Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label W - வண்ணதாசன். Show all posts
Showing posts with label W - வண்ணதாசன். Show all posts

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

குறள் 228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
[அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஈத்து - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

உவக்கும் -  உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல்

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

அறியார்கொல் -  அறிய மாட்டார்கள்; அறியாதவர்கள்

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை

வைத்து - வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைமாறாதபடிசெய்தல்.

இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு
இழக்கும் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்.

வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை.
வன்கணவர் - கொடுமையானவர்; அருளற்றவர்

முழுப்பொருள்
பிறருக்கு கொடுப்பதால் (கொடுத்து உதவுவதால்) ஒருவர் மகிழும் இன்பத்தை அனுபவித்தால் தான் உணரமுடியும். அதை பெறுபவரும் இன்பம் அடைகிறார். ஆனால் கொடுப்பதில் இருக்கும் இன்பத்தை அறியாத பேதைகள் தன்னிடம் இருக்கும் (நிலையில்லா) உடைமைகளை பொருட்செல்வத்தை தனது தனது என்று பிறருக்கு கொடுக்காது பேணிப்  பாதுகாக்கின்றவர் மிக கொடுமையானவர். அவர் பின்பு ஒரு நாள் எவரிடமோஅச்செல்வத்தை இழந்து வேதனை அடைவார். பிறருக்கு கொடுத்து உதவாதவருக்கு அருள் கிடையாது. 

கொடுக்காததனால் ஒருவர் செல்வத்தை இழப்பர் என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். ஆனால் கொடுப்பதனால் செல்வத்தை இழப்பர் என்று கூறவில்லை ஏனெனில் ஈகை அளிப்பவர்களுக்கு அருள் பெருகும். அதனால் செல்வமும் பெருகும் அவ்வருளும் அச்செல்வத்தை காக்கும் என்றும் நாம் உணரலாம்.
மூன்று செய்திகளை இக்குறள் சொல்கிறது.  
1) ஈகை அளிப்பது உவகையும், மனநிறைவையும் அளிக்கும். 
2) ஈகை குணம் இல்லாதவர் மனத்தளவில் வறியர். 
3) அச்செல்வம் இருப்பதினால், மகிழ்ச்சியில்லை. மாறாகக், குறையக்கூடாதே, களவாடப்படக்கூடாதே என்னும் கவலைதான் எஞ்சும். கவலை ஒரு நோய். பின்பு தங்கள் செல்வத்தை முறையில்லா வழிகளிலோ அல்லது களவாடப்பட்டோ இழப்பர். அது அவர்களுக்கு நோயை தரும். ஆதலால் செல்வதை பிறருக்கு கொடுக்காது கட்டிக்காப்பது என்பது நோயை கட்டிக்காப்பது போல் ஆகும். 

ஐசக் நியூட்டன் கூறிய “ஒவ்வொரு வினைக்கும், அதே அளவிலான ஓர் எதிர் வினை உள்ளது” என்பது ஓர் இயற்பியல் விதி மட்டுமல்ல. இந்த வாழ்வின், நாம் இருக்கும் பிரபஞ்சத்தின் அடிப்படை விதி! நாம் கொடுப்பதால், அதே அல்லது அதைவிடப் பல மடங்கு நாம் திரும்பப் பெறுகிறோம். நாம் மற்றவர்களுக்கு உதவினால், நமக்கு உதவி தேவையான சமயத்தில் கேட்காமலேயே கிடைக்கிறது! இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம். 

கிணற்று நீர் இறைக்க இறைக்க மேலும் மேலும் ஊறும் அல்லவா? அதுபோல, கொடுப்பவர்களுக்கு மேலும் மேலும் செல்வங்கள் வந்து குவியும்.

நூறு ரூபாய்க்கு தானம் செய்து விட்டு, “இதோ பார், நான் தானம் செய்து விட்டேன்” என்று ஐநூறு ரூபாய்க்கு விளம்பரம் செய்யக் கூடாது. “அரை கொத்தரிசி அன்ன தானம், விடிய விடிய மேள தாளம்” என்றொரு பழமொழி உண்டு!

அமெரிக்காவைச் சேர்ந்த சக் ஃபீனீ(Chuck Feeney) என்னும் தொழிலதிபர் தன்னுடைய 6 பில்லியன் வருமானத்தில் 99% அளவு தானமாக அளித்துள்ளார்! மிகவும் எளிமையாக வாழும் முறையைக் கொண்ட இவர், “மற்றவர்களுக்கு உதவி செய்யவே நமது செல்வம் பயன்பட வேண்டும். இந்த எண்ணமே என்னிடம் எப்பொழுதும் இருந்துள்ளது.” என்கிறார். இவர் பல வருட காலமாக யாருக்கும் தெரியாமலேயே தொண்டு செய்துள்ளார். பின்னாளிலேயே இவர் தானம் செய்து வந்து கொண்டிருந்து தெரிய வந்தது. அவர் “நான் செய்யும் வேலை மற்றவர்களுக்கு உதவியாக இருக்குமானால் மட்டுமே எனக்குச் சந்தோஷமாக இருக்கும்“ என்றும் கூறுவார்!

கல்வி: “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார் பாரதியார். கல்வி தானம் என்பது தானங்களிலேயே மிகவும் சிறந்த தானம்.
பெற்றுக் கொள்பவருக்கு அதிகரிக்கும் அதே சமயத்தில் கொடுப்பவருக்கும் கல்வி அறிவு சிறிதளவும் குறையாது!

நேரம்: வயதானவர்கள், தீராத நோய் வாய்ப்பட்டவர்கள், ஆகியவர்களுடன் பேசுவது. அவர்கள் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பது போன்று நமது நேரத்தை மற்றவர்களுக்கு உபயோகமாகச் செலவிடலாம்.

உணவு, உடை மற்றும் பொருள்: இவற்றை இல்லாதவர்களுக்கு வழங்கலாம்.

உடல் உழைப்பு: ராமர் பாலம் கட்ட அணில் சிறியதாக உதவி செய்த மாதிரி ஏதாவது வழியில் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம், கண் பார்வையற்றவர்களுக்குத் தேவையானவற்றை உடன் இருந்து கவனிக்கலாம்.

பாலம் கலியான சுந்தரம் அவர்கல் தனது கல்லூரிப் பேராசிரிய பதவியில் 35 ஆண்டுகள் சம்பாத்தித்த அனைத்தையும் ஏழைகளுக்காகச் செலவிட்டார் (மொத்தம் 30 லட்சம் ரூபாய்). குடும்பச்சொத்தில் கிடைத்த ரூபாய் 50 லட்சத்தையும் தானமாக தந்தார். அமேரிக்கா இவரை Man of the Millennium என்று விருது வழங்கி கௌரவித்தது. அப்பொழுது கிடைத்த ரூபாய் 30 கோடியையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து விட்டார்.

இத்தகைய ஈகையை இளமையிலேயே செய்ய வேண்டும். பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டால் அந்த வாய்ப்பு வராமலே போகலாம். அல்லது வயதான காலத்தில், நோய் மற்றும் முதுமையுடன் அறிவு மயக்கமும் வந்து ஈகை/தர்மம் செய்ய முடியாமல் போகலாம். அதையே திருவள்ளுவரும் கூறியுள்ளார்

எந்த உன்னதம் வாய்ப்பினும்
நீங்களே வைத்துக் 
கொண்டிராதீர்கள்
உடனே யாரிடமாவது சேர்த்துவிடுங்கள்.
அதுவே அதி உன்னதமானது
----- வண்ணதாசன்

 “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” என்று ஔவையார் சொல்லியிருப்பது போல, செல்வமிருந்தும் பிறர்கீவதற்கு மனமில்லாத கஞ்சர்களின் செல்வத்தை, பிறை களவாடிச் செல்வர், அவர்களே அறியாத வழிகளில்.

“ஈதல் இன்பம் வெஃகி” (அகநா 69:5)

சம்பந்தர் ஆக்கூர் தேவராப்பதிகத்தில், “இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே” என்கிறார். “செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எநிநே தப்புந பலவே” என்கிறது புறநானூற்றுப் பாடலொன்று (189:7-8). “கொன்னே வழங்கான் பொருள்காத்திருப்பானேல் அஆ இழந்தான் என்றெண்ணப்படும்” (நாலடியார் 9), “கொடாஅது வைத்தீட்டினார் இழப்பர்” (நாலடியார் 10) என்ற நாலடியார் பாடல்களும் இக்குறளின் கருத்தையொட்டியன.

"பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் (குறள் 88)" என்றும் திருவள்ளுவர் விருந்தோம்பல் அதிகாரத்தில் கூறியிருந்தார். 
 
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை
கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர். இஃது இடார் இழப்பரென்றது.

மு.வரதராசனார் உரை
தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

சாலமன் பாப்பையா உரை
இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?.

English Meaning - As I taught a kid - Rajesh
Sharing and giving our wealth to others in various forms will give us happiness / fulfillment in life. A person can realize it only by giving. But the selfish / self centric people who protect their money will not know the real fulfillment gained by giving. These selfish people who protect their money saying "mine", will loose their wealth in some other form. These selfish people are cruel people. Because this excessive amount of wealth actually doesn't belong to them. They had received it more in the name of profits, salary, from ancestors etc which actually belonged to the people

Questions that I ask to the kid
Who will loose everything that will have?
Who is a cruel person?

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

குறள் 934
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்
[பொருட்பால், நட்பியல், சூது]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.

பல - ஒன்றுக்குமேற்பட்டவை

செய்து - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு.

அழிக்கும் - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்.

சூதின் - சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.

வறுமை - துன்பம்; வெறுமை; திக்கற்றதனிமை.

தருவது - கொடுப்பது

ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை.

இல் - வேறு இல்லை

முழுப்பொருள்
சிறுமை எனப்படும் கீழ்மை, (மனதில்) துன்பம், (மனத்துன்பத்தால் வரும்) நோய், (பெரியோர் இடத்திலும், குடும்பத்திலும், சமூகத்திலும்) இழிவு ஆகிய பலவற்றையும் தந்து சீர் எனப்படும் செல்வங்கள் (நேர்மை, பொருட்ச்செல்வம், அழகு, நன்மதிப்பு, புகழ், தலைமைப்பண்பு, இயல்பு) அனைத்தையும் அழிக்கவல்ல சூதாட்டத்தைப்போன்று வறுமையும் ஏழ்மையும் துன்பமும் கொடுக்க வல்லது வேறேதும் இவ்வுலகிலில்லை.

சீட்டுக்கட்டின் வழவழப்பில்
ஒரு மாயமிருந்தது.
ஐம்பத்திரண்டு என்கிற அதன்
எண்ணிக்கையிலும் ஏதோ ஒன்று.
தலைகீழாகவும் நேராகவும் நிற்கிற
ராஜா ராணிகளின்
இதுவரை பாராத சாயல்கள்
அரசசபைக்கும் அந்தப்புரத்திற்கும்
ரகசியமாக அழைத்தன.
கெட்டபுத்தகங்களை வாசிக்கத் தரும்
பதின்வயது சினேகிதன் போல
ஜாக்கி இருந்தான்.
யாரிடமும் புகையிலை வாங்கிப்போட்டு
எப்போதும் கதை சொல்லும்
கிழவி போல பிரியமானது ஜோக்கர்.
ஆடுகிறவர்கள் நேர்த்தியில்லாமல்
அவரவர் சௌகரியப்படி அமர்ந்து
அவரவர்க்குத் தோன்றுவதைப் பேசுவது
பிடித்திருந்தது நிரம்ப.
ஜெயித்தவர்களை விட, தோற்றவர்கள்
விளையாட்டைத் தொடரும்படி  
இருந்த ஒரு வினோத அழைப்பு
சிக்கல் நூல்கண்டு போல் சவாலுடன்
அவிழ்க்கத் தூண்டியது.
பக்கத்திலிருந்த என்னிடம் கஜேந்திர மாமா
‘சீட்டைப் பார்த்துக்க மாப்ளே” என்று
சிறு நீர் கழிக்கப் போன சமயம்
சும்மாதான் கையில் எடுத்தேன்.
சூதாடியாவதற்குப் போதுமானதாக
இருந்தது அந்தச்
சும்மா என்கிற சின்னஞ் சிறு நொடி.
-வண்ணதாசன்

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

சூது முந்துறச் சொல்லிய மாத்துயர்
நீதி மைந்த நினக்கிலை யாயினும்
ஏதம் என்பன யாவையும் எய்துதற்
கோதுமூலம் அவையென ஓர்தியே (கம்ப.மந்தரை 12)

பரிமேலழகர் உரை
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை. (அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும் நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும்கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
துன்பமாயின பலவற்றையுஞ் செய்து தலைமையை யழிக்கும் சூதுபோல வறுமையைத் தருவது பிறிதொன்று இல்லை.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
துன்பங்கள் பல தந்த, நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.

English Meaning - As I taught a kid - Rajesh
In general, people who gamble would loose more money than they might earn. Hence, the gambler lots of trivial things such as 1) stealing money 2) telling lies 3) doing odd disrespected jobs 4) doing immoral stuffs. When one does all these trivial things, coupled with gambling, it leads to destruction of wealth, fame, reputation, respect etc. Hence, we can say that there is nothing like gambling which gives poverty (not just in terms of money but also in terms of reputation)

Questions that I ask to the kid
There is nothing like this which gives poverty.  Which is that?

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்

குறள் 932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு
[பொருட்பால், நட்பியல், சூது]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஒன்று - ஒன்று என்னும் எண்; மதிப்பிற்குரிய பொருள்; வீடு பேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்

எய்தி - அடைய எண்ணி செல்லுத்துதல்

நூறு - நூறு என்னும் எண்; மா, பொடிமுதலியன; சுண்ணணாம்பு.

இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு

இழக்கும் - இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்

சூதர் - அரசர் முன்னின்று அவர்களைப் புகழ்வோர்; பாணர்.

சூதர் - cūtar   s. (sing. சூதன்.) Bards, en comiasts, புகழ்வோர். 2. Charioteers, coach men, தேர்ப்பாகர். 3. Singers, flute players, a caste, பாணர். W. p. 94. SOOTA. 4. The chief disciple of Vyasa, and the com municator of the eighteen Puranas which he received from him, வியாசர்மாணாக்கர். 5. [ex சூது.] Gamblers, players at draughts, சூதாடுபவர். (p.) சூதர்பானிருபன்சீர்கேட்டு. Being informed of the beauty of the king (நளன்) from the bards. (நைட.)

சூதர்க்கும் -  சூதாடுபவர்களுக்கும்

உண்டாம் - [ex உள்.] Third pers. neut. sing. of the symbolic verb உள், but now used with all persons, in both numbers and in both திணை, it is, it exists, there is, there was, there are, there may be, there might be, &c. In some connexions, it im plies a degree of uncertainly, குறிப்புவினை முற்று. 2. Existing, existence, a thing that exists, உள்ளது. This and the participle உள்ள, (with its appellative) are the only parts of the verb, generally brought into colloquial use. எனக்குத்தெய்வமுண்டு. God is my help, (எனக்கு is often omitted)--spoken of one when deserted, ill-treated, &c. அதற்குநானுண்டுஅவனுண்டு. This concerns him and me exclusively (you need not meddle with it). 2. He and I are respon sible for that. உண்டில்லையெனல், Either affirming or denying.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை; kol   கொல்லு, I v. t. kill, slay, கொலை செய்; 2. afflict, tease; 3. fell, cut down.

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்

எய்தி - அடைய எண்ணி செல்லுத்துதல்

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்வதோர் - வாழ்வோர்

ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை

முழுப்பொருள்
சூதாட்டத்தில் விளையாடும் ஒருவர் முதல் சில ஆட்டங்களில்  சில வெற்றிகளை பெற்று இருப்பர். அது அவர்களுக்கு ஒருவித போதையை தரும். அந்த ஒரு (அல்ல ஒரு சில) வெற்றி(களை) பெற்றதை மனதில் கொண்டு தனக்கு இன்னும் பல வெற்றிகள் வரும் என்று கண்மூடித்தனமாக நம்புவார்கள். ஆனால் இவர்கள் காலப்போக்கில் இந்த சூதாட்டத்தில் ஒருநாள் பலநூறு செல்வங்களை இழப்பார்கள். இதுவே சூதினால் வந்த வினை பயன்.

இத்தகையவர்கள் நற்வழியில் வாழ்ந்து இன்பம் (நல்வினை) ஏய்த நெறிகள் உண்டோ? இல்லை. 

Image result for mahabharatham game

ஒன்று, நூறு என்கிற கணக்குக்கு வள்ளுவர் மகாபாரதத்தின் கௌரவர்களை அடிப்படையாகக் கொண்டே கூறியிருக்கலாம். இல்லையெனில் சிலவற்றைப் பெற்று பலவற்றை இழக்க நேரும் என்றோ, அல்லாது எல்லாவற்றையுமே இழக்கவேண்டும் என்றோ கூறியிருக்கலாமே!

மகாபாரதத்தைப் பொருத்தவரை இக்குறள் கௌரவர் அனைவருக்கும், துரியோதனன், சகுனி, திருதராட்டிரன் எல்லோருக்கும் ஒன்று-நூறு என்கிற கணக்கு, பொருந்துவதே. தம் நூறு மகன்களின் நலனுக்காக, குறிப்பாக துரியோதனின் மேலிருந்த குருட்டுத்தனமான பாசத்துக்காக, திருதராட்டிரன் சூதாட அனுமதி அளித்தான்; சகுனியோ தம் தங்கையின் நூறு புதல்வர்களும் குறிப்பாக துரியோதனும் நலமாக இருக்க, பாண்டவர்களை ஒழிக்க எண்ணினான்; துரியோதனோ பிறவியிலேயே குணக்கேடன். பாண்டவர்களின் மேல் கொண்ட பொறாமைக்காக, தாமே நாட்டை அடையவேண்டுமென்கிற ஆசையில் சகுனியின் துணையுடன், திருதராட்டிரன் அனுமதி பெற்று, வஞ்சக சூதிலே பாண்டவர்களை வென்றாலும் முடிவில் இவர்களெல்லாம் அடைந்தது என்ன? நூறு புதல்வர்களை திருதராட்டிரனும், நூறு மருகன்களை சகுனியும், துரியோதனன், தம்மோடு சேர்த்து நூறு சகோதரகளையுமே இறுதியில் இழந்தார்கள். இவர்கள் சூதால் ஒன்றை அடைந்தாலும், இறுதியில் பெற்றது என்ன? நூறை இழந்தார்களே!

இதனை நாம் அன்றாட விஷயங்களில் கூட காணலாம். உதாரண்மாக சொன்னால். நான் MBA படிக்கும் பொழுது ஒரே ஒரு பெரிய நிர்வாகத்திற்கு தயார் செய்யும் சிலர்ப் பற்றி கேள்விப்படுவது உன்று. அது ஆபத்தான யுக்தி என்று கூறுவார்கள். ஏனெனில் அந்த நிர்வாகத்திற்காக ஒருவர் தன்னை நன்கு தகுதிப்படுத்திக்கொண்டாலும் அந்நிர்வாகம் இவரைவிட மற்றொருவரை வேறு சில காரணங்களுக்காக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு. சில சமயங்களில் அந்நிர்வாகம் ஆட்குறைப்புப் போன்ற பிரச்சனைகளால் யாரையும் வேலைக்கு எடுப்பதை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஒரு நிர்வாகத்தை நம்பி மற்ற நூறு நல்ல நிர்வாங்களை தவரிப்பது அறிவின்மை. ஒரே ஒன்றில் கவனம் தேவைத்தான். ஆனால் அது சூதாக மாறிவிடக் கூடாது. "Do not put all eggs in one basket" என்று கூறுவார்கள். 

நமது குழந்தைகளை ஒரே ஒரு விளையாட்டு ஒரே ஒரு கலை என்று குறிக்கிவிடக்கூடாது. அவர்களை கூடைப்பந்து, கிரிக்கேட், ஓட்டப்பந்தயம், கைப்பந்து, கால்பந்து, என்று பலவற்றை கற்க உற்சாகமூட்டலாம். ஒன்றே ஒன்று கற்றுக்கொண்டால் அதில் என்றாவது ஒருநாள் அப்பயிற்சி முடிய வாய்ப்பு இருக்கிறது. ஒன்றே ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துவதில் தவறில்லை. ஆனால் மற்ற அனுபவங்களை பெறுவது நன்மை பயக்கும். A range of diversified experiences is always better. 

சீட்டுக்கட்டின் வழவழப்பில்
ஒரு மாயமிருந்தது.
ஐம்பத்திரண்டு என்கிற அதன்
எண்ணிக்கையிலும் ஏதோ ஒன்று.
தலைகீழாகவும் நேராகவும் நிற்கிற
ராஜா ராணிகளின்
இதுவரை பாராத சாயல்கள்
அரசசபைக்கும் அந்தப்புரத்திற்கும்
ரகசியமாக அழைத்தன.
கெட்டபுத்தகங்களை வாசிக்கத் தரும்
பதின்வயது சினேகிதன் போல
ஜாக்கி இருந்தான்.
யாரிடமும் புகையிலை வாங்கிப்போட்டு
எப்போதும் கதை சொல்லும்
கிழவி போல பிரியமானது ஜோக்கர்.
ஆடுகிறவர்கள் நேர்த்தியில்லாமல்
அவரவர் சௌகரியப்படி அமர்ந்து
அவரவர்க்குத் தோன்றுவதைப் பேசுவது
பிடித்திருந்தது நிரம்ப.
ஜெயித்தவர்களை விட, தோற்றவர்கள்
விளையாட்டைத் தொடரும்படி  
இருந்த ஒரு வினோத அழைப்பு
சிக்கல் நூல்கண்டு போல் சவாலுடன்
அவிழ்க்கத் தூண்டியது.
பக்கத்திலிருந்த என்னிடம் கஜேந்திர மாமா
‘சீட்டைப் பார்த்துக்க மாப்ளே” என்று
சிறு நீர் கழிக்கப் போன சமயம்
சும்மாதான் கையில் எடுத்தேன்.
சூதாடியாவதற்குப் போதுமானதாக
இருந்தது அந்தச்
சும்மா என்கிற சின்னஞ் சிறு நொடி.
-வண்ணதாசன்

மேலும்: அஷோக் உரை

சௌனகர் “சில தருணங்களில் போர்கள் சூதை விட உயர்ந்தவை அரசே” என்றார். “என்ன சொல்கிறீர்கள்?” என்று சினத்துடன் தருமன் கேட்டார். “போர்கள் பருப்பொருட்களின் வல்லமையை நம்பி இயங்குபவை பருப்பொருட்கள் ஐயத்திற்கிடமற்றவை. எனவே கள்ளமற்றவை. பகடை பல்லாயிரம் வழிகளை தன்னுள் கரந்த முடிவிலா ஆழம். அதில் உறைகின்றன நாமறியாத தெய்வங்கள்.”

பரிமேலழகர் உரை
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல் - பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது. (அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.).

மணக்குடவர் உரை
முன்பு ஒருபொருளைப் பெற்று அவ்வாசையாலே மற்றொரு பொருளினைப் பெறலாமென்று நூறு பொருளை யிழக்கின்ற சூதாடிகளுக்கு நன்றெய்தி வாழ்வதொரு நெறி உண்டாமோ?.

மு.வரதராசனார் உரை
ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.

சாலமன் பாப்பையா உரை
ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?

English Meaning - As I taught a kid - Rajesh
In gambling, a person aims at one while looses 100 times more than what he has aimed for. Is there any good thing that a gambler can attain in life? In gambling the result is purely based on chances/luck. A person not just looses money. He will loose reputation, time, work, fame, greatness, focus etc. 

This is not just applicable in gambling such lottery, games etc. It can be applied even in real life. For e.g, one person should not just prepare for one particular college admission, one particular company etc. One should be pragmatic and have plan B etc.  Because, in case of fall, one should have some boat to sail though one can always try the goal again. But we need some boat for survival

Questions that I ask to the kid
Who looses 100 while aiming 1? What does that 100 also mean?

தன்னைத்தான் காதல னாயின்

குறள் 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன்னைத், தான் சுயம்
தன்னைத் தான் - ஒருவன் தன்னையே சுயமாக
காதலன் - அன்பிற்குரியவன்; தோழன்; கணவன்; மகன்
ஆயின் - அப்படி ஆனால்
எனைத்து  - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு.
ஒன்றும் - சிறிதும்

துன் - துர் - tur   a prefix signiffing difficult, bad, evil, ill (opp. to சற், சன்). Before a consonant the ர் is often changed into a homogeneous letter (as in துஷ் கிருத்தியம், துன்மார்க்கம்,; துன்னாற்றம்).
ur
துன் - s. A prefix used in combination signifying evil, ill, bad, deficient; it is often changed to ற், before the hard let ters, to ன் before the soft, as துன்மார்க்கம். Before இடையினம், there is no change. Sometimes ர் is dropped and the relative letter takes its place--as துச்சரிதம், ஒருபசர்க் கை. (See துஷ்.) W. p. 414. DUR.

துன்னற்க - பிறர்க்கு துன்பம் நினைக்காதே, துன்பம் கொடுக்கும் செயல்களை செய்யாதே
தீவினைப் - பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு
பால் - குழவி, குட்டி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான நீர்மப் பொருள்; பிணத்தை அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற்பாலும் நவதானியமும் சேர்த்துத் தெளிக்கும் சடங்கு; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மை முதலியவற்றிலிருந்து கசியும் சீழ்; பிரித்துக் கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமை பன்மை என்ற இருவகைப் பாகுபாடு; அகத்திணை புறத்திணை என்ற பாகுபாடு; இடையர் குறும்பர்களின் வகை.

முழுப்பொருள்
பிறர்மீது அன்பு செலுத்துவது என்பது இயற்கை. தாய் நம்மை பாலூட்டி அரவணைத்து அன்பு செலுத்துவதனால் அன்பு செலுத்துகிறோம், தந்தை நம்மை பேணி காக்கிறார்கள் என்பதனால் அன்பு செலுத்துகிறோம், நமது மனைவி/கணவன் மீது அவரின் குணங்களினாலும் அவரின் பால் கொண்ட காமத்தினாலும் அன்பு செலுத்துகிறோம், நமக்கு பிறந்த குழந்தை ஆயிற்று என்பதனால் அன்பு செலுத்துகிறோம், நமது நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள் என்பதனால் அன்பு செலுத்துகிறோம். ஆதலால் பிறர் மீது அன்பு செலுத்துவதில் ஆச்சர்யமில்லை. அது மட்டும் இன்றி நமக்கு பிறரை பற்றிய முழுதும் தெரியாது. அவர்களின் நற்குணங்களை மட்டும் எண்ணி அவர் மீது அன்பு செலுத்துகிறோம்.

ஆனால் நம்மை நாம் அவ்வளவு எளிதாக உயர்வாக எண்ணிக்கொள்வது இல்லை. ஆதலால் நாம் நம்மை காதலிப்பது இல்லை. ஏன் என்றால் நமக்கு தெரியும் நாம் செய்த தவறுகள் எண்ணவென்று. ஆதலால் நம்மை நாம் அவ்வளவு நேசிப்பதில்லை.

நம்மை நாம் நேசிக்கவேண்டும் என்றால் நம்மை பற்றிய உயர்வான எண்ணங்களே நம்மிடம் இருக்க வேண்டும். நம்மை பற்றிய கீழ்மைகள் நம்மிடம் இருக்க கூடாது. கீழ்மை செய்தால் தான் கீழ்மையான எண்ணங்கள் வரும். ஆதலால், தன்னை தான் நேசித்துக்கொள்வதற்கு தனக்கும் சரி பிறர்க்கும் சரி துன்பம் தரும் செயல்களை சிறிதளவாயினும் ஒருபொழுதும் செய்யக்கூடாது.  தனக்கு தன்பம் தருவது என்பது உடலை பேணானது, மனதை பேணானது, எண்ணங்களை பேணாதது, நேரத்தை போற்றிப் பேணாதது, ஒழுக்கத்தைப் பேணாதது, அறத்தை பேணாதது, அடக்கத்தைப் பேணாதது என்று பலவற்றை சொல்லலாம். பிறர்க்கு தீங்கு என்பது உடல் முதல் மனம் வரை செய்யப்படும் தீங்கு பலவற்றை சொல்லலாம்.

மேலும் 
குறிப்பு: தீய செயல் செய்யுங் காலத்துப் பிறருக்குத் துன்பம் உண்டாக்குவதாகத் தோற்றினும் விளையுங்கலாத்துத் தனக்கே துன்பந் தருதலின் அது விலக்குதற்குரியது என்றவாறு.

எழுத்தாளர் வண்ணதாசனின் ஒரு கவிதையை வாசித்தேன்.. இக்குறள் நினைவுக்கு வந்தது. பிறருக்கு துன்பம் தறாத வாழ்க்கை எவ்வளவு மகத்தானது
தான் பிடித்த 
பட்டாம்பூச்சியை
அதன் சந்தோஷம் மாறாமல்
இன்னொரு கைகளுக்கு
மாற்ற முடிந்தவர்கள்
பாக்கியசாலிகள்
- வண்ணதாசன் (எ) கல்யாண்ஜி

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக. இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

எழுத்தாளர் லதா என்பவர் கழிவறை இருக்கை என்ற ஒரு கட்டுரை தொகுப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக கலவி (sex) பற்றியும், பெண்ணியம் பற்றியும் ஒரு புத்தகம். பொதுவெளியில் உடலுறவு/கலவி பற்றிப் பேசாத சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு நல்ல நூல். அதில் இருந்து சுய அன்பு/சுய மரியாதை பற்றிய சில பத்திகள் கீழே (அத்தியாயம் - 8 இல் இருந்து) (இது இக்குறளுக்கு முற்றும் சம்மந்தாமான பத்திகள் இல்லை. ஆனால் தன்னை ஒரு காதலிக்கு அன்பு எவ்வளவு முக்கியம். அதற்கு பெற்றோர், ஆசிரியர், சமூகம் செய்ய வேண்டியவை யாவை என்ற கோணத்தில் இருந்து. எல்லாவற்றையும் ஒருவரே செய்து விட முடியாதே. சூழ்நிலைகளுக்கும், சந்தர்ப்பங்களும் முக்கியம் தானே)

நம் மேலான சுய-அன்பையும் மரியாதையையும் அறவே ஒழித்துவிட்டு, மற்றவர்களிடம் அன்புடனும் மரியாதையுடனும் இருக்குமாறு நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுவது என்பது துயரமானதாகும் (உண்மையில் துயரம் என்பது குறைந்த மதிப்பீடே!). இந்தக்காரணத்தால், நாம் மற்றவர்களிடம் அன்பையும், மரியாதையையும் எதிர்பார்க்கிறோம். உண்மையில், நாம் அன்புக்கும் மரியாதைக்கும் யாசித்துக் கொண்டிருக்கின்றோம். நம்மீது அன்பையும் மரியாதையும் செலுத்த, நாம் மற்றவர்களையும் நிர்ப்பந்திக்கிறோம்.    

இந்த ஆழமான கருத்தைச் சிலர் மேலோட்டமாகப் பார்க்க முயன்று புரியாமல் போவதால், இது ஒரு புரியாத் தத்துவம் என கடந்து போக நினைக்கலாம். எனவே நாம் அதை வேறு கோணத்திலும் பார்ப்போம்.  எத்தனை பெற்றோர், ஆசிரியர், நண்பர், சுற்றத்தார், குழந்தைகளுக்குச் சுய அன்பு மற்றும் சுயமரியாதை குறித்து போதிக்கின்றனர்? நம் நாட்டில், சுய இன்பம் மட்டுமே விலக்கப்பட்ட விஷயமன்று; சுய அன்பும், சுயமரியாதையும் கூட விலக்கப்பட்ட விஷயங்களே! ‘சுய அன்பு’ என்பது ‘சுயநலம்’ என்றும், ‘சுயமரியாதை’ என்பது ‘அகங்காரம்’ என்றும் நிலைநிறுத்தப் படுகின்றன. இவை கட்டாயமாக வெவ்வேறானவை; ஆயினும், நம்மில் எத்தனை பேர் இதை உணர்ந்துள்ளோம்? 

ஒருவரின் செல்வம் முழுவதையும் அழித்துவிட்டு அவர் தான தருமம் செய்யவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்? நம் எதிர்பார்ப்பில் ஒரு நியாயம் இருக்க வேண்டுமல்லவா? நான்  எத்துணை பணிவானவன் என மற்றவருக்குக் காட்ட நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தி என்னைச் செய்ய வைக்குமிடத்தில், நான் எப்படி என் சுய-அன்பையும் சுயமரியாதையையும் காப்பாற்றிக்கொள்ள முடியும்? மற்றவரின் வற்புறுத்தல் படி நான் வாழத்தொடங்கும் பொழுதே இவை எல்லாவற்றையும் நான் தொலைத்து விடுகிறேன். ஒவ்வோர் ஆன்மாவும் இங்குக் காற்றை போல் சுதந்திரமானது. ஆனால் அந்த ஆன்மாவை மற்றவருக்கு ஏற்றாற்போல் வடிவமைக்க முற்படுகையில் அங்கு ஆன்மா மரணித்து விடுகிறது. இப்படித் தொலைத்ததைத் தொலைத்ததைத் தேடித்தான் தன்னையே தேடுவதற்காகச் சிலர் ஆன்மிகம் என்ற பாதையை பிற்காலத்தில் நாடுகிறார்கள்.  வாழ்வே மாயம் எனத் தோன்ற ஆரம்பிக்கிறது. இந்த உலகின் சூதும் வாதும் புரியாத நிர்மலமான வயதில் தொலைத்ததை இனி எங்கே சென்று தேடுவது? 

அன்பில்லா இதயம் மட்டுமே சுயநல இதயமாகிறது. நம் உள்ளத்தில் அன்பு இல்லை என்று தெரியும். அதனாலேயே, மற்றவர்களுடைய இதயங்களிலும் அன்பு இல்லை என்று நினைக்கிறோம். இந்தச் சூழ்நிலையில், தத்தம் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்து கொள்ளும் முறை ஏற்படுகிறது. அதனால் நான் சுயநலவாதியாகிறேன். என்மேல் எனக்கு மரியாதை இல்லை, அதனால் மற்றவரும் என்னை மதிக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நான் மதிக்கப்பட வேண்டியவன் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு, நான் அகந்தை உடையவன் ஆகிறேன். சுய அன்பும், சுயமரியாதையும் இல்லாத காரணத்தால் உண்டாகும் மாயையே இது. 

பெற்றோர், ஆசிரியர், மூத்தோர் ஆகிய நாம், அன்பும் மரியாதையும் கொண்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளல் வேண்டும். குழந்தைகள், இதை உள்ளுணர்வில் அறிந்துகொண்டு, இயல்பாகவே அன்புள்ளத்துடனும், மற்றவரை மதிக்கும் குணமுடையவர்களாகவும் இருப்பர். அன்பையும், மரியாதையையும் வெறும் சொற்களால் கற்றுத்தரத் தேவையில்லை. தங்களுடைய பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைகள், உண்மையாகவே, அவர்கள் வாழ்வில் காணும் ஒவ்வோர் ஆண் பெண்ணுடனும் அன்புடன் இருப்பார்கள். செயல்கள், சொற்களை விட உரக்கப் பேசும் என்பதை அறிந்திருக்கிறோம்.  என்னைக்கேட்டால், “செயல் ஒன்றே போதுமானது; மற்றவை தன்னிச்சையாக அதனதன் இடத்தில் அமர்ந்துகொள்ளும்” என்பேன்.

அன்பையும் மரியாதையையும் எப்போதும் கற்றுக்கொடுக்க வேண்டியதுமில்லை; அதற்கான தேவையும் இல்லை. எப்படி ஒரு ரோஜா பூக்கும் சமயத்தில் அதன் மணத்தையும் கொண்டுவருகிறதோ, அப்படியே, ஒரு குழந்தை பிறக்கும் போது, அன்பையும் கொண்டுவருகிறது.

English Meaning - As I taught a kid - Rajesh
If you want to love yourself, even if small do not even think and do not anything bad to others or yourself. Because if you do something bad your heart/conscience itself will burn/kill you

Questions that I ask to the kid
In order to love yourself, what should you do and not do? Why (because conscience will know)?

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க

குறள் 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
[அறத்துப்பால், பாயிரவியல், அறன்வலியுறுத்தல்]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
அன்று - அந்நாள்

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா.

அன்று அறிவாம் - அந்நாளில் அறிந்துக்கொள்ளலாம், தெரிந்துக்கொள்ளலாம், செய்துக்கொள்ளலாம்

என் -> என்ன -> இகழ்ச்சிக்குறிப்பு, என்று சொல்லுதல் (to say, utter, express)

என்னாது - என்று சொல்லாமல்

அறம் -> தன்னறம் (தன்னுடைய அறம்)தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல், ஒழுக்கம்,

தன்னறம் - ஒருவன் தன்னால் சிறப்பாகச் செய்யக்கூடியதும் செய்தால் முழுநிறைவை அடைவதும் எதுவோ அதுவே தன்னறம். சுவதர்மம்.  

செய்க - செய்ய வேண்டும்

மற்று அது - மற்றவை

பொன்றுதல் - அழிதல்; இறத்தல்; தவறுதல்; பார்வை முதலியன குறைதல்.

பொன்றுங்கால் - இறுதிக்காலத்தில்

பொன்றா - மறையாத, இறவாத, நிலைத்த

துணை -  அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்

முழுப்பொருள்
ஒருவனுக்கு ஒரு செயலை அவன் சிறப்பாக செய்தால் மனநிறைவை அளிக்குமானால் அதுவே அவனுக்கு அறம். அதை தன்னறம் என்போம். சுவதர்மம்.  அப்படிப்பட்ட தன்னறத்தினை நாளை செய்துக்கொள்ளாம் என்று வேறு வேலை இருக்கிறது என்று தள்ளிப்போடக்கூடாது.

ஏன் என்றால் வாழ்வில் இறுதி காலத்தில் தன்னுடைய உடம்பும் மனதும் தளர்ந்தகாலத்தில் நாம் ஆசைப்பட்டதை செய்ய முடியவில்லையே என்று மன நிறைவு இல்லாமல் துன்பம் அடைய கூடாது. இல்லையேல் வாழ்வு வீணாகிவிடும்.

அப்படி மனநிறைவு அளிக்கும் செயல்களில் இளமையில் இருந்து ஈடுபட்டால் இறுதி காலத்தில் மனநிறைவு இருக்கும். அதுவே இறுதிக் காலத்திற்கு உற்சாகமாய் இருக்கும். துணையாக அமையும்.

அதுமட்டும் இன்றி நாம் இன்று செய்யும் செயல்களே நாளை நம்மை காக்கும். தருமம்(காலத்தேச் செய்யும் கடமைகள் / செயல்கள்) தலைக் காக்கும். இன்று நாம் செயல்களை செய்யாது பிற்காலத்தில் கிருஷ்ணா ராமா என்று புலம்புவதில் பயனில்லை. உதாரணமாக கடைசிக்காலத்தில் பகவத் கீதையும் /திருக்குறளும் படித்து என்னப் பயன்? ஏனேனில் பகவத் கீதையும் திருக்குறளும் நமக்கு கூறும் முதன்மையான செய்தி செயலாற்று. இளம் வயதில் கற்று செயலாற்றாமல் கடைசிகாலத்தில் கற்பதால் ஒரு பயனுமில்லை. ஆதலால் பிற்காலத்திற்கு எதையும் ஒத்திப்போடாதே. இன்றே செய். அது உன்னை நாளை பாதுக்காக்கும். 

பொதுவாக அறம் (கடமை, புண்ணியக்காரியங்கள், மனநிறைவு தரும் சேவைகள், ஒழுக்கம்) சார்ந்த எதையும் தள்ளிப்போடாதே! Do not procrastinate. 

அறம் தனை கடமை என்னும் நோக்கில் பார்த்தால் அதற்கு நான் வாழ்வில் நேரடியாக பார்த்த ஒரு சம்பவம் நினைவில் வருகிறது. எனது பக்கத்து வீட்டில் என்னை விட ஒரு வயது சிறிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பள்ளியில் படிக்கும் பொழுது நன்றாக படிப்பார். அவருடைய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் பொழுது கடைசி பரிட்சைக்கு முன்பு தினம் எதிர்ப்பாராத விதமாக திடீர் என்று அவருடைய தந்தையார் மாரடைப்பால் இறந்துவிட்டார். அந்த துக்கமான நேரத்திலும் அவர் மறுநாள் பரீட்சை எழுதினார். பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சிப்பெற்றார். அவர் கடைசி நிமிடம் வரை படித்துக்கொண்டு இருக்காமல் வருடம் முழுவதும் உழைத்ததால் அவரை ஒரு இக்கட்டான நிலையில் கூட அவர் முன்பு செய்த கடமை (நேரத்திற்கு அவரது கடமைதனை செய்தது. அதாவது நாளை பார்த்துக்கொள்ளலாம் என்றில்லாமல் அவ்வப்போது படித்தது) அவரை கைவிடாது காப்பாற்றியது. ஆனால் நம்மில் பலர் கடைசி நிமிடத்தில் படிக்கலாம் என்று பரிட்சை அறை வாசல் வரை கையில் புத்தகம் வைத்துக்கொண்டுப் படிப்பதை பார்த்து இருக்கிறோம். அது தவறு.

என்பதை நினைவில் கொள்க

பி.கு: கண்டிப்பாக கீழ்க்காணும் ஜெயமோகன் உரையை காண்க
பி.கு: இதனை அமேஸான் (Amazon) நிறுவனர் ஜெப் பேஸாஸ்(Jeff Bezos) regret minimization framework என்கிறார். ஆகவே Bias for action என்ற ஒரு தலைமை பண்பை அவரது நிறுவனத்தில் அடிப்படையாக கடைப்பிடிக்கிறார்.

மூலநூல்களை மனப்பாடம் செய்தால்தான் அவற்றை நினைவில் ஓட்டி முழுமையாக அறியமுடியும். ஒரு வரி ஓர் உணர்வுடனோ அனுபவத்துடனோ இணைந்து தன்னிச்சையாக நினைவில் எழுவதுதான் அதை உண்மையில் புரிந்துகொள்ளும் தருணம்

உதாரணமாக ஒருநண்பரின் இறப்புச்செய்தி எனக்கு வந்தபோது பேருந்துப்பயணத்தில் இருந்தேன். அவர் இயற்கைவேளாண்மை, கிராமிய மேம்பாடு சார்ந்து பெரிய கனவுகள் கொண்டிருந்தார். அதைச்சார்ந்தே தன்னை பயிற்றுவித்து வந்தார். அவரது இயல்பே அதைச்சார்ந்து உருவாகி வந்தது

ஆனால் கொஞ்சம் பணம் சேர்த்துவிட்டு ஊர் திரும்பலாமென நினைத்து தொடர்ந்து வளைகுடா நாட்டிலேயே பணியாற்றினார். அவர் வெறுத்த வேலை. அவர் ஒன்றும் சாதிக்கமுடியாத வேலை.ஆனால் எப்போதும் அவருக்கு செய்து தீர்க்கவேண்டிய ஒரு சிறிய வேலை எஞ்சியிருபப்தாகத் தோன்றிக்கொண்டிருந்தது. ஒரு சிறு மாரடைப்பில் மறைந்தார்.

அவரைப்பற்றி எண்ணியதும் இயல்பாக ஒருகுறள் நினைவில் எழுந்தது

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத்துணை


நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்திப்போடாது அறச்செயல்களைச் செய்யுங்கள். இறக்கும்போது அதுவே துணைவரும்– இதுதான் வழக்கமான பொருள். ஆனால் அறம் என்ற சொல்லுக்கு ஏன் தானதர்மங்கள் என்று பொருள் கொள்ளவேண்டும்? அப்படி வள்ளுவர் காலத்தில் பொருள் இல்லை.

தன்னறம், தனக்கே உரிய அறம் என ஏன் பொருள் கொள்ளக்கூடாது? ஒருவன் தன்னால் சிறப்பாகச் செய்யக்கூடியதும் செய்தால் முழுநிறைவை அடைவதும் எதுவோ அதுவே தன்னறம். சுவதர்மம். அதைச்செய்யாமல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கவேண்டாம். வாழ்நாள் வீணாகிவிடும். ஒருவன் தன் சொந்த அறம் எதுவோ அதைச் செய்தால் மட்டுமே நிறைவாக இறக்கமுடியும், இறப்பின் கணத்தில் மனநிறைவாக அதுவே உடனிருக்கும். அதையல்லவா வள்ளுவர் சொல்கிறார்?

இப்படி அக்குறள் எனக்கு அன்று திறந்துகொண்டது. மூலநூல்கள் அப்படி திறந்துகொள்ளவேண்டும். அதன்பெயரே தியானம். அதற்கு முதல்படி மனனம்.

எழுத்தாளர் வண்ணதாசனின் ஒரு கவிதை வாசித்த பொழுது இக்குறள் நினைவுக்கு வந்தது
நீங்கள் அந்த முயலை
வேட்டையாடிவிட்டீர்கள்.
இனிமேல் அதனுடைய காட்டைத் தேடுங்கள்.
நீங்கள் பட்டாம் பூச்சியைப்
பிடித்துவிட்டீர்கள்.
இனிமேல் அது அமர்ந்த மலர்களைப் பாருங்கள்.
நீங்கள் சிகரத்தில் ஏறிவிட்டீர்கள்.
இனிமேல் சமவெளி பற்றி யோசியுங்கள்.
நீங்கள் தீர்ப்புச் சொல்லிவிட்டீர்கள்.
இனிமேல் தண்டிக்கப்பட்டவனின்
குற்றமற்ற கண்களைச் சந்தியுங்கள்
நீங்கள் பலத்த கரவொலியுடன்
பாடி முடித்துவிட்டீர்கள்.
இனிமேல் உங்களுக்குப் பின்னால் இருக்கும்
அத்தனை வாத்தியக்காரரின்
ஒத்திசைவை நினையுங்கள்.
நீங்கள் இந்தக் கவிதையைப்
படித்துவிட்டீர்கள்.
இனிமேல் இது உங்களை
என்ன செய்யச் சொல்கிறதோ
அதைச் செய்யுங்கள்.
தயவுசெய்து, அதை மட்டும்.
-வண்ணதாசன் (எ) கல்யாண்ஜி

கவிக்கோ அப்துல் ரகுமான் “போட்டி” என்ற ஒரு கவிதை
ஒருநாள், எனக்கும் வானத்திற்கும்
போட்டி நடந்தது

நான் புன்னகையை எடுத்து வைத்தேன்
அது வைகறையை எடுத்து வைத்தது

நான் கண்ணீரை எடுத்து வைத்தேன்
அது மழையை எடுத்து வைத்தது

நான் வியர்வைத்துளிகளை
எடுத்து வைத்தேன்
அது நட்சத்திரங்களை எடுத்து வைத்தது

நான் கோபத்தை எடுத்து வைத்தேன்
அது வெயிலை எடுத்து வைத்தது

நான் காதலை எடுத்து வைத்தேன்
அது நிலவை எடுத்து வைத்தது

நான் எண்ணங்களை எடுத்து வைத்தேன்
அது மேகங்களை எடுத்து வைத்தது

நான் எழுத்தை எடுத்து வைத்தேன்
அது மின்னலை எடுத்து வைத்தது

நான் பேச்சை எடுத்து வைத்தேன்
அது இடியை எடுத்து வைத்தது

நான் கவிதையை எடுத்து வைத்தேன்
அது வானவில்லை எடுத்து வைத்தது.

நான் உறக்கத்தை எடுத்து வைத்தேன்
அது இருளை எடுத்து வைத்தது

நான் சந்தேகங்களை எடுத்து வைத்தேன்
அது கிரகணங்களை எடுத்து வைத்தது

நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்
அது புயலை எடுத்து வைத்தது

இறுதியில் நான்
புதுப்புது இலட்சியங்களை
நோக்கி நடக்கும்
என் பாதங்களை
எடுத்து வைத்தேன்

வானம் தோற்றது!

– கவிக்கோ அப்துல் ரகுமான்

ஒப்புமை
”தெரியின் அறமே துணை” (அறநெறிச் 146)
“முன்புநின் றிசைநி றீஇ முடிவு முற்றிய
பின்புநின் றுறுதியைப் பயக்கும் பேரறம்” (கம்ப.தைலமாட்டு.29)
“அறந்தலை நின்றார்க் கில்லை யழிவெனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது” (கம்ப.இந்திரசித்து வதை 58)


”மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு” (நாலடி 332)
“பின்னை அறிவென்றல் பேதைமை” (அறநெறிச் 105)

“காலைச்செய் வோமென் ற்றத்தைக் கடைப்பிடித்துச்
சாலச்செய் வாரே தலைப்படுவார் - மாலைக்
கிடந்தானெழுத லரிதான்மற் றென்கொல்
அறங்காலைச் செய்யாத வாறு” (அறநெறிச்.66)
“நாளைச் செய்குவம் அறம்எனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்
இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகின் முழுவதும் இல்லை” (சிலப். 28:179-82)
“உம்பர்த முலகி னுய்க்கும் உலகினுக் கிறைமையாக்கும்
வெம்பிய இறப்பின் வாங்கி வீட்டின்கண் வைக்கும் மெய்யே
நம்பிநல் லறத்தைப் போலும் துணையில்லை நமக்கு நாடின்” (மேருமந் 968)

மேலும் : அஷோக் (நன்றி)

தருமன் “அறத்தின்மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கையென்பது அது வெல்லும் என்பதனால் அல்ல. அளிக்கும் என்பதனால் அல்ல. அழைத்துச் செல்லும் என்பதனாலும் அல்ல. அது எனக்கு உவப்பானது, அது ஒன்றே இயல்பானது என்பதனால்தான்” என்றார். பீஷ்மர் விழிகள் ஈரம் கொள்ள, நெகிழ்ந்து தொண்டை அசைய, கைநீட்டி அவர் கைகளை பற்றிக்கொண்டார். “அவ்வண்ணமே இரு, மைந்தா! இம்மண்ணில் எதுவும் உன்னை துயர்கொள்ளச் செய்யாதிருக்கட்டும்” என்றார். அவரது கைகள் தருமனின் கைகளுடன் சேர்ந்து நடுங்கின. “தங்கள் வாழ்த்து என்றும் என்னுடன் இருக்கும்” என்றார் தருமன்.


எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு -கிராதம்-44,45,46 கீழ்க்காணும் வரிகள் வருகிறது.  அதில், அசுரன் விருத்தினன் வெல்ல வாய்ப்பிருந்தும் அவனின் வீழ்ச்சி அவன் தள்ளிப்போடுவதால் வருகிறது என்பதை காணலாம். (விருத்தினனின் வீழ்ச்சியையும் இந்திரனின் வெற்றியையும் முழுமையாக வாசிக்க கிராதம் பகுதி 5 மாகேந்திரம் (35 முதல் 46 வரை)) வாசிக்கவும்)

அவன் மீண்டும் படிகளுக்கு வந்தபோது அங்கே இந்திராணி நின்றிருந்தாள். “வணங்குகிறேன், தேவி” என்றான்.

“என்ன சொல்கிறார்? காமம் நிறையவில்லையா அவருக்கு?” என்றாள். “ஆம், அவர் விழித்தெழ விழையவில்லை” என்றான். “அவர் விழித்தெழவேண்டும்… நான் சொல்லிச்சொல்லி சோர்ந்துவிட்டேன்” என்றாள் இந்திராணி. “கண்ணறிய மாறிக்கொண்டிருக்கிறது காலம். காலத்தில் பிந்தியவன் கணம்தோறும் தன்னை இழந்துகொண்டிருக்கிறான். வேந்தர் எண்ணி வாழும் அவ்வுலகம் இன்றில்லை. விழுந்துகிடக்கும் இனிய சேற்றிலிருந்து ஒருகணம் வெளிவந்து நோக்கும்படி சொல்லுங்கள்.” இந்திராணி அவனை அழைத்துக்கொண்டு விருத்திரனை அணுகினாள். “படைத்தலைவர் சொல்லையும் அமைச்சர் சொல்லையும் ஒற்றர் சொல்லையும் மறந்த அரசன் பகைவர் சொல்லை கேட்பான் என்பார்கள். இனி பொறுக்கமுடியாது. எழுக!” என்றாள்.


. அரண்மனையின் அகத்தளத்தை அடைந்ததும் “என் நகரும் வீழுமா? என் கொடியும் சரியுமா?” என்று தனக்குத்தானே என கேட்டான். “நான் தோற்கலாகுமா?” கௌமாரன் “அரசே, இன்னமும் நம் கோட்டைகளில் ஒன்று எஞ்சியுள்ளது. ஒன்று எஞ்சுவதுவரை நம்பிக்கை நீள்கிறது என்றே பொருள். நம் படைகள் எழும்படி ஆணையிடுக! வென்று பகை முடிப்போம்” என்றான்.

