Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

குறள் 245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி
[அறத்துப்பால், துறவறவியல், அருளுடைமை]

பொருள்
அல்லல் - துன்பம்

அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

ஆள்(ளு)-தல் - āḷ-   2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல் எடுத்தாளாத பொருள் உதவாது.

ஆள்வார்க்கு  - ஆட்கொண்டவர்க்கு (அருள் ஆட்கொண்டவர்க்கு)

இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று.

வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய்; சிறியகாலவளவுவகை.

வழங்கும் - வழங்குதல் - இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; பயன்படுத்தல்; கொடுத்தல்; செய்துபார்த்தல்; சொல்லுதல்; நடமாடுதல்.

மல்லல் - வளம்; வலிமை; மிகுதி; பொலிவு; அழகு; செல்வம்

மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குறிக்கும்சொல்.

ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

கரி - அடுப்புக்கரி; நிலக்கரி; கரிந்தது; கருமையாதல்; மிளகு; நஞ்சு; மரவயிரம்; யானை; பெட்டைக்கழுதை; சான்றுகூறுவோன்; சான்று; விருந்தினன்; பயிர்தீய்கை; வயிரக்குற்றங்களுள்ஒன்று.

முழுப்பொருள்
இவ்வுலகில் நல்வினைகளை செய்து அருள் ஈன்றவருக்குத் துன்பம் இல்லை. அதற்கு சான்று? வேறு எந்த உலகத்திற்கும் சென்று தேட தேவையில்லை காற்று உளவும் இந்த வளமிக்க உலகத்தில் வாழ்ந்த வாழ்கின்ற அருள்பெற்ற உயர்ந்தோர்களே சான்று. 

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற  ஔவையின் “மூதுரைப்” பாடலின் கருத்தையொட்டித்தான் இங்கும் பொருள் கொள்ளவேண்டும். 

நெஞ்சில் ஈரமும், மாநிலத்துப் பிற உயிர்களிடத்தில் பெருங்கருணை கொண்டவர்கள் சிலராவது இருக்கையிலே, அவர்களும், அவர்களால் எல்லோருமே, உயிர்வாழ முதற்காரணியாய் இருக்கிற காற்று இருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது, என்றே நாம் உள்ளுரைப் பொருளைக் கொள்ளவேண்டும்

பி.கு : அப்படியானால் காந்தி போன்றோர் சுட்டுக்கொல்லப்பட்டாரே என்றால்? அது விதிவிலக்குகள்.விதிவிலக்குகளுக்கு விதி கிடையாது. அது ஊழின் கணக்கு. வேறேதோ ஒரு கணக்கிற்காகப் பெற்ற துன்பமாகும். 

வள்ளலார் போன்ற தவசீலர்களின் உள்ளங்களில் பெருக்கெடுத்து ஓடிய கருணை அவர்கள் பாடல்களிலே நமக்கு தெரியவருகிறது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார் பெருமான். பயிருக்கும் உயிர் உண்டு, அது வாடவும் காணப்பொறுக்காத மனம் வள்ளலாருக்கு இருந்திருக்கிறது.

எல்லோருக்கும் தெரிந்த குழந்தைகளைத் தாலாட்டும் தொட்டில் பாடலில், வரும் கீழ்கண்ட வரிகளைப் பார்த்தால், நம்மவர்கள் கருணையென்பதை குழந்தைகளுக்கும் சொல்லியே வளர்த்துள்ளதும் தெரியவரும். “கற்கண்டுக் கட்டியே சாய்ந்தாடு! கருணை ஒளியே சாய்ந்தாடு!”. குழந்தையை கருணை ஒளி, வளி என்பதற்காகமட்டும் சொல்லவில்லை. கருணையென்பதை நாமும் கொண்டாடுகிறோம், அப்படி ஒன்று இருப்பதை குழந்தைப் பருவத்திலேயே சொல்லிக்கொடுக்கிறோம் என்பதற்காகவே இவ்வரிகள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. ( சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
அருளுடையார்க்கு அல்லலில்லை: அதற்குச் சான்று காற்றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம். இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார்மாட்டே காணப்படுமென்றது.


மு.வரதராசனார் உரை
அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

No comments:

Post a Comment