Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குறள் 965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
[பொருட்பால், குடியியல், மானம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குன்றின் - குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள்.

அனை - அன்னை; அந்த ஒருவகைமீன்.

அனையாரும் - அவரும்

குன்றுவர்  - குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

குன்றுவ - குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள்.

குன்றி - குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

அனைய - அத்தன்மையான; ஒத்த.

செயின் - செய்தால்

முழுப்பொருள்
குன்றுப்போல் (மலைபோல) உயரமான புகழை உடைய நற்குடியில் பிறந்தவராயினும் ஒருவருடைய புகழ் குறையும். எப்பொழுது அப்புகழ் குறையும் ? குற்றம் சிறிதளவாயினும் கீழ்மையான செயல் அல்லது தீங்கு விளைவிக்கும் செயலை செய்தால் ஒருவருடைய புகழ் / மானம் குறையும்.

குன்றிமணி என்பது அளவில் சிறியது; அதோடு ஒப்பின் குன்று மிகப்பெரியது. வீழ்ச்சியின் அளவை உயர்த்திக் காட்டவே இந்த ஒப்புமை. மேலும் உயர செல்ல செல்ல, வீழ்ச்சியின் வீச்சம் மிகுதியானது. மலைமீது செல்ல செல்ல ஒரு சிறு அடி தவறாக வைத்தால் நாம் கீழே விழுந்து அழிவோம். அதன் வலியும் அதிகமாக இருக்கும். குற்றம் சிறிது என்பதனால் வலி குறைவு அல்ல. உயரம் அதிகம் ஆதலால் குற்றம் சிறிதானாலும் அதன் வலி பெரிது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். ('குன்றியனையவும'¢ என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.).

மணக்குடவர் உரை
மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின். இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.

மு.வரதராசனார் உரை
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

English Meaning - As I taught a kid - Rajesh
When one's reputation is as high as a mountain, then he or she has to be careful. Because, if he or she makes even a tiny mistake the his or her's reputation will decline like falling from the cliff of a mountain. When climbing a mountain, even one wrong step will lead to either death or huge damage of body parts. One has to be careful.

Questions that I ask to the kid
A person like a mountain, what should he be careful of?

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற

குறள் 956
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
சலம் - அசைவு; நீர்; சீழ்நீர்; மூத்திரம்; நடுக்கம்; அசையும்அம்புக்குறி; இயங்குதிணை; சுழற்சி; தணியாக்கோபம்; கோபம்; பொய்ம்மை; வஞ்சனை; பட்சபாதம்; தீச்செயல்; மாறுபாடு; போட்டி; முள்ளம்பன்றியின்முள்இலாமிச்சை; பிடிவாதம்.

பற்றிச் - paṟṟi   patti பத்தி 1. about, concerning, regarding (post. + acc.) [2. cvb. of பற்று `hold, adhere to']
paṟṟi   பற்று-. n. See பற்றாசு, 1. (W.)--part. [M. paṟṟi.] Of, about, concerning,respecting, adverting to, referring to; குறித்து.என்னைப்பற்றிக் கவலைப்படாதே.

சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி

இல - இல்லாதவற்றை

செய்யார் -  பகைவர்; செய்யமாட்டார்கள்

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அற்ற - அல்லாத; இல்லாத

குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில்.

பற்றி -  paṟṟi   patti பத்தி 1. about, concerning, regarding (post. + acc.) [2. cvb. of பற்று `hold, adhere to']
paṟṟi   பற்று-. n. See பற்றாசு, 1. (W.)--part. [M. paṟṟi.] Of, about, concerning,respecting, adverting to, referring to; குறித்து.என்னைப்பற்றிக் கவலைப்படாதே.

வாழ்தும் - வாழ்வது
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

என்பார் - என்று கூறுவார்

முழுப்பொருள்
குற்றங்களை செய்யாத அப்பழுக்கற்ற நற்குடியில் பிறந்த ஒருவர் அல்லது குற்றங்கள் செய்யாத அப்பழுக்கற்ற நற்குலமாய் திகழ வேண்டும் என்று கருதி வாழும் ஒருவர் வஞ்சனையாலோ போட்டியாலோ வறுமையினாலோ கோபத்தினாலோ அல்லது மனதில் இருக்கும் சலனத்தினாலோ (சிறு அசைவு) மேன்மையற்ற செயல்களை எப்பொழுதும் செய்யமாட்டார்கள்.

நாலடியார் பாடல் வரிகள் இக்கருத்தை ஒட்டியது.

நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார்; – உரங்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை” (நாலடி 153)

அதாவது, உடம்பில் நரம்பு மேலே தோன்றும்படி வறுமையெய்தினாராயினும்  மேன்மக்கள் தமது நல்லொழுக்கத்தின் வரம்பு கடந்து பிழையான வழிகளை மேற்கொண்டு அவற்றில் தொடர்ந்து செல்லமாட்டார்.


”வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைத்து” (நாலடி 156)

“கள்ளார்கள் ளுண்ணார் கடிவ கடிந்தொரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்
வாயிற்பொய் கூறார் வடுவறு காட்சியார்
சாயிற் பரிவ திலர்” (நாலடி 157)

”அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண் டறிவாம்என் றெண்ணி யிராஅர்
..............சான்றோர், கடங்கொண்டும் செய்வார்கடன்” (பழமொழி 216)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்ற கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார். (அமைவின்மை அம் மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார். இது சான்றாண்மை விடார் என்றது.

மு.வரதராசனார் உரை
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

குறள் 945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
[பொருட்பால், நட்பியல், மருந்து]

பொருள்
மாறுபாடு - பகைமை; வேறுபடுதல்; ஒவ்வாமை; புரட்டு

இல்லாத - இல்லை, வறுமை

உண்டி - உணவு; சோறு இரை பறவை விலங்கு இவற்றின்உணவு; உண்டிச்சீட்டு; கருவூலம் மாற்றுச்சீட்டு; காணிக்கைப்பெட்டி; கோயிலுக்குக்கொடுக்கும்பணம்; நுகர்ச்சி கொட்டைக்கரந்தை

மறுத்து - மறுபடியும்; மேலும்.
மறுத்தல் - தடுத்தல்; திருப்புதல்; இல்லையென்னுதல்; நீக்குதல்; வெட்குதல்; திரும்பச்செய்தல்; இல்லாமற்போதல்.

உண்ணின் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

ஊறுபாடு - துன்பம்; தீமை; புண்படுகை; காயம்; சேதம்.

இல்லை - இல்லை

உயிர்க்கு - இந்த உயிருக்கு, இந்த பிறவியிற்கு

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

முழுப்பொருள்
உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாமையல்லாத உணவினை உண்ணும் அளவிற்கு மேல் செல்ல மறுத்து அளவாக உண்டால் உணவினால் எவ்வித துன்பமும் இல்லை அவ்வுயிர்க்கு.

இக்குறளில்  இரண்டு விஷயங்களை காணலாம்
1. உடலிற்கும் உள்ளத்திற்கும் ஒவ்வாத உணவை உண்ண கூடாது
2. உடலுக்கு ஏற்ற உணவானாலும் அளவாகவே உண்ணவேண்டும்.

ஆயூர்வேத டாக்டர் இல்.மகாதேவன்/இல்.மஹாதேவன் (Ayurveda Dr. L.Mahadevan) அவர்கள் “முதற்கால்” என்றொரு நேர்காணல் நூலில் இவ்வாறு கூறுகிறார்.
பொதுவாக நோய்களுக்குத் தான் பத்தியம். சேராங்கொட்டை போன்ற மருந்துகள் பயன்படுத்தும்போது அரிதாக மருந்திற்கும் பத்தியங்கள் உண்டு. நோய்களுக்குப் பத்தியம் மிக மிக முக்கியம். தொடக்க காலத்தில் நான் பத்தியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என சொல்லிக்கொண்டு இருந்ததுண்டு. ஆனால் இப்போது பத்தியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். ஆட்டோ இம்யூன் நோய்கள், அதாவது முடக்குவாதம் (rheumatoid) போன்ற, நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலின் சில திசுக்களுக்கு எதிராகச் செயல்படும் நோய்களுக்கெல்லாம் பத்தியம் கடைபிடித்துத்தான் ஆக வேண்டும். பத்தியம் என்ற வார்த்தைக்கு சிகிச்சை என்று பொருள். ஸ்ரோதஸ்களுக்கு உகந்தது பத்தியம். இப்பொழுது ஆங்கில மருந்துகளிலுமே பத்தியம் பின்பற்றுகிறார்கள். சிறுநீரக நோயில் பொட்டாசியம், உப்பு சேர்க்கக் கூடாது, புரதத்தைக் குறைக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள், சர்க்கரை நோயில் பிரக்டோஸ், மாவுச்சத்து உட்கொள்ளக் கூடாது என்கிறார்கள். தைராய்டு சுரபி குறைவாகச் சுரக்கும் நிலையில் முட்டைக்கோஸைச் சாப்பிடக் கூடாது. நன்மை பயக்கின்ற உணவுகளை சாப்பிட வேண்டும், தீமை பயக்கின்ற உணவுகளை நிறுத்த வேண்டும். இதுவே பத்தியம். ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று அன்றே சொல்லிவிட்டார் திருவள்ளுவர். அது மட்டுமல்ல; ’மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ எனும் குறள் பத்தியத்தைத்தானே உணர்த்துகிறது. பத்தியம் என்பது மறுத்து உண்ணல்தானே?

