குறள் 504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
[பொருட்பால், அரசியல்,தெரிந்துதெளிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள்; காப்பியத்தைச் சிறப்பிக்கும் செறிவு, தெளிவு முதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு.
நாடிக் - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.
குற்றமும் - குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு
நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.
அவற்றுள் - அதனுள்
மிகை - மிகுதி; சிறந்தபொருள்; மேன்மை; பெருமை; தேவையற்றது; வேண்டுமளவின்மிக்கதென்னுங்குற்றம்; மிகுதிப்பொருள்; அதிகப்படியானது; செருக்கு; தீச்செயல்; தவறு; தண்டனை; வேதனைசெய்கை; வருத்தம்; துன்பம்; கேடு.
நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல்.
மிக்க -மிகுந்த; உயர்ந்த.
கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.
முழுப்பொருள்
ஆங்கிலத்தில் Pros and Cons அல்லது Strength and Weakness or SWOT analysis என்று பலவகைகளில் ஒன்றின் சாதகபாதகங்களை அலசுவார்கள். அதனை வள்ளுவர் தத்துவார்த்தமாகவும் கூறியுள்ளார். வாழ்வில் எதுவாக ஆயினும் முதலில் அதனின் குணத்தை, இயல்பை, வலிமையை, மேன்மையை பார். நாம் ஒரு ஆக்கப்பூர்வமான மனிதன் எல்லாம் நன்மையே என்று அறிவற்று இருப்பது தவறு. ஆதலால் அதனின் குற்றங்களை, பிழைகளை, குறைகளை, குறை நடக்கக்கூடிய சந்தர்பங்களை எல்லாம் ஆராயவேண்டும்.
இப்படி ஒன்றின் குணங்களும் குற்றங்களும் கிடைத்தப்பிறகு அவற்று மிகுதியாக உள்ள குணங்களை நம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும். குற்றங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது. அவற்றை பற்றி அறிவு இருந்தால் போதுமானது. பின்பு நம்மை தற்காத்துக்கொள்ளலாம்.
செயல் என்று வந்தால் அச்செயலை செய்தால் நலம், தீமை எவ்வளவு ? எத்தனை பேருக்கு ? எவ்வளவு காலத்திற்கு ? செய்யாவிட்டால் நலம் தீமை எவ்வளவு ? எத்தனை பேருக்கு ? எவ்வளவு காலத்திற்கு ? என்று ஆராய்ந்து கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். அச்செயலைச் செய்வதாலோ அல்லது செய்யாமல் விட்டு விட்டாலோ, நலம் மிகுதியாக இருந்தால், பலருக்கு நலமாய் இருந்தால் அதையே தேர்ந்தெடுத்து செயல் புரிய வேண்டும் எனத் தெளிவு படுத்துகிறார்
நாம் இங்கே காணவேண்டியது
1) குணத்தை, மேன்மையை முதலில் காண வேண்டும்
2) நல்லதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும்
இவ்விரண்டையும் நாம் வாழ்வில் பல சந்தர்பங்களில் ஏமாற்றம் இல்லாமல், துன்பம் இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் நம்மில் பலருக்கு இருப்பது கண்ணுக்கு தெரியவே தெரியாது. இல்லாதது தான் கண்ணுக்குத் தெரியும். இல்லாததை நினைத்தே ஏங்குவோம். உறவுகளில் நல்லதை பாராட்டுவதில்லை. ஆனால் குற்றங்களை அடுக்கிக்கொண்டே இருப்போம்.
அரை கிளாஸ் டம்பர் முழுமை என்று சொல்வது அரை கிளாஸ் காலி என்று சொல்வதை விட மேல்.
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
இது தெரிந்து தெளிதல் எனும் அதிகாரத்தில் 504-வது பாடல்.
