Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Management_Delegation. Show all posts
Showing posts with label Management_Delegation. Show all posts

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

குறள் 517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]

பொருள்
இதனை - அஃறிணைஒருமைஅண்மைச்சுட்டுப்பெயர்; இந்த; it, this (thing)  

இதனால் - இக்கருவி அல்லது வழிமுறையால்

இவன் - ivaṉ   (hon. இவர், pl.) இவர்கள் pron. he, this man.; he (this)  

முடிக்கும் - முற்றுவித்தல்; நிறைவேற்றுதல்; அழித்தல்; கட்டுதல்; சூட்டுதல்.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஆய்ந்து - ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

அதனை -  அந்த செயலை (அந்த தவறை)

அவன் - ஆண்பால்சுட்டுப்பெயர்; avaṉ   pron. he (hon. அவர், pl. அவர்கள்) fem. அவள். (அவர் even for women).

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம்
விடல் - விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்
விடும் - ஆகும்

முழுப்பொருள்
ஒரு செயலை செய்து முடிக்க ஒருவரிடம் அச்செயலை ஒப்படைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
1. செயலை செய்து முடிக்க தேவையான திறன் படைத்தோரை தேர்ந்தெடுக்க வேண்டும். 
2. செயலை சூழ்நிலைக்கேற்ப எல்லைகளுக்கு உட்பட்டு சிறப்பாகவும் குறைவான செலவினில் குறைவான நேரத்தில் செய்து முடிக்கும் திறன் படைத்தோரை தேர்ந்தெடுக்க வேண்டும். 
3. செயலை எவ்வாறு எக்கருவி கொண்டு  எவ்வழி முறையால் செய்து முடிப்பார் என்று ஆராய வேண்டும் 
4. செயலை செய்து முடிக்க அனுபவம் தேவையெனில் அவ்வனுபவம் படைத்தோரை தேர்ந்தெடுக்க வேண்டும். 
5. செயலை செய்து முடிப்பானா அல்லது பாதியில் சோம்பியோ அல்லது ஊக்கம் குறைந்தோ விட்டுவிடுவானா என்று ஆராய வேண்டும். 
இவ்வாறு ஒரு செயலை செய்யவல்லவனை ஆராய்ந்து அவனிடம் அச்செயலை விட்டுவிட வேண்டும். 


பழமொழிப் (38) பாடலொன்று, இவ்வாறு செல்கிறது.

உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக்க – கற்றான்
கிழவனுரை கேட்கும் கேளா னெனினும்
இழவன் றெருதுண்ட உப்பு. 

நமக்கு உற்றான், உறவினை, அன்றி வேண்டாதவன் என்று எண்ணாமல் செய்யவேண்டிய செயலுக்கு உண்டான பொருளை (கருவி, செல்வம்), செயலுக்கு வேண்டிய கல்வியறிவு நிரம்பியவனிடத்தில் செயலை ஒப்படைத்துவிடுக. அவன் செயல் செய்தல் பொருட்டு மற்ற வல்லுனர்களிடம் கேட்காமல் போனாலும் குற்றமில்லை; காரியத்தைக் கருத்தாக முடித்துவிடுவார். காளை உப்பு உண்டாலும் பயன் கொடாது போகாது இல்லையா. கொள்ளுக்கு உப்பிட்டுக் கொடுத்தால், காளை நோயின்றி தலைவனுக்கு வேலைசெய்யும் என்பதை இதில் கூறப்பட்டுள்ள பழமொழி கூறுகிறது.

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக.
(கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல் . விடுதல்: அதற்கு உரியனாக்குதல்.).

மணக்குடவர் உரை
இக்கருமத்தினை இக்கருவியாலே இவன் செய்து முடிக்க வல்லவனென்று ஆராய்ந்து பின்பு அக்கருமத்தினை அவன்கண்ணே விடுக. இது பெரும்பான்மையுஞ் சேனாதிபதியை நோக்கிக் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.


Thirukkural - Management - Selection of Employees
Selecting the right person for the right job has always been a challenge for Human Resource professionals. Selection is the process of choosing a suitable person among the pool of candidates whose qualifications,  knowledge,  and skills match the job requirements. Many tools, techniques, instruments, and methods are employed to get  the best people for professional and organizational excellence. Psychometrics has been profusely employed  to minimize errors and maximize personality and job compatibility in selection. Resorting to newer tools and techniques to select the right people has been the trend in today's management practice. There are hundreds of psychological instruments, tests, and batteries to assess the competence of a person for a particular job, for promotion, for working as a team member,  and for leadership  roles. A few very popular instruments are Myers and Brigs Type Indicator (MBTI  ) Belbin's Team Roles, Personality Factors, FIRO-B, Big Five Inventory, DISC, Whole Brain Inventory, and Thematic Apperception Test (TAT).

Has Valluvar written on the importance of psychometrics? The answer is a definite yes. Kural 517 advises us that before assigning a task to a person we need to assess whether he is the right person to carry out a particular task, whether he can execute the task by employing the right tools and the relevant techniques. Kural 517 is precedence to the management practice of matching the person and the job. In modern management  practice, selecting the right person for the right job is known as job-fitment. Job-fitment is matching the suitability of a person's personality and the requirements of a job. Unfortunately, people are forced to accept whatever jobs available irrespective of their suitability for those jobs. 

Most of the performance problems in organizations  are because of mismatches between people and the 
tasks they are assigned to execute. My observations and interactions with employees affirm that around sixty percent of people in today's organizations are doing jobs that do not match their personalities. That is one of the main reasons for job burnout, high absenteeism, tardiness, interpersonal conflicts, and mid-career changes.

