Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

குறள் 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்
[பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்]

பொருள்
அவை மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்.

அறிந்து - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

அறியார்  அறிய மாட்டார்கள்.

சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சொல்லல்சொல்வது; கூறுவது

மேற்கொள்பவர்  - மேற்கொள்வது - மேற்கொள்ளுதல் -மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

சொல்லின்கூறுபவற்றின் , கூறினால்

வகை கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள்.

அறியார்அறிய மாட்டார்கள்.

வல்லதூஉம் - வல்ல - வலிமையுள்ள; திறமையுள்ள

இல் - இல்லை 

முழுப்பொருள்
ஒரு சபையின் இயல்பை அறியாமல் அச்சபையின் முக்கியத்துவமும் பலர் ஒன்றுகூடியுள்ள கூட்டு நேரத்தின் மதிப்பையும் அறியாமல் தொடர்ந்து அளவுக்கு அதிகமா பேசிக்கொண்டு இருப்பவருக்கு சொற்களின் மதிப்பும் வலிமையையும் அதனை அவையில் பயன்படுத்தவேண்டிய முறையும் தெரியாது. அவ்வாறு அவையின் இயல்பு அறியாதவரும் சொல்லின் வலிமை அறியாதவரும் சொல்ல தக்க வலிமையான ஆக்கப்பூர்வமானது என ஏதுமில்லை. 

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் வகை அறியார் - அவையினது அளவையறியாது ஒன்று சொல்லுதலைத் தம் மேற்கொள்வார் அச்சொல்லுதலின் கூறுபாடும் அறியார்; வல்லதூஉம் இல் - கற்றுவல்ல கலையும் அவர்க்கு இல்லை. (அம் மூவகைச் சொற்களால் வரும் சொல்லுதல் வகைமை, கேட்பாரது உணர்வு வகைமை பற்றி வருதலால், 'சொல்லின் வகையறியார்' என்றும், அஃது அறியார் என்று எல்லாரானும் இகழப்படுதலின் 'வல்லதூஉம்இல்' என்றும் கூறினார். இதனான் அவையறியாக்கால் வரும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர், சொல்லின் வகையும் அறியார்; அவ்வாறன்றி வேறு வல்லதூஉம் இலராவார்.

மு.வரதராசனார் உரை
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

Management - Public Speaking - Audience Analysis
An important factor that decides the outcome of a speech is the audience. A speaker, according to Kural 713, must have a thorough knowledge of his audience before he speaks to them. 
Those are poor orators, unavailing, 
Who speak without knowing their audience. 

An audience is similar to the road on which we drive our vehicles. The condition of the road decides the speed of a vehicle and the comfort of driving. Similarly, the level of the audience influences the flow of a presentation and the accomplishment of objectives. The profile of the audience influences our speeches. Profile includes their age, gender, number, experience, education, exposure, and expertise.

No comments:

Post a Comment