Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

குறள் 314
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

செய்தாரை - செய்தார் - (துன்பம் தரும் செயலைச்) செய்தவர் 

ஒறுத்தல் - தண்டித்தல்; கடிதல்; வெறுத்தல்; இகழ்தல்; அழித்தல்; துன்புறுத்தல்; வருத்துதல்; ஒடுக்குதல்; நீக்கல்; குறைத்தல்; அலைத்தல்; நோய்செய்தல்; உலோபம்பண்ணுதல்.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

நாண - நாண்  - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

நல் - நல்ல

நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.

செய்து - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

விடல் -  விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம்.

விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள்
ஒருவர் நமக்கு துன்பம் செய்தால் அவனுக்குத் தண்டனை கொடுக்கத் தான் வேண்டும். ஏன் திருவள்ளுவர் தண்டிக்க வேண்டும் என்று கூறுகிறார்? ஏனெனில் தண்டிக்கவேண்டும் என்று கூறினால் தான் மனித மனம் சற்று அமைதியடையும். துன்பம் அடைந்தவன் சினம் கொண்டு இருக்கிறான். அவனை சாந்தப்படுத்த வேண்டும்.

அவனை எப்படி தண்டிக்க வேண்டும்? அவனை வெட்கப்பட வைக்க வேண்டும்.

எப்படி? சுலபமான வழி இருக்கிறது. அவனுக்கு நன்மை செய்துவிடு. அவன் ஆயுள் முழுவதும் வெட்கப்படுவான். செய்த தவறுக்கு வருந்துவான். ஏனெனில் நீ பதிலுக்கு தீமை செய்தால் அவன் பதிலுக்கு தீமை செய்வான். இது வளர்ந்துக்கொண்டே போகும்.

பின்பு என்ன செய்யவேண்டும்? அவன் செய்த தீமையையும் நீ செய்த நன்மையையும் மறந்து விடு. அதனை விட்டு நீங்கிவிடு. ஏனெனில் உன் மனதில் அவன் செய்த தீமையும் நீ செய்த நன்மையும் நிற்குமானால் அது பேசுப்பொருளாகி பகை மனதில் நிலைத்துவிடும் (தங்கிவிடும்). பகை இருந்தால் முகத்தில் சிரிப்பும் அகத்தில் மகிழ்ச்சியும் இழப்பாய். ஆதலால் பிறர் செய்த துன்பத்தையும் நீ செய்த நல்லவையும் மறந்துவிடு.

சரி பிறர் நமக்கு தீமை செய்தால் என்ன செய்யவேண்டும்? 
1) மறக்க வேண்டும் (Forget it. Do not carry the baggage) 
2. மன்னிக்க வேண்டும் 
3) நல்லது செய்ய வேண்டும்

சரி, நாம் பிறரை மன்னிக்கவில்லை என்றால் என்னவாகும்?
1) நாம் கோபப்படுவோம்
2) தவறாக புரிந்துக்கொள்வோம்
3) பழி வாங்குவோம்
இவையாவும் நமது ஆக்கசக்தியை அழிக்கும். நமது செயலில் இருந்து நம்மை விலக்கும். அதனால் நமது பாதையில் இருந்தும் குறிக்கோளில் இருந்தும் திசை மாறுவோம்.


என்ற இரு குறள்களையும் இங்கு நினைவில் கொள்க. இதனை உணர்ந்தால் ஏன் நாம் நன்மை செய்யவேண்டும் என்பது நமக்கே விளங்கும்.

மஹாத்மா காந்தி அவர்கள் லியோ டால்ஸ்டாயிடம் (Leo Tolstoy) நீங்கள் இந்த அஹிம்சையை (Non-violence) ஐ எங்கு கற்றீர்கள் என்று கேட்டதற்கு லியோ டால்ஸ்டாய் சொன்னார் “அதனை உங்கள் நாட்டு இலக்கியமான திருக்குறளில் இருந்து கற்றேன் என்று”. Source: Thirukkural inspired Gandhi to adopt non-violence - The Hindu