மேலும்: அஷோக் உரை

உணவை எப்படி உண்ண வேண்டும் என்பதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு - சொல்வளர்காடு-30-இல் ஒரு பகுதி இப்படி விவரிக்கிறது.

ஆனால் மறுநாள் காத்யாயனி “தந்தையே, எனக்கு யாக்ஞவல்கியர் முனிவரையே மணமகனாகப் பாருங்கள்” என்றாள். காத்யாயனர் வியந்து நோக்க “வேதத்தால் தூய்மை செய்யப்பட்டவர்களுக்கு பிறிதொரு தூய்மை தேவையில்லை என்று நேற்று உணர்ந்தேன்” என்றாள். “அவர் தன் தேவைக்குமேல் ஒரு பருக்கையும் உண்ணவில்லை. இலையில் ஒரு பருக்கையும் எஞ்சவைக்கவில்லை. ஒவ்வொரு கவளம் சோறும் பிறிதொன்று போலவே இருந்தன. ஒவ்வொரு கையசைவும் வாயசைவும் ஒருமைகொண்டிருந்தன. ஒவ்வொரு துளி உணவிலும் முற்றிலும் சுவையுணரப்பட்டது. உண்பது வேள்வி என நிகழ்வதைக் கண்டேன். வேள்வியாற்றுதல் என்பதன் உச்சம் செய்வதனைத்தும் வேள்வியாதலே” என்றாள்.

“ஆம், அவர் உணவில் சுவைகொண்டவர். ஊனுணவை விரும்பி உண்பவர் என்று சொல்லப்படுகிறது” என்றார் காத்யாயனர். காத்யாயனி புன்னகைத்து “நான் அவருக்கு வைத்த ஒரு கூட்டில் உப்பும் புளிப்பும் சேர்க்கவில்லை. வேப்பெண்ணையையே கலந்திருந்தேன். பிறிதொன்று இனியது. அவர் முகத்தில் இரண்டுக்கும் வேறுபாடே தெரியவில்லை. இரண்டிலும் சுவையறிந்தவர் பிரம்மத்தையே உண்கிறார்” என்றாள்.

நோயின்றி வாழமுடியாதா? - மூ.இராமகிருட்டிணன். தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி. உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம்
வள்ளுவர் இக்குறளுக்கு இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்

இம்மணிக்குறளை வையகம் வாழ நல்கினார். இயற்கைக்கு மாறுபாடி இல்லாத இயற்கை உணவினை அறிந்து, பிற உணவுகளை மறுத்து, அந்த இயற்கை உணவையே உண்பாரேயாயின் மக்கள் இனத்திற்கு மட்டுமன்றி எவ்வுயிருக்குமே என்றும் ஊறுபாடு-துன்பம்-துயரம்-நோய்-நொடி-சிதைவு-சீரழிவு எவையும் உண்டாகா என்று இக்குறள்  தெரிவிக்கின்றது. 

மாறுபாடு இல்லா உண்டி - 1) இயற்கைக்கு மாறுபடாத 2) உடலுக்கு மாறுபடாத 3) காலத்திற்கு மாறுபடாத 4) இடத்திற்கு மாறுபடாத உணவு - இயற்கை உணவே

அந்தந்த இடங்களில் அந்தந்தப் பருவங்களில் கிடைக்கும் உடலுக்க்கு ஏற்ற இயற்கை உணவுகள் - கனிகள் - காய்கள்.

மறுத்து - (1) அளவோடு (2) உண்ணா நோன்போடு - இயற்கை உணவுகளை அளவோடும் இடை இடையே உண்ணா நோன்போடும்.
உண்ணின் - ஐயப் பொருளில் அதன் கடினம் சுட்டியது. நன்மையின் உயர்வும் சுட்டியது.

ஊறுபாடு - உண்டாகிய, உண்டாகின்ற, உண்டாகும் துன்பங்கல் - தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் துன்பங்கள் - நோய்கள்.
உயிர்க்கு - மக்களுக்கு மட்டுமன்றி, எல்லா உயிர்க்கும் இந்நெரியே நோயற்ற வாழ்வை நல்கும்


மேலும்
இயற்கை வாழ்வே இனிய நல்வாழ்வு!
தேங்காய் வாழைப்பழம் சிறந்த மனித உணவு!
கனிகளை உண்டு பிணியின்றி வாழ்வோம்!
வெயிலில் தோய்க! மழையில் நனைக!
காற்று மிக சிறந்த நுண் உணவு!
ஒரு வேளை ஒரு வகை கனியே உயர்வு!
உண்ணா நோன்பு உயரிய மருந்து!
மருந்துகள் யாவும் நச்சுப் பொருள்களே!
உப்பு ஒரு கூட்டு நஞ்சு!
ஒரு வேளை உண்பான் யோகி!
இரு வேளை உண்பான் போகி!
- புலவர் திரு.மு.இராமகிருட்டிணன்
- உலக நல்வாழ்வு ஆசிரமம் , சிவசைலம், திருநெல்வேலி


பரிமேலழகர் உரை
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான்அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது. (உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற் செல்லாதாயிற்று. இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின் தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை. மாறுபாடு- பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்.

மு.வரதராசனார் உரை
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.

கவறும் கழகமும் கையும் தருக்கி

குறள் 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்
[பொருட்பால், நட்பியல், சூது]

பொருள்
கவறும் - கவறு - சூதாடுகருவி, தாயக்கட்டை; சூது; பனம்பட்டை.

கழகமும் - கழகம் - கல்விபயிலும்இடம், கல்விச்சங்கம்; படை, மல்முதலியனபயிலும்இடம்; சூது; சூதாடுமிடம்; ஓலக்கம்; புலவர்கூடியசபை.

கையும் - கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்

தருக்கி - தருக்குதல் - அகங்கரித்தல்; களித்தல்; ஊக்கமிகுதல்; பெருக்குதல்; இடித்தல்; வருத்துதல்; உடைத்தல்; மேற்கொள்ளுதல்.

இவறுதல் - ஆசையுறல்; விரும்புதல் மறத்தல் மிகுதல் உலாவுதல் கைவிடாதிருத்தல்; வேண்டும்வழிப்பொருள்கொடாமை.

இவறியார் - கைவிடாதவர்; ஆசைப்பட்டோர்.

இல்லாகியார் - எதுவும் இல்லாமல் போவார்

முழுப்பொருள்
சூதாட்டத்தில் பயன் படுத்தப்படும் தாயக்கட்டையையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறன் பெற்றதனால் (வளர்த்துக்கொண்டதனால்) சூதாட்டத்தில் களித்து இன்புறுவோர் சூதாட்டத்தை விரும்பி அதனை கைவிடவில்லையென்றால் அவர் வாழ்வில் எல்லாம் செல்வமும் பெற்றவராக இருந்தாலும் அவர் எல்லாவற்றையும் இழந்துவிடுவார்.  

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இல்லாகியார் - முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி ஒழுகினார்; கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் - கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர். (கைத்தொழில் - வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல். அவ்விவறுதலால் பாண்டவர் தம் அரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினார் என அனுபவம் காட்டியவாறு. இவை ஐந்து பாட்டானும் அதனது வறுமை பயத்தற் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கவற்றினையும், கழகத்தினையும், கைத்தொழிலினையும் விரும்பி விடாதவர் முற்காலத்தினும் வறுவியரானார். கவறு - நெத்தம், கழகம் - உருண்டையுருட்டு மிடம், கைத் தொழில் - கவடி பிடித்தல்.

மு.வரதராசனார் உரை
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

சாலமன் பாப்பையா உரை
சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

குறள் 925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்
[பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை]

பொருள்
கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

அறியாமை - அறியாத்தன்மை; மடமை

உடைத்தே - உடைத்து - உடையது; இருக்கும்

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கொடுத்து - கொடுத்தல் - ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை.

மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து.

அறியாமை -  அறியாத்தன்மை; மடமை

கொளல் - அதனை கொள்ள வேண்டும்

முழுப்பொருள்
கள் உண்டால் அதன் விளைவாக துன்பத்தையும் பெரியோர் இகழ்ச்சியையும் மதி குறைதலையும் அறியாத அறிவை உடையவர் கள்ளினை விலை கொடுத்து வாங்கி பருகினால் அவர்கள் உண்மையான பேதைமையை வாங்கிக்கொள்ளுகிறார்கள் என்று அர்த்தம். அதாவது கள் அறிவை வளர்க்காது அறியாமை வளர்த்தெடுக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல் - ஒருவன் விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளால் தனக்கு மெய்ம்மறப்பினைக் கொள்ளுதல்; கை அறியாமை உடைத்து - அவன் பழவினைப் பயனாய செய்வதறியாமையைத் தனக்குக் காரணமாக உடைத்து. (தன்னை அறியாமை சொல்லவே, ஒழிந்தன யாவும் அறியாமை சொல்லல் வேண்டாவாயிற்று. கை அப்பொருட்டாதல் 'பழனுடைப் பெருமரம் வீழ்ந்தெனக் கையற்று' (புறநா-209) என்பதனானும் அறிக. அறிவார் விலை கொடுத்து ஒன்றனைக் கொள்ளுங்கால் தீயது கொள்ளாமையின்,மெய்யறியாமை கொளல் முன்னை அறியாமையான் வந்தது என்பதாம்.).