உலக வாழ்விலே மனிதன் பெறும் அனுபவங்களால் அறிவு அதன் முழுமையை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கிறது. இறையுணர்வும், அறவுணர்வும் அவ்வறிவில் ஊற்றாக்ப் பெருக்கமடைகின்றன.
தனக்கும் பிறருக்கும் தற்காலத்திலும் பிற்காலத்திலும் துன்பம் எழாத விழிப்போடு, தனது எண்ணங்களையும், செயல்களையும் முறைப்படுத்திக் கொள்வதே, ஒழுக்கம் ஆகும். இத்தகைய ஒழுக்க உணர்வு மீறிய ஒருவருக்கு, சில சமயம் சிந்தனைக்குச் சிக்கல் ஏற்படுகிறது.
ஒரு செயலைச் செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது. அதனைச் செய்தால் சிலருக்கு நலமும், பலருக்குத் தீங்கும் உண்டாவதோ, சிலருக்குத் தீங்கும், பலருக்கு நலமும் உண்டாவதோ உணர்கிறான்.
ஒரு செயலைச் செய்யாது விடுத்தாலும் அதே போல நலம் சிறிதும், தீமை பெரிதும் அல்லது நலம் பெரிதும், தீமை சிறிதும் எழும் என்பதையும் உணர்கிறான்; இந்த இடத்தில் சிந்தனை குழப்பமடைகிறது. அந்தச் செயலைச் செய்வதா அல்லது செய்யாமலிருப்பதா என முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறான். இந்த மனநிலையில் இருந்து விடுபட்டு, விளக்கம் பெற்று சரியான செயலை அல்லது முறையைப் பின்பற்ற ஒரு வழியை வள்ளுவர் காட்டுகிறார்.
"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்."
என்று ஒரு குறிப்பிட்ட நிலைமையில் ஒரு செயல் செய்தாலும் சிலருக்கு நலமும், சிலருக்குத் தீங்கும் உண்டாகும். செய்யாவிட்டாலும் சிலருக்கு நலமும், சிலருக்குத் தீங்கும் உண்டாகும் என்று கொண்டு திகைப்பு ஏற்பட்டால் ஒரு கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும்.
செய்தால் நலம், தீமை எவ்வளவு ? எத்தனை பேருக்கு ? எவ்வளவு காலத்திற்கு ? செய்யாவிட்டால் நலம் தீமை எவ்வளவு ? எத்தனை பேருக்கு ? எவ்வளவு காலத்திற்கு ? என்று ஆராய்ந்து கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். அச்செயலைச் செய்வதாலோ அல்லது செய்யாமல் விட்டு விட்டாலோ, நலம் மிகுதியாக இருந்தால், பலருக்கு நலமாய் இருந்தால் அதையே தேர்ந்தெடுத்து செயல் புரிய வேண்டும் எனத் தெளிவு படுத்துகிறார்.
ஓர் அணைக்கட்டு கட்ட வேண்டியபோது, சில குடும்பங்கள் வீடுகளை இழக்க வேண்டியுள்ளது. 300 குடியான வர்களுக்குத் துன்பம்தான்; ஆனால், அணைக்கட்டினால் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு நீர் கிடைக்கிறது; பயிர் செய்வதற்கும் நாள்தோறும் வாழ்க்கைத் தேவைக்கும் நீர் உதவுகிறது; இந்த நிலைமையில் அணைக்கட்டுவதா ? கட்டாமல் விடுவதா என்று முடிவு எடுக்கச் சிந்திக்கும் போது, அணைக்கட்டுவதுதான் சிறந்ததாக முடிவு எடுக்க வேண்டும். வீடு இழந்த 300 குடும்பங்களுக்கும், நீரால் நலம் பெறும் ஒரு இலட்சம் குடும்பங்கள் அல்லது அக்குடும்பங்கள் சார்பில் அரசு நட்ட ஈடு கொடுத்து, ஆறுதல் அளிக்க முடியுமல்லவா ? ஆகவே இன்பம், துன்பம் என்ற விளைவுகளின் ஆழம், இவற்றைப் பெறும் மக்கள் எண்ணிக்கை, நலம் தீது நீடிக்கும் காலம் இவற்றைக் கணித்து, விரிந்த நோக்கில் முடிவு செய்து, செயல்படுத்த வேண்டும்.
