Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

குறள் 70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மகன் - புதல்வன்; ஆண்பிள்ளை; குழந்தை; சிறந்தோன்; வீரன்; கணவன்.

தந்தைக்கு - தந்தை - தகப்பன், tantai   s. a father பிதா; 2. a patron, a benefactor, உபகாரி.

ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

உதவி - துணை; கொடை; s. help, assistance, சகாயம்; 2. gift, benefit, உபகாரம்; boon, donation.

இவன் - ivaṉ   pron. இ³. [K. iva, M. ivan.]This man or this boy; he, used to denote themale among rational beings. (திவ். திருவாய். 1, 1, 4.)  

தந்தை -  தகப்பன், tantai   s. a father பிதா; 2. a patron, a benefactor, உபகாரி.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நோற்றல் - பொறுத்தல்; விரதமிருத்தல்; தவஞ்செய்தல்
கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

நோற்றான்கொல் - தவம் இருந்தானோ ?

எனும் - என்கின்ற; சிறிதும்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

முழுப்பொருள்
"சான்றோன் ஆக்குதல் தந்தை கடனே" என்று புறநானூற்றில் கூறப்பட்டு உள்ளது. அதற்கு ஏற்ப ஒரு தந்தை  தன் மகனை சான்றோன் ஆக்க மிகவும் கடினப்பட்டு பலவற்றை கற்றுத்தருகிறார் அதற்கான சூழலை அமைத்து தருகிறார். எப்பொழுதும் ஊக்கப்படுத்துகிறார். தவறு செய்யும் பொழுது சரி செய்கிறார். பிழைகள்/குற்றங்கள் செய்யாமல் முடிந்தவரை பாதுகாக்குகிறார். தீய சேர்க்கைகளிடம் இருந்து பாதுகாக்கிறார். தன் தந்தையின் அனுபவத்தை மகன் பெறுவதால் அவன் வாழ்வில் பல தவறுகளை இழைக்காமல் முன்னேறுகிறான் இல்லையேல் அந்த பாடங்களை கற்க அவனுக்கு காலம் எடுத்து இருக்கும். 

அத்தகைய தந்தைக்கு மகன் பிரதி உபகாரமாக என்ன செய்ய வேண்டும்? இவனுடைய தந்தை என்ன தவம் செய்து இவனை பெற்றானோ என்று பிறர் எண்ணி சொல்லும் வண்ணம் நடந்துக்கொள்ளவேண்டும். அது தானாகவே நிகழவேண்டும். அறிவாலும் ஒழுக்கத்தாலும் செய்யும் செயல்களாலும் சிறந்து விளங்கவேண்டும். 

