Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Management_Thoughts. Show all posts
Showing posts with label Management_Thoughts. Show all posts

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

குறள் 666
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
[பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம்.

எண்ணிய - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.
யாங்கு - எங்கு; எப்படி; எவ்வாறு; எவ்விடம்.

எண்ணியாங்கு - எண்ணியப்படி;  தாம் கருதியவாறே

எய்துப- எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எண்ணியார் - எண்ணியவர், நினைத்தவர்

திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை.

திண்ணியர் - செயல்களில் உறுதியும் திண்மையும்

ஆகப்பெறின் -  உடையவராக இருப்பின்

முழுப்பொருள்
முன் குறிப்பு: (@14:58 https://youtu.be/iQnyTQAmvs4?t=898) இன்று (16-feb-2023) எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் ஒரு நேர்காணல் காணொளியில் இன்றைய வாழ்வில் எப்படி தன்னை கண்டடையும் முன்பே 17 வயதில் பொறியில் கல்லூரியில் சேர்ந்து 21 வேலைக்கு சென்று 24 வயதில் EMI யில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பேசியிருப்பார். அப்பொழுது sense of accomplishment எனப்படும் எய்தும் நிறைவை பற்றி பேசியிருப்பார். ஒரு நிமிடம் என்னை நிமிரச் செய்தது நாம் எதை எய்த வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் கண்டடைவது எவ்வளவு முக்கியம் என்பதை மேலும் ஒருமுறை வேறு ஒரு கண்ணோட்டத்தில் விளங்கிற்று.


தான் ஒரு காரியத்தை அல்லது ஒரு செயலை அல்லது ஒரு லட்சியத்தை அல்லது ஒரு குறிக்கோளை எவ்வாறு நினைத்தோமோ (/ எண்ணினோமோ) அவ்வாறே (/ எண்ணியபடியே/நினைத்தப்படியே) அதனை முழுவதுமாய் அடைய முயற்சிகளை மேற்கொண்டு எண்ணியவற்றையே அடைய எண்ணியவர் மிகுந்த மனவலிமையும் செயலில் உறுதியும் கொண்டவர் ஆவார்.  அவர் மேற்கொண்ட செயலை எண்ணியபடியே அடைய்வார். அவரை ஒரு செயலை செய்து முடிக்கப் பெற்றால் அது அவ்வரசுக்கும் / அந்நிர்வாகத்துக்கும் நன்மை பயக்கும்.

எல்லோரும் உயர்ந்த லட்சியங்களை கொண்டு இருப்பர். (அது ஒருவித உந்து சக்தி. ஆங்கிலத்தில் Motivation எனலாம்). ஆனால் எல்லோரும் அல்லட்சியங்களை அடைவதில்லை ஏனெனில் பலர் அல்லட்சியங்களை நோக்கி பயனித்தலே சாதனை என்று நினைகின்றனர். அல்லது குறிக்கோளில் 60 அல்லது 70 சதவிதம் அடைந்தாலே பெருவெற்றி என்றி நினைக்கின்றனர் அல்லது 70% வெற்றிக்கே குறி வைக்கின்றனர். அதனால் தான் அவர்கள் உறுதி அற்றவர்கள் எனலாம். வினையில் திண்மை இல்லாதவர்கள். உண்மையான வினைத்திட்பம் உடையவர்கள் எண்ணியவற்றை எண்ணியவாரே (அதாவது 100%) அடையவே எண்ணுவர். அவ்வாறு எண்ணி அதனை அடைவர். 

செயலாற்றும் பொழுது எய்துப என்கிறார். அதாவது எய்யப்பட்ட அம்புபோல சென்றுகொண்டே இரு என்கிறார் திருவள்ளுவர். எய்யப்பட்ட அம்பு திரும்ப வராது. இலக்கை நோக்கி சென்றுக்கொண்டே இருக்கும். இலக்கை அடையும் வரை அம்பை எய்திக்கொண்டே இரு வில்லை தாழ்த்தாதே என்கிறார். 

”எண்ணிய எண்ணியாங்கு” என்பதையும் எய்து என்ற சொல்லையும் கீழ்க்காணும் குறளுடன் தொடர்பு படுத்திப்பார்க்கலாம். நாம் ஒன்றை அடையவேண்டும் என்றால் நமது குறிக்கொள்களில் எவ்வளவு தெளிவாகவும் திண்ணமாகவும் இருத்தல் அவசியம் என்பதை உணரலாம். ஆனால் உனக்கு ஒன்னு வேண்டியப்படி வேணுமா, செய்க தவம் என்று ஆணையிடுகிறார் திருவள்ளுவர். செயலில் ஈடுபடு. திட்டமிட்றேன், நாளைக்கு செய்யுறேன், காலம் வரும்போது பாத்துக்கலாம் என்று இல்லாமல், செய்க தவம் என்கிறார் திருவள்ளுவர். 


இதே கருத்தைப் பழமொழிப் பாடல் ஒன்றின் இறுதி இரண்டு அடிகள் இவ்வாறு சொல்கின்றன. 
“இனியாரும் இல்லாதார் எம்மில் பிறர்யார்
தனியேம்யாம் என்றொருவர் தாமடியல் வேண்டா
முனிவிலராகி முயல்க முனிவில்லார் 
முன்னிய தெய்தாமை இல்” (பழமொழி நானூறு: 161)

சமீபத்தில் ஒரு கலந்துரையாடலில் ஒன்று கேள்விபட்டேன். அதில் ஒருவர் (X என்று வைத்துக்கொள்வோம்) ஒரு மனதடையில் சிக்கித்தவிக்கிறார். அவர் ஒரு செயலை செய்யவேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு ஆயிரம் காரணங்கள் உந்துசக்திகள் இருக்கிறது என்று கூறுகிறார். ஆனால் தன்னால் அதனை செய்ய முடியவில்லை. ஏதோ ஒரு தடை இருக்கிறது என்று நினைத்து ஒரு ஆசிரியரிடம் செல்கிறார். அங்கு நடக்கும் உரையாடல் இங்கு

ஆசிரியர்: X-ஐ பார்த்து ஒன்று கேட்கிறார். 2019 ஐல் நீ 2014 பற்றி நீ வருத்தபடுவாய் என்றால் அது எதற்கு என்று கூறமுடியுமா? 

X: அதற்கு  1,2,3,4 என்று நான்கு செயல்களை 2014-இல் நான் செய்யவில்லை என்றால் நான் 2019இல் 2014 பற்றி வருந்துவேன் (என்னிடமே கோபித்துக்கொள்வேன்). 

ஆசிரியர்: வேறு ஏதாவது இருக்கிறதா? 

X: இல்லை.

ஆசிரியர்: அப்படியென்றால் 1,2,34 ஆகிய நான்கையும் செய்தால் நீ மகிழ்ச்சியாக இருப்பாய் அல்லவா?

X: இல்லை.

ஆசிரியர்: ஏன்? 

X: நான் இந்த நான்கையும் செய்து அதில் வெற்றிபெற்றால் தான் மகிழ்ச்சியாக இருப்பேன்.

ஆசிரியர்: ஆனால் நீ 1,2,3,4’இல் இவற்றில் வெற்றிபெறுவது பற்றி கூறவில்லையே ?

X: ஆம். ஏனெனில், 1,2,3,4 ஆகியவற்றை செய்வது தான் என் கடமை. வெற்றி என்பது என் கையில் இல்லையே.

ஆசிரியர்: அப்படியென்றால் 1,2,3,4 ஆகியவற்றை செய்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டியத் தானே?

X: அப்படி இருக்க முடியாது. ஏனெனில் இவற்றில் வெற்றிபெறுவது என் வாழ்விற்கு தேவையான ஒன்று. இவ்வெற்றிதான் எனக்கு செல்வத்தை /ஊதியத்தை ஈட்டித்தரும். அதுவே இன்பம் தரும். இல்லையேல் அறம், பொருள், இன்பத்தின் சமநிலை குலையும். ஆதலால் இவ்வெற்றி எனக்கு இன்றியமையாதது. 

ஆசிரியர்: அப்படியென்றால்?

X: இந்த வெற்றிக்கும் நானே பொறுப்பு. 

ஆசிரியர்: அப்படியென்றால்?

X: 2014'இல் நான் (இச்செயலில்) வெற்றிபெற வேண்டும். 1,2,3,4 எல்லாம் அதற்கான முயற்சி மட்டும் தான். வெற்றியே இலக்கு எனக்கொள்ளவேண்டும். 1,2,3,4 படிக்கட்டுகளே. 1,2,3,4 ஆகியவற்றை செய்வதனால் எனது கடமை முடியவில்லை வெற்றிக்கான முழுப்பொறுப்பும் என்னுடையதே. 1,2,3,4 எல்லாம் எனக்கு வெற்றி அடைய உதவும். அவ்வளவே. 1,2,3,4 அல்லது வேறு ஏதும் பொறுப்பாகாது. ஆங்கிலத்தில் சொன்னால் Success is a function of me(and my thoughts) (Success = f(me (and my thoughts))). Success is not just a function of the process or steps taken.

தற்காப்பு: ஒரு செயலை செய்தால் அதனை 100% அடைய எண்ணுவது வினைத்திட்பமாகும். அதுவே சிறந்தது. குறிக்கோளே குறைவாக இருந்தால் அடைவது அதைவிட குறைவாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், 100% அடைய முயலும் பொழுது அது நமக்கோ அல்லது பிறருக்கோ அல்லது நிர்வாகத்திற்கு எவ்வித பாதிப்பு உண்டாக்க கூடாது. அதாவது செயலை செய்யும் பொழுது 100% அடைய முயன்றுகொண்டு இருக்கும் பொழுது அது பல இழப்புகளை தரும். 100% நிறைவேற்றுவதால் வரும் பலனை விட இழப்பு மிக அதிகம் என்றால் அச்செயலை பாதியில் நிறுத்திவிட வேண்டும். உதாரணமாக சொன்னால், இமயமலை (Mount Everest) ஏறும் பொழுது பனிபொழிவு அதிகமாக இருக்கிறது. மேற்கொண்டு பயணத்தை தொடர்ந்தால் உயிருக்கு ஆபத்து என்றால், திரும்பிவிடுவது தான் உசித்தம். மீறி தொடர்ந்தால் உயிரை இழக்க கூடும். உயிரவிட பெரிய குறிக்கோள் என ஏதுமில்லை. ஆதலால் சரியான குறிகோள் சரியான சூழ்நிலைகளுக்கு திட்டமிடபட வேண்டும். சில சமயம் நெடுந்தூர / மராத்தான் ஓட்டம் (Marathon) ஓடுபவர்கள் இலக்கை அடைய ஓடுகையில், அவர்கள் உடம்புக்கு அசௌகர்யம் ஏற்பட கூடும். சிலருக்கு இதயம் பலவீனமாக இருக்ககூடும். அப்பொழுது மூச்சுதிண்றலோ அல்லது நெஞ்சுவலி இருப்பதாக உணர்ந்தால் ஒட்டத்தை நிறுத்திவிட வேண்டும். இலக்கிற்கு அருகில் இருக்கிறோம் என்று நினைத்து நெஞ்சுவலியை மீறி(தாங்கிக்கொண்டு) ஓடினால் உயிரை இழக்க கூடும்.  உதாரணம்: Student dies on Marathon run: Eyewitnesses said Santhosh was struggling near Foreshore Estate, but he refused to give up as he was close to the finish line.

அதனால் தான் ”குறள் 476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்று வலியறிதல் அதிகாரத்தில் முன்னறே திருவள்ளுவர் கூறியுள்ளார்.

இலக்குகள் ஒருவித ஊக்கசக்தியே.
இலக்குகள் ஒருவித ஊக்கசக்தியே. ஆனால் அதனை அடைய தொடர்ந்து இடைவிடாது மனம் தளராது உழைக்க ஒழுக்கம் அவசியம். அவ்வொழுக்கத்தை மனதில் கொள்வதே வினைத்திட்பம் ஆகும். 

Motivation gets you going, but discipline keeps you growing

Goals cannot be achieved without discipline

Don't rely on motivation for anything. It is fleeting and unreliable. Discipline however, is unyielding. Force yourself to follow through.

When motivation stumbles, self-discipline saves the day

Suffer the pain of discipline or suffer the pain of regret

Discipline is the bridge between goals and accomplishment


மேலும்: அஷோக் உரை


“பிரஹலாதனிடமிருந்து அதைப் பெறுக! அவ்வேதத்தை நீர் உமதென்றாக்குக! அதுவே வெல்லும் வழி.” இந்திரன் “ஆசிரியரே, நான் அவரை வெல்லமுடியாது. அதற்குரிய படைக்கலங்கள் என்னிடமில்லை” என்றான்.

புன்னகைத்து “உம் படைக்கலம் எப்படியென்றாலும் வெல்லவேண்டுமெனும் முனைப்பே. அதைக் கொள்க!” என்றார் சுக்ரர். “

அந்தக் கணங்களின் முகங்கள். அவை எழுந்து திரண்டு அலை கொண்டிருந்தது அப்பெருவெளி. நடப்பது களைப்பை உருவாக்கவில்லை. எண்ணினால் எழுந்து பறக்க முடிந்தது. எண்ணுமிடத்திற்கு அக்கணமே செல்ல முடிந்தது. எண்ணம் எண்ணியாங்கு சென்றடையுமென்றால் இடமென்பதே ஓர் எண்ணம் மட்டும்தான். இடமிலாதானால் காலமும் மறைகிறது. காலமில்லாதபோது எங்கு நிகழ்கின்றன எண்ணங்கள்? அவை எண்ணங்களே அல்ல, எண்ணமென எழாத கருக்கள். இவையனைத்தும் ஒற்றைக்கணத்தில் நிகழ்ந்து மறையும் ஒரு கனவு.

பரிமேலழகர் உரை
எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின். ('எளிதின் எய்துப' என்பார், 'எண்ணியாங்கு எய்துப'என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை
தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்: அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின். இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

Thirukkural - Management - Thoughts
Smile and anger cannot go together. When you are angry, you cannot smile. When you smile, you cannot express anger. The common and accepted wisdom is ‘Action speaks louder than words.’ One's action is the result of one's thoughts. Hence, Sigmund Freud's thought, “What you think, oozes through every pore of your body,” has high relevance.  We cannot hide our thoughts. 

It is often said, ‘A man becomes what he thinks about.’ That is the power of thought. Valluvar, through Kural 666, emphasizes that we can achieve whatever we conceive, if we focus on our thoughts and put in all possible and relevant efforts to realize our thoughts.

All one aims at can be gained 
If one is but firm.

The phrases ’Law of attraction’ and 'Law of expectations’ are in line with Valluvar's thought on  thoughts.

Thoughts and deeds are interrelated and they are important for high achievements. Just positive thoughts without actions will not help a person progress. It is similar to a rocking horse that will not take you anywhere. On the contrary, just action without positive thoughts will not be fruitful. So, have a thought, believe in that thought, and put in your best efforts to realize that thought. Napoleon Hill's “Whatever the mind can conceive and believe, the mind can achieve,” supports this thought.


இந்திய தத்துவ ஞானம் (லட்சுமணன்)
தியானத்துக்கு உவமை
தியானத்துக்கு முண்டக உபநிடத்திலே ஒரு சிறந்த உவமை சொல்லப்பட்டிருக்கிறது. ‘தியானம் செய்பவன் வில்லாளி. குருவிடத்திலே அடைந்த வேதாந்த ஞானமேவில். தியானம் செய்பவனுடைய ஆத்மாவே அம்பு. அம்பாகிய ஆத்மாவை - அதாவது, தன் உள்ளத்தை வில்லில் வைத்து நாணை இழுக்க வேண்டும். நாணை இழுப்பதென்றால் ஏகாக்கிரசித்தத்துடன் தான் அடைந்த ஞானத்தை உபயோகித்துத் தியானிப்பது. நாணை நன்றாக இழுத்துக் குறிபார்க்க வேண்டும். பரமாத்பாவே குறியாகும். நல்ல வில்லாளி வில்லை வளைக்கும் போது குறியும் அம்பும் ஒரு நேரில் அமையச் செய்கிறான். அந்த நிலையில் அம்பு குறியில் மறைந்து போகிறடு. பரம்பொருளைத் தியானம் செய்பவன் அவ்வாறே தன் ஆத்மாவையும் பரமாத்மாவையும் ஒன்றாகவே காண வேண்டும். தியானம் செய்யும் காலத்தில் பரமாத்மாவில் மன் ஆத்மா முற்றிலும் அத்துவிதீயமாகப் போகல் வேண்டும். 


‘எண்ணிய எண்ணியாங்கெய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின்’ என்று வள்ளுவர் கூற்று. பல தருணங்களில் நம்மை பொருள்குழப்பத்திற்கு தள்ளும் ஒரு வரியும் கூட. குறள் போன்ற நூல்களை ஆசிரியர் முன் நெடுவிவாதமின்றி பயிலக்கூடாது என்பதற்கான சான்றும் கூட.

பெரும்பாலானவர்கள் ‘எண்ணியவற்றை எண்ணியாங்கு எய்துபவர்’ எவரென்றால் அவ்வாறு எண்ணியவர்களில் எவர் உளத்திட்பமுடையவரோ அவர் மட்டும்தான்’ என்று பொருள் கொள்வார். அதாவது இயல்பிலேயே உளத்திட்பம் வாய்ந்தவர்கள் மட்டுமே எண்ணியதை எய்தமுடியும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

அவ்வாறு இளமையிலேயே உளத்திட்பம் ஒருவருக்கு வர முடியுமா என்ன? எவராயினும் தான் எவரென்றும், தன் ஆற்றல் என்னவென்றும், தன் இலக்கென்னவென்றும், செல்வழி என்னவென்றும் எண்ணி மயங்கிச்சுழலும் ஒரு முதிரா இளமைக்காலம் அவர்களுக்கு உண்டு அல்லவா? அப்போது உளத்திட்பம் இருக்க முடியுமா என்ன? அந்நிலையில் ஒருவர் தான் எண்ணியவற்றை எப்போதுமே எய்த இயலாது என்ற சலிப்பையும் சோர்வையும் தானே அடைவார்.

நம் வாழ்க்கையில் உளத்திட்பம் உடையவர்கள் என்று பலரைப்பார்க்கிறோம். எத்தகையவர் அவர்? முதலில் கண்ணுக்குப்படுபவர்கள் செல்வ வளம் உடையவர்கள். செல்வம் அளிக்கும் தன்னம்பிக்கையும் துணிவும் என்னவென்று நான் தொடர்ந்து கண்டுகொண்டிருக்கிறேன்.

பலசமயம் பெருஞ்செயலாற்றியவர்கள் தந்தையர் ஈட்டிய பொருளை இளமையிலேயே பெற்றவர்கள். அதனால் உயர்கல்வியும் உயர்குடிச்சூழலின் பழக்கமும் அடைந்தவர்கள். தொடக்கத்திற்கான முதலீடு கையில் இருக்கும். தன் உயிர்வாழ்தலுக்காக மட்டும் எதையும் செய்யவேண்டியதில்லை என்னும் சூழல் இருக்கும். தன் ஆற்றலை தன் இலக்கற்ற வேறு விஷயங்களில் சிதறடிக்க தேவை இருக்காது. எதிர்காலம் குறித்த அச்சம், எதிர்பாராமை குறித்த பதற்றம் இருக்காது. உளத்திட்பம் என நாம் காணும் பெரும்பாலான ஆளுமைப்பண்பு, செல்வத்திலிருந்து வருவது.

அதற்கு அடுத்தபடியாக அறிவு அளிக்கும் உளத்திட்பம். அறிவு தெளிவென ஆகும்போதுதான் அந்த உளத்திட்பம் வருகிறதே ஒழிய அறிவு மட்டுமே ஒருவனை வந்தடைந்துகொண்டிருக்கையில் அத்திட்பம் வாய்ப்பதில்லை. பல தருணங்களில் பகுதியான அறிவு, ஒத்திசைவற்ற அறிவு ஒருவனுக்கு பதற்றத்தையும் மிகையார்வத்தையும், விளைவாக எதிர்நிலை பண்புகளையும், இறுதியாக கடும் உளச்சோர்வையும் அளிக்கும். அறிவுச்சூழலில் இருப்பவர்களில் இன்று பெரும்பாலானவர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள்.

ஏனெனில் இன்று அறிதல் பலமுனைப்பட்டு ஒருவனை வந்து தாக்குகிறது. தேடி, கற்று அடையும் அறிவல்ல இன்று ஒருவனிடம் இருப்பது. ஒவ்வொருவரையும் தேடிவந்து அருவியென அவர்கள் மேல் பொழியும் அறிவு அவர்களின் தெரிவுக்கு அப்பாற்பட்டது. அத்தனை அறிவையும் உள்வாங்கி அமைப்பென ஒருங்கிணைத்து கூர்கொள்ளச்செய்து தன் வினாக்களை அவற்றின்மேல் ஏவி, விடைகளை பெற்று தெளிவு கொள்பவர் மிக அரிதானவர்.

கல்வி தெளிவென ஆவதற்கு முறையான ஆசிரியர்கள் தேவை. அந்த ஆசிரியர் மாணவர்களிடம் தெளிவை உருவாக்கும் நோக்கம் கொண்டிருக்கவேண்டும். தனது அரசியல் அல்லது அதிகாரம் அல்லது பற்று சார்ந்த நோக்கங்களை மாணவர்களிடம் திணிக்கக்கூடாது. அத்தகையோர் இன்று மிக அரிதாகவே கிடைக்கிறார்கள். ஆகவே தெளிவு கொண்ட அறிவென்பது காணக்குறைவானது.

அத்தகைய அறிவுத்தெளிவு இருக்குமெனில் அது உளத்திட்பத்தை அளிக்கிறது. தன் இலக்கென்ன என்று, தன் பணி என்ன என்று, அதில் எஞ்சுவதென்ன என்று முன்னரே அறிந்தவற்றின் விளைவாக வரும் உளத்திட்பம் அது. அதுவே

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

என்று கூறும் ஒருமை நிலைக்கு ஒருவரை இட்டுச் செல்கிறது.

நான் பார்த்த வரை கல்வியையும் அக்கல்வியைப் பயன்படுத்தும் களத்தையும் ஒருங்கே கண்டடைந்தவர்கள், கற்பவற்றை செயலென்று அக்கணமே ஆக்கிக்கொண்டிருப்பவர்கள், செயல் வழியாகக் கல்வியையும் கல்வி வழியாக செயலையும் முழுமை செய்து கொள்பவர்கள் மட்டுமே அந்த தெளிவுடன் உளத்திட்பத்துடன் இருக்கிறார்கள்.

நம் சூழலில் பெரும்பாலும் அத்தகையோர் மீதுதான் தெளிவிலாக் கல்வி கொண்டவர்களின் வஞ்சமும் காழ்ப்பும் வசையும் ஏளனமும் பெருகிக்கொண்டிருக்கும். ஏனெனில் தெளிவு பிறரை அச்சுறுத்துகிறது. அது ஓர் அறைகூவல் போன்றது. தெளிவற்றவர்கள் அத்தெளிவுடன் மோதியே தங்களை நிரூபிக்க முயல்வார்கள். தெளிவு கொண்டவர்களை சிதைத்து தன்பக்கம் இழுக்க இடைவிடாது எல்லாத்தரப்புகளும் முயலும். அதைக்கடந்து தெளிவு நின்றிருக்கும் என்பதனால் அம்முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடியும். தோல்வியிலிருந்து மேலும் வஞ்சம் மேலும் சீற்றம் உருவாகிறது. ஆனால் அவ்வஞ்சங்களைக் கடக்க தெளிவால் இயலும்

செல்வமும் அறிவும் அளிக்கும் திட்பம் உலகியல் சார்ந்தது எனில் அதற்கப்பால் உள்ளது ஆன்மீகம் அளிக்கும் திட்பம். நான் இங்கு மதம் சார்ந்த பற்றை ஆன்மீகம் என்று சொல்லவரவில்லை. பக்தியையோ அல்லது வெவ்வேறு வகையான பயிற்சிகளையோ மதம் என்று கூறவில்லை. ஆன்மீகம் என்று நான் சொல்வது முழுதறிவை அடைந்தவனின் நிலைபேற்றை. தன் வாழ்விலிருந்து, இப்பிரபஞ்சத்திலிருந்து, தன் ஆசிரியர்களிடமிருந்து ஒருவர் அடையும் சமநிலை கொண்ட அறிவு ஆன்மீகம் எனப்படுகிறது.

அது அறிதலால் நிகழ்வதல்ல, உணர்ந்து ஆதலால் நிகழ்வது. அது ஒன்றைச்சார்ந்து நிலைகொள்ளாதது. ஒன்றில் மட்டும் குவியாமல் அனைத்தையும் ஒருங்கிணைத்த, தனக்கென ஒரு மையத்தை சமைத்துக்கொள்வது. கலை, இலக்கியம், தத்துவம் ஆகிய மூன்றும் அடிப்படையில் ஆன்மீகத்தை நோக்கிச் செல்பவை. ஆன்மீகத்தால் மட்டுமே ஆழமும் அழுத்தமும் பெறுபவை.

மீண்டும் முதல் வினா. இந்த உளத்திட்பத்தை அத்தனை பேரும் அடையமுடியுமா என்ன? செல்வம் மூதாதையரால் ஈட்டித்தரப்பட்டிருக்க வேண்டும். அறிவும் ஆன்மீகமும் ஒருவன் தன் பயணத்தில் காலப்போக்கில் எய்துவது அப்பயணத்தை நிகழ்த்துவதற்கே உளத்திட்பம் தேவைப்படுகிறது. எனில் உளத்திட்பம் ஓர் இளையோனுக்கு எவ்வாறு அமையமுடியும்?

உளத்திட்பமின்மை என்பது ஒரு குறைபாடோ ஆளுமைச்சிக்கலோ அல்ல. உளத்திட்பமில்லாத ஒரு காலகட்டத்தை கடந்து வராத எவரும் இருக்க இயலாது. அது ஓர் ஆளுமையின் வளர்ச்சிக்காலகட்டம் மட்டுமே.  ஒரு மரம் செடியென்றாகி கிளை விரியும்போது எப்பக்கம் சூரிய ஒளி இருக்கிறது, எங்கே நீரிருக்கிறது என்று தன் வேர்களாலும் கிளைகளாலும் கண்டடையக்கூடிய காலகட்டம் அது. அது திட்பத்தை அது அடிமரம் பெருத்து வானில் கிளை விரித்த பின்னரே அடையமுடியும். அதுவரை காற்றிலாடி திசைகள் தோறும் நெளிந்து அது உருவம் கொள்கிறது.

காற்றில் பெருமரங்களைப் பார்க்கையில் அவை அனைத்துமே ஒரு நடனவடிவ உடல் கொண்டிருப்பதைப் போலிருக்கிறது. அந்த நடனம் அவற்றின் வளர்ச்சிப்போக்கில் நிகழ்ந்தது. அவை அடைந்த போராட்டத்தின் கண்கூடான வடிவம் இது. எந்த ஓர் ஆளுமையை எடுத்துப்பார்த்தாலும் அவருடைய போராட்டத்தின் வழியாகவே அவர் தன்னுடைய வடிவத்தை அடைந்திருப்பதை பார்க்க முடியும்.

அந்த தேடல்காலகட்டத்தில் முன்நகர்வதற்கான உளத்திட்பத்தை எப்படி அடைவது என்பது தான் நீங்கள் கேட்கும் வினா. அது எவரும் எங்கிருந்தும் கொண்டு வருவதல்ல. எங்கிருந்தும் அளிக்கப்படுவதல்ல. ஒருவர் தன்னால் ஈட்டிக்கொள்ளப்படுவதென்று உணர வேண்டும். ஈட்டிக்கொள்வதற்கான வழிகள் என்ன? உளத்திட்பம் என்பது இன்றைய சூழலில் மிக அரிதான ஒன்று.

சென்ற தலைமுறையில் இளமைப்பருவம் என்பது மிகக்குறுகியது. பதினெட்டு பத்தொன்பது வயதுக்குள் மரபு வகுத்து வைத்திருக்கும் வாழ்க்கை ஓடைக்குள் ஒருவன் வசதியாகச் சென்று சேர்ந்து விடுகிறான். எவரை மணப்பது, எத்தொழில் செய்வது, எங்கு வாழ்வது, என்னென்ன கடமைகளை ஆற்றுவது என்பது எல்லாமே அவனை மீறி முன்னரே தீர்மானிக்கப்பட்டு அவனுக்கு ஒரு பொட்டலமாகவே அளிக்கப்பட்டுவிடுகிறது. அவனுக்கு தெரிவுகளில்லை. ஆகவே அது சார்ந்த பதற்றங்களில்லை.

