செற்றவர் பின்சேறல் வேண்டி

thirukkural meaning விளக்கம் குறள் 1256 செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர் காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல்
குறள் 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்
[காமத்துப்பால், கற்பியல்,  நிறையழிதல்] 

பொருள்
செற்றவர் - ceṟṟavar   n. செறு¹-. See செற்றார் செற்றவர் புரங்கண் மூன்றுந் தீயெழச் செறுவர்போலும் (தேவா. 476, 3).  

செற்றார் - ceṟṟār   n. id. Enemies; பகைவர். செற்றார் செயக்கிடந்த தில் (குறள், 446).

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

சேறல் -  சென்று சேர்தல் 

வேண்டி - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்

அளித்து - அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல்

அரோ!-  arō   . A poetic expletive, அசை ச்சொல், as கூறுவாமரோ, we will speak. (p.)  

எற்று - எற்றுகை; எத்தன்மையது; வியப்பிரக்கக்குறிப்புச்சொல்.
எற்று - eṟṟu   III. v. t. cast, throw off, jerk away, kick away, எறி; 2. kill, கொல்லு; 3. pierce, stab, குத்து; 4. hit with the fist, குத்து; v. i. cease, நீங்கு; 2. feel pity, இரங்கு.

என்னை - என்தந்தை; என்தாய்; என்தலைவன்; என்இறைவன்; யாது; என்ன; ஓர்இகழ்ச்சிக்குறிப்பு.

உற்ற -  adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.

துயர் - துன்பம்; அரசர்க்குஉரியசூதுமுதலாகியவிதனம்.

முழுப்பொருள்
தலைவன் தலைவியை விட்டு பிரிந்து சென்று இருக்கிறான். ஆதலால் தலைவி தலைவன் மேல் கோபத்தில் இருக்கிறாள். ஆனால் அகன்று சென்ற தலைவன் பின் என்னை விரும்பி செல்ல என்னை கொல்லும் இந்த பிரிவின் துயர் தள்ளுகிறது. நோயும் தந்து நோயின் மருந்தாக நோயை தந்தவரிடமே என்னை செலுத்துகிறதே இந்நோய் அது எத்தனை கொடியது. அல்லது இத்தகைய நோயை கொடுத்தவர் எவ்வளவு கொடியவராக இருப்பார் ஏனெனில் அது அவருக்கு தானே சாதகம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. (செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 'இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
செறுத்தார்பின்னே யான் சேறலை வேண்டுதலால் என்னை யடைந்த துயர் எத்தன்மைத்து; நன்றாக இருக்கின்றது. இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலைமகளை நோக்கி இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!.

சாலமன் பாப்பையா உரை
என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain