குறள் 965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
[பொருட்பால், குடியியல், மானம்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
குன்றின் - குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள்.
அனை - அன்னை; அந்த ஒருவகைமீன்.
அனையாரும் - அவரும்
குன்றுவர் - குன்றுதல் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.
அனைய - அத்தன்மையான; ஒத்த.
முழுப்பொருள்
குன்றுப்போல் (மலைபோல) உயரமான புகழை உடைய நற்குடியில் பிறந்தவராயினும் ஒருவருடைய புகழ் குறையும். எப்பொழுது அப்புகழ் குறையும் ? குற்றம் சிறிதளவாயினும் கீழ்மையான செயல் அல்லது தீங்கு விளைவிக்கும் செயலை செய்தால் ஒருவருடைய புகழ் / மானம் குறையும்.
குன்றிமணி என்பது அளவில் சிறியது; அதோடு ஒப்பின் குன்று மிகப்பெரியது. வீழ்ச்சியின் அளவை உயர்த்திக் காட்டவே இந்த ஒப்புமை. மேலும் உயர செல்ல செல்ல, வீழ்ச்சியின் வீச்சம் மிகுதியானது. மலைமீது செல்ல செல்ல ஒரு சிறு அடி தவறாக வைத்தால் நாம் கீழே விழுந்து அழிவோம். அதன் வலியும் அதிகமாக இருக்கும். குற்றம் சிறிது என்பதனால் வலி குறைவு அல்ல. உயரம் அதிகம் ஆதலால் குற்றம் சிறிதானாலும் அதன் வலி பெரிது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். ('குன்றியனையவும'¢ என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.).
மணக்குடவர் உரை
மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின். இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.
மு.வரதராசனார் உரை
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

குன்றுவ - குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள்.
குன்றி - குன்றுதல் - குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல்.
அனைய - அத்தன்மையான; ஒத்த.
செயின் - செய்தால்
முழுப்பொருள்
குன்றுப்போல் (மலைபோல) உயரமான புகழை உடைய நற்குடியில் பிறந்தவராயினும் ஒருவருடைய புகழ் குறையும். எப்பொழுது அப்புகழ் குறையும் ? குற்றம் சிறிதளவாயினும் கீழ்மையான செயல் அல்லது தீங்கு விளைவிக்கும் செயலை செய்தால் ஒருவருடைய புகழ் / மானம் குறையும்.
குன்றிமணி என்பது அளவில் சிறியது; அதோடு ஒப்பின் குன்று மிகப்பெரியது. வீழ்ச்சியின் அளவை உயர்த்திக் காட்டவே இந்த ஒப்புமை. மேலும் உயர செல்ல செல்ல, வீழ்ச்சியின் வீச்சம் மிகுதியானது. மலைமீது செல்ல செல்ல ஒரு சிறு அடி தவறாக வைத்தால் நாம் கீழே விழுந்து அழிவோம். அதன் வலியும் அதிகமாக இருக்கும். குற்றம் சிறிது என்பதனால் வலி குறைவு அல்ல. உயரம் அதிகம் ஆதலால் குற்றம் சிறிதானாலும் அதன் வலி பெரிது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர். ('குன்றியனையவும'¢ என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.).
மணக்குடவர் உரை
மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின். இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.
மு.வரதராசனார் உரை
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.
English Meaning - As I taught a kid - Rajesh
When one's reputation is as high as a mountain, then he or she has to be careful. Because, if he or she makes even a tiny mistake the his or her's reputation will decline like falling from the cliff of a mountain. When climbing a mountain, even one wrong step will lead to either death or huge damage of body parts. One has to be careful.
Questions that I ask to the kid
A person like a mountain, what should he be careful of?
No comments:
Post a Comment