குறள் 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்
[பொருட்பால், நட்பியல், சூது]
பொருள்
கவறும் - கவறு - சூதாடுகருவி, தாயக்கட்டை; சூது; பனம்பட்டை.
கழகமும் - கழகம் - கல்விபயிலும்இடம், கல்விச்சங்கம்; படை, மல்முதலியனபயிலும்இடம்; சூது; சூதாடுமிடம்; ஓலக்கம்; புலவர்கூடியசபை.
கையும் - கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்
தருக்கி - தருக்குதல் - அகங்கரித்தல்; களித்தல்; ஊக்கமிகுதல்; பெருக்குதல்; இடித்தல்; வருத்துதல்; உடைத்தல்; மேற்கொள்ளுதல்.
இவறுதல் - ஆசையுறல்; விரும்புதல் மறத்தல் மிகுதல் உலாவுதல் கைவிடாதிருத்தல்; வேண்டும்வழிப்பொருள்கொடாமை.
இவறியார் - கைவிடாதவர்; ஆசைப்பட்டோர்.
இல்லாகியார் - எதுவும் இல்லாமல் போவார்
முழுப்பொருள்
சூதாட்டத்தில் பயன் படுத்தப்படும் தாயக்கட்டையையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறன் பெற்றதனால் (வளர்த்துக்கொண்டதனால்) சூதாட்டத்தில் களித்து இன்புறுவோர் சூதாட்டத்தை விரும்பி அதனை கைவிடவில்லையென்றால் அவர் வாழ்வில் எல்லாம் செல்வமும் பெற்றவராக இருந்தாலும் அவர் எல்லாவற்றையும் இழந்துவிடுவார்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
இல்லாகியார் - முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி ஒழுகினார்; கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் - கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர். (கைத்தொழில் - வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல். அவ்விவறுதலால் பாண்டவர் தம் அரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினார் என அனுபவம் காட்டியவாறு. இவை ஐந்து பாட்டானும் அதனது வறுமை பயத்தற் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
கவற்றினையும், கழகத்தினையும், கைத்தொழிலினையும் விரும்பி விடாதவர் முற்காலத்தினும் வறுவியரானார். கவறு - நெத்தம், கழகம் - உருண்டையுருட்டு மிடம், கைத் தொழில் - கவடி பிடித்தல்.
மு.வரதராசனார் உரை
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.
சாலமன் பாப்பையா உரை
சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.

No comments:
Post a Comment