Management thinkers and practitioners support the view that there is a close connection between a person's suitability for a job and his performance. However, in practice, most of the time, there is no connection between a person's suitability and the job he executes.

Assured this man will do this task this way,
Leave it to him.

That is just one side of the challenge. There are many selection failures despite professional selections. Valluvar, as a visionary, also anticipated that psychological instruments would not be fool proof as: 1) people are smart enough to exhibit the qualities that they do not possess, 2) people change over a period, and 3) the job context can influence people's behavior.

Though the objective of administering career assessment instruments during selection is to minimize 
subjectivity and maximize objectivity that does not always happen as the candidates can fake. That is why any process of selecting an employee involves many stages and many interviewers. Despite all these precautions, inevitably there are bad hires.

Thirukkural - Management - Delegation
“Delegation is the act of assigning formal authority and responsibility for completion of specific activities for a subordinate,” (Stoner, 1995). Delegation is assigning authority and responsibility to one's direct reports to help them execute their jobs better.

Proper delegation helps the direct report perform better and better performance by a direct report increases a superior's effectiveness. Moreover, a superior will have time to concentrate on higher order activities to scale up the department  and the organization as a result. The act of delegation helps a manager manage the present challenges and create plans for the future. If a manager concentrates only on the present, there is no future for him, the department, and the organization as well.

In spite of the merits of delegation, people avoid delegating for reasons known. Reason one is that the manager does not know how to delegate, reason two is that he is apprehensive of his direct report's ability to execute the tasks delegated and reason three is that he has fear that his direct reports will overtake or outsmart him. People avoid delegating tasks to avoid becoming redundant. 

The challenges for proper delegation are to identify: 1) the task, 2) the right methods needed to execute the task, and 3) the right person to execute that task. Therefore, before delegating a task to a person, do an assessment of all these three aspects and give the delegated person complete responsibility and authority to execute the task, advises Kural 517.

Assured this man will do this task this way,
Leave it to him.

One of the reasons for failure to delegate is that the delegator does not do proper assessment 
before delegating tasks. The merit of Kural 517 is that the Kural can be used to gain knowledge of psychometrics, selection of employees, and delegation of work.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

குறள் 516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்
[பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
செயல் தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்வானை - செயலை புரிபவன் / செய்பவன்

நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு.

நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு.

நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்

காலத்தோடு - பொழுதுடன் ; தக்க காலத்தில்

எய்த - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்

உணர்ந்து - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
ஒரு செயலை செவ்வென செய்ய யாரிடம் கொடுத்து செய்ய வேண்டும் ?
அதற்கு கீழ்க்காணுபவற்றை பின்பற்ற வேண்டும்

1) அச்செயலை செய்யபோகிறவரின் தகுதிகளை ஆராயவேண்டும். ஒவ்வொரு செயலுக்கு ஒவ்வொரு விதமான தகுதிகள் தேவைப்படும். ஆதலால் அத்தகுதிகள் உண்டா என்று அவரிடம் பார்க்க வேண்டும்.

2) அச்செயலின் தன்மை அதனை புரிய அதுகேட்கும் தகுதிகளை ஆராய வேண்டும். அவை அந்தச் செயலை செய்வோரிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அச்செயலை செய்வதற்குத் தேவையான அனுபவம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

3) ஒரு செயலை ஆற்றும் பொழுது அதனை செய்யக்கூடிய ஆற்றல் காலத்தையும் பொருத்து இருக்கும். உதாரணமாக விரைவாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் செய்ய ஒரு சில தகுதியும் அனுபவமும் உய்த்துணரும் திறன்(thought process) தேவைப்படும். அது செய்வோர்க்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதுவே அகழ்வாராய்ச்சி போன்ற பணிகளுக்கு பொறுமையும் விவேகமும் அவசியம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, காலத்தொடு எய்த உணர்ந்து செயல் - பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.
(செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.).

மணக்குடவர் உரை
வினை செய்வானையும் ஆராய்ந்து அவ்வினையினது இயல்பையும் ஆராய்ந்து அதுமுடியுங் காலத்தோடே பொருந்த அறிந்து, பின்பு அவ்வினை அவன் செய்வானாக அமைக்க வேண்டும்.

மு.வரதராசனார் உரை
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.

Thirukkural - Management - Delegation
In addition to the suggestions provided in Kural 517, Kural 516 provides three other factors that influence the effectiveness of delegation. They are: the person, the task, and the time.

Weigh well the agent, the task and the tier
Before you act.

This Kural advises us to assess three things before assigning a task. One is the competence of a person to complete the task to be assigned. Competence includes qualities, skills, experience, exposure, and expertise to undertake a task. Two is the complexity of the task. Complexity includes expectations, quality, and challenges in the process of doing. And three is the right time to do the task. Delegate the task after assessing all these three so that the direct report will complete the task effectively. This practice is indeed truly a scientific way of delegating  tasks to others.

English Meaning - As I taught a kid - Rajesh
Who should be chosen or recruited to successfully execute a job? 

A person has to be recruited based on following qualities 1) A person's qualifications and experience needs to be analyzed. 
2) Match of of qualification and experience for the role and responsibilities of the job to be done
3) The timing and duration of the job also need to be considered w.r.t the person's qualification and experience because certain jobs need to be done in firefighting mode in less time whereas some jobs like excavation needs patience and wisdom. Hence, the person needs to realize the timing and time's value of the jobs

Questions that I ask to the kid
How should I give a job to be a person?