Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

குறள் 734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
[பொருட்பால், அரணியல், நாடு] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உறுuṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதி செய்யும் பொருள் (தொல். சொல் 301).

பசியும்  உணவுவேட்கை; வறுமை; தீ (பசியாறிப் போயிற்று - ஆறி என்ற வார்த்தை தீயினை ஆற்றுவதற்கோ ?))

ஓவா - ஓயாது / நீங்காது

பிணியும் - பிணி - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை

செறு வயல்; குளம்; பாத்தி; கோபம்; ceṟu   IV. v. t. kill, destroy, கொல்லு; 2. hate, detest, வெறு; 3. (fig.) subject the senses, subdue the passions.

பகையும்பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை


சேர்-தல் - cēr-   4 v. [T. cēru, K. Tu. sēru,M. cēruka.] intr. 1. To become united,incorporated; to join together; ஒன்றுகூடுதல் செம்பொன் செய்சுருளுந் தெய்வக்குழைகளுஞ் சேர்ந்துமின்ன (கம்பரா. பூக்கொய். 5). 2. To becomemixed, blended; கலத்தல் நீரும் பாலுஞ் சேரும்.3. To have connection, as with a society oran institution; சம்பந்தப்படுதல். சங்கத்தில் அவன்சேர்ந்தவன். 4. To be in close friendship orunion; நட்பாதல். அவனோடு சேர்ந்துகொண்டான்.5. To fit, suit; to be adapted to, as the tenonto the mortise; இயைதல் 6. To be incident,co-existent; to appertain, as a quality; உரித்தாதல். இந்த நிலம் அவனுக்குச் சேர்ந்தது. 7. Tobe collected, to become aggregated; சேகரிக்கப்படுதல். நெய்க்கு வேண்டிய வெண்ணெய் சேர்ந்துவிட்டது. 8. To be well-rounded, plump; திரளுதல் மால்வரை யொழுகிய வாழை . . . என . . சேர்ந்து (சிறுபாண். 20, உரை). 9. To be full,replete; செறிதல் அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை(குறள், 243). 10. To lie down; கிடத்தல் மீக்கோள 



சேராது - ஒன்று கூடாதது 

இயல்வதுஇயல் - தன்மை; தகுதி சுகுமாரதை ஒழுக்கம் உழுவலன்பு செலவு ஒப்பு இயற்றமிழ் இலக்கணம் நூல் நூலின்பகுதி; திவ்வியப்பிரபந்தத்தைக்குழுவாகநின்றுஓதுகை; மாறுபாடு சாயல் பெருமை


இயல் - iyl   --இயலு, கிறது, இயன்றது, இயலும், இயல, v. n. To be able, be possible, கூடியதாயிருக்க. 2. (p.) To be incident to, be exposed, பொருந்த. 3. To agree, suit, be adapted to, இசைய. 4. To be done, per formed, made or composed, ஆக. 5. To be destined, decreed, allotted, விதிக்கப்பட. 6. To happen, pass, to be in vogue, நடக்க.- Note. This word is often changed to ஏலு both in poetry and in the colloquial language. இயல்வதுகரவேல். Do not refrain from doing what is in your power. வெயிலியல்வெஞ்சுரம். The parched desert exposed to the scorching beams of the sun. தச்சனாலியன்றவீடு. A house made by the carpenter. என்னாலியலாது. I am not able, I cannot do it.  

நாடுநாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

முழுப்பொருள் 
ஒரு நாட்டுடன் செல்வமும் வளமும் மகிழ்ச்சியும் சேர்ந்து இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டுடன் சேரக்கூடாதது எவை ?

1. அளவுக்கு அதிகமான பசியையை உண்டாக்கும் வறுமை. பசியால் வாடாமல் இருக்க அறம் தழைத்து, மழை பொய்க்காது, உழவு சிறந்து, விளைச்சல் பெருகியிருக்கவேண்டும்

2. நீங்காத துன்பம். நோய், பூசல், வணிக சரிவு, கொடும் ஆட்சி போன்றவற்றால் ஏற்படக்கூடிய நீங்காத துன்பம். முடியாது வளர்ந்துகொண்டே இருக்கும் நோய்கள் மக்களின் தீய பழக்கவழக்கங்களால் ஏற்படுவது. அத்தகைய தீய வழக்கங்களைக் கொண்டோர் வாழாத நாடாக இருக்கவேண்டும்.

3. வெறுப்பால் வரும் பகை - மற்ற நாடுகள் நம்மீதோ அல்லது நாம் பிறர் மீது வெறுப்பினால் கொள்ளும் பகை. பகை அழிவை கொடுக்கும். பகை இருந்தால் உள்ளத்தில் மகிழ்ச்சியும் முகத்தில் சிரிப்பும் விலகிவிடும் என்று வேறொரு திருக்குறளில் பார்த்தோம். நல்ல அமைச்சர்களும், அரசனும், அரசனுக்குப் பின்னால் வரும் சிறந்த குடிமக்களும், உறுதியுடன் உடனிருப்பதால் கொல்லுகின்ற எத்தகைய பகையும் வெல்லமுடியாததாக இருக்கவேண்டும். 

என்று கொல்லாமை அதிகாரத்தில் வள்ளுவரே கூறியிருக்கிறார். பசி என்பது கொடியது. ஆதலால் அதனை போக்குவது அந்நாட்டின் கடமை. எல்லோர் பசியையும் போக்குவது ஒரு அரசங்காத்தின் அல்லது ஒரு ராஜ்ஜியத்தின் பொறுப்பாக்கிவிட்டு மக்கள் சென்று விட முடியாது ஏனெனில் எல்லோர் பசியையும் போக்குவது அவ்வளவு எளிதானதும் அல்ல. அதனை ஒரு அரசாங்கம் செய்வது நடைமுறையில் மிக மிக சிரமம். அதனால் தான் பசி தனை போக்குவதை ஒரு சமூக அறமாக திருவள்ளுவர் கூறுகிறார். அதனால் தான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று கொல்லாமை அதிகாரத்தில் கூறுயிருக்கிறார். அதனால் அதனை நாம் ஒரு விருந்தோம்பல் பண்பாகவும் கருத வேண்டும்.


இதையே சிலப்பதிகார வரிகளும் 
“பசியும் பிணியும் பகையும் நீங்கி 
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி” (சிலம்பு:5:72-3) என்கிறது. 

சீவக சிந்தாமணியும்,
பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையுமென்ன” (சீவக:2375) என்கிறது.

”உறுபசி” என்ற வார்த்தையை கொண்டு ஒரு நாவலை எழுதியுள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.).

மணக்குடவர் உரை
மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு. இது சேர்தலாகாதன கூறிற்று.

மு.வரதராசனார் உரை
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

English Meaning - As I taught a kid - Rajesh
1) Rampant (/Excessive/intense/abundant/copious) hunger, 
2) constant diseases and sufferings - constant/regular onset of diseases (for e.g. communicable diseases or due to lack of health infrastructure), chronic diseases (due to poor lifestyle, less awareness), sufferings in life due to poverty, inflation, unemployment, poor policies, no-growth  etc
and 
3) enmity/hatred/anger to other countries (especially neighboring countries)
The above three should not be part of a good country/governance. The same can be applied to individual, families etc

Questions that I ask to the kid
What are the 3 things that should not be part of a good country? Does it apply to an individual or family?

No comments:

Post a Comment