Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

குறள் 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
[அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நிறைமொழி - பலிக்கும்வாக்கு; மந்திரம்.

மாந்தர்  - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்

பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை

நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை. 

மறைமொழி - மந்திரம்; வேதம்; இடக்கரடக்கல்.

காட்டிவிடும் - காட்டு-தல் - kāṭṭu-   5 v. tr. Caus. ofகாண்-. [M. kāṭṭu.] 1. To show, exhibit, display;காண்பித்தல். எம்மில்லங் காட்டுதும் (நாலடி, 293). 2.To reveal, disclose, set forth; அறிவித்தல் காணாதாற் காட்டுவான் (குறள், 849). 3. To demonstrate,prove; நிரூபித்தல் நிறைமொழி மாந்தர் பெருமைநிலத்து, மறைமொழி காட்டிவிடும் (குறள், 28). 4. Toremind; நினைப்பூட்டுதல் முறுவற்குறி காட்டி முத்தே யுலகை முடிப்பாயோ (கம்பரா. கடல்காண். 8).5. To offer to a deity; நிவேதனஞ்செய்தல்.ஆழ்வார்க்குக் காட்டுகின்ற திருவமுர்தும் (S.I.I. iii,102). 6. To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல். அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள், 706). 7. To create, bring topass; உண்டாக்குதல் களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி (சிலப். 19, 17). 8. To introduce;அறிமுகஞ்செய்வித்தல். செவ்வழியுள்ளத் தோனைக் காட்டுதி தெரியவென்றான் (கம்பரா. அனுமப். 23). 9. Toapply, as incense or perfume to the hair; நறுமணமுதலியன ஊட்டுதல் ஆவிகாட்டி . . . சோர்குழல் (கம்பரா.  

முழுப்பொருள்
யார் சான்றோர், துறவி? 
பயனுள்ள அறிவார்ந்த சொற்களை பேசும் பெரியோரின் பெருமையை அவர்கள் இவ்வுலகில் பேசும் சொற்களே காட்டிவிடும். அவர்கள் கூறும் சொற்கள் பலிக்கும். அவர்கள் சொற்களை மந்திரம் போல் பிறர் பின்பற்றுவர். 

ஆன்மாவின் சக்தி சூட்சமமாக வெளிப்படுவது வார்த்தையில். எண்ணங்களில் வெளிப்பட்டு பின்பு வார்த்தைகள் செறிவாகும். நாம் செறிவானால் நமது வார்த்தைகளும் செறிவாகும். தேவையில்லாதற்கு முந்திக்கொண்டு பேசுபவர்கள் முட்டாள்கள். தேவை அறிந்து பேசுபவன் அறிஞன். தேவைப்படும் பேசாதவன் ஞானி. ஏனெனில் ஞானியின் எண்ணமே வார்த்தை. ஞானிகளின் வார்த்தைகள் மந்திரமாகும். 

ஆதலால் நமது சொற்களால் நம்மை பற்றியும் நமது எண்ணங்களை பற்றியும் பிறர் அறிவர். ஆதலால் எண்ணங்களை செறிவாக்கி சொற்களையும் செறிவாக்குக.

யோகா

யோகத்தில் மனிதனின் ஆழத்தில் உள்ள சக்கரங்களில் ஒன்றான விஷுத்தி சக்கரம் (Vishudhi chakra) என்று ஒன்று உண்டு. அது தூய்மை செய்யும் காரியத்தை செய்வது. உடல் ரீதியாக அல்ல. மன ரீதியாக. ஒருவருக்கு விஷுத்தி சக்கரத்தில் தடைகள் இருந்தால் அவரால் பிறருக்கு தனது கருத்துக்களை எண்ணங்களை சரிவர எளிமையாக எடுத்துக்கூற முடியாது. இப்படிப் பட்டவர்கள் பொதுவெளியில் பேசுவதில் சிக்கல்கள் இருக்கும். 

விஷுத்தி சக்கரத்தில் ப்ரானன் (pranan) நன்கு இருக்கும் ஒருவர் சொல்வது மற்றவர்களுக்கு எளிதில் விளங்கும். மேலும், இத்தகையவர்கள் ஒன்றை சொன்னால் மற்றவர்கள் அதை பின்பற்றுவார்கள். இவர்கள் சொன்ன சொல் பளிக்கும். உதாரணமாக காந்தியடிகள் போன்றோர் ஒன்றை சொன்னால் அதனை பலர் அப்படியே பின்பற்றினர். காந்தியடிகள் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திற்கு தானங்கள் கேட்டால் பலர் தங்களது தங்க நகைகளை கொடுத்துள்ளனர்.

ஆனால் விஷுத்தி சக்கரத்தில் ப்ரானன் நன்கு செயலாற்ற அவர் யோக முறைகளை பின்பற்றலாம். அல்லது வேறுவழிகளை பின்பற்றலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.).

மணக்குடவர் உரை
நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று

மு.வரதராசனார் உரை
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

சாலமன் பாப்பையா உரை
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அகஅமைதி கண்டவர் சிறப்பை அறநூல்கள் பேசும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Great people's greatness can be found in how their words translate into action and prosperity. Such words live here as mantras/quotes which people in the generations to come will recall and follow.

Questions that I ask to the kid
How is great people's greatness identified by their words?

No comments:

Post a Comment