சரி அது என்ன சான்றோன் ஆக்குதல்? கற்றவன், அறிஞன், பணக்காரன், அரசன், மந்திரி என்றெல்லாம் கூறாமல் அது என்ன சான்றோன்? சான்றாண்மை அதிகாரத்தைப் படித்தால் அதற்கான விடை முழுவதமாய் கிடைக்கும். உதாரணமாக சொன்னால் “குறள் 983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்” . அவ்வதிகாரத்தில் சான்றோன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய குணநலங்கள் கூறப்பட்டு இருக்கும். சரி, அது ஏன் சான்றோன்? ஏனெனில் சால்புடைய இயல்புகளே ஒரு கட்டிடத்தை பல நூற்றாண்டுகள் தாங்கி நிற்கும் தூணாய் அமையும். நான் “Build to Last: Successful Habits of Visionary Companies by Jim Collins" என்ற ஒரு புத்தகத்தை சில ஆண்டுகள் முன்பு படித்தேன். அதில் ஒரு நிர்வாகம் பல ஆண்டுகளாக (ஒரு 80+ ஆண்டுகள்) பல தலைமுறைகளாக நீடித்து நிற்பதற்கு காரணம் என்ற ஆராய்ச்சியைப் பற்றி கூறப்பட்டு இருக்கும். அது செயல்வியூகம், லாபம், பணம், யோசனைகள் (ideas), எல்லோரையும் கவரக்கூடிய தலைவர் என்றவற்றையெல்லாம் அல்ல ஏனெனில் பல வெற்றியடைந்த நிர்வாகங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் உள்ளன. ஒரு நிர்வாகத்தை பலகாலம் நிலைத்து நிற்க அடிப்படையான தேவை காலாவதி ஆகாத நிர்வாக கொள்கைகள் (Core Values / Ideologies). அதுவே அந்நிறுவனத்தை வழி நடத்தும் வளர்ச்சிப்பெறச் செயும். அதுப்போல் ஒருவருக்கு வாழ்வில் குணநலங்கள் முக்கியம். அதுவே அவனையும் அவன் சந்ததினயரையும் சான்றோன் ஆக்கும். உதாரணமாக நாம் அன்றாட வாழ்க்கையில் ஒரு தலைமுறையில் ஒருவர் சான்றோன் ஆக அல்லது பெரும் பணக்காரணாக இருப்பதை காணலாம். ஆனால் அடுத்த தலைமுறையிலோ அல்லது அதற்கு அடுத்த தலைமுறையிலோ ஒரு பெரும் வீழ்ச்சியை காண முடியும். ஏனெனில் அவர்கள் தங்களை சான்றோன் ஆக்கிய அல்லது வெற்றிபெற்றவர்களாக்கிய நற்குணங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தி (கற்றுக்கொடுத்து) இருக்க மாட்டார்கள். அதுவே சீராக அதை செய்து இருந்தால் அக்குடும்பம் பல தலைமுறைகளாக முன்னேறிக்கொண்டு இருப்பதை காண முடியும். அதனால் தான், ”குறள் 68  தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது” என்றுக் கூறினார் திருவள்ளுவர்.

பி.கு: தந்தைக்கு மகன் உதவி (பிரதி உபகாரம்) செய்துவிடலாம். ஆனால் தாய்க்கு மகனால் பிரதி உபாகரம் செய்யவே முடியாது. ஏனெனில் அது எந்த வித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காத தாய் அன்பு. குறைந்தபட்சம் சான்றோன் என பிறர் சொல்ல தாய் கேட்கும் அளவிற்கு நடந்துக்கொள்ள வேண்டும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”என்ன நோன்பு நோற்றாள்கொலோ
இவனைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த
இருடீ கேசா” (பெரியாழ்வார் 2.2:6)

“எத்துணைத் தவஞ்செய் தான்கொல்
என்றெழுந் துலகம் ஏத்த” (சீவக 2567)

“வல்லை மைந்தவம் மன்னையும் என்னையும்
எல்லை யில்புக ழெய்துவித் தாய்என்றான்” “கம்ப.சடாயுகாண் 41)

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ”அந்த சபை..” என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்
அன்புள்ள மதி,

பொதுவாக இம்மாதிரி விஷயங்களில் இலட்சியவாதக் கருத்துக்களை விட நடைமுறைசார்ந்த கருத்துக்களையே நான் வைத்துக்கொள்ள விரும்புவேன். ஆனால் நடைமுறைவெறி இருக்காது. வேண்டுமென்றால் ‘நடைமுறைஇலட்சியவாதம்’ என்று சொல்லலாம்.

நான் புரிந்துகொண்ட சில விஷயங்கள் உண்டு. அதில் முதலாவது குழந்தைகளை நாம் ‘வளர்க்க’ முடியாது. அவை வளர்கின்றன. அவற்றுக்கு சூழல் அளிக்கும் பலநூறு பாதிப்புகளில் ஒன்று மட்டுமே நாம். கொஞ்சம் பெரிய, கொஞ்சம் தீவிரமான பாதிப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.  அந்தப்பாதிப்புகளை வாங்கி வளரும் அவன் ஆளுமையின் விதை அவனுக்குள் பிறவியிலேயே உள்ளது.

ஆகவே குழந்தைகளை நாம் நம் விருப்பப்படி வளர்க்க முடியும் என்பது பெரிய மடமை. அவர்கள் நன்றாக வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி அதில் நம் பங்களிப்பு ஒரு சிறு பகுதிதான். அதற்கான பொறுப்பையோ பாராட்டையோ நாம் ஏற்றுக்கொள்வது அபத்தமானது.