விளைவறிந்த விழிப்பில் விரிந்து ஆராயும் அறிவோடு நலம் தீது அவற்றின் மிகுதி இவையுணர்ந்து முடிவெடுத்து, செயல் புரியவேண்டும் என விளக்குகிறது இக்கவி.
மேலும்
எப்போதுமே ஒரு செயல் நிகழ்ந்தால் அதில் நன்மை தீமை என இரண்டும் இருக்கும். நாம் எதை எடுத்துக்கொள்கிறோம் என்பதிலே நம் இன்பம் இருக்கும். அதுபோலவே நாம் புரிந்துகொள்ளும் விதமே அனைத்திற்கும் உதவும்.
மேலும்: அஷோக்
மேலும் - எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் சில வரிகள்
குணங்களுடனும் குறைகளுடனும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.உயர்வின் மிகப்பெரிய வீச்சும் தாழ்வின் மிக மோசமான குறுகலும் ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிக்க முடியாதவாறு வாழ்வில் விரவிக் கிடக்கின்றன.
வாழ்க்கையை ஆழ அறிந்து அதனுடன் உறவு வைத்துக் கொள்வதே நேசம். இந்த நேசத்தை உருவாக்குவதே இலக்கியம். இந்த நேசத்தின் அடிப்படையில் தான் வாழ்க்கையை மாற்றவும் முடியும்.
-சு.ரா.
கவிஞர் எழுத்தாளர் வண்ணதாசனின் கவிதை ஒன்று
இது என்னுடைய நிழல்தான்
தெரியும்.
ஆனால்
அது என்னுடைய வெளிச்சம்
இல்லையே
-- வண்ணதாசன்
கன்னட எழுத்தாளர் சிவராம காரந்த் அவர்களின் “அழிந்த பிறகு...” நாவலில் (தமிழில்: சித்தலிங்கையா) இப்படி சில வரிகள் வருகிறது.
”குளிர், காற்று, மழை ஆகியவற்றுக்குப் பயந்து நடுங்கிக் கீழே விழுந்த கிளிக்குஞ்சைக் கொண்டுவந்து வளர்த்தேன். கிளிக்குஞ்சு அழகானது என்ற எண்ணத்திலேயே நான் அதனைக் கொண்டுவந்திருக்கவேண்டும். அது செத்துப் போய்விடுமோ என்ற எண்ணம் வந்தாலே மிகவும் துன்பமாய் இருந்தது. நல்லவேளையாக அது பிழைத்துக் கொண்டது. முன்னைப்போலவே ஆகியது. பேச்சு கற்றுக்கொண்டது. நான் சொன்னதை யெல்லாம் தணிந்த குரலில் திருப்பிக் கூறியது. கிளிக்குப் பேச்சு வருமா? பொருள் தெரியாவிட்டாலும் திருப்பிக் கூறும் குணம் அதனுடையது. அதற்கு என்மேல் அன்பில்லையா? கூண்டிலேயே விட்டால் கீச்சிடுகிறது. வெளியே விட்டால் பறந்து வந்து கைமேலும், தோள்மேலும் உட்கார்ந்து கொள்கிறது. தன்னுடைய மகிழ்ச்சிக்காகக் கூவி இறக்கையை அடித்துக் கொள்கிறது. பிடிக்கப் போனால் கையைக் கடிக்கிறது. நான் கோபம் கொண்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தால் அதுவும் அதற்குத் தெரிகிறது. அந்த நேரத்தில் தோளின்மேல் ஏறி என் கன்னத்தைத் தன் அலகால் தடவிக் கொடுக்கிறது. அப்போது அதை எடுத்துக் கூண்டில் விடுகிறேன். நல்ல குணம், கெட்ட குணம் இரண்டுமே அந்தக் கிளியிடம் இருக்கின்றன. அதுவும் ஓர் உயிரே. பிழைத்திருக்கும் காலம் வரை என்னிடமே வாழட்டும்.”