ஆம், நாம் எழவேண்டிய நேரம். ஆனால் என் உள்ளமும் உடலும் களைத்திருக்கின்றன. சற்று மது அருந்தி இளைப்பாறாது இங்கிருந்து என்னால் எழமுடியாது” என்றபின் இருக்கையில் சரிந்து அருகணைந்து நின்ற சேடியரிடம் மதுக்கோப்பைகள் வருவதற்கு கையசைத்தான் விருத்திரன். அவர்கள் கொண்டுவந்த மதுவை வாங்கி ஒன்றன்மேல் ஒன்றென அருந்தினான். எரிதீயை நீர்விட்டு அணைப்பதுபோல. விடாய்கொண்டிருப்பது அவனல்ல, அவன் உயிர் என கௌமாரன் நினைத்தான்.


“நீ அஞ்சவேண்டியதில்லை தேவி, என்னை வெல்ல எவராலும் இயலாது” என்றான் விருத்திரன். “எனக்கு எந்தை அளித்த நற்சொல் துணையிருக்கும். இந்திரனின் மின்படை ஒரு மென்மலரென என் தோளில் வந்துவிழுவதை நீ காண்பாய்.”

இந்திராணி அவன் தோளைப்பிடித்து உலுக்கி “பித்தன்போல பேசவேண்டாம். இனி உங்களுக்கு நேரமில்லை. இதோ நகரெங்கும் தேவர்கள் தாக்கப்படும் ஓசை கேட்கிறது” என்றாள். “இன்னொரு கலம் மது. இறுதிக் கலம் எனக்கென எதை வைத்திருக்கிறதென்று ஆவல்கொள்கிறேன். அதன்பின் நான் என் படைக்கலங்களுடன் எழுவேன்” என்றான் விருத்திரன்
===

பரிமேலழகர் உரை
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று. 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - யாம் இன்று இளைமையாயிருப்பதாற் பிந்தி முதுமையிற் செய்வே மென்று கடத்திவையாது இன்றிருந்தே அறவினையைச் செய்து வருக; மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை.பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம்.

இறத்தலாவது உடம்பினின்றும் உயிர் நீங்குதல். உயிர் நீங்கிய உடம்பு அழியவும் அதனாற் செய்யப்பட்ட அறம் அதனோடழியாது உயிரோடொன்றி நின்று உதவுவதால், பொன்றாத்துணையாயிற்று. நிலையாத உடம்பு நிலையும் பொழுதே நிலைக்கும் பயனைப் பெற்றுக் கொள்க என்பது ஆசிரியரின் அன்பார்ந்த அறிவுரை.

பொருள்: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க‡இறக்கும் ஞான்று செய்வாம் கருதாது (இற்றை ஞான்றே ஒவ்வொருவரும்) நல் வினையைச் செய்க ; பொன்றுங்கால் அது பொன்றா(த) துணை‡ (அவர்) இறக்குங்காலத்தில் அஃது இறவாமல் (அவருயிருடன்) செல்லும் துணையாம்.

அகலம்: ‘பொன்றுங்கால்’ என்று பின்னர்க் கூறியிருத்தலான். அன்று என்பதற்கு இறக்கும் ஞான்று என்று பொருள் உரைக்கப்பட்டது. ஞான்று ‡ நாள். அறிதல் என்பது ஈண்டுச் செய்தல் என்னும் பொருட்டு, உரை காண்டல் என்பது உரை செய்தல் என்னும் பொருட்டாதற் போல. ‘மற்று’ அசை. ‘தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற், றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை‡ யாங்குத்தாம், போற்றிப் புனைந்த வுடம்பும் பயமின்றே, கூற்றங்கொண்டோடும் பொழுது.’ ‡ நாலடியார்.

கருத்து: அறமே உயிர்க்கு உற்ற துணையாகலான், அதனை இன்று முதலே செய்க.

மு.வ உரை
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

சாலமன் பாப்பையா உரை
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Do not procrastinate your duty thinking that you will do it tomorrow or some other day. Do your duties on time as you do not know what will happen later. If you consistently do your duties on time, your efforts will protect you like a pillar and you will not regret it.

Questions that I ask to the kid
What will protect you?
How should you do your work? (without procrastinating (and also consistently).
How will do your work on time will protect you ?

குணம்நாடிக் குற்றமும் நாடி

குறள் 504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல்.
[பொருட்பால், அரசியல்,தெரிந்துதெளிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள்; காப்பியத்தைச் சிறப்பிக்கும் செறிவு, தெளிவு முதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு.

நாடிக் - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

குற்றமும் - குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

அவற்றுள் - அதனுள்

மிகை - மிகுதி; சிறந்தபொருள்; மேன்மை; பெருமை; தேவையற்றது; வேண்டுமளவின்மிக்கதென்னுங்குற்றம்; மிகுதிப்பொருள்; அதிகப்படியானது; செருக்கு; தீச்செயல்; தவறு; தண்டனை; வேதனைசெய்கை; வருத்தம்; துன்பம்; கேடு.

நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.

மிக்க -மிகுந்த; உயர்ந்த.

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

முழுப்பொருள்
ஆங்கிலத்தில் Pros and Cons அல்லது Strength and Weakness or SWOT analysis என்று பலவகைகளில் ஒன்றின் சாதகபாதகங்களை அலசுவார்கள். அதனை வள்ளுவர் தத்துவார்த்தமாகவும் கூறியுள்ளார். வாழ்வில் எதுவாக ஆயினும் முதலில் அதனின் குணத்தை, இயல்பை, வலிமையை, மேன்மையை பார்.  நாம் ஒரு ஆக்கப்பூர்வமான மனிதன் எல்லாம் நன்மையே என்று அறிவற்று இருப்பது தவறு. ஆதலால் அதனின் குற்றங்களை, பிழைகளை, குறைகளை, குறை நடக்கக்கூடிய சந்தர்பங்களை எல்லாம் ஆராயவேண்டும். 

இப்படி ஒன்றின் குணங்களும் குற்றங்களும் கிடைத்தப்பிறகு அவற்று மிகுதியாக உள்ள குணங்களை நம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும். குற்றங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது. அவற்றை பற்றி அறிவு இருந்தால் போதுமானது. பின்பு நம்மை தற்காத்துக்கொள்ளலாம்.

செயல் என்று வந்தால் அச்செயலை செய்தால் நலம், தீமை எவ்வளவு ? எத்தனை பேருக்கு ? எவ்வளவு காலத்திற்கு ? செய்யாவிட்டால் நலம் தீமை எவ்வளவு ? எத்தனை பேருக்கு ? எவ்வளவு காலத்திற்கு ? என்று ஆராய்ந்து கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். அச்செயலைச் செய்வதாலோ அல்லது செய்யாமல் விட்டு விட்டாலோ, நலம் மிகுதியாக இருந்தால், பலருக்கு நலமாய் இருந்தால் அதையே தேர்ந்தெடுத்து செயல் புரிய வேண்டும் எனத் தெளிவு படுத்துகிறார்

நாம் இங்கே காணவேண்டியது 
1) குணத்தை, மேன்மையை முதலில் காண வேண்டும்
2) நல்லதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும்
இவ்விரண்டையும் நாம் வாழ்வில் பல சந்தர்பங்களில் ஏமாற்றம் இல்லாமல், துன்பம் இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் நம்மில் பலருக்கு இருப்பது கண்ணுக்கு தெரியவே தெரியாது. இல்லாதது தான் கண்ணுக்குத் தெரியும். இல்லாததை நினைத்தே ஏங்குவோம். உறவுகளில் நல்லதை பாராட்டுவதில்லை. ஆனால் குற்றங்களை அடுக்கிக்கொண்டே இருப்போம். 

அரை கிளாஸ் டம்பர் முழுமை என்று சொல்வது அரை கிளாஸ் காலி என்று சொல்வதை விட மேல்.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
இது தெரிந்து தெளிதல் எனும் அதிகாரத்தில் 504-வது பாடல்.

உலக வாழ்விலே மனிதன் பெறும் அனுபவங்களால் அறிவு அதன் முழுமையை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கிறது. இறையுணர்வும், அறவுணர்வும் அவ்வறிவில் ஊற்றாக்ப் பெருக்கமடைகின்றன.

தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலும் பிற்காலத்திலும் துன்பம் எழாத விழிப்போடு, தனது எண்ணங்களையும், செயல்களையும் முறைப்படுத்திக் கொள்வதே, ஒழுக்கம் ஆகும். இத்தகைய ஒழுக்க உணர்வு மீறிய ஒருவருக்கு, சில சமயம் சிந்தனைக்குச் சிக்கல் ஏற்படுகிறது.

ஒரு செயலைச் செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது. அதனைச் செய்தால் சிலருக்கு நலமும், பலருக்குத் தீங்கும் உண்டாவதோ, சிலருக்குத் தீங்கும், பலருக்கு நலமும் உண்டாவதோ உணர்கிறான். 

ஒரு செயலைச் செய்யாது விடுத்தாலும் அதே போல நலம் சிறிதும், தீமை பெரிதும் அல்லது நலம் பெரிதும், தீமை சிறிதும் எழும் என்பதையும் உணர்கிறான்; இந்த இடத்தில் சிந்தனை குழப்பமடைகிறது. அந்தச் செயலைச் செய்வதா அல்லது செய்யாமலிருப்பதா என முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறான். இந்த மனநிலையில் இருந்து விடுபட்டு, விளக்கம் பெற்று சரியான செயலை அல்லது முறையைப் பின்பற்ற ஒரு வழியை வள்ளுவர் காட்டுகிறார்.

"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல்."

என்று ஒரு குறிப்பிட்ட நிலைமையில் ஒரு செயல் செய்தாலும் சிலருக்கு நலமும், சிலருக்குத் தீங்கும் உண்டாகும். செய்யாவிட்டாலும் சிலருக்கு நலமும், சிலருக்குத் தீங்கும் உண்டாகும் என்று கொண்டு திகைப்பு ஏற்பட்டால் ஒரு கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும்.

செய்தால் நலம், தீமை எவ்வளவு ? எத்தனை பேருக்கு ? எவ்வளவு காலத்திற்கு ? செய்யாவிட்டால் நலம் தீமை எவ்வளவு ? எத்தனை பேருக்கு ? எவ்வளவு காலத்திற்கு ? என்று ஆராய்ந்து கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். அச்செயலைச் செய்வதாலோ அல்லது செய்யாமல் விட்டு விட்டாலோ, நலம் மிகுதியாக இருந்தால், பலருக்கு நலமாய் இருந்தால் அதையே தேர்ந்தெடுத்து செயல் புரிய வேண்டும் எனத் தெளிவு படுத்துகிறார்.

ஓர் அணைக்கட்டு கட்ட வேண்டியபோது, சில குடும்பங்கள் வீடுகளை இழக்க வேண்டியுள்ளது. 300 குடியான வர்களுக்குத் துன்பம்தான்; ஆனால், அணைக்கட்டினால் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு நீர் கிடைக்கிறது; பயிர் செய்வதற்கும் நாள்தோறும் வாழ்க்கைத் தேவைக்கும் நீர் உதவுகிறது; இந்த நிலைமையில் அணைக்கட்டுவதா ? கட்டாமல் விடுவதா என்று முடிவு எடுக்கச் சிந்திக்கும் போது, அணைக்கட்டுவதுதான் சிறந்ததாக முடிவு எடுக்க வேண்டும். வீடு இழந்த 300 குடும்பங்களுக்கும், நீரால் நலம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்கள் அல்லது அக்குடும்பங்கள் சார்பில் அரசு நட்ட ஈடு கொடுத்து, ஆறுதல் அளிக்க முடியுமல்லவா ? ஆகவே இன்பம், துன்பம் என்ற விளைவுகளின் ஆழம், இவற்றைப் பெறும் மக்கள் எண்ணிக்கை, நலம் தீது நீடிக்கும் காலம் இவற்றைக் கணித்து, விரிந்த நோக்கில் முடிவு செய்து, செயல்படுத்த வேண்டும். 

விளைவறிந்த விழிப்பில் விரிந்து ஆராயும் அறிவோடு நலம் தீது அவற்றின் மிகுதி இவையுணர்ந்து முடிவெடுத்து, செயல் புரியவேண்டும் என விளக்குகிறது இக்கவி.

மேலும்
எப்போதுமே ஒரு செயல் நிகழ்ந்தால் அதில் நன்மை தீமை என இரண்டும் இருக்கும். நாம் எதை எடுத்துக்கொள்கிறோம் என்பதிலே நம் இன்பம் இருக்கும். அதுபோலவே நாம் புரிந்துகொள்ளும் விதமே அனைத்திற்கும் உதவும். 

மேலும்: அஷோக் 

மேலும் -  எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் சில வரிகள் 
குணங்களுடனும் குறைகளுடனும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.உயர்வின் மிகப்பெரிய வீச்சும் தாழ்வின் மிக மோசமான குறுகலும் ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிக்க முடியாதவாறு வாழ்வில் விரவிக் கிடக்கின்றன.
வாழ்க்கையை ஆழ அறிந்து அதனுடன் உறவு வைத்துக் கொள்வதே நேசம். இந்த நேசத்தை உருவாக்குவதே இலக்கியம். இந்த நேசத்தின் அடிப்படையில் தான் வாழ்க்கையை மாற்றவும் முடியும். 
-சு.ரா.

கவிஞர் எழுத்தாளர் வண்ணதாசனின் கவிதை ஒன்று
இது என்னுடைய நிழல்தான் 
தெரியும்.
ஆனால்
அது என்னுடைய வெளிச்சம்
இல்லையே
-- வண்ணதாசன்


கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் அவர்களின் “அழிந்த பிறகு...” நாவலில் (தமிழில்: சித்தலிங்கையா) இப்படி சில வரிகள் வருகிறது. 
”குளிர், காற்று, மழை ஆகியவற்றுக்குப் பயந்து நடுங்கிக் கீழே விழுந்த கிளிக்குஞ்சைக் கொண்டுவந்து வளர்த்தேன். கிளிக்குஞ்சு அழகானது என்ற எண்ணத்திலேயே நான் அதனைக் கொண்டுவந்திருக்கவேண்டும். அது செத்துப் போய்விடுமோ என்ற எண்ணம் வந்தாலே மிகவும் துன்பமாய் இருந்தது. நல்லவேளையாக அது பிழைத்துக் கொண்டது. முன்னைப்போலவே ஆகியது. பேச்சு கற்றுக்கொண்டது. நான் சொன்னதை யெல்லாம் தணிந்த குரலில் திருப்பிக் கூறியது. கிளிக்குப் பேச்சு வருமா? பொருள் தெரியாவிட்டாலும் திருப்பிக் கூறும் குணம் அதனுடையது. அதற்கு என்மேல் அன்பில்லையா? கூண்டிலேயே விட்டால் கீச்சிடுகிறது. வெளியே விட்டால் பறந்து வந்து கைமேலும், தோள்மேலும் உட்கார்ந்து கொள்கிறது. தன்னுடைய மகிழ்ச்சிக்காகக் கூவி இறக்கையை அடித்துக் கொள்கிறது. பிடிக்கப் போனால் கையைக் கடிக்கிறது. நான் கோபம் கொண்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தால் அதுவும் அதற்குத் தெரிகிறது. அந்த நேரத்தில் தோளின்மேல் ஏறி என் கன்னத்தைத் தன் அலகால் தடவிக் கொடுக்கிறது. அப்போது அதை எடுத்துக் கூண்டில் விடுகிறேன்.  நல்ல குணம், கெட்ட குணம் இரண்டுமே அந்தக் கிளியிடம் இருக்கின்றன. அதுவும் ஓர் உயிரே. பிழைத்திருக்கும் காலம் வரை என்னிடமே வாழட்டும்.”

மேற்கண்டவற்றை அவர் தாதாவைப்பற்றியே தமது நாட்குறிப்பில் எழுதியிருக்கவேண்டும். இவைகளுக்கு வேறு பொருள் தெரியவில்லை. தீமையும், நன்மையும் சேர்ந்தவனே மனிதன். மனித சமூகத்தில் வாழ்ந்திருக்கும் வரையில் மனிதனுக்கு மனிதன் உறவு. நம்முடைய தன்னலத்திற்காக, சலிப்பைப் போக்குவதற்காக மற்றவர்கள் தேவைப்படுகிறார்கள். நாம் தனி வாழ்க்கை நடத்துவது இயலாது என்பதற்காகவாவது ஒருவன் மற்றொருவனுக்கு நண்பனாக அமைகிறான். தன்னந்தனியாக இருந்து, மக்களுடைய தொடர்பு இல்லாமலேயே வாழ்ந்து, நடுத்தெருவில் வீழ்ந்து சாவதற்கு யாராவது விரும்புவார்களா?
......
......
யசவந்தருக்கு மனித இயல்பு தெரியவில்லை; அதிலும் தாதாவின் இயல்பு தெரியவில்லை என்று நான் எப்படிச் சொல்லமுடியும்? நன்றாகத் தெரிந்துகொண்ட அவர் அவனைப் பிழைக்கவித்தார்; வளர்த்தார்; வலிமையுடையனாக்கினார். ஏன் என்றால் அவரே சொன்னதுபோல் மனிதனுக்கு மற்றொரு மனிதன் தேவை. இடம்-வலம், கறுப்பு-வெளுப்பு, சுத்தம்-அசுத்தம் இவையெல்லாம் உண்மையல்ல. மனிதனின் சீலம் குன்றி, கெட்டவற்றோடு கலந்திருக்கிறது. ஒன்றைவிட்டு மற்றொன்றைத் தேர்ந்தெடுக்கையில் மனிதன் என்னும் பொருளே மிஞ்சாது. தன்னை ஒழித்துக் தீமையை எடைபோட வல்லவனுக்கு அப்படித்தோன்றும், தன்னைவிட்டு உலகத்தை அளக்கப் புறப்பட்டவனுக்கு உலகெல்லாம் கருப்பு-வெளுப்பு என்று மாறுபட்ட நிறங்களாகிப் பிரித்துப்பார்க்க இயலும். 

பரிமேலழகர் உரை
குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து; குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து; அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து; மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக. 

விளக்கம் 
[மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவை யாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமே யுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.] 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
குணம் நாடி - குணமுங் குற்றமு மாகிய இரண்டு முடையாரே உலகத்திலிருத்தலால் , ஒருவன் குணங்களை முதலில் ஆராய்ந்து ; குற்றமும் நாடி - அதன்பின் அவன் குற்றங்களையும் ஆராய்ந்து ; அவற்றுள் மிகை நாடி - அவ்விரு பகுதிகளுள்ளும் அளவில் மிகுந்ததை ஆராய்ந்து ; மிக்க கொளல் - மிகுந்ததை அளவையாகக் கொண்டு அவன் தகுதியுண்மை யின்மையைத் துணிக.

ஒருவனுடைய குற்றங்கள் ஒன்றிற்கு மேற்பட்டனவாகவும் விளங்கித் தோன்றுவனவாகவு மிருந்து , அவனை எங்ஙனந் தெளிவதென்று மயக்கம் நேரின் , அம்மயக்கத்தைத் தெளிவிப்பது இக்குறள் . குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து , குணம் மிகின் வினைக் குரியவனென்றும் , குற்றம் மிகின் அல்லனென்றும் , தீர்மானிக்க என்றார், மிகையுடையது மிகையெனப்பட்டது . மிகை பன்மை பற்றி அல்லது தலைமை பற்றித் தீர்மானிக்கப்படுவது.

மணக்குடவர் உரை
ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள். 

மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,
மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

இதன் அர்த்தங்கள் கோபம் இருக்கிற இடத்துல குணமும் இருக்கும், சிரிக்கிற கண்கள் தான் முறைக்கவும் செய்யும், அடிக்கற கைகள் தான் அணைக்கவும் செய்யும். எந்த மனுசனக்குள்ளேயும் குணமும் உண்டு , குறையும் உண்டு. குணம் 'A' செக்ஷன் என்றால், குறை 'B' செக்ஷன். ஒருத்தரை ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கறதுக்கு முன்னாலே அவனுடைய நல்ல குணங்களை 'A' செக்ஷன்லயும் குறைகளை 'B' செக்ஷன் லயும் லிஸ்ட் அவுட் செய்து பார்க்கனும். நிறைய நல்ல குணங்கள் இருந்து கம்மியா குறைகள் இருந்தால் அவரை நாம ஒ.கே. பன்னலாம். இந்த காலத்துக்கும் தேவையான ஒரு பெர்ஷனல் மேனேஜ்மெண்ட் உள்ளேயே வள்ளுவர் என்ன அழகாக சொல்லியிருக்கிறார்.

3.3.1 வடிவவியலார் எதிர்ப்பு 

மதிப்பீட்டுமுறைத் திறனாய்வு,  திறனாய்வுக் கோட்பாடுகளுக்கே ஒரு தூண் போல விளங்குகிறது என்று ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றவர்கள் கருதினாலும்,   வடிவவியலார் (கலை கலைக்காகவே என்ற கருத்துடையோர்), மற்றும் சில படைப்பாளிகள் மதிப்பீட்டுமுறைத் திறனாய்வை ஏற்பதில்லை. பெரிதும் பிரெஞ்சு மொழித் திறனாய்வாளர்கள் கருதுவது போல,  இலக்கியத்தை விளக்கிவிட்டுப் போவதுதான் திறனாய்வாளரின் வேலையே ஒழியே,  மதிப்பிடுவதல்ல என வாதிடுகின்றனர்;  ஆனால் மதிப்பிடாமல் அடுத்த கட்டத்திற்கு மனித மூளையால் நகர முடியாது.  மதிப்புக்குரியவைகளை மதித்து,  மதிப்பிட்டு வெளிக்கொணர்வதும் இயற்கைப் பண்பாகும். வள்ளுவரின்,

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (குறள், 504)

என்ற குறள் இந்த இடத்தில் மிகப் பொருத்தமான ஒன்றாகப்படுகிறது.  ஆகவே,  மதிப்பீட்டுமுறைத் திறனாய்வை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட முடியாது.

3.3.2 மதிப்பீட்டுமுறையின் பயன் 

சங்க இலக்கியம் சிறந்த செவ்விலக்கியம்,  சிலப்பதிகாரம் மிகச்சிறந்த காப்பியச் சுவை கொண்டது, பாரதி பாடல் எளிமையும் கருத்துவளமும் கொண்டது, புதுமைப்பித்தன் கதைகள் சமூக அவலங்களைக் கூர்மையாகச் சாடுகின்றன என்றெல்லாம் வெளிவருகின்ற திறனாய்வுகள் அவற்றின் மதிப்பீடுகளைச் சொல்வனதாமே. இத்திறனாய்வுகள், இவ்விலக்கியத்தின் பக்கமாக நம்மைத் திருப்புகின்றன. இவற்றுக்கு மாறான,  வாழ்வுக்கோ இலக்கிய அனுபவத்துக்கோ ஒவ்வாத ஏராளமான பழம்புராணங்கள்,  சொல் அலங்காரங்கள் போன்றவற்றை மதிப்பற்றவை என எடுத்துக்காட்டும் இத்திறனாய்வு முறை வாசகர்க்குப் பெரும்பயன் தருவது என்பது மறுக்க முடியாதது. 


Thirukkural - Management - Decision Making
Stoner has defined, "Decision making is the process of identifying and selecting a course of action to solve a problem" (1995)

When we need to take a decision on what someone has to do, we need to assess the pros and cons of that action, weight them and decide according to the merits of that action. The same practice can be applied while deciding that suitability of a person for a task or a position. Measure the strengths and limitations of a person, weight them against each other and decide to employ his services according to the merits, advises Kural 504

Examine merits and defects,
Strike a balance, and choose.

An assessment of a person's suitability for a task must be done based on two things. They are 1) the person's positive qualities and strengths and 2) the person's negative qualities and areas of improvement. 

Before deciding the suitability of a person for a task or assessing his performance or building relationship with a person, weigh both positive and negative qualities and skills present in him. Assess the positive qualities and skills lacking in him. Take a decision based on whichever is higher. Kural 504 contains wisdom for objective analysis and assessment of performance of others.

English Meaning - As I taught a kid - Rajesh
This kural mainly talks about objective analysis and assessment of performance. When one needs to assess a situation/task/person/action/etc or take a decision, then weigh them and decide them according to the 1) merits, strengths, benefits, pros/positives 2) demerits, weakness, difficulties, cons/negatives, causalities. Take a decision based whichever is higher. When already in a relationship, take the positives, ignore the negatives(as long as it is not toxic).

Other things to note: When assessing, always, first look out for positives because that is a positive approach and it helps to build upon whatever is existing and it also helps us be in peace. Even one positive can help us build our confidence. One should also look for negatives so that we can fill those gaps and reduce the negative impact. However, when one is always first looking for negatives, then such an habit turns out one as cynical, pessimistic. There will be always 1000 negatives. Even one negative can shatter our confidence if we ignore our positives. Negativity is infectious.  

Questions that I ask to the kid
How should you decide? 
How should gain clarity?
How should you assess?
How would you objective analyze?
Merits/Demerits (or Pros/Cons or Positives/Negatives) - What should you look out first? Why?

அஞ்சாமை ஈகை அறிவூக்கம்

குறள் 382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
அஞ்சாமை - பயப்படாமை, திண்மை (மன உறுதி, வலிமை, கலங்காநிலைமை, பருமன்; உண்மை, நிதானம், பாரம், மெய்), ஒன்றை அஞ்சாமல் எதிர் கொள்ளுதல், ஒன்றை பயம் இல்லாமல் சந்தித்தல்; பயமின்மை, அச்சமின்மை
தைரியம், துணிச்சல், துணிவு

ஈகை - கொடை; பொன்; கற்பகம்; இண்டு; புலிதொடக்கி; காடை; காற்று; மேகம்; கற்பகமரம்; இல்லாமை; ஈதல்; கொடுத்தல்; பகிர்ந்துகொடு

அறிவூக்கம் - அறிவு + ஊக்கம்

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.

ஊக்கம் - மனத்திடம்; ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும்

இந்நான்கும் -

எஞ்சாமை -குறையாமை, ஒழியாமை, முழுமை.
எஞ்சு - சுருங்கு, குறை; சேஷமா யிரு;  கட; செய்யாதொழி.

வேந்தர்க் கியல்பு - வேந்தர்க்கு + இயல்பு

வேந்தர் - வேந்தன் - இராசா, எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன், முடிசூடியமன்னர், முதன்மையான

இயல்பு - இயல்பு என்றென்பது இயற்கை. இயற்கை என்பது அறம் சார்ந்தது. அறத்திற்கு புரம்பாக இயற்கை இருக்காது 
- தன்மை; இலக்கணம்; ஒழுக்கம்; நற்குணம்; நேர்மை; முறை; வரலாறு; பிரமாணம்பத்தனுள்ஒன்று.

முழுப்பொருள்
ஒரு மன்னருக்கு (அல்லது தலைவருக்கு) குறைவில்லாத(எஞ்சாமை) நான்கு குணங்களை / கோட்பாடுகளை திருவள்ளுவர் கூறியுள்ளார். அவை:

1) அஞ்சாமை - பகைவர்கள், பகைவர்களின் பலம் கண்டு பயப்படாத / அஞ்சாத மன திடம் வேண்டும்.

அஞ்சாமை என்றெனபடுவது நீதி வழங்குவதிலும் இருக்க வேண்டும். எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நீதி வழங்க வேண்டும்.
உதாரணம்: மனுநீதி சோழன். கன்று குட்டியை கொன்ற தன் பிள்ளை அவர் அதே தண்டைனையை கொடுத்து தண்டித்தார்.

ஏன் ஒருவருக்கு அஞ்சாமை வேண்டும் என்றும் ஏன் அதனை முதலாவதாக வரிசையில் திருவள்ளுவர் சொன்னார்?
அ) ஏனெனில் அச்சம் என்பது வாழ்வில் மிகப்பெரிய ஒரு மனத்தடை. அது நம்மை செயலாற்ற விடாமல் குட்டையில் இருக்கும் நீர்ப்போல் தேங்கச்செய்யும். செயலாற்றாமல் வாழ்நாள் முழுக்க அச்சத்திலும் கழிவிரக்கத்திலும் வாழ்வோம். அச்சம் இருந்தால் நாம் செயலில் இருந்து விலகி ஓடுவோம். செயலை தள்ளிப்போடுவோம். Procrastination என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். மேலும் மறதி, சோம்பல் ஆகிய குணங்கள் நம்மிடம் குடிக்கொள்ளும். செய்யவேண்டிய செயல்களை விட்டுவிட்டு சின்ன சின்ன சில்லறை செயல்களை செய்து பொய் மகிழ்ச்சிக்கொள்வோம். பலகாலம் கழித்து பலச்செயல்களை அச்சத்தால் செய்யமால் போனதற்காக குற்றவுணர்ச்சியில் கழிவிரக்கம் கொள்வோம்.

அச்சத்திற்கு இடம் கொடுக்காமல் ஒருவர் செயலை மேற்கொண்டால் அதில் இரண்டு விளைவுகளில் ஒன்றைப் பெறக்கூடும். ஒன்று வெற்றி. அது நமக்கு நம்பிக்கையை கொடுக்கும். மேலும் புதிய செயல்களை செய்ய உத்வேகத்தை கொடுக்கும். பெரும் செயல்கள் பெருமையை தரும். இரண்டு தோல்வி. தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ளலாம். இரண்டுமே விலைமதிப்பில்லாதது. ஏனெனில் இவை அனுபவப்பாடங்கள். 

அதுவே அச்சத்தினால் செயலாற்றாமல் இருந்தால் ஒரு இலாபமும் இல்லை. தேங்கிய நீர்ப்போல் தூர்நாற்றம் வீசுவோம்.

”தொடர்ச்சியாக பாதுகாப்பு தேவைப்படுவது நம்மை உண்மையில் பலவீனப்படுத்துவது. பயம் இன்மையிலேயே பலம் இருக்கிறது. நம் உடலின் சதைப் பற்றிலும் எலும்புத் திரட்சியிலும் அல்ல” என்று காந்தியடிகள் கூறுகிறார்.

சோர்வுடன் அதை கீழே உதிர்த்துவிட்டு அமர்ந்த பிரபாவனிடம் “காலைமுதல் இதை கண்டுபிடித்தேன். இந்நாள் வரை நானும் என் கணமும் அச்சமொன்றையே மெய்யென்று கொண்டிருந்தோம். எங்கள் எண்ணங்களும் செயல்களும் அச்சத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன. அச்சத்தை உதறுவதன் எல்லையில்லா விடுதலையை அடையும் பேறுபெற்ற என் குலத்தான் நான். அதில் திளைக்கிறேன். உன் கூரலகைக் கண்டுதான் உன் அருகே வந்தேன்” என்றது பூச்சி.


அச்சம் கொண்டவனும், அறிவு இல்லாதவனும், பிறரோடு ஒத்துப்போகாதவனும், கொடை அளிக்காதவனும், பகைவரால் எளிதாக வீழ்த்தபடுவார்கள். அச்சப்படுகின்றவனை பகைவர்கள் எளிதாக வென்றுவிடுவார்கள்.

அதனால் தான் அஞ்சாமை தலைவனுக்கு வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.


இ) ஒருவரை நாம் அஞ்சத்தொடங்கினால் நம் ஆற்றல் குறைவது மட்டுமல்லாது நமது அச்சத்தை எதிரிக்கு ஆற்றலென சமைத்து அளிக்கவும் செய்வோம். (#ஜெயமோகன் #தீயின்எடை). ஆதலால் ஒரு தலைவன் அஞ்சக்கூடாது. 

ஈ). அச்சம் இல்லை என்றால் ஒருவரால் அவரது கனவுகளை நோக்கி முயற்சி செய்து கண்டிப்பாக வெற்றிப் பெறக் கூடும்.
”All our dreams can come true, if we have the courage to pursue them.” என்பது Walt Disney யின் கூற்று



உ) ஒரு புதிய வணிக நிர்வாகம் பல ஆண்டுகள் களத்தில் சிறந்து விளங்கும் பல மடங்கு ஒரு மிக பெரிய நிறுவனத்துடன் மோதவோ போட்டியிடவோ தேவைப்படும். அப்பொழுது பெரிய நிறுவனங்களைக்கண்டு அச்சம் கொள்ளக்கூடாது. உதாரணமாக Tesla போன்ற மின் ஊர்தி வண்டிகள் (Electric Car) தயாரிக்கும் நிர்வாகங்கள் ஏற்கனவே களத்தில் இருக்கும் பெரிய நிர்வாகங்களான Ford, Honda, Hyundai, BMW, Audi, Toyota போன்ற நிர்வாகங்களை கண்டு பயப்பட்டால் அவர்களால் வளர முடியாது. இங்கு நிர்வாகங்கள் என்றில்லை, மக்களின் பழக்க வழக்கங்களைக் கண்டும் பயப்படக்கூடாது. ஏனெனில் மக்கள் Electric Car போன்ற வற்றிற்கு மாறுவார்களா அல்லது அதன் செயல்பாட்டை, அதனை charge செய்யும் இடங்களை கண்டு சந்தேகிப்பார்களா என்று துவக்கத்திலேயே அச்சம் கொள்ளக்கூடாது. தேவையானவற்றை Growth-mindset கொண்டு வாய்ப்புகளை எண்ணிச் செய்ய வேண்டும். 

ஊ) நம் அக பகைகளான காமம், கோரொதம் மோகம் ஆகியவை நம்முடன் பல ஆண்டு காலம் நம்முடன் இருந்திருக்கும். அவற்றை வெல்ல அஞ்சாமை வேண்டும். நாம் அவற்று எவ்வளவு அடிமையாய் இருப்பினும் அவற்றின் வலிமை கண்டு அஞ்சாமல், அவற்றை எதிர்க்கொண்டு வெல்ல வேண்டும்.

சரி, நாம் வாழ்வில் எப்பொழுதெல்லாம் அச்சம் கொள்கிறோம்?
1) நாம் வாழ்வில் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையில்? 
2) சில புதிய முயற்சிகளை மேற்கொள்ள
3) நம் வாழ்வு சிக்கலாக இருக்கும் பொழுது
4) அலுவகத்தில் அல்லது வீட்டில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்
5) பிறரிடம் வாக்கும் வாதமோ அல்லது முரணோ வரும் பொழுது
6) நம்மை யாராவது ஒதுக்கி விடுவார்களோ என்னும் பொழுது, அல்லது நம்மை யாராவது அடிப்பார்களோ என்னும் பொழுது
7) நாம் மற்றவர்களை மனநிறைவு செய்ய தவறிவிடுவோமா எனும் பொழுது

எ) மன்னிப்பு கேட்க துணிவு வேண்டும். மன்னிப்பு கேட்க அஞ்சக்கூடாது.
நாம் ஒரு தவறு செய்தால், அதை உணர்ந்து, அத்தவறை துணிவுடன் ஒப்புக்கொள்வதே தவறை திருத்திக்கொள்ள முதல் படி. அத்துணிவு இல்லை எனில் தவறை திருத்திக்கொள்வது இயலாது. தவறை உணர்ந்து மன்னிப்பு கெட்டு உறவுகளை சீர் செய்ய வேண்டும். மன்னிப்பு கேட்க துணிவு வேண்டும். அவர்கள் என்னை திட்டுவார்கள் என்று அஞ்சினால் மன்னிப்பு கேட்க முடியாது. நாம் மன்னிப்பு கேட்டல் எதிராலி திட்டுவார் அடிப்பார். ஆனால் மன்னிப்பு கேட்டவர் ஒரு அடி முன்னே சென்று உள்ளார். அது தான் முக்கியம். 
நான் படித்த ஞாபகம் - மகாகவி பாரதியார் தனது மனைவி செல்லாமாளிடம் மன்னிப்பு கேட்டதாக. 

நாம் பல சமயம் தவறை ஒத்துக்கொள்ளாததற்கு காரணம் நமது ஆணவம் தான். என் மேல் தவறு இல்லை. பிறர் மீது தான் தவறு. சூழ்நிலையில் தவறு என்று பல காரணங்களை கூறுவோம். ஆனால் உண்மை என்னவெனில் we dropped the ball. அத்தகைய நேரங்களில் நாம் ஒன்றை கேட்டுக்கொள்ளலாம். If the same thing is to happen again, will you let it happen? (அந்நிகழ்வு மறுபடியும் நிழந்தால் நீ அதை(அத்தவறை) நடக்க அனுமதிப்பாயா?) பெரும்பாலும் இதற்கு ஆம் என்று பதில் வரும். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் 1. நாம் தான் அத்தவறு நடக்க காரணமாக இருந்து இருக்கலாம் (பிறர் காரணம் இல்லை) அல்லது நாம் அலட்சியமாக இருந்து இருக்கலாம் அல்லது நாம் திட்டமிடாமல் இருந்து இருக்கலாம் 2. நாம் அத்தவறில் இருந்து கற்றுக்கொண்டு இருக்கலாம் அல்லது அதை செயலை வெற்றிகரமாய் செய்ய வேறு வழிகளை ஆராய்ந்து இருக்கலாம். 

ஏ) 

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது. ஏனெனில் ஒரு முயலினை அம்பினால் எய்த ஒருவித திறமை (skill) வேண்டும் தான். ஆனால் திறமையை விட ஒரு யானையை கண்டு பயப்படாமல் போரிட மனதில் தைரியமும் அச்சமின்மையும் (courage / fearlessness), வெற்றியோ தோல்வியோ கடைசிவரைப்போராட விடாமுயற்சியும் ஊக்கமும் (perseverance) தேவை. 

ஐ) அச்சமில்லாதபோது நம் ஆற்றல் குறைவதில்லை. 

///===////
சரி, ஏன் நாம் அச்சம் கொள்ளும் பொழுது என்ன தவறு செய்கிறோம்?
1) அளவு அதிகமாக யோசிப்பது. செயல்புரியாமல் தள்ளிவைப்பது. Overthinking / Over analyzing. Stuck
2) முயற்சிசெய்யாமல் இருப்பது. 
3) வீட்டை, அலுவலகம், furniture, garage, E-Mail inbox, Hard Drive, Office, போன்றவற்றை ஒழுங்கு செய்வது அல்லது சுத்தம் செய்வது. புற உலகு நம் கட்டுக்குள் இருந்தால் அக உலகு கட்டுக்குள் இருக்கும் என்று நம்புவது.
4) தனித்து இருப்பது. வெளியே செல்லாமல் கூட்டுக்குள்ளேயே இருப்பது
5)  அமைதியாக இருப்பது. குறிப்பாக வேலையில்
6) மோசமான நிலைக்கு தயார் செய்துக்கொள்வது அல்லது பழகிக்கொள்வது, பிறரிடம் குற்றம் காண்பது.
7) பச்சோந்திப்போன்று சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுவது.

அச்சத்தினால் நாம் பலவற்றை செய்யாது இருப்போம். ஆனால் இந்த (தொடர்) பழக்கங்களை உடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி செயலாற்ற வேண்டும். செயல் ஒன்றே அச்சத்தை தவிர்க்க சிறந்த வழி. அதற்கு முன் நாம் ஏன் அச்சம் கொள்கிறோம், நமது உடலில் தெரிய கூடிய மாற்றங்கள் (நெஞ்சு துடிப்பது, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது, மார்பு இருகுவது) என்பதை நோக்க வேண்டும். அவை தெரிய ஆரம்பித்த 5-10 விநாடிகளில் நாம் செயலாற்றினால் அச்சத்தை நம் கட்டுக்குள் வைக்கலாம்.

அஞ்சாமை என்பது தலைமைப் பண்பு. அது எல்லோருக்கும் தேவை. அப்படியெனில் வேந்தர்க்கு மிக மிக அவசியம் ஏனெனில் வேந்தர் என்பவர் பல முடிவுகளையும் திட்டங்களையும் அச்சமில்லாமல் எடுத்து நாட்டையும் மக்களையும் பாதுகாத்து வளப்படுத்தவேண்டும். அச்சம் செயலுக்கு தடைக்கள். அஞ்சாமை செயலாற்ற வைக்கும்.

(துணிவு பற்றி கல்யாண்ஜி(எ)வண்ணதாசனின் ஒரு கவிதை இங்கு
நேற்றை இன்று வாங்குதற்கு 
வழியே இல்லை.
நினைவை  நன
வாக்குதற்கு
வகையே இல்லை.
ஆற்று நறும்
புனல் மலையில்
ஏறி ஆதி
அருவியிலே கலப்பதற்கு
விசையே இல்லை.
காற்றிலுதிர் சருகிலைகள்
கிளையில் மீண்டும்
காம்பினிலே துளிர்ப்பதற்கு
விதியே இல்லை.
தோற்றவர்கள் வெல்வதற்கு மட்டும்
நெஞ்சில்
துணிவிருந்தால் 
புது  எழுச்சி என்றும் உண்டு.
-- கல்யாண்ஜி(எ)வண்ணதாசன்

மேலும் 
சுதந்திரம் என்பதே 
உண்மையில்
 'பயத்திலிருந்து விடுதலை'
என்பதுதான். 
- ஜெயாபுதீன்


2) ஈகை - மக்களுக்கு வாரி வாரி வழங்கும் கொடையுள்ளம். ”மாரி ஈகை” ஏன்று புறநானூறில் சொல்லப்பட்டு உள்ளது.

அஞ்சாமையும் ஈகையும் படைகளையும் ஈகையையும் குறிப்பிடனவாம். 

இன்றைய காலகட்டத்தில் அஞ்சாமை எனப்படடுவது படைகளுக்கு மட்டும் பொருந்தாது என்றென்பது எனது கருத்து. அது மக்களுக்கு (இயற்கைக்கு கேடு விளைவிக்காத, அறம் சார்ந்த) நலம் சேர்க்கும் செயல் திட்டங்களை துணிவுடன் எடுத்து செயல்படுத்தும் மனதிடம் வேண்டும் என்பதையும் குறிக்கும். மற்றும் அண்டை நாடுகளில் ஏற்படும் அநீதிகளை கண்மூடிக்கொண்டு இல்லாமல் தட்டிக்கேட்டும் அஞ்சாமை வேண்டும்.

3) அறிவு  - எல்லா போர் வித்தைகள், அற நெறி நூல்கள், மற்றும் அரசருக்கு தேவையான அனைத்தையும் கற்க வேண்டும். அறிவு என்பது முடிவில்லாத ஒரு ஞானம். அதனை எப்போழுதும் வளப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். தன்னையும் தன் நாட்டை சுற்றியும் இவ்வுலகத்தில் நிகழ்ந்துக்கொண்டு இருக்கும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் கற்றுக்கொண்டு இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்யும் திட்டங்களை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும். மக்களை புரிந்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான வற்றை நிறைவேற்ற வேண்டும். ஒரு மன்னன் நாட்டின் எல்லா துறைகளை பற்றியும் நன்கு அறிந்தவராக அல்லது நன்கு அறிந்தவர்களை உடன் வைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

அது மட்டுமின்றி இயற்கைக்கு  கேடு விளைவிக்காத திட்டங்களை செயல்படுத்தும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அறம் தார்ந்த செயல்களை செய்வதில் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதனால் மேலே குறிப்பிட்டுள்ள அஞ்சாமையில் மேற்சொன்னா குறளில் “குறள் 863 அஞ்சம் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சும் எளியன் பகைக்கு” என்றார். அறிவில்லாதவனை பகைவர் வெல்வர்.

அஞ்சுவதற்கு அஞ்சாது இருப்பது முட்டாள்த்தனம். அஞ்சவேண்டியதற்கு அஞ்சி செய்யவேண்டியவற்றை அறிவதே அறிவு. அதனை அறிந்தவர்கள் அறிவுடையோர். அவர்கள் அத்தொழிலை/செயலை நன்கு செய்வர்.


அஞ்சாமை எனப்படுவது தெளிவு பிறக்கும் பொழுது வரும். தெளிவு என்பது அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது வரும்.

“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தை போராடாலம்” என்று ஒரு திரைப்பாடல் கூட உண்டு. நீ உன்னை அறிந்து, உனக்கு தேவையான அறிவை பெறவேண்டும் என்பதே அதன் உட்கருத்து. அது அச்சம் இல்லாமல் போராட மிக மிக அவசியம். 

4) ஊக்கம் - எல்லா செயல்களுக்கு ஊக்கம் மிக முதன்மையான் ஒன்று. இது தொடங்கிய செயலினை, வினையினை முழுமையாக முடிப்பதற்கு தேவையா ஒன்று. ஒரு செயலை பாதியில் மலைத்துப்போய் பாதியில் விடக்கூடாது. ஒரு செயலை ஊக்கம் இல்லாமல் செய்யக்கூடாது. ஊக்கம் இருந்தால் மற்றவையெல்லாம் தானாய் நடக்கும். படைகளைக்கண்டு அஞ்சாமல் ஊக்கத்துடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் மன ஏழுச்சியுடன் செயல்பட வேண்டும்.

அறிவும், ஊக்கமும் நாம் செய்யும் செயல் சார்ந்தது. அறிவு என்பது செய்யும் செயலில் இருந்து கற்பனவாம். ஊக்கம் என்பது செய்யும் செயலில் கொண்டனவாம்.

ஆக, இந்நான்கு குணங்களும் படையை சந்திக்கும் பொழுது, மக்களுக்கு கொடுக்கும் பொழுது, அறிவை வளர்த்துக்கொள்ளும் பொழுது, எச்செயலை செய்யும் பொழுது குறைவில்லாத அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய குணங்களுடன் இருக்க வேண்டும். இவை அவர்களுக்கு இயற்கை அமைந்த வண்ணம் இருக்கும் அளவிற்கு தங்களை தகுதிப் படுத்தி கொள்ள வேண்டும். இல்லை இப்படி சொல்லலாம், இக்குணங்களை இயற்கையாய் பெற்றவர்ப் போல தன்னை வளர்துக்கொண்ட, செயலாற்றிய மன்னர் வெற்றிகளை குவிக்கும், மக்கள் வணங்கும் வேந்தர் ஆவார்.

ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை என்று திருவள்ளுவர் மூன்று குணங்களுக்கும் தனித் தனி அதிகாரம் வைத்து இலக்கணம் வகுத்துள்ளார்.

மேலும்: அஷோக்

ஒப்புமை
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின் (குறள் 497)

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சும் எளியன் பகைக்கு (குறள் 863)

ஆதிம் மதியும் அருளும் அறனும் அமைவும்
ஏதின் மிடல்வீரமும் ஈகையும் எண்ணில் யாவும்
நீதிந் நிலையும் இவை நேமியி னோர்க்கு நின்ற
பாதிம் முழுதும் இவற்கே பணிகேட்ப மன்னோ (கம்ப. அரசியல் 2)


நன்றி புகாரி
பகைமை கண்டு அஞ்சாத நெஞ்சுரம்
கொடுத்துக் கொடுத்துச் சிவக்கும் கரங்கள்
அறம் போற்றும் தெளிந்த நல் அறிவு
சிகரம் தொடும் தளராத ஊக்கம்
இவை நான்கும்
சிறந்ததோர் ஆட்சியாளனின்
இயல்புகளாம்

தலைமுறை தலைமுறையாக வெற்றியென்பதற்கு அப்பால் ஏதுமறியாத மாவீரர்கள் அவர்கள். வெற்றி மேலும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை ஐயமில்லாது செயல்படச் செய்கிறது. ஐயமின்மை முடிவெடுப்பதில் விரைவை அளிக்கிறது. விரைந்து முடிவெடுப்பவர்கள் வெல்கிறார்கள்.

எழுத்தாளர் மற்றும் ஆயுர்வேத மருத்துவர் சுனில் கிருஷ்ணன் ”விஷாத யோகம்” என்னும் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்
விஷாதத்திலிருந்து அச்சத்தின் வழியாக செயலின்மைக்குள் எளிதாக விழுந்துவிடலாம். வாழ்வை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் அந்நிலையை ஆன்மீக அனுபூதி என வேடமிட்டுக்கொள்ளலாம். முற்றிலும் தன்னலமும் துணிவின்மையும் மட்டுமே இந்நிலைக்குக் காரணம். ஆன்மீகவாதிகளின் மீதான பெரும்பாலான விமர்சனங்கள் இந்தத் தளத்திலிருந்தே எழுகின்றன. ஆனால் மெய்யான ஆன்மீகத்தில் துணிவின்மைக்கு இடமில்லை. தன்னலத்திற்கும் வேலையில்லை. 

எழுத்தாளர் ஜெயமோகன் - இன் - சிந்தே சிறுகதையில் இவ்வாறு சில வரிகள் வருகின்றன
என் வாழ்க்கை சிந்தேயின் (சிங்கம்) அருள். என் வாழ்க்கையில் நான் எப்படி வெற்றி பெற்றேன் என்று கேட்பார்கள். நான் அந்தக்கூண்டில் சிந்தேயின் முன்னால் இருந்தது போல பொறுமையுடன் இருந்தேன். என்னை மீறியவற்றின் முன் பதற்றம் கொள்ளாமலிருக்க பழகினேன். குறைந்த சேதத்துடன் பெரிய தீங்குகளில் இருந்து வெளிவந்திருக்கிறேன். அறுபத்தாறில் ஒரு கலவரத்தில் என் ஓட்டல்கள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. நான் அமைதியாக இருந்தேன். சிதல்புற்றுபோல மீண்டும் கட்டி எழுப்பினேன், நான் தோல்வியே அடைவதில்லை. சிதல்புற்று தோல்வியடையுமா என்ன? ஆயிரமாண்டுகள் அது வந்துகொண்டே தானே இருக்கும். மலைப்பாறைகளை தூக்கி வைத்தாலும் அது முளைத்துக் கிளம்பும் அல்லவா?

“பாறைகளுக்குக் கண்கள் இல்லை” என்றான் துரியோதனன். “அதனால்தான் அவை அத்தனை ஆற்றலுடன் இருக்கின்றன. கண்ணற்றவை எதிரிகளைப் பார்ப்பதில்லை. ஆகவே அச்சம் கொள்வதில்லை. அச்சமில்லாதபோது நம் ஆற்றல் குறைவதில்லை” என்றான்.


மூன்று பெரும்பள்ளங்களை அவன் கடந்தான். விலக்கம், ஐயம், அருவருப்பு என மூன்றுருக்கொண்டது அச்சமே. இளையோனே, அச்சமென்பது என்ன? மானுடன் முடிவிலியை அஞ்சுகிறான். முடிவிலி நோக்கி எழும் இறப்பை அஞ்சுகிறான். இறப்பென்றாகும் நோயை அஞ்சுகிறான். நோய்கொள்ளும் உடலை அஞ்சுகிறான். உடலென்றான தன்னை அஞ்சுகிறான். அச்சத்தை அளவையாக்கி அவன் இப்புவியை அறிகிறான். எனவே அவன் அறிவதெல்லாம் அச்சம் ஒன்றையே.”

“அச்சத்தை அறுத்தவனுக்கு அறிவு இனிதாகிறது. அகம் இனிதாகிறது. அனைத்தும் இனிதாகின்றன. இனிக்கின்றது எல்லையின்மை. இனிப்பிலிருந்து தொடங்குக! சுவையாகி வருக சிவம்!” பிச்சாண்டவர் சொன்னார். “இனியவனே, அன்னம் இனிது. அன்னத்தை உண்ணும் அன்னம் அறிவது அவ்வினிமை. அறிக, தன் குட்டியை மென்று உண்ணும் அன்னைஓநாயின் கண்கள் சொக்கும் சுவையை. தன் அன்னை உடலை உண்டு வளரும் குஞ்சுநண்டுகளின் கால்கள் கொள்ளும் துள்ளலை. தான் வாழும் இல்லத்தை உண்டு திளைக்கும் மலப்புழுக்களின் களியாடலை. சிவமாகுக அன்னம்!”

“அஞ்சுகிறாயா?” என்று அவர் கேட்டார். “இப்புவியே அஞ்சுபவர் அஞ்சாதோர் என இருவகைப்பட்ட மானுடருக்கானது. தனித்தனிப்பாதைகள்.” இருளுக்குள் அவருடைய பற்கள் சிரிப்பில் மின்னி அணைந்தன. “அஞ்சுதல் உன்னை குடும்பத்தவன் ஆக்கும். விழைவுகளால் நிறைக்கும். அள்ளி அள்ளி குவிக்கவைக்கும். அடைந்ததை அறியமுடியாது அகவிழிகளை மூடும். அஞ்சாமை உன்னை யோகியாக்கும். அறியுந்தோறும் அடைவதற்கில்லை என்றாகும்.”


 ‘‘எத்தனை அபாயங்கள் வழியாக வண்டி சென்றிருக்கிறது என்று தெரிந்தால் தொழிலையே விட்டுவிடுவீர்கள்’’ என உரிமையாளரிடம் சொன்னேன். அவர் சிரித்தபடி, ‘‘ஒவ்வொரு நாளும் நிகழ்வதுதான் சார். வேறுவழியில்லை. எல்லாம் பழகிவிட்டது. வயிற்றை நினைத்தால் பயம் போய்விடும்’’ என்றார்.

பரிமேலழகர் உரை
வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - தீமையும் கொடையும், அறிவும், ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். 

விளக்கம் 

(ஊக்கம்: வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு குரித்து; ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.) 

மணக்குடவர் உரை
அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.