ஆக, நாம் அவர்களை எங்கும் ‘முந்தியிருக்க’ச் செய்ய முடியாது. அவர்கள் முந்துவது அவர்களிடம், அவர்களை உருவாக்கும் பலநூறு சக்திகளிடம், அவர்கள் எதிர்கொள்ளும் பலநூறு விசைகளிடம் உள்ளது.

நாம் செய்யக்கூடுவது நாம் அளிக்கும் சூழல் சிறப்பாக இருப்பதாகக் கவனித்துக்கொள்ளலாம் என்பது மட்டுமே. அந்தப்பொறுப்பு மட்டுமே நமக்கு உள்ளது. அதில் நான் செய்வதென்ன என்று கேட்டால் என்னால் சில சொல்ல முடியும்.

ஒன்று, நான் அறிவியக்கத்தை நம்பக்கூடியவன். ஆகவே என்னுடைய நம்பிக்கைகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய வாசிப்பையும் சிந்தனைகளையும் அவர்களுக்கு அளிக்கிறேன். அவர்களை ஒருவகையில் என் மாணவர்களாகவே நினைக்கிறேன்.

இரண்டு, சாத்தியமான உற்சாகமான சூழலை வீட்டில் அவர்களுக்கு அளிக்கிறேன். மகிழ்ச்சியான பெற்றோர் அளவுக்கு குழந்தை விரும்பும் பிறிதில்லை. ஆகவே குடும்பத்தில் மனக்கசப்போ பூசலோ நிலவ விடுவதே இல்லை.

மூன்று, ஒவ்வொருநாளும் அவர்களிடம் நேரம்செலவழிக்கிறேன். அப்போது வேடிக்கையும் சிரிப்பும் பேசும் பகிர்தலுமாகவே நேரம் செல்லவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் [நான் ஒரு நல்ல மிமிக்ரி நடிகன் என்பது என் பிள்ளைகள் மட்டுமே அறிந்த ரகசியம்]

நான்கு, அவர்களிடம் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர்களின் நினைப்பு, அவர்களின் தரப்பு என்று ஒன்றை கேட்க எப்போதும் உயன்றுகொண்டிருக்கிறேன். அவர்களிடம் தூரமோ விலக்கமோ நிகழக்கூடாது என எண்ணுகிறேன்.

அப்படியானால் அவையத்து முந்தியிருப்பச் செயல் என்று எதைச் சொன்னார் வள்ளுவர்? நான் விவேகம் சார்ந்து ஒரு தவறான விஷயம் குறளில் இருக்காது என நினைப்பவன். குறள் சொல்வது என்ன?

‘அவை’ என்று குறள் சொல்வது சமூக அரங்கை. ஒரு தந்தையின் கடமை ஏற்கனவே இருக்கும் ஒரு சமூக அரங்கில் தன் மகன் நிற்பதற்குத் தேவையான அனைத்தையும் அளிப்பது. கல்வி, சமூக அந்தஸ்து போன்றவை. நான் இன்றைய சமூக அமைப்பில், இன்றைய கல்வியமைப்பில் என் மகனுக்கு என்னால் சாத்தியமான சிறந்ததை அளிக்க வேண்டும். இதுவே நடைமுறை உண்மை. இதைத்தான் குறள் சொல்கிறது.

ஆனால் குழந்தைகளின் சவாலே வேறு. என் மகன் சம்பிரதாயமான கல்விக்குள் பொருந்த முடியாமல் மூச்சுத்திணறுகிறான். அதில் அவனால் முதலிடம் வர முடியாது. ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் படித்து அபப்ழுக்கில்லாமல் பிரதி எடுப்பது அவனுக்குச் சலிப்பூட்டுகிறது. அவனுடைய வாசிப்பு பள்ளிப்பாடத்துக்கு வெளியே விரிகிறது. பள்ளிப்பாடத்தை மட்டுமே மீளமீளப் படிப்பவர்களுக்கானது இந்த அமைப்பு. இதில் அவனை ‘முந்தியிருக்க’ ச் செய்வதற்காக அவனிடம் நான் எதிர்பார்க்கக் கூடாது.  அதற்காக அவன் மேல் நான் வன்முறையைச் செலுத்த முடியாது. அவனுடைய சவால்கள் அவனுக்கு மட்டுமே உரியவை, அதன் வெற்றி தோல்விகளும்.

