பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

thirukkural meaning விளக்கம் அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம் குறள் 275 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும்
குறள் 275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்
[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]

பொருள்
பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

அற்றேம் - ஒன்றும் இல்லாத ஒரு நிலை

என்பார் - என்று கூறுவார்

படிற்று - படிறு - வஞ்சனை; பொய்; அடங்காத்தனம்; குறும்பு; களவுப்புணர்ச்சி; கொடுமை.

ஒழுக்கம் -  நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

எற்று - எற்றுகை; எத்தன்மையது; வியப்பிரக்கக்குறிப்புச்சொல்.
எற்று - eṟṟu   III. v. t. cast, throw off, jerk away, kick away, எறி; 2. kill, கொல்லு; 3. pierce, stab, குத்து; 4. hit with the fist, குத்து; v. i. cease, நீங்கு; 2. feel pity, இரங்கு.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஏதம் - துன்பம், குற்றம், கேடு

பலவும் - பலவற்றை

தரும் - கொடுக்கும்

முழுப்பொருள்
பற்றுகளை (ஆசைகள், பிடிக்கை) அறுத்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டு உண்மையில் ஆசைகள் பலவற்றைக்கொண்டு வஞ்சனையாக (தவறாக, பொய்யாக) ஒழுகுவோர் பின்னாட்களில் மிகவும் துன்பப்படுவர். ஏனெனில் அவர்கள் பின்னாட்களில் பிழையானவற்றை ஏன்  செய்தோம் என்று எந்நாளும் யோசித்துக் கவலை கொள்வர்.

ஒரு சில நிமிட அல்லது சிறிது காலம் இன்பத்திற்காக பிழையானவற்றைச்/பாவத்தைச் செய்தால் பின்பு நெடுங்காலம் துன்பம் அனுபவிக்க நேரும். துன்பும் அனுபவிக்கும் பொழுது ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று பல காலம் வருந்துவோம்.

ஞானம் எய்துவதற்கு விரதம் எதற்கு ? உடம்பு என்பது ஒரு மாயா எந்திரம். நம்முடைய உணவுக்கும் நமது செயல்களுக்கும் தொடர்பு உண்டு.

உதாரணமாக பகவத்கீதை போன்ற நூல்களை வாசித்துவிட்டு இப்பொழுது எனக்கு விருப்புகள் ஏதும் இல்லை என்று பாவனையாக சொல்லுவோர் பலர் உண்டு. அவர்கள் தூரத்தில் இருக்கும் ஒளியை தான் கண்டு இருக்கின்றனர். அதற்கான கடுமையான பயிற்சியை இன்னும் மேற்கொள்ளவில்லை. அப்படிப்பட்டோரிடம் ஒரு சிறு கூழாங்கல்லை கொடுத்து அவர்களின் மோதிரத்தை கேட்டால் தரமாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - தம்மைப் பிறர் நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்று அற்றேம் என்று சொல்வாரது மறைந்த ஒழுக்கம், எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும் - அப்பொழுது இனிதுபோலத் தோன்றும் ஆயினும், பின் என் செய்தோம் என்று தாமே இரங்கும்வகை, அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும். (சொல் அளவல்லது பற்று அறாமையின் 'பற்று அற்றேம் என்பார்' என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய் இன்பத்தின் பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச் செய்தார், அதன் விளைவின் கண் 'அந்தோ வினையே என்றழுவர்' (சீவக.முத்தி,27) ஆகலின் 'எற்று எற்று' என்னும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின் இழுக்கம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பற்றினை யற்றேமென்பாரது குற்றத்தினை யுடைய ஒழுக்கம் எல்லாரும் எற்றெற் றென்று சொல்லும்படி பல குற்றமும் உண்டாக்கும். எற்றென்பது திசைச்சொல். இது தீமைபயக்கு மென்றது.

மு.வரதராசனார் உரை
பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.

சாலமன் பாப்பையா உரை
எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
போலித்துறவிகள் பின்னர் ‘வைத்து செய்யப்படுவர்’.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain