Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label PersonalityDevelopment_Self_Discipline. Show all posts
Showing posts with label PersonalityDevelopment_Self_Discipline. Show all posts

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்

குறள் 360
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை

வெகுளி சினம்; வெறுப்பு; கபடமற்றவர்.

மயக்கம் - அறிவின்திரிபு; அவித்தை; பிழைபடஉணர்கை; விரகநோய்; மூர்ச்சை; படைப்பில்அலித்தன்மைமுதலியகலப்பு; கூடல்; கலப்பு; எழுத்துப்புணர்ச்சி; சாவுச்சடங்கினுள்ஒன்று; சோம்பேறித்தனம்.

இவை அண்மையிலுள்ள பொருள்களைச் சுட்டு தற்குரியசொல்

மூன்றன் - மூன்று 

நாமம் - திருமண்கட்டி; அச்சம்; நிறைவு; புகழ்; திருமாலின்பன்னிரண்டுபெயர்களைக்கூறிஉடலில்இடும்திருமண்காப்பு; பேர்; தும்பைச்செடி; முள்தராசின்நடு; காண்க:நாரத்தை; பாசி

கெட - கெடுதல் அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

நோய்துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு


முழுப்பொருள்
நாமம் என்ற சொல்லுக்கு பலர் ”பேர்” என்ற அர்த்தத்தைக் கையாண்டு உள்ளனர். இக்குறளில் நாமம் என்ற சொல்லுக்கு நிறைவு என்னும் பொருளே பொருத்தமாக இருக்கும் என்றென்பது எனது கருத்து. அது ஏன் என்று கீழ்காணும் குறளின் பொருளைப்படித்து உணர்ந்தால் புரியும். 

காமம் என்றால் விருப்பு, ஆசை, விழைவு. ஆசைகள், விழைவுகள் நிறைவேறாதப்பொழுது ஏமாற்றங்கள் வருகிறது. அதுவே கோபங்களாக உருமாறுகிறது. கோபம், சினம், வெறுப்பு இருந்தால் பகை பிறக்கிறது. முகத்தில் புன்னகை/சிரிப்பு மறைகிறது மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அழிகிறது. இக்கோபங்கள் அறிவை ஒரு மயக்க நிலையில் சிந்தனையை மேலும் மழுங்கடித்துவிடும். இந்த மயக்க நிலையில் இருக்கும் பொழுது நாம் துன்பத்தில் சிக்கித் தவிக்கிறோம். அதுவே மெய்யினை உணர்ந்து இருந்தால் இம்மூன்றிலும் சிக்கித் துன்பத்தில் தவிக்க மாட்டோம். 

ஆதலால் காமம், வெகுளி (சினம், கோபம்), மயக்கம் ஆகிய மூன்றும் அழிவிற்கான காரணங்கள். இம்மூன்றும் முழுதும் (நிறைவாக) ஒருவரை விட்டு நீங்கினால் அதாவது காமம், வெகுளி, மயக்கம் ஆகியவறை ஒருவர்மனதில் இருந்து முற்றாக அழித்தால் அவரிடம் இருந்து துன்பங்கள் நீங்கும்/அழியும்.

அநாதியாய அவிச்சையும் (அஞ்ஞானம், spiritual ignorance) 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார் - என்று பரிமேலழகர் குறிப்புகளை எடுத்துரைத்துள்ளார். 

இம்மூன்று பகைவர்களைப் பற்றியும் சொல்லிய இலக்கியப்பாடல்கள் ஏராளம். எல்லாவற்றையும் பட்டியலிட்டு மேற்கோளாகச் சொல்லாவிட்டாலும், இதோ சில.

”தருவனத்துள் யானியற்றும் தவவேள்விக் கிடையூறாத்
தவஞ்செய் வோர்கள்
வெருவரச்சென் றடைகாம வெகுளியென” (கம்ப.கையடைப் 10)

“யாம்மேல் உரைத்தப் பொருள்கட்கெல்லாம் 
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத்
தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்
மைத்திரி கருணா முதிதையென் றறிந்து
திருந்துநல் லுணர்வால் செற்றமற் றிடுக
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி யுய்த்து மயக்கம் கடிக” (மணி.30:252-9) என்றே மணிமேகலைக் கூறுகிறது.

“காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்த் 
தேமம் பிடித்திருந்தேனுக்கு” என்கிறது திருமந்திரப்பாடல் (2436).

“காமமும் வெகுளியும் களிப்பும் கைத்தெழு, கோமுனி” (கம்ப.திருஅவதாரப்.48)
“காமம் முதலா முக்குறும்பற வெறிந்த வினை”  (கம்ப.விராதன் 3)
என்று அம்மூன்றையும் குறும்பு என்கிறான் கம்பன்.

“முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம் 
துக்கத்துள் நீக்கிவிடும்” என்கிறது நாலடியார் (190).


“ஐந்தொ டாகிய முப்பகை மருங்கற வகற்றி
உய்ந்து போயினர்” (கம்ப.மந்திரப் 64)

“கொடுநாலொ டிரண்டு குலப்பகை குற்ற மூன்றும்
சுடு ஞானம் வெளிப்பட வுய்த்த துயக்கி லார்போல்” (கம்ப.கடல்தாவு.51)

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகன்
திரிந்த காமம்போல் நஞ்சு பிறிதில்லை


ஒருமுறை காசியில் இருந்து டேராடூன் செல்லும் வழியில் ரயிலில் என்னருகே ஒருவர் அமர்ந்திருந்தார். பழைய அழுக்குக் காவி உடை. தலைப்பாகை. கையில் உடைமை என ஒரு சிறிய பை மட்டுமே. நீண்ட நரைத்த தாடி. தோளில் சரிந்த கூந்தல். இருக்கையில் காலைத் தூக்கிவைத்து அமைதியாக வெளியே நோக்கிக்கொண்டு வந்தார். ஏதோ சாமியார் என நான் நினைத்தேன்.

அன்றெல்லாம் பிரெஞ்சுக்காரரான ஜீன் பால் சார்த்ர் மிகப்பிரபலமான தத்துவ ஆசிரியர். இலக்கியவிமர்சகர், அரசியல்போராளி, நாடக ஆசிரியர் என்னும் நிலைகளில் சார்த்ர் உலகமெங்கும அறியப்பட்டிருந்தார். இருத்தலியம் [Existentialism] என்னும் கோட்பாடு சில அறிஞர்களால் முன்வைக்கப்பட்டு உலகசிந்தனையை உலுக்கிக் கொண்டிருந்த காலம். சார்த்ரின் இருத்தலும் இன்மையும் [Being and Nothingness] என்னும் நூல் அத்தத்துவத்தின் மூலநூலாக கருதப்பட்டது. அக்கொள்கையைச் சார்ந்து எழுதிய காஃப்கா, காம்யூ போன்றவர்கள் இளைஞர்களால் பரபரப்புடன் வாசிக்கப்பட்டனர்

நான் சார்த்ர் எழுதிய நாசியா [Nausea] என்னும் சுயகுறிப்புநூலை வாசித்துக்கொண்டிருந்தேன். சாதாரணமாகத் திரும்பிய அந்தச்சாமியார் அதை கண்டு கைநீட்டினார். நான் தயக்கத்துடன் அதை நீட்டினேன். வாங்கி புரட்டிப்பார்த்துவிட்டு புன்னகையுட்ன் திருப்பித்தந்தர். “Being and nothingness” என்றார். வெடித்துச் சிரித்துக்கொண்டு “Do you know there is a way called nothingness and being?” [ஒன்றுமில்லாமல் இருப்பது என்னும் நிலை ஒன்றுண்டு, தெரியுமா?]

நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். “பாவம் சார்த்ர், நல்ல மனிதர்” என்றார் அவர். நான் கொஞ்சம் எரிச்சலுடன் “அவரைத்தெரியுமா?” என்றேன். “நன்றாகவே தெரியும். நான் சார்போனில் அவரது மாணவனாக இருந்தேன். அவர் வீட்டில்தான் இருப்பேன்” என்றார். என்னால் திகைப்பை மறுக்கமுடியவில்லை. சாமியார்களிடம் பூர்வாசிரமத்தைப்பற்றிக் கேட்பது தவறு என்று தெரியும் என்பதனால் நான் மேலே பேசவில்லை.

அவரே மெலே சொன்னார். “ஒரு கூரியஎண்ணம் நமக்குள் வந்ததும் நாம் பரவசம் அடைகிறோம். நம்முள் அது வந்தது என்பதனாலேயே அது அரியது, மகத்தானது, அதை உலகுக்குச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என பரபரக்கிறோம். ஆகவே கடுமையாக உழைத்து அதை ஒரு கொள்கையாக ஆக்கிக்கொள்கிறோம். அப்படி கொள்கையாக ஆக்கும்தோறும் நாமே அதை நம்புகிறோம். நம் வாழ்க்கையை அப்படி ஆக்கிக்கொள்கிறோம். அது மிகப்பெரிய நடிப்பு. மெல்ல நடிப்பே வாழ்க்கையென்றாகிவிடுகிறது”

“சார்த்ர் நடித்தார் என்கிறீர்களா?” என்றேன். “ஆம். அவரும் அவர் தோழியும் சேர்ந்து நடித்தார்கள். உலகம் கைதட்டியது”. சார்த்ரின் தோழி சிமோங் த பூவா உலகமெங்கும் இன்று பரவியிருக்கும் பெண்ணியச் சிந்தனைகளை உருவாக்கியவர். அவரது இரண்டாம் பாலினம் [The second sex] என்ற நூல் பெண்களின் தன்னுரிமை, விடுதலை, ஆணைச்சாராமல் நின்றிருக்கும் ஆற்றல் ஆகியவற்றை முன்வைப்பது

நான் சீற்றத்துடன் “இருத்தலியலை நீங்கள் நிராகரிக்கலாம், ஆனால் அவர்களை பொய்யானவர்கள் என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்றேன். “அவர்கள் பொய்யானவர்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழவில்லை. தங்கள் கோட்பாடுகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். அதை மட்டுமே சொன்னேன்” என்றார்.

இருத்தலியலை சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம். காலம் எல்லையற்றது. இங்கே நிகழும் அனைத்துமே தற்செயல்கள். இதில் மனிதவாழ்க்கைக்கு என தனியான அர்த்தம் ஏதும் இருக்கமுடியாது. அனைத்து அர்த்தங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவை மட்டுமே. அவற்றை அறியாமல் நம்புபவன் வாழ்க்கையை இயல்பாக வாழ்கிறான். அவற்றின் பொருள் என்ன என்று தேடுபவன் வெறுமையையே சென்றடைகிறான்.

“இங்குள்ள அனைத்தும் வெறுமை அல்ல. நாம் பொருளை அறியவில்லை என்பதனால், அறியமுடியவில்லை என்பதனால் பொருள் இல்லை என்றாவதில்லை” என்றார் அவர். “பொருள் உள்ளது. அதை அறிய வேண்டுமென்றால் நான் என்ற நிலையில் இருந்து அதை அணுகக்கூடாது. சார்த்ர் தேடியது ‘எனக்கான பொருள் என்ன?’ என்ற கேள்விக்கான பதிலை. இதற்கெல்லாம் பொருள் என்ன என்று தேடினால் கண்டுகொள்ளலாம்” என்று அவர் சொன்னார்.

