Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Management_Helping_Others. Show all posts
Showing posts with label Management_Helping_Others. Show all posts

உதவி வரைத்தன்று உதவி உதவி

குறள் 105
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை

வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம்.

வரைத்து - வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல்; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல்.

அளவிற்கு வரையறை என்று சொல்லுவோம் அல்லவா?

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை

உதவி - துணை; கொடை; சகாயம் ; உபகாரம் ; ஈகை

செயப்பட்டார் - செய்தவர் (செயல் புரிந்தவர்)

சால்பின் - சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம்.

வரைத்து - வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல்; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல்.

அளவிற்கு வரையறை என்று சொல்லுவோம் அல்லவா?

முழுப்பொருள்
ஒருவர் மற்றோருவர்க்குச் செய்யப்பட்ட உதவியானது உதவியின் அளவுகளான காலம், பொருள், இதற்குமுன் செய்யப்பட்ட உதவி போன்றவற்றின் அளவை பொறுத்ததல்ல. உதவியின் அளவென்பது சிறப்பென்பது அவ்வுதவி யாருக்கு செய்யப்பட்டதோ அவரின் பண்பை / சான்றாண்மையை பொருத்ததாகும்.

இராமாயணத்தில் இராவண வதம் முடிந்தப்பின்பு அனுமன் சீதையை வணங்குகிறான். சீதை (தலைவி) அவனை/அனுமனை (தொண்டன்) தலையில் கைவைத்து வணங்குகிறாள். நீ செய்த உதவி நிலையானது விலையற்றது. அதற்கு பிரதிபுககாரமாக ஏதாவது செய்தால் அதற்கு  (அப்பரிசுக்கு)விலையிருக்கும் நிலையிருக்காது.  அதனால் தலையினால்  தொழ தகும்  என்று உணர்ந்து அனுமனை வணங்குகிறாள். ராமனும் அனுமனை தழுவுகிறான். இத்தனைக்கும் அனுமன் வானரங்களின் அரசன் அல்ல (சுக்ரீவன் தான் அரசன்). இது அனுமனின் பண்பிற்கு கொடுக்கப்படும் சிறப்பாகும்.

உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என்
தலையினால் தொழவும் தகும்-தன்மையோய்! 15

சேரன் ஒளவையார்க்கு செய்த உதவி இன்று பேசப்படுகிறது. ஏனெனில் அது ஒளவையார்க்கு செய்யப்பட்டது.
சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
சுரப்புஆடு யான்கேட்கப் பொன்ஆடு
ஒன்று ஈந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாம்அறிவார் தம்கொடையின் சீர்!
 (ஒளவையார்)

கம்பராமாயாணப் பாடல் வேள்விப்படலப் பாடலொன்று, மகாபலி சக்ரவர்த்தி வாமனர்க்கு அவர் கேட்ட மூன்றடி நிலத்தை தாரை வார்த்து கொடுத்த மறு வினாடி, வாமனர் மண்ணுக்கும் விண்ணுக்குமாய் வளர்ந்து நின்றதை இவ்வாறு வருணிக்கின்றது.
“கயந்தரு நறும்புனல் கையிற் றூண்டலும் 
பயந்தவர்களும் இகழ்குறளன் பார்த்தெதிர் 
வியந்தவர் வெருக்கொண விசும்பின் ஓங்கினான் 
உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே”

தக்காருக்குச் செய்யும் உதவிபற்றி துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நன்னெறி நூலும் இதைக்கூறுகிறது.
“தக்கார்க்கே ஈவர் தகார்க்களிப்பா ரில்லென்று 
மிக்கார்க் குதவுவார் விழுமியோர் – எக்காலும் 
நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி 
புல்லுக் கிறைப்பாரோ போய்”. 

இதே கருத்தைதான் “பாத்திரமறிந்து பிச்சையிடு” என்றதும்.

