குறள் 704
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு
[பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல்]
பொருள்
குறித்தது - குறித்தல் - கருதுதல்; தியானித்தல்; வரையறுத்தல்; கோடுவரைதல்; குறித்துக்கொள்ளுதல்; சுட்டுதல்; பற்றுதல்; இலக்குவைத்தல்; அடைதல்:பாவித்தல்; சொல்லுதல்; முன்னறிவித்தல்; ஊதியொலித்தல்.
கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்.
கூறாமை - சொல்லாமல் இருத்தல்; விளக்கு சொல்லாமல் குறிப்பால் உணர்த்துவது
கொள் - கற்றுக்கொள்ளுதல்
கொள்வாரொடு - கொள்வார் - அறிந்து கொள்ளுவார்
ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன்.
உறுப்பு - சிணை, அவயவம், உடல், நெருக்கம், பங்கு; மிகுதி; மரக்கொம்பு; மேல்வரிச்சட்டம்; காணியாட்சிப்பத்திரம்; பாலையாழ்த்திறம்; உடல்அழகு.
ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்.
அனை - அன்னை; அந்த ஒருவகைமீன்.
உறுப்பு ஓரனையர் - பல உறுப்புகள் கொண்ட ஓர் உடல் போன்று ஒத்தவராய் இருத்தல்
வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல்.
முழுப்பொருள்
ஒரு அமைச்சர் என்பவர் (அல்லது ஒரு குடும்பத்தில் கூட) அரசர் என்ன நினைக்கிறார் என்பதை வெளிப்படையாக கூறாமல் இருந்தாலும் அவரை அறியாமலும் அல்லது அறிந்தும் உணர்த்திய குறிப்புகள் மூலம் அதனை விளங்கிக்கொள்ளவேண்டும். அவ்வாறு குறிப்புகளை விளங்கிக்கொள்ளவில்லையென்றால் அவர் அரசருடன் இருப்பது உறுப்புகளால் ஒன்றாக இருந்தும் அறிவு நினைப்பதை அறியாத உறுப்பாகும். மருத்துவம் அறிந்தவர்களுக்கு சில நோய்களை பற்றி தெரியும் - அதாவது மூளை இறந்து இருக்கும் ஆனால் உறுப்புகள் பிணம் போன்று இருக்கும் அல்லது மூளை வேலை செய்யும் ஆனால் உறுப்புகள் உடம்போடு இருந்தும் செயலற்று இருக்கும். அத்தகைய உறுப்புக்கள் உடம்பில் இருந்தும் அதனால் ஒரு பயனுமில்லை. அது உடலுக்கு ஒருவித உபத்திரமாகவே இருக்கும்.
ஆதலால் அமைச்சர் அரசரின் மனதை அறியாதவராக இருப்பின் அவ்வமைச்சர் ஒருவித நோய் என்றே கூறலாம். ஏனெனில் அத்தகைய அமைச்சர் இருந்தால் அரசர் ஒவ்வொன்றையும் எடுத்துரைத்து கூறவேண்டியிருக்கும். நேரம் விரையமாகும். செயல் மிக மெல்ல நடக்கும். ஆக்கம் குறையும். மேலும், பல நேரங்களில் ஆபத்தாகக்கூட முடியும்.
மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு - ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர் -மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும்; வேறு - அறிவான் வேறு. ('கொள்ளாதார்' என்பதூஉம், 'அறிவான்' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.).
மணக்குடவர் உரை
நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு மற்றையர் உறுப்பால் ஒருதன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையார். இது குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
சாலமன் பாப்பையா உரை
ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

Thirukkural - Management - Leadership
People skill is the ability to read others' feelings, emotions and thoughts without their expressing them openly. The difference between one who is knowledgeable and one who is not knowledgeable is not in their physical appearance or body build, but it is in their mental power, shows Kural 704.
Only in their limbs do other men resemble
A thought reader.
A leader has to be sensitive to the needs of others. That is why the stock advice on communication is, “Communication is to understand what is not said.” People may not openly express their views, beliefs, emotions, and expectations. It is the responsibility of a leader to understand what other people expect and act accordingly. Though two people look similar in their physical appearance, they are different in their assessment of others and their approach toward others. Certainly, the difference in assessment and approach is a diferentiating factor in leading people.
The qualities and skills of a leader, though vast, can be summed up as being impartial, courageous, charity minded, knowledgeable, approachable, just, and soft spoken. A leader, with all these qualities, can motivate others, make judicious decisions, take timely actions, seek counsel from others, and create wealth for his people.
No comments:
Post a Comment