குறள் 410
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
[பொருட்பால், அரசியல், கல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
விலங்கொடு - விலங்கு - குறுக்கானது; மாவும்புள்ளும்; மான்; கைகால்களில்மாட்டப்படுந்தளை; வேறுபாடு; தடை; உயிர்மெய்யெழுத்துகளில்இ, ஈ, உ, ஊமுதலியஉயிர்களைக்குறிக்கும்அடையாளமாகமேலும்கீழும்உள்ளவளைவு; குன்று; உடல்.
மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.
அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons
இலங்கு - குளம், ilangku III. v. i. shine, glitter, be bright, ஒளிசெய்.
நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.
கற்றார் - கற்றவர்கள்; அறிஞர், புலவர், படித்தோர், கல்வியறிவுடையோர்கள்.
உடன் - ஒக்க, ஒருசேர, அப்பொழுதே; மூன்றாம்வேற்றுமையின்சொல்லுருபு.
கற்றாரொடு - கற்றார் உடன்
ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன்.
ஏனையவர்- மற்றவர்கள், கல்லாதவர்கள் கீழ்பட்டவர்கள்
முழுப்பொருள்
ஐந்தறிவு படைத்த விலங்குகளுடன் ஒப்பிடுகையில் ஆறறிவு படைத்த மனிதன் வேறுபடுகிறான். சிந்திக்கும் திறமை வாய்ந்ததனாலேயே மனிதன் விலங்குகளை விட வேறுபடுகிறான். அதுப்போல மனிதருள் ஒளிமிக்க அறிவை தரக்கூடிய நூல்களை கற்காதவன் அந்நூல்களை கற்றவனிடம் இருந்து வேறுபடுகிறான். அதாவது ஒருவன் செல்வத்தாலோ பிறந்த குடியோலோ உடல் ஆரோக்கியத்தாலோ வாழ்ந்த ஆயுளின் அளவாளோ வேறுபடவில்லை. ஒருவன் அவனுடைய கற்ற அறிவினால் தான் வேறுபடுகிறான்.
அதனால் தான் மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தர் போன்றோர் 40 வயதிற்குள் இறந்தாலும் அவர்களுடைய அறிவின் புகழ் இன்றும் ஒளியாக பிரகாசமாக விளங்குகிறது.
மனிதர்கள் விலங்குகளை விட மேம்பட்டவர்கள் என்றெல்லாம் திருவள்ளுவர் கூறவில்லை. ஏனெனில் விலங்குகள் பேராசை அற்றது ஒழுக்கமாக வாழ்வது. இன்றைக்கு வாழ்வது. அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்க்காதது. இயற்கையை சேதம் செய்யாதது. மனிதன் அப்படிப்பட்டவன் அல்ல. இவ்வுலகமே தனக்கானது என்று இயற்கை சூரையாடிக்கொண்டிருப்பவன்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்” (நாலடி.315)
“ஆமகன் ஆதற் கொத்தனை அறியா
நீமகன் அல்லாய்” (மணி 13.61-2)
“நன்று தீதென்றியல் தெரி நல்லறி
வின்றி வாழ்வதன் றோவிலங் கின்னிடை
நின்ற நன்னெறி நீயறி யாநெறி
ஒன்றுமின்மையுன் வாய்மையுணர்த்துமால்” (கம்ப.வாலி 111)
“தக்க வின்ன தகாதன வின்னவென்
றொக்கவுன்னல ராகி நுயர்ந்துள
மக்க ளும்விலங் கேமனு வின்நெறி
புக்கவேல் அவ்விலங்கும்புத் தேளிரே” (கம்ப.வாலி.112)
பரிமேலழகர் உரை
விலங்கொடு மக்கள் அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்; இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.
(இலங்குநூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல் . விலங்கின்மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர்அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால்அவர் மக்கட்பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர்; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர். இது கல்லாதார் விலங்கென்றது.
மு.வரதராசனார் உரை
அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
சாலமன் பாப்பையா உரை
விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.
Thirukkural - Management - Learning
Kural 410 uses a simile to differentiae a person who is learned from a person who is not learned. The difference between a person who is not learned and a person who is learned is similar to the difference between an animal and a human being respectively.
The ignorant are to the learned
As beasts to men.
An animal has its limitations in using its brain and mind. A human being has advantages over an animal because of the developments of mind and brain.
However, even among human beings there are differences depending on their ability to use mind and brain. A person who is not learned is similar to an animal in comparison to a person who is learned. Is there any difference between a person who does not learn and a person who cannot learn? A person who does not learn is in no way better than a person who cannot learn. Learning is a lifelong process based on the above mentioned reasons. Gandhi said, “Live as if today were the last day of your life and learn as if you were to live forever.” If today is the last day of your life, you will do all good things to others. However, if you know you will live forever, you will continue to learn.
English Meaning - As I taught a kid - Rajesh
Thiruvalluvar says that, amongst the erudite (showing great knowledge and learning), those uneducated men are animals. Animals have limitations in using its brain and mind. A human being has advantages over an animal because of the developments of mind and brain.
A person who does not learn is in no way better than a person who cannot learn. Learning is a lifelong process based on the above mentioned reasons. Gandhi said, “Live as if today were the last day of your life and learn as if you were to live forever.” If today is the last day of your life, you will do all good things to others. However, if you know you will live forever, you will continue to learn.
In today's world almost everyone is having access to basic education. However, a large percentage of people do not learn continuously. They do not upgrade themselves. They repeat their jobs just like a monkey that has been taught to pedal a bicycle. That is where artificial intelligence replaces those jobs that are mechanical in nature.
Questions that I ask to the kid
Who are animals? Why? Explain it with today's context as well.
No comments:
Post a Comment