இன்றைய காலகட்டங்களில் நாம் பல உண்மை சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். மகாத்மா காந்தி, வினோபா பாவே ஆகியோர் பூமி தானம் திட்டம் மற்றும் சுதந்திர போராட்டம் போன்ற பலவற்றுக்கு பலரிடம் உதவி கேட்டார். உதவி செய்தோர் இன்று அதனை பெருமையாக நினைக்கின்றனர். ஏனெனில் அது மகாத்மா காந்திக்கும் வினோபா பாவேவுக்கும் செய்யப்பட்டது. அத்தகைய சான்றோர்களுக்கு செய்த உதவியாகியதாலே அவ்வுதவி சிறப்பு பெறுகிறது. வேறு சராசரிகளுக்கு செய்திருந்தால் இன்று அது இவ்வளவு பேசப்பட்டு இருக்குமா?

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“ஞான முன்னிய நான்மறை யாளர்கைத்
தானம் என்னத் தழைத்தது நீத்தமே” (கம்ப.ஆற்றுப்.5)

“பெருந்தவர் கைப்பெய் பிச்சையின் பயனும்...
பெருகிய தென்னப் பெருவளம் சுரப்பு” (மணி.22:229-32)

“வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே” (கம்ப.வேள்வி.35)


பரிமேலழகர் உரை
உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. '(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி. இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.

மு.வரதராசனார் உரை
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

Thirukkural - Management - Helping Others
A help rendered should not be measured by the size or the quantity of help. A help is to be measured by the quality or magnanimity of the person who provides that help, helpfully suggests Kural 105.

Not according to the aid but its giver Is its recompense determined. Therefore, value of a help is not in the help rendered, but it is in the intention of the person 
who renders that help. Do not just judge the help provided by someone. Instead, assess whom, when, and how the help is provided.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

குறள் 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

தூக்குதல் - உயர்த்துதல்; நிறுத்தல்; ஆராய்தல்; ஒப்புநோக்குதல்; மனத்திற்கொள்ளுதல்; தொங்கவிடுதல்; காண்க:தூக்கிலிடுதல்; உதவிசெய்தல்; நங்கூரம்வலித்தல்; அசைத்தல்; ஒற்றறுத்தல்.

தூக்கார் - (பயனை எண்ணி) ஆராயாமல், மனத்திற்கொள்ளாமல்

செய்த - செய்கை

உதவி - துணை; கொடை; utavi   s. help, assistance, சகாயம்; 2. gift, benefit, உபகாரம்; boon, donation.

நயன் - nayaṉ   n. id. 1. See நயம்¹. நயனில சொல்லினுஞ் சொல்லுக (குறள், 193). 2.Substance; பசை நறுந்தா துண்டு நயனில் காலைவறும்பூத் துறக்கும் வண்டு (மணி. 18, 19). 3. Relationship; உறவு (கலித். 125, 6, உரை )  

தூக்கின் - (பயன்) ஆராய்ந்து, மனத்திற்கொண்டு செய்த உதவி

நன்மை - நலம்; பயன்; உதவி; சிறப்பு; நன்னெறி; நற்குணம்; ஆக்கம்; நற்செயல்; நல்வினை; வாழ்த்துமொழி; மிகுதி; மேம்பாடு; புதுமை; அழகு; நல்லருள்; காண்க:நன்மையாதல்

கடலின் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி.

பெரிது - peritu   id. n. [K. piridu.] Thatwhich is great, big or large; பெரியது. நன்மைகடலிற் பெரிது (குறள், 103).--adv. Greatly; மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27).

முழுப்பொருள்
இக்குறளுக்கு எனக்கு இரண்டு பொருள்கள் தோன்றுகிறது.

1) ஒரு சந்தர்பத்தில் பிறர் ஒருவர் இவ்வுதவியை இவருக்கு செய்தால் இதனால் நமக்கு இப்பயன் இவரிடம் இருந்தோ அல்லது பிறரிடம் இருந்தோ அல்லது சமுதாயத்தின் அங்கிகாரத்தினாலோ அல்லது நமது வருங்கால சந்ததியனருக்கு நல்லாசியாக வரும் என்று ஆராயாமல் மனத்திற்கொள்ளாமல் நமக்கு உதவி செய்வார் எனில் அத்தகைய உதவி மிக சிறந்ததாகும் போற்றுதலுக்கூரியது ஆகும். அத்தகைய உதவி இவ்வுதவியை செய்தால் நமக்கு இப்பயன் பின்பு கிடைக்கும் என்று ஆராய்ந்து மனத்திற்கொண்டு செய்யப்படும் உதவியை விட கடலைப்போன்று பெரிதாகும்.

