குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
[அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்]
பொருள்
புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை
புரிந்த - புரிதல் - puri- 4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல்புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at,watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்துபார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 174).9. To investigate, examine; விசாரணை செய்தல்.அறம் புரிந்தன்ன செங்கோ னாட்டத்து (புறநா. 35).10. To say, tell; சொல்லுதல். அந்தணாளர் புரியு மருமறை (தேவா. 865, 5). 11. To exercise, perform;நடத்துதல். அரசு புரிந்தான். 12. To accept; மேற்கொள்ளுதல். போக்குவரவு புரிய (சி. போ.
இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.
இலோர்க்கு -இல்லாதவர்க்கு
இல்லை - இல்லை
இகழ்வார் - இகழ்-தல் - ikaḻ- 4 v.intr. To be careless,negligent; அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ. 340).--tr. 1. To slight, despise;opp. to புகழ்-;அவமதித்தல். (குறள், 698.) 2. Toforget; மறத்தல் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில்(குறள், 538).
முன் -இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்
ஏறு - எருது; இடபராசி; எருமைக்கடா; சங்கு; அசுவினிநட்சத்திரம்; விலங்கின்ஆண்; உயர்ச்சி; ஆண்சுறா; ஆண்சங்கு; பனைமுதலியமரத்தின்ஆண்; கவரி; பன்றி, மான்இவற்றின்ஆண்; விலங்கேற்றின்பொது; நந்திதேவர்; தழும்பு.
போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.
பீடு - பெருமை; வலிமை; தரிசுநிலம்; தாழ்வு; துன்பம்; குறைவு; ஒப்பு; குழைவு.
நடை - காலாற்செல்லுகை; பயணம்; அடிவைக்குங்கதி; வாசல்; இடைகழி; ஒழுக்கம்; வழக்கம்; நீண்டநாள்; நடைகூடம்; இயல்பு; அடி; கூத்து; தொழில்; செல்வம்; ஒழுக்கநூல்; நித்தியபூசை; கோயில்; கோள்முதலியவற்றின்கதி; கப்பல்ஏறும்வழி; மொழியின்போக்கு; வாசிப்பின்நோட்டம்; தடவை.
முழுப்பொருள்
ஒரு மனைவி மனைவிக்கான பெருமையை விரும்பாது இருந்தால் அவள் மனைவிக்கான கடமைகளை ஆற்றமாட்டாள். அதாவது தன் கற்பை, தன் கணவனை, தன் குடும்பத்தின் குடியின் பெருமையை, திருமணத்தின் பொழுது எடுத்துக்கொண்டான் உறுதிமொழிகளை காக்க மாட்டாள். இது அக்குடும்பத்திற்கு இகழ்ச்சியையும் வீழ்ச்சியையும் தரும்.
ஆதலால் பெருமையை விரும்பாத மனைவியை பெற்றவனுக்கு பெருமைமிக்க பீடு நடை இல்லை. இகழ்வோர் அந்த கணவனை ஏசுவார்கள்.
ஏனெனில் திருவள்ளுவர் மற்றொரு குறளில் கூறியுள்ளார்
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
அதாவது குற்றங்கள் கண்டுபிடித்து ஏசுவதற்கு என்றும் ஒரு கூட்டம் இருக்கும். அக்கூட்டம் ஒருவன் நல்ல மனைவியை பெறாவிட்டால் அவனை ஏசுவதற்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது போல் ஆகும்.
ஆதலால் ஒரு நல்ல மனைவி ஒரு கணவனுக்கு மிக அவசியம்.
ஒப்புமை
”சிங்கம் நடப்பதுபோல் சேர்ந்து” (சீவக 2608)
“மாக மடங்கலும் ... நாண நடந்தான்” (கம்ப.கார்முகப் 32)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.
மு.வரதராசனார் உரை
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
சாலமன் பாப்பையா உரை
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
சரியான மனைவியே சரியாத புகழுக்குக் காரணமாவாள்.
No comments:
Post a Comment