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். “மிகமிக எளிது. ஒரு கூழாங்கல்லை எடுத்துப்பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதை பார்ப்பதற்கான தடையை அகற்றவேண்டும். அது நான் என்னும் எண்ணத்தின் தடை. அதிலிருந்து உருவாகும் காமம் குரோதம் மோகம் ஆகிய மூன்று அழுக்குகளின் பூச்சு. அதைக்களைந்து உண்மையை அறிவதே ஆன்மீகமான பயணம். இத்தனை அலைச்சலும் இத்தனை பயிற்சிகளும் அதற்கே”

“அது என்ன?” என்றேன். “ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்” என்ற உபநிடதவரியை அவர் சொன்னார். [இங்கனைத்திலும் இறை உறைகிறது] ”ஒரு வரியாக மிக எளியது. உண்மையனுபவமாக உணர்வதற்கு தவம் தேவை” அதன்பின் அவர் பேசவில்லை. பேசுவார் என நானும் நெடுநேரம் காத்திருந்தேன். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச்சென்றுவிட்டார். நான் அவர் சென்ற பின் எஞ்சிய வெட்டவெளியை பார்த்துக்கொண்டிருந்தேன். ரயில் நகர்ந்தது

நெடுநாட்களுக்குப்பின் சார்த்ரின் அணுக்கமான மாணவி ஒருத்தி அவரைப்பற்றி ஒரு நூலை எழுதினாள். சார்த்ர் கட்டற்ற காம உணர்ச்சி கொண்டவர் என்றும் அவரது ஆய்வுமாணவிகள் அனைவரிடமும் அவர் உறவுகொண்டிருந்தார் என்றும், அதற்காக கட்டாயப்படுத்தி மன்றாடுவார் என்றும் அவள் சொன்னாள்.

அதைவிட முக்கியமானது அவள் சிமோங் த பூவா பற்றி சொன்னது. ஆணைச்சாராது பெண் வாழவேண்டும் என்று வாதிட்டு அவ்வளவு பெரிய நூலை எழுதிய சிமோங் த பூவா அதன்பொருட்டே சார்த்ரை மணம் செய்துகொள்ளாமல் தோழியாக வாழ்ந்தவர். அவர் உண்மையில் சார்த்ரின் விசுவாசமான மனைவியாகவும், அவரது ஆணைக்குக் கட்டுப்பட்ட அடியாளாகவுமே இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தாள் அம்மாணவி. தன் மாணவிகளையும் பேசி மடக்கி சார்த்ருக்கு பாலியல் தேவைக்காகக் கொண்டுசெல்வது சிமோங் த பூவாவின் வழக்கமாம். பிற மாணவிகளும் அதை உறுதிப்படுத்தினர்

எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. அகங்காரத்தின் மறுபக்கம் காமமே என நான் அதற்குள் எழுதி எழுதிக் கற்றிருந்தேன். அவை மறைத்து நிற்கும் விழிகளால் அப்பாலுள்ள பிரம்மாண்டத்தைக் காணமுடியாது. அதன்பின் செய்யவேண்டியது எதைக் காண்கிறோமோ அதை கோட்பாடாக ஆக்கி வாதிடவேண்டியதுதான். “பாவம் சார்த்ர்” என அந்த சாமியாரை நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டேன்.

“நான் தவம்செய்கிறேன். மெய்மையை பற்றுகிறேன்” என்றான் கௌசிகன். “அரசே, காமத்தை குரோதத்தை மோகத்தை கடந்தவர்களே தவத்தின் முதல்படியில் கால்வைக்கிறார்கள்

ஆக, வாழ்வில் ஒருவர் மெய்மையை நோக்கி தவம் செய்தாலும் சரி அல்லது தனது செயலை ஒரு தவமாக செய்தாலும் சரி, அல்லது ஒரு குறிக்கோளுடன் தவமாக ஒரு செயலை செய்தாலும் சரி காமம்,, குரோதம், மோகம் ஆகியவற்றிற்கு இடம் கொடுக்கல் ஆகாது.

விருப்பங்கள் பற்று வளர்ப்பவை. நீங்கள் வெறுப்பவற்றையும் வைத்துக்கொள்ளவேண்டாம். அவை மும்மடங்கு பற்றை வளர்ப்பவை


சுழற்சிக்கு நடுவே மையம் அசைவின்மை கொண்டிருக்கிறது. ஆழம் அலையின்மையால் இறுகியிருக்கிறது. அப்பாலிருப்பவனே அனைத்தையும் அறிபவனாகிறான். செயல்களுக்குள் செயலற்றிருப்பவனே செயலாற்ற வல்லவன்.

நிலமறைந்து பாயும் சிம்மத்தில், முகக்கை சுழற்றிப் பாயும் களிற்றில், சீறிப்படமெடுக்கும் நாகத்தில் எழுகிறது இப்புவியாளும் பெருவிசை. புரவியின் கால்களில், கழுகின் சிறகில், தவளையின் நாவில் வெளிப்படுகிறது. அது தெய்வங்களுக்குரியது. அதனால் ஆற்றப்படுகின்றன அனைத்துச் செயல்களும். அனைத்து அறங்களும் அதனால் நிலைநிறுத்தப்படுகின்றன.

அவ்விசை உணரப்படுகையில் மானுடருக்குரியவையாகின்றது. காமம் சினம் விழைவு என சொல்கொள்கின்றது. அனைத்தையும் மறைக்கும் திரையாகின்றது. அனைத்தும் தானாகித் தோன்றுவதனூடாக பிறிதெதையும் காட்டாதவையாகின்றது.

ஐம்புலன்களையும் ஆளும் காமமும் சினமும் விழைவும், கால்களும் விழிகளும் அற்றவை. ஆணவமே அவற்றின் ஊர்தி. ஆணவத்தை வென்றவன் அம்மூன்றையும் ஆள்கிறான். காற்றிலா கருவறையில் நிலைகொள்ளும் சுடர் என அகம் கொண்டிருப்பான். அவன் காண்பவை துலங்கும்

முன்பு இலங்கையின் தலைவனாகிய ராவணன் பெருவேள்வி ஒன்றை இயற்றினான். அதில் அவன் தன் செல்வங்கள் அனைத்தையும் ஆகுதியாக்கினான். தன் உறவை, துணையை அவியென அளித்தான். பின்னர் தன் தலைகளை ஒவ்வொன்றாக அறுத்து அனலோம்பினான். காமம், சினம், விழைவு எனும் மூன்று தலைகளை அளித்தான். மறுபக்கத்திலிருந்து கல்வி, புகழ், பற்று என்னும் மூன்று தலைகளை மீண்டும் வெட்டியிட்டான்.

பின்னர் ஆகூழ், போகூழ், அறம் என்னும் மூன்று தலைகளையும் வெட்டி அவியூட்டினான். வேள்விமுழுமை பெறாமை கண்டு திகைத்தபின் தன் பத்தாவது தலையையும் வெட்டி எரிபலி அளித்தான். அந்தத் தலையே தன்னிலை. அது நீங்கிய பின்னரே வேள்வித்தீயில் அவனுக்குரிய தெய்வம் எழுந்தது.

மானுடன் தான் ஆற்றும் செயலை புரிந்துகொள்வது எப்படி? இங்கு வாழ்பவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் காற்றில் சுழலும் காற்றாடிகள்போல செயலாற்றுபவர்கள். அறியாப் பெருவிசைகளுக்கு தங்களை முற்றாகக் கொடுத்துவிட்டவர்கள். மிகச் சிலரே தங்கள் செயல்நோக்கத்தின் தொடக்கத்தை, தங்கள் செயல்விளைவின் நெறியை அறியவிரும்புகிறார்கள். பாய்மரம்போல காற்றுக்கு தங்களை அளித்தாலும் சுக்கானை தாங்களே ஏந்த விழைகிறார்கள். மானுடர் இந்த இருவகையினர் மட்டுமே.


இளைய யாதவர் அவரை நோக்கி புன்னகைத்து “அருமணியை கண்டடைந்தீர்களா?” என்றார். “இல்லை” என்றார் விதுரர். “அது அந்த அறைக்குள்தான் உள்ளது, நீங்கள் விரும்பிப் பயிலும் சுவடிக்கட்டுக்குள்.” விதுரர் திகைப்புடன் “ஆம், நான் கட்டுகளை பிரிக்கவேயில்லை” என்றார். பின்னர் “தேவிஸ்தவத்திற்குள்ளா?” என்றார். “இல்லை, விவாதசந்திரத்திற்குள்” என்றார் இளைய யாதவர். “ஆம், அதற்கும் வாய்ப்புண்டு” என்றார் விதுரர். “தேவிஸ்தவம் பின்னர் நீங்கள் பயின்ற நூல், விதுரரே. தொடக்கம் முதல் உடனிருப்பது லகிமாதேவியின் நூல்தான்.” விதுரர் பெருமூச்சுவிட்டார். “அவ்விரு நூல்களுக்குள் ஆடுவது உங்கள் ஊசல்” என்றார் இளைய யாதவர்.

இளைய யாதவரை சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்த விதுரர் “என் வினாவை நான் எங்கும் சந்திக்கவேயில்லை” என்றார். இளைய யாதவர் “உடல் மண்நீங்குவதற்கு முன்னரே இவ்வுலகில் விழைவாலும் சினத்தாலும் விளையும் விசைகளை தாங்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்பவனே மாறாதனவற்றை அறிய இயலும். அசைவற்ற கலத்திலேயே அமுதத்தை கறந்தளிக்கிறது அப்பசு. தனக்குள் இன்பத்தை அடைந்தவன், ஒளியை தன்னுள் கொண்டவன், வெளியே தேடவேண்டியதில்லை. இருமைகளை வெட்டிவிட்டவன் மட்டுமே இருத்தலுக்கு அப்பால் சென்று எதையேனும் அறியக்கூடும்” என்றார்.


காமம் மோகம் குரோதம். எவராலும் மறைத்துவைக்க இயலாதது. மறைக்க மறைக்க பெருகுவது.


 இளைய யாதவர் “காமகுரோதமோகம் இல்லாத மானுட உள்ளங்களே மெய்மையை அறியமுடியும் என்றால் மெய்மை மானுடருக்கு உரியதே அல்ல” என்றார்.

முகம் சற்றே எளிதாக, ஆம் என விதுரர் தலையசைத்தார். “காமத்தை எவ்வண்ணம் வெல்வீர், விதுரரே?” என்றார் இளைய யாதவர். “அறியேன். முனிவரும் அறியாது தவிக்கும் மாயவெளி அது” என்றார் விதுரர். “குரோதத்தை? மோகத்தை?” என்று இளைய யாதவர் கேட்டார். “அதற்கும் சொல்லப்பட்ட மறுமொழிகளே என்னிடமுள்ளன” என்று விதுரர் சொன்னார். “அன்பால் குரோதத்தை. எளிமையால் மோகத்தை.” இளைய யாதவர் புன்னகைத்து “காமத்தை அடக்கத்தால் என்பர் நூலோர். அமைச்சரே, அவ்வண்ணம் வென்ற எவரையேனும் எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். விதுரர் திகைத்து பின் எண்ணத்திலாழ்ந்து “நான் பார்த்தவர்கள் சிலரே” என்றார்.

“விதுரரே, காமம் கொண்டவர்கள் அனைவருமே அதை அஞ்சுகிறார்கள். அடக்கப்படாத காமம் விலங்குகளுக்கு மட்டுமே இயல்வது. குரோதத்தை நிகர்செய்யவே அன்பை பயில்கிறார்கள் மானுடர். தன்னவர்பால் அன்பையும் அல்லவரிடம் சினத்தையும் கொள்பவர் எளியோர். எதிரிகளிடமும் அன்பை கொள்கிறார்கள் அறத்தோர். மோகத்தை வெல்ல எளிமையில் அமைகிறார்கள் தவத்தோர். காமமும் சினமும் விழைவும் அனைத்து மானுட உள்ளங்களிலும் இருபால்பிரிவு கொண்டே அமைந்துள்ளன. இரு முனைகளும் பூசலிடுகின்றன. அல்லது ஒன்றின் வாலை பிறிதொன்று விழுங்கி சுற்றிவருகின்றன.”