சுதந்திரமின்மை என்பது ஒரு வகையான சுதந்திரம். முடிவெடுக்கும் பொறுப்பிலிருந்து அது நம்மை விடுவிக்கிறது. சுதந்திரம் என்பது இருத்தலியல் பதற்றத்தை (பறதி, angst) அளிக்கக்கூடியது என்று மிக விரிவாக சார்த்தர் விளக்குகிறார்.

இருத்தலியல் பதற்றம், பறதி என்பது ஒருவனுக்கு சமூகம் அளிக்கும் சுதந்திரத்தால், அதை பயன்படுத்திக்கொள்ளும் அறிவோ ஆளுமையோ இல்லாத நிலையில் உருவாவது. சென்ற தலைமுறையில் இல்லாத பறதி இன்று உள்ளது. இன்று நம்முன் வாய்ப்புகள் திறந்து கிடக்கின்றன. முடிவற்ற வாய்ப்புகள். அவற்றில் எங்கு செல்லவும் முழு சுதந்திரம் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்மால் தெரிவு செய்ய முடியவில்லை. நாம் யார் என்று நமக்கு தெரியவேண்டும். நம் திறனென்ன என்று நாம் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாத நிலையில் திறந்திருக்கும் ஆயிரம் வழிகளுக்கு முன் எங்கும் செல்லமுடியாமல் திகைத்து அங்கேயே நின்று நம் இளமைப்பருவத்தை முற்றிலும் இழக்கிறோம்.

இப்பறதி பற்றி எனக்கு வரும் கடிதங்கள் எல்லாமே இருபதிலிருந்து முப்பது வயதுகளுக்குள் இருப்பவர்களால் எழுதப்படுபவை. தங்கள் இளமைப்பருவத்தை கிட்டத்தட்ட அவர்கள் கடந்துவிட்டார்கள், கடந்துவிட்டோம் என்று உணர்கிறார்கள். அதிலிருந்து எழுகிறது இந்தப் பதற்றம்.

என் பதில் ஒன்றே. நீங்கள் யார் என்று நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்க வேண்டாம். அந்தக்கற்பனை என்பது பெரும்பாலும் உங்களுடைய தன்விருப்பிலிருந்து உருவாவது. தன் விருப்பென்பது ஆணவத்தின் ஒரு இனிய வடிவம். அது உங்களை நீங்களே மதிப்பிட உதவாது.

தன்முன்னேற்ற நூல்கள் திரும்பத்திரும்ப இந்த ஆணவத்தை தன் விருப்பாக மாற்றிக்கொள்ள கற்பிப்பவை மட்டுமே. ‘நம்பு நீ ஆற்றல் மிக்கவன், அரியவன் என எண்ணு. உன்னால் முடியும்’ என்று அவை திரும்ப திரும்பச் சொல்கின்றன. அந்த மந்திரத்தை நீங்கள் திரும்பத்திரும்ப சொன்னால் விடுபட்டுவிடுவீர்கள் என்று அவை கற்பிக்கின்றன. உண்மையில் நம்பிக்கை இழந்து தன்முனைப்பிழந்து இருப்பவரிடம் அந்த தன்விருப்பு ஒருவகை ஆற்றலாக செயல்படும். அவர்களை அது முன்னகர்த்தும், சற்று விடுவிக்கவும் செய்யும். ஆகவே நான் ஒருபோதும் தன்முன்னேற்ற நூல்களை முற்றிலும் மறுத்துரைக்கமாட்டேன்.

ஆனால் தானாகவே சற்று சிந்திக்கும் ஒருவருக்கு அந்நூல்கள் பயனற்றவை. ஏனெனில் அவற்றைப் படிக்கும்போது அவற்றுக்கு எதிரான தர்க்கங்களையும் சிந்திக்கும் இளைஞன் உருவாக்கிக்கொள்வான். அதன்பிறகு தன்முனைப்பு நூலுக்கும் அவனுக்குமான ஒரு உரையாடலும் அதன் விளைவான ஒரு குழப்பமும் மட்டுமே அவனுக்கு இருக்குமே ஒழிய அந்நூல்களின் வழியாக இம்மி கூட முன்னகர்ந்திருக்கமட்டான். அத்தகையோருக்காகவே இந்தக்கட்டுரையை எழுதுகிறேன். அத்தகையோர் ஆற்றவேண்டியது என்ன ?

அதையே மீண்டும் சொல்கிறேன், செயல். செயலெனில் என்றோ ஒருநாள் வென்றெடுக்கப்போகும் கோட்டை அல்ல. அதன் மேல் நீங்கள் பறக்கவிடப்போகும் அந்த வெற்றிக்கொடி அல்ல. அது வரட்டும் அதை சென்றடையலாம். ஆனால் இப்போது இங்கு என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியமானது. செய்யத்தொடங்குவதே முக்கியமானது. முதற்செயல் அறுதி வெற்றியைவிட ஒருபடி மேலானது. மிகச்சிறிதாக இருக்கட்டும். மிக மிக எளியதாக இருக்கட்டும். ஒருவேளை முற்றிலும் பயனற்றதாகக்கூட இருக்கட்டும். ஆனால் செயலாற்றத்தொடங்கி செயலின் வழியாக நம் ஆற்றலை நாமே கண்டுகொள்வது தான் உளத்திட்பத்தை அடைவதற்கான முதல் வழி.

நீங்கள் ஒரு ஈருளியில் செல்கிறீர்கள் அது திடீரென்று நின்றுவிடுகிறது. முன்பொருமுறை அந்த ஈருளியை கழற்றிப் பார்த்திருந்தீர்கள் என்றால் நீங்கள் அடையும் பதற்றம் எந்த அளவுக்கு குறைந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். தன்னம்பிக்கையும் உளத்திட்பமும் கொண்டவர்கள் எல்லாருமே செயலாற்றி அதன்வழியாக பெற்ற அனுபவம் வழியாகவே அவற்றை அடைந்திருக்கிறார்கள். ஆகவே துளித்துளியாக செயலனுபவத்தை ஈட்டிக்கொள்ளுங்கள் என்றே சொல்வேன்.

இன்று உங்களால் இயன்ற மிக எளிதில் செய்யத்தக்க ஒரு செயலைச்செய்யுங்கள். அதன் வெற்றியைச்சுவையுங்கள். அது அளிக்கும் நம்பிக்கையை ஈட்டிக்கொள்ளுங்கள். அது ஒரு படி. இயல்பாகவே நீங்கள் அடுத்த படிக்கு தான் கால் வைப்பீர்கள். அது எச்செயலாகவும் இருக்கட்டும் கற்றல், சேவை செய்தல், உழைத்தல் எதுவாக இருப்பினும் அதில் உங்கள் ஆற்றல் செலவிடப்படவேண்டும். உங்கள் ஆளுமை அதில் முழுமையாக ஈடுபடவேண்டும். அதனூடாக நீங்கள் எதையோ கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அந்தக்கற்றல் அளிக்கும் இன்பம் உங்களை விடுதலை செய்வதை நீங்களே பார்ப்பீர்கள். அதனூடாக நீங்கள் முன்னகர்வதை உணர்வீர்கள்.

மனத்திட்பம் என்பது ஒட்டுமொத்தமாக ஒருவரிடம் வந்து சேரும் பெருஞ்செல்வம் அல்ல. அது ஒவ்வொரு ரூபாயாக ஈட்டிக்கொள்வது. ஒரு செயல் வழியாக ஒரு நாணயத்தை பெறுகிறீர்கள். உங்கள் களஞ்சியத்தில் செல்வம் நிறையத்தொடங்குகிறது. ஒருநாள் பெருஞ்செவ்லவந்தராக அதன்மேல் ஆம்ர்ந்திருப்பீர்கள். அதன் நிமிர்வுடன் நம்பிக்கையுடன். அந்த செயல் நோக்கிச் செல்லும் விசையை வேறெவரும் அளிக்க முடியாது. அதை நீங்களே உங்களிடமிருந்து பெறவேண்டும்.

ஒவ்வொருவரும் அவ்வண்ணம் செயல்நோக்கி செல்லமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. நான் ஏராளமானவர்களை பார்க்கிறேன். செயல் என எதிலுமே ஈடுபடாமல், செய்யநேர்ந்தவற்றை மட்டுமே செய்துகொண்டு, முழு வாழ்க்கையும் வாழ்ந்து முடிப்பவர்கள் பலகோடிபேர் இங்குள்ளனர். அவர்கள் வாழ்ந்து மடிவதும் இவ்வியற்கையின் ஒரு நிகழ்வே. சற்றேனும் அகவிசை கொண்டு தன்னைத்தானே செலுத்திக்கொள்ள முடியும் ஒருவரிடம் மட்டுமே நான் பேச விரும்புகிறேன்.

நான் அவர்களிடம் சொல்வது முதற்செயல் தொடங்குக என்றே.

ஜெ

பிகு :நான் சொல்வன எவையும் புதியவை அல்ல. இன்றைய தன்முன்னேற்ற நூலாசிரியர்கள் அனைவருக்கும் முன்னோடியான எமெர்ஸன் அவருடைய Self-Reliance என்ற புகழ்பெற்ற கட்டுரையில் கூறியவையே. நூறாண்டுகளுக்கும் மேலாக உலகமெங்கும் சென்று இளைஞர்களின் செவிகளில் ஒலிக்கும் பெருங்குரல் அவருடையது.

English Meaning - As I taught a kid - Rajesh
The one who aims on a goal and desires/thinks to attain 100% of the goal, and who works and perseveres to attain the goal 100% with a determined spirit will attain the goal 100%. Whereas if one sets a goal while secretly aims only for 90% for complacency would perhaps get only 80% without reaching his/her potential. So, one must aim high and not get complacent when falling short of the potential when one could have achieved with determination. Out thoughts sets the tone of attaining the results. We should have right thoughts and put required efforts with a determined spirit. We should not just own our efforts. We should mainly own our results

Questions that I ask to the kid
Who achieves the target? Why? Why others doesn't achieve it? What is learning?


வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

 

குறள் 595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வெள்ளத்து -  வெள்ளம்  - நீர்ப்பெருக்கு; பெருக்கம்; கடல்; கடலலை; நீர்; ஈரம்; மிகுதி; ஒருபேரெண்; உண்மை.

அனைய -  அத்தன்மையான; ஒத்த.

மலர் - பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர்.

நீட்டம் - நீளம்; ஓசையின்நீட்சி; நீட்டுகை; தாமதம்.
நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல்

மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

உள்ளத்தினில் - உள்ளத்தின் உள்ளே

உள்ளத்து - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

அனையது -  அத்தன்மையான; ஒத்த.

உயர்வு - மிகுதியாதல்; உயர்ச்சி உயரம் விருத்தி, மேன்மை வருத்தம் உயர்வுநவிற்சியணி

முழுப்பொருள்
நீர் மலர்களான ஆம்பல், அல்லி, தாமரை முதலியவை அதன் நீர் மட்டத்தின் உயர்த்திற்கு ஏற்ற அளவிற்கு ஏற்றார்ப்போல் வளரும். நீர் மட்டம் உயரமாக இருப்பின் தண்டின் உயரமும் அதிகமாக இருக்கும் மலரும் பெரிதாக இருக்கும். நீர் மட்டம் குறைவாக இருப்பின் தண்டின் உயரமும் சிரிதாக இருக்கும் மலரும் சிரிதாக இருக்கும். (மலரை தாங்கும் தண்டு உயரமாக இருந்தால் தான் பெரிய மலர்களை தாங்க முடியும் என்பதுக்கூட காரணமாக இருக்கலாம்). அதுப்போல ஒருவரின் உள்ளத்து ஊக்கத்தின் அளவிற்கே அவரது உயர்வும் / உயர்ச்சியும் இருக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர். நீரின் மேல் அலைகள் இருக்கும். ஆழத்தில் அசைவுகள் இருக்காது. நம் ஊக்கத்திலும் அசைவுகள் இருக்கக் கூடாது.

ஆதலால், ஒருவர், தான் வாழ்வில் பெரிய இடத்திற்கு செல்வோம் பெரிய சாதனைகள் படைப்போம் என்று நம்பிக்கையாக இருப்பார் என்றால் அதற்கு உழைத்தார் என்றால் அவர் பெரிய இடத்திற்கு செல்லக்கூடும். 

பி.கு: பல உரைகள் நீரின் அளவு உயரமாக இருந்தால் மலரும் உயரமான இடத்தில் மலரும் (அல்லது நீரின் உயரம் தண்டின் உயரம்) என்று பொருள் உரைத்துள்ளன. ஆனால் உயரத்தில் மலர்வதை மட்டும் திருவள்ளுவர் கூறவில்லை. நீர் உயரத்திற்கு ஏற்ப மலரின் அளவும் பெரிதாகும் என்பதே கூறவந்தது. உயர்வைப் பற்றிச் சொல்வதால் நீளம் மட்டுமே போதுமான உவமை என்று எடுத்துக்கொள்கின்றன. மலர்ச்சி என்றால் மலர்களில் சிறிதாக மலர்பவையும், பெரிதாக மலர்பவையும் அழகே. கொண்டாடப்படுபவையே! இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால், திருக்குறளெல்லாம் மனோரஞ்சிதப் பூவைப் போன்றவை எனலாம். ஆனால் அத்தகைய விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. 

ஏனெனில் பெரிதாக பூக்கக்கூடிய மலர் பெரிதாக பூத்தால் தானே அழகு? சிறிதாக பூத்தால் காண்போரின் மனம் மலர் சிரிதாகவேனும் பூத்ததே என்று மகிழ்ச்சி அடைந்தாலும் அதன் முழு வீர்யம் காண்பவர்க்கு தெரியும் தானே?

மேலும் நீட்டம் என்றால் நீடுதல் (அகராதி:: நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல். ) 

வெள்ளம் (நீர்) - ஊக்கம்
மலர் (பூ) - உயர்வு

நீர் அதிகமாக இருந்தால் தண்டு தானாகவே அதிகமாக இருக்கும். ஆதலால் மலர் நன்றாக மலரும். நாம் எல்லோரும் காண்பது மலரை தான். நீர் (ஊக்கம்) தான் தண்டு (உழைப்பு) வளர முக்கியமான காரணம். நாம் வெளியே காண்பது மலர் (என்னும் உயர்வு). 