மேற்கண்டவற்றை அவர் தாதாவைப்பற்றியே தமது நாட்குறிப்பில் எழுதியிருக்கவேண்டும். இவைகளுக்கு வேறு பொருள் தெரியவில்லை. தீமையும், நன்மையும் சேர்ந்தவனே மனிதன். மனித சமூகத்தில் வாழ்ந்திருக்கும் வரையில் மனிதனுக்கு மனிதன் உறவு. நம்முடைய தன்னலத்திற்காக, சலிப்பைப் போக்குவதற்காக மற்றவர்கள் தேவைப்படுகிறார்கள். நாம் தனி வாழ்க்கை நடத்துவது இயலாது என்பதற்காகவாவது ஒருவன் மற்றொருவனுக்கு நண்பனாக அமைகிறான். தன்னந்தனியாக இருந்து, மக்களுடைய தொடர்பு இல்லாமலேயே வாழ்ந்து, நடுத்தெருவில் வீழ்ந்து சாவதற்கு யாராவது விரும்புவார்களா?
......
......
யசவந்தருக்கு மனித இயல்பு தெரியவில்லை; அதிலும் தாதாவின் இயல்பு தெரியவில்லை என்று நான் எப்படிச் சொல்லமுடியும்? நன்றாகத் தெரிந்துகொண்ட அவர் அவனைப் பிழைக்கவித்தார்; வளர்த்தார்; வலிமையுடையனாக்கினார். ஏன் என்றால் அவரே சொன்னதுபோல் மனிதனுக்கு மற்றொரு மனிதன் தேவை. இடம்-வலம், கறுப்பு-வெளுப்பு, சுத்தம்-அசுத்தம் இவையெல்லாம் உண்மையல்ல. மனிதனின் சீலம் குன்றி, கெட்டவற்றோடு கலந்திருக்கிறது. ஒன்றைவிட்டு மற்றொன்றைத் தேர்ந்தெடுக்கையில் மனிதன் என்னும் பொருளே மிஞ்சாது. தன்னை ஒழித்துக் தீமையை எடைபோட வல்லவனுக்கு அப்படித்தோன்றும், தன்னைவிட்டு உலகத்தை அளக்கப் புறப்பட்டவனுக்கு உலகெல்லாம் கருப்பு-வெளுப்பு என்று மாறுபட்ட நிறங்களாகிப் பிரித்துப்பார்க்க இயலும்.
யசவந்தருக்கு மனித இயல்பு தெரியவில்லை; அதிலும் தாதாவின் இயல்பு தெரியவில்லை என்று நான் எப்படிச் சொல்லமுடியும்? நன்றாகத் தெரிந்துகொண்ட அவர் அவனைப் பிழைக்கவித்தார்; வளர்த்தார்; வலிமையுடையனாக்கினார். ஏன் என்றால் அவரே சொன்னதுபோல் மனிதனுக்கு மற்றொரு மனிதன் தேவை. இடம்-வலம், கறுப்பு-வெளுப்பு, சுத்தம்-அசுத்தம் இவையெல்லாம் உண்மையல்ல. மனிதனின் சீலம் குன்றி, கெட்டவற்றோடு கலந்திருக்கிறது. ஒன்றைவிட்டு மற்றொன்றைத் தேர்ந்தெடுக்கையில் மனிதன் என்னும் பொருளே மிஞ்சாது. தன்னை ஒழித்துக் தீமையை எடைபோட வல்லவனுக்கு அப்படித்தோன்றும், தன்னைவிட்டு உலகத்தை அளக்கப் புறப்பட்டவனுக்கு உலகெல்லாம் கருப்பு-வெளுப்பு என்று மாறுபட்ட நிறங்களாகிப் பிரித்துப்பார்க்க இயலும்.
