Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

குறள் 386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
காட்சிக்கு - பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

எளியன் - வறியவன்; இலகுவாய்அடையப்படுபவன்; வலியில்லாதவன்; அறிவில்லாதவன்; குணத்தில்தாழ்ந்தவன்.

கடுஞ்  - கடுமை - கொடுமை; கண்டிப்பு; கடினம்; வன்மை; மிகுதி; விரைவு; வெம்மை; மூர்க்கம்; சினம்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

அன் - ஆண்பால்வினைவிகுதி; தன்மையொருமைவிகுதி; ஆண்பால்பெயர்விகுதி; ஆண்பால்வினையாலணையும்பெயர்விகுதி; சாரியை எதிர்மறைகாட்டும்வடமொழிமுனனொட்டுத்திரிபுசொல்.

அல்லனேல் - இல்லையென்றால் 

மீக்கூறு - புகழ்.
மீக்கூற்றம் - புகழ்; மேலாகமதிக்கப்படுஞ்சொல்.
மீக்கூறு-தல் - mī-k-kūṟu-   v. tr. மீ² +.To praise; உயர்த்துக்கூறுதல். மீக்கூறு மன்னனிலம் (குறள், 386).

மீக்கூறும் - புகழ் பேசப்படும்

மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

முழுப்பொருள்
அரசனிடம் அல்லது அரசனின் அமைச்சர்களிடம் அல்லது அரசாங்க அலுவலகத்திடம் நீதிக்கோ உதவிக்கோ வந்தால் வருபவர் காண்பதற்கு தோற்றத்தால் அறிவினால் வறியவராக (எளியவராக, அறிவில்லாதவராக) தோன்றினால் அவரிடம் மனம் வருந்தக்கூடிய கடுமையான வன்மையான சொற்களை பேசாது சினத்தை காண்பிக்காது இருந்தால் அவ்வரசரையும் அந்த அரசையும் அந்த நாட்டையும் போற்றி புகழ் பாடும் இவ்வுலகமும் இந்நாட்டு மக்களும்.

புறநானூற்றுச் செய்தியொன்று சங்கக்காலத்து சேரமன்னனான இரும்பொறை நாட்டினை இவ்வாறுப் போற்றுகிறது.
“மாந்தரல் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே 
புத்தேளுலுகத் தற்றெனக் கேட்டுவந்து” (புறம் 22:34-5).

ஆள்பவர்கள் காட்சிக்கு எளியராயும், இனியமொழி உடையராகவும் இருத்தலை, கீழ்காணும் புறநானூற்று வரிகள் தெரிவிக்கின்றன.
“முறைவேண்டும் பொழுதில் பதன் எளியேன்”, (புறம்: 35:15)
“இன்சொல் எண்பதத்தை யாகுமதிப் பெரும”  (புறம்: 40:9)

“காட்சிக்கெளியானும் ஆம்” (அப்பர்.கருகாவூர்.4)

“நகுதக் கனரே நாடுமீக்கூறுநர்” (புறநா.72:1)

மேலும்: அஷோக் உரை

‘ராஜாதி ராஜ வேஷா ராஜனுத லலித பாஷா” என்கிறார் தியாகராஜர். அரசனுக்கரசனாக தோற்றமளிப்பவன். அரசனுக்குரிய எளிமையான பேச்சு கொண்டவன்” ராமன் ஒரு கனவு. ஓர் இலட்சியம்.

பரிமேலழகர் உரை
காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் .
(முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை
காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.
இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

சாலமன் பாப்பையா உரை
நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)

Thirukkural - Management - Leadership
People admire, appreicate, follow, and respect a leader who is: 1) easy to access by the people, that is., approachable and there are no barriers, physical and psychological, around him and 2) he never uses harsh and intimidating words, that is., he is always soft spoken irrespective of conditions and situations.

That King is to be extolled
Who is easy of access and soft-spoken.

When a leader practices these two principles with respect to the people he leads, he will make his institution, organization, society or nation prosperous. 


3 comments:

  1. பரிமேலழகர் உரை பொருத்தமாக உள்ளது, இன்தக் குறளிலும், மற்றும் பெரும்பான்மையான குறள்களிலும். சாலமன் பாப்பையா உரை, நிறைய இடங்களில், மிகுதியாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. உண்மை. பெரும்பான்மையான குறள்களில் சாலமன் பாப்பையா உரையுடன் ஒத்துபோகும். ஏனெனில் சாலமன் பாப்பையா அவ்வளவு ஆழ்ந்து யோசித்து விளக்கி இருப்பார். ஏற்கமுடியாத உரை என்று சொல்ல முடியாது. சில இடங்களில் மாறுபடலாம். அது அவரவரின் கண்ணோட்டம். ஏற்புடையதை எடுத்துக்கொள்ளலாம். வள்ளுவரே அதனால் தான் எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அரிது என்கிறார். பெரும்பாலும் பார்த்தால் 90% உரைகள் ஒத்துபோகும். சில இடங்களில் தான் (குறிப்பாக ஒழுக்கம், பெண்கள், கடவுள் வாழ்த்து, ) சம்மந்தமான குறள்களில் மாறுபடும். அது அப்படி தான்.

      Delete