Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

குறள் 1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
பல - ஒன்றுக்குமேற்பட்டவை

குடை - கவிகை; அரசாட்சி; குடைக்கூத்து; பாதக்குறட்டின்குமிழ்; நீருண்ணும்ஒலைப்பட்டை; குடைவேல்; உட்டுளைப்பொருள்

நீழலும் - நிழல்; காற்று; சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய்.

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

குடைக் - கவிகை; அரசாட்சி; குடைக்கூத்து; பாதக்குறட்டின்குமிழ்; நீருண்ணும்ஒலைப்பட்டை; குடைவேல்; உட்டுளைப்பொருள்

கீழ்க் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.

காண்பர் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அலகு - எண்; அளவு அளவுகருவி பலகறை மகிழம்விதை; நென்மணி பயிர்க்கதிர்; ஆயுதம் ஆயுதத்தினலகு; கூர்மை பறவைமூக்கு; தாடை உயிர்களின்கொடிறு; கைம்மரம் நூற்பாவின்அலகு; துடைப்பம் பொன்னாங்காணி அறுகு நுளம்பு இலட்சம்பாக்கு; ஆண்பனை அகலம் குற்றம்

உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி.
உடை - (வி)ஒடி, தகர், உடைஎன்னும்ஏவல்.

நீழலவர்- உலகையே புரக்கும் கருணை நிழலை வழங்கும் உழவர் பெருமக்கள்.

முழுப்பொருள்
உலக மக்கள் எத்தகைய மன்னனின் ஆட்சியின் கீழ் அல்லது எத்தகைய நாட்டில் வாழ ஆசைப்படுவார்கள்?  எந்த நாட்டில் விவாசாயம் செழித்து விவசாயிகளும் செழிப்பாக இருக்கிறார்களோ அந்நாடு வளமான நாடு. விவசாயம் செழிப்பாக இருந்தால் மக்கள் பசி இன்றி இருப்பர். வறுமை இருக்காது. பசியும் வறுமையும் இல்லை என்றால் குற்றங்கள் நடக்க வாய்ப்புகள் மிக மிக குறைவாக இருக்கும். ஆதலால் அத்தகைய நாட்டில் அத்தகைய மன்னனின் கீழ் நடைபெறும் ஆட்சியில் மற்ற நாட்டு மக்களும் வாழ விரும்புவர்.

ஆதலால் ஒரு அரசரின் முதன்மையான பணிகளில் உழவு மேலாண்மை இருத்தல் வேண்டும். அதற்கு தேவையான நீர்வள மேம்பாடு (அதாவது ஏரி, குளம், ஆறு ஆகியவற்றை நிர்வகிப்பதும், மழையும் ஆறும் உண்டாக காரணமாக அமையும் காடுகளை நிர்வகிப்பதும் அடங்கும்),  (உழவு பிரியும்) மனித வள மேம்பாடு, விதைகள் மேம்பாடு, பூச்சிகள் மேம்பாடு, மரங்கள் மேம்பாடு, உணவு தானிய பங்கிட்டு மேம்பாடு, உணவு தானிய சேமிப்பு மேம்பாடு, உணவு தானிய வர்த்தக மேம்பாடு என்று எல்லாவற்றையும் அரசர் செவ்வென நிர்வகிக்க வேண்டும். அந்த உணவில் கலப்படங்கள் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். 

மக்களின் இதயத்தில் ஒரு நாட்டின் உண்மையான மதிப்பிடு உணவை உற்பத்தி செய்யும் உழவில் தானுள்ளது. மாட மாளிகைகளிக்கும், ஆடம்பர களியாட்டங்களும், பிரம்மாண்டமான பாதுக்காப்பு அரணும் படைக்கலன்களும், விண்வெளியில் ஆராய்ச்சியும், வணிகமும்  (மற்றும் பல) ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி அல்ல.  ஏனெனில் இவை யாவும் அறிவு சார்ந்தது. ஒரு விதத்தில் அகங்காரம் சார்ந்தது. தேவைக்கு அதிகமாவே வளர்த்து எடுக்கப்படுவது. அதுவே விவசாயம் அப்படிப்பட்டது அல்ல. அது இதயபூர்வமானது ஆகும், லாப நஷ்டங்களை பார்க்காது செய்யப்படுவது. மக்களின் பசியை ஆற்றுவதை ஒரு வேள்வியாக / விரதமாக / தபஸாக செய்யப்படுவது. தேவைக்கு அதிகமாக செய்யப்படவும் மாட்டாது ஏனெனில் தேவைக்கு உற்பத்தி செய்யப்படும் உணவு உண்ணப்படாமல் அழிக்கப்படும். உற்பத்தி செய்கிறவன் அழிக்க ஒப்பமாட்டான். ஆதலால் அழிக்க தேவையில்லாத நிலையை விரும்புவான் அதாவது தேவையானவற்றை மட்டுமே உற்பத்தி செய்வான். 

உண்மையாக, வல்லரசு என்று நாடுகள் சொல்லிக்கொள்வதில் ஒன்றும் பலனில்லை. இயல்பாகவே மக்கள் சொல்ல வேண்டும் எது நல்ல நாடு என்று. அது உழவின் அடிப்படையிலேயே. வேறேதுமில்லை. 

அலகு என்ற சொல் நெற்கதிரைக் குறிப்பதாம். “பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே” என்கிற புறநானூற்றுப் பாடல் வரிகளும், இக்குறளின் கருத்தை உணர்த்துவதைக் காணலாம்.

“ஏரோட்டம் நின்னுபோனா உங்க காரோட்டம் என்னவாகும்” என்று பாமர மொழியிலே கேட்ட அண்மைக்கால கவிஞரை நினைவுறுத்தும் குறள். 

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அலகு உடை நீழலவர் - உழுதல் தொழிலான் நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ் காண்பர்-பலவேந்தர் குடை நிழலதாய மண்முழுதினையும் தம் வேந்தர் குடைக்கீழே காண்பர் (அலகு-கதிர், அ`ஃது ஈண்டு ஆகுபெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. நீழல் போறலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி ஒற்றுமை பற்றித் 'தங்குடை' என்றார். 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர். 'ஊன்று சால்மருங்கி்ன் ஈன்றதன் பயனே' (புறநா.35)என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம், 'இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்' (சிலப்.நாடுகாண்.149)என்றார் பிறரும்.).

மணக்குடவர் உரை
பல அரசர் குடைநிழலும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர், குடையில்லா நிழலை யுடையவர். குடையில்லா நிழலாவது பைங்கூழ் நிழல். இது தாம் வாழ்தலே அன்றித் தம் அரசனையும் வாழ்விப்பர் என்றது. (அலகுடைய நீழல்-கதிர்களையுடைய நெற்பயிரின்நிழல்).

மு.வரதராசனார் உரை
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

No comments:

Post a Comment