Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன்

குறள் 545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]

பொருள்
இயல்புளிக் - முறைப்படி; iyalpuḷi   adv. id. + உளி In accordance with the established custom or order;விதிப்படி. இயல்புளி வழிபட்டு (காஞ்சிப்பு. அபிராமி 4).

கோல் - கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

ஓச்சும் - ஓச்சு-தல் - ōccu-   5 v. tr. 1. To cast,throw, discharge, as a weapon; எறிதல் செழியன் செண்டெடுத்துந்தியன் றோச்சலும் (காஞ்சிப்பு. நகர.67). (சூடா.) 2. To raise in order to strike, as thearm, a weapon; to lift up in a threatening manner; உயர்த்துதல் கடிதோச்சி மெல்ல வெறிக (குறள்,562). 3. To drive away, chase; ஓட்டுதல் வண்டோச்சி மருங்கணைதல். 4. To cause to go; toride; to govern; to wield; to sway, as a sceptre; செலுத்துதல் கோலோச்சு மாநில மன்னன்(குறள், 544). 5. To insert, thurst into, stickin; பாய்ச்சுதல் ஒருபுனிற்றா போற்று மவன்மேன்மருப்போச்ச (பெரியபு. சண்டேசு. 17). 6. To excite, spur on, incite; தூண்டிவிடுதல் (W.)

ஓச்சும் - உயரும்

மன்னவன் -  மன்னன்; இந்திரன்.

நாட்ட - நாட்டம் - நோக்கம்; கண்; பார்வை; அழகு; ஆராய்ச்சி; சோதிடநூல்; செவ்வழியாழ்த்திறவகையுள்ஒன்று; விருப்பம்; ஐயம்; திரிதல்; நிலைநிறுத்துகை; நாட்டுத்தலைமை; ஐயம்; வாள்.

பெயலும் - பெயல் - பொழிகை; மழை; மழைத்துளி; மேகம்.

விளையுளும் - விளையுள் - விளைச்சல்; முதிர்கை; வயல்; உள்ளம்.

தொக்கு - தொடுவுணர்ச்சியைஅறிகருவி; உடம்பின்தோல்; கனியின்தோல்; மரப்பட்டை; ஆடை; பற்று; துவையல்; சிறுமை; எளிது; இளப்பமானவன்; நேர்மை.

முழுப்பொருள்
நீதிநூல்களும் சான்றோர்களும் கூறும் முறைப்படி நாட்டை ஆண்டு நாட்டின் வளத்தையும் மக்களின் வளத்தையும் வாழ்க்கை தரத்தையும் ஒரு அரசரும் அரசும் உயர்த்துமென்றால் அந்த நாட்டில் பருவமழையும் அதனால் பயிர் விளைச்சலும் செழிப்பாய் நிலைத்து நிற்கும். விளைச்சல் நன்கு இருந்தால் வறுமை ஒழிந்து கேடுகள் (திருட்டு, கொள்ளை) ஒழியும் நாட்டின் வளம் பெருகும் மகிழ்ச்சி உண்டாகும் நாடு சிறக்கும்.

கம்பராமாயாணப் பாடல் “இயல்புளி” என்ற சொல்லை பயனாக்கி, மன்னவர்கள் அரசாள்வதை இவ்வாறு கூறுகிறது. 
“இன்னவை தகைமையென்ப வியல்புளி மரபின் எண்ணி 
மன்னரசியற்றி” . (கம்ப.அரசியல்.37)

உருளுடை நேமியால் உலகை யோம்பிய
பொருளுடை மன்னவன் புதல்வ” (கம்ப.அகத்திய 16)

பாடலின் முழுக்கருத்தையும் ஒட்டி, திரிகடுகப்பாடல்,
வெஞ்சின வேந்தன் முறைநெறியிற் சேர்தலும் 
திங்கள் மும்மாரிக்கு வித்து” (திரி.98 என்று கூறுகிறது. 

புறநானூற்றுப் பாடல், 

”முறைவேண்டு பொழுதில் பதனெளி யோர்ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோர்” (புறநா.35:15-6)

”கோஓல் செம்மையின் சான்றோர் பல்கிப் 
பெயல்பிழைப் பறியா புன்புலத்ததுவே” (புறநா.117:6-7) என்கிறது.

திருப்பாவையில் கோதை நாச்சியாரும் (ஆண்டாள்) 
“தீங்கின்றி நாடெல்லாம் மாதம் மும்மாரி பெய்து 
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,” என்றும் 
“ஓங்கி உலகளந்த நாயகனை” பற்றி பாடுகையில் சொல்வதைப் பார்க்கலாம். மழைபொழிவும், மிகுந்த விளைச்சலும் ஒன்றாகப் பேசப்படுவதை இங்கும் காணலாம். அரசனும் காக்கும் கடவுளும் ஒன்றாகக் கண்டதினால்தான் இறைவனை ஆள்பவனாகவும், ஆள்பவனை இறைவனாகவும் கண்டனர் கவிகளும், அறிஞர்களும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம்.
('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
மழைபெய்தலும் விளைதலுங்கூடி, நூல் சொன்ன இயல்பினானே முறையை நடத்த வல்ல அரசனது நாட்டகத்தினவாம் என்றவாறு.

இது மேற்கூறிய முறைமை செய்ய மழையும் விளைவும் உண்டாம் என்றது.

மு.வ உரை
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

சாலமன் பாப்பையா உரை
அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.

No comments:

Post a Comment