பரிமேலழகர் உரை
குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து; குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து; அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து; மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக.
விளக்கம்
[மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவை யாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமே யுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.]
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
குணம் நாடி - குணமுங் குற்றமு மாகிய இரண்டு முடையாரே உலகத்திலிருத்தலால் , ஒருவன் குணங்களை முதலில் ஆராய்ந்து ; குற்றமும் நாடி - அதன்பின் அவன் குற்றங்களையும் ஆராய்ந்து ; அவற்றுள் மிகை நாடி - அவ்விரு பகுதிகளுள்ளும் அளவில் மிகுந்ததை ஆராய்ந்து ; மிக்க கொளல் - மிகுந்ததை அளவையாகக் கொண்டு அவன் தகுதியுண்மை யின்மையைத் துணிக.
ஒருவனுடைய குற்றங்கள் ஒன்றிற்கு மேற்பட்டனவாகவும் விளங்கித் தோன்றுவனவாகவு மிருந்து , அவனை எங்ஙனந் தெளிவதென்று மயக்கம் நேரின் , அம்மயக்கத்தைத் தெளிவிப்பது இக்குறள் . குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து , குணம் மிகின் வினைக் குரியவனென்றும் , குற்றம் மிகின் அல்லனென்றும் , தீர்மானிக்க என்றார், மிகையுடையது மிகையெனப்பட்டது . மிகை பன்மை பற்றி அல்லது தலைமை பற்றித் தீர்மானிக்கப்படுவது.
மணக்குடவர் உரை
ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்.
மு.வரதராசனார் உரை
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,
மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
இதன் அர்த்தங்கள் கோபம் இருக்கிற இடத்துல குணமும் இருக்கும், சிரிக்கிற கண்கள் தான் முறைக்கவும் செய்யும், அடிக்கற கைகள் தான் அணைக்கவும் செய்யும். எந்த மனுசனக்குள்ளேயும் குணமும் உண்டு , குறையும் உண்டு. குணம் 'A' செக்ஷன் என்றால், குறை 'B' செக்ஷன். ஒருத்தரை ஒரு வேலைக்காக தேர்ந்தெடுக்கறதுக்கு முன்னாலே அவனுடைய நல்ல குணங்களை 'A' செக்ஷன்லயும் குறைகளை 'B' செக்ஷன் லயும் லிஸ்ட் அவுட் செய்து பார்க்கனும். நிறைய நல்ல குணங்கள் இருந்து கம்மியா குறைகள் இருந்தால் அவரை நாம ஒ.கே. பன்னலாம். இந்த காலத்துக்கும் தேவையான ஒரு பெர்ஷனல் மேனேஜ்மெண்ட் உள்ளேயே வள்ளுவர் என்ன அழகாக சொல்லியிருக்கிறார்.
3.3.1 வடிவவியலார் எதிர்ப்பு
மதிப்பீட்டுமுறைத் திறனாய்வு, திறனாய்வுக் கோட்பாடுகளுக்கே ஒரு தூண் போல விளங்குகிறது என்று ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றவர்கள் கருதினாலும், வடிவவியலார் (கலை கலைக்காகவே என்ற கருத்துடையோர்), மற்றும் சில படைப்பாளிகள் மதிப்பீட்டுமுறைத் திறனாய்வை ஏற்பதில்லை. பெரிதும் பிரெஞ்சு மொழித் திறனாய்வாளர்கள் கருதுவது போல, இலக்கியத்தை விளக்கிவிட்டுப் போவதுதான் திறனாய்வாளரின் வேலையே ஒழியே, மதிப்பிடுவதல்ல என வாதிடுகின்றனர்; ஆனால் மதிப்பிடாமல் அடுத்த கட்டத்திற்கு மனித மூளையால் நகர முடியாது. மதிப்புக்குரியவைகளை மதித்து, மதிப்பிட்டு வெளிக்கொணர்வதும் இயற்கைப் பண்பாகும். வள்ளுவரின்,
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். (குறள், 504)
என்ற குறள் இந்த இடத்தில் மிகப் பொருத்தமான ஒன்றாகப்படுகிறது. ஆகவே, மதிப்பீட்டுமுறைத் திறனாய்வை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட முடியாது.