குறளும் அதையே சொல்கிறது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி அவர் எதிர்பார்த்ததைச் செய்வது என்றோ அவையில் முந்துவது என்றோ சொல்லவில்லை. அவன் தந்தைக்குப் பெருமை சேர்த்தல் என்றே சொல்கிறது. சேர்க்க முயல்தல் என்று கூடச் சொல்லலாம். என் அப்பாவை நான் மகிழ்வித்திருக்கவேண்டுமென்றால் நாகர்கோயிலில் ஒரு நல்ல ஆடிட்டராக ஆகியிருக்க வேண்டும். ஆனால் அபப்டி ஆகியிருந்தால் பாகுலேயன்பிள்ளை என்றபெயரை பல்லாயிரம் பேர் இன்று அறிந்திருக்கமாட்டார்கள்.

இந்தப் புரிதல் இல்லாமையாலேயே பலவகையான பதற்றங்கள் உருவாகின்றன. பொறியியலில் முதல்தர வெற்றியை அடைந்தபின் சினிமாவில் உதவி இயக்குநராக ஒரு பையன் வந்து வெயிலில் காய்ந்து அலைவதைக் கண்டு அந்த தந்தை என்ன பாடுபடுவார் என்று எனக்குப் புரிகிறது. அந்தப் பையனின் இடத்தில் கொஞ்சகாலம் முன்பு வரை இருந்தேன், இப்போது அந்த அப்பாவின் இடத்துக்கு மாறிவிட்டேன்.

ஆக, நமக்கு நம் சமூகம் அளித்திருக்கும் அவையில், கல்வியின் பொருளியலின் மேடையில், முந்தியிருக்கச் செய்வதும் முந்தவேண்டும் என்ற கட்டாயத்தை விதிக்காமலிருப்பதும்தான் நம் கடமைகள்.

ஜெ

பரிமேலழகர் உரை
தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல். ('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது).

மணக்குடவர் உரை
மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல். இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

சாலமன் பாப்பையா உரை
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அறிவோடு குணத்திலும் சிறந்தால் தந்தைக்குப் பெருமை.
(குறிப்பு: குறள்கள் 69-70 இரண்டையும் இணைத்தே புரிந்துகொள்ள வேண்டும்.)

Thirukkural - Management - Married Life
When Kural 67 insists on the supreme responsibility of a father towards his son, Kural 70, in turn, insists on the responsibility of a son towards his father. The only gratitude a son can express to his father is to make others eagerly enquire him about his parents and his upbringing.

The service a son can render his father
Is to make men ask,“How came this blessing?”

That sort of enquiry indeed is an appreciation to his parents of the qualities they inculcated while bringing him up. That recognition is directly related to the way his parents have brought him up. His every deed demonstrates his upbringing by his parents. Therefore, the parents get the credit for sensible ways of brining up their children.

English Meaning - As I taught a kid - Rajesh
What is the responsibility of a child (son, daughter) or how can a child repay for all the efforts a father had made to up bring him/her?  A child should grow up and through his/her actions, efforts, (noble) behavior, growth, achievements, humbleness etc should make this world ask /wonder/envy what kind of tapas/penance did his/her father do to earn such a child/kid?
In general, it is duty of a father to make his/her son a scholarly person (சான்றோன் - அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை யோடு ஐந்து சால் ஊண்றிய தூண்). A father puts lots of efforts. So, in return, a child should make those of efforts and go above/beyond those efforts and show progress. As a result, the (people in this) world would obviously wonder and envy the growth of the kid. Any plant or tree needs sufficient water during initial stages. Similarly a child needs father's guidance. Note: A child can repay a father's efforts. But no one can repay for a mother who beard so much difficulties and pain to give birth. That is why it is our duty to make our mother feel happy (ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்) 

Questions that I ask to the kid
How can a son/daughter can payback to a his/her father?
What are the things one should do in order to payback a father?
When does a world envy a kid?
When does a world envy a father?

No comments:

Post a Comment