மணக்குடவர் உரை
பயன் அறியாமை யுடைத்து: பொருளினைக் கொடுத்துத் தம்மெய் அறியாமையைச் செய்யும் கள்ளினைக் கோடல். இது மேற்கூறியகுற்ற மெல்லாம் பயத்தலின், அதனை அறிவுடையார் செய்யா ரென்றது.

மு.வரதராசனார் உரை
விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்

குறள் 914
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
[பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்]

பொருள்
பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; நிமித்தமாக.

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

பொருளார் - பொருள் என்னும் அறிவு / கொள்கை / தலைமை உடையவர் 

புன்புன்மை மறதி; இழிவு; அழுக்கு; துன்பம்; சிறுமை; வறுமை; குற்றம்; புகர்நிறம்; பார்வைமழுக்கம்.
புன் - புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி.

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

தோய்தல் - முழுகுதல்; நனைதல்; நிலத்துப்படிதல்; செறிதல்; அணைதல்; உறைதல்; கலத்தல்; பொருத்துதல்; முகத்தல்; கிட்டுதல்; ஒத்தல்; அகப்படுதல்; நட்டல்; துவைச்சலிடுதல்.

தோயார் - தம்மை ஈடுபத்திக்கொள்ளார்

அருட் / அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

பொருள் சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

ஆயும்ஆய்தல் நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

அறிவினவர் - அறிவினை உடையவர் 

முழுப்பொருள்
அருள் எனப்படும் நல்வினையையும் பொருள் எனப்படும் செல்வம் மெய்ப்பொருள் அறிவு தலைமை ஆகியவற்றை அடைய நினைக்கும் (அல்லது தேடும்) அறிவினை உடையவர் எப்பொழும் பொருளை மட்டுமே ஈட்ட நினைக்கும் புணர்ச்சி இன்பத்தை விற்கும் பெண்களிடம் உறவில் ஈடுபட மாட்டார். 

நாலடியார் பாடலொன்று, 
“மகளிர் தோள் சோர்வார்... வெள்ளறிவினார்” (நாலடி 375)

“.............மானோக்கின் 
தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே 
செந்நெறிச் சேர்த்துமென் பார்”  (நாலடி.378) என்பதும் இக்கருத்தையொட்டியே.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பொருட் பொருளார் புன்னலம் - இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை; அருட் பொருள் ஆயும் அறிவினவர் தோயார் - அருளொடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார். (அறம் முதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட் பொருள்' என விசேடித்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், 'தோயார்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
பொருளைப் பொருளாகக் கொள்வாராது புல்லிய நலத்தைத் தோயார், அருளைப் பொருளாக ஆராயும் அறிவுடையார்.

மு.வரதராசனார் உரை
பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

குறள் 904
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று
[பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல்]

பொருள்
மனையாளை - மனையாள் - மனைவி, இல்லாள்; மருதநிலத்தின்தலைவி; மனையையுடையாள்.

அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல்

மறுமை - மறுபிறவி; மறுவுலகம்.

இலாளன் - இல்லாதவன் 

வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

ஆண்மை -  ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

வீறு - தனிப்பட்டசிறப்பு; வெற்றி; வேறொன்றற்கில்லாஅழகு; பொலிவு; பெருமை; மிகுதி; நல்வினை; மருந்துமுதலியவற்றின்ஆற்றல்; செருக்கு; வெறுப்பு; ஒளி; வேறு; தனிமை; அடி.

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

இன்று -  இல்லை; இந்தநாள்; ஓரசைச்சொல்.


முழுப்பொருள் 
மனைவியை கண்டு அஞ்சி வாழும் ஒருவன் மனைவியின் ஆணைக்கிணங்க வாழும் ஒருவனுக்கு மறுபிறவியில் பயன் ஏதும் இல்லாதவனாய் பிறப்பான். அத்தகையவன் எத்தகைய செயல் திறன் படைத்திருந்தாலும் அவனுடைய சிறப்பை இவ்வுலகம் பாராட்டாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.

மு.வரதராசனார் உரை
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

குறள் 895
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
[பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை]

பொருள்
யாண்டுச் - எங்கு; எப்பொழுது; ஆண்டு

சென்று - செல்லும் - செல்லுதல் -  நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

யாண்டும் - எப்போதும்; எவ்விடத்தும்.

உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர்.

ஆகுதல் - ஆவது என்பது; ஆதல்; ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆகார் - விருப்பத்திற்கு உரியவராக இல்லாது இருத்தல் ; வளரமாட்டார்

வெந்  - வெம் - வெம்மை -வெப்பம், கடுமை; சினம்; விருப்பம்; வீரம்.

துப்பின் - துப்பு - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது.

வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன்.

செறல் - கோபம்; கொல்லுகை.

செறப்பட்டவர் - கோபத்திற்கு உள்ளானவர்

முழுப்பொருள்
மிக பெரிய வலிமையுடைய அரசனின் கோபத்திற்கு ஆளான ஒருவர் எங்கு சென்றாலும் எப்பொழுதும் வாழமுடியாது. ஆதலால் பெரியோரிடம் பிழை செய்யாது இருத்தல் வேண்டும். அரசரின் கோபம் பெரிய தவறுகளுக்கு வரும் என்பதை நாம் சொல்லித்தான் அறியவேண்டும் என்றில்லை.

அவர்கள் எங்குசென்றாலும் வாழ முடியாது என்பதற்கு காரணம்: இவர்களை பற்றிய செய்தி (அதாவது இவர்கள் செய்த தவறுகள்) மிக வேகமாக எல்லா இடங்களுக்கும் பரவிவிடும். ஆதலால் இவரை பற்றி எல்லோரும் அறிந்து இவரிடம் பழகி அரசரின் கோபத்திற்கு ஆளாக மாட்டார். மேலும் பெரிய தவறு செய்வோரிடம் பழக்கம் வைத்துக்கொள்வதை அடிப்படையாகவே யாரும் விரும்பமாட்டார்.

கி.வா.ஜவின் ஆராய்ச்சியுரை, இக்குறளோடு முற்றும் ஒப்பதாய சீவக சிந்தாமணிப் (1089) பாடல் வரியினைச் சுட்டுகிறது: “வேந்தொடு மாறு கோடல் விளிக்குற்றா தொழிலதாகும்”. அதாவது அரசனோடு மாறுபட்ட கருத்தில் நிற்பது கேட்டினை அடைய எண்ணுபவரது தொழிலாகும் என்கிறது இவ்வரி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்குவெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் -அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார். (இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின்வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராயின், இவர் இனி ஆகார்என்பது நோக்கி அவனொடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர், அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடையஅரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்: வெய்ய வலிமையுடைய வேந்தனால் செறப்பட்டார். இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

சாலமன் பாப்பையா உரை
பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்

குறள் 885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்
[பொருட்பால், நட்பியல், உட்பகை]

பொருள்
உறல் - அடைகை; உறவு; பரிசம்உறுதல்; பொருந்தல்; கிட்டல்; வருதல்; அடைதல்; அணைதல்

முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.

முறையான் - முறைகாரர், s. [pl.] Those who are employed to attend to a duty by turns.

உட்பகை - நட்புப் பாராட்டிக் கெடுக்கும் பகை; உள்ளாகி நிற்கும் பகை; அறுபகை குடிகளின் எதிர்ப்பு.

தோன்றின் தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல்.

இறல் - ஒடிதல்; கெடுதல் இறுதி சிறுதூறு கிளிஞ்சில்

முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.

முறையான் - முறைகாரர், s. [pl.] Those who are employed to attend to a duty by turns.

ஏதம் - துன்பம், குற்றம், கேடு

பலவும் - pala   pron. cf. bahula. [K. hala, M.pala.] Many, several, diverse; ஒன்றுக்கு மேற்பட்டவை.

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
நட்புறவாய் பழைமை பாராட்டியவர்கள் மத்தியில் உட்பகை என்னும் உறவை அறுக்கும் பகை தோன்றினால் அது அழிவை தரும். உட்பகை பல குற்றங்களையும் துன்பங்களையும் விளைவித்து அழிவை உண்டாக்கும்.

ஆதலால் உட்பகை ஆபத்தானது என்றுணர்க. பகை இருந்தால் மனதில் மகிழ்ச்சியும் முகத்தில் சிரிப்பும் இழந்துவிடுவோம். அது உட்பகைக்கும் பொருந்தும். 