சாலமன் பாப்பையா உரை
அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வேந்தற்கு இயல்பு-அரசனுக்கு இயல்பான தன்மையாவது; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை-அஞ்சாமையும் கொடைத்தன்மையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் குறையாதிருத்தலாம்.

இவற்றுள் அறிவு ஏழுறுப்புக்களையும், ஈகை படையையும் குடியையும் நோக்கியனவாம். ஏனையிரண்டும் வினைக்குரியனவாம். ஊக்கம் என்பது வினைசெய்தற்கண் உண்டாகும் மனவெழுச்சி. இவற்றுள் ஒன்று குறையினும் பகையினாலேனும் படையினாலேனும் குடியினாலேனும் கேடுநேருமாகலின், 'எஞ்சாமைவேந்தற்கியல்பு' என்றார். வள்ளுவர் காலத்தமிழகம் மூவேந்தராட்சிக் குட்பட்டதாகலின் அரசன் வேந்தன் எனப்பட்டான். முடியணியும் உரிமையுடைய சேர சோழ பாண்டியர் மூவரே வேந்தர். வேய்தல் முடியணிதல். வேய்ந்தான்-வேந்தன். உம்மை முற்றும்மை.

நன்றி அம்மன் தரிசனம்
அரச பதவிக்கு வருகிறவர்களுக்கு மிகவும் துணிச்சல் தேவை. கொடை கொடுக்கும் குணம் தேவை. அறிவு தேவை. ஊக்கம் தேவை.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

என்கிறது அடுத்த குறள். ஒரு நாட்டின் உள்ளேயிருந்தும், வெளியே இருந்தும் மிரட்டல்கள் எப்போதும் ஒரு மன்னனுக்கு இருக்கவே செய்யும். அஞ்சியவன் அந்நாட்டிற்குத் தக்க நல்லமுடிவை எடுக்கத் தயங்குவான். சிறந்த திட்டங்களையும் செயல்களையும் நிறைவேற்ற அஞ்சாமை தேவை. ஈகை என்பது வெறும் கொடை மட்டுமல்ல. மக்களுக்கு வழங்கும் சலுகைகளும் இதில் அடங்கும். இது உள்நாட்டில் மன்னனின் சக்தியைப் பெருக்க உதவும். இதையெல்லாம் கடந்து தெளிந்த அறிவு வேண்டும்.

ஒரு நாட்டு மக்களின் இயல்பறிந்து செயல்படுத்தாத திட்டங்கள், நல்ல திட்டமாகவே இருந்தாலும் அது கேடுகளைத் தந்துவிடும். இந்திய மக்களின் மனோதர்மங்களையும் மனப்போக்குகளையும் தெளிவாய் அறிந்த மகாத்மாவின் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்திருக்குமேயானால், நாட்டில் புதிதாய்த் தோன்றி பல பிரச்னைகள் தோன்றாமலே வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். ஆட்சி செய்வோருக்கு அது மிக அவசியம்.

இன்று இந்த நாட்டில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன? ஒவ்வொரு மாநிலத்திலும் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன? நாட்டின் வருவாய் என்ன? செலவு என்ன? என்பதை சற்றும் அறியாதவர்கள் கூட பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஆகிவிடமுடிகிறது.

ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார், தேசிய கீதத்தைக் கூடத் தவறாகப் பாடுகிறவர்கள் மேலே வந்துவிடுகிறார்கள் என்று. தேசிய கீதம் தெரியாதவர்களுக்கு தேசத்தைப் பற்றி என்ன தெரியும்? தேசத்தைப் பற்றித் தெரியாதவர்கள் அதன் நலத்திற்கு என்ன முடிவெடுப்பார்கள்?

அறிவு தேவை. சகலவிதமான விஷயங்களிலும் தெளிந்த பார்வை அரசனுக்குத் தேவை. இன்று கட்டவுட்களில் மட்டுமே சிங்கமே, புலியே, அஞ்சாமையே, அறிவே என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.

கட்டவுட்களில், பேனர்களில் வள்ளல்கள் என்று சித்திரிக்கப்படுகிறவர்கள் நடைமுறையில் ஓட்டை நாணயத்தைக் கூட பிறருக்கு உதவக் கூடியவர்களாக இருப்பதில்லை. வள்ளுவர் சொல்லும் இலக்கணப்படியே ஆள்வோர்கள் அமைந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும் என்று மனக்கோட்டைதான் கட்ட முடிகிறது நம்மால்.

நன்றி: Indian Finance Bazaar
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தைரியம், ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கு பண்புகளும் சிறிதும் குறைவில்லாமல் இருப்பது நன்மை தரும். அதுபோல் முதலீட்டாளருக்கு இருக்க வேண்டிய முக்கிய மூன்று பண்பு, முதலீட்டை பற்றிய நல்ல அறிவு, அதை அணுகின்ற தைரியம் மற்றும் செயல்படுத்துகின்ற ஊக்கம் மிகவும் அவசியமானதாகும். இந்த குணங்கள் எந்த நிலையிலும் கடைபிடிக்க வேண்டிய ஓர் அம்சமாகும். பெரும்பாலானோர் இந்த குணங்களை பின்பற்றாமல் தவறு செய்து விட்டு, பெரும் மண உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளபடுகிறார்கள். இந்த போக்கை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.

Thirukkural - Management - Leadership
In  addition to the quality of impartiality, four other qualities make a person a leader, as per Kural 382. Valluvar has attributed these qualities to a king. A king is a leader. Therefore, those qualities are included in leadership. These qualities are courage, charity, knowledge, and motivation.

These four unfailing mark a King:
Courage, liberality, wisdom and energy.

A leader should constantly sustain these four qualities to demonstrate powerful leadership.


Also, about FEAR
Fear: 
The reason many people fail to achieve the results they want is due to fear. Jumping from one opportunity to the other serves as an excuse to avoid the hard work. This is like people who spend hours looking for the best productivity hacks while putting off the most important tasks they should be focusing on. You may feel stuck because you’re trying to move away from your fears. This is one reason you see many people who, after having read countless books, are still stuck in the exact same situation they started in. 

Remember this: action cures fear. 

While there are other techniques to overcome your fears, Nike’s motto, “Just do it,” might be one of the most effective ones. Although it might sound like a cliché, it really does work. What about you? Are you taking all the actions you should be taking right now?



கர்ணன் கால்மடித்து அமர்ந்துகொண்டு தலையை தாழ்த்தினான். பெருமூச்சுகள் அவன் நெஞ்சை உலைத்தபடி எழுந்தன. இளைய யாதவர் அவன் முகத்தை நோக்கியபடி புன்னகை மாறா முகத்துடன் சொல்லலானார். மிக அண்மையில் செவிக்குள் என அவர் சொற்கள் ஒலிக்க அவன் கைகளைக் கோத்தபடி கேட்டிருந்தான்.

அங்கரே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக்குழப்பம். நீங்கள் எளியோர் என துயர் கொள்கிறீர்கள். அறிந்தோர் போல் பேசுகிறீர்கள். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும். இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர்.

ஒருநோக்கில் ஒருதருணத்தில் ஒருவருக்கென நிகழ்வது மெய்யல்ல என்று உணர்க. அனைத்துநோக்கில் காலப்பெருக்கில் எவருக்குமென நிகழ்வதே மெய்மை. ஒருவர் அதை அறிந்துணர வழி ஒன்றே. அறிந்தவற்றை தொகுத்தல். முரண்கொள்வனவற்றை இணைத்தல். ஒன்றென்றாக்கி மேலேறிச்செல்லுதல். இணைப்பறிவே யோகம் எனப்படும்.

தனக்கென ஒருவர் அறிவதும் அனைவருக்கென அனைவரும் அறிவதும் ஒன்றென்று அமையும் நிலையே யோகம். இணைத்தறிக! தனித்திருந்தறிக! யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.

யோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.

ஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்?

வகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.

வகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.

இயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.

உங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு  அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.

உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.

வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க!

உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!

கொல்லாதொழியும் எவரும் வெல்லாதொழிவர். உயிர்க்கொலை ஒன்றே கொலையல்ல. உணர்வுக்கொலை, ஆணவக்கொலை, கருத்துக்கொலையென கொலைநிகழா கணமே இங்கில்லை. அங்கரே, உங்கள் உறவுகளைக் கொல்வதை எண்ணி கலங்குகிறீர்களா? அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா? அறத்தோனுக்கு அனைத்துயிரும் நிகரல்லவா?

நீங்கள் காப்பவருக்காக எதிர்ப்பவரை கொல்கிறீர்கள் என்றால் கடமையை செய்தவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒருகணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்.

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள்?

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை.

அங்கரே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழுவிசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை.

வில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.

விழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதனால் செயலாற்றுக! தசைகளில் உள்ளது தோளின் செயல். கால்களில் உள்ளது நடத்தல். பிறிதொன்றுக்காக அவை இங்கு எழவில்லை. அவற்றுக்குரிய விசையை அளிப்பதே நம் உள்ளத்தின் அறம்.

இங்குள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென்று ஓர் செயல்வழியும் இலக்கும் கொண்டுள்ளது. அதுவே அதன் தன்னறம். அதிலேயே அதன் முழுவிசையும் வெளிப்படுகிறது. அதன் ஒவ்வொரு அணுவும் அப்போது மட்டுமே செயல்படுகிறது. அதை இயற்றுகையிலேயே நிறைவடைகிறது. நிறைவுக்கு மறுபெயர் மகிழ்வு.

அங்கரே, உங்கள் தன்னறம் எங்கு உங்கள் தோள்களும் விழிகளும் நெஞ்சமும் பிறிதொன்று தேராது நின்றிருக்குமோ அங்கு உள்ளது. தன்னறத்தை ஆற்றுபவர் தன்னில் மகிழ்கிறார். அறிக, மகிழ்வென்பது வெளியே எதிலிருந்தும் எழவியலாது! தன்னுள் தான் முற்றிலும் நிறைவதே மகிழ்வென்று உணரப்படுகிறது.

இல்லத்தில் தொலைத்ததை பள்ளிச்சாலையில் தேடுகிறீர்கள். இங்கு, இப்பொழுதில் உள்ளது உங்கள் இடர் என்றால் பிறிதெங்கு நோக்குகிறீர்கள்? இயல்தளத்தில் நிலைகொள்பவர் நீங்கள். உங்கள் மெய்மையும் இங்கு எழுவதாகவே அமையலாகும்.

தோற்கடிக்கப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர், அடக்கப்பட்டோர் அனைவருக்கும் இதுவே என் சொல். தோற்றீர்கள் எனில் வெல்க! வீழ்ந்தீர்கள் எனில் எழுக! அடக்கப்பட்டிருந்தால் ஆள்க! சிறுமைப்படுத்தப்பட்டீர்கள் என்றால் விரிக! அதற்குரிய இயலறிவே உங்களுக்குரியது. தனியறிவு அதற்கு உகந்தது அல்ல. கூரியதென்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முள்ளை அகழ்ந்தெடுக்கவியலாது.

இங்குள்ளவை அனைத்தும் மீறவியலாதன என்றால் உங்கள் தோள்களுக்கு ஆற்றல் ஏன் அளிக்கப்பட்டது? உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது? களத்தை அமைத்த அதுவே கைகளையும் ஆக்கியது என்று உணராதவர் பேதைகளே.

பேதைகளே கட்டுண்டிருக்கிறார்கள். மெய்யுணர்ந்தோர் ஒவ்வொரு கணமும் விடுதலையை நாடுகிறார்கள். அறிவு என்பது விடுதலை என்றே பொருள்படும். எவ்வண்ணம் எவர் உரைத்தாலும் அறிவு விடுதலையை அன்றி பிறிதொன்றை அளிக்காது. அறிவினால் விடுதலை அமைவதில்லை, அறிதலே விடுதலையாகும்.

அங்கரே, அறிவில் தீயது, பயனற்றது என்றொன்றில்லை. அறியப்படாத அறிவுகளே பயனற்றவை. குறையாக அறியப்பட்டவையே தீங்கிழைப்பவை. அவை அறிவென கொள்ளப்படுவதில்லை.

விலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும். அதை கல்கி என்றும் மைத்ரேயர் என்றும் உரைப்பர் நூலோர்.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இன்னும் மானுடர் எஞ்சியிருக்கிறார்கள். இன்னமும் வினாவும் விடையுமென அறம் ஆராயப்படுகிறது. அங்கரே, மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு இடங்களில் உருவுகளில் கண்டடையப்படுகிறது.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இங்கு ஒவ்வொன்றும் நிலைகொள்கின்றன. மானுடர் இணையாமல் எதுவும் எழுந்து வளர்ந்து நீடிக்காதென்று அறிக! அறத்தின்பொருட்டன்றி எதன்பொருட்டும் மானுடர் இன்றுவரை ஒருங்குதிரண்டதில்லை. அறமென்பது அவர்கள் ஒருங்குதிரட்டுவதே. அவர்கள் ஒவ்வொருவரிலும் வாழ்வது அது.

அழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமைகொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னை அறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காக காத்திருக்கிறது.

இவ்வறம் அவ்வறம் என்று நோக்குவோர் அறத்தை காண்பதில்லை. முழுதும் காணப்படாத அறம் மறமென்று தோன்றலாகும். முழுதறத்தை உணர்ந்தவர் மறமும் அறத்தின் கருவியென்றே உணர்வர். எங்கும் திகழும் ஒன்றின் ஆடலை எதிலும் நோக்குபவரே யோகத்தமர்ந்து அறிந்தவர்.

முன்பொருமுறை இனிய புலரியில் குடில்விட்டு வெளியே வந்த தொல்வியாசர் குருவியின் மென்குஞ்சை தன் கூரலகால் கிழித்து உண்டுகொண்டிருந்த கழுகொன்றை கண்டார். புவிபேணும் பசியெனும் தெய்வத்தின் பேருருவைக் கண்டவராக மகிழ்ந்து கைகூப்பினார்.

பிறிதொருநாள் காட்டில் செல்கையில் கௌதமர் என்னும் முனிவர் தன் குருளையைக் கொன்று தின்றுகொண்டிருந்த அன்னைப் பெரும்பன்றியை கண்டார். அதன் முலைகளை முட்டிக்குடித்துக்கொண்டிருந்தன பிற குட்டிகள். அன்னையே, எத்தனை கனிந்திருந்தால் தன்னையே உண்டு உருக்கி உணவாக்குவாய் நீ என்று அவர் உவகையில் கண்ணீர் விட்டார்.

பறவைச் சிறகெரித்து புழுக்குலம் அழித்து மரங்களில் நாசுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை அறிக! அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர்.

பற்றுகொண்டோன் நோக்குகையில் அனைத்தும் பற்றினாலேயே பொருள்கொள்ளப்படும். இருள்விழைவோன் இருளை அடைகிறான். மருள்விழைவோனை அதுவே அணைகிறது. ஒளிநாடும் புட்கள் மட்டுமே புலரியை அறிகின்றன. வணங்கும் வடிவில் வந்தணைகிறது தெய்வம்.

முற்றிலும் பற்றறுத்த முனிவருக்கே முழுமை புலனாகும். குந்தியின் மைந்தரே, முனிவரிலும் முழுதமைந்த தவம்கொண்டோர் சிலரே. முழுமையறிவு உலகவாழ்வுக்கு எவ்வகையிலும் பயனற்றது என்பதனால் முழுதறிந்த பின்னரும் அதை சிறிதாக்கிக்கொள்பவரும் முனிவருள் உண்டு.

இப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவென்றும் வந்தமையவேண்டும். அதை நாடுக!

உணவில் பகிர்தலாக, இடரில் நட்பாக, எளியோர் முன் அளியாக, அவையில் நெறியாக, போரில் சினமாக, நோக்கில் நடுநிலையாக, குடிகளுக்குமேல் ஆணையாக, குலங்களுக்குமேல் நம்பிக்கையாக, விண்ணவருக்கு முன் அறமாக அது வந்தமைக! அதை அடைபவர் வெல்வர்.

ஒவ்வொருவருக்கும் அது தன் முகம் காட்டுகிறது. எதன்பொருட்டு வந்தீர்களோ அதை முழுதியற்றுக! கைவிரல்களைக் கண்டவன் அவற்றின் செயலென்ன என்று அறிந்துகொள்வான். தன்னை நோக்குபவன் தன் இலக்கென்ன என்று தெளிவுகொள்வான்.

அவ்வறிதலை செயலென்றாக்குக! செயல்கள் ஒவ்வொன்றும் மறுசெயல்களால் ஆனவை. செயலாற்றுக, விளைவை கொள்க! அறிக, செயல் விடுதலையென்றாகவேண்டும்! கட்டுறுத்தும் செயல் அரைச்செயலே. முழுமை நம்மை அதை கடந்துசெல்ல வைக்கும்.

வெல்லுங்கள், ஆனால் வென்றவருக்கு அருள்கையிலேயே கடந்துசெல்கிறீர்கள். கொள்க, எனில் கொடுக்கையில்தான் நிறைவுறுகிறீர்கள்! சினம் கொள்க, ஆயின் கனியும்போது மட்டுமே முழுமை அமைகிறது!

அங்கரே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே.

நிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.

எழுக! உங்கள் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக! உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க! வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவீர்கள். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவீர்கள். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும்.

இறுதிமூச்சையும் இசையாக்கிய பின்னரே குயில் வானில் முழுதெழுகிறது . எச்சமின்றி விட்டுச்செல்வதன் விடுதலை உங்களுக்கு அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!

இளைய யாதவர் சொல்லி முடித்த பின்னரும் கைகட்டி அமர்ந்திருந்த கர்ணன் நெடுநேரம் உளம் மீளாமல் தலை குனிந்திருந்தான். பின்னர் நீள்மூச்சுடன் எழுந்து கைகூப்பினான். “ஒரு வினாவும் எஞ்சாது நிறைவுற்றேன், யாதவரே. விடுதலை நோக்கிய நேர்ப்பாதையை என்முன் காண்கிறேன்” என்றபின் திரும்பி முதற்புலரி எழுந்துவிட்டிருந்த முற்றத்தில் இறங்கி நடந்தகன்றான்.


என் மூதாதையான மரு அன்னையின் சிறுமுலைக்காம்பில் சொட்டிநின்ற பால்துளி ஒன்றைக் கண்டு இளங்கன்று ஒன்று வாழ்த்துவதை ஒருநாள் கேட்டார். ‘பரம்பொருள் பள்ளிகொள்ள முடிவிலியென விரிந்தவளே, என் பசிக்கென துளிவடிவில் ஊறும் உன் பெருங்கனிவுக்கு அப்பால் பொருள் என ஒன்று கொண்டிருக்கிறாயா?’ அவர் இங்கு நிகழும் பெருங்களியாட்டில் தன்னை நிறைத்துக்கொண்டார்.

பொருளென்று அங்கிருந்தும் அறிவென்று இங்கிருந்தும் சந்திக்கும் புள்ளியிலேயே அனைத்தும் நிலைகொள்கின்றன. நிகர்விசைகொண்ட இரு களிறுகளால் இழுக்கப்படும் வடத்தின் மையம் அது.

அறியப்படும் இவையனைத்தும் அறிவென்பதனால் அறியப்படுவதனால் அறிவு உருவாகவில்லை என்றே பொருள். அறிவன்றி இங்கு பிறிதேதுமில்லை. அறிவுக்குள் அறிவென்று அமைந்தவையே அனைத்தும். தனித்தன்மைகள் அறிதலினால் எழுகின்றன. அறிதலுக்கு அப்பால் பெரும்பொதுமையின் அமைதலும் அறிவே.

அறியப்படாமையும் அறியவொண்ணாமையும் அறிவுகடந்தமையும் அறிவே. அறிவிலமர்ந்தவர் அறிவென அதையே கொள்வர். அறிபொருள் அறிவோன் அறிவு எனும் மும்மையழிந்த நிலையில் அது நிலைகொள்கிறது.

சுழற்சிக்கு நடுவே மையம் அசைவின்மை கொண்டிருக்கிறது. ஆழம் அலையின்மையால் இறுகியிருக்கிறது. அப்பாலிருப்பவனே அனைத்தையும் அறிபவனாகிறான். செயல்களுக்குள் செயலற்றிருப்பவனே செயலாற்ற வல்லவன்.



ஐயம் கொண்டவனுக்கு செயல் இல்லை. செயலில் திரள்வதே ஞானம். ஞானமில்லையேல் ஐயம் அழிவதில்லை. ஐயம்கொண்டவனுக்கு இவ்வுலகில் எதுவுமில்லை, மாற்றுலகுகளிலும் எஞ்சுவதேதுமில்லை. அனைத்தையும் ஐயப்படுபவன் தனக்குத்தானே விலங்குகளை பூட்டிக்கொள்பவன். ஐயம் அறிவின்பொருட்டே எழவேண்டும். விடையின்பொருட்டு மட்டுமே வினா எழவேண்டும். வினாவுக்குள் விடையின் வடிவும் இலக்கும் பொதிந்திருக்கின்றன. அறிவின் மீதான நம்பிக்கையையே அறிபவனின் அனைத்து ஐயங்களும் வெளிப்படுத்துகின்றன. அறிவை நம்பி ஐயங்களை எதிர்கொள்பவன் தன்னை மீட்டுக்கொள்கிறான். ஐயத்தை நம்பி அறிவை எதிர்கொள்பவன் ஐயத்தையே பெருக்கிக்கொள்கிறான்.

விடைதேடுவதென்பது கேள்விகளை மேலும் மேலும் கூர்ந்து தெளிவுபடுத்திக்கொள்வது மட்டுமே. ஐயங்களை கூர்ந்து நோக்கி உறுதிகளை சென்றடையலாம். வலையைக் கட்டும் சிலந்தி இரை சிக்கிக்கொண்டதும் கண்ணிகளை தானே அறுத்துவிடுகிறது. ஐயம்கொள்பவன் தன் ஐயம் குறித்து பெருமிதம் கொள்வதே அறிதலின் பாதையின் பெரும்புதைகுழி. ஐயப்படுதல் என்பது ஓர் அறிவுநிலை அல்ல. ஐயம் அறிவின் கருவியும் அல்ல. அறிதலின் ஏதேனும் ஒரு படியில் நின்றிருப்பதே அறிவுநிலை எனப்படும். ஐயம் அறிவில்லாநிலை மட்டுமே. அறிவின்மையை அறிவு விழைகிறது, தான் பெய்தமையும் கலம் அது என்பதனால்.

புறத்தே நோக்கி ஐயப்படுபவன் அறிவன் அல்லன். தன்னுள் ஐயம் எழ அதை ஊர்தியெனக் கொண்டு முன்செல்பவனே அறிவை நாடுபவன். பிறர் அடைந்தவற்றின் மேல் ஐயம் கொள்வதென்பது கங்கைப்பேரலைகளை எதிர்த்து நீந்துவது. சொல்லுக்கு சொல்வைப்பது சொல்லை மறுப்பது மட்டுமே. வெற்றுச்சொல்லில் மகிழ்வதே அறிவுநாடுபவனின் இருட்டறை. ஐயத்தை கருவியாகக் கொண்டவன் எதிரொலிகள் மட்டுமே நிறைந்திருக்கும் கூரைக்குவடு போன்றவன். அவன் கொள்ளும் அமைதியும் ஓசைகளாலானதே.

அறிவின் ஆணவம் மேலும் அறியவே வைக்கும். அறிவுத்தேடலல்லாத செயல்களை விலக்கும். ஆனால் அறிந்தவற்றைச் சூழ்ந்த வேலியென்றாகி அறிவை ஆளுமையெனத் திரட்டி நிறுத்தி மேலும் செல்வதை தடுக்கும் என்பதனால் செல்லும்தோறும் விலக்கவேண்டியது அது. ஐயத்தின் ஆணவமோ தொடங்கும்போதே களையப்படவேண்டியது. எல்லா அறிவும் தன்னுள் உறையும் அறியாமைக்கு எதிரான போரே. தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது.

பாஞ்சாலரே, நூறாண்டுகள் நீங்கள் அமர்ந்தது ஐயத்தை பீடமெனக் கொண்டமையால்தான். சொல்லை தவமெனக் கொள்பவன் சொல்பெருக்குகிறான். ஐயத்தை தவமெனக் கொள்பவன் ஐயத்தையே பெருக்குகிறான். அடையவேண்டியவற்றை தவம் செய்பவனே சென்றடைகிறான். பாஞ்சாலரே, பெருநதியின் நீர்ப்படலத்தில் விளையாடும் நீர்ச்சறுக்கிப் பூச்சிகள் நீரிலிருந்து விடுபட்டவை. அவை மூழ்குவதோ அலைக்கழிவதோ ஒழுகுவதோ இல்லை. நோக்குக, அவை நதியை அறிவதுமில்லை.

“அவ்வண்ணமென்றால் நான் அறியவேண்டியது எதை?” என்று அவர் மூச்சொலியில் கேட்டார். “அதையா?”

“அதை மட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”


அழிக்கப்படுவதில் எழுகிறது அழிவற்ற ஒன்று. அடக்கப்படுவதில் தோன்றுகிறது மீறிச்செல்வது. புரிந்துகொள்ளப்படாததில் விளைகிறது எளிதினும் எளிதானது. சிறுமை செய்யப்படும் ஒன்றில் எழுகிறது பெரிதினும் பெரிது.

ஒவ்வொன்றும் பிறிதொன்றின் எடைநிகர் என நிற்பன. ஒவ்வொன்றும் பிறிதொன்றின் மறுபக்கம் என நிகழ்வன. ஒன்றில் நின்று நாமறிவதற்கு அப்பால் நிகரான அறியப்படாமை உள்ளது.

பிழையற்ற கருவி தனக்கென விசையேதும் அற்றது. தன்னை ஏந்தியவனின் ஆற்றலை முழுக்க தான் ஏற்றுக்கொண்டது. இலக்குகளும் வஞ்சங்களும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் தன்னுடையவை அல்ல என்று அறிந்தது. அது ஐயத்தால் விசைகுன்றுவதில்லை. களத்தில் சுழல்கையிலும் முற்றிலும் விடுதலைபெற்றிருக்கிறது.

அறிதலென்பது ஆதலே. முற்றறிதல் எச்சமின்றி ஆதல். உண்டு உமிழ்ந்து கடலை அறியமுடியாது மீனால். கடலென்றாகும் மீன் அலைகளில் இருந்து விடுதலை பெறுகிறது.

“அறிவால் ஐயங்களை அகற்றி தன் பாதையை தெளிவுசெய்க! அறிவு முழுமையாகவே செயலென்று ஆகும் நிலையே யோகம்” என்றார் இளைய யாதவர்



 இளைய யாதவர் “காமகுரோதமோகம் இல்லாத மானுட உள்ளங்களே மெய்மையை அறியமுடியும் என்றால் மெய்மை மானுடருக்கு உரியதே அல்ல” என்றார்.

முகம் சற்றே எளிதாக, ஆம் என விதுரர் தலையசைத்தார். “காமத்தை எவ்வண்ணம் வெல்வீர், விதுரரே?” என்றார் இளைய யாதவர். “அறியேன். முனிவரும் அறியாது தவிக்கும் மாயவெளி அது” என்றார் விதுரர். “குரோதத்தை? மோகத்தை?” என்று இளைய யாதவர் கேட்டார். “அதற்கும் சொல்லப்பட்ட மறுமொழிகளே என்னிடமுள்ளன” என்று விதுரர் சொன்னார். “அன்பால் குரோதத்தை. எளிமையால் மோகத்தை.” இளைய யாதவர் புன்னகைத்து “காமத்தை அடக்கத்தால் என்பர் நூலோர். அமைச்சரே, அவ்வண்ணம் வென்ற எவரையேனும் எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். விதுரர் திகைத்து பின் எண்ணத்திலாழ்ந்து “நான் பார்த்தவர்கள் சிலரே” என்றார்.

“விதுரரே, காமம் கொண்டவர்கள் அனைவருமே அதை அஞ்சுகிறார்கள். அடக்கப்படாத காமம் விலங்குகளுக்கு மட்டுமே இயல்வது. குரோதத்தை நிகர்செய்யவே அன்பை பயில்கிறார்கள் மானுடர். தன்னவர்பால் அன்பையும் அல்லவரிடம் சினத்தையும் கொள்பவர் எளியோர். எதிரிகளிடமும் அன்பை கொள்கிறார்கள் அறத்தோர். மோகத்தை வெல்ல எளிமையில் அமைகிறார்கள் தவத்தோர். காமமும் சினமும் விழைவும் அனைத்து மானுட உள்ளங்களிலும் இருபால்பிரிவு கொண்டே அமைந்துள்ளன. இரு முனைகளும் பூசலிடுகின்றன. அல்லது ஒன்றின் வாலை பிறிதொன்று விழுங்கி சுற்றிவருகின்றன.”

“இருபாற்பிரிவு கொண்ட நெஞ்சில் அமைதி என்பதே இல்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “அறிக, காமமோ சினமோ விழைவோ துயரளிப்பதில்லை! அதை தடையின்றி அடையும் விலங்குகள் தெய்வத்துயரையும் உலகத்துயரையும் மட்டுமே அடைகின்றன. அவை எவ்வுயிரும் தவிர்க்கவியலாதவை. மானுடத்துயர் என்பது காமமும் சினமும் விழைவும் நிகர்விசைகளால் எதிர்கொள்ளப்படும்போது உருவாகும் கொந்தளிப்பே. குற்றவுணர்வாக, குழப்பமாக, கொந்தளிப்பாக, சோர்வாக அது மானுடரை அலைக்கழிக்கிறது.”

ஆம் என விதுரர் தலையசைத்தார். “இருமையொழிதலே அந்தத் துயரிலிருந்து விடுபடச்செய்யும். காமம் அடக்கம் என்னும் இருமையிலிருந்து, சினம் அன்பு என்னும் இருமையிலிருந்து, விழைவு துறப்பு என்னும் இருமையிலிருந்து எழுவதொன்றே மீளும் வழியாகும். ஒளிநாடுபவனே இருளை சென்றடைகிறான். இருளும் ஒளியும் அற்றதை, இருளும் ஒளியும் ஒன்றானதை நாடுக! அதுவே அறிவின் வழி.”

“அறிதொறும் தீமையை கண்டேன் என்றீர் விதுரரே, நீங்கள் கண்டது இருமையை. நீங்கள் கண்ட ஒவ்வொன்றிலும் தீமையிடம் தோற்றுச் சுருங்கி அமர்ந்திருந்தது நன்மை. ஏனென்றால் உங்களுக்குள் இருந்தது அதே இருமை. இருமையழிந்த அறிவே அறிவெனப்படும். இருமையில் எழுவன அனைத்தும் அறிவின்மையே” என்றார் இளைய யாதவர். “நோக்குக, அஸ்தினபுரியின் அந்த எளிய அமைச்சரை!”

...............
..............
இளைய யாதவர் “விதுரரே, இதனால் நீங்கள் அந்த அருமணிமேல் கொண்ட பற்றை இழந்துவிட்டீர்கள் என்று பொருளா? நாளை மீண்டும் அதன்பொருட்டு சினம் கொள்ளமாட்டீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்றார். விதுரர் “இல்லை, இது ஓர் அலை. இது அந்தச் சினத்தின் மறுபக்கம். இதன் மறுபக்கமென மீண்டும் பிறிதொரு சினமே எழும்” என்றார். “இங்கிருந்து மட்டுமே அதை காணமுடியும், அமைச்சரே” என்று சொல்லி இளைய யாதவர் புன்னகை செய்தார். “இது ஒரு கணம். ஒரு துளியை நதியென நீட்டுவதைப்போல் இதை காலமென்றாக்குபவரே மெய்யறிதலை பெறுகிறார்.”

“நான் இவற்றை அறிந்துகொண்டேன்” என்றார் விதுரர். அதிலிருந்த உட்பொருளை உணர்ந்து இளைய யாதவர் புன்னகை செய்தார். “ஆம், அறிதலைப்போல் எளிது வேறில்லை. ஓரிரு சொற்றொடர்களில் சொல்லிமுடிக்கத்தக்கவையே மெய்மையென மானுடம் அறிந்த அனைத்தும். மெய்யுணர்தலும் மெய்யிலமைதலுமே யோகம். யோகமென்பது ஒவ்வொரு கணமும் என, ஒவ்வொரு எண்ணத்தாலும் என பயிலப்படவேண்டியது. ஒவ்வொருவரும் எதில் உளம் ஈடுபட்டிருக்கிறார்களோ அதையே யோகமென்று பயில்வதே தொடக்கம். முழுமைநோக்கிய இலக்குடன் பயில்வன அனைத்தும் யோகமே” என்றார் இளைய யாதவர்.

அறிதலின் மாயங்களில் சிக்கி அலைக்கழிபவன் அறிஞன். நான் அறிகிறேன் என்னும் மயக்கம் அறிதலனைத்தையும் அறிபவனில் கோக்கிறது. அறிவனைத்தையும் அவன் இயல்புக்கேற்ப உருமாற்றுகிறது. அறிபவன் தன்னையே மீளமீள அறியும் சுழலில் சிக்கவைக்கிறது. அறிவது தானென்பதனால் அவ்வினிமையை அறிதலின் இனிமையென எண்ணச் செய்கிறது. தானற்ற ஒன்றை அறியமுடியாதவனாக ஆக்குகிறது. அறிவை அறிவின்மை என ஆக்கி விளையாடுகிறது.

அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது. கலமென்று சமைந்து கவிந்தவற்றை தள்ளிவிடுகிறது. அறியப்படுவன அனைத்தும் அறிந்தவற்றால் தொடங்கிவைக்கப்படுபவையாகின்றன. அறிவனவற்றை மதிப்பிட அறிந்தவற்றால் இயலுமென்பது அறிதலின் மயக்கம். வென்றவை அனைத்தையும் தன் கோட்டைக்குள் கொண்டுவரும் அரசன் கோட்டை ஒன்றையே உண்மையில் வென்றிருக்கிறான்.

அறிதலின் நெறிகளை அறிதலினூடாக வகுக்க முயல்வதனால் அறிதல்களின் பொதுமைகள் மட்டும் கருத்தில்கொள்ளப்படுகின்றன. பொதுமையே மெய்மை என்பது மயக்கம். நெறிகள் அனைத்தும் தொகுப்புத்தன்மை கொண்டவை. தொகுப்புச்செயல் சாரம் தேடுவது. சாரமென மட்டும் மெய்மை வெளிப்படுவதில்லை. தொகுப்புகள் அனைத்தும் தொகுப்பவனிடம் ஆணைபெற்றுக்கொள்பவை. நெறிகளின் திசைவழி தொடங்கிய இடத்தையே சுற்றிவந்துசேரும் வளைகோடு. நெறிகள் அறிதல்களை ஏற்றும் மறுத்தும் பகுக்கின்றன. இரண்டென்றானவை தங்களுக்குள் ஆடத் தொடங்கிவிடுகின்றன.

அறிவின் முழுமை அதன் முடிவில் உள்ளது என்னும் மயக்கம் அறிவதனைத்தையும் அறியப்படாத ஒன்றைக்கொண்டு மதிப்பிடச் செய்கிறது. மறுத்து மறுத்து முன்னேறுபவன் சென்றடைவதில்லை. ஏற்று ஏற்று சென்றடைபவன் வழியில் நின்றுவிடுகிறான். ஏற்பும் மறுப்பும் இரு நிலை. அதை கடத்தலே யோகம்.

ஒன்றுபிறிதுடன் சொல்லாடுமென்றால் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று பிறிதுடன் இணையுமென்றாலும் அவை இரண்டும் அறிவல்ல. ஒன்று தன்னை முழுமையென்று காட்டுமென்றாலும் அது அறிவல்ல. கன்று முலையை அறிவதுபோல் நிகழ்வதே அறிதல். ஆன்மா உடலை அடைவதுபோல் ஆதலே அறிவு.

அறிதலை அறியவியலும் என்னும் மயக்கம் அறிதலை ஓர் ஆடலென்றாக்குகிறது. அடைந்தவற்றில் மகிழ்வும் அடைவன குறித்த எதிர்பார்ப்பும் தவறுவன குறித்த பதற்றமும் அறிதலை மறைக்கின்றன. அறிதலில் வெற்றிதோல்வி இல்லை. நல்லது அல்லது என்றில்லை.

எவரும் உடல்வளர்வதை உணர்வதில்லை. ஆற்றும் செயல்கள் அனைத்தையும் அறிதலென்றாக்கியவன் தன்னுணர்வின்றி அறிவடைந்து அறிவிலமைந்துகொண்டிருக்கிறான். அறிதலென்பது ஆதல். அறிந்த பின்னரும் அறிந்ததென்ன என்று அறியாதிருத்தல். அறிவென்று தனித்து ஒன்றை கொண்டோர் அறிவை அடையாதவர்.

புறத்தே அறியும் அறிதல்களனைத்தும் தொடக்கமும் முடிவும் கொண்டவை. அறிவமைந்தவன் அவற்றில் களிப்புறுவதில்லை. ஒவ்வொரு அறிதலும் ஒரு முழுமை. ஒவ்வொரு அறிதல்கணமும் ஒரு வாழ்வு. ஒன்று பிறிதல்ல. ஒன்றிலிருந்து பிறிதும் இல்லை. ஒவ்வொன்றிலும் திகழ்பவன் முழுமையிலிருந்து முழுமைக்கு செல்பவன். அவன் முழுமையில் இருக்கிறான். முழுமையே அறிவெனப்படும்.

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் வியாசர் கூறினார் “யாதவரே, என் வினாவை இப்போதுதான் சொல்தீட்டிக்கொண்டேன். என் இடர் என்ன என்று அவ்வினா திரண்டதுமே உணர்ந்தேன். காவிய ஆசிரியனின் கைக்குறை அது. இக்கணம் வரை என் வினாக்களை உணர்வுகளாகவும் கனவுகளாகவும் பெருநோக்குகளாகவும்தான் தொகுத்துக்கொண்டேன். அவை ஒவ்வொன்றும் சொல்லுக்கரியவை என்பதனால் சொல்பெருக்கினேன். சொற்கள் பெருகுகையில் அவற்றுக்கு ஒழுங்கு தேவையாகிறது. ஒழுங்கு அழகென்றாகிறது. காவிய ஆசிரியனின் தப்பவியலாத் தீயூழ் என்பது அவன் சொல்லணியாக மட்டுமே பார்க்கப்படுவது.”

“அரசித்தேனீயை அதன் சுற்றம் என உணர்வுகளையும் கனவுகளையும் பெருநோக்குகளையும் சொற்கள் மொய்த்திருக்கின்றன. தேன்நிறை அறைகளில் தவம்கொள்கின்றன. சிறகுமுளைத்தெழுகின்றன. ரீங்கரிக்கின்றன. நச்சுக்கொடுக்குகளுடன் காவல் காக்கின்றன. சொல்தொடுத்து அல்ல சொல் விலக்கியே என் வினாவை எழுப்பமுடியும் என இப்போது கண்டுகொண்டேன். இதோ என் வினாவை பசிக்குரல்போல், வலியலறல்போல் நேரடியாக சொல்லாக்கிக்கொள்கிறேன்” என்றார் வியாசர் .

“இங்கு உயிர்க்குலங்கள் பிறக்கின்றன, போராடுகின்றன, பிறப்பித்துப் பெருக்கிய பின் மடிகின்றன. இதன் பொருள் என்ன?” தலையசைத்து முகத்தசைகள் இறுக “ஆம், இவ்வாறு எளிமையாகக் கேட்டாலொழிய இதற்கு விடை தேடமுடியாது. இதை கேட்கும் எவரும் ஆம், இதுவே என் வினா என்று சொல்லவேண்டும். இவ்வினாவின் முன் எந்த இலக்கியமும் தத்துவமும் மெய்யுரையும் அணிகொண்டு நின்றிருக்க முடியாது. இதற்கான விடையும் இவ்வாறே எளிமையாக அமையவேண்டும், உணவுபோல, உழுபடைபோல, வாள்போல வெளிப்படையாக, பிறிதொன்றிலாததாக” என்றார்.

இளைய யாதவர் ஒன்றும் சொல்லாமல் அவரை மலர்ந்த விழிகளால் நோக்கி புன்னகைத்துக்கொண்டிருந்தார். வியாசர் மேலும் சொல்வார் என அவர் அறிந்திருந்தார். வியாசர் இளைய யாதவரின் விழிகளை நோக்கியதும் சீண்டப்பட்டு சினம்கொண்டார். “நீர் என்னிடம் மெய்யை மட்டுமே உரைக்கமுடியும். அரசன் என்றோ, கவிஞன் என்றோ, அறிஞன் என்றோ, மெய்யுசாவி என்றோ அல்ல தெய்வமென்று நின்று கூறுக! உயிர்க்குலங்கள் இங்கு பிறந்துவாழ்ந்து மீள்வதன் பொருள் என்ன? மானுட வாழ்வுக்கு என தனிப்பொருள் ஏதேனும் உண்டா? இங்கு அறிவு, பண்பாடு, தவம் என பெருகியிருக்கும் இவற்றுக்கெல்லாம் நோக்கம் என்பது யாது? யாதவரே, நான் வாழ்வதற்கு உடல்கொண்டு பிறந்தேன் என்பதல்லாமல், உயிர்விசைகளால் உந்தப்பட்டேன் என்பதல்லாமல் ஏதேனும் அடிப்படை உண்டா?”

“அனைத்து விடைகளையும் நீங்களே அறிந்திருப்பீர்கள், வியாசரே” என்றார் இளைய யாதவர். “ஆம், நான் அறிவேன். சொற்கடல்அலை நான். என்னில் இல்லாத எண்ணமே இல்லை. யாதவரே, அவற்றின் மெய்யான பெறுமதி என்னவென்றும் நான் அறிவேன். இறப்புக்கு மாற்றில்லை என்று அறிந்த பின்னர் நோய்க்கு மருந்து அளிக்கும் மருத்துவன் நான்” என்றார் வியாசர். “செவிகொள்வீர் என்றால் சொல்கிறேன். நான் கேட்ட வினாவுடன் ஒவ்வொருநாளும் என் நூலை அணுகுகிறார்கள் மானுடர். விடைகளை அவரவர் தேவைக்கும் தகுதிக்கும் ஒப்ப நான் அளிக்கிறேன். ஒவ்வொரு துயருக்கும் தவிப்புக்கும் தனிமைக்கும் அதற்குரிய வகையில் வகுக்கிறேன்.”

“ஒன்றை மறுப்பவர் பிறிதொன்றை கொள்வார், ஒன்றை மறுப்பதனாலேயே பிறிதொன்றை ஏற்றாகவேண்டும் என அவர் உளப்பழக்கம் கொண்டிருப்பதனால். சிலவற்றை மறுத்தமையாலேயே சரியானதை ஏற்கும் நுண்மை தன்னிடம் உள்ளது என எண்ணிக்கொள்வார். தான் மறுத்தவற்றை ஏற்றுக்கொண்டவர்களைவிட தான் மேலென்றும் ஆகவே ஏற்றது தானறிந்த உண்மை என்றும் கருதிக்கொள்வார். அதன்பொருட்டு பிறருடன் சொல்லாடுவதன் வழியாக அனைத்து ஐயங்களுக்கும் விடைகண்டு அதை தனக்கென உறுதி செய்துகொள்வார். அறிவுக்கான விழைவை அறிகிறேன் என்னும் ஆணவம் ஓர் அடி முந்திச் செல்கிறது, விடையை தான் பற்றிக்கொள்கிறது.”

“அனைத்துக்கும் மேலாக ஒன்றை ஏற்று தன் துயரிலிருந்து மீளவேண்டும் என முன்னரே முடிவுசெய்த பின்னரே என்னிடம் வருகிறார். எளிதில் கிடைப்பது தூண்டில் புழு என எண்ணும் மீன் இது. எளிதில் ஏற்கலாகாதென்னும் அவருடைய ஆணவத்தின்பொருட்டு அணிகளில் மறைத்து, ஆயிரம் முறை மறுத்து, ஊடுசுழற்பாதைகளுக்கு அப்பால் அதை சமைத்து வைத்திருக்கிறேன்.”

“தேடிவந்து கொள்பவர் இவ்விடைகளினூடாக துயர் நீப்பார், இந்தப் புணை பற்றி நீந்தி உலகியலை கடப்பார். எவரையும்போல் இயற்றி ஓய்ந்து மடிவார். காலத் துயரும் கருத்துத் துயரும் கோடியில் சிலருக்கே உரியவை. அவர்கள் உள்ளிருக்கும் அறியாத் துளியை அறிந்து, நோற்று, பெருக்கி, சூழப்பரப்பி அதில் திளைப்பவர். தேடி, எழுந்து, கடந்து கண்டடைபவர். பிறர் வாழ்க்கை நிகழ்வதன் அலைகளால் அறியாமல் அவற்றின் நுனியை தொடநேர்ந்தவர். தெய்வத் துயரால் அறைபட்டு சித்தம் சிதறி பெருவினாக்களைச் சென்று முட்டியவர்கள்.”

“அவர்களுக்குத் தேவை விடை அல்ல. அவ்வினாவிலிருந்து திசைதிருப்பி கொண்டுசெல்லும் சொற்கள். மீண்டும் அவர்களின் உலகியல் அலைகளுக்கே சென்றமையச் செய்யும் ஆற்றுப்படுத்தல். நான் அளிப்பது அதையே” என்று வியாசர் சொன்னார். “பல்லாயிரம் பூக்களில் சிலவே காய்க்கின்றன. அவற்றில் சிலவே கனிகின்றன. அவற்றில் சிலவே விதைமுளைக்கச் செய்கின்றன. மலர்கள் வண்ணமும் இனிமையும் நறுமணமும் கொண்டு இங்கே அழகு நிறைக்கின்றன, அனைத்தையும் இனிதெனக் காட்டுகின்றன. கவிதை என்பது மலர்.”

“நன்கு மலர்ந்த நான்கு விடைகள் என்னிடம் உள்ளன” என்றார் வியாசர். “இது ஒரு தேர்வுக்களம் என்பது முதல் எளிய விடை. எங்கோ தந்தையே ஆசிரியரென அமைந்து நம்மை மதிப்பிடுகிறார். நன்று செய்க, நலம் கொள்க. தீதியற்றுக, துயர் பெறுக. இன்று பெறுவது நேற்று இழைத்தவற்றின் நிகரி. இன்று ஈட்டுவது நாளைக்கென உடன் வரும். பிறவிச்சுழலின் ஒரு களம் இவ்வாழ்க்கை. பிறந்து பிறந்து முதிர்ந்து சென்றடைவது முழுமை. இலக்கு அது. வீடுபேறென்பது பிறப்பொழிதல். முன்வினை நிகழ்வினை வருவினையின் முச்சுழற்சியால் ஆனது வாழ்க்கை. துயர் வருகையில் கடன் தீர்ந்ததென்று கொள்க. இன்பம் நிகழ்கையில் ஈட்டியதைப் பெற்றோம் என்று நிறைக. நன்றுசெய்து தீதுநீக்கி நல்வாழ்வு பெறுக. தீதும் நன்றும் பிறர் தர வாரா.”

“இது ஒரு சுழல் என்பது இரண்டாவது விடை” என்று வியாசர் தொடர்ந்தார். “ஒவ்வொன்றும் எங்கோ நிகர் செய்யப்படுகின்றன. இன்பம் துன்பத்தை, துன்பம் இன்பத்தை, நன்மை தீமையை, தீமை நன்மையை நிகர்செய்கிறது. துயர் வரின் இன்பம் ஒருங்கிக்கொண்டிருக்கிறது என மகிழ்க. இரவு சூரியனை கரந்திருப்பதுபோல பகலில் இரவு நிழலென குடியிருப்பதுபோல. இன்பதுன்பங்களினூடாகச் சென்று நிறைவடையும் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமே அதன் பயன். துலாநிலைகொள்ளும் கணமே எடைகாட்டுவது.”

“இப்பெரும் களத்தில் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு துளி. அது பிறிதொரு வாழ்க்கையால் நிகர்செய்யப்பட்டிருக்கும். அவ்வண்ணம் முடிவிலா கோடி நிகர்களால் ஆனது இவ்வாழிச் சுழல். அதன் இலக்கை, விசையின் நெறியை, மையத்தை நாம் முழுதறியவியலாது. ஆனால் அறியும் ஒவ்வொன்றிலும் அதை உணரமுடியும். அந்நெறியை ஏற்று அவ்விசைக்கு தன்னை அளித்துக்கொள்க. அவ்வாறு முழுதளிக்கையில் அவ்விசையின் இலக்கும் பொருளுமே நம்முடையதுமென தெளிவோம். நாமென்று நாம் யாத்துள்ள எண்வகை பூண்களைக் களைந்து அவ்விசையே நாமென்று அறிந்து அமைவதே இறுதி. அதுவே முழுமை.”

“இங்கு நிகழ்வன அனைத்தும் அறிதல்களே என்பது மூன்றாவது விடை” என்றார் வியாசர். “துயரும் மகிழ்வும், இழப்பும் பெறுகையும், கசப்பும் இனிப்பும் அறிதல்கள் மட்டுமே. அறிபவனுக்கு அறிபடுபொருள் அனைத்தும் நிகரே. அறிவை அளிப்பதனால் நிகழ்வன அனைத்தும் நன்று. அனைத்தும் அறிவாவதை உணர்ந்தவன் ஏற்றலும் விலக்கலும் என வாழ்வைப் பகுத்து இடருறுவதில்லை. கசக்கும் அருமருந்துகள் உண்டு. இனிக்கும் நஞ்சுகளும் உண்டு. இருமையகற்றியவன் இவ்வாழ்வை அவ்வண்ணமே ஏற்கும் நடுநிலை கொள்கிறான். அறிந்தறிந்து முதிர்வதே வாழ்க்கை. முற்றறிந்து நிறைவதே வீடுபேறு. முழுதறிந்த பின் நோக்குபவன் சிற்றறிவுகள் அனைத்தும் முழுதறிவின் படிநிலைகளே என்று உணர்வான்.”

“நான்காவது விடை இவையனைத்தும் கனவே என்பது. கனவின் துயர்களும் அச்சங்களும் அலைக்கழிவுகளும் விழித்தெழுந்ததும் பொருளிழந்துவிடுகின்றன. கனவில் பெற்றவை அனைத்தும் இல்லையென்றாகின்றன. ஆனால் நனவிலிருந்தே கனவுகள் எழுகின்றன. நனவின் ஒலிகளே கனவில் பொருள்மாறு கொண்டு துயரும் மகிழ்வுமென நிகழ்கின்றன. கனவினூடாக நனவின் மெய்மையை அறிக. விழித்தெழுதலே விடுதலை” என்றார் வியாசர்.

“யாதவரே, உலகியலானுக்கு முதல் விடை. தேடுபவனுக்கு இரண்டாவது விடை. அறிஞனுக்கு மூன்றாவது விடை. மெய்யுசாவிக்கு நான்காம் விடை. இந்நான்குக்குமேல் சென்று எவரும் கேட்பதில்லை. இந்நான்கும் நால்வகை அறிவின் வழிகள். ஒருவன் முற்றிலும் பின்திரும்பி நின்று அறிவின்மையால் என் வாழ்வுக்கென்ன பொருள் என்று கேட்பான் என்றால் அவனிடம் சொல்ல என்னிடம் விடை ஏதுமில்லை. நான் கேட்பது நான்கென சொல்திரளாதவனின் அக்கேள்வியையே. சொல்க, இங்கு வாழ்வு நிகழ்வது எதனால்?” என்று வியாசர் கேட்டார்.

இளைய யாதவர் “வியாசரே, துறவியிடமன்றி மெய்மை உரைக்கப்படலாகாது” என்றார். “யோகமே துறவெனப்படும். அனலோம்பாதவனும் சடங்குகளைச் செய்யாதவனும் துறவி அல்ல. தன் கொள்கைகளை துறத்தலே துறவை யோகமென்றாக்குகிறது. கற்பவன் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளவேண்டும். நம்பிக்கைகளில் இருந்து, பழக்கங்களில் இருந்து, தேய்சொற்களிலிருந்து, முன்னறிவுகளில் இருந்து. தன்னை இழிவுறுத்திக்கொள்பவன் கவிழ்த்தப்பட்ட கலம் கொண்டவன். தன்னை தான் வெல்லாதவன். தன்னை தனக்கே பகைவனாக்கிக் கொண்டவன்” என்றார்.

இருவகை அறிதல்களினூடாக மானுட உள்ளம் பின்னிச் செல்கிறது. இவ்வுலகில் நலம்பெறும் முறையை அறிதல் சாங்கியம். இவ்வுலகு என்னவென்று அறிதல் விஞ்ஞானம். இவையனைத்தையும் முழுமையில் அறிதல் ஞானம். விஞ்ஞானமும் ஞானமும் ஒன்றுபிறிதை விலக்கா நிலையே யோகம். ஞானம் விஞ்ஞானத்திற்கு மறுமொழியென்றாகவேண்டும். விஞ்ஞானம் ஞானம்நோக்கி கொண்டுசெல்லவேண்டும்.

