குறள் 798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல்]
பொருள்
உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.
உள்ளற்க - நினைக்காதீர்
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.
சிறு - ciṟu
(an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு be comes சிற்று.
சிறுகுவ -சிறு - ciṟu - க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. As சிறுகு, used in all its meanings. 2. To show anger, சினக்க. (c.) 3. v. a. To make small, to decrease, குறைக்க. கடுகு சிறுத்தாலுங் காரம் போகுமா? Will the mustard lose its pungency when made smaller, i. e. good men even under ad versity will retain their confidence.
கொள்ளற்க - கொள்ளாதீர்
அல்லல் - துன்பம்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்
ஆற்று - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்
அறுப்பார் - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்
ஆற்று அறுப்பார் – எதிர்கொள்ளும், நீக்கும் வழிகளைச் சொல்லாது, கைவிடுகின்றவர்
நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை
முழுப்பொருள்
நாம் ஒரு பெரும் செயலை செய்யும் பொழுது அல்லது வாழ்வில் ஊக்கத்தோடு உற்சாகத்தோடு செல்லும் பொழுது அந்த ஊக்கத்தை/உற்சாகத்தை குறைக்கின்ற (அல்லது சிறுமை செய்கின்ற) செயல்களை எண்ணங்களை நினைக்கக்கூடாது. ஏனெனில் அது பெரும் செயலை ஆற்ற தடையாக அமையும்.
அதுப்போல நமக்கு ஒரு துன்பம் வந்தால் உடன் இருந்து உதவாமல் நம்மைவிட்டு விலக காரணங்களைத் தேடி விலகும் நண்பரை/உறவை கொள்ளாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். அத்தகைய நண்பர்கள் நம்மை தேக்கி வைக்கவே செய்வார்கள்.
ஏன் ஊக்கத்தையும் நட்பையும் தொடர்பு படுத்துகிறார் திருவள்ளுவர்?
ஊக்கம் பெரிய செயல்களை செய்யவும் வாழ்வை வாழவும் அவசியமான ஒன்று. அதுப்போல் நல்ல நண்பர்களும் பெரும் செயல்களை செய்யவும் வாழ்வை வாழவும் அவசியமான ஒன்று. ஊக்கம் ஒன்றே நம்மை வாழ்வில் முன்னேத்து செல்லும். நம்மை ஒழுங்கு படுத்தும். நம் வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்ற உதவும். அதுப்போல நண்பர்களே நம்மை நல்வழிப்படுத்தி முன்னேற்றுவர். நம் வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்ற உதவுவர். ஊக்கத்தையும் இழக்கக்கூடாது. நல்ல நண்பர்களையும் இழக்கக்கூடாது. தீய நட்புகளையும் வைத்துக்கொள்ளக்கூடாது.
ஒப்புமை
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக. (உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.).
மணக்குடவர் உரை
தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக; அதுபோல, அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக. இது தீக்குணத்தார் நட்பைத் தவிர்க வென்றது.
மு.வரதராசனார் உரை
ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.
No comments:
Post a Comment