மேலும், ”மலர்” நீட்டம் என்று தானே வள்ளுவர் கூறுகிறார். தண்டு நீட்டம் என்று சொல்லவில்லையே.  

இரண்டாவதாக ஒரு செம்பருத்தி செடியினை ஒரு 1.5 அடி ஜாடியில் வைத்தால் அது ஒரு 2-3 அடியளவு உயரம் வளரும். அதுவே தரையில் வைத்தால் 5-6 அடி வளரும். இங்கே நாம் முதலில் வைப்பது ஜாடி (ஊக்கத்தையே). வேர் (உழைப்பு) ஆழ பாய்வது அதன் பின்பு தானே? வேர் ஆழம் பாயிந்தால் செடியும் நன்றாக வளரும். அதன் பூக்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கும். மேலும் பெரிய ஜாடியாக இருப்பினும் தரையில் இருப்பினும் அச்செம்பருத்திக்கு தண்ணீர் போதுமானதாக இல்லையேல் அம்மலர்கள் சும்பிபோய் சிறிதாக பூக்கவும் கூடும். (எங்கள் வீட்டில் தண்ணீர் கம்மியாக இருந்த நாட்களில் மலர்கள் முழுவதுமாக மலரமால் சிறிதாக பூத்ததனால் என் மனம் வாடிய நினைவுகள் உண்டு)

ஆதலால் திருவள்ளுவர் தண்டை விட மலரை உயர்வாக கூறி இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறேன். 





Standard-size lotus grow well in containers that are 3 to 4 feet in diameter, while smaller or dwarf-size lotuses can be planted in smaller, bushel-size vessels. Again, though, the largest and deepest possible pot is preferred.

When choosing a size, ask yourself, “How much room do I have? How big do I want my lotus to be?” Lotus can be found in many sizes, from tiny Exquisite of Bowl Lotus (also called micro lotus) between 6 and 8 inches tall, to small or dwarf lotus (1 to 2 feet tall), to medium lotus (2 to 4 feet tall), to large/tall lotus (giant plants standing more than 4 feet tall).

ஔவை மூதுரையில் நுண்ணறிவு கற்ற நூல்களின் அளவே இருக்கும் என்பதற்கு இதைப்போன்ற ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லுகிறார் – “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு”. இவ்வரிகளும் இக்குறளின் கருத்தை ஒட்டியிருப்பதைக் காணவும்.

“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனையது உயர்வு”

இக்குறளில் மரபான வாசிப்பு இரண்டாம் பகுதிக்கு அதிக அழுத்தம் தந்து, அதற்கான உதாரணமாக முதல் பகுதியை, அவ்வுவமையை, கண்டு வந்தது. நவீன வாசிப்பு வெள்ளத்தை ஒரு படிமமாக [poetic image] எடுத்துக் கொள்ளும். அப்போது அப்படிமம் சர சரவென்று வளர்ந்து காட்சிகளை உருவாக்கியபடியே போகும். வெள்ளத்தின் அலை, ஆழம், அதன் நிழற் கோலங்கள், அதில் ஊடுருவும் ஒளி, அதன் அடிப்பரப்பின் சேற்றுத் தடம், அங்கு வேர் விட்டு மேலெழுந்த மலர்… அம்மலர் எது என்ற கற்பனை அவனை மேலதிக கவிதைக் கற்பனைகளுக்கு இட்டுச் செல்லும். உள்ளத்தின் அடியாழத்தில் வேர் கொண்டு மேலெழுந்து, அலைகளில் ததும்பி நின்றாடி, விண் நோக்கி மலர்ந்து, ஒளி உண்டு, மிளிரும் அம்மலர் அவன் மனதிலும் விரியக் கூடும்.அக்கணமே கவிதையின் மெய்க் கணம்.

இங்கிருந்து நீங்கள் விழையும் செல்வம் அனைத்தையும் கொண்டு செல்லலாம்” என்றாள் நந்தை. “வடக்கின் அரசன் அளித்த அம்பு அன்றி வேறேதும் கொண்டுசெல்லப்போவதில்லை” என்றான் அர்ஜுனன்.

“வீரரே, நீரின் தலைவனை வென்றுகடக்கும்பொருட்டு கிளம்புகிறீர்கள்.  நீரின் உண்மை இரண்டு. ஒளிப்பரப்பாக அலையடிக்கும் மேல்தளம் அதன் முகம். இருண்டு இருண்டு செல்லும் அசைவற்ற ஆழம் அதன் அகம்” என்றாள் மீனாட்சி. “நீர்முகத்தில் மலர்ந்திருக்கும் தாமரைகளின் தேவி பதுமை. நீராழத்தில் படிந்திருக்கும் சங்குகளின் அரசி சங்கினி. சங்கு ஆழத்து வெண்தாமரை. வெண்தாமரை அலைமேல் மலர்ந்த சங்கு.”

“சங்கும் தாமரையும் ஏந்திய வருணன்” என்றாள் மீனாட்சி. “
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் - நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு - அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி.
('மலர்' ஆகுபெயர். நீர்மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.).

மணக்குடவர் உரை
புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி; அதுபோல மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம். இஃது ஊக்கம் இதனானே உண்டாமென்றது.

மு.வரதராசனார் உரை
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

சாலமன் பாப்பையா உரை
நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே. 

Thirukkural - Management - Thoughts
Positive thoughts are an everlasting wealth. Let us see what a person's thoughts can do to his 
success. Valluvar uses a simile in Kural 595.

The lotus rises with the water,
And a man as high as his will

The length of the root of a lotus plant depends on the depth of the water in which it grows. Similarly, the height of a person's success, personal and professional, depends on the depth of his thoughts. That thought establishes the connection between a person's thoughts and his personal and professional achievements.

English Meaning - As I taught a kid - Rajesh
The taller the water tank the taller the stem of the lotus. The taller the stem of the lotus, more the flower blossoms. Similarly the more a person has will power and perseverance, and relentlessly puts efforts, the more the growth would be

Questions that I ask to the kid
When and how will your growth be high?
What does Lotus flower signify you?

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

குறள் 137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒழுக்கத்தின் - ஒழுக்கம் -  நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

எய்துவர் - எய்து-தல் - eytu-   5 v. [T. eyidu, M.eytu.] tr. 1. To approach; அணுகுதல் நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10). 2. Toobtain, acquire, attain; அடைதல் ஏமம் வைகலெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து) 3. Toreach, as a place; தூநிறக் கங்கையாள்சூழ லெய்தினான் (பாரத. குருகுல. 34). 4. To revere; பணிதல் இளங்கொடியேயெய்தும் (தஞ்சைவா. 386). 5. To leave, forsake; நீங்குதல் எய்தலில்லாத் திருவின் (தஞ்சைவா. 386). -- intr. 1. Tobe adapted, suitable; பொருந்துதல் காலத்தோடெய்த வுணர்ந்து செயல் (குறள், 516). 2. To happen, occur; சம்பவித்தல் எட்டி குமர னெய்தியதுரைப்போன் (மணி. 4, 64). 3. To appear, become, crop up; உண்டாதல் மாசெனக்கெய்தவும்(கம்பரா. சிறப். 6). 4. To be sufficient, adequate;போதியதாதல். சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென்றெண்ணி (ஐந். ஐம். 38).  

மேன்மை - சிறப்பு; பெருமை; கண்ணியம்.

இழுக்கத்தின் - இழுக்கு  - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

எய்துவர் எய்து-தல் - eytu-   5 v. [T. eyidu, M.eytu.] tr. 1. To approach; அணுகுதல் நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10). 2. Toobtain, acquire, attain; அடைதல் ஏமம் வைகலெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து) 3. Toreach, as a place; தூநிறக் கங்கையாள்சூழ லெய்தினான் (பாரத. குருகுல. 34). 4. To revere; பணிதல் இளங்கொடியேயெய்தும் (தஞ்சைவா. 386). 5. To leave, forsake; நீங்குதல் எய்தலில்லாத் திருவின் (தஞ்சைவா. 386). -- intr. 1. Tobe adapted, suitable; பொருந்துதல் காலத்தோடெய்த வுணர்ந்து செயல் (குறள், 516). 2. To happen, occur; சம்பவித்தல் எட்டி குமர னெய்தியதுரைப்போன் (மணி. 4, 64). 3. To appear, become, crop up; உண்டாதல் மாசெனக்கெய்தவும்(கம்பரா. சிறப். 6). 4. To be sufficient, adequate;போதியதாதல். சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென்றெண்ணி (ஐந். ஐம். 38).  

எய்தாப் - அணுகாத ; அடையாத ; பணியாத ; நீங்காத ; உண்டாகாத 

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

முழுப்பொருள்
ஒருவர் ஒழுக்கத்தை பேணிப் பின்பற்றினால் அவர் மேன்மையை அடைவார். பெருமை கைக்கூடும். அதுவே ஒழுக்கத்தை பின்பற்றாமல் தாழ்வானவற்றை செய்தால் அவர் இழிவுநிலையை அடைவார். கீழ்மக்கள் என்று கருதப்படுவார். ஒழுக்கத்தை பின்பற்றாத காரணத்திற்காக நீங்காத பழியையும் பெறுவார். 

ஒழுக்கத்தை பின்பற்றினால் +1 அதாவது உயர்வு, ஒழுக்கத்தை பின்பற்றவில்லை என்றால் 0 அல்ல -1 அதாவது வீழ்ச்சி. 

இதே கருத்தை பழமொழிச் செய்யுள், “இழுக்கத்தின் மிக்க இழிவில்லை – இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு” என்கிறது.

இக்குறள் ஒழுக்கம் என்னும் குணத்திற்கு மட்டுமல்ல. நமது அன்றாட வேலைகளில் நாம் செலுத்தும் ஒழுக்கத்திற்கும் (discipline/work-ethics) பொருந்தும். ஒருவர் தன்னுடைய வேலையை செவ்வென செய்தால் அவர் முன்னேறுவார். ஒருவர் தன்னுடைய உறவுகளை பேணினார் என்றால் மக்களை சம்பாதிப்பார். அதுவே தனது வேலையை தனது கடமையை செய்யவில்லை என்றால் அவர் வேலையிலும் சரி பொருளாதார ரீதியாகவும் சரி வீழ்ச்சியே அடைவார். அதேப்போல உறவுகளை பேணவில்லையென்றால் தனிமைப்படுத்தப்படுவார். சுற்றம் இல்லை எனில் செல்வம் இல்லை என்று பொருள்.

மேலும்: அஷோக் உரை

மைந்தனுடன் தனித்துலாவுகையில் “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படவேண்டும், மைந்தா” என்றார். “மானுடர் எவரும் ஒழுக்கத்தின்பொருட்டு கணந்தோறும் உள்ளத்துடன் போரிட்டாகவேண்டும். சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் நம் ஒழுக்கத்துடன் ஆட விடாய்கொண்டுள்ளன. இனியமலர்கள், நறுமணங்கள், தென்றல், வண்ணங்கள், ஒளிகள் அனைத்தும் பிறழ்க பிறழ்க என்றே நம் உள்ளத்திடம் ஆழமாக சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆண்கள் தங்கள் விழைவால் வழிதவறுகிறார்கள். கன்னியர் தங்கள் ஆணவத்தால், அன்னையர் தங்கள் அன்பால் வழிபிழைக்கிறார்கள். அழகர்கள் பிறர் விழைவால் பிறழ்வுகொள்கிறார்கள். மைந்தா, ஒழுக்கம் என்பது அறத்திற்குக் கொண்டுசெல்லும் பாதை. ஒழுக்கத்தில் மாறாதிரு. உன் மதிப்பால் உவகையே கொள்முதல் செய்யப்படும்.”

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் லியோ டால்ஸ்டாய் பற்றிய ஒரு உரையில் (லியோ டால்ஸ்டாய் இவ்வாறு கூறுவாதுவதாக) இவ்வாறு கூறுகிறார் (https://www.youtube.com/watch?v=21Q_4mQG5TI @42:55)

ஆன்ம விடுதலை என்பது மேலான ஒழுக்கம் வழியாக மேலான அறம் வழியாக தான் சாத்தியம். ஏன் ஒழுக்கமும் அறமும் முக்கியம் என்றால் தனி மனிதன் ஒருவனின் மீட்சியும்/மீட்புமும் நிறைவும் அதில் தான் இருக்கிறது.

ஒழுக்கம் இல்லாதவன் மேலான இன்பங்களை அடைய முடியாது. ஒரு குழந்தையை தூய அன்போடு மடி மேல் எடுத்து வைக்க முடியாது.

பரிமேலழகர் உரை
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.

மு.வரதராசனார் உரை
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.

Thirukkural - Management - Thoughts
A person can achieve greater heights in his life; lead a noble life and satisfied life when he is disciplined. All achievements are possible with the psychology of self- discipline.  There is a lot of power in self- discipline, declares Kural 137.

Right  conduct exalts one, while a bad name
Exposes one to undeserved disgrace.

When a person fails to lead a disciplined life, he will attain all disgraceful and humiliating consequences in his life. Those things are sure to lead him to a blameful and meaningless life. Therefore, personal effectiveness is possible only with personal discipline.


சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.

நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.

சாந்தி பாஸ்கரசந்திரன் அவர்கள் "குழந்ததைகளின் பேருலகம்" என்ற ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார். அதில் "குழந்தைகளின் ஞாபக மறதி நோயல்ல" என்ற ஒரு கட்டுரையில் ஞாபக சக்திக்கு ஒழுங்கு எவ்வளவு முக்கியம் என்று கூறியுள்ளார்

ஞாபகசக்தி எனப்படும் நினைவாற்றல் திறன் அனைவருக்கும் சமமாகவே உள்ளது. ஆனால், அதை முறையாகப் பயன்படுத்துவதில் தான் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறார்கள். மூளையில் உள்ள நினைவத்திலிருவ்து ஏதாவது ஒரு தகவல் தேவையான நேரத்திற்கு நினைவிற்கு வர வேண்டுமென்றால் முதலில் அந்தத் தகவலை சரியான முறையில் பதிவு செய்து வைக்க வேண்டும். ஞாபகமறதிக்கு முக்கிய காரணம், தகவல்களை சரியான முறையில் மூளையில் பதிந்து வைக்கும் திறன் குறைவாக இருப்பதுதான். எனவே, குழந்தைகளின் மதிப்பெண் குறைவிற்கு நினைவாற்றல் குறைபாடு காரணமல்ல. 

