மூதுரை - 02 - நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

மூதுரை - 02 நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர்.
மூதுரை - 02
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

பொருள்
நல்லார் -  நற்குணமுடையோர்; பெரியோர்; கற்றார்; மகளிர்.

ஒருவர்க்குச் -  ஒருவர்

செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி

கல் - வெட்டியெடுத்தகல்; சிறுகல்; பாறை; மலை; இரத்தினம்; காவிக்கல்; முத்து; வீரக்கல்; சாவுச்சடங்கில்இறந்தார்பொருட்டுப்பத்துநாளைக்குநாட்டப்படுங்கல், மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; செங்கல்; கருங்கல்; மைல்அளவுக்குநாட்டப்பட்டகல்; கிலோமீட்டர்அளவுக்குநாட்டப்படுங்கல்; மைல்தூரம்; கல்வி.

மேல் - மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

எழுத்துப் -அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம்.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

காணுமே - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அல்லாத - மாறான; மாறானவை

ஈரம் - நீர்ப்பற்று; பசுமை குளிர்ச்சி அன்பு அருள் அழகு அறிவு குங்குமப்பூ பகுதி கரும்பு வெள்ளரி

இலா - இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

நெஞ்சத்தார்க்கு - நெஞ்சத்தை, மனதை உடையவர்

ஈந்த - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

உபகாரம் - ஈகை; உதவி காணிக்கை மகிழ்ச்சி

நீர்  - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

மேல் -  மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

எழுத்துக்கு - அக்கரம்; கல்வி; எழுதப்பட்டதாள், கடிதம்; கையெழுத்து; ஆதாரச்சீட்டு; கைரேகை; உடன்படிக்கைச்சீட்டு; இலக்கணம்; அட்டவணை; சித்திரம்.

நேர் - உடன்பாடு; உவமை; செவ்வை; நீதி; நல்லொழுக்கம்; திருந்தியதன்மை; மாறுபாடு; நீளம்; வரிசை; பாதி; நுணுக்கம்; கொடை; கதி; காண்க:நேர்விடை; தனிமை; மிகுதி; ஊர்த்துவநிலை; நிலைப்பாடு; காண்க:நேரசை; வலிமை; முன்; பிராகாரம்.
 
முழுப்பொருள்
நல்லவர் ஒருவர்க்கு உதவி செய்தால் அவர் நெஞ்சத்தில் அது கல்லில் செதுக்கிய எழுத்துப்போல் நிலைத்து நிற்கும். காலம் கடந்தாலும் காட்சிகள் மாறினாலும் அக்கல்லில் எழுத்து மாறாது. அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அதாவது அந்த மனிதர் வாழ்வில் ஒரு உயரத்துக்கு சென்றாலும் அந்த நல்லவர் முன்பு பெற்ற உதவிகளை எளிதாக மறந்துவிடமாட்டார். மனதில் நன்றியுடன் இருப்பார். மேலும் அவர்களுக்கு செய்யும் உதவியானது நிலைத்து நிற்கும். அவருக்கும் பயனாக அமையும் மற்றவர்களுக்கும் பயனாக அமையும். உதாரணமாக சொன்னால் நல்லவர்களுக்கு நாம் கல்வி போன்றவற்றில் உதவி செய்தால் அவர்கள் நன்கு படித்து வாழ்வில் முன்னேறுவர்.

அதுவே மனதில் ஈரம் இல்லாத கீழோருக்கு செய்யும் உதவியானது நீர் மேல் எழுதிய எழுத்துப்போன்று அவர் மனதில் இருந்து அப்பொழுதே அழிந்துவிடும். அதற்கான தடமே இருக்காது. நன்றியும் இருக்காது. வெளியே தான் பெற்ற உதவியினையும் கூறமாட்டார்கள். தங்களை சுயம்புவாகவே காட்டிக்கொள்வர். மேலும் நாம் செய்த உதவியும் வீணாக போகக்கூடும். உதாரணமாக சொன்னால் மனதில் கீழோருக்கு கல்வி போன்றவற்றில் உதவி செய்தால் அவர்கள் கற்காமல் நேரத்தை விரயம் செய்து வாழ்வில் முன்னேறவும் மாட்டார்கள்.

ஆதலால் உதவிச் செய்யும் பொழுது நாம் இருவகை மக்களுக்கும் உதவி செய்ய நேரிடும். ஆதலால் மேற்சொன்ன யதார்த்தை உணர்ந்து நன்றியினை எதிர்ப்பார்க்காமல் இருந்தால் நமக்கு ஏமாற்றங்களும் வருத்தங்களும் இருக்காது. அதுமட்டுமின்றி நமது நேரத்தையும் கணக்கில் கொண்டு நாம் செய்யும் உதவியினை பிறர் உண்மையிலேயே பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுவாரா என்றும் பார்க்க வேண்டும். 

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain