Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

குறள் 447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இடிக்கும் - இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல்

துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்).

துணையாரை - துணையார்
- உதுவுவோரை 

ஆள்(ளு)-தல் - āḷ-   2 v. tr. [T. ēlu, K.M. āl.] 1. To rule, reign over, govern;அரசுசெய்தல். (திவ். பெரியதி. 6, 2, 5.) 2. Toreceive or accept, as a protégé; ஆட்கொள்ளுதல் ஆள்கின்றா னாழியான் (திவ். திருவாய். 10, 4, 3).3. To control, manage, as a household; அடக்கியாளுதல். 4. To use a word in a particularsense and so give currency to it; வழங்குதல் சான்றோரா லாளப்பட்ட சொல் 5. To cherish,maintain; கைக்கொள்ளுதல் நாணாள்பவர் (குறள்,1017). 6. To keep or maintain in use; கையாளுதல் எடுத்தாளாத பொருள் உதவாது.  

ஆள்வாரை - ஆள்வார்
- ஆட்கொள்வோர்; அடக்கி ஆள்வோர் ; சான்றோர் ; வழங்குவோர் ; கையாள்பவர் 

யாரே - எவரும்

கெடுக்கும் - கெடுத்தல் - அழித்தல்; பழுதாக்குதல்; ஒழுக்கங்கெடுத்தல்; அவமாக்குதல்; செயலைத்தடைசெய்தல்; இழத்தல்; நீக்குதல்; நஞ்சுமுதலியவற்றைமுறியச்செய்தல்; முறியடித்தல்; காணாமற்போகுதல்

தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.

யவர்அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

முழுப்பொருள்
நாம் தவறு செய்தாலோ அல்லது தவறான சுற்றத்தாருடன் இருந்தாலோ அல்லது தீயது/கேடு நம்மை நெருங்கினாலோ நம்மிடம் கடிந்துக்கொண்டாலும் நம்மை தற்காக்கும் பெரியோர் நமக்கு நல்லவற்றையே தருவர். மேலும் கேடு வராமல் இருக்க வேண்டியவற்றை செய்யச்சொல்வர். அத்தகைய பெரியோர் நமக்கு துணையாக இருக்கும் பொழுது நமக்கு கேடினை விளைவிக்கக்கூடியவர் யார் இருக்க முடியும்?  

ஆதலால் பெரியோர் துணைக்கொண்டு அவர் கூறுவதுபோல் ஒழுகு என்று சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”இடிக்குங் கேளிர்” (குறுந்.58)
“மேனின்று மெய்கூறும் கேளிர்” (கலி.3:21)

பரிமேலழகர் உரை
இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்?
(தீயன: பாவங்களும் நீதியல்லனவும் துணையாம் தன்மையாவது , தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம் . 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர். இது கேடில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை
தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?.

English Meaning - As I taught a kid - Rajesh
When  one (an individual / king) has a support system of people (parents, family, friends, teachers, mentors, ministers, scholars, experts, specialists, advisors etc) who inform us, caution us, (if required) get angry with us and scold us) about upcoming danger, hurdles or current danger and advise us to prevent it, control the damage, rebuild etc, then what danger or who can destroy that individual / king?
This kural says that mentors help to alerts us, advise us. If required, mentors can also get angry with us because their intention is to prevent the danger and avoid destruction.

Questions that I ask to the kid
When you have mentors who can scold us, what is the advantage of it?

No comments:

Post a Comment