'பென்சிலை எங்கே வைத்தோம்' என்று பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் வீடு முழுக்கத் தேடுவது, பள்ளிக்கு வந்து பையை திறந்ததும் கணக்கு நோட்டு கொண்டு வராததை அறிந்து பதறுவது, வீட்டுப்பாடத்தை மறந்துவிட்டு ஆசிரியரிடம் திட்டு வாங்குவது, நன்றாக படித்த பாடம் தேர்வு எழுதும்போது உடனடியாக ஞாபகத்திற்கு வராதது, என பல சந்தர்ப்பங்களில் 'ச்சே! இவ்வளவு மறதியாக இருக்கிறோமே' என்று பொதுவாக வயது வித்தியாசமின்றி எல்லா பிள்ளைகளும் தங்கள் மீதே எரிச்சல் பட்டுக்கொள்வதுண்டு. 

ஒரு திரைப்படமும் அதில் வரும் காட்சிகள் மற்றும் பாடல்கள் மனதில் பதிகிற அளவிற்கு பள்ளிக்கூடப் பாடம்  மனதில் பதிவதில்லையே ஏன்? ஆர்வம் மற்றும் கவனம் இல்லாததோடு ஓர் ஒழுங்கு இல்லாததுமே இதற்குக் காரணம். 

ரொம்ப மறதி என்று கூறும் குழந்தைகளிடம் பேசிப் பாருங்கள். கிரிக்கெட் ஸ்கோரைப் பற்றி கேட்டால் விலாவாரியாக பேசுவார்கள். எந்த மேட்சில், எந்த பிளேயருடைய ஆட்டம் பற்றி கேட்டாலும் புள்ளிவிவரமாகச் சொல்வார்கள். பிரச்னை நினைவாற்றலில் இல்லை, ஆர்வத்தில்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. நினைவாற்றலுக்கு ஆர்வமே அடிப்படை. எதில் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமோ, அதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும். 

அதேபோல ஏதாவது ஒரு பாடப்புத்தகத்தில் அட்டைப்படத்தைக் குழந்தைகளிடம் வரையச் சொன்னால், பெரும்பாலோர் தவறாகத்தான் வரைவார்கள். தினமும் பார்க்கிற புத்தகம்தான் என்றாலும் சரியாக வரைய முடியாததற்குக் காரணம், அவர்கள் புத்தகத்தை தினமும் பார்க்கிறார்களே தவிர கவனித்துப் பார்ப்பதில்ல்லை. நினைவாற்றலின் அடிப்படையான கவனிக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் இது போன்ற பிரச்னைகள் குறைந்துவிடும்.

அதேபோல ஒழுங்கின்மையும் ஒரு காரணம். லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ள ஒரு நூலகத்தில் நமக்குத் தேவையான புத்தகத்தை உடனடியாகத் தேடி எடுக்க முடிகிறது. ஆனால், ஒரு சில அறைகள் மட்டுமே உள்ள நம் வீட்டில் நமக்குத் தேவையான பொருளை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையே, அது ஏன்?ஒழுங்கின்மைதான் அதற்குக் காரணம். குழந்தைகள்தான் என்றில்லை பெரியவர்களுக்கும் இதே நிலைதான். அதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

பள்ளியிலிருந்து வந்ததும் ஷுக்களை கழற்றி அதற்குரிய ஸ்டாண்டில் வைக்க வேண்டும். சாக்ஸை கழற்றி துவைப்பதற்கென்று உள்ள இடத்தில் போட வேண்டும். பெல்ட், டை ஆகியவற்றை அதற்கென்று உள்ள இடத்தில் கழற்றி வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு செயலையும் ஓர் ஒழுங்கோடு தொடர்ந்து செய்தால், மனதின் செயல்பாடுகளிலும் ஒழுங்கு ஏற்படத் துவங்கும். அதன் மூலம் ஆர்வமும் கவனமும் ஏற்படும்.

...
...
பிள்ளைகள் குறைந்தது 8 மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுது படிப்பதைப் பழக்கப்படுத்த வேண்டும். தூங்கப் போகும் முன்பாக அன்று படித்த அனைத்தையும் ஒருமுறை மேலோட்டமாக நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது மூளையின் சில பகுதிகள் விழிப்புடன் இருந்து தகவல்களை குறுகிய காலை நினைவறையில் (short term memory) இருந்து நீண்ட கால நினைவறைக்கு (long term memory) எடுத்துச் சென்று பதிவு செய்துகொள்ளும். படிக்கும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியமான பயிற்சியாக இருக்கும். 


English Meaning - As I taught a kid - Rajesh
When one follows discipline/work-ethics/duties, one progress and attains growth. When one consistently follows discipline for a long time, one attains greatness. However, if one is indiscipline, it leads to destruction and ruins life and health. Indiscipline leads to negative fame, difficulties in life.

Questions that I ask to the kid
What does one attain by following discipline?
What does one attain by not following discipline?

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

குறள் 39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்.

அறத்தான் - அறவழி வாழ்வினால்

வருவதே வருதல் 

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி

எல்லாம் - முழுதும்

புறம்பு - puṟampu   n. புறம்¹. [K. hoṟagu.]1. Exterior, outside; வெளியிடம். பொங்கரில்வண்டு புறம்பலை சோலைகள் (பெரியபு. ஆனாய. 7). 2.That which is separate, detached, distinct or exclusive; தனியானது. (W.) 3. Other; மற்றை. (W.)4. Back of a person; முதுகு. தன்னைப் புறம்பழித்து நீவ (கலித். 51).

புறத்த - இன்பம் போலிருந்து துன்பத்தில் சேர்ப்பவை

புகழும்  - புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

இல - இல்லை 

முழுப்பொருள்
அறத்தின் வழி நிற்பதனாலும் அறம் செய்வதனாலும் வருவதே மெய்யான இன்பம். அவ்வின்பமே நிலைத்து நிற்கும். புகழை தரும். சான்றோர்கள் போற்றுவார்கள். 

அறத்திற்கு புறம்பான வழிகளில் (அதாவது தீய வழிகளில், வஞ்சகத்தால்) பெரும் பொருளோ இன்போ இன்பம் அல்ல. அவை நிலைத்து நிற்காது. துன்பத்தை தரும். ஆதலால் அவர்களுக்கு அது புகழும் தராது. சான்றோர்களும் மதிக்கமாட்டார்கள். 

அறத்தை / தருமத்தை /கடமைகளை செய்து வருவதே மெய்யான் (பேரின்பம்/)இன்பம். மற்றவற்றை செய்து வருவது இன்பம் கிடையாது. அது சிற்றின்பம்.

இக்குறளில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் நாம் இன்னொன்றை அறிந்துக்கொள்ளலாம். நம் குடியின் பெருமையாலும் நம் குடும்பம் நமக்கு தரும் சலுகைகளால் வரும் இன்பம் எல்லாம் இன்பம் அல்ல. நாம் அறம் செய்து பெற்றால் தான் அது மெய்யான இன்பம். ஆதலால் ஒருவருடைய அறச்செயலே ஒருவருக்கு புகழை தரும்.

ஒருவர் இலஞ்சம் வாங்கி வசதியாக வாழலாம். ஆனால் நேர்மையாக வாழ்ந்தவரையே இவ்வுலகம் போற்றும்.

அறம் செய்து வருவது இன்பம். அறம் செய்யாமல் சிற்றின்பம் வரலாம் வர வாய்ப்புகள் அதிகம். ஆனால் அது நீடிக்காது. ஏனெனில், தன் நெஞ்சே தன்னைச் சுடும். மேலும் இவ்வுலகம் அறம் செய்யாது வந்த பொருளையும் புகழையும் போற்றாது. குறிப்பாக புறத்தே போற்றாது ஏசும்.

அதனால் தான் கீழ்க்காணுமாறு திருவள்ளுவர் பின்பு கூறியுள்ளார்

ஒப்புமை
”உருவமும் அழுகுநல் ஒளியுங் கீர்த்தியும்
செருஇடை வெல்வலத் திறலும் சிந்தைசெய்
பொருளவை வருதலும் போக மும்நல்ல
திருவுடை யறத்தது செய்கை என்றனன்” (மேருமந்தர.447)


மேலும்: அஷோக் உரை


தருமன் “அறத்தின்மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கையென்பது அது வெல்லும் என்பதனால் அல்ல. அளிக்கும் என்பதனால் அல்ல. அழைத்துச் செல்லும் என்பதனாலும் அல்ல. அது எனக்கு உவப்பானது, அது ஒன்றே இயல்பானது என்பதனால்தான்” என்றார். பீஷ்மர் விழிகள் ஈரம் கொள்ள, நெகிழ்ந்து தொண்டை அசைய, கைநீட்டி அவர் கைகளை பற்றிக்கொண்டார். “அவ்வண்ணமே இரு, மைந்தா! இம்மண்ணில் எதுவும் உன்னை துயர்கொள்ளச் செய்யாதிருக்கட்டும்” என்றார். அவரது கைகள் தருமனின் கைகளுடன் சேர்ந்து நடுங்கின. “தங்கள் வாழ்த்து என்றும் என்னுடன் இருக்கும்” என்றார் தருமன்.

 “நால்வகை மெய்ப்பொருள்களில் அறம் காலம்பொறுத்தது. பொருள் இடம்பொறுத்தது. வீடு அறியவொண்ணாதது. கண்முன் என இருப்பது இன்பம் ஒன்றே. இன்பமளிப்பதே அறம். அதற்கு உதவுவதே பொருள். அதன் விளைவே வீடு” என குரு சொன்னதையே தானும் உரைத்தாள்

அவன் எழுந்தமைந்து “ஆம், சொல். காமம் கலந்தால் எல்லாமே கலை என்றான் பாணன். அன்னை நல்லுரை கலைவடிவு கொள்வதெப்படி என்று பார்க்கிறேன்” என்றான். அவள் விழிகள் பதறாமல் அவனை நோக்கி “மைந்தா, காமம் மனிதனைப் பெருக்கும் இன்பமல்ல. ஒவ்வொரு கணமும் அவனை குறைக்கும் இன்பம். விளைநிலத்து விதை என அவனைப் பெருக்குவது அறம் ஒன்றே. காமத்தையும் செல்வத்தையும் அறியாது அறம் நோக்கி சென்றதன் தோல்வியை முன்பு நீ அறிந்தாய். நன்று! இப்போது காமத்தைத் தொடர்வதன் எல்லையை அறிந்துவிட்டாய். செல்வத்தையும் அறிந்துளாய். கடந்து சென்று அறத்தை அறி. இது தெய்வங்கள் உனக்களித்திருக்கும் நல்வாய்ப்பென்று உணர். இல்லையேல் பேரழிவை நீ சந்திப்பாய்” என்றாள்.
.....
அறம் இறப்பதில்லை. தன் சிதையிலிருந்தும் முளைத்தெழும் ஆற்றல் கொண்டது அது” என்று ஒரு புலவர் தன் இரு கைகளையும் விரித்து கூவினார். 

எழுத்தாளர் ஜெயமோகனின் ”ஏழரைப்பொன்” என்ற கட்டுரையில் சதனாந்தன் என்ற ஒருவரிடன் கொண்ட உரையாடலில் இருந்து ஒரு பகுதி.

அவர் அருகே வந்து அங்கிருந்த சிறிய முக்காலியில் அமர்ந்தார். “எந்த ஊர்?” என்று என்னைக் கேட்டார். நான் “நாகர்கோவில்” என்றேன். “ எனக்குத் திருவனந்தபுரம் பக்கம் காட்டாக்கடை” என்றார். தன் பெயர் சதானந்தன் என்றார். சிரித்தபடி ”சதா ஆனந்தமாக இருக்கவேண்டும் ஆனால் சிறுவயதில் அப்படி இருக்கவில்லை” என்றார்

தந்தை சிறுவயதிலேயே இறந்து போய்விட சித்தியின் வளர்ப்பில் பலவகையான கொடுமைகளைச் சந்தித்து இளமைப்பருவத்தைக் கழித்ததையும், படிக்க ஏங்கி அதற்கான வாய்ப்பு இல்லாமல் துன்புற்றதையும், ஒன்பது வயதில் வீட்டை விட்டு ஓடிவந்து ஏற்றுமானூரிலேயே ஒரு உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்ததையும், ஒவ்வொரு நாளும் அடியும் வசைகளும் பெற்று மூன்று வேளை உணவை மட்டுமே ஊதியமாக பெற்றுக் கொண்டு அங்கே பணியாற்றியதையும் பற்றி சதானந்தன் சொன்னார்.

ஆனால் நான் மனந்தளரவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆகவே ஏற்றுமானூரப்பன் எனக்கு உதவுவார் என்று நினைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு சிறிய டீக்கடையை ஆரம்பித்தேன். அது வளர்ந்தது. இந்தக் கட்டிடத்தை வாங்கி விடுதியை ஆரம்பித்தேன். திருமணம் செய்து கொண்டேன். நான்கு பிள்ளைகள் நான்குபேருமே எர்ணாகுளத்திலும் திருவனந்தபுரத்திலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.”

எனக்கு ஒரு குறையும் இல்லை” என சதானந்தன் தொடர்ந்தார் “மனைவி மகன்களுடன் இருக்கிறாள். இந்த விடுதி என் பொறுப்பில் இருக்கிறது. இதை விற்றுவிட்டு வரும்படி என்னைச் சொல்கிறார்கள். ஆனால் ஏற்றுமானூரப்பனின் பிரசாதம் இது. நான் உயிரோடிருக்கும் வரை இங்குதான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அதை அவர்களும் புரிந்து கொண்டார்கள். ஆகவே தான் இங்கிருக்கிறேன். காலையிலும் மாலையிலும் ஏழரப்பொன் ஆனைமேல் ஏறியவனை வணங்குகிறேன். மனம்நிறைவாக இருக்கிறது” என்றார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் "மலையரசி" என்ற ஒரு சிறுகதையில் (முன்நாள்) ராணி பார்வதி பாய்-க்கும் ராஜா ராமா வர்மா விற்கும் நடக்கும் உரையாடல் அறனை வலியுறுத்தும். செயலே மகிழ்ச்சியை அளிக்கும் என்று கூறும். (முழு கதையையும் இச்சுட்டியில் தட்டி வாசிக்கவும். மிக நல்ல ஒரு முக்கியமான சிறுகதை - புனைவு கலந்த ஒரு வரலாறு)

மு.கு: சிறுகதையின் மையப் பகுதியை இங்கு வெட்டி ஒட்டி உள்ளேன். குறள் சொல்ல வருவதை சில வரிகளில் bold செய்து காட்டியுள்ளேன். ஆயினும் முழு கதையையும் சுட்டியில் தட்டி வாசிக்க பரிந்துரைப்பேன்.

