Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

குறள் 593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்
[பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஆக்கம் - அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு; ஈட்டம்; விளைவிக்க கூடியது செயல்

இழந்தேம் - இழத்தல் -  இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

அல்லா-த்தல் - allā   12 v. intr. 1. To suffer, to be in distress; துன்பமுறுதல். வயவுநோய் நலிதலி னல்லாந்தார் (கலித். 29). 2. To rejoice, to beglad; மகிழ்தல் அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி (குறிஞ்சிப். 143).

அல்லாவார் - துன்பப்படாதவர்

ஊக்கம் - மனத்திடம்; உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி; உள்ளத்தின்மிகுதி; முயற்சி; வலிமை; உயர்ச்சி; மேற்கொண்டஎண்ணம்; உண்மை.
ஊக்கம் - ஊக்கம் எனப்படுவது உள்ளத்தில் உருவாகும் உள்ளம் சார்ந்தப் பண்பு. ஆதலால் ஊக்கம் நிலை நிற்கும்;

ஒருவந்தம்  - உறுதி; ஒருதலை; நிலைபேறு; சம்பந்தம்; ஒற்றுமை; தனியிடம்

கைத்து - கையிலுள்ளபொருள்; பொன்; செல்வம்; வெறுப்பு.

கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.

உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

முழுப்பொருள்
ஊக்கத்தையும் மனஉறுதியையும் தன் கையில் செல்வமாய் கொண்டவர்கள் பொருட்செல்வைத்தையோ அல்லது தான் இயற்றியப் படைப்பையோ இழந்தால் இழந்ததை நினைத்து வருந்தி துன்பப்பட்டு அத்துன்பத்தில் உழலமாட்டார்கள். கை என்ற சொல்லுக்கு ஆற்றல் என்று பொருள். ஆதலால் ஊக்கத்தை ஆற்றலாய் கொண்டால் எதுவும் இழப்பல்ல. தன்னுடைய கவனத்தை செயலில் ஈடுப்பதி மீள்வர்.

சம்பந்தர் பெருமான் பக்தி செய்வதில் அத்தகைய உறுதியிலே நின்றதை, “இடறினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்” என்று வரும் பதிகப்பாடல் குறிப்பதைக் காணலாம்.

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் தேவதேவனின் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது. 
ஒரு புல்லின் உதவி கொண்டு
பூமியிலொரு பச்சைக் கம்பளம் விரித்தேன்
ஒரு மரக்கிளையின் உதவிகொண்டு
புள்ளினங்கள் கொஞ்சுமோர்
பள்ளத்தாக்கை எழுப்பினேன்
ஒரு கூழாங்கல்லின் உதவிகொண்டு
மலையடுக்குகளையும் அருவிகளையும் உருவாக்கினேன்
ஒரு தேன்சிட்டின் ஆலோசனை கொண்டு
விண்ணிலோர் மாளிகை அமைத்தேன்
ஒரு கண்ணீர்த் துளி கொண்டு
வானமெங்கும் கார்மேகங்களைப் படரவிட்டேன்
-- தேவதேவன்

எழுத்தாளர் ஜெயமோகனின்’ வெண்முரசு-கிராதம்-16 இல் கைகள் நமது உள்ளத்து விசையுடன் ஒப்பிட்டு சில வரிகள் வருகின்றன. தொடர்புடைய சில பத்திகள்

ஆற்றல் உள்ளோர் ஒரு புல்லை வைத்துக்கொண்டு ஒரு புல்லின் உதவி கொண்டு பூமியிலொரு பச்சைக் கம்பளம் விரிக்கமுடியும் என்று படித்தால் இக்கவிதை மேன்மேலும் வளரும் என்று நினைக்கிறேன். இழந்ததை நினைத்து வருந்துவதை விட இருப்பதை வைத்து நாம் செய்யக்கூடியவை ஏறாலம். 

மலைகளிலிருந்து இறங்கி சீர்நிலத்திற்கு வரும் வழியிலேயே அர்ஜுனன் அவன் மேலே செல்லும்போது விட்டுச்சென்ற ஒவ்வொன்றையும் திரும்ப பெற்றுக்கொண்டான். அவன் கைவிட்டுச் சென்ற இடங்களிலேயே அவை அவனுக்காக கல்லென உறைந்து தவம் செய்தன. நெடுந்தொலைவிலேயே அவன் காலடி ஓசை கேட்டு விழியொளி கொண்டு உடலில் உவகை அசைவுகளுடன் எழுந்தன. அவனைக் கண்டதும் கைவிரித்தோடி வந்து பற்றிக் கொண்டன.

முதலில் வந்தவள் ஓநாயின் முகம் கொண்டவளாகிய ஜடரை. மெல்லிய முனகல் ஓசையுடன் எழுந்து காற்றென வந்து அவன் உடலைத் தழுவி அவனை முத்தமிடத்தொடங்கினாள். குளிர்ந்த மூக்கின் முத்தங்களால் அவன் உடல் சிலிர்த்துக் கூசியது. அவள் வாயிலிருந்து வெம்மைகலந்த மூச்சு ஊன் மணத்துடன் எழுந்தது. அனலென அவன் வாய்க்குள் புகுந்து வயிற்றில் குடிகொண்டாள். அவன் முன்னால் நடந்தபோது உடலெங்கும் அவள் எரிவதை உணர்ந்தான்.

