குறள் 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
மோப்பக் - மணம்; மூக்கு.
குழையும் - குழை-தல் - kuḻai- 4 v. intr. [K. koḻe, M.kuḻayu.] 1. To become soft, mashy, pulpy, aswell-cooked; இளகுபதமாதல். குழையச் சமைத்தபருப்பு (திவ். பெரியாழ். 3, 1, 3, வ்யா.). 2. Tomelt, become tender, as the mind; மனமிளகுதல் தொண்டரினங் குழையாத்தொழும் (பதினொ. பட்டினத்.திருவே. 28). 3. cf. kuth. To be overboiled, asrice; சோறு அளிதல். 4. cf. kuš. To be in closeintimacy, to be hand in glove with; நெருங்கி உறவாடுதல் குழைந்து பரிமாறுகிறார்கள். 5. cf. kuṭ. Tobe bent, as a bow; வளைதல் திண்சிலைகுழைய (சூளா.அரசியற். 319). 6. To fade, languish, becomespoilt, as flowers or twigs; வாடுதல் மோப்பக்குழையு மனிச்சம் (குறள், 90). 7. To wave, as aflag, to sway to and fro; துவளூதல். குழைந்த நுண்ணிடை (கம்பரா. சித்திர. 9). 8. To be tired, to beweighed down; தளர்தல் கோதைசூழ் கொம்பிற்குழைந்து (பு. வெ 12, பெண்பாற். 14). 9. To betroubled; வருந்துதல் மகளிர் குழைகின்ற குழைவை(கம்பரா. பிரமாத். 31).
அனிச்சம் - மோந்தால் வாடும் பூவகை
முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.
திரிந்து - திரிதல் - அலைதல்; எழுத்துமாறுதல்; பால்தன்மைகெடுதல்; கெடுதல்; சுழலல்; வேறுபடல்; சலித்தல்; மயங்குதல்; கைவிடுதல்; திருகுறுதல்; போதல்; திரும்புதல்.
நோக்கக் - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.
குழையும் - குழை-தல் - kuḻai- 4 v. intr. [K. koḻe, M.kuḻayu.] 1. To become soft, mashy, pulpy, aswell-cooked; இளகுபதமாதல். குழையச் சமைத்தபருப்பு (திவ். பெரியாழ். 3, 1, 3, வ்யா.). 2. Tomelt, become tender, as the mind; மனமிளகுதல் தொண்டரினங் குழையாத்தொழும் (பதினொ. பட்டினத்.திருவே. 28). 3. cf. kuth. To be overboiled, asrice; சோறு அளிதல். 4. cf. kuš. To be in closeintimacy, to be hand in glove with; நெருங்கி உறவாடுதல் குழைந்து பரிமாறுகிறார்கள். 5. cf. kuṭ. Tobe bent, as a bow; வளைதல் திண்சிலைகுழைய (சூளா.அரசியற். 319). 6. To fade, languish, becomespoilt, as flowers or twigs; வாடுதல் மோப்பக்குழையு மனிச்சம் (குறள், 90). 7. To wave, as aflag, to sway to and fro; துவளூதல். குழைந்த நுண்ணிடை (கம்பரா. சித்திர. 9). 8. To be tired, to beweighed down; தளர்தல் கோதைசூழ் கொம்பிற்குழைந்து (பு. வெ 12, பெண்பாற். 14). 9. To betroubled; வருந்துதல் மகளிர் குழைகின்ற குழைவை(கம்பரா. பிரமாத். 31).
விருந்து - viruntu n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)
முழுப்பொருள்
தொடக்கூட வேண்டாம் முகர்ந்தாலே அனிச்சம் மலர் வாடிவிடும். அவ்வளவு மென்மையானது அனிச்சம். அதுப்போல வரும் விருந்தினர்களிடம் முகம் சலித்தோ அல்லது வேறுபட்டோ இன்முகம் காண்பிக்காமல் வரவேற்றாலோ அல்லது விருந்தளித்தாலோ அல்லது பிரியம் இல்லாமல் பார்த்தாலோ முகம் சலித்த நொடியே வந்த விருந்தினர்களுக்கு வருத்தத்தை தந்துவிடும். விருந்தினர் வாடிவிடுவார். முகமே சலிக்க கூடாது என்றால் நம் சொல் நம் நடவடிக்கைகள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஆதலால் விருந்தை லேசாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு மென்மையான மலரை கையாளுவது போன்று பக்குவமாய் கையாளவேண்டும். வரும் விருந்தினர் எக்காரணத்திற்காகவும் வருந்தக்கூடாது.
சிலர் அனிச்சம் பூவை விருந்தினருடன் ஒப்பிட்டு கூறுகின்றனர். அனிச்சம் பூ போன்று மென்மையான குணம் கொண்டவர்களுக்கு விருந்தளிக்க வேண்டும். விருந்தினர் மென்மையாவர்களாக இருக்க வேண்டும். குறைகள் சொல்ல கூடாது என்று கூறுகின்றனர். திருவள்ளுவர் இக்குறளில் அப்படி கூறவில்லை. ஏனெனில் "குறள் 580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்" என்ற குறளில் விருந்தினர்களுக்கான இலக்கணத்தை வரையறை செய்துள்ளார் திருவள்ளுவர். இக்குறள் முழுக்க முழுக்க விருந்து அளிப்பவர்களுக்கான குறள்.
அனிச்சமலர் மிகவும் மென்மையானது. இலக்கியங்களில் பெண்களின் மென்மையோடு ஒப்பிட்டு பேசப்பட்ட ஒரு மலர். இதை மார்பணியும் மாலையாகத் (தார்) தொடுத்து அணிந்துகொண்டதையும், கண்ணியாக (வளையமாக) கைகளிலும், கழுத்திலும் அணிந்துகொண்டதையும் “அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம் புரிநெகிழ் முல்லை நறவோடு அமைந்த தெரிமலர் கண்ணியும் தாரும் நயந்தார்” (கலித்.மரு. 26:1-3) என்னும் கலித்தொகை பாடல் வரி தெரிவிக்கிறது.
அனிச்சத்தின் மென்மை பற்றி “அனிச்சத்தம் போது போலத் தொடுப்பவே குழைந்து மாழ்கி” என்று (சீவக.2939) கூறுகிறது
முகம் திரிந்து நோக்குதல் பற்றி “அகன்நக வாரா முகன் அழி பரிசில்” என்று புறநானூறு (207:4) கூறுகிறது.
மேலும்: அஷோக் உரை
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் குறிப்பாக (main-ஆக) அவரது துணைவியார் கணவதி அம்மாள் பற்றி கி.ரா.இணைநலம் (எஸ்.பி.சாந்தி எழுதியது) நூலில் இருந்து சில பகுதிகள்
கணவதி அம்மாள் (கி.ராவின் மணைவி): கவிஞர் நாவன்னா காமராஜ்னு ஒருத்தர். அய்யாவுக்கு வேண்டியவர். காதி போர்டு இருந்தவர். அவர் ஒரு தடவை கன்னியாகுமரியிலிருந்து ஒரு முப்பது பேருடன் பாதயாத்திரை சென்று திரும்பி வந்துகிட்டிருப்பதாவும், இடைசெவல் வழியா வாரதாகவும், இரவு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படியும் சேதி சொல்லி அனுப்பிவிட்டார். கேப்பைக்களியும், கருவாட்டுக் குழம்பும் போதும் என்று செய்ய வேண்டிய சமையல் அயிட்டத்தையும் அவரே சொல்லிவிட்டார்.
