குறள் 137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி
[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
ஒழுக்கத்தின் - ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.
எய்துவர் - எய்து-தல் - eytu- 5 v. [T. eyidu, M.eytu.] tr. 1. To approach; அணுகுதல் நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10). 2. Toobtain, acquire, attain; அடைதல் ஏமம் வைகலெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து) 3. Toreach, as a place; தூநிறக் கங்கையாள்சூழ லெய்தினான் (பாரத. குருகுல. 34). 4. To revere; பணிதல் இளங்கொடியேயெய்தும் (தஞ்சைவா. 386). 5. To leave, forsake; நீங்குதல் எய்தலில்லாத் திருவின் (தஞ்சைவா. 386). -- intr. 1. Tobe adapted, suitable; பொருந்துதல் காலத்தோடெய்த வுணர்ந்து செயல் (குறள், 516). 2. To happen, occur; சம்பவித்தல் எட்டி குமர னெய்தியதுரைப்போன் (மணி. 4, 64). 3. To appear, become, crop up; உண்டாதல் மாசெனக்கெய்தவும்(கம்பரா. சிறப். 6). 4. To be sufficient, adequate;போதியதாதல். சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென்றெண்ணி (ஐந். ஐம். 38).
மேன்மை - சிறப்பு; பெருமை; கண்ணியம்.
இழுக்கத்தின் - இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு
எய்துவர் - எய்து-தல் - eytu- 5 v. [T. eyidu, M.eytu.] tr. 1. To approach; அணுகுதல் நெடியோயெய்த வந்தனம் (புறநா. 10). 2. Toobtain, acquire, attain; அடைதல் ஏமம் வைகலெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து) 3. Toreach, as a place; தூநிறக் கங்கையாள்சூழ லெய்தினான் (பாரத. குருகுல. 34). 4. To revere; பணிதல் இளங்கொடியேயெய்தும் (தஞ்சைவா. 386). 5. To leave, forsake; நீங்குதல் எய்தலில்லாத் திருவின் (தஞ்சைவா. 386). -- intr. 1. Tobe adapted, suitable; பொருந்துதல் காலத்தோடெய்த வுணர்ந்து செயல் (குறள், 516). 2. To happen, occur; சம்பவித்தல் எட்டி குமர னெய்தியதுரைப்போன் (மணி. 4, 64). 3. To appear, become, crop up; உண்டாதல் மாசெனக்கெய்தவும்(கம்பரா. சிறப். 6). 4. To be sufficient, adequate;போதியதாதல். சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென்றெண்ணி (ஐந். ஐம். 38).
எய்தாப் - அணுகாத ; அடையாத ; பணியாத ; நீங்காத ; உண்டாகாத
பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.
முழுப்பொருள்
ஒருவர் ஒழுக்கத்தை பேணிப் பின்பற்றினால் அவர் மேன்மையை அடைவார். பெருமை கைக்கூடும். அதுவே ஒழுக்கத்தை பின்பற்றாமல் தாழ்வானவற்றை செய்தால் அவர் இழிவுநிலையை அடைவார். கீழ்மக்கள் என்று கருதப்படுவார். ஒழுக்கத்தை பின்பற்றாத காரணத்திற்காக நீங்காத பழியையும் பெறுவார்.
ஒழுக்கத்தை பின்பற்றினால் +1 அதாவது உயர்வு, ஒழுக்கத்தை பின்பற்றவில்லை என்றால் 0 அல்ல -1 அதாவது வீழ்ச்சி.
இதே கருத்தை பழமொழிச் செய்யுள், “இழுக்கத்தின் மிக்க இழிவில்லை – இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு” என்கிறது.
இக்குறள் ஒழுக்கம் என்னும் குணத்திற்கு மட்டுமல்ல. நமது அன்றாட வேலைகளில் நாம் செலுத்தும் ஒழுக்கத்திற்கும் (discipline/work-ethics) பொருந்தும். ஒருவர் தன்னுடைய வேலையை செவ்வென செய்தால் அவர் முன்னேறுவார். ஒருவர் தன்னுடைய உறவுகளை பேணினார் என்றால் மக்களை சம்பாதிப்பார். அதுவே தனது வேலையை தனது கடமையை செய்யவில்லை என்றால் அவர் வேலையிலும் சரி பொருளாதார ரீதியாகவும் சரி வீழ்ச்சியே அடைவார். அதேப்போல உறவுகளை பேணவில்லையென்றால் தனிமைப்படுத்தப்படுவார். சுற்றம் இல்லை எனில் செல்வம் இல்லை என்று பொருள்.
மேலும்: அஷோக் உரை
மைந்தனுடன் தனித்துலாவுகையில் “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படவேண்டும், மைந்தா” என்றார். “மானுடர் எவரும் ஒழுக்கத்தின்பொருட்டு கணந்தோறும் உள்ளத்துடன் போரிட்டாகவேண்டும். சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் நம் ஒழுக்கத்துடன் ஆட விடாய்கொண்டுள்ளன. இனியமலர்கள், நறுமணங்கள், தென்றல், வண்ணங்கள், ஒளிகள் அனைத்தும் பிறழ்க பிறழ்க என்றே நம் உள்ளத்திடம் ஆழமாக சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆண்கள் தங்கள் விழைவால் வழிதவறுகிறார்கள். கன்னியர் தங்கள் ஆணவத்தால், அன்னையர் தங்கள் அன்பால் வழிபிழைக்கிறார்கள். அழகர்கள் பிறர் விழைவால் பிறழ்வுகொள்கிறார்கள். மைந்தா, ஒழுக்கம் என்பது அறத்திற்குக் கொண்டுசெல்லும் பாதை. ஒழுக்கத்தில் மாறாதிரு. உன் மதிப்பால் உவகையே கொள்முதல் செய்யப்படும்.”
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் லியோ டால்ஸ்டாய் பற்றிய ஒரு உரையில் (லியோ டால்ஸ்டாய் இவ்வாறு கூறுவாதுவதாக) இவ்வாறு கூறுகிறார் (https://www.youtube.com/watch?v=21Q_4mQG5TI @42:55)
ஆன்ம விடுதலை என்பது மேலான ஒழுக்கம் வழியாக மேலான அறம் வழியாக தான் சாத்தியம். ஏன் ஒழுக்கமும் அறமும் முக்கியம் என்றால் தனி மனிதன் ஒருவனின் மீட்சியும்/மீட்புமும் நிறைவும் அதில் தான் இருக்கிறது.
ஒழுக்கம் இல்லாதவன் மேலான இன்பங்களை அடைய முடியாது. ஒரு குழந்தையை தூய அன்போடு மடி மேல் எடுத்து வைக்க முடியாது.
ஒழுக்கம் இல்லாதவன் மேலான இன்பங்களை அடைய முடியாது. ஒரு குழந்தையை தூய அன்போடு மடி மேல் எடுத்து வைக்க முடியாது.
பரிமேலழகர் உரை
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்.
மு.வரதராசனார் உரை
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
சாலமன் பாப்பையா உரை
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
Thirukkural - Management - Thoughts
A person can achieve greater heights in his life; lead a noble life and satisfied life when he is disciplined. All achievements are possible with the psychology of self- discipline. There is a lot of power in self- discipline, declares Kural 137.
Right conduct exalts one, while a bad name
Exposes one to undeserved disgrace.
When a person fails to lead a disciplined life, he will attain all disgraceful and humiliating consequences in his life. Those things are sure to lead him to a blameful and meaningless life. Therefore, personal effectiveness is possible only with personal discipline.
சற்றுநேரம் எங்களிடையே சொல் ஏதும் எழவில்லை. பின்னர் நான் அவனிடம் “உண்மையில் நான் யார்? அதை கண்டுசொல்ல உன் நிமித்த நூலில் இடமுண்டா?” என்றேன். “நிமித்த நூலின்படி மானுடர் அறுபடா தொடர்ச்சிகள். இங்கிருப்போர் வேறெங்கோ இருப்பவர்களின் மறுவடிவங்கள். அதை அறிய சில கணக்குகள் உள்ளன. ஆனால் அதை அறிந்து பயனில்லை” என்றான்.
நான் “ஏன்?” என்றேன். “அதை அறிவதனால் நாம் எதையும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.” நான் சீற்றத்துடன் “நான் மாற்றிக்கொள்கிறேன்” என்றேன். அவன் மறுமொழி சொல்லவில்லை. “ஏன்?” என்று சற்று தணிந்து கேட்டேன். “நாம் பழக்கத்தாலேயே வாழ்கிறோம். உளப்பழக்கம் உடற்பழக்கம். அறிவால் அல்ல.” நான் “இல்லை, என்னால் என் அறிதலை அன்றாடமென்றாக்கிக்கொள்ள முடியும்” என்றேன். “அவ்வண்ணமென்றால் ஆகுக!” என்றான். நான் “சொல்க!” என்றேன்.
சாந்தி பாஸ்கரசந்திரன் அவர்கள் "குழந்ததைகளின் பேருலகம்" என்ற ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார். அதில் "குழந்தைகளின் ஞாபக மறதி நோயல்ல" என்ற ஒரு கட்டுரையில் ஞாபக சக்திக்கு ஒழுங்கு எவ்வளவு முக்கியம் என்று கூறியுள்ளார்.
ஞாபகசக்தி எனப்படும் நினைவாற்றல் திறன் அனைவருக்கும் சமமாகவே உள்ளது. ஆனால், அதை முறையாகப் பயன்படுத்துவதில் தான் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறார்கள். மூளையில் உள்ள நினைவத்திலிருவ்து ஏதாவது ஒரு தகவல் தேவையான நேரத்திற்கு நினைவிற்கு வர வேண்டுமென்றால் முதலில் அந்தத் தகவலை சரியான முறையில் பதிவு செய்து வைக்க வேண்டும். ஞாபகமறதிக்கு முக்கிய காரணம், தகவல்களை சரியான முறையில் மூளையில் பதிந்து வைக்கும் திறன் குறைவாக இருப்பதுதான். எனவே, குழந்தைகளின் மதிப்பெண் குறைவிற்கு நினைவாற்றல் குறைபாடு காரணமல்ல.
