குறள் 980
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
[பொருட்பால், குடியியல், பெருமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
[பொருட்பால், குடியியல், பெருமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
முழுப்பொருள்
பெருமை உடையவர்கள் பிறரிடம் உள்ள நல்லவற்றையே எடுத்து உரைப்பர். பிறரின் குறைகளை மறைத்து அவர்களின் நிறைகளைப் பற்றி மட்டுமே பேசுவர். அதுவே சிறுமைக்கொண்டவர்களோ. ஏன்? ஏனெனில் அவர்களுக்கு தெரியும் குறைகளைப்பார்த்தால் அவை பெருகிக்கொண்டே செல்லும். அவற்றைப்பார்த்துக்கொண்டே இருப்பதால் அதனைப்பற்றி பேசுவதால் என்னப்பயன்? அதுவே சிறுமை கொண்டவர்கள் பிறரிடம் உள்ள நிறைகளைத் தவிர்த்து எப்பொழுதும் குறைகளை கூறிக்கொண்டு இருப்பர். ஏனெனில் பிறரிடம் குறைகளை பார்ப்பது எளிது. அதைக்கண்டறிவதில் ஒரு சிற்றின்பம் அவர்களுக்கு.
அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை
மறைக்கும் - மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்.
மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.
பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை.
சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.
தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.
குற்றமே - குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு
கூறிவிடும். - கூறுதல் - kūṟu- 5 v. tr. [M. kūṟu.] 1.To speak, say, declare, assert; சொல்லுதல் கூறிய முறையின் (தொல். சொல் 70). 2. To cryout the price, as an auctioneer; விலைகூறுதல் (பிங்.) 3. To cry aloud, promulgate, proclaim;பிரசித்தஞ்செய்தல். (W.) , kūṟu- 5 v. tr. id. Todivide; கூறுசெய்தல். இது பண்டாரங் கூறுமாறுகூறிற்று (குறள், 386, மணக்.).
பெருமை உடையவர்கள் பிறரிடம் உள்ள நல்லவற்றையே எடுத்து உரைப்பர். பிறரின் குறைகளை மறைத்து அவர்களின் நிறைகளைப் பற்றி மட்டுமே பேசுவர். அதுவே சிறுமைக்கொண்டவர்களோ. ஏன்? ஏனெனில் அவர்களுக்கு தெரியும் குறைகளைப்பார்த்தால் அவை பெருகிக்கொண்டே செல்லும். அவற்றைப்பார்த்துக்கொண்டே இருப்பதால் அதனைப்பற்றி பேசுவதால் என்னப்பயன்? அதுவே சிறுமை கொண்டவர்கள் பிறரிடம் உள்ள நிறைகளைத் தவிர்த்து எப்பொழுதும் குறைகளை கூறிக்கொண்டு இருப்பர். ஏனெனில் பிறரிடம் குறைகளை பார்ப்பது எளிது. அதைக்கண்டறிவதில் ஒரு சிற்றின்பம் அவர்களுக்கு.
இவை பிறர் என்று இல்லை. எதுவாயினும் பொருந்தும். உதாரணமாக இன்னொரு நாட்டிற்கு (அமேரிக்கா, கனடா, பிரான்ஸ்) அல்லது பிற ஊர்கள் (பெங்களூர், டெல்லி, ஐதேராபாத்) சென்று அந்நாட்டில் உள்ள நல்லவற்றை கற்காமல் புகழாமல் அங்கு உள்ள நமக்கு குறையாக படுபவனபற்றியே பேசுவர் சிறுமை உடையவர்கள்.
சிறுபஞ்சமூலப் (15) பாடலொன்று, இதே கருத்தை,
“பிழைத்தல் பொறுத்தல் பெருமை –
சிறுமை இழைத்ததீங் கெண்ணியிருத்தல்” என்று சொல்லும்.
உண்மையை மறைப்பதா? அதுவும் பெருமைக்குரியோர் என்ற கேள்வி எழுமல்லவா? அதற்காகத்தான் வள்ளுவர் முதலிலேயே, “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த; நன்மை பயக்கு மெனின்” என்றாரோ?
"குறள் 504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்"
என்ற குறளையும் நினைவுப்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார். (மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகுபெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.).
மணக்குடவர் உரை
பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும்: சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும். இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று.
மு.வரதராசனார் உரை
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.
சாலமன் பாப்பையா உரை
பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.
Thirukkural - Management - Values
The difference between a great person and a little person is found in the way they express the positive qualities of the people they know or interact with, confirms Kural 980.
The great hide others faults
Only the small talk of nothing else.
A great person never highlights the weaknesses or faults of others as a great person makes others feel great. On the contrary, a little person points out only the weaknesses or faults of others as a little person belittles others. One cannot become great by making the other person feel little. Never criticize others for their shortcomings as everyone has shortcomings. Rather than criticizing others, appreciate them for their strengths and positive qualities. Be a great person by bringing out the great qualities in others, pointing out the great actions of others and making them feel great.
English Meaning - As I taught a kid - Rajesh
How can we say a person is great or trivial? Listen to what he says about others, others work done, others work in progress etc. A great person will talk about positive things and will not talk about negative things. Whereas a trivial person will talk about negative things and won't focus on positive things. Remember, it is easy to find faults in others and derive a pleasure out of it.
It doesn't apply to just talking about people. Just observe people talking bad about the countries and cities they live when they live abroad.
Note: This kural doesn't say one should talk about weakness, threats or criticize. One has to point out negatives in apporpriate plaforms only.
Questions that I ask to the kid
How can you say a person is great or trivial based on his talk?
No comments:
Post a Comment