பார்வதி பாய் தோலுறையிட்ட சிறிய டச்சு நாற்காலியில் அமர்ந்தாள். “ராமா உன் உடல்நிலை மோசமாகியிருக்கிறது. நான் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை” என்றாள்.

“நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்றார் ராமவர்மா.

“நான் நீ வழக்கம்போல சங்கீதத்தில் மூழ்கி இருக்கிறாய் என்று நினைத்தேன். உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றார்கள். உன் உடல்நிலை எப்போதுமே மோசமாகத்தான் இருந்தது என்று நினைத்துக்கொண்டேன்” என்றாள் பார்வதி பாய். “நான் உன்னை வந்து பார்ப்பதே உனக்குப் பிடிக்கவில்லை. சென்றமுறை வந்தபோது மிகவும் கொந்தளித்துவிட்டாய். ஆகவே நான் வராமலிருந்தேன்…”

ராமவர்மா கட்டில்மேல் கால்களை தூக்கி வைத்துக்கொண்டார்.

“மிகமிக மெலிந்துவிட்டாய். உன் கைகளும் கால்களும் சுள்ளிபோலிருக்கின்றன” என்று பார்வதி பாய் சொன்னாள். “நான் உன்னை அப்படியே விட்டிருக்கக்கூடாது…”

“நீங்கள் கவலைப்படவேண்டாம் இளையம்மை.”

“நான் கவலைப்படாமல் யார் கவலைப்படுவார்கள்? நான் என் அக்கச்சிக்கு கொடுத்த வாக்கு… அக்கச்சி என்னை மன்னிக்கமாட்டார்”

“அக்கச்சி அக்கச்சி… வேறு பேச்சே இல்லையா? உங்கள் வாழ்க்கையே உங்கள் அக்கச்சிக்கு கொடுத்த வாக்குறுதி மட்டும்தானா?”

நிதானமாக “ஆம், அந்த வாக்குறுதி மட்டும்தான்” என்று பார்வதி பாய் சொன்னாள். “ஆகவேதான் எனக்கு குழந்தைகள் வேண்டாம் என்று நினைத்தேன். என் ரத்தத்தில் இருந்து அவர்கள் பிறந்தால் அதிகார ஆசை கொண்டிருப்பார்கள் என்று சந்தேகப்பட்டேன். வைத்தியர்களிடம் கேட்டு குழந்தையில்லாமல் ஆக்கிக்கொண்டேன். ராகவ வர்மா கோயில்தம்புரானுக்கும் இது தெரியும். திசைதிரும்பாத அம்புதான் ஆற்றல் கொண்டது, அதுவே இலக்கடையும் என்று என் ஆசிரியர்கள் எனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.”

“வெறும் இலக்கு, அவ்வளவுதானா வாழ்க்கை?”

“ராமா, மனித வாழ்க்கை என்றால் என்னவோ பெரிதாக நினைக்கிறாய். அப்படியெல்லாம் இல்லை. உறுதியாகப் பற்றிக்கொள்ள ஒரு விஷயம்போதும், அதைக்கொண்டு கடந்துசெல்ல வேண்டிய ஒன்றுதான் அது…. அதுகூட இல்லாதவர்கள்தான் துரதிருஷ்டசாலிகள்… என் அக்கச்சி எனக்கு ஒரு இலட்சியத்தை தந்து என் வாழ்க்கையை அர்த்தப்படுத்தினாள்.”

“அவ்வளவுதான் வாழ்க்கை என்றால் அதைப்போல அபத்தம் வேறொன்றுமில்லை. அதை ஏன் வாழ்ந்து தொலைக்கவேண்டும்?” என்று தலைகுனிந்து ராமவர்மா முணுமுணுத்தார்.

“சரி, வாழ்க்கை என்றால் என்ன? நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்? நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய்?”

“தெரியவில்லை இளையம்மை. ஆனால் நான் வாழ்க்கை பற்றி கனவுகண்டுகொண்டே இருக்கிறேன். சிலசமயம் காலத்தால் அழியாத கீர்த்தனைகளை செய்யவேண்டும் என நினைக்கிறேன். சிலசமயம் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்து சங்கீதம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏதாவது ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்துவிடவேண்டும் என்று தோன்றும்போதே உலகமெங்கும் செல்லவேண்டும் என்றும் தோன்றுகிறது. எனக்கு என்னவேண்டும் என்று உண்மையாகவே தெரியவில்லை. ஆனால் கனவுகாணாத நாளே இல்லை. என் வாழ்க்கையே கனவுகளால் கழிந்துவிட்டது”

“என்ன பேச்சு இது? உன் வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது. அரசர்கள் பொதுவாக பட்டத்திற்கு வரும் வயது இது…” என்றாள் பார்வதி பாய்.

“எனக்கு சலித்துவிட்டது. பதினேழு ஆண்டுகள் இந்த கூண்டுக்குள் அடைபட்டு திணறிக்கொண்டிருக்கிறேன்… நேற்று நினைத்துக்கொண்டேன், என் சிறகுகள் எல்லாம் உதிர்ந்துவிட்டன. இப்போது இந்தக்கூண்டை திறந்துவிட்டால்கூட என்னால் பறக்கமுடியாது”

“இந்தமாதிரிப் பேச்சுக்களை நான் வெறுக்கிறேன். எல்லார் மனதிலும் ஊக்கமும் சோர்வும் நம்பிக்கையும் கசப்பும் விதைகளாக உள்ளன. அதில் நமக்கு வேண்டியதை பேசிப்பேசி வளர்த்துக்கொள்கிறோம். உன்னுடைய சோர்வையையும் கசப்பையும் வளர்த்துக்கொள்வதை தவிர வேறென்ன பயன்?”

“இளையம்மை, நான் இந்த பதினேழு வருடங்களில் ஒரு நாளாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேனா?”

“அது உன்னுடைய சிக்கல்… நீ ஒரு நாட்டின் அரசன். அந்தக் கடமையை நீ ஒழுங்காகச் செய்திருந்தால் அத்தனை மகிழ்ச்சிகளும் உன்னைத் தேடி வந்திருக்கும். உன் கடமையை நீ ஒழுங்காகச் செய்யவில்லை. ஆகவே ஒவ்வொன்றும் சிக்கலாகி உன்னை சுற்றிக்கொண்டன.”

“நான் என் கடமையை ஒழுங்காகச் செய்திருந்தால் ரெஸிடென்ட் கல்லன் என்னை போற்றி மடிமேல் வைத்து கொஞ்சியிருப்பாரா?”

“இல்லை, நீ அவரை கையாள்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருப்பாய்” என்று பார்வதி பாய் சொன்னாள். “அரசாட்சி என்பது ஒரு போர், ஒரு விளையாட்டு. அதில் எதிரிகள் உண்டு. நம் ஆட்டத்தை தீர்மானிப்பவர்கள் எதிரிகள்தான்.”

ராம வர்மா தலையை பொறுமையின்றி அசைத்தார்.

“நான் என் அக்கச்சியிடமிருந்து இந்த நாட்டின் ரீஜண்ட் மகாராணிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது எனக்கு வயது பதிமூன்று. அன்று இங்கே ரெஸிடெண்டாக இருந்தவர் கர்னல் மன்றோ… இன்றுகூட திருவிதாங்கூரில் அவர் பெயரைச் சொன்னால் அச்சமும் வெறுப்பும் பக்தியும் கலந்து உருவாகிறது. அவர் பத்து கர்னல் கல்லன்களுக்கு சமம்” என்று பார்வதிபாய் தொடர்ந்தாள்.

“கர்னல் மெக்காலே வேலுத்தம்பி தளவாயை ஒடுக்கியவர். அவருக்கு திறமை போதவில்லை என்று சொல்லி மலபாரில் இருந்து கர்னல் மன்றோவை இங்கே அனுப்பினார்கள். அவரை இங்கே இரும்புச்செக்கு என்று சொல்வார்கள். திருவிதாங்கூரை பிழிந்து கடைசித்துளிவரை கொண்டு செல்வதற்காகவே கம்பெனி அவரை அனுப்பியது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தானை வென்று மைசூரை ஆட்சிசெய்தவர் அவர். மராத்தா போர்களில் பங்கெடுத்தவர். ரெஸிடென்ட் கல்லன் அவருடன் ஒப்பிடுகையில் ஒரு வயதால் குழம்பிப்போன கிழவர் மட்டும்தான்.

“என் அக்கச்சியின் காலத்திலேயே கர்னல் மன்றோ நேரடியாகவே திருவிதாங்கூரின் திவானாக அவரே பொறுப்பேற்றுக்கொண்டார். அதற்கு என் அக்கச்சி மன்றாடி விண்ணப்பிப்பதாக ஒரு கடிதமும் எழுதி வாங்கிக்கொண்டார். நான் ரீஜண்ட் ஆக வந்தபோது அவர்தான் ரெஸிடென்டும் திவானும் எல்லாமே… பாப்பு ராவ் என்று ஒரு அடிமையை வைத்து எல்லாவற்றையும் அவரே செய்தார். நான் உலகம் தெரியாத சின்னப்பெண். உன்னைப்போல ஆங்கிலக் கல்வி உடையவள் அல்ல. என் துணைக்கு யாருமே இல்லை” பார்வதி பாய் தொடர்ந்தாள்

“ஒரு சின்ன பிழை செய்தால் போதும் நாட்டை வெள்ளைக்காரர்கள் எடுத்துக்கொள்வார்கள். மிகமிகக் கவனமாக நான் செயல்பட்டேன். கர்னல் மன்றோவை எனக்கான எதிரியாக அல்ல, என் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான களமாகவே நான் எடுத்துக்கொண்டேன்

முதலில் மெட்ராஸ் பிரசிடென்ஸியில் அவருக்கு எதிரி யார் என்பதை ஒற்றர்கள் வழியாக அடையாளம் கண்டேன். அந்த எதிரிகளின் காதில் அவரைப்பற்றிய எதிர்மறைச் செய்திகளை போட்டுக்கொண்டே இருந்தேன். கர்னல் மன்றோ இங்கே திவானாக இருந்து தனிப்பட்ட லாபம் சம்பாதிக்கிறார் என்று கெட்டபெயரை உருவாக்கினேன்.

“உண்மையைச் சொல்வதற்கு என்ன, கர்னல் மன்றோ மிகமிகமிக நேர்மையானவர். ஈவிரக்கமற்றவர், ஆனால் ஊழலே இல்லாதவர். ஆனால் அவரை ஊழல்செய்கிறார் என்று முத்திரை குத்தினேன். ஒரு நேர்மையாளன் நேர்மையற்றவன் என்று சொல்லப்படும்போது சமநிலை இழக்கிறான். கர்னல் மன்றோ அவருக்கு கவர்னர் எழுதிய கடிதங்களுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார். மெட்ராஸ் கவர்னர் கர்னல் மன்றோமேல் ஒரு விசாரணையை ஆணையிட்டார். அவர் திவான் பதவியிலிருந்து விலகினார்” பார்வதி பாய் சொன்னாள்.

“நான் மேலும் அவருக்கு நெருக்கடி கொடுத்தேன். அவருடைய மகன் இங்கே காப்டன் பதவியில் இருந்தான், அவர் அவனுக்காக நெறிகளை மீறுகிறார் என்று பழிகிளப்பிவிட்டேன். கர்னல் மன்றோ மெல்ல மெல்ல இங்கிருந்து விலக்கப்பட்டார். ஆயிரத்தி எண்ணூற்றி பதினெட்டில் அவர் லண்டன் திரும்பும்போதுகூட அவர் அவமானமடைந்து இங்கிருந்து சென்றதற்கு நானே காரணம் என்று அறிந்திருக்கவில்லை. அதுதான் ராஜதந்திரம்”

“அதை நான் என் சொந்த லாபத்திற்காகச் செய்யவில்லை. அவருக்குப்பின் வந்த ரெஸிடென்ட் மோரிசன் எனக்கு உகந்தவராக இருந்தார். கர்னல் மன்றோவைப்போல அவர் திருவிதாங்கூரை கறவைப் பசுவாக மட்டும் நினைக்கவில்லை. ஆகவேதான் நான் மலைக்குடியேற்றங்களை வளர்க்கமுடிந்தது. கடலோரச்சந்தைகளை உருவாக்க முடிந்தது. திருவிதாங்கூரை கடனில் இருந்து மீட்டேன். இன்று நீ காணும் கல்விவளர்ச்சி, பட்டினியில்லா நிலைமை இரண்டுமே அப்படித்தான் உருவாகி வந்தன” என்றாள் பார்வதி பாய்.

தலைகுனிந்து அமர்ந்திருந்த ராமவர்மாவை பார்த்துக் கொண்டு அவள் தொடர்ந்தாள் “கர்னல் மன்றோ இரக்கமற்றவர், ஆகவே நானும் இரக்கமற்றவள் ஆனேன். ஏனென்றால் கூரிய வாளை கூரியவாளால்தான் எதிர்க்கமுடியும். அதுதான் அரசாட்சி” மெல்லிய சிரிப்புடன் “நீ என்ன நினைத்தாய், உன் ஆட்சியை உனக்கு தட்டில் வைத்து பரிமாறுவார்கள் என்றா? எந்த அரசாவது எவருக்காவது அப்படி அளிக்கப்பட்டிருக்கிறதா?” என்றாள்.

