குறள் 234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு
[அறத்துப்பால், இல்லறவியல், புகழ்]
பொருள்
நில - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.
வரை - மலை; மலையுச்சி; பக்கமலை; உயர்ந்தமலை; கல்; சிறுவரம்பு; நீர்க்கரை; எல்லை; அளவு; விரலிறைஅளவு; கோடு; எழுத்து; ஏற்றத்தாழ்வுநோக்குகை; முத்துக்குற்றத்துள்ஒன்று; மூங்கில்; காலம்; இடம்.
நீள் - நீளம்; நெடுங்காலம்; உயரம்; ஆழம்; ஒளி; ஒழுங்கு.
புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை
ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்
புலவரைப் - புலவர் - புலமையோர்; பாவாணர்; ஞானிகள்; தேவர்; குறுநிலமன்னர்; கூத்தர்; கம்மியர்; ஓவியம்முதலியகலைவல்லார்; சாளுக்கியர்; ஒருவகைச்சாதியார்; சிலஇனத்தவரின்பட்டப்பெயர்.
போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்
போற்றாது - வணங்காது, பாதுகாக்காது
புத்தேள் - புதுமை; புதியவள்; தெய்வம்; தேவர்.
உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று
முழுப்பொருள்
இந்நில உலகத்தின் எல்லைவரை நெடுங்காலம் நீளுகின்ற புகழைப் பெற்றவன் (தன்னுடைய (இல்லறத்தில் ஈகை, ஒப்புரவு போன்ற) அறச்செயல்களினால் பெற்ற புகழ்) ஒரு ஞானியுடன் தேவர்கள் வாழும் வானுலகிற்குச் சென்றால் அந்த ஞானியை வணங்காது அறச்செயல்களைச் செய்து நெடுங்காலம் நீள்புகழ் ஈன்றவரைப் போற்றும்.
அதாவது துறவறம் பூண்டு ஞானத்தை ஈன்ற ஞானிக்கு மதிப்பு இல்லையா? ஞானிகளுக்கு மேலுலகத்திற்கு சென்றால் தான் புகழ். ஆனால் இவ்வுலகிலேயே இல்லறத்தில் இருந்துக்கொண்டு அறச்செயல்களினால் புகழை ஈன்றவர்க்கு மேலுலகமே இவ்வுலகம் வந்து அவரை போற்றும். புகழுக்கு அவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்பதை அறிக. ஞானிக்கு புத்தேலுடம்பும் (வானுலகத்தில் வாழுகின்ற) உடம்பு கிடைக்கும் ஆனால் புகழ் ஈன்றவருக்கு புகழுடம்பும் கிடைக்கும் புத்தேளுடம்பும் கிடைக்கும்.
ஆதலால் செயலாற்றி ஈன்ற புகழுக்கு மதிப்பு இவ்வுலகத்தில் மட்டும் அல்ல வானுலகத்திலும் அதிகம். அதுவே செயல்வழி ஞானத்தின் புகழ்.
ஒப்புமை
திரிகடுகப் (16) பாடல், “மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும்” என்கிறது.

“தொலையா நல்லிசை உலகமொடு நிற்ப” (மலைபடு 70)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நிலவரை நீள் புகழ் ஆற்றின் - ஒருவன்நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின் புத்தேள் உலகு புலவரைப் போற்றாது - புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. (புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், 'புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து' (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.).
மணக்குடவர் உரை
ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின் தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும். புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது.
மு.வரதராசனார் உரை
நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.
சாலமன் பாப்பையா உரை
தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.

No comments:
Post a Comment