வாள்முனை நடையே யோகிக்குரியது. விழிப்போனும் துயில்வோனும் உண்மையை காண்பதில்லை. உண்போனும் நோற்போனும் மெய்யை சுவைப்பதில்லை. அகன்றோனும் உழல்வோனும் அதை உணர்வதில்லை.

அசைவிலாச் சுடரால் படித்தறிக. நிலைகொண்ட உள்ளத்தால் வாழ்ந்தறிக. இவையனைத்திலும் இறையுறைகிறது. எங்கும் அதை காண்கிறவன் அனைத்தையும் அதில் காண்கிறான். அவனுக்கு அது அழிவற்றது. அதற்கு அவன் அழிவற்றவன்.

முதலாசிரியரே, நீங்கள் முன்னர் கூறிய நால்வகை விளக்கங்களும் பொய்களல்ல, அவை நால்வகை உண்மைகள். நான்கு நிலைகளில் நிற்பவர்களுக்கு மெய்யமைவு அவ்வண்ணம் வெளிப்படுகிறது. யார் எவ்வடிவில் எண்ணுகிறார்களோ அவ்வகையில் அவர்களுக்கு தோற்றமளிப்பது அது. தன் பேரளியால் அது திரிபுறவும் குறைவுறவும்கூடும். தன் ஆடலால் உருவுறவும் உறவாடவும்கூடும். மைந்தரின் சிறுகைகளுக்கு ஏற்ப சிறுதேர் செய்து அளிக்கிறான் பெருந்தச்சன்.

அதன் வடிவங்கள் முடிவிலாதவை. துன்பம்கொள்பவருக்கு அன்பென. ஒடுக்கப்பட்டோருக்கு அறம் என. தனியருக்கு துணை என. வெறுமையிலமர்ந்தோருக்கு விழுப்பொருள் என. எதுவும் அது அல்லாதது அல்ல. அறிவு மட்டுமல்ல அறியாமையும் அதுவே. தெளிவும் மயக்கமும் அதுவே.

உங்கள் வினாக்கள் விடைகளை வாங்கும் கலங்கள். அறிவோனால் வகுக்கப்படாத விடை அறியப்படுவதில்லை. முதல் முழுமையெனும் விடை இன்மையெனும் பெருங்கலத்திலேயே இறங்கியமைய இயலும்.

நான்கு விடைகளை சொன்னீர்கள். நன்மை நாடுவோர் முதல் விடையை அடைகிறார்கள். ஒழுங்கை நாடுவோர் இரண்டாம் விடையை அடைகிறார்கள். உண்மை நாடுவோர் மூன்றாம் விடையை கொள்கிறார்கள். குறைவின்மை நாடுவோர் நாலாவது விடையை சென்றடைகிறார்கள்.

மானுடர் கேட்பதில்லை, கோருகிறார்கள். கோரும் வடிவில் பெறுகிறார்கள். தன் அளியின்மையால் அது முழுமையை மறைத்துக்கொள்ளவில்லை. இங்கு வாழும் உயிர்களின் மீதான பேரளியாலேயே கரந்துறைகிறது. அறிந்தமையாலேயே அளந்து அளிக்கிறது. அருள்வதனால் அளித்தவற்றில் நிறைகிறது.

வியாசரே, நீங்கள் கவிஞர். ஒருபுறம் எளியோனாய் உலகாடி, மறுபுறம் ஞானியென மெய்நாடி, இரண்டுக்கும் நடுவே உழல்பவர். நலம்பயக்கும், மகிழ்வளிக்கும், காக்கும், புரக்கும் ஒன்றை மண்ணில் நின்று விழைகிறீர்கள். இரண்டற்ற ஒன்றை நோக்கி ஞானத்தால் எழுகிறீர்கள்.

இன்மையின் கலமேந்தி நின்றால் அறிவீர்கள். அது நலம்பயப்பதல்ல. அளிகொண்டதல்ல. அழகும் ஒழுங்கும் இசைவும் அதில் இல்லை. அது உண்மை அல்ல. உள்கடந்த ஒருமை அல்ல. அது மானுடர் எண்ணும் எவ்வியல்பையும் தான் கொண்டது அல்ல. இன்மையென விரியும் யோகியின் உள்ளத்தில் இன்மையென எழுவது. இன்மையின்மேல் மட்டுமே முடிவிலா இயல்புகளை ஏற்றமுடியும்.

பல்லாயிரம்கோடியினரில் ஒருவரே அதை அறிய முயல்கிறார்கள். பிறர் அதை விடையெனக் கொண்டு வாழ்ந்து கடக்க விழைபவர்கள் மட்டுமே. முயல்பவர்களில் மிகச் சிலரே அதை முழுதுணர்கிறார்கள்.

உயிர்க்குலங்களை படைத்தாளும் பெருநெறி என்று கொண்டால் தொழுவீர் எனில் அதை அறியமாட்டீர். உயிர்க்குலங்களை கொன்று களியாடும் கட்டின்மை என்று கொண்டால் அஞ்சுவீர் எனில் அதை அறியமாட்டீர். ஒளியென்று வணங்குவீரென்றால் இருளென்று விலக்குவீரென்றால் அதை அறியவேமாட்டீர். விழிநீருக்கு இரங்கும் என்றும் விளித்தால் அணுகும் என்றும் எண்ணுவீரென்றால் அதுவல்ல உங்களுக்குரியது.

விழிதிறந்துவிட்டீர் என்பதனால் காண்க. உங்கள் துயர்களை அறிவதை, உங்கள் நலன்களை புரப்பதை, உங்கள்மேல் கனிவதை அங்கே தேடவேண்டாம். உங்கள்மேல் வஞ்சம் கொண்டதை உங்களை அழிப்பதை, உங்கள்மேல் கனிவற்றதை அங்கே எதிர்பார்க்கவேண்டாம்.

உங்களை அது அறியாதென்றே கொள்க. உங்கள் இருப்பு அதற்கு ஒரு பொருட்டில்லை என்றே கொள்க. உங்களுக்கு இரங்குவதோ உங்களை அணுகுவதோ அல்ல என்றே கொள்க. உங்களால் அறியப்பட இயலாததென்றே கொள்க. அவ்வெறுமையை எதிர்நிலையென கொள்ளாதிருக்க பழகுக. வெறுமை இயல்பென அமைதலே இன்மை. இன்மையே அறிவோன் ஏந்தவேண்டிய கலம்.

அங்குளது பிறிதொன்று. இங்குள எதனாலும் விளக்கப்படாதது. ஆகவே இங்குள எதற்கும் விடையல்லாதது. இங்குள அனைத்திலிருந்தும் அகன்றாலொழிய அணுகவொண்ணாதது. அதுவே இங்குள அனைத்துமென்றாகி சூழ்ந்துள்ளது. மறைவும் வெளிப்பாடும் கொண்டது அது என்பதே மெய்மயக்கம்.

பருவென, பொருளென இங்குள்ள அனைத்துமே நூலில் மணிகள் என அதன்மேல் கோக்கப்பட்டவை. அனைத்துக்கும் பொருளென்றமைவது ஒன்றே. அதை அறிந்தவர் அனைத்தையும் அறிந்தவராகிறார். இயல்பற்றது மூவியல்பால் இயக்கம்கொண்டு தன் முழுமையை மறைத்தாடுகிறது. அதன் மாயை கடத்தற்கரியது.

பிறந்திறந்து பெருகிச்செல்லும் இவ்வொழுக்கின் பொருளே புடவியென்றாகி சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு கணத்திலும் விளங்காத பொருள் என்று ஒன்று காலமுடிவிலியில் இல்லை. ஒவ்வொரு பருவிலும் திகழாத பொருள் என்று ஒன்று கடுவெளியில் இல்லை.

பிறப்பின் வாழ்வின் இறப்பின் பொருளை ஒவ்வொரு கணத்திலும் உணராத ஒருவர் எப்போதும் உணரப்போவதில்லை. தன் உடலில் ககனத்தை உணராதவர் வானில் எதையும் காண்பதில்லை. முழைத்து முனைகொண்டு எவரும் அறிவதில்லை. இயல்தலும் இசைதலுமே அறிவின் நெறி.

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் கிருஷ்ண துவைபாயன வியாசரிடம் சொன்னார் “கவிமுனிவரே, பிரம்மத்திற்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. ஆயிரம்கோடி பகலிரவுகளாலான ஆயிரம்கோடி யுகங்கள் அரைக்கணம். நாம் கோருவதனைத்தும் காலத்தில், இடத்தில், கருத்தில் விளையும் விடைகளை. நம்மால் கோரப்படுவது காலமும் இடமும் கருத்தும் கடந்த ஒன்று. அது துளித்துச் சொட்டும் ஒரு துளி இப்புவியை ஆயிரம் துண்டுகளென சிதறடிக்க வல்லது.”

ஆயிரம் மடங்கு எடைகொண்டுவிட்டதென தன் உடலை உணர்ந்தபடி அமர்ந்திருந்த வியாசரிடம் இளைய யாதவர் சொன்னார் “அறியவேண்டுமென்றல்ல, வாழவேண்டுமென்றே மானுடர் விழைகிறார்கள். வாழ்வுக்கு உதவுவது என தன்னை அளிக்கும் இரக்கம் கொண்டிருப்பதனாலேயே அது மேலும் முழுமைகொள்கிறது.”

வடிவங்களால் ஆனது இவ்வுலகு. அதன் உட்பொருட்களாலானது. அதன்மேல் எழுந்த ஒலியாலானது. யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே யோகிகள் ஒலியுலகத்தைக் கடந்து செல்கிறார்கள். அதை ஒலியென்று குறைக்கிறார்கள். பொருளென்று சமைக்கிறார்கள். வடிவென்று புனைகிறார்கள். முனிவரும் அறிஞரும் கவிஞரும் அமைத்த இவ்வனைத்தும் அதுவே.

அது அறியப்படாமை. அறியப்படுவன அனைத்தும் அதிலிருந்து எழுகின்றன. இரவிலிருந்து புலரியில் பொருட்கள் முளைத்தெழுவதுபோல. இரவில் அவை மூழ்கியணைவதுபோல. அறிவால் அறியப்படுவதும் அறிபுலன்கள் அனைத்தையும் கடந்தமைந்ததுமான அறிவே அது. மண், நீர், தீ, காற்று, வான், உளம், மதி, தன்னிலை என்னும் எட்டு வகையாக பிரிந்து இயற்கை என்றாகிறது.

அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். அழிவிலாத அறிவைப் பற்றியது தேவ ஞானம். உடலுக்குள் அதை அறிதல் யாக ஞானம். நீங்களே அது என்றுணர்க! நான் எனச் சொல்லி விரிக! உங்கள் வடிவுகொண்டவனை அறிக! கவிஞனை, பழையோனை, ஆள்வோனை, அணுவின் அணுவை, அண்டப்பேரண்டத்தை, அனைத்தையும் சூடுபவனை, அலகிலா வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிர்என நிற்பவனை வாழ்த்துக! உங்களுடையது சொல்வேள்வி.

இங்கு என்றுமுளது ஒளிவழியும் இருள்வழியும். மீளாதது முதல் வழி. மீள்வது இன்னொன்று. உங்கள் வழி இங்கு மீள்வதே. அது அழகின், அளியின் வழி. அள்ளி அணைப்பது, ஆடி மகிழ்வது. இங்கு என்றுமிருக்கும் பூமரக் காடு உங்கள் சொற்கள். தன் வழியை அறிந்தவனே யோகி. வேதங்களிலும், தவங்களிலும், கொடைகளிலும் இயலும் தூய்மை வழியல்ல உங்களுடையது. சொல்லில் எழுவது. அது முதல்பெருநிலையே.

வாழ்வுக்குப் பொருள் தேடுபவன் கவிஞனல்ல. பொருள் அளிப்பவன் அவன். வினாக்களால் ஆனதல்ல காவியம், அழியா விடைகளாலானது. உசாவவேண்டாம், புனைந்தளியுங்கள். சுருக்கவேண்டாம், விளக்குங்கள். உளம்விரிந்து நீங்கள் புனைவதெல்லாம் மெய்யே. தன் சொல்லில் எழுந்த மெய்யை கவிஞன் தன் கனவால் ஒப்புகையில் அதுவே முதற்சான்றாகும். ஆம் ஆம் ஆம் என மும்முறை ஒப்பி பிரம்மம் மறுசான்றுரைக்கும்.

விண்ணுக்கெழும் ஆணையை அனலுக்கு அளித்ததே மண்ணில்வீழும் ஆணையை மழைக்கு அளித்தது. உங்கள் சொற்களாலேயே இங்கு மானுடம் வாழ்வை பொருள்கொள்ளும், கனவுகளை விரித்தெடுக்கும், கண்டடையும், கடந்துசெல்லும். ஆம், அவ்வாறே ஆகுக!


நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் யுதிஷ்டிரர் கேட்டார் “யாதவனே, நான் உன்னை காணவேண்டுமென எண்ணிய தருணத்தை சொல்கிறேன். விழியிலாதாயிற்றெனச் செறிந்த இருளை நோக்கி நின்றபோது என்னை எண்ணி வியந்தும் மருகியும் இகழ்ந்தும் அலைபாய்ந்தேன். ஒரு தருணத்தில் தோன்றியது நான் இந்திரன் அல்லவா என்று. அக்கணத்தில் ஏற்பட்ட நடுக்கில் நான் அவனென்றே ஆனேன். அவனென நின்று அனைத்தையும் நோக்கி மீண்டேன்.”

“விஸ்வஃபுக் ஏன் மேலும் விழைவுகொண்டான்? பிரம்மத்தின் பேருருவை கண்ட தேவர்க்கிறைவன். முடிவிலிகளாலான முடிவிலி என்று நூல்கள் சொல்வதை, அறிதல்களுக்கு அப்பாற்பட்ட அறிதல் என்று முனிவர் நவில்வதை அறிந்தவன். அவனுக்கு ஏன் விழைவெழுந்தது? ஏன் அவன் கணமொழியாமல் ஆட்டுவிக்கப்பட்டான்?” என்றார் யுதிஷ்டிரர்.

“அவன் அரசன் என்பதனால்” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார். “அரசன் பெருவிழைவால் ஆற்றல் கொள்பவன். இந்திரன் அரசர்களுக்கு முன்வடிவான அரசன். கணம் என தோன்றி விண் முழுதளக்கும் மின்படை கொண்டவன். அரசன் கற்பதும் முழுமைகொள்வதும் விழைவின் பாதையிலேயே. அவர்களுக்கான வழியை அரசமெய்மை என்றனர் நூலோர்.”

யுதிஷ்டிரர் தன்னுள் எழுந்த வினாக்களால் மேலும் மேலுமென சீற்றம் கொண்டபடியே சென்றார். “எளிய விடைகளுக்காக நான் இங்கே வரவில்லை, யாதவனே. நான் யுதிஷ்டிரனல்ல, நான் பெரும்பசி கொண்ட விஸ்வஃபுக். இந்திரனென்றமைந்து நான் கேட்பதற்கு மறுமொழி சொல்க!” என்றார்.

மூன்று முதற்தெய்வங்களும் எண்ணியறிய முடியாத அதன் எல்லையின்மையை நான் அறிவேன். ஒரு முழு பால்வழியே துகளென நொறுங்கியழிந்தாலும் அதற்கு கணத்திலும் கணத்திலும் கணமென்றமையும் துளியினும் துளியினும் துளியான நிகழ்வல்ல அது. அதன் விரிவில் நிகழ்வது நிகழாமைக்கு சற்றும் மாறுபட்டதே அல்ல.

அது இரக்கமற்றது. தன் அலகிலா பேருருப் பெருக்கினாலேயே நோக்கும் விழியற்றது. கேட்கும் செவியற்றது. அறியும் உளமற்றது. ஆனால் சிற்றெறும்புக் கூட்டுக்குள்ளே ஆற்றலின் நெறி ஒன்று இலங்குகிறது. பெருங்கரி மந்தையையும் அன்னையே ஆள்கிறது. நெறியிலாத ஒரு துளி இடத்தையும் எங்கும் காணமுடிவதில்லை. நீரில் கலப்பதில்லை எண்ணை. அனலில் எரிவதில்லை கல். முறை வகுக்கப்படாத எதுவுமில்லை இங்கே.

அவை எவருடைய ஆணை? எவருடைய விழைவை சூடியிருக்கின்றன இங்கெனத் திரண்டிருக்கும் இவையனைத்தும்? வினாக்களென நம்முள் எழுவன அனைத்தும் இங்கிருக்கும் நெறிமேல் நம் சித்தம் சென்றுமுட்டுவதனால் எழுவன. விடையென அமையவேண்டிய அது அப்பாலென பேருருக்கொண்டு நின்று அஞ்ச வைக்கிறது. சித்தம் பேதலிக்கச் செய்து விலகிச் செல்கிறது.

இதோ போர்ச்சூழல் இறுகி விம்முகிறது. பல லட்சம் மக்கள் செத்துக் குவியவிருக்கிறார்கள். அவ்விருளில் நின்றபோது என் நெஞ்சு அச்சம்கொண்டு உறைய ஒருகணத்தில் அனைத்தையும் உணர்ந்தேன். தலைமுறை தலைமுறையென பிறந்து பிறந்து பெருகிப்பெருகி இப்போர் நோக்கி வந்துகொண்டிருக்கின்றது பாரதவர்ஷத்தின் மக்கள்திரள். போர்வெறியும் போரின்மீதான அச்சமும் அங்கே செல்வதற்கான விசையே. வஞ்சமும் அமைதிக்கான விழைவும் அதை நோக்கிய நகர்வே.

அங்கு நிகழவிருப்பதென்ன? வில்வல்லமையும் எண்ணிக்கைவல்லமையும் உளவல்லமையும் ஊழ்வல்லமையும் நின்று மோதிக்கொள்ளும். வெல்வர், தோற்பர். அதற்கேற்ப பாரதவர்ஷத்தின் எதிர்காலம் மாறும். இன்னமும் கருபுகாத கோடிமக்களின் ஊழை இங்கு முடிவுசெய்யவிருக்கிறோம். யாதவனே, இவ்விசையின் ஊற்று எது? இங்கு இதை ஆற்றுவது அது என்றால் அந்த அலகிலி சொல்லவேண்டும் இவனையனைத்துக்கும் என்ன பொருள் என்று. இவற்றுக்கெல்லாம் அந்த அறியமுடியாமை வரை செல்லும் ஒரு நெறி இருக்கவேண்டும்.

நாளை அக்களத்தில் இளமைந்தர் நெஞ்சுபிளந்து செத்துக்கிடப்பார்கள். இறப்பை அஞ்சி, வலியில் துடித்து வான்நோக்கி கைவிரித்து ஓலமிடுவார்கள் சிலர். அன்னையரும் மனைவியரும் குழல் விரித்திட்டு ஓடிவந்து களம்பட்டோர் மீது விழுந்து அலறியழுவார்கள். தலையை நிலத்தில் அறைந்து கூவி கதறி மயங்கி விழுந்து மண்ணில் புரள்வார்கள்.

இல்லங்களெங்கும் இருள்பரவும். கைம்பெண்கள் மூலைகளில் ஒடுங்குவர். இளமைந்தர் தந்தையைத் தேடி அழுதுதிரிவர். பெருந்துயர் நிறைந்த நகரில் நகையெழ ஆண்டுகளாகும். குருதிமண்மீது மீள மீள மழைபொழிந்து பசுமையெழவேண்டும்.

அத்தனைபேரும் விண்ணை நோக்கியே கூவுவர். இரக்கம் கோரி. விளக்கம்கோரி. அப்பெருவெளிநோக்கி இதுவே உன் நெறியா, அளியே உனக்கில்லையா என்ற குரலெழாத ஒருகணமேனும் இம்மண்ணில் உண்டா?

இரக்கமற்ற பெருவிரிவு. இங்கிருக்கும் எவற்றுக்கும் பொருள் அலாத அலகிலாமை. எச்சொல்லும் எவ்வெண்ணமும் எவ்வுணர்வும் எவ்வூழ்கமும் சென்றடைய முடியாத ஆழிப்பேராழி. ஆனால் அங்கிருந்து வருகின்றன இங்கிருக்கும் ஒவ்வொரு கணத்தையும் ஆளும் நெறிகள். என்றால் அது பொறுப்பேற்கட்டும் அறத்திற்கு. அதுவே அறமழிவுக்கும் பொறுப்பேற்கட்டும். இருளுக்கும் ஒளிக்கும் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் அடிப்படையென வந்து நிற்கட்டும்.

அதன் முன் எளியோர் நாம் ஏன் நம் செயல்களுக்கு பொறுப்பேற்கவேண்டும்? நாம் ஏன் குற்றவுணர்வு கொண்டு கலுழவேண்டும்? நன்றென்றும் தீதென்றும் அறமென்றும் அலவென்றும் ஏன் உசாவவேண்டும்? ஏன் அளிகொள்ளவேண்டும்? எதன்பொருட்டு நாம் கட்டுண்டிருக்கவேண்டும்?

என் ஆணவமே அறமென்று என்னைச் சூழ்ந்தது என்று இன்று அறிகிறேன். நான் அரியவன் என்று பிறர்முன் காட்ட விழைந்தேன். பிறர் வகுத்த களத்தில் ஆடி முதன்மை பெற்று அவர்களின் பாராட்டைப் பெற விழைந்தேன். அறமென்பது பொய்யென்று அறிந்திருந்தமையால் என்னுள் நிறைவிழந்திருந்தேன். பொய்யென அறிந்த ஒன்றுக்காக என் இன்பங்களை கையளிக்கிறேனா என எண்ணி துயர்கொண்டிருந்தேன்.

அதுவே அடிப்படை. அது அறமிலாதது எனில் இங்கு எதுவும் அறமிலாததே. அது அளியிலாதது எனில் இங்கு அளி என்பதே தேவையில்லை. அது அறியமுடியாதது எனில் இங்கு எதையும் அறியமுடியாது. யாதவனே, அது பொருளில்லாதது என்றால் இங்கே பொருள்தேடி பேசுவதெல்லாம் பசப்பே.

நான் கேட்பது ஒன்றே. மிக எளிய சொற்களில் இதுவே. யாதவனே, இங்குள்ள அறங்கள் அனைத்தும் தெய்வங்கள் பெயரைச் சொல்லி நிறுத்தப்படுவன. அவை தெய்வங்களால் அளிக்கப்படுவனவா? இருமையற்றது அது என்றால் எதுவும் அதன் உச்சத்தில் இருமையற்றதே. அவ்வாறென்றால் இங்கே நன்றும் தீதும், அறமும் மறமும் இல்லையென்றே ஆகுமல்லவா?

இளைய யாதவர் புன்னகையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு யுதிஷ்டிரர் சினம்கொண்டு குரலுயர்த்தினார். “சொல்க, அறமென்பதும் அளியென்பதும் வெறும் உளமயக்குகளன்றி வேறென்ன? அவற்றை உதறிவிட்டு வாழ்ந்தால் வென்றாலும் இழந்தாலும் குற்றவுணர்விலாது, உளக்குழப்பமில்லாது இங்கு வாழமுடியும் அல்லவா?”

“ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவ்வாறு இயலுமென்றால் அது நல்லதுதான்.” யுதிஷ்டிரர் கையை வீசி “ஏன் இயலாது? விலங்குகள் வாழ்கின்றன. பூச்சிகள், செடிகள் அவ்வாறே வாழ்கின்றன” என்றார். “காமமும் குரோதமும் மோகமும் மட்டுமே அவற்றை இயக்குகின்றன. வேறெந்த நெறியுமில்லை.”

இளைய யாதவர் அதே புன்னகையுடன் “இல்லை. அவ்வாறென்றால் ஒரு தலைமுறையுடன் உயிர்கள் அழியும். வேட்டைக்கு எளியதும் உண்பதற்கு இனியதும் இளங்குழவிதான்” என்றார்.

யுதிஷ்டிரர் திகைக்க “ஆனால் இங்கு குழவிகளே அரசர்களுக்கு நிகராக பேணப்படுகின்றன. அன்னையரின் குருதியை உண்கின்றன. தந்தையர் மீதேறி மறுசொல்லெழா ஆணைகளை இடுகின்றன. குழவிகளின் பொருட்டே அனைத்துக் குலநெறிகளும் அமைந்துள்ளன. குழவிகளின்பொருட்டு அனைத்துயிரும் தங்கள் உயிரை அளிக்கவும் சித்தமாகின்றன” என்றார் இளைய யாதவர்.

எப்போதும் எங்கும் நெறியே ஆள்கிறது, யுதிஷ்டிரரே. அரிதாக சில உயிர்த்தொகைகளில் நெறிகள் அழிகின்றன. அனைத்தும் நிலைகுலைந்து சரிய அந்த அழிவினூடாக கற்றுக்கொண்டு அறத்தை மீட்டுக்கொள்கின்றது அந்த உயிர்த்தொகை.

அறத்தை ஐயப்படாத மானுடனே இல்லை, ஏனென்றால் அதன் வழிகள் மறைவானவை. அறத்தை நம்பாத மானுடனும் இல்லை. ஏனென்றால் அது இன்றி அவன் வாழவியலாது. அறத்தை ஐயம்கொள்பவனே அதை உள்ளூர சார்ந்திருக்கிறான். அறத்தை மறுப்பவன் அதை அஞ்சுகிறான். அறத்தைக் கூவுபவன் அதன்மேல் ஐயம்கொண்டிருக்கிறான்.

உயிர் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான அறம் உள்ளது. மானுடருக்குரிய அறம் மானுடரால் உருவாக்கப்பட்டது. குடிகள், குலங்கள், நாடுகள் போல. இல்லங்கள், நகரங்கள் போல. ஆடை போல, அணி போல. அது இனிதென்றும் நன்றென்றும் கண்டமையால் பேணப்பட்டது. அது பல்லென்றும் நகமென்றும் ஆகுமென்பதனால் பூணப்பட்டது.

அறங்கள் மண்ணில் கண்டடைந்து பெருக்கப்பட்டவை. முன்பொருநாள் ஒரு துளிச் செம்பு மண்ணில் மானுடனால் கண்டெடுக்கப்பட்டது. அது நன்றென்று உணரப்பட்டது. மீண்டும் மீண்டுமென செம்பைத் தேடி சேர்த்தனர் மானுடர். அது படைக்கலமும் மனைக்கலமும் அணிகலமும் ஆகியது. அவர்களைக் காத்தது, ஊட்டியது, அவர்கள் உள்ளத்தின் அழகு ஆகியது.