“முப்பது பேர்னா சும்மாவ. இரண்டு நாள் முன்னாடிதான், மத்தளம்பாறை வீட்டில் இருந்து வெள்ளைக் கேழ்வரகு ஒரு பத்து கிலோ போல கொடுத்து விட்டிருந்தாங்க.அதை அரைச்சி வெச்சிருந்தேன். எங்க ஊர்ல “பெத்த பூச்சி”ன்னு ஒரு பெரிய அம்மா கேப்பக் களி கிண்டுவதில் ரொம்ப திறமைசாலி. அவங்கள கூப்பிட்டு கேப்பைக்களி பண்ணி, கருவாட்டுக் குழம்பு தயார் பண்ணோம், தோசை ஊற்றி, அதையும் தயாரா வைச்சிருந்தோம். பிறகு பத்துமோ, பத்தாதோன்று உப்புமாவும் கிண்டி எல்லாருக்கும் வயிறார பசியாற்றினோம்.
வீட்டுக்கும் வர்ரவங்க யாரா இருந்தாலும், சாப்பிடற நேரத்துக்கு வந்துட்டாங்கன்னா, அவங்களுக்கும் பசியாத்தினாத்தான் எங்களுக்கு நிம்மதியா சோறு இறங்கும்.
அவர்கள் பேசி முடித்தவுடன் நானும்(எஸ்.பி.சாந்தி) நினைத்துப் பார்க்கிறேன். அய்யா பாண்டிச்சேரியில் மாறிய அத்தனை வீடுகளுக்கும் போயிருக்கிறேன். நான் அவர்கள் வீட்டில் ஒரு வேளையாவது உண்ணாமல் வந்ததில்லை. அதோடு, பல சமயங்களில் யாராவது கூடுதல் நண்பர்கள் வந்திருப்பார்கள்.
நான் ஒரு முறை சென்றபோது, திரு மாசிலாமணி, Ex.MLA, ஜெயங்கொண்டம் அவர்கள் குழந்தைகளுடன் பெண்ணின் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். நல்ல வெய்யில் நேரம்.
சிறிது நேர உரையாடலுக்குப் பின் விருந்து உபச்சாரம் ஆரம்பித்து விடுகிறது. என்ன, பருப்பும் நெய்யும், வடையும், பாயாசமும் இல்லை. புளிக்குழம்பு,கீரைக்கூட்டு, வெண்டைக்காய் வறுவல், முட்டை என சாதாரண சாப்பாடுதான். ரொம்ப திருப்தியான சாப்பாடும்மா என்கிறார் விருந்தினர்.
அய்யா உடனே, “இங்கு வர்ரவங்க எல்லாருமே சாப்பாடு ருசியா இருக்குன்னு சொல்றாங்க. இது சாதாரண சாப்பாடுதானே” என்கிறார். சாப்படு என்பதின் ருசி சாப்பாட்டில் மட்டும் இல்லை. கூட இருக்கும் மனிதர்களின் கபடமில்லாத மனம், அவர்களின் இனிய உபசரிப்பு, பரிமாறும் விதம், உறுத்தல் இல்லாத, கலப்படமில்லாத எளிய பேச்சு, இப்படி நிறைய்ய.
(19 செப் 2006 அன்று எடுத்த ‘அவள் விகடன்’ பேட்டியில் இருந்து ஒரு கேள்வி): இன்றும் உங்கள் மனைவியிடம் நீங்கள் வியந்து ரசிக்கும் விஷயம் எது?
கி.ரா: கவிஞர் நா.காமராசன் அவர்கள் தனது “படை பட்டாள”த்துடன் ஒரு நடைப்பயணம் வந்தார் (சுமார் 30 பேர் இருக்கலாம்). “ராத்திரி நாங்கள் இடைசேவல் தங்கல். எங்களுக்கு கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும் போதும் வேற எந்த விருந்தும் வேண்டாம் என்று துண்டுச்சீட்டு கொடுத்தனுப்பி இருந்தார்.