பி.கு: இங்கே இரு உதவியும் போற்றுதலுக்கு உரியவையே. ஆயினும் பயன் எண்ணாமல் செய்த உதவி கடலை விட பெரியது ஆகும். 

2)  பயன் என்ன கிடைக்கும் என்று ஆராயாமல் செய்த உதவியை ஆற்றியவரை பற்றி ஆராய்ந்தால் அங்கே அடிப்படையாக இருப்பது அன்பாக இருக்கும். சக மானுடரின் மேல் கொண்ட நேசம் தனை அங்கு நாம் அறியலாம். அந்த அன்பும், நேசமும் கடலைவிட பெரியது ஆகும்.

கடல் என்றது கடல் தன்னுள் இருக்கும் வளங்களையெல்லாம் மனித குலத்துக்கு, எவ்வித பயனும் கருதாது தருவது போலவாம் பயன்கருதாமல் ஒருவர் செய்கின்ற உதவி என்று வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.

சமஸ்கிருத பக்தி இலக்கியங்களிலே “அவ்யாஜ கருணா மூர்த்தி” என்ற சொற்றொடர் நிறைய இடங்களில் இருக்கும். இதற்கு எவ்வித காரணமும் இல்லாமலே கருணையோடு இருக்கும் இறைவன் என்ற பொருள் என்றென்பதையும் அறிக.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நீரினும் ஆரள வின்றே”
“கடலினும் பெரிதெமக் கவருடைய நட்பே” (ஐங் 184:4)

பரிமேலழகர் உரை 
பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை 
தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.

மு.வரதராசனார் உரை
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.

சாலமன் பாப்பையா உரை
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

Management - 3 big questions of a king
A legend is that a King told one of his Ministers to find answers to three of his pressing questions. They were: 1) What is bigger than the earth? 2) What is deeper than an ocean? 3) What is taller than a mountain? The Minister explored all the possibilities to find answers to the King’s questions.

He could not get convincing answers to convince the King. He was much concerned that he would fail in fulfilling his responsibility. His daughter, on reading the disturbances on his face, asked him what was bothering him. The Minister explained to her the King’s expectations and his inability to find convincing answers to his questions. His daughter said, “My teacher told us, ‘You can find answers to all your questions in Thirukkural.’ My teacher is right as he always refers to Thirukkural to answer our questions. You too can refer to Thirukkural to find answers to your questions.” The Minister started to refer to Thirukkural to find answers to the King’s questions. He, like a detective with a magnifying glass, was meticulously reading the Kurals as he had a purpose. When he reached the Chapter 11, he found answer to the first two questions. 

Kural 102 provided the answer to the King’s first question ‘What is bigger than the earth?’

குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

Given in time, even a trifling help Exceeds the earth. A timely help, even though small, is considered and will be treated by the person helped as bigger than the earth. Remember the old saying, ‘A friend in need is a friend indeed.’ The size of the help does not matter, but the time of the help matters the most.

Kural 103 provided the answer to the King’s second question ‘What is deeper than an ocean?’ 
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது (103). 

Help given regardless of return Is wider than the sea. An unconditional help, like a mother’s love, that is helping someone without expecting any favor in turn, is considered deeper than an ocean. Somehow, we have become selfish and
we, before rendering any help, calculate the return on investment. When we expect something in return to the help provided to others that is not true help. Altruism is helping someone just for the sake of helping. An often told story is that a sadhu was bathing in the river Cauvery in Tamilnadu. He noticed a scorpion being carried away in the river. He wanted to save the scorpion, touched that to put that on the bank of the river. The scorpion stung his hand when he touched that. The sadhu dropped that. He attempted again, it stung again and he dropped the scorpion again. He kept on doing that to save the scorpion. An onlooker irritatingly commented, “Swami, you know a scorpion stings. In spite of that you are trying to save that.” The sadhu replied, “The nature of a scorpion is to sting. The nature of a sadhu is to help others despite difficulties.” 

