Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இனிய உளவாக இன்னாத கூறல்

குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இனிய - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக 
இனிமை - இனிப்பு, தித்திப்பு இன்பம்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

உளவாகஉளதாதல் - உண்டாதல், தோன்றியிருத்தல்; இருத்தல்

இன்னாது - தீது; துன்பு
இன்னாத - இன்னாதா-தல் - துன்புறுதல்

கூறல் -  கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல்

கனி - பழம்; கனிவு; சாரம்; இனிமை; கனிச்சீர், மூவகைச்சீரில்இறுதியிலுள்ளநிரையசை; பொன்முதலியனஎடுக்கும்சுரங்கம்.

இருப்பு - இருக்கை; மலவாய்; இருப்பிடம் குடியிருப்பு நிலை கையிருப்பு பொருண்முதல்.

இருப்ப - இருத்தல் 

காய் - முதிர்ந்துபழுக்காதமரஞ்செடிகளின்பலன்; மூவகைச்சீரின்இறுதியிலுள்ளநேரசை, காய்ச்சீர்; பழுக்காதபுண்கட்டி; முதிராதுவிழுங்கரு; பயனின்மை; வஞ்சனைவிதை; சொக்கட்டான்காய்; பக்குவப்படாதவிளைபொருள்கள்.

கவர்ந்து - கவர்தல் - அகப்படுத்துதல்; கொள்ளையிடல்; திருடல்; வசப்படுத்துதல்; விரும்புதல்; பெற்றுக்கொள்ளுதல்; நுகர்தல்; முயங்கல்; கடைதல்; அழைத்தல்; பிரிதல்; மாறுபடுதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை

முழுப்பொருள்
இனிமையை நன்மையை பயக்கும்(உண்டாக்கும்) இனிய சொற்களை கூறாமல் துன்பம் பயக்கும் வன்சொல்லை பயன்படுத்துவது எப்படிப்பட்டது தெரியுமா? முதிர்ந்த கனிந்த பழத்தை விரும்பாமல் முதிராத காயை தேர்ந்தெடுப்பது போல் ஆகும். 

குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்கள் மாம்பழத்தை விட மாங்காயை தான் விரும்புவார்கள். அதனால் தான் திருவள்ளுவர் சுவை என்னும் பொருளில் கனியையும் காயையும் கூறவில்லை என்பதை நாம் உணரவேண்டும். முதிர்ந்த பழத்தில் இருந்து வரும் விதை மேலும் பல செடிகளை மரங்களை வளர்க்க பயன்படும். அதாவது முதிர்ந்த பழம் நல்வினை பயக்கும். இனியசொற்களும் அப்படி தான் நல்வினை பயக்கும். மேலும் மேலும் இனியசொற்களை பேசவும் கேட்கவும் தூண்டும். அதுவே முதிராத காய் விதைகளை கொண்டிருக்காது (அல்லது முதிராத விதைகளை கொண்டிருக்கும்). அதனால் ஒரு பயனும் இல்லை. வன்சொற்கள் பயன் தராது. மேலும் மேலும் கேட்க தூண்டாது. 

"குறள் 202 தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்" என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். (அதாவது நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.) ஆதலால் தீமையை தீய சொற்களை பேசாதே. இனிய சொற்களை மட்டும் பேசு. 

மேலும்: ஷோக் உரை

ஒப்புமை
”கனியிருப்பக் காய்கவர்ந்த கள்வ னேனே” (அப்பர்.ஆருர் 1)

பரிமேலழகர் உரை
இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

மு.வரதராசனார் உரை
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

Thirukkural - Management - Communication - Pleasant speech
This part contains eight Kurals that bring out the importance of pleasant conversations. Valluvar uses a simile to emphasize the importance of using pleasing words during interactions with others. Preferring to use unpleasant, limiting, and impolite words when there are pleasing, empowering,  and polite words is similar to being attracted to unripe fruits when ripe and luscious fruits are available, points out Kural 100.

To use harsh words when sweet ones are at hand
Is to prefer raw fruit to ripe.

Prefer to eat fruits that are ripe as they are beneficial in all respects. Always speak politely, pleasantly, and pleasingly so that people can benefit from your speech. Check how often you resort to unpleasant words.

English Meaning - As I taught a kid - Rajesh
When there are kind words that give happiness to heart and that brings progress and positive change, yet when one uses harsh words then it is like choosing raw unripe fruit over ripe and luscious fruit that are available.

Questions that I ask to the kid
Who will avoid uttering harsh words? Why?
You have seen the benefits of kind words. What will you utter and not utter in future? Why?
What is it is like uttering harsh words when you have pleasant words to say?

3 comments:

  1. இந்த திருக்குறள் விளக்கங்கள் நூல் வடிவில் கிடைக்குமா? கிடைக்கும் எனில் எங்கு கிடைக்கும் மற்றும் விளைவு படம் தெரிவித்தார் வாங்கிப் படிக்க ஆர்வமாக உள்ளேன்
    அன்புடன்
    குகை சிவா
    Mbl: 9443377370

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள சிவா, நூல் வடிவாக பிரசுரிக்க எண்ணம் இல்லை.
      இத்தளமே இலவசம் தான். மேலும், பிரசுரித்தாலும், அது 5000 பக்கங்கள் வரை போக வாய்ப்புகள் நிறைய உண்டு. அத்தகைய நூல் வடிவம் அயர்ச்சியை தரும். ஆதலால் அப்படி செய்ய எண்ணமில்லை.

      Delete
  2. இந்த திருக்குறள் விளக்கங்கள் நூல் வடிவில் கிடைக்குமா? கிடைக்கும் எனில் எங்கு கிடைக்கும் மற்றும் தொகை விபரங்கள் தெரிவித்தார் வாங்கிப் படிக்க ஆர்வமாக உள்ளேன்

    ReplyDelete