Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்


குறள் 619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]

பொருள்
தெய்வத்தான் - தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம்.

ஆகா - வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக்குறிப்பு; ஒருகந்தருவன்.

ஆகுதல் - ஆதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஆகாது - நடக்காது, அமையாது, நிகழாது, உண்டாகாது, வளராது

எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும்.

முயற்சி - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை.

தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு.

மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து.

வருத்துதல் - வருவித்தல்; பெருகுதல்; உண்டாக்குதல்; மனப்பாடஞ்செய்தல்; பயில்வித்தல்; வருந்தச்செய்தல்.

வருத்தக் - வருத்து - துன்பம்; காண்க:வரத்து.

கூலி - வேலைக்குப்பெறும்ஊதியம்; வாடகை; கூலிக்காரன்.

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
தெய்வம் என்றால் கடவுள். தெய்வத்தால் முடியாதது என்று ஏதுமில்லை. அதேப்போல் தெய்வம் என்றால் ஊழ் என்றும் அகராதி கூறுகிறது. ஒருவன் தன் ஊழினால் ஒன்றை அடையமுடியாது என்று இருக்கும். அப்படி என்றால் அவனால் அதை அடைவே முடியாது என்று அர்த்தம். ஆனால் ஒருவன் தன்னுடைய இடைவிடாத முயற்சியால் தன்னுடைய உடலையும் உயிரையும் வருத்தி செயலாற்றினால் அவன் துன்பப்பட்டாலும் தெய்வத்தை தாண்டியும் ஊழை தாண்டியும் அவன் செய்த முயற்சிக்கு ஊதியமாக பயன் வந்து சேரும். 

”தன்னுயிர் தான் அற பெற்றவன்” (குறள் 268, தவம்) கடவுள் என்று முன்னறே பார்த்தோம். அஹம் ப்ரம்மாஸ்மி (நான் கடவுள்) என்றால் தான் என்னும் அகங்காரம் நீங்கி கடவுள் என்ற நிலை. அத்தகைய நிலையில் அதாவது தானே கடவுள் என்ற நிலையில் ஒருவனால் (அவனால்) முடியாது என்றாலும் ஒருவன் (அவன்) சிறுக சிறுக ஒவ்வொரு அடியாக முயன்றால் அவன் அதன் பலனை கண்டிப்பாக பெறுவான்.

உதாரணமாக கண் தெரியாத குருடர்கள் இமயமலையை ஏறிய உண்மை சம்பவங்களை நாம் கேள்விபட்டு இருக்கிறோம். கண் தெரியாமல் மலை ஏறுவதே கடினம். பலருக்கு இயலாத காரியம். ஆனால் கடும் பனி பொழிவு, செங்கூத்தான ஏற்றம், உணவு தட்டுப்பாடு, பயங்கரமான பல்லத்தாக்குகள், பனிகட்டி சரிவுகள் என்று இடர்கள் இருக்கும் பொழுது கண் தெரிந்தவர்களுக்கே மிக கடினமான ஒன்று. அப்படி இருக்கையில் கண் தெரியாதவரால் முடியாது என்பதே பொதுவான நம்பிக்கை. ஆயினும் தளராது முயற்சி செய்தால் இலக்கை அடையலாம். Erik Weihenmaye என்பவர் 2001 ஆம் ஆண்டு Mount Everest என்னும் இமயமலையை வெற்றிகரமாக ஏறினார்.

அதேப்போல கால் இல்லாத சிலர் (amputees என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்) சபரிமலை போன்ற நீண்ட மலை பயணங்களை (சுமார் 48கி.மி)  தரையில் உட்கார்ந்தே கைகளைக்கொண்டு சிறுக சிறுக நகர்ந்து சபரிமலை சன்னிதானத்தை அடைந்ததை நான்1994 ஆண்டு முதலான பல பயணங்களில்  கண்டுள்ளேன்.

எல்லா வெற்றியும் முதல் அடியில் தான் தொடங்குகின்றன. எல்லா வெற்றியும் இடைவிடாத தொடர் பயணத்தின் இறுதியில் கிடைக்கின்றன.

இதையே “தெய்வத்துக்கு ஆகா தெனினும்” என்று கொண்டால், புராணங்களில் சொல்லப்படுகிற கதைகளுக்கும் விளக்கம் கிடைத்துவிடுகிறது. அசுரர்கள் இடைவிடாது முயன்று கோர தவமியற்றி, தம்முடலை வருத்தி செய்யும் தவங்களுக்கு, இறைப்பொருள், அதற்கு பிடிக்காததென்றாலும், தவமியற்றிய அசுரனின் முயற்சியின் உயர்வுக்காக வரங்களை அள்ளிக்கொடுத்து, தமக்கும், மற்ற உயிர்களுக்கும், துன்பங்களை வருவித்துக்கொண்டதையும் பார்க்கிறோம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தெய்வத்தான் ஆகாது எனினும் - முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் - முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது. (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.

மு.வரதராசனார் உரை
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

Thirukkural - Management - Hard Working
Believe that all your efforts will have their corresponding rewards. If your hard working is not recognized and rewarded by the Supreme Being, or any other name you prefer to that, your hard working itself will be a reward. Kual 619 assures us of that gain.

Even if Fate will not, exertion will pay
The wages of effort.

Do not take into your heart, if the reward is not immediate. The foundation of Total Quality Management (TQM) is that ‘the process decides the product.' If the process is right, the product, that is the outcome, will be right. One's effort is the process and the result is the product. The relationship between effort and reward is similar to the front wheels and the rear wheels of a vehicle respectively. When you control the front wheels, the rear wheels will follow suit.

No comments:

Post a Comment