When the Minister continued reading further, he found the answer to the King’s third question ‘What is taller than a mountain?’ in Kural 124. 
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது (124). 
The steadfast self-controlled towers aloft Taller than a mountain. If a person can remain polite and humble when he gets power, positions, personal gains, authority, and wealth, the ability to remain polite is considered taller than a mountain.

The Minister, while reading further, found answers to many of his pressing personal and professional problems. 

Thirukkural - Management - Helping Others
An unconditional help, that means helping someone without expecting or anticipating  anything in return, is greater and deeper than even an ocean, as per Kural 103.

Help given regardless of return
Is wider than the sea.

Unfortunately, we have become so calculative and self— centered that we always look for something in return. Let us help others without expecting anything in turn. We are all the products of unconditional support by others. 

English Meaning - As I taught a kid - Rajesh
When a person helps another person regardless of return from that person or from people around him or the society, then that help is as big as ocean. Moreover, the underlying force driving this help is also compassion, love, affection - this compassion is as big as an ocean. An unconditional help is like mothers's love.

Questions that I ask to the kid
What is as big as or wider than ocean/sea? 
How is unconditional help respected?

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில் நிகழ்ச்சியைக் குறிக்கும் முக்காலம்; இசைக்குரிய மூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.
காலத்தினால் - தக்கசமயத்திற்கு

செய்த - செய்யப்பட்ட
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
சிறிது - சிறு-மை, அற்பமானது
எனினும் - என்றாலும்
ஞாலத்தின் - ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.
மாணப் - மாண்-. Greatness;glory; splendour; excellence; dignity; மாட்சிமை., மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.
பெரிது - பெரிது, மிகவும்

முழுப்பொருள்
உலகில் பலர் பல உதவிகளை செய்கிறார்கள். நாம் அதில் பல உதவிகளை பெற்றுக்கொள்கிறோம். எல்லா உதவிகளும் பெரிது என்று சொல்ல முடியாது. அதுப்போல சில உதவிகள் சிறிதாய் இருந்தாலும் அது சிறிதாகாது. 

ஒரு முக்கியமான நேரத்தில் ஒரு உதவி சிறிதாக இருந்தாலும் அந்த உதவி அந்த இடத்தில் இவ்வுலகை விட மிக மிக பெரியது என்கிறார் திருவள்ளுவர். இங்கு நாம் காண வேண்டிய மற்றொன்று, அவ்வுதவியால் நன்மை கண்டிப்பாக அடைந்தோமா என்று பார்க்கவேண்டும் என்று திருவள்ளுவர் கூறவில்லை என்பதனை. 

உதாரணமாக ஒருவர் மருத்துவத்திற்கு இரத்தம் தானம் செய்து உதவுகிறார். மேலிருந்து பார்க்கையில் அது சிறிய உதவியாக இருக்கலாம். செய்யப்பட்ட மருத்துவம் தோல்வியடைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தக்க நேரத்தில் செய்யப்பட உதவியினை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதுவே சிறப்பு. அதுவே அறமும் கூட. 

இவ்வுதவி பொருள் உதவியாக இருக்கவேண்டியது என்று கூட இல்லை. இக்கட்டான நிலைமையில், தேவையான நிலைமையில் ஆறுதலுக்கு ஒரு தூணும், மனதிற்கு ஊக்கம் தரும் ஒரு வார்த்தையும் மிக மிக பெரிய உதவியே.  [நான் ஆறு வயதாய் இருந்தப்பொழுது எனது தந்தையை இழந்தேன். ஆனால் அன்று ஒரு வார்த்தை ஆறுதலுக்காக கூட எனது உறவினர்கள் நாங்கள் கஷ்டப்பட்டு வளரும் படிக்கும் காலங்களில் வரவில்லை. குறிப்பாக இருவரை தவிர வேறு யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால் வளர்ந்த பிறகு நல்ல வேலைக்கு சென்ற பிறகு வந்தார்கள். உறவு கொண்டாடினார்கள். ச்சீ என்றே அன்று நினைத்தேன்]

என் வாழ்வில் மற்றொரு உதாரணம்: எனது தம்பி மேற்ப்படிப்பு படிக்க தேவையான நிதி இருப்பதாக வங்கியில் காண்பிக்க வேண்டும். எங்களிடம் அப்போழுது தேவையான வற்றில் பாதி நிதிக் கூட இல்லை. ஆனால் ஒரு பத்து நண்பர்கள் சேர்ந்து வங்கியில் தங்களால் முடிந்த பணத்தை சேர்த்தார்கள். வங்கியில் நிதி இருப்பதாக சான்றிதழ் வாங்கிவிட்டு அப்பணத்தை ஒரே வாரத்தில் மறுபடியும் தந்துவிட்டொம். இவ்விடத்தில் அவர்கள் எனக்கு பணமாய் ஒன்றும் தரவில்லை. வங்கியில் காண்பிக்க ஒரு வாரம் கடனாய் தந்தார்கள். இது பார்க்கையில் சிறிதானாலும் அந்த நேரத்தில் இவ்வுலகை போன்று பெரியது எனக்கு.  [மற்றொரு உதாரணம்: இதே போல எனக்கு ஒரு நிலை வந்த பொழுது எனது தூரத்து சொந்தம் என்று சொல்ல கூடிய சித்தி சித்தப்பா அவர்கள் எனக்கு படிக்க நிதி தருவதாக சான்றிதழ் கொடுத்தார்கள். அதனால் அப்பொழுது நான் படிக்க விண்ணப்பிக்க முடிந்தது]

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் “நன்னெறிப்” பாடலொன்று சொல்கிறது. இதை அறஞ்செய்வதை வலியுறுத்தி, வருமுன் காத்தல் என்கிற எடுத்துக்காட்டோடு சொல்லுகிறார்.
“கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய துய்கவே – வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு”
குறளின் கருத்து, சொல்வழக்கிலே, “உன்னைப்போல் இந்திரன் இல்லை” என்னும் உபசார வழக்கு போல சொல்லப்படுகிறது.  காலத்திலே செய்த உதவியின் சிறப்பை உயர்த்திக் காட்டவே, அதை “ஞாலத்தை விட” பெரியது என்றது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“நிலத்தினும் பெரிதே” (குறுந் 3:1)

“மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும்
எண்ணினும் பெரியதோர் இடர்’ (கம்ப.அயோமுகி 99)

“முன்னொருவன் செய்த உபகாரம் மூவுலகம்
தன்னைக் கொடுத்தாலும் சாலுமே” (பாரத வெண்பா)

பரிமேலழகர் உரை
காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.).

மணக்குடவர் உரை
உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது. இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காலத்தினால் செய்த நன்றி- ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த வுதவி; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெரிதாம்.

ஒருவர் செய்த நன்றியை அது செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதிக்க வேண்டுமென்பது கருத்து. 'காலத்தினால்' என்பது காலத்தாலே வந்தான் என்னும், மேலைவடார்க்காட்டு வழக்குப் போன்ற வேற்றுமை மயக்கம்.

மு.வரதராசனார் உரை
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

பொருள்: காலத்தினால் செய்த நன்றி - (ஒருவன் இடருற்ற) காலத்தில் (பிறன்) செய்த உதவி, சிறிது எனினும் ஞாலத்தின் மாண பெரிது - (செயலால்) சிறியது என்றாலும் (பயனால்) உலகத்தினும் மிகப் பெரியது.

அகலம்: காலத்தினால் என்பது வேற்றுமை மயக்கம், மூன்றாம் வேற்றுமை யுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால். ‘என்னினும்’ என்பது ‘ன’கர வொற்றுக் கெட்டு நின்றது.

கருத்து : சமயத்திற் செய்த உதவியும் ஒப்பற்றது

Management - 3 big questions of a king
A legend is that a King told one of his Ministers to find answers to three of his pressing questions. They were: 1) What is bigger than the earth? 2) What is deeper than an ocean? 3) What is taller than a mountain? The Minister explored all the possibilities to find answers to the King’s questions.

