குறள் 345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை

[அறத்துப்பால், துறவறவியல், துறவு]
பொருள்
மற்றும் - மேலும்; மீண்டும்
தொடர்ப்பாடு - தொடர்ச்சி; பற்று; காமநுகர்ச்சி.
எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.
கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.
எவன்கொல்? - இப்படி என்னை கொல்லும், துன்புறுத்தும்
பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.
அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்
கல் - kl --கல்லு, கிறேன், கல்லினேன், கல்லுவேன், கல்ல, v. a. To work away earth, pebbles, &c., gradually, அகழ. 2. To dig out by little and little--as a hole, a tank, &c., to hollow, தோண்ட. 3. To scoop out --as a nut, துருவ. 4. To wash away earth, &c., by little and little-as following water, நீர்கல்ல. 5. To eat away--as caustic, அரிக்க. 6. [prov.] To catch and tear up the fibre in an ola when writing--as a style by being too sharp. எழுத்தாணிக்கூர்கல்ல. இக்காரங்கல்லிக்கல்லியெடுத்துப்போடும். This caustic will eat away (the proud flesh). மலைகல்லியெலிபிடிக்க. To excavate a moun tain to catch a rat; i. e. to take great pains or be at great expense for little profit.
அறுக்கல் - அறுத்தலை செய்தல்
உற்றார்க்கு - உறவினர், சுற்றத்தார்; நண்பர்.
உடம்பும் - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி
மிகை - மிகுதி; சிறந்தபொருள்; மேன்மை; பெருமை; தேவையற்றது; வேண்டுமளவின்மிக்கதென்னுங்குற்றம்; மிகுதிப்பொருள்; அதிகப்படியானது; செருக்கு; தீச்செயல்; தவறு; தண்டனை; வேதனைசெய்கை; வருத்தம்; துன்பம்; கேடு.
முழுப்பொருள்
பிறவி இறப்பு பிறவி இறப்பு என்ற தொடர் சங்கிலி வேண்டாம் அது தருகிற துன்பங்கள் வேண்டாம் என்று இப்பிறப்பு சங்கிலியை அறுக்க ஒருவன் முற்படுவான் என்றால் அதற்காக துறவறம் பூணுவான் என்றால் அவனுக்கு இந்த உடம்பே ஒரு சுமை அல்லது தண்டனை எனலாம். ஏனெனில் இவ்வுடம்பினில் ஐந்து புலன்களால் ஏற்படும் பல ஆசைகள் வரும். அது மனிதனை அலைக்கழித்து அவனை படுத்தும் பாடு எல்லா துன்பங்களுக்கும் வேர். மேலும் இவ்வுடம்பு இருந்தால் அவனுக்கு உற்றார் உறவினர் என்று உறவுகள் தொடர்பு ஏற்படும். பிறவி வேண்டாம் என்கிறவனுக்கு உறவுகள் மட்டும் ஏன் ? இவ்வுடம்பு இருப்பதால் தான் அவர்கள் இவனை அடையாளம் கண்டுகொண்டு இணங்குகின்றனர். ஆதலால் இவ்வுடம்பே சுமை எனலாம்.
சடாயு உயிர் நீத்த படலத்தில், கம்பர் இக்குறளின் கருத்தின் போக்கிலே எழுதிய வரிகள் இவை: “உடலமும் மிகையென்றெண்ணுவீர்” (கம்ப.சடாயு உயிர்நீத்த 51) என்றும், “உடற் பொறை துறந்துயர் பதம் புக்க” (கம்ப.மராமர.50).
வளையாபதியின் ஆசிரியர், முற்றுக்கருத்தையும் திருக்குறளையே மேற்கோள் காட்டி,

“மற்றுந் தொடர்பாடெவன் கொல் பிறப்பருக்கல்
உற்றார் குடம்பும் மிகை இசையுள் வழி” என்று பாடியிருப்பார்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், மற்றும் தொடர்ப்பாடு எவன் - ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்? ('உடம்பு' என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?.
மு.வரதராசனார் உரை
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.
சாலமன் பாப்பையா உரை
இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.

No comments:
Post a Comment