குறள் 506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
[பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்]
பொருள்
அற்றுப்போதல் - முழுதும்ஒழிதல்; இடைமுறிதல்; முழுதும்கைவருதல்.
அற்றாரைத் - அற்றார் - பொருள்இல்லாதவர்; முனிவர்
தேறுதல் - tēṟu- 5 v. [T. tēru.] intr.1. To be accepted as true; தெளிதல் உடன்மூவர் சொற்றொக்க தேறப்படும் (குறள், 589). 2.To be clarified, made clear, as water; நீர் தெளிதல் தேறுநீர் சடைக்கரந்து (கலித். கடவுள்வாழ்.).3. [M. tēṟuka.] To be strengthened; to recover from swooning, from intoxication orfrom drooping; மயக்கந் தெளிதல் 4. To bethorough, accomplished, mature, as the mind;to reach perfection; முதிர்தல் தேறினபுத்தி. (W.)5. To thrive, improve, flourish, as vegetation; செழித்தல் தேறின பயிர் (W.) 6. To be
ஓம்புக - ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.
மற்று - ஓர்அசைநிலை;மற்றவை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.
அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை
இலர் - இல்லை ; who are not
நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று.
நாணார் - நாணம் கொள்ளாதவர்
பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.
முழுப்பொருள்
அற்றார் என்றால் பொருள் இல்லாதவர் முனிவர் என்ற பொருள்கள் அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அற்றுப்போதல் முழுதும் ஒழிதல் இடைமுறிதல் என்ற பொருள்களை காணலாம். இக்குறளுக்கு அற்றார் என்றால் நற்பண்புகள் ஏதும் அற்ற ஒழுக்கம் அற்ற வாழ்வில் மெய்ப்பொருள் வேண்டாதவர் என்று பொருள் கொள்ள வேண்டும்.
நற்பண்புகள் ஏதும் அற்ற ஒழுக்கம் அற்ற வாழ்வில் மெய்ப்பொருள் வேண்டாதவர்களை ஏதும் கேட்டு நாம் தெளியக்கூடாது. அவர்களிடம் பெறுவதற்கு அறிவும் ஆலோசனையும் ஒன்று இல்லை. ஏனெனில் அவர்கள் பழிக்கு நாணமாட்டார்கள். ஆதலால் அவர்கள் சொல்லும் ஆலோசனைகள் அறம் அற்று இருக்க பல வாய்ப்புகள் உண்டு. அறம் அல்லாத செயல்கள் தீவினை உண்டாகும் கேடு விளைவிக்கும் நமக்கும் பழி சேர்க்கும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக, அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர், பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார்.
('பற்று இலர்' என்பதனால் 'சுற்றம்' என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.).
மணக்குடவர் உரை
ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.
மு.வரதராசனார் உரை
சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை
உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.

No comments:
Post a Comment