நண்பர்கள், சகோதர சகோதரிகள், உறவுகள், உள்ளாட்சி அமைப்புகள், நிறுவனங்கள், குழுக்கள் மத்தியில் உட்பகை தோன்ற வழிவகுக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

-“இந்தியத் தவளைகள்” என்று சொல்லக்கூடிய கதை நினைவுக்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்துகொள்ளாமல், உள்ளத்தில் பகையோடு ஒருவரை ஒருவர் கெடுப்பதிலேயே உறவினர்கள் இருப்பின், அவர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துபடுவார்கள், என்பதைச் சொல்லும் குறள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”வேறும் என்னொடு தரும்பகைபிறிதினி வேண்டலென்வினையத்தால்
ஊறி என்னுளே உதித்தது குறிப்பினி உணர்குவ துளதன்றால்
ஈறல் என்பெரும் பகைஞனுக் கன்புசால் அடியென்யான்
என்கின்றான்” (கம்ப.இரணியன்.80)

பரிமேலழகர் உரை
உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். (அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புக்களைத் தேய்த்தலும் முதலாயின.).

மணக்குடவர் உரை
உறவு முறையோடே வுட்பகை தோன்றுமாயின், அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும். இது சுற்றத்தாராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.


மு.வரதராசனார் உரை
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

குறள் 875
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று
[பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல்]

பொருள்
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

இன்று - iṉṟu   . Third person sing. neut. of இல், it is not, இல்லை. 2. An expletive, ஓரசைச்சொல். இன்றேல். If not, if wanting.  

இன்றால் - இல்லை

பகை  - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை

இரண்டால் - இரண்டு இருந்தால்

தான்  - தானே - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

ஒருவன் - ஒருத்தன், ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள்

இன் - இனிமை ; இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

துணையாக் துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

கொள்க - கொள்ள வேண்டும்

அவற்றின் - அவற்றினுள்

ஒன்று - ஒன்று

முழுப்பொருள்
தனக்கு துணையாக யாரும் இல்லை மேலும் இருவர் பகைவராக இருக்கின்றனர். தானும் தனித்து ஒருவனாக இருக்கிறோம். [அதாவது அப்பகைவர்க்கு வேறு பகைவர் இல்லை ஆதனால் பகைவருக்கு பகைவர் என்று நட்பு என்று கூட்டுசேரவும் முடியாது]. அப்படியெனில் இரு பகைவர்களுள் தனக்கு நெருங்கி பொருந்தக்கூடிய ஒருவரை இனிய துணையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஏனெனில் துணையில்லாமல் இருவருடன் போர்புரிந்து வெற்றிபெறுவது மிக கடினம்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது - ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது - அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின் அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது.

மு.வ உரை
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

குறள் 866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]

பொருள் 
காணுதல்- அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
காணாச் - சிறுபாம்பு, காணாமல்; அறிந்து ஆராயாமல்

சினத் - சினம் -  கோபம்; நெருப்பு; போர்; வெம்மை.
சினத்தல் - கோபித்தல்; புண்முதலியனசிவத்தல்.

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

கழி - கோல், மரக்கொம்பு; கடலடுத்தஉவர்நீர்ப்பரப்பு; நுகத்துளையில்இடுங்கழி; ஆயுதக்காம்பு; யாழின்இசையெழுப்புங்கருவி; வரிச்சல்; நூற்சுருள்; மிகுதி; ஊன்; கயிறு.

பெருங் - பெரும்
பெரு - peru   VI. v. i. grow thick, stout, numerous etc., see பரு.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

காமத்தான் - விருப்பம் / ஆசை கொண்டவன் ; பெண்ணுடன் கூடிய புணர்ச்சியின்பத்தில் நாட்டம் உடையவன்

பேணாமை - பகைமை

பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல்.

பேணப்படும் - விரும்பப்படும்

முழுப்பொருள்
விளைவுகளை அறிந்து ஆராயாமல் சினம் கொள்ளுபவனிடம், அளவிற்கு அதிகமாக மிகுதியான பொருளின் மீதும் பெண்ணின் (/ புணர்ச்சியின்பத்தின்) மீதும் ஆசை உடையவனிடம் பகைமையை பகைவர் விரும்புவர். ஏனெனில் அத்தகையவரை வீழ்த்துதல் மிக எளிது.

அறிந்து ஆராயாமல் சினம் கொள்ளுபவர் தவறான முடிவுகளை எடுப்பர். அது பகைவர்க்கு சாதகமாக இருக்கும். பெண்ணிடத்திலும் பொருளிலும் அதிகாரத்திலும் பதவியிலும் அதிக நாட்டம் (பேராசை) உடையவர் மெய்யான செயல்களில் செயலாற்ற கவனம் செலுத்தமாட்டார். அதனால் அத்தகையவரை வீழ்த்துதலும் பகைவருக்கு மிக எளிது.

மகாபாரதத்தின் துரியோதனனை நினைவுபடுத்தும் குறள். பாண்டவர்மேல் பொறாமையின் காரணமாக அவன் கொண்ட கோபமும், அதில் பாண்டவர் பக்கம் இருக்கும் துணை யாரென்றும் எண்ணிப்பாராது இருந்தமையும் தெரிந்ததுதான். மூத்தவனும், அரசுரிமைக்கு அதிகாரம் பெற்றவனுமான தருமன் இருக்கையிலே, ஊசிமுனையளவுக்குக் கூட நாட்டுரிமை பாண்டவர்க்குக் கூடாது, நாடு முழுவதும் தமக்கே வேண்டுமென்ற அவனது பேராசையும் அத்தகைய பகையை பாண்டவர் விரும்பி ஏற்றதற்கான காரணத்தை கூறி, அப்பகையை மாட்சிமை படுத்துகின்றன.

அடுத்தவன் மனைவி சீதை என்று தெரிந்தும் அவள் மீது கொண்ட பேராசையினால் இராவணன் மதிகெட்டு அழிந்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
காணாச் சினத்தான் - தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும். (காணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பதுபற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.).

மணக்குடவர் உரை
மீண்டும் பாராத சினத்தனுமாய் மிகப்பெருகிய காமத்தனுமாகியவன் பகை விரும்பப்படும். இஃது இவையுடையார் நட்டோரிலராதலால் இவரிடத்துப் பகை கொள்ளலா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

சாலமன் பாப்பையா உரை
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை

குறள் 856
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
[பொருட்பால், நட்பியல், இகல்]

பொருள்
இகலின் - இகல் - பகை; போர்; வலிமை; சிக்கு; அளவு; புலவி.

மிகல் -  மிகுதல்; பெருமை; வெற்றி; எழுத்துஇரட்டிக்கை.

இனிது -  இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

என்பவன் - என்கின்றவன்

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

தவலும் - தவலுதல் - நீங்குதல்

கெடலும் - கெடல் - கெடு - கேடு; வறுமை; தவணை; எல்லை.

நணி - naṇi   n. நண்ணு-. Nearness, proximity; அணிமையான இடம் திரைபொரு முந்நீர்க்கரைநணிச் செலினும் (புறநா. 154)

நணித்துநணித்தல் - அண்மையில் / விரைவில்

முழுப்பொருள்
மனதில் பகையிருந்தால் அகத்தில் மகிழ்ச்சியும் முகத்தில் சிரிப்பும் இல்லாமல் போய்விடும். ஆனால் அப்பகை மிக இனிது என்று பகையை கொண்டாடி பகையை வளர்ப்பவன் வாழ்க்கை மிக குறுகிய காலமே இருக்கும். விரைவில் இறந்துவிடுவான். அதுமட்டும் இன்றி அவனுடைய அழிவும் விரைவாகவே நடக்கும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“பகைநேர் வார்உள ரான பண்பினால்
உகநேர் சிந்தி உலந்த ழிந்ததால்
மகனே கண்டிலை யோநம் வாழ்வெலாம்” (கம்ப.அரசியல்.16)

பரிமேலழகர் உரை
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். (மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.).

மணக்குடவர் உரை
பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து. நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.

சாலமன் பாப்பையா உரை
பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்

குறள் 846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
[பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை]

பொருள்
அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை

மறைத்து - மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்; ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

மறைத்தலோ -

புல்லறிவு - அறியாமை

தம் - தன்னுடைய - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

வயின் - இடம்; பக்கம்; வீடு; வயிறு; பக்குவம்; முறை; எல்லை; ஏழனுருபு; ஓர்அசைச்சொல்.

குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

மறையா - மறையாத

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு

முழுப்பொருள்
ஒருவர் செய்த குற்றத்தால் ஒரு அழிவு / துன்பம் உண்டாகிவிட்டது. அவ்வழிவையும் (அல்லது அதனால் வருகின்ற துன்பத்தையும்) வெளியுலகிற்கு மறைத்துவிட்டால் தான் செய்த குற்றம் மறைந்துவிடும் என்று நினைப்பது அறியாமையாகும்.

ஆதலால் ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நீக்க முயற்சி செய்யவேண்டுமே தவிர குற்றத்தால் விளைந்த அழிவைக்க மறைக்க  முயற்சிசெய்ய கூடாது. ஏனெனில் அவ்வழிவு ஒரு சுவடை  (தன் நெஞ்சிலேயே) உருவாக்கியிருக்கும். அதனை அழிக்க முடியாது. மேலும் "தன்நெஞ்சே தன்னைச் சுடும் (குறள் 293)" என்பதை நினைவில் கொள்க.