சமண மதத்தில் விரதங்கள் ஐந்துனுள்ளும் அகிம்சையே தலையாயது. சமண அதனை அனுட்டிப்பது போல் வேறு யாருமே அனுட்டிப்பதில்லை. சமணர் அதனை அறவே நீக்குவர். இந்த அகிம்சையிலும் ஒரு நுட்பம் கவனிக்கப்படல் வேண்டும். பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவியாதிருப்பது மட்டுமல்ல அகிம்சை. பிற உயிர்களுக்கு அகிதம் செய்யாமை மட்டோடு நில்லாது, இதமும் செய்வதே அகிம்சை. ஏனெனில், ஓர் உயிருக்குச் செய்யக்கூடிய இதத்தைச் செய்யாமலிருப்பது அவ்வுயிருக்குத் தீங்கு செய்வதற்குச் சமமாகும். பிறவுயிருக்குத் தீங்கு செய்யாமை என்னும் விரதத்தைச் சமணர் அனுட்டிக்கும்போது தம்முயிருக்குத் தீங்கு சேயும் எல்லைவரை சென்றுவிடுகின்றனர்.  பிறவுயிருக்கு அணு அளவு தீங்குகூட இழைக்க ஒருப்படார். நிலத்திலுள்ள சிறு செந்துக்களுக்கூடத் தீங்கு இழையாதிருக்கும்பொருட்டு உறி கட்டி, அவ்வுறியில் உட்கார்ந்து “உறியிற்சமணர்” என்ற சிறப்புப் பெயரையும் அவர்கள் பெற்றனர். சுவாசிக்கும் போது வாயு மண்டலத்திலுள்ள கண்ணுக்குப் புலப்படாத செந்துக்கள் சுவாசத்தோடு உட்சென்று இறக்காதிருக்கும்பொருட்டு மூக்கைத் துணிகொண்டு மூடியே அவர்கள் சுவாசிப்பர். 

நெல்சன் மண்டேலா (Nelson  Mandela) அவர்கள் தென்னாபிரிக்க நாட்டின் தலைவராக பொறுப்பு ஏற்கும் பொழுது  அவ்விழாவிற்கு அவர் சிறையில் இருந்த பொழுது அவரை தரக்குறைவாக நடத்திய காவலர்களை அழைக்கிறார். உங்களை தரக்குறைவாக நடத்தியவர்களை ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நெல்சன் மண்டேலா கூறுகிறார் நான் அவர்களை மன்னிக்கவில்லை என்றால் நான் (பகை என்னும்) சிறையில் அகப்பட்டு கொள்கிறேன் என்று தான் அர்த்தம். அவர்களை மன்னித்து என் நண்பர்களாக ஏற்றால் தான் நான் அதை கடந்து மனதளவில் சுதந்திரம் பெற்று இருக்க முடியும் என்று கூறுகிறார். 


கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சி உரைத் தொகுப்பு, குறுந்தொகையிலிருந்து ஓரம்போகியாரின் மருதநிலப்பாடலை எடுத்துக்காட்டுகிறது. அதில் மருதநிலத் தலைவன், தன்னுடைய செல்வத்துக்கும் வெற்றிக்கும் காரணமான தலைவியை விட்டுப்பிரிந்து பரத்தையரிடம் கூடி, அதன் அடையாளங்களுடன் தன்மனைக்குத் திரும்பினான். அவனுடைய புறக்கணிக்கும் கொடுமையை பிறர்க்குத் தெரியாதவண்ணம் மறைத்து, அவனை இன்முகம் காட்டி வரவேற்று, அவன் செயலுக்கு, அவனையே நாண வைக்கிறாள். அதைச் சுவையாகக் கூறுகிறது இந்த இலக்கியப்பாடல்.

யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே

நாலடியாரின் ஒருபாடலும் இக்குறளின் கருத்தையொட்டியுள்ளது. பொருள் எளிதில் விளங்கக்கூடிய பாடல். நாலடியார் எழுதப்பட்டகாலத்திலேயே வடமொழிச் சொற்கள் பாடல்களின் விரவியிருந்ததைக் காட்டும் பாடலும் கூட. உபகாரம், அபகாரம் போன்றவை சமஸ்க்ருதச் சொற்கள்.

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் – உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

இப்போது பாரதியின் அருமையான ஒரு பாடலை முழுமையாகப் பார்த்துவிடலாம்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே – நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் – நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான் (பகை)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ? – நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ? – நன்னெஞ்சே
கொடி வளராதோ? (பகை)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? – நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? – நன்னெஞ்சே
சேர்த்த பின் தேனாமோ? (பகை)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? – நன்னெஞ்சே
வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ? – நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ? (பகை)

போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும் அவன் – நன்னெஞ்சே
போல வந்தானும் அவன்
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ? – நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன் அன்றோ? (பகை)

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் – நன்னெஞ்சே
சிந்தையில் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே
அவளைக் கும்பிடுவாய் (பகை)


மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”காஞ்சி யூரன் கொடுமை
கரந்தனள் ஆகலின் நாணிய வருமே” (குறுந்தொகை 10:4-5)

“உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்” (நாலடி 69)

பரிமேலழகர் உரை
இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை
இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் நெறி கூறியது.

