Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

குறள் 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

எப்பொருள் - எந்த ஒரு பொருளையும் , கருத்தையும், தத்துவத்தையும், செயலையும், அறிவையும், கொள்கையையும் , பயனையும், தலைமையும்

எத் - எந்த 

தன்மைத்து - தன்மை -  குணம்; இயல்பு; நிலைமை; முறை; பெருமை; ஆற்றல்; நன்மை; மெய்ம்மை; தன்னைக்குறிக்குமிடம்; ஒரணி.

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

அப்பொருள் - அந்த பொருளை  (செயலை, தத்துவத்தை ... )

மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று

காண்பது - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
தன்மை என்றால் குணம், இயல்பு, நிலைமை, முறை, பெருமை, ஆற்றல், நன்மை, மெய்ம்மை என்று பொருள்கள்/அர்த்தங்கள் உண்டு. 

ஆதலால் பொருள் எனப்படும் சொற்பொருள், செய்கை, தத்துவம், அறிவு, அறம், வீடுபேறு, தலைமை ஆகிய எதுவாயினும் அவை எத்தன்மைத்தாயினும் (அதாவது அதன் குணம் (நற்குணம், தீ குணம்), இயல்பு, நன்மை/தீமை என்று எத்தகையதாயினும்)  அப்பொருளின் உண்மையான நிலையான மெய்ப்பொருள் அதாவது உண்மை என்னவென்று ஆராய்ந்து அறிந்து காண்பதே அறிவு எனப்படும் ஞானம், கல்வி ஆகும்.

இதற்கு முன்பு இதேப்போன்ற சொற்தொடர் கொண்ட ஒரு குறள் "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று அறிந்தோம். அதில் யார் சொல்லி கேட்டாலும் மெய்ப்பொருளை நாம் தான் அறிந்து ஆராயவேண்டும் என்று கூறியிருந்தார். இக்குறளில் எப்படிப்பட்ட தன்மையுடைய தாயினும் அதனுடைய மெய்ப்பொருளை நாம் தான் அறிந்து ஆராய வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

“மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழியைச் நாம் அறிவோம். ஒரு பொருள் (கருத்துக்கூட) ஒளிரும் பொருளாய் தோற்றமளித்தாலும், அப்பொருளின் உண்மைத்தன்மையை அறிவதே உண்மையான ஞானம் செய்யும் செயல் ஆகும்.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் - யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது. (பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றவழி. அரசன் என்பதோர் சாதியும் சேரமான் என்பதொரு குடியும், வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனை ஆகலின், அவ்வாறு உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டுசென்றால் , காரணகாரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய்நிற்பதனை உணர்தலாம். 'எப்பொருள்' என்ற பொதுமையான்,இயங்குதிணையும் நிலைத்திணையும் ஆகிய பொருள்கள்எல்லாம் இவ்வாறே உணரப்படும். இதனான் மெய் உணர்வினதுஇலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும் அப்பொருளினுடைய வுண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம். மெய்யென்பதூஉம், அறிவென்பதூஉம் ஒன்று: என்னை? எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின் மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால் அறிவாயிற்று.

மு.வரதராசனார் உரை
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.

சாலமன் பாப்பையா உரை
எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

Thirukkural - Management - Truthfulness
True knowledge is the ability to understand the truth behind people, things and events, according to Kural 355.

The mark of wisdom is to see the reality 
Behind each appearance.

Checking for truth in others' advice, ideas and suggestions is a challenge, but the challenge is a 
very fruitful effort. If we do not verify the validity and listen to everything that others say, we will lead someone's life instead of our own.

Accepting things without analyzing the truth in them and implementing them may lead to negative consequences. Do not accept the statements made by others at the superficial level. Go deep into the ideas, advice and suggestions, analyze them, understand them, and accept them. Analyzing the information, understanding the meaning and accepting the fact will help you gain profound knowledge.

No comments:

Post a Comment