அற்றம் மறைத்தல் என்றால் ஆடையால் மறைத்தல் என்ற பொருள் கூறப்படுகிறது. "முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு" என்ற பழமொழியுடன் தொடர்பு படுத்தி பார்த்தால் அவ்வர்த்தமும் பொருந்துகிறது. அதாவது குற்றம் புரிந்த பிறகு குற்றத்தை நீக்காமல் ஆடையால் மறைப்பது அறிவின்மை.

இவ்விரண்டு பொருள்களில் எதுவாயின் அடிப்படை ஒன்றே குற்றம் புரிந்தால் குற்றத்தை தான் ஒருவர் நீக்க வேண்டும்.

1) உதாரணமாக ஒருவர் ஒரு பூந்தொட்டியை அலட்சியமாய் கீழே போட்டு உடைத்துவிடுகிறார். அவர் இங்கே முதலாவதாக செய்யவேண்டியது அதற்கு மனதார வருந்துவது. இனிமேல் கவனமாய் இருக்க சங்கல்பம் எடுப்பது. இரண்டாவதாக பரிகாரமாக வேறொரு பூந்தொட்டியில் வைக்கலாம். அதற்கு மாறாக ஆணவத்தில் ஒரு பூந்தொட்டியை வாங்கி வைப்பதனால் தான் செய்த குற்றம் நீங்கிவிடும் என்றில்லை. ஏனெனில் அதனை பார்த்தவர் மனதில் குற்றம் செய்தவரின் அலட்சியம் என்றும் இருக்கும்.

2) உதாரணமாக ஒருவர் ஒரு தெருவில் ஒரு கோழி குஞ்சை மிதித்து அதனை கொலைசெய்துவிடுகிறார். இறந்த கோழியை யாருக்கும் தெரியாமல் மறைப்பதனாலோ அல்லது எரித்துவிடுவதாலோ தான் செய்த குற்றம் மறைந்துவிடும் என்றில்லை. ஏனெனில் அக்கோழி குஞ்சை வளர்பவர்க்கு தெரியும் ஒரு கோழி குஞ்சு குறைவாக இருக்கிறது என்று.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

பரிமேலழகர் உரை
தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம். (குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத்துப் பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு. எனவே, அதுவும் மறையானாயின் குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறிவென்றது.

மு.வரதராசனார் உரை
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

குறள் 836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
[பொருட்பால், நட்பியல், பேதைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பொய்படும் - பொய்படுதல் - பொய்யாதல்; பயன்விளையாதுஅழிந்திடுதல்.

பொய்-த்தல் - poy-   11 v. பொய். intr. 1.To fail, as a prediction or omen; to deceivehope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; தம் செயலினின்று பின்வாங்குதல். பொய்த்தோர் வில்லிகள்போவாராம் (கம்பரா. சூளா. 41). 3. To go to ruin;கெடுதல். பொருளென்னும் பொய்யா விளக்கம்(குறள், 753).--tr. 1. To lie, utter falsehood;to make false pretences; பொய்யாகப் பேசுதல்.தன்னெஞ் சறிவது பொய்யற்க (குறள், 293). 2. Todeceive, cheat; வஞ்சித்தல். நின்றோடிப் பொய்த்தல் (நாலடி, 111).

ஒன்றோ - part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682).

புனை - அழகு; பொலிவு; அலங்காரம்; அணிகலன்; கால்விலங்கு; சீலை; புதுமை; நீர், தளைக்கும்விலங்கு

பூணும் - பூணுதல் - அணிதல்; மேற்கொள்ளுதல்; விலங்குமுதலியனதரித்தல்; சூழ்ந்துகொள்ளுதல்; உடைத்தாதல்; சிக்கிக்கொள்ளுதல்; நுகத்திற்கட்டப்படுதல்; நெருங்கியிறுகுதல்.

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியாப் - உணராத ; நினைக்காத

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

மேற்கொளின் - மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் ஆற்றல் அறியாத (ஆற்றல் இல்லாத) அறிவில்லாத பேதை ஒரு செயலை மேற்கொண்டு செய்தால் அச்செயல் பொய்த்துவிடும் (தோல்வியடையும்). அதுமட்டும் இன்றி தன் கைகளையும் கால்களையும் விலங்கினால் கட்டவேண்டியதிருக்கும். அதாவது தவறு இழைத்தமைக்காக சிறைப்படுத்த படுவான் (படலாம்).

இதையே பழமொழிப்பாடலொன்று “நுணலும் தன் வாயால் கெடும்” என்கிற பழமொழியை விளக்குவதற்காகக் கூறுகிறது!

“பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
 சொல்லாலே தன்னைத் துயர்படுக்கும் – நல்லாய்
 மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
 நுணலும்தன் வாயால் கெடும்.” (பழமொழி  184)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும். புனைபூணல் - சிறைபடுதல்.

மு.வரதராசனார் உரை
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

சாலமன் பாப்பையா உரை
செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

English Meaning - As I taught a kid - Rajesh
If a stupid person does a work without knowing how to execute the work or doesn't not have the caliber to execute a work, then the work will end up as a failure and he will also get bad reputation. That stupid person will be considered a person who did a mistake and end up in jail too because we have seen people 1) spoiling resources/environment, 2) end up killing many lives without taking safety precautions etc. 

Questions that I ask to the kid
What happens when a stupid does a work? 
What happens when one starts a work without knowing how to do the work?

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

குறள் 824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
[பொருட்பால், நட்பியல், கூடாநட்பு]

பொருள்
முகத்தின் - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.

இனிய - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

நகாஅநகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

அகத்து - அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

இன்னா -  துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

வஞ்சரை - வஞ்சர் - வஞ்சகன் - சூழ்ச்சிக்காரன்; ஏமாற்றுபவன்; கயவன்; நரி.

அஞ்சுதல் -  பயப்படுதல்

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

முழுப்பொருள்
நம்மை காணும் பொழுது நம்மிடம் சிரித்து பேசி மகிழ்ந்து நமக்கு இனியவராக தோற்றுவித்துக்கொண்டு ஆனால் மனதளவில் நம்மை வஞ்சிக்க சூழ்ச்சி செய்வோரை நாம் அஞ்சவேண்டும். மனதால் நம்மை வஞ்சிக்க நினைப்போர் நம் பகைவர். பகை இருந்தால் நம் சிரிப்பும் மகிழ்ச்சியும் குறையும்.

அறநெறிச்சாரப் பாடல் ஒன்று இக்கருத்தையே நையாண்டியாக இவ்வாறு கூறுகிறது. தேவர்கள் விழித்தகண்மூடாமல் நிற்பதற்குக் காரணம், எதிரில் நின்று, உருகுமாறு வாயால் இன்சொற்கூறி ஒருவரைப் புகழ்ந்து, அவர் அகன்ற பின்னர், அவரையே இகழ்ந்து கூறுகின்ற, கயவர்களைக் கண்டு, கண்களை மூடினால் தம்மையும் அவ்வாறு இகழுவார் என்று அஞ்சினமையே யாகும். இனி அப்பாடல்:

முன்னின் றொருவன் முகத்தினும் வாயினும்
கன்னின் றுருகக் கலந்துரைத்துப்-பின்னின்
றிழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையார் நின்ற நிலை (அறநெறி.48)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - கண்டபொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் இன்னாராய வஞ்சரை; அஞ்சப்படும் - அஞ்சல் வேண்டும். (நகையது வகை பற்றி 'இனிய' என்றும், அகத்துச் செற்றம் நிகழவும் அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம் குறிப்பறிதற் கருவியாய முகத்தானும் தோன்றாமையின் 'அஞ்சுதல் செய்யப்படும்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் குற்றத்திற்கு ஏதுவாய அவர் கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முகத்தால் இனியவாக நக்கு மனத்தால் இன்னாதவாக நினைக்கும் வஞ்சகரை அஞ்சவேண்டும்.

மு.வரதராசனார் உரை
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

குறள் 814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
[பொருட்பால், நட்பியல், தீ நட்பு]

பொருள்
அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்

அகத்து -  அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அறுக்கும் - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்

கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி.

கல் - தோண்டு; பயில்; கல்விகல்; படைக்கலம்முதலியனபயில்.

கல்லா -  கல்வி கற்காத, பயிலாத

மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்

அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.)

அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person

தமரின் - தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி.

தனிமை - தனித்திருக்கும்நிலைமை; உதவியின்மை; ஒதுக்கம்; ஒப்பின்மை.

தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.

முழுப்பொருள்
யுத்த(போர்) பூமியில் நம்மை விட்டு நீங்கி நம் நம்பிக்கையை அறுத்து நமக்கு தோல்வியை கொடுக்கும் அறிவில்லாத குதிரையை போன்ற நண்பரிடம் நட்பு வைத்துக்கொள்வதை விட நாம் தனிமையில் இருப்பதே மேலானதாகும்(சிறப்பாகும்). உதாரணமாக நமது வீட்டில் போலீஸ் வந்தாலோ அல்லது கடன் பிரச்சனைகளில் தத்தளித்தாலோ நம்மை விட்டு ஏதாவது காரணம் சொல்லிவிட்டு ஓடும் நண்பர் தீய நண்பர். அவரைவிட்டு விலகி இருக்க வேண்டும். அதுவே நம்முடன் இருந்து பண உதவி செய்யாவிட்டாலும் ஆறுதலாக பக்கபலமாய் இருப்பார் ஆயின் அவரே நல்ல நண்பர்.

பாம்புக் கொடியை உடைய துரியோதனனுக்கு, போர் ஏற்பட்டவுடன் அதற்குதவாது சென்ற பால்போன்ற உடம்பினையுடைய பலராமனைப் போன்றவர்கள், வழி வழியாகத் தம்மோடு நட்பினைச் செய்தார் பொருட்டு, மிகத் துன்புறுத்தும் போரின்கண் கலத்தல் இலராய், அவர் உயிரைப் பகைவரால் போகுதற்கு வழி செய்து, பின்னர் இறந்தார் பொருட்டு நீத்தார் கடனைச் சிறப்பாகச் செய்பவர்கள்; இவர்கள் தம் ஊரில் நடந்து முடிந்த விழாவினைக் காட்டுவதாக தம்மகனைத் தோள்மீது சுமப்பாரோடொப்பர், என்கிறது பழமொழிப்பாடலொன்று. இப்பாடல் போர் தொடங்கியதும் தீர்த்த யாத்திரைக்கு, தாம் சார்ந்த பக்கத்தையும், தம்மோடு நட்புறவில் இருந்தவரையும் தேவையான நேரத்தில் நீங்கிய விதுரரையும், பலராமரையும் சுட்டிக்காட்டுகிறது. இனி அப்பாடல்:

பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்
தாக்கி அமருள் தலைப்பெய்யார் – போக்கி
வழியராய் நட்டார்க்கு மாதவம்செய் வாரே
கழிவிழாத் தோளேற்று வார். (பழமொழி 13)

மற்றொரு பழமொழிப்பாடலும் இக்கருத்தையொட்டியதே:

எய்ப்புழி வைப்பாம்எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக் குதவலர் பைத்தொடீஇ
அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ
மச்சேற்றி ஏணி களைவு. (பழமொழி 291)

பசுமையான பொன் வளையலை உடையாய், தளர்வு வந்த இடத்து வைத்திருக்கும் பெருநிதியைக் கொண்டு, உதவி செய்வர் எனக் கருதி, நம்மால் விரும்பி நட்புக்கொள்ளப்பட்டவர், நமக்கு ஓர் இடையூறு வந்துற்ற விடத்து, ஒரு சிறிதும் உதவிசெய்யாதவராகி, அச்சம் காரணமாக மறுப்பாராயின், அச் செய்கை, ஒருவனை மச்சின்மீது ஏற்றி ஏணி நீக்குதலை யொக்கும் அல்லவா!

இக்குறள் கூறும் கருத்து நம்ப வைத்து நட்டாற்றில் விடுவோரைவிட நட்பென்றில்லா தனிமையே நன்றென்பதாம்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அமரகத்து ஆற்று அறுக்கும் கல்லா மாஅன்னார் தமரின் - அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக்களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல்வாரது தமர்மையில்; தனிமை தலை - தனிமை சிறப்பு உடைத்து. (கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும், பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவர் தமரானால் வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் 'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்.).

மணக்குடவர் உரை
தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் நெறிப்படாமல் நடந்து ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும் ஒருவன் தனியனாதல் நன்று. இது பகைவர் நட்புத் தீமைபயக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை
போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது.

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

குறள் 804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்
[பொருட்பால், நட்பியல், பழைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
விழை - விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி.

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

யான் -  தன்மையொருமைப்பெயர்

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

வேண்டியிருப்பர் - வேண்டியிருத்தல் - இன்றியமையாததாயிருத்தல்.

கெழு - நிறம்; ஒளி; ஒருசாரியை.

தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

யான் -  தன்மையொருமைப்பெயர்

கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

கேளாது - கேளாமல் - கேட்காமல், அனுமதி பெறாமல்

நட்டார் - நண்பர்; உறவினர்.

செயின் - செய்தால்

முழுப்பொருள் 
ஒரு நட்பில் நண்பர்களுக்குள் ஒளிவுமறைவு இருக்காது என்று நாம் நினைக்கிறோம். நண்பன் எது செய்தாலும் நம்மிடம் சொல்லிவிட்டு செய்யவேண்டும் அல்லது என்னை ஆலோசித்துவிட்டு என் சம்மதம் வாங்கிவிட்டு செய்யவேண்டும் என்று பலர் எண்ணுகிறோம்.

ஆனால் உண்மையான நட்பிற்கு சிறப்பு என்னவெனில் நம் நண்பர் ஒரு விஷயத்தை அல்லது ஒரு செயலை பற்றி நம்மிடம் கூறாமல் செய்கிறார் என்றால் அதனை நினைத்து வருந்தாது அவர் நட்பை மட்டுமே வேண்டி இருப்பதே ஆகும்.

நண்பருக்கு என்று ஒரு தனியுரிமை (privacy) இருக்கலாம் அல்லது அவர் நம்மிடம் கூற காரணம் இருக்கலாம் அல்லது காரணம் இல்லாமல் இருக்கலாம் அல்லது காரணம் இருக்கவேண்டும் என்றில்லை. எதுவாயின் அதனை நாம் மதிக்க வேண்டும். ஏனெனில் அது அவரவர் சுய விருப்பம். இதனை சுயநலம் என்றெல்லாம் வரையறை செய்வது தவறு. நண்பர் நம்மிடம் சொன்னால் சந்தோஷம் சொல்லவில்லையெல்லையென்றால் வருத்தமில்லை என்ற மனப்பான்மை வேண்டும். 

மேலும் எல்லாவற்றையும் சொல்லுகிறவர் நல்ல நண்பர் என்றெல்லாம் இல்லை. சில சமயம் இப்படி கூறுகிறவர் மனதில் அழுக்காறு போன்ற தீய குணங்கள் பொதிந்து இருக்கும். அது நமக்கு நன்மையில்லை.

உதாரணமாக நம்மிடம் ஒரு நண்பர் அவர் குடும்ப சுபநிகழ்ச்சிகளைப் பற்றி இறுதியாக கூறலாம், அவருடைய மேற்படிப்புப் பற்றி கிளம்பும் முன்பு சொல்லலாம் (அல்லது சொல்லாமல் கூட இருக்கலாம்), அவர் வீடு கட்டுவதை அல்லது வாங்கியதை அல்லது வாங்கப்போவதைப் பற்றி சொல்லாமல் இருக்கலாம். சிலசமயங்களில் கல்யாணத்தைப் பற்றி கூறாமல் கூட இருக்கலாம். இதற்கெல்லாம் நாம் கோவித்து கொண்டு இருந்தால் அல்லது மனம் வருந்தினால் நமக்கு தான் நிம்மதியில்லை. தேவையில்லாமல் நட்பும் கெடும். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பதையும் நினைவில் கொள்க.

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
”கிழமையிற் செய்தனன் கெழுதகை தருமென” (பெருங் 4.8:76)


பரிமேலழகர் உரை
நட்டார் கெழுதகையான் கேளாது செயின் - தம் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டி இருப்பர் - அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார். (ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின் ஊங்கு நன்மை யின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கல்லது இன்மையின் அவர்மேல் வைத்துக் கூறினார். 'வேண்டியிருப்பார்' என்பது எழுந்திருப்பார் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின் அதற்கு முனியாது அதனையும் தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பத் தப்பாதிருப்பர் மிக்கார். இஃது உடன்படுதலன்றி விரும்பவும் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

சாலமன் பாப்பையா உரை
தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.


எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சில பத்திகள் கீழே
அத்தியாயம் - 11 நட்பே அடித்தளமாக…… 
"நட்பை அடித்தளமாக கொள்ளாத எந்த காதலும் (அன்பும்) மணல் மேல் எழுப்பிய மாளிகை போன்றது"
— Ella Wheeler Wicox 

இதைப் படிக்கையில் எனக்கு நினைவிற்கு வருவது என் நண்பனொருவனின் கூற்று: “நட்பென்பது ஒரு மாளிகை போன்றது. அதில் எல்லாவற்றிற்கும் அறைகள் உண்டு” முதல் கூற்று நட்பை விட மேலானது எதுவுமில்லை எனப் பொருள் கொள்கிறது. இரண்டாவது ஒரு கேள்வியை முன்வைக்கிறது. “ஏன் அன்பினால் ஏற்படும் அத்துணை உறவுகளையும் நட்பாகப் பார்க்கக்கூடாது?” 

நட்பின் அழகே நாம் ஒரு நண்பரை நமக்கே நமக்கானவராக, நம் உடைமையாகச் சொந்தம் கொண்டாட மாட்டோம் என்பதே. அவர்களைத் தனி ஒரு மனிதராக நாம் மதிப்போம். ஆனால் ஒரு கணவன் - மனைவி உறவிலோ, காதலர்கள் உறவிலோ இது பொதுவாகச் சாத்தியப்படுவதில்லை. நம்மொரு  நண்பனுக்குப் பல நண்பர்கள் இருப்பார்கள்; சிலரை நமக்குத் தெரிந்திருக்கும்; சிலரைத் தெரியாமல் இருக்கும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் நாம் கவலை கொள்வதில்லை. 