மூவேளை பசியென  அவன் உடலில் அவள் எழுந்தாள். அவன்  வாழ்ந்தகாலத்தை மூன்றென பகுத்தாள். அவன் உடலை எரிவதும் அணைவதுமென இரு செயல் கொண்டதாக ஆக்கினாள்.  அவன் நோக்கிய அனைத்தையும் உண்ணத்தக்கதும் அல்லதுமாக பிரித்துக்காட்டினாள். அவன் கால்களில் ஆற்றலாகவும் கைகளில் விசையாகவும் எண்ணங்களில் ஒளியாகவும் ஆனாள்.


 “கை கை” என்றபோது கடைவாயில் பால் வழிந்தது. “நரம்புகள் இழுபட்டுள்ளன, இளவரசே. சீராக சிலநாட்களாகும்” என்றார் அவர். அவன் தன் உடலே எண்ணங்களுக்குத் தொடர்பின்றி கிடப்பதை உணர்ந்தான். “ஆனால் உடல் துடிக்கிறது. அது நன்று. உள்ளத்தை உந்தி அதற்குள் செலுத்திக்கொண்டே இரு. அது உயிர்கொள்ளும்” என்றார் அவர்.

அர்ஜுனன் தலையை அசைத்து கண்களை மூடிக்கொண்டான். அவனில் கண்ணீர் வழியத் தொடங்கியது. “காய்ச்சல் நின்றிருக்கிறது. புண்கள் ஆறத் தொடங்குகின்றன என்று பொருள்” என்றார் பூசகர். “முன்பென என் கை செயல்கொள்ளுமா?” என்றான். “கை என்பது சித்தத்தின் கருவி” என்றார் பூசகர். அவன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். “நீ ஆற்றவேண்டியவை பல உள்ளன, இளவரசே” என்று பூசகர் சொன்னார். “நேற்று நான் அறிந்தவை அனைத்தையும் உன்னிடம் சொல்லவேண்டும்.”

மானுட உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் பொருளுண்டு. தலை அறிதல். முகம் மகிழ்தல். கைகள் ஆற்றுதல். நெஞ்சு எதிர்கொள்ளல். தோள்கள் சுமத்தல். வயிறு எரிதல். தொடைகள் தாங்குதல். விழைவு தலையென்றாகிறது. ஆற்றல் தோளென்றாகிறது. இளவரசே, ஆணவமே தொடையென்றாகிறது.” அவன் “எவருடைய ஆணவம்?” என்றான். “எவருடையதென்றிலாது எங்கும் நிறைந்திருப்பவை உணர்வுகள். மானுடர்கள் அவற்றை எதிரொளிக்கமட்டுமே செய்கிறார்கள்.”

பரிமேலழகர் உரை
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - இழந்தாராயினும் யாம் கைப்பொருளை இழந்தேம் என்று அலமரார்; ஒருவந்தம் ஊக்கம் கைத்து உடையார் - நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்.
('ஆக்கம்' ஆகுபெயர். ஒருவந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: 'கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி.19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.).

மணக்குடவர் உரை
செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார். இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.

மு.வரதராசனார் உரை
ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.

Thirukkural - Management - Motivation
One of the challenges for employees in work place setting today is their ability to stay motivated  and for the managers and the leaders is to stay motivated and to keep their people stay motivated. “Motivation is a human psychological characteristic that contributes to a person's degree of commitment. It includes factors that cause, channel, and sustain human behavior in aparticular committed direction,” (Stoner, 1995). Motivation is a steam for accomplishment of tasks. Valluvar motivates us to stay motivated through his thoughts on motivation.Kurals that help us gain knowledge on the power of motivation for superior performance.

Kural 593 is too inspiring that if a person possesses motivation as a resource or weapon he will not regret even when he loses his personal possessions. Motivation is a possession that helps him regain his lost possessions. A motivated person will not give up at the face of adversities, assures Kural 593. 

Those who have vigor will not lament
The loss of goods.

Adversities and challenges strengthen a person to become better and achieve more. At times even for a motivated person, discouraging words from others is motivating. A motivated person perceives a demotivator as a motivator. 

English Meaning - As I taught a kid - Rajesh
When a person loses wealth or his/her work or fails in an effort or faces a setback, he/she will not worry or have pain about it if he/she has perseverance and determination as he/she will firmly believe that he has hands to do work and recover. Hands is a sign of capability and discipline. Because he/she will get over it, learn from the mistakes and focus on the next work.  A person who has perseverance will not dwell over failures. Also, this kural doesn't say that that person will not worry about the failure or worry about the mistakes. It only means, one will not dwell about failures much. A determined person acknowledges and accepts failure/mistakes. A determined person learns from mistakes/failure and gets better. 

Questions that I ask to the kid
When one loses wealth or faces failure, what should one do ?
What does hand signify you? Explain in detail.

No comments:

Post a Comment