He could not get convincing answers to convince the King. He was much concerned that he would fail in fulfilling his responsibility. His daughter, on reading the disturbances on his face, asked him what was bothering him. The Minister explained to her the King’s expectations and his inability to find convincing answers to his questions. His daughter said, “My teacher told us, ‘You can find answers to all your questions in Thirukkural.’ My teacher is right as he always refers to Thirukkural to answer our questions. You too can refer to Thirukkural to find answers to your questions.” The Minister started to refer to Thirukkural to find answers to the King’s questions. He, like a detective with a magnifying glass, was meticulously reading the Kurals as he had a purpose. When he reached the Chapter 11, he found answer to the first two questions. 

Kural 102 provided the answer to the King’s first question ‘What is bigger than the earth?’

குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

Given in time, even a trifling help Exceeds the earth. A timely help, even though small, is considered and will be treated by the person helped as bigger than the earth. Remember the old saying, ‘A friend in need is a friend indeed.’ The size of the help does not matter, but the time of the help matters the most.

Kural 103 provided the answer to the King’s second question ‘What is deeper than an ocean?’ 
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது (103). 

Help given regardless of return Is wider than the sea. An unconditional help, like a mother’s love, that is helping someone without expecting any favor in turn, is considered deeper than an ocean. Somehow, we have become selfish and
we, before rendering any help, calculate the return on investment. When we expect something in return to the help provided to others that is not true help. Altruism is helping someone just for the sake of helping. An often told story is that a sadhu was bathing in the river Cauvery in Tamilnadu. He noticed a scorpion being carried away in the river. He wanted to save the scorpion, touched that to put that on the bank of the river. The scorpion stung his hand when he touched that. The sadhu dropped that. He attempted again, it stung again and he dropped the scorpion again. He kept on doing that to save the scorpion. An onlooker irritatingly commented, “Swami, you know a scorpion stings. In spite of that you are trying to save that.” The sadhu replied, “The nature of a scorpion is to sting. The nature of a sadhu is to help others despite difficulties.” 

When the Minister continued reading further, he found the answer to the King’s third question ‘What is taller than a mountain?’ in Kural 124. 
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் 
மலையினும் மாணப் பெரிது (124). 
The steadfast self-controlled towers aloft Taller than a mountain. If a person can remain polite and humble when he gets power, positions, personal gains, authority, and wealth, the ability to remain polite is considered taller than a mountain.

The Minister, while reading further, found answers to many of his pressing personal and professional problems. 

Thirukkural - Management - Helping Others
Help rendered to someone must be timely. If you help a person when he does not need your help, that act is not helping. That is rather interfering. On the contrary, if you help a person when he requests you to help, that act is not help. That is rather sympathy or obligation. A timely help, that is., helping when someone needs your help desperately, though very small, is greater than the world, Kural 102.

Given in time, even a trifling help
Exceeds the earth.

Be sensitive to people and their needs and help them when they need your help. 

செய்யாமல் செய்த உதவிக்கு

குறள் 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
செய்யாமல் செய்த -  இதற்கு முன் நாம் ஒருவருக்கு செய்யாத ஒரு செயலை நமக்கு அவரால் செய்யப்படுதல்
உதவிக்கு - உதவி, உபகாரம், சகாயம்
வையகமும் -  உலகம்,  பூமி
வானகமும் - கட்டற்ற தேவ லோகம்
ஆற்றல் - மிகுதி, வலிமை
அரிது - குறைவு

முழுப்பொருள்
பெரும்பாண்மையாக ஒருவர் மற்ற ஒருவருக்கு உதவி செய்தால் ப்ரதிபலனை எதிர்ப்பார்த்துத்தான் செய்வார்கள். அல்லது தனக்கு இவர் முன்பு செய்த உதவிக்கு கைமாறு செய்ய வேண்டும் என்று எண்ணி உதவுவார்கள். 

ஆனால் தனக்கு ஒருவர் எந்த ஒரு உதவியும் முன்பு செய்ய நேராத போதும் அல்லது செய்யாத போதும் அவருடைய கடின நிலையை அறிந்து அவருக்கு உதவி செய்வது மிகுந்த போற்றுதலுக்கு உரிய செயலாகும். அத்தகைய உதவி இந்த பூமியை விடவும் கட்டற்ற வானை விடவும் பெரிதாகும் என்கிறார் திருவள்ளுவர். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
'விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே” (குறுந் 101:1-3)