“இருபாற்பிரிவு கொண்ட நெஞ்சில் அமைதி என்பதே இல்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “அறிக, காமமோ சினமோ விழைவோ துயரளிப்பதில்லை! அதை தடையின்றி அடையும் விலங்குகள் தெய்வத்துயரையும் உலகத்துயரையும் மட்டுமே அடைகின்றன. அவை எவ்வுயிரும் தவிர்க்கவியலாதவை. மானுடத்துயர் என்பது காமமும் சினமும் விழைவும் நிகர்விசைகளால் எதிர்கொள்ளப்படும்போது உருவாகும் கொந்தளிப்பே. குற்றவுணர்வாக, குழப்பமாக, கொந்தளிப்பாக, சோர்வாக அது மானுடரை அலைக்கழிக்கிறது.”

ஆம் என விதுரர் தலையசைத்தார். “இருமையொழிதலே அந்தத் துயரிலிருந்து விடுபடச்செய்யும். காமம் அடக்கம் என்னும் இருமையிலிருந்து, சினம் அன்பு என்னும் இருமையிலிருந்து, விழைவு துறப்பு என்னும் இருமையிலிருந்து எழுவதொன்றே மீளும் வழியாகும். ஒளிநாடுபவனே இருளை சென்றடைகிறான். இருளும் ஒளியும் அற்றதை, இருளும் ஒளியும் ஒன்றானதை நாடுக! அதுவே அறிவின் வழி.”

“அறிதொறும் தீமையை கண்டேன் என்றீர் விதுரரே, நீங்கள் கண்டது இருமையை. நீங்கள் கண்ட ஒவ்வொன்றிலும் தீமையிடம் தோற்றுச் சுருங்கி அமர்ந்திருந்தது நன்மை. ஏனென்றால் உங்களுக்குள் இருந்தது அதே இருமை. இருமையழிந்த அறிவே அறிவெனப்படும். இருமையில் எழுவன அனைத்தும் அறிவின்மையே” என்றார் இளைய யாதவர். “நோக்குக, அஸ்தினபுரியின் அந்த எளிய அமைச்சரை!”

...............
..............
இளைய யாதவர் “விதுரரே, இதனால் நீங்கள் அந்த அருமணிமேல் கொண்ட பற்றை இழந்துவிட்டீர்கள் என்று பொருளா? நாளை மீண்டும் அதன்பொருட்டு சினம் கொள்ளமாட்டீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்றார். விதுரர் “இல்லை, இது ஓர் அலை. இது அந்தச் சினத்தின் மறுபக்கம். இதன் மறுபக்கமென மீண்டும் பிறிதொரு சினமே எழும்” என்றார். “இங்கிருந்து மட்டுமே அதை காணமுடியும், அமைச்சரே” என்று சொல்லி இளைய யாதவர் புன்னகை செய்தார். “இது ஒரு கணம். ஒரு துளியை நதியென நீட்டுவதைப்போல் இதை காலமென்றாக்குபவரே மெய்யறிதலை பெறுகிறார்.”

“நான் இவற்றை அறிந்துகொண்டேன்” என்றார் விதுரர். அதிலிருந்த உட்பொருளை உணர்ந்து இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆம், அறிதலைப்போல் எளிது வேறில்லை. ஓரிரு சொற்றொடர்களில் சொல்லிமுடிக்கத்தக்கவையே மெய்மையென மானுடம் அறிந்த அனைத்தும். மெய்யுணர்தலும் மெய்யிலமைதலுமே யோகம். யோகமென்பது ஒவ்வொரு கணமும் என, ஒவ்வொரு எண்ணத்தாலும் என பயிலப்படவேண்டியது. ஒவ்வொருவரும் எதில் உளம் ஈடுபட்டிருக்கிறார்களோ அதையே யோகமென்று பயில்வதே தொடக்கம். முழுமைநோக்கிய இலக்குடன் பயில்வன அனைத்தும் யோகமே” என்றார் இளைய யாதவர்.

அறிதலின் மாயங்களில் சிக்கி அலைக்கழிபவன் அறிஞன். நான் அறிகிறேன் என்னும் மயக்கம் அறிதலனைத்தையும் அறிபவனில் கோக்கிறது. அறிவனைத்தையும் அவன் இயல்புக்கேற்ப உருமாற்றுகிறது. அறிபவன் தன்னையே மீளமீள அறியும் சுழலில் சிக்கவைக்கிறது. அறிவது தானென்பதனால் அவ்வினிமையை அறிதலின் இனிமையென எண்ணச் செய்கிறது. தானற்ற ஒன்றை அறியமுடியாதவனாக ஆக்குகிறது. அறிவை அறிவின்மை என ஆக்கி விளையாடுகிறது.

அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது. கலமென்று சமைந்து கவிந்தவற்றை தள்ளிவிடுகிறது. அறியப்படுவன அனைத்தும் அறிந்தவற்றால் தொடங்கிவைக்கப்படுபவையாகின்றன. அறிவனவற்றை மதிப்பிட அறிந்தவற்றால் இயலுமென்பது அறிதலின் மயக்கம். வென்றவை அனைத்தையும் தன் கோட்டைக்குள் கொண்டுவரும் அரசன் கோட்டை ஒன்றையே உண்மையில் வென்றிருக்கிறான்.

அறிதலின் நெறிகளை அறிதலினூடாக வகுக்க முயல்வதனால் அறிதல்களின் பொதுமைகள் மட்டும் கருத்தில்கொள்ளப்படுகின்றன. பொதுமையே மெய்மை என்பது மயக்கம். நெறிகள் அனைத்தும் தொகுப்புத்தன்மை கொண்டவை. தொகுப்புச்செயல் சாரம் தேடுவது. சாரமென மட்டும் மெய்மை வெளிப்படுவதில்லை. தொகுப்புகள் அனைத்தும் தொகுப்பவனிடம் ஆணைபெற்றுக்கொள்பவை. நெறிகளின் திசைவழி தொடங்கிய இடத்தையே சுற்றிவந்துசேரும் வளைகோடு. நெறிகள் அறிதல்களை ஏற்றும் மறுத்தும் பகுக்கின்றன. இரண்டென்றானவை தங்களுக்குள் ஆடத் தொடங்கிவிடுகின்றன.

அறிவின் முழுமை அதன் முடிவில் உள்ளது என்னும் மயக்கம் அறிவதனைத்தையும் அறியப்படாத ஒன்றைக்கொண்டு மதிப்பிடச் செய்கிறது. மறுத்து மறுத்து முன்னேறுபவன் சென்றடைவதில்லை. ஏற்று ஏற்று சென்றடைபவன் வழியில் நின்றுவிடுகிறான். ஏற்பும் மறுப்பும் இரு நிலை. அதை கடத்தலே யோகம்.

ஒன்றுபிறிதுடன் சொல்லாடுமென்றால் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று பிறிதுடன் இணையுமென்றாலும் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று தன்னை முழுமையென்று காட்டுமென்றாலும் அது அறிவல்ல. கன்று முலையை அறிவதுபோல் நிகழ்வதே அறிதல். ஆன்மா உடலை அடைவதுபோல் ஆதலே அறிவு.

அறிதலை அறியவியலும் என்னும் மயக்கம் அறிதலை ஓர் ஆடலென்றாக்குகிறது. அடைந்தவற்றில் மகிழ்வும் அடைவன குறித்த எதிர்பார்ப்பும் தவறுவன குறித்த பதற்றமும் அறிதலை மறைக்கின்றன. அறிதலில் வெற்றிதோல்வி இல்லை. நல்லது அல்லது என்றில்லை.

எவரும் உடல்வளர்வதை உணர்வதில்லை. ஆற்றும் செயல்கள் அனைத்தையும் அறிதலென்றாக்கியவன் தன்னுணர்வின்றி அறிவடைந்து அறிவிலமைந்துகொண்டிருக்கிறான். அறிதலென்பது ஆதல். அறிந்த பின்னரும் அறிந்ததென்ன என்று அறியாதிருத்தல். அறிவென்று தனித்து ஒன்றை கொண்டோர் அறிவை அடையாதவர்.

புறத்தே அறியும் அறிதல்களனைத்தும் தொடக்கமும் முடிவும் கொண்டவை. அறிவமைந்தவன் அவற்றில் களிப்புறுவதில்லை. ஒவ்வொரு அறிதலும் ஒரு முழுமை. ஒவ்வொரு அறிதல்கணமும் ஒரு வாழ்வு. ஒன்று பிறிதல்ல. ஒன்றிலிருந்து பிறிதும் இல்லை. ஒவ்வொன்றிலும் திகழ்பவன் முழுமையிலிருந்து முழுமைக்கு செல்பவன். அவன் முழுமையில் இருக்கிறான். முழுமையே அறிவெனப்படும்.


பரிமேலழகர் உரை
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட - ஞான யோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான், நோய் கெடும் - அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா. (அநாதியாய அவிச்சையும் 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிவு. 'நோய்' சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கொடுத்தார் காரியமாகிய வினைகளைச்செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இலவாதல் மெய்உணர்வின்பயன் ஆகலின், இவை இரண்டுபாட்டும்இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே என்பது பெற்றாம்.).

மணக்குடவர் உரை
ஆசையும் வெகுளியும் மயக்கமு மென்னும் இவை மூன்றினது நாமம்போக வினைபோம். வினைகெடுதற்கு வழி இதுவென்று கூறுதலான் இது மெய்யுணர்தலாயிற்று.

மு.வரதராசனார் உரை
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

சாலமன் பாப்பையா உரை
விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Kural 360 warns us of the three diseases of the mind that damage the name and fame of a person and bring disgrace to him.

Where lust, wrath and delusion are
Sorrow shall not be.

The diseases are: 1) Lust, 2) Anger, and 3) Indulgence. Mental disease one is lust. Lustful thoughts interfere with one's lofty thoughts. Lust is a pleasure principle. Pleasure principle prevents a person from pleasant and possibility thoughts. Mental disease two is anger.

Anger does twofold damage. Anger destroys the holder and damages the receiver of it. It is known that anger is a letter short of danger.

The third mental disease is self- indulgence. Self-indulgence with respect to mind and body makes one blind to consequences.  The word binge, means over indulging or overeating, is an often- used word in today's health counseling.

There is no suffering for a person, if a person can protect himself from all these three diseases. Enormous self-control is required to keep these diseases away. However, the efforts to prevent negative consequences  are worth the efforts.

English Meaning - As I taught a kid - Rajesh
Desire, anger, illusion that comes from being lethargic rather being alert/conscious in understanding the reality are 3 qualities that are like diseases. They lead to downfall of a person, kills him/his life, and prevents him from attaining his/her goal and even moksha. Hence, one should stay away from them. 

Questions that I ask to the kid
What are the 3 things that are considered as disease and prevent us from attaining Moksha?

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

குறள் 139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயாற் சொலல்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

உடையவர்க்கு - உடையர் - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள்

உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.

ஒல்லாவே - பொருந்தாத ; உடன்படாத; தகாத; 

தீய - தீமையான; போலியான.

வழுக்கியும் - வழுக்குதல் - சறுக்குதல்; தவறுசெய்தல்; தப்புதல்; மறத்தல்; அசைதல்; ஒழிதல்; அடித்தல்; மோதுதல்.

வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு.

வாயால் - வாயினால் 

சொலல் - சொல்ல மாட்டார்கள் 

முழுப்பொருள்
ஒழுக்கத்தை பேணுபவர் பொருந்தாத (ஒழுக்கத்தின் தகுதிக்கு பொருந்தாத) தீய சொற்களை தவறியும் (சறுக்கியும், மறந்தும், வழுக்கியும்) தன் வாயால் கூற மாட்டார். தன் சிந்தனையில் இருப்பதே வாயில் வரும். ஆதலால் சிந்தையில் கூட தீயவற்றை பழக மாட்டார்கள்.