ராமவர்மா பெருமூச்சுவிட்டார். “நான் அரசனாக ஆகும்போது எத்தனையோ கனவுகளுடன் இருந்தேன். கீழ்மட்ட ஊழலை முழுக்க நீக்கம் செய்யவேண்டும், அத்தனைபேருக்கும் அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை வரும்படி நீதி முறையை கொண்டு வரவேண்டும், வணிகப்பாதைகளை முழுக்கமுழுக்க பாதுகாப்பாக அமைக்கவேண்டும்… எத்தனையோ திட்டங்கள் வகுத்தேன்”

“அதற்கு நீ என்ன செய்தாய்?” என்று பார்வதி பாய் கேட்டாள். “உனக்கு ஆசிரியராக இருந்த சுப்பா ராவை திவானாக ஆக்கவேண்டும் என்று நினைத்தாய். ஏனென்றால் அவரிடம் உன் கனவுகளை எல்லாம் சொல்லியிருந்தாய். அவர் அவற்றையெல்லாம் ஆதரித்தார். நானும் ரெஸிடென்ட் மோரிசனும் அதை எதிர்த்தோம். ஏனென்றால் எங்களுக்கு சுப்பாராவ் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் ரெஸிடென்ட் மோரிசன் மாறுதலாகிப் போனதுமே நீ நான் நியமித்த திவான் வெங்கிட்டராவை பதவிநீக்கம் செய்தாய். உன் ஆசிரியர் சுப்பாராவை திவானாக ஆக்கினாய். அவர் சொன்னார் என்று கொச்சு சங்கரப்பிள்ளையை திவான் பேஷ்காராக நியமித்தாய்…”

“ஆமாம், நான் அரசன். என் அரசை நான் உருவாக்கவேண்டும் என்று நினைத்தேன்.”

“உண்மை, ஆனால் உன் கனவுகளை நிறைவேற்றும் தகுதி நீ நியமித்த அமைச்சருக்கு இருக்கிறதா என்று பார்த்தாயா? அவர் வெறும் ஆசிரியர். ஒரு நிர்வாகி கீழிருந்து படிப்படியாக மேலேறி வரவேண்டும். பலமுறை இதை நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். திவான் என்பவர் அரசின் முக்கியமான எல்லா துறைகளிலும் சில ஆண்டுகளாவது வேலை செய்திருக்கவேண்டும்… ” என்றாள் பார்வதி பாய்.

“சுப்பாராவ் முயற்சி செய்தார்” என்று ராமவர்மா சொன்னார்.

“சுப்பராவ் அத்தனை செயல்களையும் அரைகுறையாகவே செய்தார். உன் எண்ணங்களை எல்லாம் வெறும் ஆணைகளாகவே பிறப்பித்துக்கொண்டிருந்தாய். மாதம் ஐந்தாறு அரசாணைகள்… அந்த ஆணைகள் நிறைவேறினவா என்று நீ பார்க்கவில்லை. அவை என்ன விளைவை உருவாக்கின என்று நீ கவனிக்கவில்லை. அவை வெறும் சந்தைப் பேச்சுக்களாகவே நீடித்தன..” என்று பார்வதி பாய் தொடர்ந்தாள்.

“பதினேழு ஆண்டுக்குமுன் நான் உன்னிடம் சொன்னேன். ஒன்றை நினைப்பதும் சொல்வதும் அல்ல அதை செய்வதுதான் அரசாட்சியில் முக்கியம். நினைக்கையிலும் சொல்லும்போதும் நம்முன் எவருமே இல்லை. செய்ய ஆரம்பிக்கும்போது அதற்கு எதிரான எல்லா சக்திகளும் எழுந்து வருகின்றன. அவற்றை கையாளத் தெரியவேண்டும்”

“அதாவது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தண்டிக்கவேண்டும் என்றால் அதிகாரிகளின் தரப்பையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா?” என்று ராமவர்மா உரக்க கேட்டார்.

“இல்லை. ஆனால் நேர்மையானவரும் திறமையற்றவருமான அதிகாரியை விட திறமையான சற்று நேர்மைக்குறைவுகொண்ட அதிகாரி மேல். முற்றிலும் நேர்மையான அதிகாரி என்பவர் எதையுமே செய்யாமலிருப்பவர்… ஏனென்றால் அரசாட்சி என்பதிலேயே ஒர் அநீதி இருக்கிறது” என்றாள் பார்வதி பாய் “ஆமாம், நாம்தான் இந்நாட்டை ஆட்சி செய்கிறோம். ஆனால் நம் ஆணைகளை இந்த நாடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஆட்சி நடக்கும். ஆணைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதில்தான் அரசனின் ஆட்சித்திறனே இருக்கிறது.”

“எனக்கு புரியவில்லை இளையம்மை… நான் எல்லா இடங்களிலும் தோற்றுவிட்டேன்.”

“ரெஸிடென்ட் கல்லனை இரண்டு ஆண்டுகளாக நீ ஏன் சந்திக்கவில்லை? நான் உன்னிடம் பலமுறை சொன்னேன்.”

“நான் சொன்னேனே, அவருக்கு செவி கேட்கவில்லை. என்னால் கத்திப்பேசமுடியவில்லை. என் நெஞ்சு வலிக்கிறது.”

“அசட்டுத்தனமாகப் பேசாதே” என்று பார்வதி பாய் சொன்னாள்.

“அவருடைய காதில் கொஞ்சம் செவிக்குறைவு உண்டு. ஆனால் அவர் அதை என்னிடம் கூடுதலாக நடிக்கிறார். என்னை கூச்சலிடச்செய்கிறார்”

“சரி, நீ ஏன் அதிகாரிகளைச் சந்திப்பதில்லை? ஏன் திவானைக்கூட சந்திப்பதில்லை?”

“ஏன் சந்திக்கவேண்டும்? இங்கே நான் சொல்வது நடக்கிறதா என்ன? இளையம்மை உங்களுக்கு தெரியும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே ரெஸிடென்ட் கல்லன் எல்லா மனுக்களையும் அவர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று ஆணையிட்டுவிட்டார். எல்லா ஆணைகளையும் அவரே போடுகிறார். நான் அவருடைய ஆணைகளை ஏற்று கைச்சாத்திடவேண்டும் அவ்வளவுதான். அதற்கு நான் எதற்கு?”

“சரி, அதைக்கூட நான் புரிந்துகொள்கிறேன். நீ சென்ற ஆண்டு நாஞ்சில்நாடு போனாய். அங்கே பதினெட்டு பிடாகைக்காரர்களும் உன்னை பார்க்க விரும்பினார்கள். இந்த திருவிதாங்கூரே நாஞ்சில் நாட்டின் அன்னத்தை உண்டு வாழ்வது. நம்முடைய சோற்றுக்கலம் அது. நமக்கு முழுக்கமுழுக்க விசுவாசமானவர்கள் நாஞ்சில்நாட்டு பிள்ளைமார். நீ அவர்களுக்கு சந்திப்பு அளிக்க மறுத்தாய்”

“நான் கன்யாகுமாரிக்கு போய்க் கொண்டிருந்தேன். அங்கே தனியாக இருக்க நினைத்தேன்.”

பொறுமையை தருவித்துக்கொண்டு “நீ என்னதான் நினைக்கிறாய்? உனக்கு என்னவேண்டும்?” என்று அவள் கேட்டாள்.

“நான் அரசன்… அரசனாக நான் பணியாற்றவேண்டும்… அதற்கான உரிமையும் சுதந்திரமும் எனக்கு வேண்டும்”

“அதை நீதான் ஈட்டிக்கொள்ள வேண்டும். அதைத்தான் உன் இளமைநாட்கள் முதல் நான் உன்னிடம் சொல்கிறேன். உன்னை அதற்காக பயிற்சிகொடுக்கத்தான் நான் முயன்றேன். நீ அதையெல்லாம் சித்திரவதைகளாக நினைத்தாய்…”

“இளையம்மை, நீங்கள் அளித்த எல்லா பயிற்சிகளையும் நான் அடைந்தேன். என்னால் ஆயுதப்பயிற்சி பெறமுடியவில்லை. என் மனம் அதில் நிற்கவில்லை.”

“அரசன் முதலில் பயிலவேண்டியது ஆயுதங்களைத்தான். போர்க்கலை வழியாகத்தான் மற்ற கலைகளை புரிந்துகொள்ளவேண்டும்”

ராமவர்மா வெடித்துச் சிரித்து “சங்கீதத்தைக்கூடவா?” என்றார். பார்வதி பாய்யின் முகம் சிவப்பதைக் கண்டு “இல்லை, சிரிக்கவில்லை. வேடிக்கையாக இருந்தது, அவ்வளவுதான்” என்றார்.

“நீ ஒருபோதும் என் சொற்களை செவிகொண்டதில்லை” என்றார் பார்வதி பாய்.

“இளையம்மை அப்படிச் சொன்னால் நான் என்ன செய்ய? நான் திருமணம் செய்துகொண்டதுகூட உங்கள் ஆணைப்படி. என் ஆசை வேறு என்று உங்களுக்கே தெரியும்…”

“ஆமாம், நீ விரும்பிய மாவேலிக்கரை ராமனாமடத்தில் ஓமனத் தங்கச்சியை திருமணம் செய்துகொண்டால் அரசனாக உனக்கு என்ன நன்மை? திருமணம் வழியாக நீ நாஞ்சில்நாட்டின் முழு ஆதரவையும் பெற்றிருக்கவேண்டும் என்று நினைத்தேன். நாயரும் வேளாளரும் உன்னுடன் நின்றிருக்கவேண்டும். அப்போதுதான் நாடே உன் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவேதான் திருவட்டார் அம்மச்சி வீட்டில் நாராயணிப்பிள்ளையையும் நீலம்மைப்பிள்ளையையும் உனக்கு மணமகள்களாக்கினேன். வேளாளர்களில் வடசேரி அம்மவீட்டில் சுந்தரலட்சுமிப் பிள்ளையை உனக்கு தேர்வுசெய்தேன்…”

“தெரிவுசெய்து வாக்கு கொடுத்தபின் எனக்குச் சொன்னீர்கள். உரியநாளில் சென்று நான் பட்டும் கச்சையும் கொடுத்தேன். அவ்வளவு சுதந்திரத்துடன் இருந்திருக்கிறேன்” என்று ராமவர்மா புன்னகைத்தார்

“சுதந்திரம் என்பது ஆற்றலால் வருவது. நான் சொன்னபடி அவர்களை நீ கூடவே வைத்திருந்தால் உன்னைப் பார்த்து ரெஸிடென்ட் கல்லன் பயந்திருப்பார்.”

“அதைவிட நான் இந்த மூன்று பெண்களையும் பார்த்து பயந்தேன் இளையம்மை” என்று ராமவர்மா சொன்னார்.

“என்ன பயம்? அவர்களை நீ ஏறெடுத்தும் பார்க்கவில்லை”

“அவர்கள் தைரியமானவர்கள், உலகியல் கணக்கு ஊறியவர்கள், உங்களைப்போல” என்று ராமவர்மா சொன்னார் “பாடத்தெரியாத பெண்ணுடன் ஒரு வார்த்தைகூட என்னால் பேசமுடியாது.”

பார்வதி பாய் பெருமூச்சுவிட்டாள். “எல்லாவற்றையும் நீயே சீரழித்துக்கொண்டாய். உன் மனம் சங்கீதத்தில் மூழ்கிகிடந்தது. அரசனுக்கு சங்கீதம் வேண்டும், அது குளியல்போல. நீ இரவுபகலாக குளத்திலேயே ஊறிக்கிடந்தாய்…”

......
......
......
......
எனக்கும் அரசியல் விளையாட்டு தெரியும். ஜார்ஜ் ஹே துரை தற்காலிகமாக லண்டன் போனபோது ஹென்றி டிக்கின்ஸன் மெட்ராஸின் ஆக்டிங் கவர்னர் ஆனார். உடனே அவருக்கு ஒரு பரிசை அளித்து கிருஷ்ணராவை பதவிநீக்கம் செய்ய அனுமதி பெற்றேன். அவரை திருவனந்தபுரத்திலிருந்தே துரத்தினேன்” என்றார் ராமவர்மா.

பார்வதி பாய் புன்னகைத்து, “ஒரு சிறுவெற்றி. சரி, அதனால் என்ன ஆயிற்று?. ரெஸிடென்ட் கல்லன் அது அவருக்கு எதிரான நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டார். அதற்கு பதிலடியாக உன் ஆசிரியர் சுப்பாராவை வெளியேற்றுவதற்கு அவர் முயன்றார். மீண்டும் கார்ஜ் ஹே மெட்ராஸ் கவர்னராக வந்தார். கர்னல் அவரிடம் பேசி சுப்பாராவை டிஸ்மிஸ் செய்யவைத்தார். அவரை திருவனந்தபுரத்தில் இருந்து துரத்தினார். உன் அவைக்கு வந்து கதறி அழுத சுப்பாராவை உன்னால் காப்பாற்ற முடியவில்லை. அவர் தஞ்சாவூருக்கு போனார்”

“ஆமாம், ஆனால் அவரை மீண்டும் அழைத்துக்கொண்டேன்” என்றார் ராமவர்மா.

எப்படி? ஒன்றரை ஆண்டுகள் கழித்து. ஜார்ஜ் ஹேக்கு பதினெட்டு கடிதங்கள் அனுப்பினாய். தனிப்பட்ட பரிசாக மட்டும் பல ஆயிரம் ரூபாய் கொடுத்தாய். கடைசியில் வெற்றி கிடைத்தது. சுப்பாராவ் இங்கே வந்தார். மதிப்பில்லாத ஓர் அரசப்பதவியில் அமர்ந்தார்… இந்த மொத்த அரசியலுக்கும் நீ செலவிட்டது மூன்று ஆண்டுகள்…” என்றார் பார்வதி பாய்.

ராமவர்மாவின் உடலில் ஒரு மிகச்சிறிய அசைவு நிகழ்ந்தது. அவள் அவருக்கு எதையாவது கற்பிக்க முயலும்போதெல்லாம் எழும் அசைவு அது. உடலில் விழுந்த நீர்த்துளியை உதறுவதுபோல. அவளைச் சினமூட்டும் ஒரு சொல் போல.

