குறள் 482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
பருவம் - காலம்; காலப்பிரிவு; இளமை; பக்குவம்; வயது; மறைநிலாஅல்லதுநிறைநிலா; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்என்னும்ஆறுபருவங்கள்; மாதம்; மழைக்காலம்; தக்ககாலம்; பயிரிடுதற்குறியகாலம்; ஆண்டு; பயனளிக்குங்காலம்; கணு; நூற்கூறுபாடு; நிலைமை; உயர்ச்சி; அளவு; சூரியன்ஒவ்வோர்இராசியிலும்புகும்காலம்; ஆடவர்பெண்டிர்க்குரியவெவ்வேறுஆயுட்காலநிலைகள்; முகம்மதியர்திருவிழாவகை.
பருவத்தொடு - தக்க காலத்தில்
ஒட்ட - அடியோடு; கிட்ட; இறுக; அணுக; போல.
ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல்.
திருவினைத் - நல்வினை
தீராமை - கொடுமை; கடுந்துரோகம்; பொய்க்குற்றச்சாட்டு; பேரநீதி; வன்மத்தாற்சொல்லுங்கோள்; ஆற்றாமை.
தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்
ஆமை - கூர்மம்; ஓர்உயிரினம்; ஒருநோய்; மணம்
ஆர்க்கும் - ஆர்க்கை - வாரடை; கட்டுகை; துரும்பு
கயிறு - நூல்முதலியவற்றால்முறுக்கித்திரித்தவடம், பாசம்; மங்கலநாண்; நூல்; சாத்திரம்.
முழுப்பொருள்
செல்வம் நில்லாது விரைந்து சென்றுவிடும் தன்மை வாய்ந்தது. நிலையற்றதாகும். ஈன்ற செல்வதை காக்கவேண்டுமானால் காலத்திற்கு ஏற்ற செயலை காலம் தாழ்த்தாது காலத்தோடு செய்தல் மிக அவசியம். அவ்வாறு செயலை தக்ககாலத்தில் ஒழுகுவது (செய்வது) ஈன்ற செல்வம் தன்னிடம் இருந்து ஓடாமல் தடுக்க உதவும் கயிறு போன்றதாகும்.
ஆமை என்றால் நோய் என்று அர்த்தம். திருவனையான செல்வம் ஒருவரிடம் தீருகிறது என்றால் அவரிடம் ஒரு நோய் இருக்கிறது என்று அர்த்தம். அது செயலின்மை. காலத்தோடு செய்யாது இருத்தல் என்று பொருள். ஆதலால் அந்நோயை கட்டுப்படுத்தும் கயிறே காலத்தோடு செயலாற்றுவதாகும்.

ஒரு விவசாயி காலத்தொடு ஒட்டி பயிரை நடவில்லையென்றால் அவர் பின்பு மழையிற்கு தனது பயிர்களை பலிக்கொடுக்க நேரிடும்.
”பருவத்தே பயிர் செய்” என்பது ஔவையாரின் ஆத்திச்சூடி
மேலும் அஷோக் உரை

உங்கள் அறத்தை / கடமையை நாளை அல்லது மற்றொரு நாள் செய்துக்கொள்ளலாம் என்று என்னாது அவ்வப்போது தக்க நேரத்தில் செய்க. அப்படி செய்தால் அது உங்களுக்கு தூணாக துணை நிற்கும். அதேப்போல் பருவத்தே செயல்களை செய்தால் நன்று.
மேலும் அஷோக் உரை
ஒப்புமை
”பருவத்தோ டொத்துவாழ்” (ஆத்திசூடி)
“நல்வினை ஆர்க்கும் கயிறு” (திரி.23)
எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-கிராதம்-28 இல் வருணனை பற்றி இப்படி சில வரிகள் வருகின்றன. அதில் பருவம் தவறாது பற்றி குறிப்பிடுகிறார். பருவம் தவறினால் இப்புடவியின் தாளம் தவறும். அதனால் அறம் தவறும். (அறம் செய்தால் தான் பொருள் ஈட்ட முடியும். அறம் தவறினால் பொருளும் தவறும்/தீரும் தானே).
“பருவம் தவறாது மழைபொழிவதும் பனிஎழுவதும் வெயில் விளைந்து மூத்து கனிவதும் இப்புடவியின் தாளம் என்று அவர்களின் தொல்பாடல்கள் சொல்கின்றன. அதை அவர்கள் ருதம் என்கின்றனர்” என்றான் சண்டன். “ஆம். அச்சொல் வேதங்களில் அறமென்னும் பொருளில் அமைந்துள்ளது” என்றான் பைலன். “ருதத்தைக் காப்பவன் வருணன் என்று வேதங்களும் சொல்கின்றன. ஓயா தாளம் திகழும் கடலே நிலத்தின் உயிர்களிலும் விசைகளிலும் திகழும் தாளங்கள் அனைத்துக்கும் அடிப்படை.”
பரிமேலழகர் உரை
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம்.
'(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)' .
மணக்குடவர் உரை
காலத்தோடு பொருந்த ஒழுகுதல் செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம். இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்.
மு.வரதராசனார் உரை
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
சாலமன் பாப்பையா உரை
காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Similar to sowing seeds on time to harvest well, If we do right work on appropriate time our wealth will stay with us. However, if we do not do our work on time, our productivity will get affected and we will loose our wealth. Doing things on time is the tool to save our wealth
Questions that I ask to the kid
What will protect your wealth?
Why should you do your work on time? (it will protect you .. also it will protect your wealth). Is it just wealth? or even for health it is applicable ?(yes.. because health is wealth)
No comments:
Post a Comment