3.3.2 மதிப்பீட்டுமுறையின் பயன்
சங்க இலக்கியம் சிறந்த செவ்விலக்கியம், சிலப்பதிகாரம் மிகச்சிறந்த காப்பியச் சுவை கொண்டது, பாரதி பாடல் எளிமையும் கருத்துவளமும் கொண்டது, புதுமைப்பித்தன் கதைகள் சமூக அவலங்களைக் கூர்மையாகச் சாடுகின்றன என்றெல்லாம் வெளிவருகின்ற திறனாய்வுகள் அவற்றின் மதிப்பீடுகளைச் சொல்வனதாமே. இத்திறனாய்வுகள், இவ்விலக்கியத்தின் பக்கமாக நம்மைத் திருப்புகின்றன. இவற்றுக்கு மாறான, வாழ்வுக்கோ இலக்கிய அனுபவத்துக்கோ ஒவ்வாத ஏராளமான பழம்புராணங்கள், சொல் அலங்காரங்கள் போன்றவற்றை மதிப்பற்றவை என எடுத்துக்காட்டும் இத்திறனாய்வு முறை வாசகர்க்குப் பெரும்பயன் தருவது என்பது மறுக்க முடியாதது.
Thirukkural - Management - Decision Making
Stoner has defined, "Decision making is the process of identifying and selecting a course of action to solve a problem" (1995)
When we need to take a decision on what someone has to do, we need to assess the pros and cons of that action, weight them and decide according to the merits of that action. The same practice can be applied while deciding that suitability of a person for a task or a position. Measure the strengths and limitations of a person, weight them against each other and decide to employ his services according to the merits, advises Kural 504
Examine merits and defects,
Strike a balance, and choose.
An assessment of a person's suitability for a task must be done based on two things. They are 1) the person's positive qualities and strengths and 2) the person's negative qualities and areas of improvement.
Before deciding the suitability of a person for a task or assessing his performance or building relationship with a person, weigh both positive and negative qualities and skills present in him. Assess the positive qualities and skills lacking in him. Take a decision based on whichever is higher. Kural 504 contains wisdom for objective analysis and assessment of performance of others.
English Meaning - As I taught a kid - Rajesh
This kural mainly talks about objective analysis and assessment of performance. When one needs to assess a situation/task/person/action/etc or take a decision, then weigh them and decide them according to the 1) merits, strengths, benefits, pros/positives 2) demerits, weakness, difficulties, cons/negatives, causalities. Take a decision based whichever is higher. When already in a relationship, take the positives, ignore the negatives(as long as it is not toxic).
Other things to note: When assessing, always, first look out for positives because that is a positive approach and it helps to build upon whatever is existing and it also helps us be in peace. Even one positive can help us build our confidence. One should also look for negatives so that we can fill those gaps and reduce the negative impact. However, when one is always first looking for negatives, then such an habit turns out one as cynical, pessimistic. There will be always 1000 negatives. Even one negative can shatter our confidence if we ignore our positives. Negativity is infectious.
Questions that I ask to the kid
How should you decide?
How should gain clarity?
How should you assess?
How would you objective analyze?
Merits/Demerits (or Pros/Cons or Positives/Negatives) - What should you look out first? Why?
I need a simple vilakkam🤗
ReplyDelete