குறள் 655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]பொருள்
எற்று - எற்றுகை; எத்தன்மையது; வியப்பிரக்கக்குறிப்புச்சொல். eṟṟu III. v. t. cast, throw off, jerk away, kick away, எறி; 2. kill, கொல்லு; 3. pierce, stab, குத்து; 4. hit with the fist, குத்து; v. i. cease, நீங்கு; 2. feel pity, இரங்கு.
என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.
இரங்குவ - இரங்குதல் - வருந்துதல்; அருளல் மனமழிதல்; அழுதல்; கழிவிரக்கம்கொள்ளல்; ஒலித்தல் யாழொலித்தல்; கூறுதல் ஈடுபடுதல்
அற்க - வேண்டாம்
செய்யற்க - செய்யாதே ; செய்ய வேண்டாம்
மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.
அன்ன - அத்தன்மையானவை; ஓர்அஃறிணைப்பன்மைக்குறிப்புவினைமுற்று; ஓர்உவமஉருபு.
செய்யாமை - செய்யாதிருத்தல்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
முழுப்பொருள்
இப்படிப்பட்ட ஒரு (தீங்கு விளைவித்த, வருந்தத்தக்க) செயலை செய்துவிட்டோமே என்று வருங்காலத்தில் வருந்தும்படியான செயல்களை ஒரு பொழுதும் செய்யாதே. அதை மீறி செய்தாலோ அல்லது அறியாமையினால் செய்தாலோ அல்லது சூழலலினால் செய்தாலோ வருங்காலத்தில் மறுபடியும் இதைப்போன்ற ஒரு தவறை செய்யாதே. அவ்வாறு தவறான காரியங்களையும் தப்பான காரியங்களையும் செய்யாது இருத்தல் நன்மை விளைவிக்கும்.
தவறுகளில் இருந்து கற்காமல் அலட்சியமாக இருப்பது மிகப்பெரிய தவறு என்றென்கிறார் திருவள்ளுவர். முதல் தடவை எவ்வளவு முயன்றும் தவறு நடந்தாலோ அல்லது அறியாமல் செய்த தவறு நடந்தால் அதில் இருந்து கற்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அதனால் தான் இக்காலத்தில் அலுவகங்களில் “business review / de-brief" என்று ஒரு meeting நடக்கிறது.
தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் தெரிந்து செய்வது அல்லது மறுபடியும் தெரிந்து செய்வது சரியல்ல. அது மன்னிக்க முடியாததாகும்.
நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த "பெற்றால் தான் பிள்ளையா ?" திரைப்படத்தில் கவிஞர் வாலியின் வரிகளில் "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்ற பாடலில் கீழ்க்காணும் வரிகள் வரும்
மேலும் அஷோக் உரை
தவறுகளில் இருந்து கற்காமல் அலட்சியமாக இருப்பது மிகப்பெரிய தவறு என்றென்கிறார் திருவள்ளுவர். முதல் தடவை எவ்வளவு முயன்றும் தவறு நடந்தாலோ அல்லது அறியாமல் செய்த தவறு நடந்தால் அதில் இருந்து கற்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அதனால் தான் இக்காலத்தில் அலுவகங்களில் “business review / de-brief" என்று ஒரு meeting நடக்கிறது.
தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் தெரிந்து செய்வது அல்லது மறுபடியும் தெரிந்து செய்வது சரியல்ல. அது மன்னிக்க முடியாததாகும்.
இக்கருத்தையொட்டிய சங்க இலக்கிய பாடல்களின் மேற்கோள்கள் சில இதோ, கி.வா.ஜ-வின் ஆய்வு பதிப்பிலிருந்து.
செய்து பின்னிரங்கா வினையொடு (அகநானூறு. 268:13)
செய்திரங்கா வினை (புறநானூறு 10:11)
கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம் (நான்மணி 8)
நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த "பெற்றால் தான் பிள்ளையா ?" திரைப்படத்தில் கவிஞர் வாலியின் வரிகளில் "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" என்ற பாடலில் கீழ்க்காணும் வரிகள் வரும்
தவறு என்பது தவறி செய்வது...
தப்பு என்பது தெரிந்து செய்வது...
தவரு செய்தவன் திருந்தி ஆகனும்...
தப்பு செய்தவன் வருந்தியாகனும்
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
எற்று என்று இரங்குவ செய்யற்க - யான் செய்தது எத்தன்மைத்து என்று பின் தானே இரங்கும் வினைகளை ஒருகாலும் செய்யாதொழிக; செய்வானேல் மற்று அன்ன செய்யாமை நன்று - அன்றி ஒருகால் மயங்கி அவற்றைச் செய்யும் தன்மையனாயினான் ஆயின், பின் இருந்து அவ்விரங்கல்களைச் செய்யாதொழிதல் நன்று. ('இரங்குவ' என முன் வந்தமையின், பின் 'அன்ன' வெனச் சுட்டி ஒழிந்தார். அவ்வினைகளது பன்மையான் இரக்கமும் பலவாயின. அச்செயற்குப் பின்னிருந்து இரங்குவனாயின், அது தீரும் வாயில் அறிந்திலன் எனவும், திட்பமிலன் எனவும் பயனல்லன செய்கின்றான் எனவும், தன்பழியைத் தானே தூற்றுகின்றான் எனவும் எல்லாரும் இகழ்தலின், 'பின் இரங்காமை நன்று' என்றார்.இதுவும் வினைத்தூயார் செயலாகலின்,உடன் கூறப்பட்டது. 'பின் தொடர்தற்குச் செய்வானாயின், அவை போல்வனவும் செய்யாமை நன்று' எனப் பிறரெல்லாம் இயைபு அற உரைத்தார்.).
மணக்குடவர் உரை
துணியப்பட்ட தென்று பின்னிரங்கப்படும் வினையைச் செய்யா தொழிக; வினைசெய்வானாயின் அவை போல்வனவுஞ் செய்யாமையே நல்லது. இது பின்னிரங்கப்படும் வினையைச் செய்யலாகாதென்றது.
மு.வரதராசனார் உரை
பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை
என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.
Thirukkural - Management - Ethical Behavior
Never do acts that will make you regret or feel sorry for doing those sorts of acts. If you have done an act that makes you regret, never do that again and regret once again, reinforces Kural 655. Wisdom is not to repeat blunders. If we do a thing without knowledge, that is an error. If we do an act despite knowledge, that is a mistake. And if we do an act that brings insult, that is a blunder. Only people who never think of the consequences of their actions, will repeat actions that bring further insults.
Do not do what you will regret; and if
Do not regret.
If you build an empire through unimproved means and regret later on for having built that through
wrong practices, the entire empire would collapse internally. You cannot be proud of your achievements.
No comments:
Post a Comment