அவள் குரல் ஓங்கியது. “அந்த மூன்றாண்டும் இங்கே என்னென்ன நிகழ்ந்தது என்று உனக்கு தெரியுமா? அங்கே மெட்ராஸ் ராஜதானியில் மீண்டும் பஞ்சம் தலைகாட்டத் தொடங்கியது. இங்கே பல்லாயிரம்பேர் ஒவ்வொரு நாளும் பஞ்சம் பிழைக்க கிளம்பி வந்து ஆரல்வாய்மொழி கணவாயில் குவிந்து கிடந்தனர். அவர்களுக்கு மலைப்பகுதிகளில் நிலம்கொடுத்து குடியேற்றவேண்டிய அதிகாரிகள் அந்தப் பஞ்சப்பரதேசிகளிடமே லஞ்சம் வாங்கினார்கள். சிலர் அவர்களை அடிமைகளாகப் பிடித்துக்கொண்டு சென்று தூத்துக்குடியில் விற்பவர்களிடம் கூட்டு சேர்ந்து கொண்டார்கள்.

“இங்கே நம் மண்ணுக்குள் அடிமைமுறை பத்மநாபசாமிக்கு எதிரான குற்றம். நான் இட்ட ஆணை அது. ஆனால் நாகர்கோயிலில் இருந்தும் பத்மநாபபுரத்தில் இருந்தும்கூட பஞ்சம்பிழைக்க வந்த மக்களை ஆசைகாட்டியும் பிடித்துகட்டியும் கொண்டுசென்று விற்றார்கள் நம் அதிகாரிகளான நாயர்கள். நம் கடல்முழுக்க போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கம் செலுத்தலாயினர். நமக்கு விசுவாசமாக இருந்த மீனவக்குடிகள் போர்ச்சுக்கலுக்கு கப்பம்கட்டி நம்மை எதிர்க்கத் தொடங்கினர். நம் சந்தைகள் அனைத்திலும் ஆதிக்கம் செய்யும் கூட்டங்கள் உருவாயின. போர்ச்சுக்கல்காரர்கள் தாக்கியதனால் மணக்குடி முதல் ஆலப்புழை வரை துறைமுகங்கள் பொலிவிழந்தன.”

“மூன்றே ஆண்டுகளில் நான் பத்தாண்டுகளில் உருவாக்கிய செல்வத்தை அழித்துவிட்டாய். ராமா, இந்த திருவிதாங்கூரின் செல்வம் இரண்டே ஊற்றுக்களில் இருந்துதான். மலைக்குடியேற்றக்காரர்கள் அளிக்கும் தீர்வை, சந்தைகளும் துறைமுகங்களும் அளிக்கும் சுங்கம். மலைக்குடியேற்றக்காரர்கள் உருவாக்கும் விளைபொருட்கள் ஆறுகள் வழி சந்தைகளில் வந்துசேரவேண்டும். தொடக்கம் முதல் இறுதிவரை இந்தப்பாதை பாதுகாக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் நாம் அழிவோம்…. நான் திட்டமிட்டு ஒவ்வொரு நாளும் கண்விழித்து கணக்கிட்டு காத்து உருவாக்கிய பயிர் இது, உன்னால் அது கருகியது” என்றாள் பார்வதி பாய்.

“நான் என்ன செய்திருக்கவேண்டும்? என் திவானை நியமிக்க எனக்கு உரிமை இல்லையா? எனக்கு நம்பிக்கை இல்லாத ஒருவரை நீக்க எனக்கு உரிமை இல்லையா? நான் பணிந்து போகவேண்டுமா?” சட்டென்று ராமவர்மா ஆவேசம் கொண்டார். “கண்முன் விஷவிருட்சம் வளர்கிறது. அதை வெட்டிவீச நம்மால் முடியவில்லை என்றால் நாம் ஏன் அரசாங்கம் என்று சொல்லிக் கொள்ளவேண்டும்? இந்த வெற்றுவேஷம்தான் அரசனின் அடையாளமா? அந்த கிரீடமும் செங்கோலும் உடைவாளும் மார்த்தாண்டவர்மா குலசேகரப்பெருமாள் வைத்திருந்தது. அதை தொடுவதற்கே எனக்கு தகுதி இல்லை.”

அந்த தகுதியை ஈட்டிக்கொள், நான் சொல்லவந்தது அதைத்தான்” என்று பார்வதி பாய் சொன்னாள்.

“நான் சும்மா இருந்திருக்கவேண்டுமா? கிருஷ்ணராவை அப்படியே இந்த நாட்டை ஆளவிட்டிருக்கவேண்டுமா?”

வேண்டாம், ஆனால் இதை வைத்துக்கொண்டு சதுரங்கம் விளையாடியிருக்கக்கூடாது. அந்த கிருஷ்ணராவ்தான் பிரச்சினையா? அவன் சிக்கலானவன் என்று தோன்றினால் அவனை அப்போதே கொன்றுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவேண்டியதுதானே?”

......
......
......
......
“ஆமாம், என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ரெஸிடென்ட் கல்லனிடம் போரிட என்னால் முடியாது. நான் சலித்துவிட்டேன்.”

“அதாவது நீ அரசனான பிறகு செய்த ஒரே போராட்டத்தையும் கைவிட்டுவிட்டாய்.”

“ஆமாம்.”

ஆனால் நீ பணத்தை மண்ணையும் கல்லையும்போல செலவழிக்கிறாய். ஆண்டுக்கு அரண்மனைக்கு பட்டு வெல்வெட் துணிகள் வாங்குவதற்காக மட்டும் மூன்றுலட்சம் ரூபாய் செலவழித்தாய். அரண்மனையில் ஓவியங்கள் வாங்குவதற்கு மட்டும் அறுபதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இசைக்கலைஞர்களுக்கான செலவுமட்டும் எழுபத்தாறாயிரம் ரூபாய்… அவர்களுக்கான பரிசுகள், ஊதியங்கள், இசைவிழாக்கள்…”

ராமவர்மா ஒன்றும் சொல்லவில்லை.

“ராமா நீ எப்படி அரசனாக ஆனாய் தெரியுமா?”

ராமவர்மா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நீ உன் அம்மாவின் கருவில் உருவானபோது திருவிதாங்கூரை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சேர்க்கும் எண்ணம் சென்னை கவர்னருக்கு இருந்தது. ஜார்ஜ் பர்லோ அதற்காக எல்லாவற்றையும் செய்தார். ஆகவே நீ கருவிலிருக்கையிலேயே உனக்கு முடிசூட்டினோம். அரசன் என்று எல்லா ஆவணங்களிலும் உன்பெயரை சேர்த்தோம். அரசன் இருந்த நாடு ஆதலால் திருவிதாங்கூர் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்படவில்லை.”

“ஆனால் இன்று நீ நோயுற்றிருக்கிறாய் என்றும் திருவிதாங்கூரின் ஆட்சி சீர்குலைந்திருக்கிறது என்றும் ரெஸிடென்ட் கல்லன் மெட்ராஸ் கவர்னருக்கு செய்தி அனுப்பமுடியும். உன்னால் நாட்டை ஆட்சிசெய்து உரியமுறையில் கப்பம் கட்டமுடியாது என்று ஒரு வார்த்தை அவர் எழுதினால் போதும், மெட்ராஸ் கவர்னர் நம் நாட்டை இணைத்துக் கொண்டுவிடுவார். பூதம் வாய்திறந்து காத்திருக்கிறது” என்றார் பார்வதி பாய்.

“அதற்கான எல்லா ஆதாரங்களும் இங்கிருக்கின்றன. நீ ரெஸிடெண்டை சந்தித்தே இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவர் உன்னைச் சந்திக்க வேண்டும் என்று கோரி எழுதிய பதினேழு கடிதங்களுக்கு நீ பதில் அளிக்கவில்லை. ரெஸிடென்ட் அலுவலகத்திலிருந்து வந்த நாநூற்றுக்கும்மேல் கடிதங்களுக்கு உன்னிடமிருந்து பதிலே போகவில்லை” என்று பார்வதி பாய் சொன்னாள்.
......
.......
......
......
பார்வதி பாய் “ராமா நான் உன்னிடம் கேட்கவந்தது ஒன்றே. இதை கேட்கும் சந்தர்ப்பத்தை எண்ணி எண்ணி தவிர்த்தேன். என்னால் இதை உன்னிடம் கேட்கமுடியாது. நீ என் முதல்மகன் போல. உன்னை மடியிலிட்டு வளர்த்திருக்கிறேன்… என் அரசியல் வாழ்க்கையில் நான் எதற்குமே தயங்கியவள் அல்ல, இதற்காக தயங்கினேன்.

“நீங்கள் என்னிடம் எதையும் கேட்கலாம் இளையம்மை” என்றார் ராம வர்மா.

“நீ அரசனாக நீடிக்கவேண்டுமா?”

ராமவர்மா திடுக்கிட்டவர்போல பார்த்தார். அவருடைய நெஞ்சு துடிப்பது தெரிந்தது. கழுத்திலும் நெற்றியிலும் நீலநரம்புகள் அதிர்ந்தன.

வரவிருக்கும் காலம் கொடுமையானது ராமா. நீ உன் செயலின்மையால் பல்லாயிரம்பேரை பட்டினிச்சாவு நோக்கி தள்ளிவிடுவாய்.”

“இளையம்மை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் நடுங்கும் குரலில் கேட்டார்.

“நீ உன் இளையவனை அரசனாக்கிவிட்டு மருத்துவம் செய்து கொள்வதற்காக லண்டனுக்கு போ. உன் நோய் அங்கே குணமாகும். அங்கே நீ விரும்பிய இசையை முழுமையாக கற்கவும் முடியும்…”

ராமவர்மா பெருமூச்சுவிட்டு தளர்ந்தார்.

நீ மென்மையானவன்” என்றாள் பார்வதி பாய். “முன்பெல்லாம் இங்கே வீடுகளின் கதவுகள் எடைமிக்கவை. அந்தக் கதவுகளை நிறுத்தும் இடத்தில் ஒரு நிலைக்கல்லை வைப்பார்கள். அந்தக்கல்லை கல்லாசாரிகள் தேடிப்பிடித்துக் கொண்டுவருவார்கள். நெய்க்கருப்பன் கல் என்று அதைச் சொல்வார்கள். அது இரும்பைவிட உறுதியானது. உடையாது, எளிதில் தேயாது. அதில் எடைமிக்க கதவு ஒருநாளுக்கு நூறு இருநூறுமுறை சுழல வேண்டியிருக்கிறது…”

“அரசன் நெய்க்கருப்பன் கல்லாக இருக்கவேண்டும். நீ மென்மையான மாக்கல். அதில் சிற்பங்கள் செய்யலாம். நிலைக்கல்லாக அமையமுடியாது. நெய்க்கருப்பங்கல்லில் சிற்பம் வடிக்கமுடியாது, அது உளியை உடைத்துவிடும். அது நிலைக்கல்லாக வைக்க மட்டுமே உதவும்… உன் இளையவன் அப்படிப்பட்டவன்” அவள் அவனை நோக்கி குனிந்து “உன்னை நீயே மதிப்பிட்டுக்கொள்” என்றாள்.

ராமவர்மா நெடுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

“திருவிதாங்கூரின் நலம் மட்டுமே என் நோக்கம். நீ அதை எண்ணிப்பார்.”

“இளையம்மை, மென்மையான அரசன் ஒருவன் இருக்கமுடியாதா? கலைகளையும் இலக்கியத்தையும் அறிந்தவன், நெறிகளில் நம்பிக்கைகொண்டவன் அரசனாக ஆளவே முடியாதா?”

“ராமா, புராணங்களில்கூட அப்படிப்பட்ட ஓர் அரசரைப்பற்றிய செய்திகள் இல்லையே” என்றாள் பார்வதி பாய்.

“ம்” என்றார் ராமவர்மா.

“அலக்ஸாண்டர் சக்கரவர்த்தி புல்லாங்குழல் வாசித்தபோது அவர் தந்தை வந்து பிடுங்கி வீசிவிட்டு அவர் வாயில் சூடுபோட்டார் என்று உன் ஆங்கில ஆசிரியர் சொன்னார், நினைவிருக்கிறதா?” என்று பார்வதிபாய் சொன்னாள் “புல்லாங்குழல் இசைப்பவனால் கொல்லமுடியாது. கொல்லாதவன் அரசன் அல்ல.”

ராமவர்மா பெருமூச்சுவிட்டார்.

“ஒட்டுமொத்தப் பெருங்கருணையால் ஒவ்வொன்றிலும் கருணையே இல்லாமலிருப்பவனே அரசன் என்று ஸ்மிருதிகள் சொல்கின்றன” என்று பார்வதிபாய் சொன்னாள்.

ராம வர்மா தலைதாழ்த்தி அமர்ந்திருந்தார்.

“நீ சாப்பிட்டு ஓய்வெடு… நான் மாலையில் வந்து உன்னைப்பார்க்கிறேன்” என்று பார்வதிபாய் எழுந்தாள்.
.......
.......

பரிமேலழகர் உரை
அறத்தான் வருவதே இன்பம் - இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த - அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல - அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. ('ஆன்' உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

சாலமன் பாப்பையா உரை
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.

Thirukkural - Management - Thoughts
Anger is another force that forces a person to lose his virtue. A person loses himself emotionally when he becomes angry. The outcome of anger is regret. Refer to Practice 9 ‘Managing Anger’ for more insights into the consequences of anger. When a person becomes angry, he cannot control using abusive words. When he uses abusive and hurtful words, the impact of those on the hearer is deep. Refer to Kural 100 in to know the impact of harmful words on others.

The ultimate happiness a person gets is the happiness out of virtuous practices, assures Kural 39.

Virtue alone is happiness; all else 
Is else, and without praise.

Happiness obtained through improper means, like fraudulent behaviors, is neither real nor long lasting. Moreover, that sort of happiness does not bring any fame, popularity, or satisfaction to the person who resorts to that sort of happiness.

English Meaning - As I taught a kid - Rajesh
What is true happiness?
True happiness is the one that comes from doing and fulfilling duties/responsibilities with full potential in right ways with integrity.
What is not true happiness?
Anything including small time pleasures or small/mini pleasures (சிற்றின்பம்) that comes from not doing dharma or by doing distracting works such as passing time, watching entertainment stuffs, gossiping, talking futile things or engaging in useless/meaningless arguments/debates with friends/colleagues. Because these can be only some relaxing stuffs for 10-15mins per day. Relaxing stuffs cannot and should not replace the main work. Relaxing stuffs are like desires. They distract us by giving small pleasures whereas steal the true happiness from us. 

Questions that I ask to the kid
What is true happiness and where does it come from? 
How can achieve true happiness?
What is not true happiness?