குறள் 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
[பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
தாளாண்மை - ஊக்கம்; விடாமுயற்சி
இல்லாதான் - இல்லாதவன் (உவமைகளுக்கும், இணைகளுக்கும் அப்பாற்பட்டவன்); வறியவன்,
வேளாண்மை - பயிர்த்தொழில்; உதவிபுரிதல்; கொடை; உண்மை
பேடி - பெண்தன்மைமிகுந்தஅலி; வீரியமின்மை; நடுவிரல்; அச்சம்.
கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம்.
வாள் - ஒளி; கத்தி; கத்தரிகை; கூர்மை; ஈர்வாள்; விளக்கம்; புகழ்; கொல்லுகை; கலப்பை; உழுபடையின்கொழு; கயிறு; நீர்; கச்சு
ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை
போல - ஓர்உவமவுருபு
கெடும் - கெடும்; கேடு விளைவிக்கும்
முழுப்பொருள்
வீரம் அல்லாத ஒரு பேடியின் கையில் கூர்மையான வாள் இருந்தாலும் அவன் போர்க்களத்தில் அழிந்துவிடுவான். கூர்மையான வாளுக்கு பகைவரை கொள்ளும் ஆற்றல் இருந்தாலும் அதனை பயன்படுத்த தெரியவில்லையென்றால் அந்த வாளினால் ஒரு பயனுமில்லை. அது அட்டக்கத்தியிற்கு சமம் என்று சொல்லலாம்.
அதுப்போல விடாமுயற்சியில்லாதவன் பிறருக்கு உதவுவேன் என்று சொல்வதும் ஆகும். ஏனெனில் விடாமுயற்சியில்லாதவன் செல்வத்தை ஈட்டமுடியாது. செல்வம் இல்லாதவன் பிறருக்கு உதவிபுரிய முடியாது.
முயற்சியில்லாதவன் தன்னை வீரன் போல் காட்டிக்கொள்ளும் பேடியிற்கு சமம்.
மேலும்: அஷோக் உரை
அதுப்போல விடாமுயற்சியில்லாதவன் பிறருக்கு உதவுவேன் என்று சொல்வதும் ஆகும். ஏனெனில் விடாமுயற்சியில்லாதவன் செல்வத்தை ஈட்டமுடியாது. செல்வம் இல்லாதவன் பிறருக்கு உதவிபுரிய முடியாது.
முயற்சியில்லாதவன் தன்னை வீரன் போல் காட்டிக்கொள்ளும் பேடியிற்கு சமம்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை - முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும் - படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம்.('ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர், பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடையனாயினும், அது தன் வறுமையான் முடியாதுஎன்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும்ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டாலஞ்சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும். இஃது அறம் செய்யமாட்டானென்றது.
மு.வரதராசனார் உரை
முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.
English Meaning - As I taught a kid - Rajesh
A person, who does not put efforts to perform his responsibilities, tells others that he will help them looks like a coward holding a sword in his/her hand. There is no use/result out of it. A coward despite having a tool like sword cannot fight. Similarly a person who doesn't work cannot help others because he doesn't earn wealth.
Questions that I ask to the kid
Can a person help without effort? Why? What it looks like?
No comments:
Post a Comment