ஆதலால் நாம் நமது குடும்பங்களில் நல்லவற்றையும் நற்சொற்களை மட்டும் பேசுவதை ஒரு பண்பாடாக (வழக்கமாக) பேணவேண்டும். இனிய சொற்கள் இருக்கும் பொழுது ஏன் இனிமை இல்லாத சொற்களை பேசுகிறாய் என்று வள்ளுவர் முன்னமே நம்மை கேட்டுள்ளார். 

தீச்சொல் என்பது பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் பொய், ஒருவரைப்பற்றிய கோள்சொல், கடுஞ்சொல், வீண்சொல் போன்றவை. கேட்ட வார்த்தைகளும் பொருந்தும்.

இனியவை நாற்பது, “ஆக்கம் அழியினும் அல்லவை கூறா தேர்ச்சியின் தேர்வினிய தில்” என்று வளமே அழியினும் வன்சொல் சொல்லாதிருக்கும் தேர்ச்சியினைவிட உயர்ந்த தேர்வும் இனியதும் இல்லை என்கிறது.

"பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன்" என்று தசரதனை பற்றி கம்பர் இராமாயணத்தில் கூறுகிறார். அதாவது பொய்யான சொற்களைப் போற்றாத உண்மை மொழிகளைப் போற்றும் தயரதன் (/தசரதன்) என்று பொருள்.

கம்பராமாயணத்தில் இருந்து ஒரு உதாரணம் 
=============================================
கைகேயி பெற்ற வரத்தால், இராமன் காடு செல்ல வேண்டி இருந்தது. அதைக் கேட்ட  இலக்குவன் கோபம் கொண்டு மிகையையாகப் பேசுகிறான். நிதானம் தவறி பேசுகிறான்.

'சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின்
வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!
அதாவது சிங்கம் தன் குட்டிக்கு ஊட்டும் இரையை நாய் தன் குட்டிக்கு ஊட்டுவது போல பரதனுக்கு நாடு கொடுக்க விரும்பினாளே கைகேயி என்று இலக்குவன் கோபத்தில் பேசுகிறான். 

ராமன் இப்படி பதில் சொல்கிறான் 
"விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்"
ஊழ்வினை (விதி) செலுத்தத்தாயும் தந்தையும் அவ்வினையின் கருவியாக இருந்து செயல்பட்டனரேஅன்றி அவர்களாக நம்மேல் பகை கொண்டு செய்தாரில்லை. மழைநீர்  வரத்து இன்மையால் சிலகாலம் ஆற்றில் நீர் வற்றுவது போல்வினைவலியால் பெற்றோர் அன்பின்மை  உடையார் போலத் தோன்றுவர், அவ்வளவேஎன்றானாம். மூவரையும்  தாயர் என ஒப்பக் கருதல் பற்றிக் ‘கைகேயியைப் பயந்து நமைப்புரந்தாள்’ என்றான் இராமன்.                

அதுத்தபடியாக 
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க,
'கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்,
விதிக்கும் விதி ஆகும், என் வில் - தொழில் காண்டி' என்றான்.

அதாவது விதியால் விளைந்தது என இராமன் சொல்ல, அந்த விதியையும் மாற்ற வல்ல விதி  என்வில் என்றான் இலக்குவன். துடிக்கின்ற  மனத்தை ஆற்ற முடியாமல் திணறுகிறேன் என்ற அவதியைமுதலில் வெளிப்படுத்துகிறான்; பின்னர் இதற்கு  ஏதாவது  முடிவு கண்டால்தான் என்மனம் ஆறும் என்பதாகப் பேசுகிறான்.

அப்போது இராமன் சொல்கிறான்,

"வேதம் படித்த வாயால்" இப்படி பேசலாமா என்று.

வேதத்தைப் படித்தாலே போதும், வாழ்வில் நிதானம் வந்து விடும். வார்த்தையில்  கனிவு இருக்கும். பணிவு இருக்கும்.

அதாவது, படித்த பின் அதன் படி நடக்க நினைப்பவர்களுக்கு அப்படி நிகழும்.
ஆய்தந்து, அவன் அவ் உரை  கூறலும், ‘ஐய! நின்தன்
வாய் தந்தன கூறுதியோ  மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?’

அவன் - இலக்குவன்;  ஆய்தந்து - ஆராய்ந்து;  அவ் உரை கூறலும் -அந்தச் சொற்களைச் சொன்ன அளவில் (இராமன் அவனை நோக்கி);  ‘ஐய! - தம்பி;  மறை தந்த நாவால் - வேதங்களைச் சொன்ன நாக்கினால்;  நின்தன் வாய்தந்தனகூறுதியோ? -  உன் வாயில் வந்தவைகளைக் கூறுகின்றாயோ, நீ தந்தது - நீஇப்பொழுது (உன் வாயால்) தந்த சொல்; நெறியோர்கண் நிலாதது அன்றே? -நல்நெறியில் நடப்பவர்கள் இடத்தில் நிற்கத்தகாத சொல் அல்லவா; ஈன்ற தாய் தந்தை என்றால் - (உன் கருத்திற்கு  மாயாக நடப்பவர்) பெற்ற தாயும் தந்தையும் ஆனால்;  அவர் மேல் சலிக்கின்றது - அவரிடத்தில் கோபிப்பது; என்னோ?’ -  எப்படிப்பொருந்தும்.

வேதத்தைக் கற்றுணர்ந்த இலக்குமணன்  ‘அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்’ என்றுஅறிந்துள்ளவன்.  ஆகவே,  அன்னைக்கும்
தந்தைக்கும் மாறாக வாய்தந்த வார்த்தைகளைப் பேசுதல்நெறியற்றோர்
செயலாகும்  என்பது  இராமன் சொல்லியதாகும்.         

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.).

மணக்குடவர் உரை 
தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்க முடையார்க்கு இயலாது.

மு.வரதராசனார் உரை
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

சாலமன் பாப்பையா உரை
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

Thirukkural - Management - Personality Development - Self Discipline
A self-disciplined person never speaks ill of others. He never resorts to meaningless, hurtful, unsuitable, and uncivilized words even unconsciously, that is., by mistake or by chance, confirms Kural 139.

Man of good conduct cannot speak ill
Even forgetfully.

A self-disciplined person is extremely conscious of what he says that there is no chance for slip of the tongue or slip of the mind.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும்

குறள் 354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
ஒன்பதாம்உயிரெழுத்து; முன்னிலையொருமைவிகுதி; சாரியை; தொழிற்பெயர்விகுதி; பண்புப்பெயர்விகுதி; வியப்பிடைச்சொல்; இரண்டாம்வேற்றுமைஉருபு; அழகு; கோழை; இருமல்; இளிஎன்னும்இசையின்எழுத்து; யானையைப்பாகரதட்டும்ஓசை; தலைவன்; கணவன்; ஆசான்; அரசன்; தந்தை; கடவுள்; அம்பு; நுண்மை; ஐந்து; ஐயம்; கடுகு; சருக்கரை.

ஐ - ஐயம்சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர்.

உணர்வு - அறிவு; தெளிவு துயில்நீங்குகை; கற்றுணர்கை; ஒழிவு ஆன்மா புலன்

எய்தியக் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

கண்ணும்  கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).  
கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.)

பயம் - அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை.  (வீடு பேறு பயவாமையின் பயம் எனப்பட்டது)

இன்றே - இல்லை 

மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து.

உணர்வுஅறிவு; தெளிவு துயில்நீங்குகை; கற்றுணர்கை; ஒழிவு ஆன்மா புலன்

இல்லாதவர்க்கு - இல்லாதவர் . 

முழுப்பொருள்
ஐந்து புலன்களையும் கடந்து ஒருவர் இருத்தல் என்பது மிக கடினமான ஒன்றாகும். ஆனால் உண்மையை உணரும் தன்மை இல்லாவிட்டால் ஐந்து புலன்களையும் கடந்தும் பயனில்லை. அதாவது பலர் கடமைகளில் இருந்து தப்பிக்க துறவு வாழ்க்கையை மேற்கொள்வர். அவ்வாறு கடைப்பிடிப்பதனால் ஒரு பயனுமில்லை. உயர்பொருளாம் இறைப்பொருளே உண்மையென உணர்வது, நிலையாமையை உணர்வது, பிறந்திறக்கும் பிறப்பின்மை என்பதை உண்மை என உணரவில்லை என்றால் ஐம்புலன்களை கடந்தும் பலனில்லை. 

பொறிபுலன்களுக்கு அப்பாற்பட்டு அந்தக்கரணங்களையும் கடந்து நிற்பவனாய் யோகிகளின் மெய்யுணர்வுக்கே புலப்படுபவனாய் உள்ளவன் பரம்பொருள் என்பதை, சுமந்திரனுக்கு இராமர் கூறுவதாகக்கூறும் கம்ப இராமாயணப் தைலமாட்டு (27) பாடலின் பகுதி இது:
அடக்கும் ஐம் பொறியொடு கரணத்து அப்புறம்
கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான்

அப்பொருளையே, “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றும் வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே பாடினார்.

“ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே” (சம்பந்தர்.தென்குடித் திட்டை6)

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு. (ஐந்தாகிய உணர்வு : மனம் , அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.

மு.வரதராசனார் உரை:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Self-discipline helps us gain self-control.

Prevention of wrong doings, delaying impulsive decisions, and overcoming personal shortcomings are possible with self-discipline. Valluvar teaches us the importance of self-realization, wisdom or higher consciousness  through Kural 354.

Where the sense of the Real is lacking, 
The other five senses are useless.

Even if a person has control over all the five senses — seeing, hearing, smelling, tasting, and touching — just the control over those senses without proper self- realization will not help him achieve greater things in life. Self-realization, wisdom or higher consciousness is more important than mere control of senses.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்

குறள் 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் 
தேரினும் அஃதே துணை
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]

பொருள்
பரிதல் - பற்றுவைத்தல்; காதல்கொள்ளுதல்; இரங்குதல்; சார்பாகப்பேசுதல்; வருந்துதல்; பிரிதல்; அறுதல்; முறிதல்; அழிதல்; ஓடுதல்; வெளிப்படுதல்; அஞ்சுதல்; வருந்திக்காத்தல்; பகுத்தறிதல்; அறிதல்; அறுத்தல்; அழித்தல்; நீங்குதல்; கடத்தல்; உதிர்த்தல்; வாங்கிக்கொள்ளுதல்.

பரிந்து - முழு மனதுடன் அன்புடன் ஏற்று செய்தல்

ஓம்பிக் - ஓம்புதல் - ōmpu-   5 v. [T. ōmu, K. ōvū,M. ōmbu.] tr. 1. To protect, guard, defend,save; பாதுகாத்தல் குடிபுறங் காத்தோம்பி (குறள்,549). 2. To preserve; to keep in mind; to cherish, nourish; பேணுதல் ஈற்றியாமை தன்பார்ப்போம்பவும் (பொருந. 186). 3. To remove, separate; to keep off; to ward off; தீதுவாராமற்காத்தல். 4. To dispel; பரிகரித்தல் எனைத்துங்குறுகுத லோம்பல் (குறள், 820). 5. To maintain,support; to cause to increase; to bring up;வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 6.To consider, discriminate; சீர்தூக்குதல் ஓம்பாவீகையும் (பு. வெ 9, 1). 7. To concentrate themind; மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குறள், 132). 8. To clutch or grasp tightly, as a miser; இவறுதல் பெற்றேமென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626).


காக்க - காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch; காவல்செய்தல். சிறைகாக்குங்காப்பெவன் செய்யும் (குறள், 57). 3. To restrain,ward off, prevent, guard against; தடுத்தல் செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் (குறள், 301). 4.To observe, as a vow, a fast, a time of pollution;அனுஷ்டித்தல். அவள் நோன்பு காத்தாள். 5. Torescue, safe-guard; தீமை வரவொட்டாமல் தடுத்தல் கண்ணினைக் காக்கின்ற இமையிற்காத்தனர் (கம்பரா.வேள்வி. 41).--intr. To wait for; எதிர்பார்த்தல் அவனுக்காகக் காத்திருந்தான்.

ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

தெரிந்து - தெரிந்து வினையாடல் - அமைச்சர் முதலாயினார் செய்யவல்ல செயல்களை ஆராய்ந்து அவற்றின் கண்ணே அவரை ஆளும் திறம்.
ஓம்பித் - ஓம்புதல்

தேர் - tēr   n. prob. தேர்²-. 1. [T. Tu. tēru,K. M. tēr.] Car, chariot; இரதம் கடலோடாகால்வ னெடுந்தேர் (குறள், 496). 2. A vehicle.See கொல்லாவண்டி 3. Boy's small car; சிறுதேர் புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற்கண்டே (அகநா. 16). 4. The 4th nakṣatra. Seeஉரோகிணி. (சூடா.) 5. Mirage; கானல் யானையிலங்குதேர்க் கோடு நெடுமலை (கலித். 24).

தேர் - tēr   தேரு, II. v. t. examine, investigate, ஆராய்; 2. discriminate, know, அறி; 3. consider, deliberate, யோசி; 4. say, tell, சொல்லு; v. i. be well versed or proficient in, பயில்.

தேரினும் - தேர்ச்சியுடன் பயின்றாலும்

அஃதே  - அஃதாவது
துணை - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).


முழுப்பொருள்
ஒழுக்கம் என்பது உலகம் ஓம்பிய நெறி. மனிதர்களுக்கு உயர்ச்சி தரும் நெறி, நன்னடத்தை என்பது நாம் அறிவோம்.  ஒருவனுக்கு நல்லொழுக்கம் என்பது விதைக்கு பாய்ச்சும் நல்ல பசுமையான நீரைப் போன்றது ஆகும். நீரின் தன்மை விதைக்குள் சென்று வளர்ந்து நல்ல மரமாக வளரும். அதுப்போல் நல்ல குணங்கள் பழக்கவழக்கங்கள் நன்னடத்தைகள் ஒருவருள் வளர்ந்து உயர்ச்சி தரும். அறம் தனை நிலைநாட்ட உதவும். துன்பமான நேரங்களிலும் தவறான பாதையில் செல்வது தவறு என்று நம்மை அதில் இருந்து விலக்கி நல்வழியில் செலுத்தும் நல் ஒழுக்கம்.  இறுதியில் பல தடைகள் வந்தாலும் இன்பமே பயக்கும்.

அத்தகைய நன்னடத்தையை பின்பற்ற வகுக்கபட்ட நெறிகளை ஒருவர் பல நூல்களில் (உதாரணமாக திருக்குறள், ஆத்திச்சூடி, திருவாசகம், திருமந்திரம், நாலடியார், பெரியபுராணம், திருவருட்பா, திருமுறை, தேவாரம்) இருந்து ஆழமாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் தெரிந்து கொள்வதனால் மட்டும் என்ன பயன்? ஒன்றுமில்லை. நாம் கற்ற அறங்களை ஒழுக்கங்களை முழு மனதுடன் பரிவுடன் ஏற்று நன்மை தீமைகளை பகுத்தறிந்து முடிவு எடுத்து, அவ்வொழுக்கத்தை காதலித்து, அதற்காக தன்னை வருத்திக் காத்தால் தான், ஒழுக்கம் நமக்கு அரணாக இருக்கும்.

இங்கே திருவள்ளுவர் தெரிந்து என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அவ்வார்த்தைக்கு வெறுமென தெரிந்துக்கொள்ளுதல் என்ற அளவில் மட்டுமே பொருளை அகராதியில் காண்கிறோம். [ஒருவேளை அறிந்து என்று போட்டு இருந்தால் வேறு அர்த்தம் வரும். ஏன் என்றால் அறிந்து என்ற சொல்லுக்கு பயிலுதல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் "61 - பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற" என்று மற்றொரு குறளில் அழகாக கூறியிருப்பார்].

மேலும்: அஷோக் உரை

“இளையோனே, நெறியென்றால் என்னவென்று எண்ணுகின்றாய்? நன்றென நாம் உணரும் ஒன்றின் பொருட்டு எப்போது வேண்டுமானாலும் சுருட்டி வைத்துக் கொள்ளத்தக்க பட்டாடையா அது?” என்றார். “அது மணிமுடியல்ல, காலணி. முள்ளும் கல்லும் நிறைந்த பாதையில்தான் காலில் இருந்தாக வேண்டும்.”

பரிமேலழகர் உரை
ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க - ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க, தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இவற்றுள் இருமைக்கும். துணையாவது யாது? எனது மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். ('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால். இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை
எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.

பொருள்: பரிந்து ஓம்பி ஒழுக்கம் காக்க - (ஒருவன்) வருந்திப் பேணி ஒழுக்கத்தைக் காக்கக் கடவன் ; தெரிந்து ஓம்பி தேரினும் அஃதே துணை - (தனக்குத்) துணையானவற்றை யயல்லாம்) அறிந்து பேணி ஆராயினும் ஒழுக்கமே (தனக்குத் ) துணை (யாகலான்).

கருத்து: ஒருவனுக்கு நல்லொழுக்கமே ‘பொன்றுங்கால் பொன்றாத் துணை’.

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Even if a person learns from all  the scriptures and excels in the demonstration of his knowledge of them, only self-discipline remains as supreme in his life, confirms Kural 132.

Guard your conduct with care; studies won't give
A surer aid.

There are many educated failures. Education alone is not adequate to have a balanced personality. Therefore, there is a need to put in special efforts to cultivate self-discipline. The process of learning to be self-disciplined may be demanding but the outcomes of that will be more fruitful. There are examples of people who achieved excellence just because of self-discipline.


இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
தெய்வங்கள் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன. மனிதன் ஒழுக்கந்தவறினால் தெய்வத்தின் சீற்றத்துக்கு ஆளாவான். வேறு யாரிடமிருந்து மறைத்தாலும் தெய்வங்களிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. ஒழுக்கத்துக்குத் தெய்வம் வருணன். வருணன் மனிதனுடைய செயல்களை எவ்வளவு தூரம் கவனிக்கின்றான் என்பதை உணர்த்துவதற்காகப் போலும் சூரியனையே வருணனுடைய கண்ணாக வேதத்திலே பல இடங்களில் கூறப்பட்டுள்ளது

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்

குறள் 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
நன்றிக்கு - நற்பயனுக்கு, அறத்திற்கு
வித்து - மரஞ் செடி கொடிகள் முளைக்கக் காரணமாயிருக்கும் விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம்.
வித்து ஆகும் - விதை யாகும் (நன்மை மரஞ் செடி கொடி போன்றதாகும். சில விதைகள் (உதாரணமாக மூங்கில்) முளைக்க பல நாட்கள்/வருடங்கள் ஆகும்
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பிய நெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.
நல் ஒழுக்கம் - நல்ல நன்னடத்தை
தீ ஒழுக்கம் - தீய நடத்தை, தீய பண்புகள்
என்றும் - என்றுமே, எக்காலத்திலும்
இடும்பை - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம்.
இடும்பை தரும் - துன்பத்தை/ தீமை/ நோய்/ வறுமை/ அச்சம் தனையே தரும்

முழுப்பொருள்
ஒருவனுக்கு நல்லொழுக்கம் என்பது விதைக்கு பாய்ச்சும் நல்ல பசுமையான நீரைப் போன்றது ஆகும். நீரின் தன்மை விதைக்குள் சென்று வளர்ந்து நல்ல மரமாக வளரும். அதுப்போல் நல்ல குணங்கள் பழக்கவழக்கங்கள் நன்னடத்தைகள் ஒருவருள் வளர்ந்து உயர்ச்சி தரும். அறம் தனை நிலைநாட்ட உதவும். துன்பமான நேரங்களிலும் தவறான பாதையில் செல்வது தவறு என்று நம்மை அதில் இருந்து விலக்கி நல்வழியில் செலுத்தும் நல் ஒழுக்கம்.  இறுதியில் பல தடைகள் வந்தாலும் இன்பமே பயக்கும். 

ஆக இறுதியில் நன்மை பயத்தமைக்காகவும் வழியில் தவறான பாதையில் இருந்து தடுத்தமைக்காகவும் ஒழுக்கத்திற்கு நாம் நன்றியே சொல்லுவோம். [நன்றிக்கு நன்மை என்ற பொருளும் உண்டு]

ஆனால் தீய பண்புகள் தீய குணங்கள் தீய நடத்தைகள் தீய நட்புகள் நமக்கு நல்லது செய்யாது. கேடான நீரை விளைச்சலுக்கு பாய்ச்சினால் செழுமையாக செடிகள் வளராது. சிறிது நாட்களில் துவண்டுவிடும். மடிந்துவிடும். அதுப்போல தீய பழக்கங்கள் நமக்கு தீமையே தரும். சிலர் சில தீய பழக்கங்களை ரகசியமாக கொள்வர். அவர்களுக்கு மட்டுமே தெரியும். அது தனக்கு உடனே தீமை பயக்காவிட்டாலும் நெடுங்காலத்தில் தீமை பயக்கும். அதற்கும் திருவள்ளுவர் கூறியுள்ளார் தன்நெஞ்சே தன்னைச் சுடும் [குறள் 293: தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்].  

இங்கே திருவள்ளுவர் வித்து என்று சொல்லி இருக்கிறார். ஏன் என்றால் குழந்தை பருவத்தில் இருந்தே நல் எண்ணங்களை வித்திடுதல் வேண்டும். அதனுடைய பலன் நல்ல மரமாக வளரும். ஆனால் மரமாக வளர்ந்தப்பின் மரத்தின் தன்மையை மாற்றவே முடியாது. முடிந்தாலும் மிக மிக கடினம். செடிகளை பிடுங்கிநடலாம். மரங்களை எளிதில் பிடுங்கிநட்டுவிடமுடியாது. மண் அத்தனை வல்லமை மிக்கது.  உதாரணமாக நாம் இளமையில் உடற்பயிற்சி செய்யாவிட்டாலோ, நல்ல உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கா விட்டாலோ அதனை மாற்றுவது எவ்வளவு சிரமமாக உள்ளது. 

இவ்வொழுக்கம் என்பது எல்லாவற்றிற்கும் பொருந்தும். பேசும் சொல், வாழும் முறை, உண்ணும் உணவு, செல்வம் ஈட்டுவது, அறம் செய்வது, நிர்வாகம் செய்வது, நட்பு வைத்துக்கொள்வது என்று எல்லாவற்றிலும் ஒழுக்கம் வேண்டும்.

”விதைகறதெல்லாம் தப்பாம மொளக்கும்” என்பதை நினைவில் கொள்க. ஆதலால், நல்லொழுக்கத்தை வித்திடல் அவசியம் ஏனெனில் தீயொழுக்கத்தை விதைத்து துன்பத்தை அறுவடை செய்வவேண்டாதிருக்க

பொதுவழக்கில் வழங்கும் தொல்மொழி “விரையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?” என்பதாம். “பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்” என்றது அதனால்தான். ஆத்திச்சூடியில் ஒளவையாரும் கூறியுள்ளார் நன்மை கடைப்பிடி, நேர்பட ஒழுகு, தீவினை அகற்று, சீர்மை மறவேல், கீழ்மை அகற்று, உத்தமனாய் இரு, மோகத்தை முனி என்று.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.

தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் - ஒருவனுக்கு நல்லொழுக்கம் நன்மைக்குக் கரணியமாய் இருமையிலும் இன்பந்தரும் ; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீயவொழுக்கம் எக்காலும் துன்பமே தரும் .

மறுமையில் விளையும் இன்பத்திற்கு இம்மையில் ஒழுகும் நல்லொழுக்கம் வித்துப்போன்றிருத்தலால் , 'வித்தாகும்' என்றார் . தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் என்பதால் , நல்லொழுக்கம் இம்மையிலும் இன்பந்தருதல் பெற்றாம் .

மு.வ உரை
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்

சாலமன் பாப்பையா உரை
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: நல் ஒழுக்கம் நன்றுக்கு வித்து ஆகும் - நல்ல நடக்கை இன்பத்திற்குக் காரண மாகும்; தீ ஒழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய நடக்கை எஞ்ஞான்றும் துன்பம் தரும்.

அகலம்: நன்று என்பது இன்பம் எனப் பொருள் தருதலானும், எதுகை நயம் பயத்தலானும், முன் உரையாசிரியர்கள் பாடம், ‘நன்றிக்கு’.

கருத்து: நல்லொழுக்கம் இன்பத்தையும் தீ யயாழுக்கம் துன்பத் தையும் தரும்.

தி.பொ.ச. உரை
நன்மை என்னும் பயிர் விளைய நல்லொழுக்கம் என்னும் நல்லநீரைப் பாய்ச்ச வேண்டும். மாறாக, தீயொழுக்கம் என்ற கெட்டநீரைப் பாய்ச்சினால் கேடு எனும் பயிரே என்றும் விளையும். ( இங்கு வித்து = நீர். ' வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? ' ஆய்வுக் கட்டுரை காண்க. பயிர்களுக்கு நாம் பாய்ச்சும் நீரின் தன்மையைப் பொறுத்தே பயிரின் விளைச்சல் அமைகிறது என்பதை அறிவோம். நல்லநீரைப் பாய்ச்சாமல் கெட்ட நீரைப் பாய்ச்சினால் பயிர்கள் கெட்டு மடிந்து விளைச்சலற்றுப் போகும் என்பதையே கேடு விளையும் என்கிறார். இங்கு ஒழுக்கத்தினை நீருடன் ஒப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமாகவே படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டுமே ஒழுகும் தன்மை உடையவை என்பதுடன் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளவும் வல்லவை. ) 

Thirukkural - Management - Personality Development - Self Discipline
Self-discipline leads to all beneficial outcomes in one's life. Beneficial outcomes include health, happiness, harmony, and professional success. Kural 138 affirms that a self-disciplined person will be grateful because of his positive habits.

Good conduct sows good, and from bad springs
Eternal trouble

Positive habit is possible as a person becomes grateful when he achieves significant success. Achieving significant success is possible with positive habits. Whereas, lack of self-discipline leads to a long lasting misery. Happiness and misery are the products of positive and negative habits respectively. Let us remember Aristotle's thought, “Excellence is not an act. It is a habit.”

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

English Meaning - As I taught a kid - Rajesh
Good discipline will be the seed to good results. Whereas bad habits and indiscipline will always lead to difficulties in life. 

Questions that I ask to the kid
What is the seed for good results? What does indiscipline lead to ?
What gives you difficulties all the time?
Why indiscipline leads to difficulties? (indiscipline->distractions->unfocus->unproductivity->no wealth->difficulties)

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

குறள் 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்.
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

விழுப்பம் - சிறப்பு; நன்மை; குலம்; இடும்பை.

தரலான் - தருதல் - Giving, கொடை

ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உயிரினும் - உயிரை விட

ஓம்பப் - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
உயிரைவிட சிறந்தது ஒழுக்கம்
இவ்வுலகிலே விலைமதிப்பில்லாதது உயிர். அவரவர் அவரவர் உயிருக்கு விலை இல்லை என்றே கூறுவர். உலகிலேயே மிக உயர்ந்த பொருள் எது என்று கேட்டால் யாரும் தயங்காமல் சொல்லும் பதில் அவர்களுடைய உயிர் தான்.

உயிரைவிட சிறந்த பொருள் ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.  அது தான் ஒழுக்கம். உயிர் போனால் வராது. ஒழுக்கமும் போனால் வராது. 

உயிர் போன பின் நமக்கு வலி இல்லை. ஒரு வேளை போகும் போது வலிக்கலாம். ஆனால் ஒழுக்கம் போன பின்பும் நாம் வாழ வேண்டி இருக்கும். அது மிகுந்த வேதனையை தரும். உயிர்ப் பிரிந்து விட்டால் மற்றவர் நம்மக்காக அழுவார்கள். ஆனால் ஒழுக்கம் பிரிந்து விட்டால் நமக்கு நாமே அழுவோம். எனவே, ஒழுக்கம் உயிரினும் மேலானாதாகக் கருதப்படும். 

ஒழுக்கம் சிறப்பை தரும். உயிர் சிறப்பை தராது. எத்தனையோ பேர் உயிரோடு இருக்கிறார்கள். யாருக்குத் தெரியும்? உயிரோடு இருப்பவனெல்லாம் உயர்ந்தவனல்ல. ஒழுக்கத்தோடு இருப்பவன் தான் உயர்ந்தவன் என்று சொல்வதற்க்காக தான் உயிரினும் ஒம்பப் படும் என்கிறார். 

ஒழுக்கம் விழுப்பம் தரலாம்
ஒழுக்கம் விழுப்பம் தரலாம். அதற்கு மூன்று பொருள்கள் உண்டு. ஒன்று சிறந்தது, நன்மை, இடும்பை.

முதலாவதாக விழுப்பம் என்றால் இடும்பை என்று எடுத்துக்கொள்வோம். ஒழுக்கத்தை பின்பற்றுவதால் சில துன்பங்களை சிறிய காலத்திற்கு நாம் அனுபவிக்க நேரிடும். அதாவது ஒழுக்கம் உனக்கு துன்பத்தை தரலாம்(தரக்கூடும்). உதாரணமாக சில அசௌகர்யங்கள். ஆயினும் ஒழுக்கத்தை பேணு. ஏனெனில் வாழ்வில் ஒழுக்கமே உனக்கு சிறப்பைத் தரும்.

ஒழுக்கத்தை பின்பற்றுவதால் உனக்கு உலகியல் நன்மை கிடைக்காமல் போகலாம். ஆனால் நீ ஒழுக்கத்தை பின்பற்றினால் உனக்கு தீங்கு நேராது. 

விழுப்பம் என்றால் சிறந்தது, உயர்ந்தது என்று பொருள். 
 
வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப்” என்பார் மணிவாசகர். வேதத்தின் சிறந்த பொருள் அவன் என்ற அர்த்தத்தில். (முழுப் பாடலும் கீழே) 

ஒழுக்கம் சிறப்பை தரும். உயிர் சிறப்பை தராது.

உயிரினும் ஓம்பப்படும்
உயிர் இருக்கும் வரை தான் நமக்கு பேர், வணக்கம், மரியாதை எல்லாம். உயிர் போய் விட்டால் "பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு " என்று பட்டினத்தார் கூறியது போல நாம் பிணம். ஆனால் ஒழுக்கத்தோடு இருந்தால், உயிர் போன பின்னும், நம் பேர் நிலைத்து நிற்கும். வாழும் காலம் மட்டும் அல்ல, அதற்கு பின்னும் நமக்கு சிறப்பை தருவதால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் 

வேதம் ஓதுவதனால் மட்டும் நீ சிறந்தவன் ஆகிவிட மாட்டாய். உன் ஒழுக்கம் கெடுகின்ற சூழ்நிலையிலே நீ ஒழுக்கத்துடன் இருந்தால் உனக்கு நன்மை கிடைக்கும். இல்லை என்றால் உன் பிறப்பே சந்தேகத்திற்கு உள்ளாகும்.

வீடு தீபிடித்துக் கொண்டால், போட்டது போட்டபடி உயிரை காத்துக் கொள்ள வெளியே ஓடுவோம். உயிரை விட எதுவும் பெரியது அல்ல. எனவே, மற்றவை போனாலும் பரவாயில்லை, உயிரை காத்துக் கொள்ள ஓடுகிறோம்.

உயிரா ஒழுக்கமா என்ற கேள்வி வந்தால்? வள்ளுவர் விடை தருகிறார். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 

ஓம்புதல் என்றால் பாதுகாத்தல். உயிரை பாதுகாக்க வேண்டும். உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியதால், அதைவிட கவனமாக, உயிரை விட கவனமாக ஒழுக்கத்தை காக்க வேண்டும்.

சரி. ஏன் ஒழுக்கம்?
ஒழுக்கம் ஏன் முக்கியம் என்று இதுவரை பார்த்தோம். அதனால் நாம் பெறக்கூடிய சிறப்பை எல்லாம் பார்த்தோம். இன்னும் சற்று ஆழமாக பார்ப்போம். 

நமது உடல், மனம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. (Our body and mind are connected. One and the same). அவற்றை ஒழுங்குடன் வைத்துக்கொண்டால் நாம் விரும்பியவற்றை எல்லாம் பெறமுடியும். 

உடலை ஒழுங்குடன் வைத்துக்கொள்வது என்றால் சீராக சுவாசிப்பது (பிராணாயமம் மட்டும் அல்ல. பொதுவாகவே சீராக ஆழமாக சுவாசிப்பது (Deep Diaphragmatic breathing), உடற்பயிற்சி செய்வது, சுறுசுறுப்பாக இயங்குவது, ஆரோக்கியமான உணவுகளை சமச்சீராக சாப்பிடுவது, நிதாணமாக ஆழ்ந்து சாப்பிடுவது, வயிற்றில் உள்ள நுண்கிருமிகளை சமச்சீராக வைத்துக்கொள்வது (There number of microbiomes in your stomach is more than the number of cells (which is trillion cells) in your body. Your brain starts from your gut. You are what you eat. Hence, keep the microbiome healthy and balanced. Do not take much antibiotics. Don't eat much processed foods which has lot of preservatives that kills the bacteria), நன்கு உறங்குவது என்று பலவற்றை கூறலாம். 

மனதை ஒழுங்குடன் வைத்துக்கொள்வது என்றால் நமது எண்ணங்களை சிந்தனைகளை ஒழுங்குடன் வைத்துக்கொள்வதாகும். எண்ணங்கள் ஒழுங்காக இருந்தால் நமது உணர்ச்சிகளும் சீராக இருக்கும். எண்ணங்களும், உணர்ச்சிகளும் சீராக இருந்தால், நமது ஆக்க சக்தியும் சீராக இருக்கும். நமது குறிக்கொள்களுக்கு செயல்களுக்கு ஒத்துழைக்கும். 

இவ்வாறு உடலையும் மனதையும் ஒழுங்குடன் வைத்துக்கொண்டால், கல்பவிருக்ஷம் மரம் நாம் விரும்பியவற்றை எல்லாம் தருவதுப்போல் நாமும் நாம் விரும்பியவற்றை எல்லாம் பெறலாம். 

பதஞ்சலி யோகாவில், ஒரு நல்ல ஒழுங்குடன் கூடிய மனதை கல்பவிருக்ஷம் மரம் (விரும்பியவற்றை தரும்) மனம் என்றுகூறுவர். நமது உடலையும், மனதையும், உணர்ச்சிகளையும், ஆக்கசக்தியையும் சீர் செய்து ஒழுங்குடன் வைத்து ஒரு திசையில் செலுத்தினால், நாம் இவ்வுலகில் அடைக்கூடிய பல நன்மைகள் மிக உயர்ந்தது.  [In Yoga, a well-established mind is referred to as a Kalpavriksha or a “wishing tree.” Sadhguru explains that if you organize your body, mind, emotions and energy in one direction, your ability to create and manifest will be phenomenal.]

அதனால் தான் ஒழுக்கம் சிறந்தது. உயிரவிட பேணவேண்டியது.



மைந்தனுடன் தனித்துலாவுகையில் “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படவேண்டும், மைந்தா” என்றார். “மானுடர் எவரும் ஒழுக்கத்தின்பொருட்டு கணந்தோறும் உள்ளத்துடன் போரிட்டாகவேண்டும். சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் நம் ஒழுக்கத்துடன் ஆட விடாய்கொண்டுள்ளன. இனியமலர்கள், நறுமணங்கள், தென்றல், வண்ணங்கள், ஒளிகள் அனைத்தும் பிறழ்க பிறழ்க என்றே நம் உள்ளத்திடம் ஆழமாக சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆண்கள் தங்கள் விழைவால் வழிதவறுகிறார்கள். கன்னியர் தங்கள் ஆணவத்தால், அன்னையர் தங்கள் அன்பால் வழிபிழைக்கிறார்கள். அழகர்கள் பிறர் விழைவால் பிறழ்வுகொள்கிறார்கள். மைந்தா, ஒழுக்கம் என்பது அறத்திற்குக் கொண்டுசெல்லும் பாதை. ஒழுக்கத்தில் மாறாதிரு. உன் மதிப்பால் உவகையே கொள்முதல் செய்யப்படும்.”

எழுத்தாளர் ஜெயமோகன் உரை (பெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள் - சுட்டியை தட்டவும்)
அறம் வேறு ஒழுக்கம் வேறு என்ற புரிதல் நமக்குத்தேவை. மானுடகுலத்தை உருவாக்கும் சில மாறா அடிப்படைகள்தான் அறம் என்று சொல்லப்படுகின்றன. எளியோனை வலியோன் அழித்தல் கூடாது என்ற அறத்தின் அடிப்படையில்தான் சமூகமே உள்ளது. அதைப்போல பல அறங்கள் உள்ளன. உண்மை, கருணை, சமத்துவம் போன்று பல அறங்களால் ஆனது நம் வாழ்க்கை.

ஒழுக்கம் என்பது அறத்தின் அடிப்படையில் அமைந்திருக்கையில் அது நல்லொழுக்கம். அறமீறலை நிகழ்த்தும் என்றால் அது தீய ஒழுக்கம். இவ்வாறே ஒழுக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு பாலியல்போக்கு என்பது பிறரை ஏமாற்றுவதாகவோ, சுரண்டுவதாகவோ அமையுமென்றால் அதை ஒழுக்கமின்மை என்று கொள்ளலாம்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்ற குறள் ஒழுக்கத்தின் நோக்கத்தைச் சொல்கிறது. அது மேலான வாழ்க்கையை அளிக்கிறது. ஒரு செயல்பாடு விழுப்பம் அளிக்குமென்றால் அது ஒழுக்கமே ஆகும்.

ஜெ


நேற்றைய ஒழுக்கங்கள் ; இன்றைய ஒழுக்கங்கள்
நாம் பொதுவாக இன்று பேசுவது நேற்றைய ஒழுக்கங்கள். நமது முன்னோர் பின்பற்றிய ஒழுக்கங்கள். ஆனால், இன்றைய ஒழுக்கங்களை நாம் பேசுவது மிக குறைவு. இன்றை ஒழுக்கங்களில், வாகன போக்குவரத்து விதிகளை பின்பற்றுதலில் தொடங்கி, நாம் எத்தனை மணி நேரம் அலைபேசியில் நேரத்தை செலவிடுகிறோம், நாம் ஒரு நாளை/நேரத்தை எவ்வாறு திட்டமிடுகிறோம், ஆழ்ந்த செயல் (deep work) புரிவது, செயல்களில் தீவிரமாக செயல்படுவது என்று பல தளங்களில் ஒழுக்கத்தைப் பற்றி பேசலாம் பின்பற்றலாம்.

திருவெம்பாவை பாடல் 
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

(திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார் )

ஒப்புமை
1. ஒழுக்கினும் குலத்தினும் விழுப்ப மிக்கமை (பெருங். 3.22:36)
2. ஒன்றுரைத் துயிரினும் ஒழுக்கம் நன்றெனப்
பொன்றில புரவலன் பொருவில் சேனையே (கம்ப.கிளைகண்டு.24)
3. அறநெறிச்சாரம் இதே கருத்தை இவ்வாறு வலியுறுத்துகிறது.
தானத்தில் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தில் மிக்க உசாத்துணையும் – மான
மழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை
பழியாமல் வாழும் திறம்

மேலும்: அஷோக் உரை




பரிமேலழகர் உரை
[அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல்.இது, மெய்ம்முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது ஆகலின் , அடக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். 'உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.).

மணக்குடவர் உரை
ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும். இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை
ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் (தன்னை யுடையார்க்கு) மேன்மையைத் தருதலால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - ஒழுக்கத்தை (த் தமது) உயிரினும் (மிகப்) பேண வேண்டும்.

அகலம்: பரிமேலழகர் பாடம் ‘தரலான்’. மற்றை நால்வர் பாடம் ‘தரலால்’.

கருத்து: தன் உயிரைக் காத்தலினும் மேலாக ஒருவன் தன் ஒழுக்கத்தைக் காக்கக் கடவன்.

Kalpavriskha - The Wishing Tree [Inner Engineering - Sadhguru Jaggi Vasudev]
Kalpavriksha - Lit. a wishing tree. In yoga, a well-established mind is referred to as a kalpavriksha

The reason why success comes so easily and naturally for one person, and is a struggle for someone else, is essentially this: one person has organized his or her mind to think the way he wants, and another thinks against his or her own interests.

A well-established human mind is referred to as a kalpavriksha, or a wishing tree that grants any boon. With such a mind, whatever you ask for becomes a reality. All you need to do is to develop the mind to a point where it becomes a wishing tree, rather than a source of madness. A mind that can manifest whatever it chooses is described in yoga as being in a state of samyukti. This is a skillfulness that arises out of equanimity.

Once your thoughts get organized, your emotions will also get organized. Gradually, your energies and body get organized in the same direction as well. However, the order in which you address these dimensions could vary, depending on what you are ready for. Considering the realities of the day, most people are not ready for any system unless they are first intellectually convinced of it. Eventually, once your thoughts, emotions, body, and energy are channeled in one direction, your ability to create and manifest what you want is incredible

Today modern science is proving that this whole existence is just a reverberation of energy, an endless vibration. Thoughts too are a reverberation. If you generate a powerful thought and let it out, it will always manifest itself.

For this to happen, it is important that you do not impede and weaken your thought by creating negative and self-defeating thought patterns. Generally, people use faith as a means to banish negative thoughts. Once you become a thinking human being, however, doubts invariably surface. The way your mind is made, if God appears right here this moment, you will not surrender to him or her. Instead, you will want to conduct an investigation to find out whether this is the genuine article or not.

There is an alternative to faith, which is commitment. If you simply commit yourself to creating what you really care for, now once again your thoughts get organized in such a way that there are no hurdles. Your thoughts flow freely toward what you want, and once this happens, the manifestation of your desire is a natural consequence.

To create what you really care for, your desire must first be well manifested in your mind. Is that what you really want? Think this through carefully. How many times in your life have you thought, “This is it.” The moment you got there you realized that was not it at all! So, first explore what it is that you really want. Once that is clear and you are committed to creating it, you generate a continuous process of thought in that direction. When you maintain a steady stream of thought without changing direction, it will manifest as a reality in your life.

There are yogic processes by which you can touch another dimension of intelligence, unsullied by memory, called chitta, which we have mentioned earlier. Realizing the power of chitta is called chit shakti, a simple and powerful process through which you can access the very source of creation within you.

நன்றி: செல்வி மஞ்சரி (Star Vijay - தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு)
ஒழுக்கமுடைமை தான் மனிதர்களுக்கு உடைமை.
எது ஒழுக்கம் ? கடைசி வரை தன் கைத்தடியைப் போல தன் கொள்கையையும் வலையாமல் வைத்திருந்தாரே காந்தி - அது ஒழுக்கம். பாரதியின் பாட்டு ஒழுக்கம்; பாரதியுன் பார்வை ஒழுக்கம்; பாரதியுன் மீசைக் கூட ஒழுக்கம். தன் கரைப் படாத சட்டைப் போல் கடைசிவரை தன் கரங்களையும் கரைப் படாமல் வைத்திருந்தாரே காமராசர். அவர் ஒழுகியது ஒழுக்கம். 

அதனால் தான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என்றார் திருவள்ளுவர்.
ஏன் ஒழுக்கத்திற்கு உவமையாக உயிரனை சொன்னார் திருவள்ளுவர் ?

உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும். அதாவது, உலகத்தில் உயிர்த் தான் சிறந்தது என்று எண்ணிக்கொண்டு இருக்கின்ற மனிதர்களே! இதைக் காட்டிலும் சிறந்தது ஒன்று இருக்கின்றதடா. அது தான் ஒழுக்கம்.

உயிர் சென்று விட்டால் உயிர் மறுபடியும் வரும். ஆனால் ஒழுக்கம் சென்று விட்டால் மறுபடியும் வராது. உயிர்ப் பிரிந்து விட்டால் மற்றவர் நம்மக்காக அழுவாரகள். ஆனால் ஒழுக்கம் பிரிந்து விட்டால் நமக்கு நாமே அழுவோம்

உயிர் போன பின் நமக்கு வலி இல்லை. ஒரு வேளை போகும் போது வலிக்கலாம். ஆனால் ஒழுக்கம் போன பின்பும் நாம் வாழ வேண்டி இருக்கும். அது மிகுந்த வேதனையை தரும். எனவே, ஒழுக்கம் உயிரினும் மேலானாதாகக் கருதப்படும். 

உயிரோடு இருப்பவனெல்லாம் உயர்ந்தவனல்ல. ஒழுக்கத்தோடு இருப்பவன் தான் உயர்ந்தவன் என்று சொல்வதற்க்காக தான் உயிரினும் ஒம்பப் படும் என்கிறார். வேதம் ஓதுவதனால் மட்டும் நீ சிறந்தவன் ஆகிவிட மாட்டாய். உன் ஒழுக்கம் கெடுகின்ற சூழ்நிலையிலே நீ ஒழுக்கத்துடன் இருந்தால் ஒழுக்கம் உயிரினிம் ஒம்பப் படும். உன் பிறப்பே சந்தேகத்திற்கு உள்ளாகும்.


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

தில்லை மறையோர் சிவசமயம் சார்ந்து ஒழுகி
இம்மையே சாரூபம் எய்தினார் நல்ல
ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.                       

தில்லை மறையோர் ---  தில்லை வாழ் அந்தணர்கள்.  இவ் அந்தணர்கள் தத்தமக்கு விதிக்கப்பட்ட நெறியில் ஒழுகியதோடு, இறைவழிபாட்டில் நின்றார்கள். இவர்கள் இம்மையிலேயே சிவசாரூபம் எய்தினமை, திருஞானசம்பந்தப் பெருமானுக்கு இவர்கள் சிவகணங்களாகத் தோன்றியமையினால் விளங்கும்.

அண்டத்து இறைவர் அருளால், அணிதில்லை
முண்டத் திருநீற்று மூவாயிர வர்களும்
தொண்டத் தகைமைக் கணநாதராய்த் தோன்றக்
கண்டு, அப்பரிசு பெரும்பாணனார்க்கும் காட்டினார்.

எனச் சேக்கிழார் பெருமான் பாடி உள்ளதை அறிக.

அடுத்ததாக, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

பழுக்கும் பழமொழி பார், ஒழுக்கம் விழுப்பம் தரலால்,
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று உரைப்பர், நெஞ்சே!
செழிக்குந் திருப்புல்லை மால்பதத்து அன்பில் திருந்துவையேல்
இழுக்கம் இல்லாமை ஒழுக்கம் விழுப்பம் எல்லாம் தருமே.

