குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
[அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல்]
பொருள்
காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில் நிகழ்ச்சியைக் குறிக்கும் முக்காலம்; இசைக்குரிய மூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.
காலத்தினால் - தக்கசமயத்திற்கு
செய்த - செய்யப்பட்ட
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
சிறிது - சிறு-மை, அற்பமானது
எனினும் - என்றாலும்
ஞாலத்தின் - ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.
மாணப் - மாண்-. Greatness;glory; splendour; excellence; dignity; மாட்சிமை., மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.
பெரிது - பெரிது, மிகவும்
முழுப்பொருள்
உலகில் பலர் பல உதவிகளை செய்கிறார்கள். நாம் அதில் பல உதவிகளை பெற்றுக்கொள்கிறோம். எல்லா உதவிகளும் பெரிது என்று சொல்ல முடியாது. அதுப்போல சில உதவிகள் சிறிதாய் இருந்தாலும் அது சிறிதாகாது.
ஒரு முக்கியமான நேரத்தில் ஒரு உதவி சிறிதாக இருந்தாலும் அந்த உதவி அந்த இடத்தில் இவ்வுலகை விட மிக மிக பெரியது என்கிறார் திருவள்ளுவர். இங்கு நாம் காண வேண்டிய மற்றொன்று, அவ்வுதவியால் நன்மை கண்டிப்பாக அடைந்தோமா என்று பார்க்கவேண்டும் என்று திருவள்ளுவர் கூறவில்லை என்பதனை.
உதாரணமாக ஒருவர் மருத்துவத்திற்கு இரத்தம் தானம் செய்து உதவுகிறார். மேலிருந்து பார்க்கையில் அது சிறிய உதவியாக இருக்கலாம். செய்யப்பட்ட மருத்துவம் தோல்வியடைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தக்க நேரத்தில் செய்யப்பட உதவியினை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதுவே சிறப்பு. அதுவே அறமும் கூட.
இவ்வுதவி பொருள் உதவியாக இருக்கவேண்டியது என்று கூட இல்லை. இக்கட்டான நிலைமையில், தேவையான நிலைமையில் ஆறுதலுக்கு ஒரு தூணும், மனதிற்கு ஊக்கம் தரும் ஒரு வார்த்தையும் மிக மிக பெரிய உதவியே. [நான் ஆறு வயதாய் இருந்தப்பொழுது எனது தந்தையை இழந்தேன். ஆனால் அன்று ஒரு வார்த்தை ஆறுதலுக்காக கூட எனது உறவினர்கள் நாங்கள் கஷ்டப்பட்டு வளரும் படிக்கும் காலங்களில் வரவில்லை. குறிப்பாக இருவரை தவிர வேறு யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால் வளர்ந்த பிறகு நல்ல வேலைக்கு சென்ற பிறகு வந்தார்கள். உறவு கொண்டாடினார்கள். ச்சீ என்றே அன்று நினைத்தேன்]
என் வாழ்வில் மற்றொரு உதாரணம்: எனது தம்பி மேற்ப்படிப்பு படிக்க தேவையான நிதி இருப்பதாக வங்கியில் காண்பிக்க வேண்டும். எங்களிடம் அப்போழுது தேவையான வற்றில் பாதி நிதிக் கூட இல்லை. ஆனால் ஒரு பத்து நண்பர்கள் சேர்ந்து வங்கியில் தங்களால் முடிந்த பணத்தை சேர்த்தார்கள். வங்கியில் நிதி இருப்பதாக சான்றிதழ் வாங்கிவிட்டு அப்பணத்தை ஒரே வாரத்தில் மறுபடியும் தந்துவிட்டொம். இவ்விடத்தில் அவர்கள் எனக்கு பணமாய் ஒன்றும் தரவில்லை. வங்கியில் காண்பிக்க ஒரு வாரம் கடனாய் தந்தார்கள். இது பார்க்கையில் சிறிதானாலும் அந்த நேரத்தில் இவ்வுலகை போன்று பெரியது எனக்கு. [மற்றொரு உதாரணம்: இதே போல எனக்கு ஒரு நிலை வந்த பொழுது எனது தூரத்து சொந்தம் என்று சொல்ல கூடிய சித்தி சித்தப்பா அவர்கள் எனக்கு படிக்க நிதி தருவதாக சான்றிதழ் கொடுத்தார்கள். அதனால் அப்பொழுது நான் படிக்க விண்ணப்பிக்க முடிந்தது]
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் “நன்னெறிப்” பாடலொன்று சொல்கிறது. இதை அறஞ்செய்வதை வலியுறுத்தி, வருமுன் காத்தல் என்கிற எடுத்துக்காட்டோடு சொல்லுகிறார்.
“கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய துய்கவே – வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு”
குறளின் கருத்து, சொல்வழக்கிலே, “உன்னைப்போல் இந்திரன் இல்லை” என்னும் உபசார வழக்கு போல சொல்லப்படுகிறது. காலத்திலே செய்த உதவியின் சிறப்பை உயர்த்திக் காட்டவே, அதை “ஞாலத்தை விட” பெரியது என்றது.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
“நிலத்தினும் பெரிதே” (குறுந் 3:1)
“மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும்
எண்ணினும் பெரியதோர் இடர்’ (கம்ப.அயோமுகி 99)
“முன்னொருவன் செய்த உபகாரம் மூவுலகம்
தன்னைக் கொடுத்தாலும் சாலுமே” (பாரத வெண்பா)
பரிமேலழகர் உரை
காலத்தினால் செய்த நன்றி - ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது - தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.).
மணக்குடவர் உரை
உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது. இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காலத்தினால் செய்த நன்றி- ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த வுதவி; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெரிதாம்.
ஒருவர் செய்த நன்றியை அது செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதிக்க வேண்டுமென்பது கருத்து. 'காலத்தினால்' என்பது காலத்தாலே வந்தான் என்னும், மேலைவடார்க்காட்டு வழக்குப் போன்ற வேற்றுமை மயக்கம்.
மு.வரதராசனார் உரை
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
துன்பத்தில் துணை நிற்பதே பெருஞ்செயல்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
துன்பத்தில் துணை நிற்பதே பெருஞ்செயல்.
பொருள்: காலத்தினால் செய்த நன்றி - (ஒருவன் இடருற்ற) காலத்தில் (பிறன்) செய்த உதவி, சிறிது எனினும் ஞாலத்தின் மாண பெரிது - (செயலால்) சிறியது என்றாலும் (பயனால்) உலகத்தினும் மிகப் பெரியது.
அகலம்: காலத்தினால் என்பது வேற்றுமை மயக்கம், மூன்றாம் வேற்றுமை யுருபு ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால். ‘என்னினும்’ என்பது ‘ன’கர வொற்றுக் கெட்டு நின்றது.
கருத்து : சமயத்திற் செய்த உதவியும் ஒப்பற்றது
Management - 3 big questions of a king
A legend is that a King told one of his Ministers to find answers to three of his pressing questions. They were: 1) What is bigger than the earth? 2) What is deeper than an ocean? 3) What is taller than a mountain? The Minister explored all the possibilities to find answers to the King’s questions.
He could not get convincing answers to convince the King. He was much concerned that he would fail in fulfilling his responsibility. His daughter, on reading the disturbances on his face, asked him what was bothering him. The Minister explained to her the King’s expectations and his inability to find convincing answers to his questions. His daughter said, “My teacher told us, ‘You can find answers to all your questions in Thirukkural.’ My teacher is right as he always refers to Thirukkural to answer our questions. You too can refer to Thirukkural to find answers to your questions.” The Minister started to refer to Thirukkural to find answers to the King’s questions. He, like a detective with a magnifying glass, was meticulously reading the Kurals as he had a purpose. When he reached the Chapter 11, he found answer to the first two questions.
Kural 102 provided the answer to the King’s first question ‘What is bigger than the earth?’
குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
Given in time, even a trifling help Exceeds the earth. A timely help, even though small, is considered and will be treated by the person helped as bigger than the earth. Remember the old saying, ‘A friend in need is a friend indeed.’ The size of the help does not matter, but the time of the help matters the most.
Kural 103 provided the answer to the King’s second question ‘What is deeper than an ocean?’
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது (103).
Help given regardless of return Is wider than the sea. An unconditional help, like a mother’s love, that is helping someone without expecting any favor in turn, is considered deeper than an ocean. Somehow, we have become selfish and
we, before rendering any help, calculate the return on investment. When we expect something in return to the help provided to others that is not true help. Altruism is helping someone just for the sake of helping. An often told story is that a sadhu was bathing in the river Cauvery in Tamilnadu. He noticed a scorpion being carried away in the river. He wanted to save the scorpion, touched that to put that on the bank of the river. The scorpion stung his hand when he touched that. The sadhu dropped that. He attempted again, it stung again and he dropped the scorpion again. He kept on doing that to save the scorpion. An onlooker irritatingly commented, “Swami, you know a scorpion stings. In spite of that you are trying to save that.” The sadhu replied, “The nature of a scorpion is to sting. The nature of a sadhu is to help others despite difficulties.”
When the Minister continued reading further, he found the answer to the King’s third question ‘What is taller than a mountain?’ in Kural 124.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (124).
The steadfast self-controlled towers aloft Taller than a mountain. If a person can remain polite and humble when he gets power, positions, personal gains, authority, and wealth, the ability to remain polite is considered taller than a mountain.
The Minister, while reading further, found answers to many of his pressing personal and professional problems.
Thirukkural - Management - Helping Others
Help rendered to someone must be timely. If you help a person when he does not need your help, that act is not helping. That is rather interfering. On the contrary, if you help a person when he requests you to help, that act is not help. That is rather sympathy or obligation. A timely help, that is., helping when someone needs your help desperately, though very small, is greater than the world, Kural 102.
Given in time, even a trifling help
Exceeds the earth.
Be sensitive to people and their needs and help them when they need your help.
No comments:
Post a Comment