your life.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

குறள் 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]

பொருள்
வாணிகம் - வியாபாரம்; ஊதியம்.

செய்வார்க்கு - செய்பவர்க்கு 
செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

வாணிகம் - வியாபாரம்; ஊதியம்.

பேணிப் பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பிறவும் - பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.
பிறர் - அயலார்.

தமபோல் - தம்முடையதுப் போல

செயின்செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

முழுப்பொருள்


இவ்வதிகாரத்தில் ஒன்பது குறள்களை நீதிபதிகளுக்கு கூறினார் திருவள்ளுவர். நீதிபதிக்கு அடுத்து தராசுக்கோலை கையில் ஏந்துபவர் வாணிகம் செய்வோர் ஆவர். அதனால் தான் அவர்களுக்கு ஒரு குறள்.

வாணிகம் செய்வோர் ஒரு இடத்தில இருந்து பொருளை பெற்று மற்றொரு இடத்தில அப்பொருளை விற்பார்கள். 

1) பொருளை வாங்கும் பொழுது எடை கம்மியாக இருந்தால் வாங்குவாரா? வாங்கமாட்டார் வியாபாரி. அதேபோல வியாபாரி பொருளை விற்கும் பொழுது எடை குறைவாக விற்கக்கூடாது. நியாயமாக விற்க வேண்டும். 
(நமக்கு விற்கும் ஒருவர் எடை அதிகமாக கொடுத்தாலும், அதனை தன்பொருள் என எண்ணி அவரிடமே கொடுத்துவிட வேண்டும்) 

2) பொருளை அதற்கான நியாயமான விலைக்கு அதிகமாக வியாபாரி வாங்க மாட்டார். ஏனெனில் அது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதுமட்டும் இன்றி அது தனக்கு கட்டுப்படி ஆகாது. அதேபோல தன்னுடைய வாடிக்கையாளருக்கு அதிக விலைக்கு அதாவது அதீத இலாபத்துடன் விற்க கூடாது. ஏனெனில் அது வாடிக்கையாளருக்கு கட்டுப்படி ஆகாது. 

3) சில சமயங்களில் தட்டுப்பாடு காரணமாக அதிக தேவை இருக்கலாம். அப்பொழுது பொருளை பதுக்கி பின்பு விலை ஏற்றி விற்பது எல்லாம் அநியாயம். சந்தர்ப்பவாதம். வாணிபர் அப்படி இருக்கக்கூடாது. 

ஆதலால் ஒரு வியாபாரி பிறருக்கு தான் விற்கும் பொருளை தன்பொருள் என எண்ணி அளவான இலாபத்துடன் எடை குறையாது விற்கவேண்டும். அதுவே ஒரு நல்ல தொழில் முறையாகும். 

வெறுமனே எடையில் நியாயம் இருக்க வேண்டும் என்று கூறாமல் இலாபத்திலும் நியாயம் இருக்க வேண்டும் என்று கூறுவது தான் திருவள்ளுவரின் சிறப்பு. 

சங்க இலக்கியமான பட்டினப்பாலை இவ்வாறு சொல்கிறது: “நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப நாடிக் கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்துவீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை”.  இதன் கருத்தானது, கொள்வதும் மிகையாகக் கொள்ளாமல், அதாவது பணமோ, பண்டமோ, அடுத்தவரின் சொத்துதானே என்று பேராசையிலோ, அல்லது வஞ்சகத்திலோ, ஏமாற்றியோ ஏற்றுக்கொள்ளாது, அதேபோல் தான் கொடுக்கும் பண்டமோ, பணமோ குறைவில்லாமல் கொடுப்பதுவே” நல்ல நடுவாண்மை மிக்க வாணிகருக்கு அழகு என்கிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக இன்றும் உற்பத்தியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடுவில் இருக்கும் இந்த சங்கிலித்தொடரில் நடுவில் இருப்போர் அடிக்கும் பகல் கொள்ளை மிக மிக அதிகம். உதாரணமாக ஒரு கிலோ அரிசி விவசாயி விற்கும் விலை 20 (ரூபாய்) என்றால் அது விற்கப்படும் விலை 70 (ரூபாய்) இருக்கும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்புதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல்கொண்டித் துவன்றிருக்கை” (பட்டினப் 210-12)

பரிமேலழகர் உரை
பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.).

மணக்குடவர் உரை
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின். வாணிகம் - இலாபம்.

மு.வரதராசனார் உரை
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.