Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Communication_Verbosity. Show all posts
Showing posts with label Communication_Verbosity. Show all posts

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற


குறள் 649
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்
[பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை]

பொருள்  
பல - ஒன்றுக்குமேற்பட்டவை

சொல்லக்  - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

காமுறுவர் - விரும்புதல்; வேண்டிக்கொள்ளுதல்.

மன்ற - maṉṟa   perh. மன்னு-. adv. 1.Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2.Certainly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 3. Abundantly,plentifully; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு.தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ். அக.); maṉṟa   s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.; ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக

மாசு -  அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அற்ற - அல்லாத

சில - கொஞ்சம், some, a few

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

சொல்லல்  - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

தேற்று - தெளிவு; தெளிவிக்கை; தேற்றாமரம்.

தேற்றாதவர் - தெளிவு இல்லாதவர்

முழுப்பொருள் 
தான் கூறவேண்டியவற்றை தெளிவாக தவறுகள் குற்றங்கள் இன்றி சில சொற்களில் சொல்ல திறமையில்லாதவர்கள் பல சொற்களில் சொல்ல பேச மிக விரும்புவார்கள். வளவளவென பல சொற்களில் பேசுபவர்கள் பிறர் எளிதில் சலிப்படைய செய்வார்கள். அதனால் பிறரின் கவனமும் சிதறும். இவர்கள் தங்களுடைய சொற்களையும் நேரத்தையும் ஆற்றலையும் வீண் செய்வது மட்டும் இன்றி மற்றவர்களுடைய நேரத்தையும் வீண் செய்வார்கள்.

இக்கருத்தையே கூறும் நாலடியார் பாடல்:

சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார், -கற்ற
செலவுரைக்கும் ஆறறியார், தோற்ப தறியார்,
பலவுரைக்கும் மாந்தர் பலர். (நாலடி 313)

நூல் நுட்பங்களைக் கற்றறிந்து ஒழுகும் வல்லமையுந் தாம் தெளியாது, தாம் கற்ற சிலவற்றைக் கேட்பவர் உள்ளத்திற் பதியும்படி எடுத்துரைக்கும் முறையையும் அறியாது, தம்சொற்கள் பயன்படுதலின்றி வீணாகி ஒழிதலையுங் கருதாது, ஒன்றைப் புலப்படுத்தும்பொருட்டு இவ்வாறு பல சொற்கள் சொல்லி அவம்படும் மாந்தர் உலகிற் பலராவர்; அத்தகையோர், சொல்லாகிய முட்கோல் கொண்டு நாத்தினவெடுத்துப் பேச முற்படுதலை மிக விரும்பும் இயல்பினர், என்கிறது மேற்கண்ட நாலடியார் பாடல்.

“சொல்லிய சொல்லோ சிலவே” (புறநா 305:4)
“சிலசொல்லாற் பலகேள்வியர்” (புறநா 360:2)
”சில்லெழுத்தி னானே பொருளடங்கக் காலத்தால்
சொல்லுக செவ்வி அறிந்து” (ஆசாரக்.76)

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றனவாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர். (குற்றம் - மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர், அவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.).

மணக்குடவர் உரை
பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார். மன்ற - தெளிய. இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.

சாலமன் பாப்பையா உரை
குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.

Thirukkural - Management - Communication - Verbosity
Verbosity means using many words where a few words are enough. Some communicators have weaknesses to  be verbose. Communicators  who are fond of their own communications will not be brief and to the point. They gain satisfaction from circumlocution. Circumlocution is a roundabout  way of saying things. Shakespeare said, “Brevity is the soul of wit.” To be elaborate is  very easy but to be brief is very difhcult. 

Anyone can construct long-winded sentences. However, constructing simple and lucid sentences demands rigorous practice.

We often say that for want of time, we write less. If  we have more time, we can write more. It must be the other way around. We need more time to write or speak less as every word we speak or write counts. There are claims that Abraham Lincoln edited his 'Gettysburg Address’ around one hundred times. Kural 649, criticizes communicators who long to communicate to saDsfy themselves, as they are fond of their own voices and messages, instead of communicating to satisfy the needs of their listeners.

Those fond of talking much
Cannot be brief and faith.