நாம் அவரைச்  சந்திக்கும் வேளைகளிலும் சரி, சந்திக்காத வேளைகளிலும் சரி அன்பென்ற ஓர் இழை அங்கு ஓடிக்கொண்டே தான் இருக்கும். அவருக்கு நம்மைத் தவிர இன்னும் பத்தோ நூறோ நண்பர்கள் இருந்தாலும் நம்மீது அவருக்கு அன்பு இல்லையென்றோ, இல்லை குறைந்துவிட்டது என்றோ சிந்திக்கவே மாட்டோம். அவருக்குப் புதுப்புது நட்புகள் ஏற்படும்போதும் நம்மை விட்டு அவர் விலகுகிறார் என்றோ, நம்மை ஏமாற்றிவிட்டார் என்றோ கவலை கொள்ள மாட்டோம். ஒரு வினாடி கூட, நம்மை அவருக்குப் பிடிக்காமல் போய் விட்டதோ, நம்மீது ஏதாவது குறை கண்டுவிட்டாரோ இல்லை நம் நட்பு இனி அவருக்குத் தேவைப் படவில்லையோ என்றெல்லாம் குழப்பிக்கொள்ள மாட்டோம். 

ஆனால் திருமணம், காதல் என்று ஏற்பட்டுவிட்டால் மட்டும், ஏன் இத்தனை குழப்பங்களும், வேண்டாத எண்ணங்களும் வந்து ஒட்டிக்கொள்கின்றன? இம்மாதிரியான எண்ணங்கள் எந்தவோர் உறவையும் அழித்து விடும் தன்மை கொண்டவை.  ஆனாலும் நாம் பெருமையாகக் கூறிக்கொள்வோம் எங்கள் உறவு அன்பினாலானது என்று. 

நட்பு என்பது ஓர் இயற்கையான உணர்வினால் ஏற்படும் உறவு. மற்ற எல்லா உறவுகளுக்கும் ஓர் இலக்கணம், சட்டம், வரைமுறை என உருவாக்கி வைத்திருக்கிறோம். அவை தான் பெரும்பாலும் நம் இயற்கை உணர்வுகளுடன் உரசி குழப்பங்களை உருவாக்கி விடுகின்றன. 

ஒரு நட்பில் எதையும் செய்துதான் ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்லை. நம் தேவைகள் அனைத்தையும் ஒரு நண்பர்  பூர்த்தி செய்துதான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை. உதாரணத்திற்கு நான் ஒரு நண்பரைக் கேட்கிறேன் இன்று மாலை எதுவும் திரைப்படத்திற்குச் செல்வோமா என. அவர் வேண்டாம் என ஏதோ ஒரு காரணத்தினால் சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். நான் அவர் எதனால் வரவில்லை என ஆராய மாட்டேன். அதனால் என்ன?  இன்னொரு நாள் போய்க்கொள்ளலாம் என விட்டுவிடுவேன். 

அதே போல் நான் ஒரு நண்பரிடம் இன்றெனக்கு அவரைப் பார்க்க நேரமில்லை, இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறினால், அவரும் சாதாரணமாகச் சரி என்று சொல்லிக் கடந்துவிடுவார். 

ஆனால் அதே சமயம் எனக்கோர் உதவி என்றால் எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடி வருவார். அவர் ஊரில் இல்லை எனில், அவர் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரி இல்லை எனில் நான் ஓடுவேன். நான் இருக்கிறேன் கவலைப் படாதே என்ற ஓர் எழுதப்படாத நியதி இருக்கும். ஒரு குற்ற உணர்வோ, ஏமாற்றப்பட்ட உணர்வோ ஒரு நல்ல நட்பில் ஏற்பட வாய்ப்பே இல்லை. இதே விஷயங்கள் ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கையில், அது ஒரு பெரும் பிரச்சினையாகவே வெடிக்கிறது. ஏன்? நட்பில் நாம் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த நினைப்பதில்லை. ஆனால் உறவிற்குள் என் கட்டுக்குள் நீ என்றோ, எனக்காகவே நீ என்றோ ஒரு செயற்கையான கயிறைக் கட்டிவைக்க விழைகிறோம். 

நட்பில் ஆலோசனைகள் வழங்கிக்கொள்வோம், ஆனால், நம் ஆலோசனைப்படி தான் அவர் நடக்க வேண்டும் என நிர்ப்பந்திக்க மாட்டோம். ஆளுமையோ, அடக்கமோ நட்பில் தலை தூக்குவதில்லை. 

ஒரு நண்பர் அவரின் இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்தினால், அவரை நமக்குப் பிடித்திருந்தால் நாமும் நட்பாவோம். இல்லையெனில், நம் நண்பரிடம் தனியாக எனக்கு அவரைப் பிடிக்கவில்லை, இனி அவர் வரும்பொழுது என்னைக் கூப்பிடாதே என்று வேண்டுமானால் சொல்வோம். எனக்கு அவரைப் பிடிக்கவில்லை, அதனால் நீயும் அவருடன் நட்பாயிராதே எனக் கூற மாட்டோம். 

இதே ஒரு திருமணத்திலோ, காதலர்களுக்குள்ளோ என்ன நடக்கும்? “ஒன்று அவன்/அவள் நட்பை நீ துண்டிக்க வேண்டும், இல்லை நான் உன் உறவைத் துண்டித்து விடுவேன்” என்று நிர்ப்பந்திக்கப்படுவோம். 

எந்த ஓர் உறவாக இருந்த போதிலும் அங்கு நட்பு என்ற ஒன்று போற்றப்படவேண்டும். நட்பே அடித்தளமாக இருத்தல் வேண்டும். ஓர் அம்மாவிற்கும் பிள்ளைகளுக்கும் இடையிலோ இல்லை அப்பாவிற்கும் பிள்ளைகளுக்கும் இடையிலோ, இல்லை உடன் பிறந்தவர்களுக்குள்ளோ நட்பு என்ற ஓர் அற்புதம் இருந்தால் வாழ்வு எத்தனை சுலபமாக இருக்கும்? 

பல வருடங்கள் தொடர்பில் இல்லாமல் இருக்கும் நட்புகள் நடுவில் என்ன ஆகின்றது? நட்பு இன்னும் வலுப்பெறுகிறது. நட்பு நம்மைச் சிறைப் படுத்துவதில்லை, நம்மை விடுதலைப்படுத்துகிறது. நம்மீது எதையும் திணிப்பதில்லை.  எனக்கு மட்டுமே நீ என வசனம் பேசுவதில்லை. ஏன், நட்பு நிலைக்க வேண்டும் என்று கூடத் திணிப்பதில்லை. திணிக்கவும் இயலாது. எந்தச் சட்ட திட்டங்களுக்குள்ளும், இலக்கணங்களுக்குள்ளும் நட்பு விழுவதில்லை; அது இயற்கை தன்மை கொண்டது. 

நட்பே அடித்தளமாகட்டும், எந்தவகையான உறவு முறையாக இருப்பினும்; காதலர்கள், இணையர்கள், பெற்றோர்-பிள்ளைகள், ஆசிரியர்-மாணவர்கள், உடன் பிறந்தவர்கள், எதுவாக இருப்பினும். 

நாம் ஒருவரின் மேல் அன்பு வைத்திருப்பதின் அறிகுறி என்னவென்றால், அவருக்கு இடைவெளி தேவைப்படும் நேரம் ஒதுங்கி இடம் கொடுப்பதும், நம் அருகாமையை விரும்பும் நேரம் அணைத்து ஆதரிப்பதும் ஆகும். அவர்களுடனேயே எப்பொழுதும்  இருக்க வேண்டியதில்லை, அவர்களுக்குத் தேவைப்படும் நேரம், கூப்பிடு தொலைவில் நாம் இருந்தால் போதும். உண்மையான நட்பிற்கு இதுவே ஆதாரம். 

நம் எல்லா உறவுகளுக்கும் பாலமாக நட்பென்ற ஒன்றை அமைத்து விட்டால் போதும், நம் உறவுகள் நாமே ஆச்சரியப்படும் அளவிற்கு வலுப்பெறும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Even if our friend does not inform us about his or her personal information / milestone / event or doesn't ask us an opinion We should be friends with that friend. Because as a friend we must respect even our friends privacy or personal space. Also there might be a reason for not informing us. Or it can be unintentional as well. In a way this is good to us. Because, unnecessary disappointments or hatred will kill our peace and create disturbances in our mind taking our attention and energy away from our work

Questions that I ask to the kid
A friend did something without informing you. What will you do? Will you get angry for it? why? (Anger kills happiness, smiles) Will you runaway from him or disconnect or minimize the relationship? (No. that is his choice. also i show my maturity being good to him)

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா

குறள் 793
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]

பொருள்
குணமும் - குணம் -  பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிகஇராசததாமதமாகியமூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு.

குடிமையும் - குடிமை - உயர்குலத்தாரதுஒழுக்கம்; பிறந்தகுடியைஉயரச்செய்தல்; குடிப்பிறப்பு; அரசரதுகுடியாயிருக்குந்தன்மை; குடித்தனப்பாங்கு; அடிமை; குடிகளிடம்பெறும்வரி.

