Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

குறள் 255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உண்ணா - உள்நாக்கு; அண்ணத்துள்ளசிறுநாக்கு; அண்ணம், மேல்வாய்

உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

உண்ணாமை - உணவு உட்கொள்ளாமல் இருத்தல், (பொருள்களை) நுகராது இருத்தல், (பொருள்களை) அனுபவிக்காமல் இருத்தல்;

உள்ளது - உள்பொருள்; உண்மை; மெய்; உண்மைப்பொருள்; ஆன்மா; ஏற்பட்டது, விதிக்கப்பட்டது.

உயிர்நிலை - உடல், உயிர்தங்கும்இடம்; உயிரின்உண்மைவடிவம்; பிராணாயாமம், உட்கருத்து

ஊன் - ūṉ   s. flesh, தசை; 2. meat, மாமிசம்; 3. marrow, fat, நிணம்; 4. proud flesh over a sore; 5. the body, உடல்; இறைச்சி; கொழுப்பு; உடம்பு.

உண்ண - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

அண்ணா-த்தல் - aṇṇā-   12 v. intr. id.[K. aṇṇe, M. Tu. aṇṇā.] 1. To look upward;மேல்நோக்குதல். (நற். 10.) 2. To gape, open themouth; வாய்திறத்தல் அண்ணாத்தல் செய்யா தளறு(குறள், 255). 3. To hold the head erect; தலைநிமிர்தல் நண்ணார் நாண வண்ணாந் தேகி (புறநா. 47).  

அண்ணாது -  வாய் திறக்காமல் 

செய்யாது - செய்யாமல்

அளறு - குழைசேறு; குழம்பு காவிக்கல் நீர் நரகம்

முழுப்பொருள்
ஊன் உணவுகளை உண்ணாது இருத்தலில் / புலான்மறுத்தலில் இருக்கிறது உயிர்நிலை. ஏனெனில் அந்த உயிர்களை உண்ணாமல் இருப்பதால் தான் இயற்கையின் சமநிலை பேணப்பட்டு அவ்வுயிர்கள் எண்ணிக்கையில் குறையாது இருக்கிறது. அதனை மீறி ஊனை உண்டால் அவனை நரகம் தன் வாய்திறந்து வெளியே விடாது. நரகத்தில் நிரந்தரமாக இருக்கவேண்டியதுதான். நரகம் அவனை வைத்து வதைக்கும்.

இன்று விதிகளை மீறி மாமிசத்திற்குப் பயன்படும் பல வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது என்பதை உலகம் அறிய தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் இவ்வுலகத்தில் படைக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளும் மனிதனுக்கு தான் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் இயற்கை ஒரு சமநிலையை பேணவே எல்லா உயிர்களையும் ஒரு அளவில் படைத்துள்ளது. அச்சமநிலையை கெடுத்தால் அதன் மோசமான பின்விளைவுகளை நாம் அனுபவித்ததாக வேண்டும். குறிப்பிட்ட சில உயிரனங்கள் குறைகின்றது என்றால் அதற்கு காரணம் மனிதன் தான்.

அதேப்போல் மேற்கத்திய நாடுகள் மாட்டு இறைச்சிகளை இந்தியா போன்ற நாடுக்களிடம் இருந்து இறக்குமதி செய்கின்றன. இதனால் இந்தியாப் போன்ற நாடுகளில் மாடுகளை அதிகமாக வளர்க்கிறார்கள். ஒவ்வொரு மாட்டுக்கும் தண்ணீர் தேவைகள் அதிகமாக இருக்கும். இத்தண்ணீர் விவசாயத்திற்கும் மற்ற இயற்கை வளங்களான மரங்களுக்கும் பயன்பன்படாமல் போகின்றன. இதனால் இயற்கையின் சமநிலை குலைகிறது. அதிகாமன ஏற்றுமதியும் இறக்குமதியும் இதற்கு முக்கியமான காரணம் என்றாலும், இதனுடைய வேர் ஊன் உணவை உண்ணுவதில் இருக்கிறது. அதனால் தான் உண்ணாம உள்ளது உயிர்நிலை என்கிறார் திருவள்ளுவர்.

சீவக சிந்தாமணி (1235) ஊண் உண்பார் நரகத்துழலுதலை, ”ஊன்சுவைத் துடம்பு வீக்கி நரகத்தில் உறைதல்” என்கும். முனைப்பாடியார் எழுதி அறநெறிச்சாரப் பாடல் நரகுய்க்கும் என்று சொல்லாவிட்டாலும், ஊனை ஒழித்தால் ஊறு இல்லை என்கிறது.
“கொன்றூன் நுகருங் கொடுமையை யுன்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல்-என்றும்
இடுக்கணெனவுண்டோ இல்வாழ்க்கைக்குள்ளே
படுத்தானாந் தன்னைத் தவம்.”

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
உயிர் நிலை உண்ணாமை உள்ளது - ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது - ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது. (உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், 'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்றார். 'உண்ணின் என்பது உண்ண' எனத்திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார்்மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
புலாலை யுண்ணாமை வேண்டும். அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின். இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

சாலமன் பாப்பையா உரை
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.

English Meaning - As I taught a kid - Rajesh
Survival of species (or the equilibrium of the eco system), depends on not being eaten; those who eat them… hell will not split its mouth to spit them out. They have to suffer in the hell. i.e., survival of species is ensured by presence of vegetarians. 

Many western countries import meat from developing countries. This is because they want to protect their water (and ground water). When developing countries cultivate more livestock, it ends up depleting the water resources quickly and even depletes the ground water. For e.g., for 1 kg of rice we need approximately 3000 to 5000 litre of water. For 1kg of chickpeas we need approximately 10000 litre of water. However, for 1 kg of beef meat, we need approximately 15000 litre of water. 1kg of chickpeas can be consumed by at least 20 people. However 1kg of meat can be consumed only 10 people. Meat is not water economical by any standards. (There are other aspects such as carbon foot prints etc)

When the water from the natural resources such as river and ground water are misused (for the sake of beef meet), it would lead to barren lands which would in turn cause draught. This would lead to food shortages leading to inflation leading to poverty leading to deaths etc. This can be considered as hell.

Questions that I ask to the kid
What does survival of species depends on? Explain with an example. 

No comments:

Post a Comment