என் நண்பர் மத்தளம் பாறை ராமசாமி அவர்கள் அவருடைய தோட்டத்தில் விளைந்த வெள்ளைக் கேப்பை (ராகி) கொடுத்துனுப்பியிருந்தார். அன்றுதான் அதை மாவு அரைத்து வைத்திருந்தோம். ராமேஸ்வரம் பால் நெத்திலிக் கருவாடு வீட்டில் இருப்பு இருந்தது. ஒரு சிரமும் இல்லை; முப்பது பேருக்கு அளவில் களி கிண்டுவது தான் சிரமம். சொந்தக்காரப் பெண்கள் வந்து உதவினார்கள். காணுமோ காணாதோ என்று அரிசியைக் கொஞ்சம் நனைய வைத்து ஆட்டி ஒரு திடீர் உப்புமா செய்தாள். பிறகுதான் தெரிந்தது இதும் சரிதான் என்று. நடந்து வந்த பசி அவர்களுக்கு. கேப்பைக் களியும் கருவாட்டுக் கொழம்புக்கும் ஒரே கொண்டாட்டம்; உப்புமாவும் போன மூலை தெரியவில்லை. ஒரு தார் கதலிப்பழமும் சேர்ந்து கைகொடுத்தது.
அண்மயில் கவிஞர் விக்ரமாதித்யன் - இன் அ-விருந்தோம்பல் என்ற கவிதை ஒன்றை வாசித்தேன்.
அ-விருந்தோம்பல்
முதலில் ஆள்
ஊரில் இருக்க வேண்டும்
அப்புறம் அவர்
வசதியாக இருக்கவேண்டும்
பிறகு அவரே
வரவேற்கிற மனநிலையில் இருக்கவேண்டும்
எல்லாமே கூடிவந்தால் நல்லது
இடவசதி
இருக்கவேண்டும்
பணவசதி
இருக்கவேண்டும்
நேரம்
இருக்கவேண்டும்
விளையாட்டில்லை
விருந்துபசரிப்பு
வேலைப்பளு
இருக்கக்கூடாது
மனைவி
கோபித்துக்கொள்ளக்கூடாது
உணவுப்பழக்கம்
ஒத்துப்போகவேண்டும்
எவ்வளவு இருக்கிறது
ஒருவனை வா என்று சொல்ல
கடன் வாங்கவாவது
முடிய வேண்டும்
கைமாற்றாவது
கிடைக்கவேண்டும்
தன்னைப் பேணிக்கொள்வதே பெரிய காரியம்
இன்னும் இருக்கிறது வீடு குடும்பம் பிள்ளைகள்
விருந்தினர் வருகையை எப்படிக் கொண்டாட
அவரவர்க்கும்
ஆயிரத்தெட்டு பிரச்னைகள்
எதற்குத் தேடிப்போய்ப் பார்த்து
இடைஞ்சல் பண்ணுவானேன்
இருட்டோ வெளிச்சமோ
இருக்கும் இடத்திலேயே இருக்கலாம்
--விக்ரமாதித்யன்
பரிமேலழகர் உரை
அனிச்சம் மோப்பக் குழையும் - அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக்குழையும் - விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர். (அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர். இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.
மு.வரதராசனார் உரை
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.
சாலமன் பாப்பையா உரை
தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வந்த விருந்தினர் வருந்தும்படி நடவாதீர்.
English Meaning - As I taught a kid - Rajesh
The Anicham (Scarlet pimpernel) flower when smelled will wilt / flop /droop. That sensitive it is. Similarly, when our face expressions aren't pleasant with our guests, the entire hospitality is spoiled despite massive arrangements made. Our guests will get hurt. Thiruvalluvar doesn't even mention our voice tone or body language etc because all these will have its reflection in face. Also, face is the mirror of heart. Hence, hospitality should be from heart. It shouldn't namesake.
Questions that I ask to the kid
How sensitively we should handle hospitality? Explain with an easy metaphor.
No comments:
Post a Comment