'பென்சிலை எங்கே வைத்தோம்' என்று பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் வீடு முழுக்கத் தேடுவது, பள்ளிக்கு வந்து பையை திறந்ததும் கணக்கு நோட்டு கொண்டு வராததை அறிந்து பதறுவது, வீட்டுப்பாடத்தை மறந்துவிட்டு ஆசிரியரிடம் திட்டு வாங்குவது, நன்றாக படித்த பாடம் தேர்வு எழுதும்போது உடனடியாக ஞாபகத்திற்கு வராதது, என பல சந்தர்ப்பங்களில் 'ச்சே! இவ்வளவு மறதியாக இருக்கிறோமே' என்று பொதுவாக வயது வித்தியாசமின்றி எல்லா பிள்ளைகளும் தங்கள் மீதே எரிச்சல் பட்டுக்கொள்வதுண்டு.
ஒரு திரைப்படமும் அதில் வரும் காட்சிகள் மற்றும் பாடல்கள் மனதில் பதிகிற அளவிற்கு பள்ளிக்கூடப் பாடம் மனதில் பதிவதில்லையே ஏன்? ஆர்வம் மற்றும் கவனம் இல்லாததோடு ஓர் ஒழுங்கு இல்லாததுமே இதற்குக் காரணம்.
ரொம்ப மறதி என்று கூறும் குழந்தைகளிடம் பேசிப் பாருங்கள். கிரிக்கெட் ஸ்கோரைப் பற்றி கேட்டால் விலாவாரியாக பேசுவார்கள். எந்த மேட்சில், எந்த பிளேயருடைய ஆட்டம் பற்றி கேட்டாலும் புள்ளிவிவரமாகச் சொல்வார்கள். பிரச்னை நினைவாற்றலில் இல்லை, ஆர்வத்தில்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. நினைவாற்றலுக்கு ஆர்வமே அடிப்படை. எதில் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமோ, அதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும்.
அதேபோல ஏதாவது ஒரு பாடப்புத்தகத்தில் அட்டைப்படத்தைக் குழந்தைகளிடம் வரையச் சொன்னால், பெரும்பாலோர் தவறாகத்தான் வரைவார்கள். தினமும் பார்க்கிற புத்தகம்தான் என்றாலும் சரியாக வரைய முடியாததற்குக் காரணம், அவர்கள் புத்தகத்தை தினமும் பார்க்கிறார்களே தவிர கவனித்துப் பார்ப்பதில்ல்லை. நினைவாற்றலின் அடிப்படையான கவனிக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் இது போன்ற பிரச்னைகள் குறைந்துவிடும்.
அதேபோல ஒழுங்கின்மையும் ஒரு காரணம். லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ள ஒரு நூலகத்தில் நமக்குத் தேவையான புத்தகத்தை உடனடியாகத் தேடி எடுக்க முடிகிறது. ஆனால், ஒரு சில அறைகள் மட்டுமே உள்ள நம் வீட்டில் நமக்குத் தேவையான பொருளை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையே, அது ஏன்?ஒழுங்கின்மைதான் அதற்குக் காரணம். குழந்தைகள்தான் என்றில்லை பெரியவர்களுக்கும் இதே நிலைதான். அதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
பள்ளியிலிருந்து வந்ததும் ஷுக்களை கழற்றி அதற்குரிய ஸ்டாண்டில் வைக்க வேண்டும். சாக்ஸை கழற்றி துவைப்பதற்கென்று உள்ள இடத்தில் போட வேண்டும். பெல்ட், டை ஆகியவற்றை அதற்கென்று உள்ள இடத்தில் கழற்றி வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு செயலையும் ஓர் ஒழுங்கோடு தொடர்ந்து செய்தால், மனதின் செயல்பாடுகளிலும் ஒழுங்கு ஏற்படத் துவங்கும். அதன் மூலம் ஆர்வமும் கவனமும் ஏற்படும்.
...
...
பிள்ளைகள் குறைந்தது 8 மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுது படிப்பதைப் பழக்கப்படுத்த வேண்டும். தூங்கப் போகும் முன்பாக அன்று படித்த அனைத்தையும் ஒருமுறை மேலோட்டமாக நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது மூளையின் சில பகுதிகள் விழிப்புடன் இருந்து தகவல்களை குறுகிய காலை நினைவறையில் (short term memory) இருந்து நீண்ட கால நினைவறைக்கு (long term memory) எடுத்துச் சென்று பதிவு செய்துகொள்ளும். படிக்கும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியமான பயிற்சியாக இருக்கும்.
English Meaning - As I taught a kid - Rajesh
When one follows discipline/work-ethics/duties, one progress and attains growth. When one consistently follows discipline for a long time, one attains greatness. However, if one is indiscipline, it leads to destruction and ruins life and health. Indiscipline leads to negative fame, difficulties in life.
Questions that I ask to the kid
What does one attain by following discipline?
What does one attain by not following discipline?
No comments:
Post a Comment