Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label PublicSpeaking_Counseling. Show all posts
Showing posts with label PublicSpeaking_Counseling. Show all posts

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

 

குறள் 646
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்
[பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை]

பொருள்  
வேட்பத் - வேட்பு - விருப்பம்
வேட்கை - பற்றுள்ளம்; காமவிருப்பம்

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

சொல்லி - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்

பிறர்  - அயலார், அன்னியர்

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

கோடல் - கொள்ளுகை; பாடம்கேட்கை; மனத்துக்கொள்ளுகை; வளைவு; முறித்தல்; வெண்காந்தள்.

மாட்சியின் - மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அற்றார் - இல்லாதவர்; பொருள்இல்லாதவர்; முனிவர்; 

கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி.

முழுப்பொருள் 
நாம் பிறரிடம் பேசும்பொழுது மற்றவர் அதை விரும்பி கேட்குமளவிற்கு நமது பேச்சு (சுவாரஸ்யமாகவும் செறிவாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும்) இருத்தல் வேண்டும். நமது பேச்சு பிறருக்கு சலிக்கவோ, அயர்ச்சி உண்டுப்பன்னவோ, முகசுலிப்போ ஏற்படுத்தக்கூடாது. நாம் எப்படி பேசும் பொழுது பிறர் விரும்பி கேட்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அதுப்போல பிறர் நம்மிடம் உரையாடும் பொழுது அவர்கள் சொல்வதில் உள்ளவற்றில் (குறள்: குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிக நாடி மிக்க கொளல்) பயனை நாடி அவற்றை மனதிலும் நினைவிலும் கொள்ள வேண்டும். அவர்கள் பேசுவதில் தவறு ஏதாவது இருப்பின் அவற்றை பெரிதுப்படுத்தக்கூடாது. (குறைந்தது அதனை தனியே கூறவேண்டும். முகத்திற்கு நேரே கூறி அடுத்தவரை சங்கடப்படுத்தகூடாது ஏனெனில் அது அவர்களின் பேசும் தன்னம்பிக்கையை குலைக்கும். திருத்தப்படவேண்டிய குற்றம் என்றால் தனியே செய்க). சில கருத்துக்களில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவற்றில் சிக்கிக்கொண்டு மற்றவற்றை இழக்கக்கூடாது.

இவ்வாறு தானும் பிறர் விரும்பும்படியாக நன்றாக பேசி, பிறர் சொல்வதையும் செவிகொடுத்து கேட்டு அவற்றில் நல்லவற்றை எடுத்துக்கொள்ளும் பண்பை உடையவர் மாசு அற்ற மாட்சியினை (மாண்பினை, பண்பினை) உடைய சிறப்பு பெற்றவ ஆவார்.

ஏற்கனவே இக்குறளின் கருத்தையே அறிவுடைமை அதிகாரத்தில், “எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு” என்ற குறளிலும் வள்ளுவர் சொல்லியிருப்பது நினைவுகூறத் தக்கது. அக்குறளின் கருத்தை வேறு சொற்களில் கூறுவதே இக்குறள். இதே கருத்தைக் கூறும் பழமொழிப் பாடலொன்று (4) உண்டு. அது, “கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண் வேட்கை அறிந்து, உரைப்பார், வித்தகர்”

மேலும் அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
வேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொற்பயன் கோடல் - பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு. (பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின், இதுவும் உடன் கூறினார். இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு. இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.

Thirukkural - Management - Public Speaking - Counseling 

A faultless or blemish less speaker is the one who speaks to make others understand and accept the merit in what he says. He must also listen to what others say, understand, interpret, and gain from their contributions, counsels Kural 646.

To persuade and gain by what others say 
Mark good counsellers.

A great speaker is an expert in looking at the merits of others’ views. Indeed, these qualities are needed to be a competent counselor.