உலகில் சிறந்து விளங்கும் பழமொழியான திருக்குறள், ஒழுக்கம் சிறப்பைத் தருதலால், அந்த ஒழுக்கமானது உயிரினும் மேலானதாகப் பாதுக்காக்கப்படும் என்று வழங்குவதாகச் சொலவர். எனவே, நெஞ்சமே! சிறந்த நிலையில் விளங்கும் திருமாலின் திருவடிகளில் அன்பு பொருந்தி இருப்பாயானால், கீழ்மை ஏதும் இல்லாதபடிக்கு, அந்த ஒழுக்கமானது மேன்மை எல்லாவற்றையும் தரும்.

பழுக்கும் பழமொழி - சிறந்து விளங்கும் பழமொழியாகிய திருக்குறள். மால் பதத்தன்பில் - திருமாலின் திருவடி அன்பில்.  திருந்துவையேல் - பொருந்தி நிற்பாயானால்.  இழுக்கமில்லாமை - கீழ்மைத்தனமில்லாமை. விழுப்பம் - மேன்மை.
                                                              
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
  
விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே. 
--- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

`உண்மையான கல்வியும், கேள்வியும், ஞானச் செய்தியும் யாவை` என்று ஒருவனது உள்ளம் ஓர்கின்ற காலத்து, அது பிழைபட்டுப் பொய்ம்மையில் விழாதிருப்பின், சிவபெருமான் அவனுக்குத் தடையின்றிக் காலம் கடந்த பொருளாய் வெளிப்பட்டு நிற்பன்.

குறிப்புரை :  வழுக்கி விழுதலாவது, பொய்யை மெய்யெனத் துணிதல்.  மெய்ம்மையான கல்வி கேள்வி ஞானச் செய்திகளை உடையார் காலத்தானும், இடத்தானும் வரையறுக்கப்படாத இறை நிறைவை எய்துவர்` என்றது. இதனால், மயக்க நூலைக் கற்றலும், மயக்க உரைகளைக் கேட்டலும், அவற்றின்வழி அறிந்த நெறியின் நிற்றலும் ஆகாமை கூறப்பட்டது.

தானத்தின் மிக்க தருமமும், தக்கார்க்கு
ஞானத்தின் மிக்க உசாத்துணையும் --- மானம்
அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை,
பழியாமல் வாழும் திறம்.               
--- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

தானத்தின் மிக்க தருமமும் --- உயர்ந்தோரை நாடி அவர்க்கு வேண்டுவன உதவுதலைக் காட்டினும் சிறந்த அறமும், தக்கார்க்கு --- பெரியோர்க்கு, ஞானத்தின் மிக்க --- அறிவைக் காட்டிலும் சிறந்த, உசாத்துணையும் --- ஆராயுந் துணைவனும், மானம் அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் --- பெருமை கெடாத ஒழுக்கத்தைக் காட்டிலும் சிறந்த நல்லொழுக்கமும், இல்லை ---இல்லை, பழியாமல் வாழுந் திறம் --- இம்மூன்றும் பிறர் பழியாமல் வாழ்வதற்கேற்ற செயல்களாகும்.

பிறப்பு, நெடுவாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக்கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோயின்மை,
இலக்கணத்தால் இவ்எட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்.               
 --  ஆசாரக் கோவை.

இதன் பதவுரை ---

என்றும் --- எப்பொழுதும், ஒழுக்கம் பிழையாதவர் --- ஒழுக்கத்தில் தவறாதவர், பிறப்பு --- நற்குடிப்பிறப்பு, நெடு வாழ்க்கை --- நீண்ட வாழ்நாள், செல்வம் --- பொருட் செல்வம், வனப்பு --- அழகுடைமை, நிலக்கிழமை --- நிலத்திற்கு உரிமை, மீக்கூற்றம் --- சொல்லின் மேன்மை, கல்வி --- படிப்பு, நோய் இன்மை --- பிணியில்லாமை, இ எட்டும் --- இந்த எட்டு வகையினையும், இலக்கணத்தால் --- அவற்றிற்குரிய இலக்கணங்களுடன், எய்துப --- அடைவர்.

நற்குடிப் பிறப்பு, நெடிய வாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்கு உரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டினையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல் ஓழுகுவார். ஒழுக்கம் தவறாதவர்கள் மேற்கூறிய எட்டு வகையையும் எய்துவர்.

திருஒக்கும் தீதில் ஒழுக்கம், பெரிய
அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல், --- பிறனைக்
கொலை ஒக்கும் கொண்டுகண் மாறல், புலைஒக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.
                                ---  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

தீது இல் ஒழுக்கம் திரு ஒக்கும் --- தீமை கலவாத நல்லொழுக்கம் செல்வத்தை ஒக்கும்; ஆற்றின் ஒழுகல் பெரிய அறன் ஒக்கும் --- நெறிமுறைப்படி ஒழுகுதல் சிறந்த அறச் செய்கையோடு ஒக்கும்; பிறனைக் கொண்டு கண் மாறல் கொலை ஒக்கும் --- பிறனொருவனை நட்பாகக் கொண்டு, பின்பு அந் நட்பு மாறிப் புறங் கூறுதல், அவனைக் கொலை செய்தலைப் போன்றதாகும்; போற்றாதார் முன்னர் செலவு புலை ஒக்கும் --- தம்மை மதியாதாரிடத்தில் சென்று ஒன்றை விரும்புதல், இழி தகைமையை ஒப்பதாகும்.

நல்லொழுக்கம் செல்வம் போன்றது; பிறரைப் புறங்கூறல் அவரைக் கொலைசெய்தல் போல்வதாம்; தம்மை மதியாரைத் தாம் மதித்தல் இழிதகைமையாகும்.

கண்மாறல் : ஒரு சொல்; கருத்து மாறலென்பது பொருள்.

வன் தெறு பாலையை மருதம் ஆம் எனச்
சென்றது; சித்திரவடம் சேர்த்ததால் -
ஒன்ற உரைத்து, ‘உயிரினம் ஒழுக்கம் நன்று’ எனப்
பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே.  
    ---  கம்பராமாயணம், திருவடி சூட்டு படலம்.

இதன் பதவுரை ---

‘உயிரினம் ஒழுக்கம் நன்று என ஒன்று உரைத்து --- உயிரை விட நல்லொழுக்கமே சிறந்து விளங்குவது எனக் கருதிச் சத்தியம் ஒன்றையே உரைத்து; பொன்றிய புரவலன் --- உயிர்விட்ட சக்கரவர்த்தியாகிய தயரதனது; பொரு இல் சேனை --- ஒப்பற்ற சேனையானது; வன்தெறு பாலையை --- கொடிய அழிக்கவல்ல பாலை நிலத்தை; மருதம் ஆம் எனச் சென்றது --- (முன் கூறியவாறு  நீரும் நிழலும் பெற்றுக் குளிர்ந்தமையால் மருதநிலம் ஆகும் என்று கருதி எளிதாகக் கடந்து சென்று;) சித்திரகூடம் சேர்ந்தது --- சித்திரகூட மலையை அடைந்தது.     பாலை மருதமாயினது. யானைகளின் மதநீர்ப் பெருக்கால் வழி வழுக்கிச் சேறானதாலும், மன்னர் குடை நிழலால் குளிர்ச்சி ஆனதாலும் ஆம் என மேற் கூறினார்.



Thirukkural - Management - Personality Development - Self Discipline
Self-discipline is the best discipline according to Kural 131. Self-discipline is important as it brings a person name, fame, health, and greater achievements. Therefore, self-discipline must be considered greater than one's life and preserved for greater achievements.

Right Conduct leads to excellence, and
So Must be guarded above life.

Self-discipline helps us gain self-control.

இந்திய தத்துவ ஞானம் (லட்சுமனன்)
ஒழுக்கத்துக்கு முதன்மை
ஒழுக்கத்தைப் பாதுகாப்பதே வருணன் எனப்படும் தெய்வத்தின் கடமை என்பதையும், தெய்வங்களுக்கு வருணன் வழங்கப்பட்ட முதன்மையையும் வேதம் கூறுவதாக அறிவோம்.  இதிலிருந்தே, வேதங்களிலே ஒழுக்கம் எவ்வளவு முக்கியமாகக் கருதப்பட்டதென்பதும் புலனாகும். வேதங்கள் மனிதனுடைய கடமைகளை ஐந்தாகப் பிரித்துள்ளன. தெய்வம், ஞானிகள், பிதிரர், உடன் வாழும் ஏனைய மனிதர் ஆகிய நான்கு பகுதியினருக்குமட்டுமின்றிப் பிராணிகளுக்கும் தன்னால் ஆவன செய்ய ஒவ்வொரு மனிதனும் கடமைப்பட்டுள்ளான் என்பது வேதவாக்கு. “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்க ஐம்புலத்தா றோம்பல்தலை” என் வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்பிடத்தக்கது. பிதிர்கள், தெய்வம், விருந்தினர், உறவினர், தான் ஆகிய ஐவருக்கும் செய்ய வேண்டிய கடமையைக் செய்வது ஒருவனுக்கு அறம் என்பதே இக்குறளின் கருத்து. வேதங்களும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றன. குறளும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. வேதமும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றது. அவற்றுள் தென்புளத்தார் தெய்வம் விருந்து ஆகிய மூவரையும் பேண வேணுமென்பது இரண்டுக்கும் பொதுவாயுள்ளது. ஆனால், குறள் ஒருவன் தன்னையும் தன் உறவினரையும் பேணவேணுமெனக் கூரியதற்கும் பதிலாக, வேதங்கள் ஞானிகளையும், மக்கலாலாத ஏனைய பிராணிகளையும் பேணுவது ஒருவனுக்கு அறம் எனக் கூறியிருப்பது ஒப்பிடத்தக்கது. ஒருவன் தன்னைப் பேணுவதை ஓர் அறமாக வேதங்கள் கருதாதது இங்குச் சிந்திக்கத்தக்கது. தன்னைப் பேணுவது பிறரைப் பேணுவதற்குத் தான் நிலைக்களனாய் நின்று பயன்படும் பொருட்டே. எனவே, தன்னைப் பேணுவதும் ஒரு அறமாகுமென வாதாடலாம். எனினும், சுயநலமின்மையே எல்லாவற்றுள்ளும் தலையாய அறமாக வேதங்கள் பேசுவதை இங்குக் குறிப்பிடல் வேண்டும். சதபத பிராமணத்தில் ஒருவன் தனக்குரிய எல்லாவற்றையும் தியாகம் செய்தலே வீடுபேற்றுக்கு வழி எனக் கூறப்பட்டுள்ளது. சுயநலமின்மை, தியாகம் ஆகிய இவற்றோடு சேர்த்து அன்பையும் விருந்தோம்பலையும் மிக முக்கியமான அறங்களாக வேதங்கள் பேசுகின்றன. சூதாடல், பிறன்மனை விழைதல், பொய் பேசுதல் ஆகியவற்றைப் பெரும்பாவங்களாக வேதங்கள் கண்டிக்கின்றன. 


இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
”செல்வத்தைப் புறக்கணிக்க வேண்டா. வந்த விருந்தினரைத் தெய்வமாகக் கருது. உனக்காக மட்டும் உணவு உண்டாக்கினால் போதாது. நாட்டுக்குப் பயன்படுமாறு உணவு ஏராளமாக உண்டாக்கு. பொருள் உண்டாக்குவது உனக்காக அல்ல. மற்றவர்களுக்காக. எவருக்கும் இடமில்லை என்று சொல்லாதிருப்பாயாக. இதுவே ஒழுக்கம்” இவை உபநிடதங்களிலே காணப்படும் உபதேசங்களுக்குச் சில உதாரணங்கள்

சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

English Meaning - As I taught a kid - Rajesh
Consistent Discipline will yield you all good things in life. At the same time, it could be difficult. Yet, discipline must be protected more than one's life. Because one is not disciplined he himself will regret for it and would be like a dead corpse making the living very difficult. Living a life with regrets about mistakes/indiscipline is much more painful than death

Questions that I ask to the kid
What is protected more than life? Why?
Why discipline should be protected more than life?