மண்ணிலிருந்தும் அது பிரித்தெடுக்கப்படுகிறது. ஆழங்களில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்டது ஒருபோதும் மீள மண்ணுக்கு செல்வதில்லை. அது தொழில் மாறக்கூடும். அதற்கேற்ப உரு மாறக்கூடும். ஒன்றோடொன்று கலந்து ஒளிமாறக்கூடும். ஆனால் ஒருபோதும் கைவிடப்படாமல் என்றும் இங்கிருக்கும்.

செம்பு மென்மையானது. இரும்பு வன்மையானது. வெள்ளி ஒளி கொண்டது. பொன் அரிதானது. செம்பை இரும்பு வெல்லும். வெள்ளியை பொன் மிஞ்சும். மென்மையான பொன் வன்மையான இரும்பை ஆளும். செம்பு பொன்னுடன் கலந்து விலைமிகும். உலோகங்கள் போரிடுகின்றன. உலோகங்கள் வென்றும் தோற்றும் உலகு சமைக்கின்றன.

உலோகங்கள் ஒன்றே. இரும்பு வேர். செம்பு தண்டு. வெள்ளி இலை. யுதிஷ்டிரரே, தங்கம் மலர். ரசக்கலை அறிந்த யோகி ஒருவன் இரும்பை பொன்னாக்கினான். பின்னர் பொன்னை இரும்பாக்கிக்கொண்டான். இரண்டையும் சாம்பலாக்கி காற்றில் கரைத்துவிட்டு அமர்ந்திருந்தான்.

மானுடனின் அனைத்து தெய்வங்களும் மானுடனால் உருவாக்கப்பட்டவை என்பதே வேதச்சொல். நற்செயல்கள் நெறியென ஆற்றப்படுகையில் வேள்விகளாகின்றன. வேள்வியால் தேவர்கள் உருவாகிறார்கள். அவிகொண்டு ஆற்றல் பெறுகிறார்கள். தேவர்களால் தெய்வங்கள் விண்ணில் நிறுத்தப்படுகின்றன. மண்ணில் வேள்வி அழியும்போது தெய்வங்கள் நீர்பெறாத செடிகள் என வாடிக் கருகி அழிகின்றன.

ஆகவேதான் நீங்கள் தெய்வங்களை கைவிடாதிருங்கள், உங்களை தெய்வங்கள் கைவிடாதிருக்கட்டும் என்கின்றன வேதங்கள். தெய்வங்களைக் கைவிடும் குடிகள் தங்களை அழித்துக்கொள்கின்றன. தெய்வங்கள் மானுடனால் ஆற்றல்பெற்று மானுடனை ஆள்கின்றன. அரசன் வரிகொண்டு குடிகளை ஆள்வதுபோல.

கடுவெளியும் காலமும், பொருளும் ஆற்றலும், இன்மையும் இருப்பும் முடிவிலியும் இரண்டிலியும் ஆன அது எதற்கும் விடையல்ல. அது எதையும் ஆற்றுவதில்லை. அது எதற்கும் பொறுப்பல்ல. மானுடவினாக்களுக்கு மானுட தெய்வங்களே விடைகள். மானுடரை மானுட தெய்வங்களே ஆக்கி புரந்து அழிக்கின்றன. அவையே மானுடனுக்கு பொறுப்பேற்கின்றன.

நோக்கிலாததன் நோக்கே தெய்வங்கள். அளியற்றதன் அளி. அலகிலாததன் அறிவடிவு. முடிவிலாததன் கருத்துரு. தெய்வங்களால் ஆளப்படுகின்றது புடவி. எறும்பும் ஈயும் புழுவும் பறவையும் தங்கள் வேள்விகளால் தங்களுக்குரிய தெய்வங்களை சமைக்கின்றன. தங்கள் தெய்வங்களால் படைத்துக் காத்து அழிக்கப்படுகின்றன.

நேர்கொண்ட பார்வையில் தொகுத்து முன்சென்று இதை அறியவியலாது. ஊசலென ஆடி, முரண்கொண்டு திரும்பி அறியவேண்டியது இது. சொல்லடுக்கை கற்பனையால், அறிவை ஊழ்கத்தால், தெளிவை பித்தால் நிரப்பிக்கொண்டு சென்றடையவேண்டியது. கருத்தென அல்ல புதிரென அறியப்படவேண்டியது. அறிந்தவற்றை அறியாமையால், கூர்மையை பேதைமையால் எழுப்பாதவன் இதை உணரமுடியாது.

இந்த முரணே ராஜவித்யை எனப்படுகிறது. அறிதற்கரிதென்பதனால் ராஜகுஹ்யம் எனப்படுகிறது. இது தூய்மையளிப்பதில் மாண்புடையது. கண்முன் என காண்பதற்குரியது. அறத்துக்கு இயைந்தது. இயற்றுதற்கெளியது. அழிவற்றது.

அறியா நுண்மையாய் அது இவ்வுலகை தாங்கியிருக்கிறது. அதிலமைகின்றன ஐம்பெரும் பருக்களும். ஆனால் முற்றிலும் கடந்துறைகிறது அது. பருவெளியை ஆக்கி பருப்பொருட்களின் நெறிகளுக்கே அவற்றை அளித்து தான் அப்பாலிருக்கிறது.

முதலியற்கையின் மூவியல்புகளின் முடிவிலா நிகராடலுக்கு விடப்பட்டுள்ளன அனைத்தும். நிகர்கொண்டு, நிகரழிந்து, புணர்ந்து, பிரிந்து, திரிந்து, திரண்டு, எழுந்து, அமைந்து, குவிந்து, பரந்து இங்கு பருப்பொருள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீரலைகள் மேல், துளிகள் மேல், துமிகள் மேல் விண்கதிரோன் என அது பருப்பொருளில்  தன்னை நிகழ்த்தி விளையாடுகிறது.

இப்பருவெளியை ஆள்வது பருப்பொருள் தன்னுள் கொண்ட நெறியே. பருப்பொருள் என்பது அந்நெறியின் பொருள்விளக்கம். அந்நெறி அப்பொருளின் கருத்துறைவு. உலகியலின் நெறிகள் உலகை ஆள்கின்றன. உலகியல் நெறிகளை அந்நெறிகளுக்குரிய தெய்வங்கள் ஆள்கின்றன. நெறிபுரப்போரால் அவை அவியிட்டு வளர்க்கப்படுகின்றன.

அனைத்துக்கும் அப்பாலிருக்கும் அதுவே அனைத்துக்கும் முதல் விசை. அதுவே முதல் விதை. அதுவே வயல். அதுவே விளை. அதுவே களை. அதுவே பசி. அதுவே உடல். அதுவே உயிர். ஆயினும் முற்றிலும் அகன்றது. வேள்வி அது. எரிகொடை அது. எரியும் அது. நுண்சொல்லும் அதுவே. உடல் அது. நோய் அது. மருந்து அது. நெய்யும் அனலும் அதுவே. அதுவே ஒளி. ஒளியிருள் என்றிலாததும் அதுவே.

யோகத்திலமைந்தவர் அதை ஒன்றென உணர்கிறார்கள். ஞானத்தில் செல்பவர்கள் அதை பலவென அறிகிறார்கள். செயலில் இருப்பவர் அதை செயல்தருணங்களில் காண்கிறார்கள்.

கவிதையெனும் சோம மது உண்டவர்கள், அரசமைந்து பழிகள் அகன்றோர், வேதமறிந்தோர் எனும் மூன்று தரப்பினர் தங்களுக்குரிய வேள்விகளால் அதை வேட்டு விண்ணுலகு கொள்கிறார்கள். இந்திரநிலை அடைந்து அமைகிறார்கள். விண்ணின்பம் நிறைந்தவுடன் அழிவுடைய மண்ணுலகுக்கே மீள்கிறார்கள். விழைவுகொண்டவர் விழைவிலேயே உழல்வதே நெறி. அவர்களின் தெய்வங்கள் அவர்களை காக்கின்றன, வழிநடத்துகின்றன.

தேவரை வேட்போர் தேவரை எய்துவர். மூதாதையரை நோற்பவர் தென்புலத்தை வெல்வர். பருவுலகை தொழுவோர் செல்வங்களை அடைவார்கள். அதை மட்டுமே நாடுவோர் அதை அடைவார்கள். மங்கலம் மங்கலமின்மை கொண்ட இருபால் பயன்களைத் தருவனவாகிய செயற்சுழலிலிருந்து அவர்களே விடுபடுகிறார்கள்.

wild-west-clipart-rodeo-31இளைய யாதவரின் சொல்கேட்டு திகைத்து அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் மீண்டும் தன்னை திரட்டிக்கொண்டு கேட்டார் “யாதவனே, சொல்க! வரவிருக்கும் இப்பேரழிவால் நீ துயருறவில்லையா?” இளைய யாதவர் புன்னகையுடன் “இல்லை, நானே கொல்கிறேன்” என்றார். “அவர்கள் மேல் அளிகொள்ளவில்லையா நீ?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “எவர்மீது எவர் அளிகொள்வது?” என்றார் இளைய யாதவர். “இறப்பதும் நானே.”

“எளிய மானுடர் அவர்கள். வாழப்பிறந்தவர்” என யுதிஷ்டிரர் குரல் அடைக்க சொன்னார். நெஞ்சு நெகிழ விழிநீர் வடித்தபடி “மைந்தர், தந்தையர், உடன்பிறந்தார்…” என்றார். “என் நெஞ்சு தாளவில்லை. எதன்பொருட்டு என்ன பொருள் என என் உள்ளம் ஏங்கித் தவிக்கிறது.” “பொருளறிந்தால் துயர் மீள்வீரா, யுதிஷ்டிரரே?” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்றார் யுதிஷ்டிரர்.

“மெய்மை நான்கு வகை துயர்களுக்கு மாற்று என்கின்றன நூல்கள். தெய்வம், பொருள், மானுடர் என்னும் மூன்று வகையில் எழும் உலகத்துயர் அனைவருக்கும் உரியது. இருத்தலை எண்ணும் எளியோன் நிலையாமை கண்டு துயர்கொள்கிறான். அறிஞன் அறியமுடியாமையின் துயரை அடைகிறான். இருமையின் துயர் அடைகிறான் ஞானி.”

“நீங்கள் கொண்டிருப்பது எளியோரின் துயர். அதை நீக்கினால் அறிஞனுக்குரிய துயரையே சென்றடைவீர்கள். யுதிஷ்டிரரே, இங்கிருக்கையில் துயரிலிருந்து துயருக்கே சென்றடைய முடியும். முற்றிலும் துயரற்றவன் இருமை கடந்தவன் மட்டுமே.”

“நான் கோருவது என் துயரை நீக்குவதற்காக அல்ல. இங்கு நிகழும் இப்பேரழிவு என்னும் துயரை நீக்கும்பொருட்டே” என்றார் யுதிஷ்டிரர். “அதன் பொறுப்பை என்னிடமிருந்து அகற்றும் மெய்மை எது என்று மட்டுமே.”

“இவ்வொரு பயணத்தில் வழிநடந்தபோது நீங்கள் பன்னீராயிரம் சிற்றுயிர்களை மிதித்துக் கொன்றீர், யுதிஷ்டிரரே” என்றார் இளைய யாதவர். சினம் கொண்ட யுதிஷ்டிரர் “என்னிடம் அணிச்சொல்லெடுக்க வேண்டாம். நான் மானுடரைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்றார். “உயிர்களில் வேறுபாடு நோக்கும் ஒரு தெய்வத்திடம் எதை கோருகிறீர், தர்மரே?” என்றார் இளைய யாதவர்.

மறுமொழி சொல்லாமல் தலையை அசைத்த யுதிஷ்டிரர் “என் நாவை அடக்குதல் எளிது. கண்ணெதிரே அழிவு நிகழ்கையில் அறிவுக்கு மட்டுமே உகக்கும் கொள்கை பேசி அமர்ந்திருத்தல் அதனினும் எளிது” என்றார். “அரசன் என, தந்தை என நான் உனது விழிநோக்கி கேட்பது இதுவே, அறமென கனியாத மெய்மையால் என்ன பயன்?”

“இமயத்தால் என்ன பயன்?” என்று இளைய யாதவர் கேட்டார். “அம்மியென சமைந்தால் அடுமனைக்காகும். தூணென்று நின்றால் கூரையைத் தாங்கும். சிலையென ஆனால் தெய்வமேயாகும். வடதிசை எழுந்தது தேவதாத்மா என்று முனிவரால் வணங்கப்படுவதோ வெறுமனே வான்தொட்டு நின்றிருப்பதனால்.”

யுதிஷ்டிரர் திகைத்து நோக்க இளைய யாதவர் தொடர்ந்தார் “அறிக, ஆயிரம் பல்லாயிரம் கோடி அம்மிகளும் தூண்களும் தெய்வச்சிலைகளுமாக உருமாறிக்கொண்டே இருக்கையிலும் முகில்சூடி நின்றிருக்கும் இமயமே அனைத்துக் கற்களுக்கும் பொருள் அளிக்கிறது. அனைத்துக் கல்லும் இமயமே என்று உணர்ந்தவனே கல்லை அறிகிறான்.”

“விழிதூக்கி நோக்கி இமயத்தைப் பார்க்கையில் புலன்தொட்டறியும் பிரம்மம் என்று உளமெழாதவர் பாரதவர்ஷத்தில் எவர்?” என்றார் இளைய யாதவர். “கல் தேவையென்றால் கல்லை எடுங்கள். மலை தேவையென்றால் மலை கொள்க! கல்லும் மலையே என்று உணர்வதே யோகம்.”

யுதிஷ்டிரர் “அளியின்மை… அதை ஆயிரம்கோடி சொற்களைக் கொண்டும் எவரும் மறைத்துவிட முடியாது” என்றார். பின்னர் எழுந்துகொண்டு “போதும், இந்தத் தத்துவங்களன்றி எதையும் நீ என்னிடம் சொல்லிவிடமுடியாதென்று உணர்கிறேன். நான் கிளம்புகிறேன்” என்றார். “நான் எவரையும் அருகழைப்பதில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். உடனே “ஆனால் தூண்டிலிட்டு அமர்ந்திருக்கிறேன்” என உரக்க நகைத்தார்.

புரிந்துகொள்ளா விழிகளுடன் நோக்கிய யுதிஷ்டிரர் “நான் விடைகொள்கிறேன், யாதவனே” என தன் மேலாடையை சீரமைத்தார். இளைய யாதவர் எழுந்து நின்று “நன்று யுதிஷ்டிரரே, நற்சொற்களை உரைக்கும் வாய்ப்பு அளித்தீர்கள்” என்றார்.



நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் குடில்முற்றத்திற்கு மீண்டு வந்ததுமே யுதிஷ்டிரர் உரத்த குரலில் “எனக்கு ஐயமென ஏதுமில்லை, இத்தெளிவை நான் எப்போதும் அடைந்ததில்லை. யாதவனே, இந்தக் கசப்பு நிறைந்த கனவின்பொருட்டு நான் உனக்கு நன்றியுடையவன்” என்றார். “இங்கு அறமென்றும் நெறியென்றும் மாறாத ஏதுமில்லை. அவையனைத்தும் மானுட உருவாக்கங்களே. அவரவர் இலக்குக்கும் இயல்புக்கும் ஏற்ப கண்டடைவன. அந்தந்த சூழலுக்கேற்ப விளைவன. ஆற்றலுக்கேற்ப நிலைகொள்வன” என்றார்.

“கணமொரு அறம். தருணத்திற்கு ஒன்று. உள்ளத்திற்கு ஏற்ப. இங்கு ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருப்பது அறங்களின் மோதல். நாம் கொண்டுள்ள அறம் எதுவோ அதன்பொருட்டு நிற்பதும் களமாடுவதும் வெல்வதும் மடிவதுமே நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. என் வழியின்மேல் ஐயம்கொண்டேன், என் எதிரிமேல் கனிவென்று வெளிப்பட்டது அதுவே. ஐயமில்லாது ஆற்றப்படும் அறமே வெல்கிறது. வெல்லும் அறமே அறமென்று நிலைகொள்கிறது. இப்புவியில் வெல்லும் அறம் தோற்கும் அறம் என இரண்டே உள்ளன.”

“அரசன் என்று நான் என் குடியை, என் நாட்டை, என் கொடிவழியினரை காக்கும் பொறுப்பு மட்டும் கொண்டவன். உலகுக்குப் பொறுப்பென என்னை எண்ணிக்கொண்டதே என் பிழை. இவ்வுலகின் கோடானுகோடி அறங்களை எத்தனை தவம் செய்தாலும் நம்மால் எண்ண முடியாது. ஒரு தருணத்தின் அறங்களை எண்ணி வகுக்கக்கூட எவராலும் இயலாது” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.

“மாறாத பொதுஅறம் ஒன்றைச் சார்ந்துள்ளது இப்புவிச்செயல் என நம்பியதே என் பிழை. அறிந்தோ அறியாமலோ ஒவ்வொருவரும் அதிலேயே அமைந்துள்ளனர் என்று எண்ணினேன். என்னுள் அமைந்த அவ்வறத்தைக்கொண்டு பிறருள் அமைந்த அவ்வறத்தை நோக்கி பேசமுடியும் என கனவுகண்டேன். அது வெற்றாணவம் என்று அறிந்தேன். யாதவனே, ஓர் அறம் பிறிதொன்றை எவ்வகையிலும் விழிநோக்கி அறிவதில்லை.”

“கல்லுடன் கல் மோதுவதுபோல அறங்கள் மோதிக்கொள்கின்றன” என்றார் யுதிஷ்டிரர். “அங்கே நெகிழ்வுக்கே இடமில்லை. அனைத்துச் சொல்லமர்வுகளும் உளம்பகிர்தல்களும் அறங்களை மூடியிருக்கும் அந்தந்தத் தருணத்து உணர்வுகளை அகற்றி உள்ளிருக்கும் மெய்யான அறத்தை மட்டும் வெளியே எடுப்பதற்காகவே. அனைத்தும் விலகிக்கொண்டபின் இரு அறங்கள் மட்டுமே எதிரெதிர் நின்றிருக்கின்றன. ஒன்று வெல்லும். இன்னொன்று முற்றழியும். வெல்வது வரும்காலத்தில் தானே அறமென்று ஓங்கி நிலைகொள்ளும்.”

“நான் நம்புவதே மெய்யறம் என்று நம்பியதே என் பிழை” என்று யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “ஆகவே பிற அறங்கள் பிழையென்று கருதினேன். என் அறத்துக்கு தெய்வங்கள் துணைநிற்குமென்றும் பிறவற்றை அவை கைவிடுமென்றும் கற்பனை செய்தேன். என் நிலை அறமென்பதனால் அது இரும்பு செடிகளை என பிறவற்றை அரிந்து செல்லும் என்று தருக்கினேன். என் உள்ளத்தால் எதிரறங்களை எல்லாம் சிறுமைசெய்தேன். பழித்தேன். ஆகவேதான் அவற்றை திருத்த முயன்றேன். நான் பேச்சென்றும் உளம்பகிர்தலென்றும் சொன்னதெல்லாம் பிற அறங்களை சிறுமைசெய்தல் மட்டுமே.”

“இன்று தெளிந்தேன். முதலியற்கை மூவியல்புகளின் நிகரழிய நிலைகுலைந்து நிலைமீண்டு தன்னை நிகழ்த்திச் செல்லும் இப்பயணத்தின் ஒவ்வொரு தருணமும் பலநூறு அறங்களின் முடிச்சுப்புள்ளி என்று. எனக்கு ஆணையிடப்பட்டதை ஆற்றுவதற்கு அப்பால் நான் நோக்கவேண்டியது பிறிதில்லை” என்று சொல்லி யுதிஷ்டிரர் நீள்மூச்செறிந்தார். “நன்று யாதவனே, நான் நிறைவடைந்தேன்” என்றார்.

“பாண்டவரே, ஒவ்வொரு உயிரும் தன் தனியறத்தின்பொருட்டு போராடுகையில் அனைத்துக்கும் உரிய பொது அறத்தைப் பேணுபவர் எவர்?” என்றார் இளைய யாதவர். “குடித்தலைவர் ஒவ்வொருவரும் தங்கள் குடியறங்களை ஓம்புகையில் அவர்களின் பொது அறத்தைப் பேணிநிற்கின்றது அரசனின் கோல். இங்கு வாழும் அனைத்துயிர்கள் மீதும், இப்புடவியின் அனைத்துப் பொருட்கள்மீதும் நிலைகொள்வது எந்தச் செங்கோல்? எது கடுவெளிப்பெருக்கின் அறங்களின் முடிவிலியை ஆள்கிறது?”

யுதிஷ்டிரர் திகைத்தவர்போல் கை எழுந்து அசைவிழந்து காற்றில் நிலைக்க சொல்லிலாது நின்றார். “அவ்வண்ணம் ஒன்று இருக்குமென்றால் அது இங்கிருக்கும் ஒவ்வொரு துளியிலும் வெளிப்பட்டாகவேண்டும் அல்லவா? அதற்கும் உங்கள் தனியறத்துக்கும் என்ன உறவு? நீங்கள் உங்கள் கடமையால், விழைவால் கொள்ளும் அறம் அந்த அறத்துடன் போரிடுமென்றால் என்ன செய்வீர்கள்? ஒவ்வொரு கணத்திலும் ஒன்றுடன் ஒன்று மோதும் அறங்களில் எது அப்பேரறத்தின் முகம்?”

யுதிஷ்டிரரின் கை கீழே சரிந்தது. அவர் இருளை திரும்பிபார்த்தார். “பேரறம் என்று ஒன்று இல்லையேல் எந்த அறத்திற்கும் பொருளில்லை. இவையனைத்தும் முட்டிமோதித் திரண்டெழும் ஒரு மையமில்லையேல் இங்கு நிகழ்வது அழிவென்றே பொருள்” என்றார் இளைய யாதவர். “இப்புடவி இங்கிருப்பதே இது அழிவை நோக்கி செல்லவில்லை என்பதற்கான சான்று. இது வாழ்வதே இது ஆளப்படுகிறது என்பதை காட்டுகிறது.”

ஆள்வது ஒன்று உண்டு. அனைத்தும் அதிலிருந்து எழுகின்றன. மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும், துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும் இங்ஙனம் பலமிடும் இயல்புகளெல்லாம் அதனிடமிருந்தே உயிர்கள் அடைகின்றன.

வஞ்சகரின் சூது, ஒளியுடையோரின் ஒளி, ஆள்வோரிடத்தே கோல், வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி, மறைமெய்களில் அது அமைதி. ஞானமுடையோரிடத்தே ஞானம். உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா அது. அவ்வுயிர்களின் முதல் அது. இடையும் அவற்றின் இறுதியும் அதுவே.

அதன் வழிகள் அறியமுடியாதவை. அறியமுடிவது ஒன்றே, அது இங்கே இதை நிகழ்த்துகிறது. இது நிகழவேண்டுமென விழைகிறது. இதில் திகழ எண்ணுகிறது. ஒவ்வொரு துளியிலும் தன் முழுமை திரளும்படி செய்கிறது. விரியும் மலரிலும் வாடும் மலரிலும் அழிவிலாத வண்ணமென நிறைகிறது.

பாண்டவரே, படைப்பழிவினூடாக, நன்மைதீமைகளினூடாக, இருளொளியினூடாக அதன் விழைவெனத் திரண்டு வருவது பொலிக என்னும் செய்தியே. விளங்குக, வாழ்க, வெல்க என்பதே அதன் சொல். இப்புவி ஒவ்வொருநாளும் கதிரெழுகையில் பொலிந்து விரிகிறதென்பதே அதற்குச் சான்று. இங்கு விதைகள் முளைப்பதே அதற்கு உறுதி.

ஒவ்வொரு அணுவிலும் திகழும் அச்செய்திக்கு எதிரான எதுவும் தீமையே. அதனுடன் ஒவ்வாத அனைத்தும் மாசே. எதன்பொருட்டென்றாலும் அழிவை நோக்கும் அனைத்தும் பிழையே. மண்கட்டிகளை பெருநதி என அதன் ஆணை அவற்றை அழித்து பெருகிச்செல்கிறது.

தான் என எழுபவரே அம்முழுமையின் செய்திக்கு எதிர்நிற்கிறார்கள். எழுபவர் வீழ்வர். கொள்ள எழுவோர் விட்டு விலகுவர். வெல்வது தானென்போர் வீழ்ச்சியில் தன்னை அறிவர். பாண்டவரே, முரண்படுபவர் முற்றழிவார்கள்.

தானென்பதை விட்டவர் அதில் அமைகிறார். இவையென்றும் இவ்வாறென்றும் நிற்பதில் தன்னையும் உணர்பவர் அந்த முழுமையை அறிகிறார். அவர் நெஞ்சில் வாழ்க என்ற எண்ணமே வாழும். அவர் வாயில் நா எரிகுளத்தில் வேள்வித்தீ என தழல்கொண்டிருக்கும்.

உயிர்க்குலத்தை வாழ்த்துக! புவிப்பெருக்கை வாழ்த்துக! நீரை காற்றை ஒளியை வானை வாழ்த்துக! வாழ்த்தப்படும் அனைத்தும் அதுவே. வணங்கப்படும் அதுவும் அதுவே. வாழ்த்துபவன் வாழ்த்தப்படுகிறான். நலம் நாடுபவன் நிறைவடைகிறான்.

பொலிக பொலிக என உளமெழாத எந்த எண்ணமும் பழிசேர்ப்பதே. பொலிக என கொள்ளுங்கள். பொலிக என அளியுங்கள். பொலிக என வெல்லுங்கள். பொலிக என அடிபணியுங்கள். பொலிக என வாழுங்கள். பொலிக என்றே மடியுங்கள்.

முழுமையில் நின்று நோக்குபவரிடம் அது சொல்கிறது இணைந்த நலன் என்னால் பேணப்படுகிறது என. அதை அறிந்த யோகிகள் எங்கிருந்தாலும் நிறைநிலை கொள்கிறார்கள். எதுவரினும் மகிழ்கிறார்கள்.

English Meaning - As I taught a kid - Rajesh
Fearlessness / Courage, Genorosity / Chairty, In-depth knowledge,   Perseverance / Tenacity are the four qualities (required in abundance), without dipping, are a leader/king’s necessary qualities. In general required for everyone to display leadership in their path of life. Fearlessness is very important because when in fear we are in stagnated and afraid to take steps so we run away from problems. Fear leads to inaction. Hence, fearlessness is necessary for action (or work to be done). Fear can be overcome by knowledge and action. (Being courageous to admit (and apologize for) mistakes is essential to learn from mistakes and take next steps). Knowledge is essential for clarity on what we have to do. Perseverance is necessary to consistently do a work despite facing challenges. Generosity is necessary for contribution to the society which is the ultimate purpose

Questions that I ask to the kid
What are the four qualities essential for a leader or king?
Why is fearlessness the first thing required in a leader? (Fear leads to inaction)