குற்றமும் - குற்றம் -  பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.

குன்றா - குறையாத, குறைவில்லாத

இனனும் - இனன்  - சூரியன்; உறவினன்; ஒத்தவன்; ஆசிரியர்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

யா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ய்+ஆ); யாவை; ஓர்அசைச்சொல்; ஒருமரவகை; அகலம்.

யாக்க - யாத்தல் - செய்யுளமைத்தல்; கட்டுதல்; பிணித்தல்; நீர்முதலியனஅணைத்தல்; விட்டுநீங்காதிருத்தல்; சொல்லுதல்.

நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.

முழுப்பொருள்
யாரை எவ்வாறு கண்டெடுத்து நட்புக்கொள்ள வேண்டும் ?
1. குணம் - ஒருவருடைய குணத்தை ஆராய வேண்டும். அவர் அறவழி சார்ந்தவரா என்று ஆராய வேண்டும். நற்குணங்கள் கொண்டவரா என்று ஆராயவேண்டும். நற்குணங்கள் அல்லாதவரிடம் அறம் அல்லாதவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

2. குடிமை - ஒருவர் எத்தகைய குடியை சேர்ந்தவர் என்றுமட்டும் பாராது அவர் உயர்குடியை சேர்ந்தோர் கொண்டுள்ள ஒழுக்கத்தை கடைபிடிப்பவரா என்று ஆராய வேண்டும். ஒழுக்கம் கடைபிடிக்காதவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

3. குற்றம் - ஒருவர் குற்றங்கள் புரிகிறவரா என்று ஆராய வேண்டும். பிறருக்கு தீங்கு விளைவிப்பவரா என்று ஆராயவேண்டும். குற்றங்கள் புரிகிறவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

4. குன்றா இனன் - குன்றாத உறவினர்கள் சுற்றத்தார்கள் உள்ளவரா என்று ஆராய வேண்டும். ஏனெனில் பிறரிடம் கண்ணோட்டம் / தாட்சிணியம் இருப்பவரிடம் மக்கள் சூழ்வர். அதற்கு மாறாக ஒருவரை விட்டு பலர் விலகி இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒருவித காரணம் அல்லது ஒவ்வாமை இருக்கும். அது என்னவென்று ஆராய வேண்டும். ஒருவேளை இவர் நம்பத்தகாதவராக இருக்கலாம். அல்லது பொறாமை கொள்பவராக, தீங்கு விளைவிப்பவராக, ஒழுக்கமல்லாதவராக இருக்கலாம். அத்தகையவரிடம் நட்பு வைத்துக்கொள்ள கூடாது. 

மேற்சொன்ன நான்கையும் நன்கு ஆராய்ந்து நற்பண்புகள் கொண்ட அறவழியில் செல்கிற ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிற குற்றங்கள் புரியாத எல்லோராலும் விரும்புகின்றவரை நட்பாக கொள்ளவேண்டும். 

இக்கருத்தையே ஒட்டிய நாலடியார் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது. “ஒருவனை மனம் விரும்பி நண்பனாக ஏற்ற பிறகு, அவனது பண்பு நலன்கள் என்ன, குற்றங்கள் யாவை என்று ஆராய்ந்து திரிவேனாகில், ஒலி கடல் சூழ் உலகத்தார் என்னைப் பார்த்து இகழ்ந்து சிரிக்குமாறு நான், நண்பனின் குற்றத்தை மறைக்காது வெளிப்படையாகத் தூற்றுபவன் செல்லும் நரகத்தைச் சென்றடைவேனாக”. அப்பாடலானது:

குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக (நாலடி 230)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க -அவனோடு நட்புச் செய்க. (குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை
ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.

மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

குறள் 784
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு
[பொருட்பால், நட்பியல், நட்பு]

பொருள்
நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.

பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; மேம்பட்டது, நிமித்தமாக.

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

நட்டல் - naṭṭal   v. n. loving (நள்ளு); 2. transplanting, நடல், ஊன்றுகை

மிகுதிக் - அதிகம்; எழுத்துஇரட்டிக்கை; நிறைவு; திரள்; பொலிவு; மீதி; சிறப்பு; செருக்கு

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

மேற் - மேற் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

இடித்தற் - இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல்

பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; மேம்பட்டது, நிமித்தமாக.

முழுப்பொருள்
ஒருவரிடம் நட்புக்கொள்வதென்பது ஒன்றுகூடி சிரித்து மகிழ்ந்து குலாவுதற்கு மட்டும் அல்ல. நட்பென்பது நண்பர் நெறி மீறி அறிந்தோ அறியாமலோ தவறான பாதையில் சென்றாலோ அல்லது தவறுகளை செய்தாலோ அல்லது கீழ்மையானவற்றை செய்தாலோ யாருக்கும் காத்திருக்காமல் நேரே நண்பனிடம் சென்று அத்தவறுகளை எடுத்துரைத்து அந்த தவறுகளை தகர்த்து அதனை மறுபடியும் செய்யாதவாரு பார்த்துக்கொள்பவனே நண்பன். அத்தகையதே நட்பு.

இப்பொழுதெல்லாம் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களைத் தேடும்போது அங்கு வேலை செய்பவர்களிடம் உங்கள் நண்பர்களைப் பரிந்துரை (Referral) செய்யுங்கள் என்கிறார்கள். நண்பர்கள் மூலம் உங்களுக்குச் சிறந்த வேலைகள் கிடைக்கலாம்! 

வாழ்க்கைப் பிரயாணத்தில் நம்முடன் அதிக நேரம், அதிக தூரம் உடன் வருபவர்கள் நண்பர்கள். நல்ல நட்பைப் போல உயர்ந்தது வேறு எதுவுமே இல்லை எனலாம். அப்படிப்பட்ட நண்பர்களை நாம் முறையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். “உன்னுடைய நண்பன் யார் என்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்” என்பது பழமொழி. 

பொதுவாக நண்பர்கள் என்றாலே நமக்கு ஜாலியாக இருப்பதுதான் தோன்றும். சிலர், “என்னடா, எங்களுடன் குடிக்க மாட்டேன் என்கிறாய். நீ என்ன ஃப்ரண்ட்?” என்பார்கள். அப்படிப்பட்டவர்களின் சகவாசம் வேண்டுமா? அவர்களை நீங்கள் நண்பர்கள் என்று சொல்ல வேண்டுமா? என்று யோசித்துப் பாருங்கள். 

நல்ல நண்பர்களை எப்படிக் கண்டு கொள்வது? உங்களுக்குத் துன்பம் வரும்போது யார் ஓடி விடுகிறாரோ அவர் நிச்சயமாக நண்பர் இல்லை. இன்னும் சிலர் உங்களால் என்ன ஆதாயம் என்று பார்த்து நட்புக் கொள்வார்கள். அவர்களையெல்லாம் உங்கள் நட்பு வட்டாரத்தில் சேர்க்கக் கூடாது.

நம்முடைய நண்பர்களைத் தீர்மானிப்பது குணங்கள் மற்றும் அணுகுமுறை.

நம்முடைய மிகச் சிறந்த நண்பர் யார்? நாம் யாருக்குச் சிறந்த நண்பர்? நீங்கள் எப்படி இருக்க வேண்டும்? உங்கள் நண்பரை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்? இரண்டிற்கும் ஒரே அளவுகோல் தான். நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறினைச் செய்யும்போது, அதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல் நம்மிடம் எடுத்துக் கூறி நம்மைத் திருத்தப் பார்ப்பார்கள். அவர்கள்தான் நம் சிறந்த நண்பர்கள்.

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக மட்டுமல்ல. தவறு செய்யும்போது முன் வந்து கண்டித்துச் சொல்வதற்கும் தான்!

கலித்தொகைப் பாடல், “மேல்நின்று மெய்கூறும் கேளிர்” என்கிறது. அறநெறிப் (47) பாடல்லொன்று, “காய உரைத்து கருமம் சிதையாதார் தூயரோ டொவ்வாரோ தக்கார்க்கு”, என்று அழகாகச் சொல்கிறது.

“இடிக்கும் கேளிர்’ (குறுந் 58.1)
“தன் தீமை பலகூறிக் கழறலின்” (கலி 3:21, 45:21)

“கடிக்கும்வல் லரவும் கேட்கும் மந்திரம் களிக்கின் றோயை
அடுக்கும்ஈ தடாதென் றொன்ற வேதுவோ டறிவு காட்டி
இடிக்குந ரில்லை நீயே யெண்ணிய தெண்ணி யுன்னை
முடிக்கின்ற போது மேன்மேல் முடிவின்றி முடிவ துண்டோ” (கம்ப.நிந்தனைப்.59)



மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நட்டல் நகுதற்பொருட்டன்று - ஒருவனோடு, ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு - அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. (பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவனோடு ஒருவன் நட்புப் பண்ணுதல் நகுதற்பொருட்டன்று; மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. இது மனமகிழ நட்புக்கோடலன்றித் தீக்கருமங்கண்டால் கழறவும்வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.