குறள் 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை
[பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]

பொருள்
எப்பொருளும் - எந்த ஒரு பொருளையும் , கருத்தையும், தத்துவத்தையும், செயலையும், அறிவையும், கொள்கையையும் , பயனையும், தலைமையும்
ஓர்-த்தல் - ōr- 11 v. tr. [M. ōr.] 1. To consider; ஆராய்தல் 2. To select, choose; தெரிந்தெடுத்தல். ஆயிரத் தோர்த்தவிப்பத்தே (திவ். திருவாய்.1, 2, 1). 3. To think, regard; நினைத்தல் வேள்வியோர்க்கும்மே யொருமுகம் (திருமுரு. 96). 4. Tolisten attentively; கூர்ந்து கேட்டல் புலிப்புகர்ப்போத்தோர்க்கும் (புறநா. 157, 12).
ஓரார் - கூர்ந்து கேட்காது இருத்தல்
தொடரார் - தொடர்ந்து கேட்காமலும், கேட்பவனவற்றில் தெளிவு பெற கேள்விகள் கேட்காமல் இருத்தல்
மற்று - ஓர்அசைநிலை
அப்பொருளை - அந்த பொருளை (செயலை, தத்துவத்தை ... )
விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.
விட்டக்கால் - நீங்கும் பொழுது
கேட்க - செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக
மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு.
முழுப்பொருள்
அரசர் நம் (அமைச்சர்) முன்னே ஒன்று பேச வில்லையென்றால் அது ரகசியமாக இருக்கலாம். ஆதலால் நம் முன்னே பேசாத ஒன்றை கூர்ந்து கேட்கவோ அல்லது பின்பு அதனை பற்றி கேள்விகள் வினவக்கூடாது. மன்னரே அதனை பற்றி கூறும் பொழுது மட்டும் அதனை கேட்டுக்கொள்க.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உள்ள இரகசியக் காப்பு உறுதி மொழியை உடனிருப்பவர்களே உணரவில்லையெனில், மதிக்கவில்லையெனில், அது ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும், அவர்களுக்குமே அரசரின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க. ('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.).
மணக்குடவர் உரை
யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க. இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.
மு.வரதராசனார் உரை
(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.

No comments:
Post a Comment