மு.வரதராசனார் உரை
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

சாலமன் பாப்பையா உரை
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

Thirukkural - Management - Not Hurting Others
Some of us may strongly believe in taking revenge, as revenge is a wild justice. “Revenge,”  according to Oxford Advanced Learner's Dictionary [1996, p. 1006) “is a deliberate punishment or injury inflicted in return for what one has suffered.” We, in spite of so many human and technological developments, still believe in tit-for-tat practice.

We affirm that the best way to heal  our hurt is to pay back the person who has hurt us with the same coin, criticizes Kural 314. We do that despite our knowledge that if we hurt or damage someone, we may in turn get hurt or damaged. In spite of that knowledge,  we still keep practicing the act of hurting others. Three Kurals are presented in this practice to help us change our perspectives and lead a life of not hurting others. We need to be proactive in our reactive approach. That is., even our responses to someone's negative action must be proactive so that that sets precedence.

Punish an evil-door by shaming him
With a good  deed, and forget.

To punish a person who has done harm to you is to do him a benefit so that he will feel ashamed of his harmful act. If someone hurts you, harms you, insults you, and criticizes you, you in turn do a good deed so that that person will feel ashamed of what he has done to you. That feeling in him in itself is enough to change that person's future acts. Pay him back with a positive act so that he will have a chance to reflect on your act. Though that sort of action is 
positive, that practice is reactive as the intention of doing a positive deed is to make him feel ashamed of what he did.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
(சமண மதத்தில் துறவிகளுக்கு ஐந்து விரதங்கள்  உண்டு. அவற்றில் ஒன்று அகிம்சை)
அகிம்சை
விரதங்கள் ஐந்துனுள்ளும் அகிம்சையே தலையாயது. சமண அதனை அனுட்டிப்பது போல் வேறு யாருமே அனுட்டிப்பதில்லை. புத்தர்கூட ஊன் உண்பதை அநுமதித்ததாகக் கூறப்படுகின்றது. சமணர் அதனை அறவே நீக்குவர். இந்த அகிம்சையிலும் ஒரு நுட்பம் கவனிக்கப்படல் வேண்டும். பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவியாதிருப்பது மட்டுமல்ல அகிம்சை. பிற உயிர்களுக்கு அகிதம் செய்யாமை மட்டோடு நில்லாது, இதமும் செய்வதே அகிம்சை. ஏனெனில், ஓர் உயிருக்குச் செய்யக்கூடிய இதத்தைச் செய்யாமலிருப்பது அவ்வுயிருக்குத் தீங்கு செய்வதற்குச் சமமாகும். பிறவுயிருக்குத் தீங்கு செய்யாமை என்னும் விரதத்தைச் சமணர் அனுட்டிக்கும்போது தம்முயிருக்குத் தீங்கு சேயும் எல்லைவரை சென்றுவிடுகின்றனர். இன்று சட்ட விரோதமாகக் கருதப்படும் தற்கொலையைக்கூடச் சமணர் குற்றாமக் கருதார். ஆனால், பிறவுயிருக்கு அணு அளவு தீங்குகூட இழைக்க ஒருப்படார். நிலத்திலுள்ள சிறு செந்துக்களுக்கூடத் தீங்கு இழையாதிருக்கும்பொருட்டு உறி கட்டி, அவ்வுறியில் உட்கார்ந்து “உறியிற்சமணர்” என்ற சிறப்புப் பெயரையும் அவர்கள் பெற்றனர். சுவாசிக்கும் போது வாயு மண்டலத்திலுள்ள கண்ணுக்குப் புலப்படாத செந்துக்கள் சுவாசத்தோடு உட்சென்று இறக்காதிருக்கும்பொருட்டு மூக்கைத் துணிகொண்டு மூடியே அவர்கள் சுவாசிப்பர். 

English Meaning - As I taught a kid - Rajesh
If one gives you pain or difficulties in life, how should you punish them? Punish them by doing good things to him. It will make the other person ashamed as well as realize the mistake. Also, when punishing others by taking revenge and doing bad things, it might give momentary satisfaction. However, we learnt that, if you want to love yourself, do not do bad to others. Also, doing good and constructive things to others will give self satisfaction to others. Also, we are stopping the chain of revenge for revenge. Also, we can win others even if enemies by doing good to others.

Questions that I ask to the kid
If one gives you pain or difficulties in life, how should you punish them? On the contrary what are the consequences of punishing/hurting others?


No comments:

Post a Comment