Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

குறள் 1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
எழுதுங் - எழுதுதல் - எழுத்துவரைதல்; ஓவியம்வரைதல்; இயற்றுதல்; விதியேற்படுத்துதல்; பாவைமுதலியனஆக்குதல்; அழுந்தப்பதித்தல்; பூசுதல்.

எழுது - eẕutu   III. v. t. write, pain, draw, வரை; 2. predestine, foreordain (as Brahma by writing on the head); 3. engrave, சித்திரம் வெட்டு; v. i. become indented by pressure. அழுந்திப்பதி.

கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.

எழுதுவரிக்கோலம் - மகளிர்ஆகத்துஎழுதுங்கோலம்.

எழுதுங்கால் - விழியில் அஞ்சனம் (மை) தீட்டும்போது

கோல் -  கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

கோல் - kōl   n. 1. Pencil to paint the eyewith collyrium; அஞ்சனக்கோல். (அக. நி.) 2.An unit of linear measure, of 24 feet; 24அடியுள்ள நீட்டலளவை. (திவ். பெரியாழ். 3, 2, 6.)

அஞ்சனக்கோல் - añcaṉa-k-kōl   * n. id.+. Pencil to paint the eyelashes with collyrium; கண்ணுக்கு மைதீட்டுங் கோல் அஞ்சனக்கோலி னாற்ற நாகம் (சீவக. 1894).  

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

காணாக் - காணாத ; காணாமல்

கண்ணே - கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்

கொண்கன் - கணவன்; நெய்தல்நிலத்தலைவன்.

பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

காணேன் - காணவில்லை 

கண்ட - கண்டது - காணப்பட்டபொருள்; சம்பந்தமற்றசெய்தி.
காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

இடத்து - இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

முழுப்பொருள்
கண்ணுக்கு மை தீட்டும் பொழுது பெண்களால் மைத்தீட்டும் அஞ்சனக்கோலை அருகில் இருப்பதால் பார்க்க முடியாது  அல்லது பார்க்கமாட்டார்கள். அப்பொழுது அவர்கள் கண்ணுக்கு அழகு சேர்ப்பதையே கவனத்தில் கொள்வர். அஞ்சனக்கோலை கண்டு கொண்டு இருந்தால் மை வேறெங்காவது தவறாக பட்டு அவள் அழகு கலைந்துவிடும். பின்பு தலைவனும் அவளை பார்க்கமாட்டாள். 

அதுப்போல தலைவனை காணும் பொழுது தலைவி தலைவனின் குற்றங்களை பார்க்கவில்லையெலாம். ஏனெனில் குற்றங்களை பார்த்தால் சுற்றம் இல்லை. காதலும் இல்லை. கணவனும் இல்லை. ஆதலால் அவன் காதலை பெற குற்றங்களை பார்க்கவில்லையாம். அது பெரும் தவறு என உணர்கிறாள். ஏனெனில் தலைவன் பிரிந்து செல்வான் என்ற குற்றத்தை முன்னமே பார்த்து இருந்தால் அவள் காதலுற்று இருக்கமாட்டாள் அல்லவா? 

ஆனால் தலைவியை பிரியாத தலைவன் உண்டோ என்று தலைவியும் அறிவாள். அதனால் தான் குற்றங்களை அவள் பார்க்கவில்லை. ஆனால் இப்பொழுது உணர்ந்து தன்னை தானே இகழ்ந்துகொள்கிறாள். 

மைதீட்டும் கோலை கணவனின் குற்றங்களுக்கு ஒப்பாக கூறுவது மைதீட்டும் கோலின் கருமையை ஒட்டியே இருக்கவேண்டும். குற்றங்களை கருப்போடு ஒப்பிடுதல் சரிதானே.

புருவம் தீட்டுதலும், கண்ணுக்கு மையெழுதுதலும் சங்ககாலமோ அதற்கு முன்பிருந்தோ இருந்து வரும் பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்ளும் வழிகள்தாம் போலும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் - முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன். (கோல்: ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின் மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போலக் கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன். இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம் யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை
முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

No comments:

Post a Comment