Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

குறள் 285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

கருதி - கருத்து - நோக்கம், தாற்பரியம், கொள்கை, எண்ணம், விருப்பம், சொற்பொருள், கவனம், இச்சை, விவேகம், சம்மதம், மனம், பயன், சங்கற்பம், தன்மதிப்பு.

அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

பொருள் - சொற்பொருள், தகுதி, நற்வினைப்பயன், கல்விப்பொருள், அகப்பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கருதிப் - கருத்து - நோக்கம், தாற்பரியம், கொள்கை, எண்ணம், விருப்பம், சொற்பொருள், கவனம், இச்சை, விவேகம், சம்மதம், மனம், பயன், சங்கற்பம், தன்மதிப்பு.

பொச்சாவாமை  - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை

பொச்சாப்பு - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றிமனம்நெகிழ்ந்திருக்கை

பார்ப்பார் - பார்-த்தல்
pār-   11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இல் - இல்லை

முழுப்பொருள்
பிறரின் பொருளை விரும்பி அவரிடம் வஞ்சனையாக பழகி அவர் சோர்வாக இருக்கும்பொழுது அதனை களவு செய்வோர்க்கு அந்த பொருள் சொந்தம் இல்லை. அதுமட்டும் இன்றி பொருள் வந்தால் கவலை வரும். பொருள் போனால் கவலையும் போகும். விட விட கவலை குறையும். ஆதலால் துறவில் ஒருவன் விடுதலையை நோக்கி செல்வான். 

அருள் மீது நேசம் கொண்டு வாழ நினைக்கின்றவர் தன் பொருள் மீது  மட்டும் அல்ல பிறர் பொருள் மீது பற்றுக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு அருள் (துறவரத்தால் பயன்) இல்லை. 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது. (தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சிகூடாது என்பதாம்.).

மணக்குடவர் உரை
அருளைக் குறித்து உயிர்மீது அன்புடையரா யொழுகுதல் பொருளை குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார் மாட்டு இல்லை. இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது.

மு.வரதராசனார் உரை
அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.

English Meaning - As I taught a kid - Rajesh
A person in the journey of moksha, should have love inspired by compassion. Such love doesn't occur to those who await others' lapses to (deceptively) grab their wealth because it shows that they have materialistic desires and deceptive / swindling thoughts. Others' lapses here mean whenever they are down or weak physically, mentally, morally. 

Questions that I ask to the kid
For whom love inspired by compassion doesn't occur?
What happens when you wait for others lapses to grab their wealth? 

No comments:

Post a Comment