Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

குறள் 1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்
[காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்]

பொருள்
து - tu   s. (Hind.) A sign of displeasure, இகழ்ச்சிக்குறிப்பு.
துப்பு - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.

துப்பின் - பகைக்கின்

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

ஆவர் - ஆவார்

மன் - part. 1. An expletive; ஓர் அசைநிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1).2. Affix indicative of (a) future tense; எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல். சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா. 1, உரை.): (b) ellipsis;ஒழியிசைக்குறிப்பு. கூரியதோர் வாண்மன் (தொல்.சொல். 252, உரை): (c) greatness, abundance;மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்றுமன்னே (புறநா. 75): (d) change or transformation; பிறிதொன்றாகைக்குறிப்பு. பண்டு காடுமனின்று கயல்பிறழும் வயலாயிற்று (தொல். சொல். 252,உரை): (e) prosperity; ஆக்கக்குறிப்பு. திருநிலைஇயபெருமன்னெயில் (பட்டினப். 291): (f) what ispast and gone; கழிவுக்குறிப்பு. சிறியகட் பெறினேயெமக்கீயு மன்னே (புறநா. 235): (g) permanence;நிலைபேற்றுக்குறிப்பு. (நன். 432.) 3. A personalsuffix, as in vaṭamaṉ; ஒரு பெயர்விகதி.- ஒழியிசை (ஒழிந்தபொருள்தருஞ் சொற்களைத் தருவது.)

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

துயர் - துன்பம்; அரசர்க்குஉரியசூதுமுதலாகியவிதனம்.

வரவு - வருவாய்; வருகை; வரலாறு; விளைவு; வழி; வணங்குகை.

நட்பினுள் - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

ஆற்றுதல் - āṟṟu-   5 v. intr. 1. To becomestrong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. Tobe sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 101).--v. tr. 1. To

ஆற்றுபவர் - வலிமையானவர்

முழுப்பொருள்
போர் என பிரிந்து சென்ற தலைவனை பற்றி தலைவி இப்படி நினைக்கிறாள். காதலி என்னிடம் மென்மையாக இருக்க வேண்டியவர் தலைவர். இன்பதை தர வேண்டியவர். துன்பத்தை தரக்கூடாதவர். ஆனால் அத்தலைவர் எனக்குப் (பிரிவு என்னும்) துன்பத்தை தந்து விட்டார். ஒருவேளை என்னிடம் இவர் பகைத்துக்கொண்டு சென்று இருந்தால் என் நிலைமை என்னவாகி இருக்கும்? எப்படி பட்ட துன்பத்தை தந்திருப்பார். 

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
(தூது விடாமை நோக்கித் தோழியோடு புலந்து சொல்லியது) நட்பினுள் துயர் வரவு ஆற்றுபவர் - இன்பஞ்செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்பவரவினைச் செய்ய வல்லவர்; துப்பின் எவனாவர் கொல் - துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ? (துப்புப் பகையுமாதல், 'துப்பெதிர்ந்தோர்க்கே யுள்ளாச் சேய்மையன் நட்பெதிர்ந் தோர்க்கே அங்கை யண்மையன்' (புறநா.380) என்பதனானும் அறிக. அப்பகைமை ஈண்டுக் காணாமையின், 'அவர் செய்வது அறியப் பெற்றிலேம்' என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. துயர் வருதலை விலக்கலாயிருக்க அது செய்கின்றிலை எனப் புலக்கின்றமையின், துயர் வரவு செய்தாளாக்கியும் பிறளாக்கியும் கூறினாள்.)

மணக்குடவர் உரை
மென்மை செய்ய வேண்டும் நட்டோர்மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர், வன்மை செய்ய வேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய்கின்றாரோ? இது பகைதணி வினையின்கண் பிரிந்த தலைமகனது கொடுமையை உட்கொண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?.

சாலமன் பாப்பையா உரை
இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?.

No comments:

Post a Comment