குறள் 1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
[காமத்துப்பால், கற்பியல், பசப்புறுபருவரல்]
பொருள்
விளக்கு - ஒளிதருங்கருவி; ஒளிப்பிழம்பு; ஒளிபெறச்செய்கை; சோதிநாள்.
விளக்கு - viḷakku III. v. t. polish, brighten, துலக்கு; 2. illustrate, explain, விளங் கச்செய்; 3. sweep, பெருக்கு; 4. solder, பொடிவை.
அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை
பார்க்கும் - பார்த்தல் - pār- 11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்
இருளே - இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம்
போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.
கொண்கன் - கணவன்; நெய்தல்நிலத்தலைவன்.
முயக்கு - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம்.
அற்றம் - அழிவு; துன்பம் இறுதி சோர்வு வறுமை இடைவிடுகை; அவகாசம் அவமானம் அறுதி விலகுகை; சுற்று மறைக்கத்தக்கது; நாய் பொய் உண்மை
பார்க்கும் - பார்த்தல் - pār- 11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. To see, look at, view, notice,observe; கண்ணால்நோக்குதல். பாராக்குறழா (கலித்.65). 2. To examine, inspect, search into,scrutinise; ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல்(குறள், 676). 3. To know; அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள், 487). 4. To lookfor, expect; எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள், 86). 5. To desire, long for; விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9). 6.To search for, seek; தேடுதல். ஆட்பார்த் துழலுமருளில் கூற்று (நாலடி, 20). 7. To worship;வணங்குதல். (சூடா.) 8. To estimate, value;மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்.Colloq. 9. To heed, pay attention to; கவனித்தல். 10. To look after, take care of, manage,superintend; மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.11. To peruse, look through, revise; பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள். 12. Totreat, administer medicine; மருந்து முதலியனகொடுத்தல். யார் வைத்தியம் பார்த்
பசப்பு - பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம்.
முழுப்பொருள்
பிரிவால் வாடும் தலைவி கூறுகிறாள் "விளக்கில் எண்ணெய் வற்றிப்போயோ அல்லது திரி தீர்ந்தோ விளக்கின் ஒளி குன்றி அழியும்பொழுது இருள் வந்து உடனே சூழ்ந்துவிடும். விளக்கு அணைவதற்காகவே காத்திருந்தது போலவே சற்றும் தாமதிக்காமல் இருள் உடனே பற்றிக்கொள்ளும். அதுப்போல என் தலைவன் என்னை தழுவும் பொழுது எப்பொழுது பிரிவான் தழுவதலில் இருந்து நீங்குவான் என்று இந்த பசலை நோய் காத்திருந்தது போல, அவர் பிரிந்த உடன் என்னை வந்து இப்படி வதைக்கிறதே. அதாவது தலைவன் பிரிந்து போருக்கு என்று அல்ல சாதாரணமாக பிரிந்தாலே அவளால் தாங்க முடியவில்லை.
பகலும் இரவும் இருமை. அதுப்போல வெளிச்சமும் இருளும். அதுப்போல இந்த தலைவனுடன் கூடலும் இந்த பசப்பு நோயும் இருக்கிறது என்று தலைவி கூறுவதாகவே இருக்கிறது. கூடலில் இன்பமாய் இருப்பவள் பசப்பு நோயில் துயர்கொண்டு இருக்கிறாள்.
இவள் சொல்வதை பார்த்தால் அணையாவிளக்கு போல நீங்கா தழுவுதல் உண்டோ/சாத்தியமோ?
ஒப்புமை
1) இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்
யாங்கறிந் தன்றுகொல் தோழிஎன்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே (குறுந் 205:5-7)
2) “..... பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே” (குறுந் 399:2-4)
3) அவர், தொடுவுழித் தொடுவுழி நீங்கின்றால் பசப்பே” (கலி.130:20-21)
“முயங்காக்காற் பாயும் பசலை” (நாலடி. 391)
“நோக்கவே தளிர்த்து நோக்கா
திமைப்பினும் நுணுகும் நல்லார்” (சீவக.1880)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.).
மணக்குடவர் உரை
விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு. இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
மு.வரதராசனார் உரை
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.
சாலமன் பாப்பையா உரை
விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.
No comments:
Post a Comment