குறள் 1177
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]
பொருள்
உழ - uẕa VII. v. t. practise, learn by practice, பழகு; 2. conquer, வெல்லு; v. i. suffer, undergo penance, வருந்து; 2. be accomplished in any art, பழகு; 3. labour hard, exert, உழை
உழத்தல் - செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல்.
உழந்து - ஆசையோடு பழகி ; உறவுகொண்டு; புணர்ச்சி மகிழ்ந்து
உழந்து - ஆசையோடு பழகி ; உறவுகொண்டு; புணர்ச்சி மகிழ்ந்து
உள்நீர் - கண்களில் கண்ணீர்
அறுக - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல்
விழைந்து - விழைதல் - viḻai- 4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc.
விழைதல் - மிகவிரும்புதல்; மதித்தல்; நெருங்கிப்பழகுதல்.
இழைதல் - நூற்கப்படுதல்; உராய்தல் சோறுமுதலியனகுழைதல்; கூடுதல் நெருங்கிப்பழகுதல்; உள்நெகிழ்தல்; மூச்சுச்சிறுகுதல்; குறுமூச்சுவிடுதல்; மனம்பொருந்துதல்
இழைந்து - இழைந்தவர் - கூடினவர்.
வேண்டி - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்
அவர்க் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.
கண்ட - கண்டது - காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.
முழுப்பொருள்
தன் தலைவன் பிரிந்து சென்ற பின் பிரிவால் வாடும் தலைவி தன் பிரிவுக்கு காரணமாக கண்களை காட்டுகிறாள். அவற்றை எப்படி ஏசுகிறாள் தெரியுமா? கேளுங்கள்.
ஏ கண்ணே! அன்று என் தலைவனை மிக விரும்பி பார்த்தீர்கள் அல்லவா? பார்த்த உடன் நெகிழ்ந்து காதல் வயப்பட்டீர்கள் அல்லவா? அது மட்டுமல்லாது, எனக்கும் இந்த காதல் நோய் உண்டாக காரணமாக இருந்தீர்கள் அல்லவா? இப்பொழுது தலைவன் பிரிந்து சென்றுவிட்டான். இன்பத்தை பங்குபோட்டு எனக்கு தந்தீர்கள். இதோ அதனால் வந்த துன்பத்தையும் பங்கிட்டு கொள்ளுங்கள். இந்தாருங்கள் உங்களுக்கான துன்பம். பிரிந்து சென்ற தலைவனை காணாமல் உழன்று உழன்று (வருந்தி வருந்தி) கண்ணீர் சிந்தி உங்கள் கண்கள் வற்றிப்போகட்டும். அதவாது பிரிவின் துன்பத்தால் அவள் உயிர் வற்றிப்போயுள்ளதாம். அதுப்போல அவள் கண்களும் கண்ணீர் இன்றி வற்றிப்போகட்டும் என்று கண்களை சபிக்கிறாள்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது) விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக-இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக. (அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது)
மணக்குடவர் உரை
அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக; தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள். இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
மு.வரதராசனார் உரை
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
சாலமன் பாப்பையா உரை
விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!.
No comments:
Post a Comment