“பொன்னணி மார்பன் முன்னர் ஆற்றிய
நன்னர்க் குதவும் பின் உப காரம்
அலைதிரைப் பௌவம் ஆடை யாகிய
நிலமுழுது கொடுப்பினும் நேரோ என்மரும்” (பெருங் 3:20:186-9)

“சீறுவா யல்லை யைய.............
......................உதவிமா றுதவி யுண்டோ” (கம்ப.கிட்கிந்தை 55)


“உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மா றாக
மதயானை அனைய மைந்த மற்றுமுண் டாக வற்றோ” (கம்ப.கிட்கிந்தை 66)

“உலக மூன்று முதவற் கொருதனி
விலையி லாமையும் உன்னினென் மேலவை
நிலையி லாமை நினைந்தனன்” (மீட்சிப் 28)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் , அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது. )

செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செய்யாமல் செய்த உதவிக்கு -- தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருந்தும் ஒருவன் தனக்குச் செய்த வுதவிக்கு ; வையகமும் வானகமும் வானகமும் ஆற்றல் அரிது - ' மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அலை ஈடு செய்தல் அரிது .

கைம்மாறுகளெல்லாம் எத்துணைச் சிறந்தன வாயினும் , முதல் வினையைப் பின்பற்றின வழிவினைகளாதலின் முதல் வினைக்கு ஈடாகா என்பது கருத்து .

செய்யாமைச் செய்தவுதவி யென்று பாடமோதி, மறுத்துதவ மாட்டாமை யுள்ள விடத்துச் செய்த வுதவி யென்று பொருளுரைக்கத் தேவையில்லை. அப்பொருள்,

"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு"

(211)
என்னுங் குறளாற் பெறப்படுதலால்.

மு.வ உரை
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

சாலமன் பாப்பையா உரை
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

பொருள்: செய்யாமல் செய்த உதவிக்கு ‡ (பிறர்க்குத் தாம் ஓர் உதவியும்) செய்யாமலிருக்க த் தமக்குப் பிறர்) செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - பூவுலகமும் வானுலகமும் சமமாதல் இன்று.

கருத்து: தமது உதவியை முன் பெறாதார் தமக்குச் செய்த உதவி ஒப்பற்றது.

Thirukkural - Management - Helping Others
'Help yourself by helping others’ is an age old advice to make the purpose of our creation meaningful. “Help,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 556), “is to be useful to somebody; to make it easier for somebody to do something; to assist somebody.”  Anyone who helps others unconditionally will get back the benefits equivalent to that or more than that, though getting benefits in turn may not be the intention. 

Everyone needs help. Helping others can happen because of three reasons. One is in response to someone's request to be helped, two is in anticipation of someone's needs, and three is to get help in turn in future. Kurals give the views of Valluvar on helping. 

Kural 101 impresses us that if a person helps or assists someone even before the other person seeks  help the help rendered cannot be paid back even by presenting the helper anything equivalent to heaven and earth. The value of an unsolicited help is multifold.

Neither earth nor heaven can truly repay
Spontaneous aid

We must be sensitive to others' needs. People do not express their needs for reasons known and unknown. Communication  is to understand what is not said. Understand the needs of people and act accordingly.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்

குறள் 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]

பொருள்
எந் - எந்த 

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

கொன்றார்க்கும் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்

உய்வு - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும் நீங்கும் வாயில்; உய்தல்

உண்டாம் - உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

உய்வு - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும் நீங்கும் வாயில்; உய்தல்

இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று.

செய்ந்நன்றி  -  cey-n-naṉṟi   n. id. +.1. Act of benevolence; உபகாரம் செய்ந்நன்றிகொன்ற மகற்கு (குறள், 110). 2. Gratitude; நன்றியறிவு  

கொன்ற - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்

மறத்தல் - அயர்த்தல்; அசட்டைபண்ணல்; ஒழிதல்; நினைவின்றிப்போதல்; பொச்சாப்பு.

மகற்கு - மறந்தவருக்கு

முழுப்பொருள்
எத்தனை  பெரிய அறங்களை அழித்தாலும், அதில் இருந்து தப்பிக்க ஏதேனும் ஒரு வழி  இருக்கும். ஆனால் ஒருவன் நமக்கு செய்த உதவியை மறந்தோம் என்றால் அந்த பாவத்தில் இருந்து தப்புவதற்கு  எந்த வழியும் இல்லை. ஏனெனில் தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பதை இங்கு நினைவில் கொள்க. மற்ற அறங்களை நன்மைகளை கொல்வதற்கு சூழ்நிலை, சந்தர்ப்பம் என்று ஆயிரம் காரணங்களையும் சப்பைகட்டுகளையும் கூறலாம். ஆனால் செய்ந்நன்றி கொல்வதற்கு அப்படியெல்லாம் கூறமுடியாது. ஒருவேலை கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளபட மாட்டாது.

இதன் மூலம் வள்ளுவர் பாவங்களில் எல்லாம் கொடிய பவம், செய்ந்நன்றி மறப்பது என உரைக்கிறார். 

ஒப்புமை
“...........செய்ந்நன்றி
கொன்றாரிற் குற்றம் உடைத்து” (நாலடி 111)

“செய்ந்நன்றி கொல்லன்மின்” (சிலப்.30:191)
“நன்றியை மறந்திடும் நயமில் நாவினோன்
என்றிவர் உறுநர் கென்ன தாகவே” (கம்ப.பள்ளியடை 104)

“நன்றி கொன்றரு நட்பினை நாரறுத்து” (கம்ப.கிட்கிந்தை 3)

“உய்திர் போலும் உதவிகொன் றீர் என” (கம்ப.கிட்கிந்தை 28)

”உய்யநிற் கபய மென்றா னுயிரைத் தன் னுயிரி னோம்பாக்
கையனு மொருவன் செய்த வுதவியிற் கருத்தி லோனும்
மையற நெறியி னோக்கி மாமறை நெறியி னின்ற
மெய்யினைப் பொய்யென் றானும் மீள்கிலா நரகில் வீழ்வார்” (கம்ப.விபீடணன் 117)

“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்குய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ” (புறநா 34:1-7)

“ஒற்கத்துள் உதவியார்க் குதவாதான் மற்றவன்
எச்சத்து ளாயினும்ஃ தெறியாது விடாதேகாண்” (கலி.149:6-7)

“சிதைவகல் காதற்றாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப்
பதவியந் தணரை ஆவைப் பாலரைப் பாவை மாரை
வதைபுரி குநர்க்கு முண்டாம் மாற்றலாம் ஆற்றல் மாயா
உதவி கொன்றார்க் கென் றேனும் ஒழிக்கலாம் உபாய முண்டோ” (கம்ப.கிட்கிந்தை 62)

“நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க் குய்வில தென்னும்
குன்றா வாய்மை” (கல்லாடம் 4)

பரிமேலழகர் உரை
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் - பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.

மு.வரதராசனார் உரை
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: எ நன்று கொன்றாற்கும் உய்வு உண்டாம் - எத்தகைய (சிறந்த) அறத்தைக் கெடுத்தவனுக்கும் உய்வாயில் உண்டாம்; செய் நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை - (தனக்குப் பிறர்) செய்த நன்றியை மறந்த மனிதனுக்கு உய்வாயில் இல்லை.

அகலம்: உய்வாயில் - கழுவாய். ‘உய்வாயில்’ என்பதனை வட நூலார் ‘பிராயச்சித்தம்’ என்பர். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘எந்நன்றி’. ‘நன்று’ என்னும் பாடத்தைக் கொண்டதற் குரிய காரணத்தை ‘நயனீன்று’ என்னும் தொடக்கத்துக் குறளின் அகலத்தில் காண்க.

கருத்து: செய்ந் நன்றியை மறந்தோன் அப் பாவப் பயனை அனுபவித்தே தீர வேண்டும்.

Thirukkural - Management - Helping Others
There may be redemption, freedom or way out, even if we forget the good things done to us by others. But, there is no redemption for a person who forgets the timely help rendered by others. Ingratitude is a sin. Kural 110 ensures that being grateful is the best of all the virtues.

All other sins may be redeemed,
Except ingratitude

Every individual has two predominant needs. Those needs are universal. One is to be needed by someone else and two is to get one's need fulfilled. While practicing, 'Helping Others' remember these two universal needs.